Jump to content
  • entries
    4
  • comments
    24
  • views
    49829

கள நிபந்தனைகள்


மோகன்

1303 views

நிபந்தனைகள்

1. தனிப்பட்ட யாரையும் நேரடியாகவோ மறைமுகமாகவே தாக்கி கருத்துக்கள், விமர்சனங்கள் இங்கு வைக்கக்கூடாது.

2. கருத்துக்களத்திற்கு சமர்ப்பிக்கப்படும் கருத்துக்கள் யாவும் நாகரீகமான முறையிலும், கண்ணியம் காப்பனவாகவும் இருத்தல் வேண்டும். இவ் நெறிகளை மீறுகின்ற கருத்துக்களை அவற்றின் அர்த்தம் கெடாத வகையில் திருத்தும் அதிகாரம் இணையப்பொறுப்பாளருக்கு உண்டு.

3. ஆக்கங்கள் உங்கள் சொந்தமானதாக இருக்கவேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் அவை எங்கிருந்து பெறப்பட்டது என்பது குறிப்பிடப்படவேண்டும்.

4. கருத்துக்கள், ஆக்கங்கள் எழுதுபவருக்கு சொந்தமானவை. நிறுவனங்கள், அமைப்புக்கள், சங்கங்கள், மற்றும் அவற்றின் உறுப்பினர்களை விமர்சிப்பவர்கள் ஆதாரங்களுடன் விமர்சிக்கலாம் அல்லது கருத்துக்களை வைக்கலாம். ஆதாரங்கள் இல்லாத ஊகத்தின் அடிப்படையிலான கருத்துக்களைத் தவிர்த்துக்கொள்ளுங்கள். கருத்துக்களுக்கான அனைத்து விமர்சனங்களுக்கும் எழுதுபவரே பொறுப்பேற்கவேண்டும்.

5. உங்கள் பெயர், மறைவுச்சொல் உங்களுக்கு மட்டுமே சொந்தமானது. இதை வேறு யாருக்கும் கொடுக்க முடியாது. இது மற்றவர்கட்கு நீங்கள் வழங்கினாலே அல்லது உங்களிடம் இருந்து மற்றவர்கள் இதை எடுத்து பாவித்தாலே அதற்கான பொறுப்பை நீங்களே ஏற்கவேண்டும்.

6. தேவையின்றி தமிழ் தவிர்ந்த வேறு மொழிகள் பாவிப்பதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

7. தனிப்பட்ட செய்தியினை யாரும் தவறாகப் பயன்படுத்தக்கூடாது. அப்படி ஏதாவது நடைபெற்றால் சம்பந்தப்பட்டவர்கள் எமக்கு அது பற்றித் தெரிவிக்கலாம்.

8. ஏனைய கருத்துக்கள அங்கத்துவர்களுடன் பண்பாக நடந்து கொள்ளவேண்டும்.

3 Comments


Recommended Comments

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கான அனுமதி இன்னமும் மறுக்கப்பட்டுள்ளதே நான் என்ன செய்யவேண்டும்

Link to comment

எனக்கும் அதே கதிதான் . என்ன செய்ய வேண்டும் ? ஏன் இப்படி ஆச்சு? ஏற்கனவே எழுதிக்கொண்டு தானே இருந்தேன் . இது புதிய வரைமுறை ஏதும் அறிமுகப்படுத்த பட்டுள்ளதா? தகவல் அறிய விரும்புகிறேன்

Link to comment
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகிலேயே சிறந்த மொழி தமிழ்: ரஷ்ய தமிழ் அறிஞர் தெரிவிப்பு.

thiruvalluvar-100x75.jpgஉலகிலேயே சிறந்த மொழி தமிழ் என்று மாஸ்கோ பல்கலைக்கழக தமிழறிஞர் அலெக்சாண்டர் துபி யான்ஸ்கி கூறினார். சென்னையில் உள்ள ரஷ்யன் அறிவியல் மற்றும் கலாசார மையத்தில் அவர் நேற்று அளித்த பேட்டி: உலகத் தமிழ்ச் செம் மொழி மாநாட்டில் பல் வேறு நாட்டு தமிழ் அறிஞர், தமிழ் ஆர்வலர்கள் என பலர் கலந்து கொள்கின்றனர். எனக்கும் அழைப்பு வந்தது. தமிழ் மீது எனக்குள்ள ஆர்வம் காரணமாக மா நாட்டில் கலந்து கொள்வ தற்காக நான் வந்துள்ளேன். தமிழகத்திற்கு நான் வருவது 15வது முறை. இந்த மா நாட்டால் தமிழுக்கு பெருமை. தமிழ் மீது உள்ள மதிப்பு, மரியாதையால் மாநாட்டில் ஆயிரக்கணக் கில் பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர். தமிழ் உலக மொழிகளில் சிறந்த மொழி. தமிழை மேலும் வளர்க்க வேண்டும்.

உலகத் தமிழ்ச் செம் மொழி மாநாட்டில் தொல் காப்பியம், சிலப்பதிகாரம் குறித்த ஆய்வு கட்டுரை சமர்ப்பிக்க உள்ளேன். அவர்கள் அதனை நூலாக வெளியிடப் போகிறார்கள். தமிழுக்கு நல்ல தன்மை உண்டு. தமிழை வளர்க்க நான் பாடுபடுவேன். தமிழ் மொழிக்கும், ரஷ்யா மொழிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. ரஷ்யா வில் தமிழை கற்பிக்கும், கற்கும் மரபு வளர்கிறது. மாஸ்கோ பல்கலைக்கழகத் தில் தமிழ் வகுப்புகள் உள்ளன. 5 மாணவர்கள் தமிழ் படிக்கின்றனர். அந்த மாணவர்கள் தமிழை கற்க வேண்டும் என்று ஆர்வமாக உள்ளனர். அதற்காக, சென்னை பல்கலை.யில் அந்த மாணவர்கள் தமிழை கற்பதற்காக துணை வேந்தர் திருவாசகத்திடம் பேசி யிருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியா & ரஷ்யா வர்த்தக சபையின் தலைவர் லட்சுமிநாராயணன், பொதுச்செயலாளர் தேனப்பன் ரஷ்யா மொழி கல்வி நிறுவனத்தின் இயக்குனர் டேட்டியான பெரேவா, எழுத்தாளர் ஜெயகாந்தன் மற்றும் மாநாட்டுக்கு வந்துள்ள மாஸ்கோ பல்கலை. மாணவி ஆகியோர் உடன் இருந்தனர்.

Link to comment
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.