Jump to content
  • entries
    8
  • comments
    3
  • views
    34407

அன்பே நினைப்பிருக்கா? (கவிதை)


மல்லிகை வாசம்

1516 views

அன்றொருநாள் பொன் அந்தி மாலை நேரம்

அமைதியான அழகு கடற்கரை ஓரம்

அன்பே நீயும் நானும் அமர்ந்திருந்து

ஆசை மொழி பேசி மகிழ்ந்த நினைப்பிருக்கா? :wub:

'விரிந்த அந்த வான வெளியினிலே

பறந்த ஜோடி பறவைகள் போல் - கவலை

மறந்து உன்னுடன் நான் உலகை ரசிப்பேன்' என்று

உறவே நீ அன்று சொன்னது நினைவிருக்கா? :wub:

'அருகே நின்ற இரட்டை தென்னை மரங்களாய்

ஒரு கணமும் உயிரே நான் உன்னை பிரியாது

ஈருடல் ஓருயிராய் வாழ வேணும்' - அன்பே

உருகி நானும் சொன்ன வார்த்தை நினைப்பிருக்கா? :wub:

கடலின் கரை சேரா அந்த படகு போல - உன்

காதலி நானிங்கே உனை சேர ஏங்குகிறேன்.

கசக்கி எறிந்த ஓவியம் போல் என்னை நீயும் எறிந்தாலும் - நம்

காதலை நான் மறக்க மாட்டேன் என்னுயிர் வாழுமட்டும். :(:wub:

3 Comments


Recommended Comments

  • கருத்துக்கள உறவுகள்

காதல் ஏன் கைகூடவில்லை .எது தடை. ?

  • Like 1
Link to comment
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதை .......காதலி ஒரு வேளை மனம் மாறலாம் . ஆனால் காதல் ஒரு நாளும் தோற்பதில்லை.

காதல் புனிதமானது . அது கடவுள் போன்றது. முதற் காதல் நெஞ்சை விட்டு அகலாதது . நட்புடன் நிலாமதி ..............

  • Like 1
Link to comment

காதல் மிக வலியது.

காத்திருப்பில் காலங்கள் கடந்தாலும்

காதல் சாவதில்லை.

அது என்றும் மனதோடு வாழும்

மூச்சு இவ்வுலகு விட்டுப் பிரியும் வ

  • Like 1
Link to comment
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.