ஆறுமுகன் தொண்டமான் ராஜினாமா
#1
Posted 26 March 2012 - 05:32 PM
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கான தனது ராஜினாமா கடிதத்தை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் இன்றுமாலை சமர்ப்பித்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள்தெரிவித்தன.
எனினும் கால்நடை அபிவிருத்தி மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் இந்த ராஜினாமாவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.
ராஜினாமா கடிதம் சமர்ப்பிக்கப்பட்டமைக்கான காரணம் தெரியவில்லை.
http://www.tamilmirr...6-15-12-57.html
Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.

#2
Posted 26 March 2012 - 06:24 PM
ராஜினாமா கடிதம் சமர்ப்பிக்கப்பட்டமைக்கான காரணம் தெரியவில்லை
பொருளாதார நெருக்கடி [வங்கிரோது] காரணமாக மதுபான சலுகையினை இவருக்கு
ராஜபக்ச நிறுத்தியிருக்க கூடும்......?
மாறும் என்ற சொல்லைத்தவிர உலகில் எல்லாம் மாறும்.
/imagesCAK3MKZ8.jpg
#3
Posted 26 March 2012 - 06:25 PM
அறை வாங்கினேன்
மறு கன்னத்திலும்
ஏசுவே
இனி என்ன செய்ய???????
(காசி ஆனந்தன் நறுக்குகள்)
#4
Posted 26 March 2012 - 09:43 PM
தலீவர் வேறு பாராளுமன்றத்திற்க தண்ணி போத்திலுக்கு தடை போட்டுட்டார்.
அதான்க்...ரிசைன்.🍻
திறமையாக செயல் படும் BTF, TYO, CTC, ATC, TGTE, TAG, PEARL அமைப்புகளுக்கும் நன்றி.
எம்மை காப்பாற்றி, வளர்த்து அரசியல் தீர்வு தேடி தரும் மேற்கு உலக நாடுகளுக்கும் நன்றி.
தமிழீழத்திற்காக உயிர் பிரிந்தவர்கள் எல்லோருக்கும் தமிழீழத்தை காணிக்கையாக்குவது எமது கடமை.
#5
Posted 26 March 2012 - 09:49 PM
#6
Posted 27 March 2012 - 12:33 PM
அப்பாடா,மலையக மக்களின் ரத்தத்தை அட்டை குடித்ததை விட இந்தாள் குடித்த ரத்தமே அதிகம்.
பில்லியன் டாலருக்கு தம் ஏழை மக்களிடம் சுரண்டினான்.
திறமையாக செயல் படும் BTF, TYO, CTC, ATC, TGTE, TAG, PEARL அமைப்புகளுக்கும் நன்றி.
எம்மை காப்பாற்றி, வளர்த்து அரசியல் தீர்வு தேடி தரும் மேற்கு உலக நாடுகளுக்கும் நன்றி.
தமிழீழத்திற்காக உயிர் பிரிந்தவர்கள் எல்லோருக்கும் தமிழீழத்தை காணிக்கையாக்குவது எமது கடமை.
#7
Posted 27 March 2012 - 12:35 PM
நீ இராஜனாம செய்துபோறது சரி வெளியில்போய் என்னைப்பற்றி ஏதாவது பேசினால் கழுத்தில் போட்ட துண்டாலையே கொன்றுபோடுவேன் என்று சொல்லுறாரோ ?
#8
Posted 28 March 2012 - 02:13 AM
இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொதுச் செயலாளரும் கால்நடைகள் வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளதையடுத்து எழுந்துள்ள ச்ர்ச்சைக்கு தீர்வு காணும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாக தெரிய வருகிறது. இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் பிரதி அமைச்சருமான முத்து சிவலிங்கத்துடன் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ இவ்விவகாரம் தொடர்பில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அமைச்சுப் பதவியிலிருந்து இராஜிநாமா செய்துள்ளபோதிலும் அவரது பதவி விலகலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்னமும் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த நிலையிலேயே நேற்று பிரதியமைச்சர் முத்து சிவலிங்கத்துக்கும் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவுக்குமிடையில் நீண்டநேரம் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமைப்பீடம் பேச்சுவார்த்தை நடாத்த விரும்புவதாகவும் அதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும் நம்பகரமாக தெரியவருகின்றது. கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அவிபிருத்தி அமைச்சின் கீழ் வரும் தேசிய கால்நடைகள் அபிவிருத்தி சபையின் பணிப்பாளர் நியமனத்தில் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்தே அமைச்சுப் பதவியிலிருந்து இராஜிநாமா செய்யும் முடிவினை அமைச்சர் தொண்டமான் எடுத்திருந்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனான சந்திப்பில் முரண்பாட்டுக்கு தீர்வு காணப்படாதவிடத்து இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அரசாங்கத்திலிருந்து விலகும் நிலை ஏற்படலாம் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
http://www.virakesar...asp?key_c=37308
Edited by மல்லையூரான், 28 March 2012 - 02:15 AM.
சுயாதீன போர்க்குற்ற விசாரணைக்கான கோரிக்கை இடம்பெறவிடாமல் இரண்டாம் தடவையும் இரண்டாவது ஐ.நா. பிரேரணையையும் தோற்கடித்த இந்தியா இனித்தன்னும் உணர்ந்து கார்த்திகைப் பொதுநலவாய மகாநாடு இலங்கையில் நடைபெறா வண்ணம் தடுக்க வேண்டும்.
#9
Posted 28 March 2012 - 02:17 AM
நீ இராஜனாம செய்துபோறது சரி வெளியில்போய் என்னைப்பற்றி ஏதாவது பேசினால் கழுத்தில் போட்ட துண்டாலையே கொன்றுபோடுவேன் என்று சொல்லுறாரோ ?
யார் யாருக்கு சொல்லுகிறார் ?
Edited by akootha, 28 March 2012 - 02:17 AM.
Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.
#10
Posted 28 March 2012 - 03:30 AM
நீ இராஜனாம செய்துபோறது சரி வெளியில்போய் என்னைப்பற்றி ஏதாவது பேசினால் கழுத்தில் போட்ட துண்டாலையே கொன்றுபோடுவேன் என்று சொல்லுறாரோ ?
இந்தப் படத்தில் ஆறுமுகனின் தலையை ஓட்டும் போது இன்னும் கொஞ்சம் சின்னதாக ஓட்டியிருக்கலாம்.
இந்தியப் பயங்கரவாதக் குழுவின் நீண்டகால கைப்பொம்மையான முத்து சிவளிங்கத்தாலோ, ஆறுமுகனாலோ அமைச்சு பதவி இல்லாமல் வாழ முடியாது.
சுமார் 1000+ ஆண்டுகளின் முன்னர் வந்தேறு குடிகளான சிங்கள பௌத்தக் காடையர் கும்பல் வகை தொகையின்றி பிள்ளைகளைப் பெற்று, இன்று பெரும்பான்மையாகி நடாத்தும் பயங்கரவாதம் முற்றாக அழிக்கப்பட்டு, இலங்கை முழுவதும் மண்ணின் பூர்வீக குடிகளான தமிழ் மக்களின் கட்டுப்பாட்டில் வரும் காலத்துக்கான அனைத்து வழியிலான செயற்பாடுகளையும் முன்னெடுக்க திடசங்கற்பம் பூணுவோம்! இலக்கை அடையும் வரை தொடர்ந்து அயராது உழைப்போம்!!!
#11
Posted 28 March 2012 - 06:54 AM
இந்தியப் பயங்கரவாதக் குழுவின் நீண்டகால கைப்பொம்மையான முத்து சிவளிங்கத்தாலோ, ஆறுமுகனாலோ அமைச்சு பதவி இல்லாமல் வாழ முடியாது.
உண்மை ஆராவமுதன், இன்னும்... ஒரிரு நாட்களில், தனது ராஜினாமாவை மீளப் பெறுவதாக ஆறுமுகன் அறிவிப்பார்.
தமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.














