Jump to content


Orumanam
Photo

தமிழன் அழுகையை உலகம் உணர்ந்தது!


 • Please log in to reply
2 replies to this topic

#1 akootha

akootha

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 27,339 posts
 • Gender:Male
 • Location:Canada
 • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 24 March 2012 - 03:16 AM

Posted Image

உலகத் தமிழர்களின் உள்ளத்துக்கு சின்னதாய் ஆறுதல் அளிக்கும் செய்தி, ஜெனீவாவில் இருந்து கிடைத்துள்ளது. உலகம் காணாத கொடுமையைச் செய்த இலங்கை அரசாங்​கத்துக்கு எதிராக, அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமை அமைப்பில் வெற்றி பெற்று இருப்பதுதான் இந்த ஆறுதலுக்குக் காரணம். இதைத் தமிழர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் எதிர்கொள்ளக் காரணம் இந்தியா எடுத்த நிலைப்பாடு.

''இலங்கை அரசாங்கம் அமைத்த விசாரணை ஆணையத்தின் முடிவின்படி நடவடிக்​கைகள் அமைய வேண்டும்'' என்று சொல்கிறது அமெரிக்காவின் தீர்மானம். பல மாதங்களுக்கு முன்னால் ஐ.நா. அமைத்த மூவர் குழுவின் அறிக்கைப்படி நடவடிக்கை எடுக்கத் தூண்டுவதுதான் சரியான நிலைப்பாடாக இருக்கும். இருந்தாலும் இதையாவது அமெரிக்கா கொண்டு வருகிறதே என்பதுதான் பலருக்கும் ஆறுதல். இந்த அமெரிக்கத் தீர்மானம் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் புலம்பெயர்ந்த தமிழர்களது பிரார்த்தனையாக இருந்தது.

ஐ.நா.மனித உரிமை கூட்டத்தொடரின் முடிவுக்கு ஒருநாள் முன்னதாக, மார்ச் 22 அன்று இந்தத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அமெரிக்க தீர்மானத்தை ஆதரித்து 24 நாடுகள் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தன. எதிராக 15 நாடுகள் வாக்களித்தன. எட்டு நாடுகள் நடுநிலை வகித்தன.மாற்றத்தை வேண்டிய இந்தியா!

தமிழக மக்களின் போராட்டத்தாலும், அனைத்து தமிழகக் கட்சிகளும் நாடாளுமன்றத்தில் கொடுத்த அழுத்தத்தாலும், 'எந்த ஒரு நாட்டுக்கு எதிராகவும் கொண்டு வரப்படும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காது’ என்ற தனது நிலைப்பாட்டை இந்தியா மாற்றிக் கொண்டது. ஆனால், இந்தத் தீர்மானத்தில் சில திருத்தங்களைக் கொண்டுவர இந்தியா முயற்சித்தது. 'இலங்கை விசாரணைக் குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்துவதைக் கண்காணிக்க குழு ஏதாவது அமைக்கப்படும் என் றால், அது ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பு நாடுகளுடன் கலந்துரையாடி தீர்மானிக்கப் பட வேண்டும்’ என்பதே இந்தி​யாவின் திருத்தமாக இருந்தது.


இந்தத் திருத்தம் குறித்து ஜெனீவாவில் உள்ள தமிழர் மனித உரிமை மையத்தைச் சேர்ந்த கிருபாகரனிடம் கேட்டபோது, ''ஆவணங்களைப் பார்த்தால்தான் திருத்​தங்கள் மேற்கொள்ளப்பட்டது குறித்துத் தெரியும். இந்தத் தீர்மானம் வெற்றி பெறுவதைவிட, இந்தியாவின் ஆதரவைத்தான் பெரிதாகப் பார்க்​கிறோம். இதன்மூலம் இலங்கை மீது அதிகாரப்பூர்வமாக ஐ.நா. அழுத்தம் செலுத்த முடியும். இதற்கு முன்பு வரை இலங்கை மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க எந்த உரிமையும் இல்லாமல் இருந்தது. இப்போது அது வாய்த்திருக்கிறது'' என்று பெருமிதப்பட்டார்.


ஆதரவும் எதிர்ப்பும்...


இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரியா, பெல்ஜியம், பெனின், கேமரூன், சிலி, கோஸ்டாரிக்கா, செக் குடியரசு, கவுதமால, ஹங்கேரி, இத்தாலி, லிபியா, மொரீசியஸ், மெக்சிகோ, நைஜீரியா, நார்வே, பெரு, போலந்து, மால்டோவ குடியரசு, ரோமானியா, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, உருகுவே ஆகிய 24 நாடுகள் வாக்களித்துள்ளன.


இலங்கையின் ரத்தக் கரங்களுக்கு ஆதரவாக சீனா, ரஷ்யா, கியூபா, பங்களாதேஷ், காங்கோ, ஈக்குவெடார், இந்தோனேஷியா, குவைத், மாலத்தீவு, மாரிடானியா, பிலிப்பைன்ஸ், கத்தார், சவுதி அரேபியா, தாய்லாந்து, உகாண்டா ஆகிய 15 நாடுகள் வாக்களித்தன.பின்வாங்கிய மலேசியா!

இந்தத் தீர்மானம் தொடர்பாக எந்த முடிவும் எடுக்க இயலவில்லை என எட்டு நாடுகள் தங்கள் நிலைப்பாட்டைத் தெரிவிக்கவில்லை. வாக்கெடுப்புக்கு முன்தினம் வரையிலும் இலங்கைக்கு ஆதரவு தருவதாகச் சொல்லியது மலேசியா. ஆனால், மலேசியத் தமிழர்கள் மேற்கொண்ட போராட்டங்கள் காரணமாக தங்கள் நாட்டை நடுநிலைமைக்கு மாற்றிக் கொண்டது.
கெஞ்சிய இலங்கை!

இந்தியாவின் மௌனத்தை பயன்படுத்திக் கொண்ட இலங்கை அரசு, 'இந்தத் தீர்மானம் ஆசிய நாடுகளை அமெரிக்க காலனி நாடுகளாக மாற்றும் அமெரிக்காவின் முயற்சி. இது நிறைவேறினால் இலங்கை, அமெரிக்காவிடம் அடிமைப்பட்டு விடும்’ என்று தங்கள் படுகொலைகளை மறைக்கப் பார்த்தது. அடிமை, காலனிநாடு என்ற வார்த்தைகளைச் சொல்லி போர்க் குற்றத்தை மறக்கடிக்க துடித்தது.


ஆனால், தமிழர்களின் உணர்வு​களுக்கு மதிப்பளித்து இலங்கைக்கு எதிராக ஐ.நா-வில் வாக்களிக்கத் தயார் என்று இந்தியா சொன்னதும், இலங்கை அரசு அமெரிக்காவிடம் மீண்டும் கொஞ்ச நாட்கள் கேட்டு கெஞ்சி உள்ளது. 'போர் முடிந்த மூன்று ஆண்டுகள் கடந்தும் இலங்கையில் அமைதியை ஏற்படுத்தத் தவறி விட்டீர்கள். இனியும் அவகாசம் கேட் பதை நம்ப முடியாது'' என்று அமெரிக்கா, நிரா கரித்துவிட்டது. இந்த வாக்கெடுப்பின் போது, தொண்டு நிறுவனங்கள் சார்பில் பங்கேற்ற கனடிய தமிழ்ப் பேரவையின் வழக்கறிஞர் கரே ஆனந்தசங்கரியிடம் பேசிபோது, ''முள்ளிவாய்க்கால் பேரவலத்துக்குப் பின் தமிழர்களுக்குக் கிடைத்த முதல் வெற்றி. இது, தமிழர்களின் ஒன்றுகூடலுக்குக் கிடைத்த பலன். இந்தத் தீர்மானம் நிறைவேறியது, இலங்கை அரசுக்குப் பெரும் நெருக்குதல்களைத் தராவிட்டாலும், நடந்த போர்க்குற்றங்களுக்கு ஒரு சுதந்திரமான விசா ரணையை மேற்கொள்ள ஒரு முன்னெடுப்பாக இருக்கும்'' என்று சொன்னார்.

இந்தத் தீர்மானத்தின் மீது இலங்கை என்ன நடவடிக்கை எடுத்தது என்பதை 2013 மார்ச் மாதம் நடக்கும் ஐ.நா. மனித உரிமை கூட்டத்தில் இலங்கை விளக்கம் தரவேண்டும். இலங்கைத் தமிழர்களது அரசியல் உரிமையை நிரந்தரமாகப் பெறுவதற்கான முதற்படியாக இதைக் கொள்ள வேண்டும்!

- மகா.தமிழ்ப் பிரபாகரன்


நன்றி: ஜூனியர் விகடன், 28-மார்ச் -2012
மூலம்: ஜூனியர் விகடன்

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.


ninaivu-illam

#2 நிழலி

நிழலி

  ர.சி.க.ன்

 • கருத்துக்கள பொறுப்பாளர்கள்
 • 9,126 posts
 • Gender:Male
 • Location:Canada
 • Interests:காமமும் கலவியும்

Posted 24 March 2012 - 03:20 AM

ஜுனியர் விகடன்; கழுகார் பதில்களில் (ஒரு கழுகு மதன்)

சேனல் 4 ஒளிபரப்பிய கொடூரக் காட்சிகள் பற்றி?
இனி உலகத்தில் எந்த மனித உயிரும் இப்படி ஒரு கொடுமையை அனுபவிக்கக் கூடாது!
அனைத்து நாடுகளும் தனித்தனித் தீவுகளாக இருந்த காலத்தில், ஹிட்லரின் கொடுமைகள் அரங்கேறின. அதனால், உலகத்தால் தடுக்கவும் முடியவில்லை. தண்டிக்கவும் இயலவில்லை. ஆனால் இன்று, உலகம் அனைத்தும் பக்கத்து வீடுகளாக மாறிய காலத்திலும் தடுக்கவும் முடியவில்லை, தண்டிக்கவும் இயலவில்லை என்றால்... தமிழனின் தலைவிதியை நினைத்து நொந்துகொள்வதைத் தவிர வேறு வழி இல்லை!

#3 Nellaiyan

Nellaiyan

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 5,371 posts
 • Gender:Male
 • Location:London

Posted 24 March 2012 - 07:12 AM

ஈழத்தமிழர்களின் அழுகையை உலகம் உணர்ந்தது????????? .... தலைப்பில் ஓர் சிறிய பிழைதான்! ஆச்சரியக்குறிக்கு பதிலாக கேள்விக்குறி இருந்திருக்க வேண்டும்!! ... இலங்கையை சீனாவின் கைகளுக்கு போகாமல் ... இலங்கையின் புவியியல் முக்கியஸ்தகம் கருதி ... மேற்கு போடும் நாடகம்!! .. ம்ம்ம்ம் என்ன யார் குத்தினாலும்/எப்படி குத்தினாலும் அரிசியானால் சரிதான்!!! .. அதனை பிரயோசனப்படுத்த வேண்டும், நாம்!!

இதில் கிடைத்த வெற்றி இந்தியாவை விட மலேசியாவே வாக்களிக்காமல் விட்டதே! இந்தியாவை, காங்கரசின் தொடர் தேர்தல் தோல்விகளின் விளைவும், தமிழக உறவுகள் கொடுத்த அழுத்தங்களும், தப்பிக்க முடியாமல் செய்து விட்டது! ஆனால் மற்றைய நாடுகளை இந்தியா ஆதரவாக வாக்களிக்க கேட்டிருக்க சந்தர்ப்பம் இல்லை! இன்று மாலைதீவு இந்தியாவின் பூரண கட்டுப்பாட்டில், ஆனால் மாலைதீவு எதிராக வாக்களித்தது ஓர் உதாரணம்! ... ஆனால் மலேசியா, இலங்கைக்கு ஆதரவளிப்பதாக கூறியும், பின்பு வாக்களிக்காமல் விட்டதற்கு அங்குள்ள தமிழ் அமைப்புகள் பல எடுத்த பகீரத முயற்சிகள் முக்கியமானவை. அவ்வமைப்புகளுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்!
நெற்றிக் கண்ணை திறப்பினும், குற்றம் குற்றமே

Nellaiyaan@yahoo.com


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]