Jump to content


Tamil Star News
Photo

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது – ஐ.தே.க


  • Please log in to reply
3 replies to this topic

#1 தமிழரசு

தமிழரசு

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 15,309 posts
  • Gender:Male
  • Location:பிரித்தானியா
  • Interests:தமிழ்மக்களுக்காக ஒரு நாடு ஒன்றை உருவாக்க உறவுகளுடன் இணைத்து செயல்படுவது .

Posted 23 March 2012 - 06:05 PM

Posted Image

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளில் விரிசல் நிலைமை ஏற்பட்டுள்ளாக ஐக்கிய தேசியக் கட்சி குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவுடன் இதுவரை காலமும் பேணி வந்த நட்புறவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

2006ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை அரசாங்கம் அளித்த வாக்குறுதிகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

சுதந்திரத்திற்கு பின்னரான சகல அரசாங்கங்களும் இந்தியாவுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஆளும் கட்சியின் கைக்கூலிகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தீர்மானத்தின் உள்ளடக்கம் தொடர்பில் அறிந்து கொள்ளாமலேயே ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

2009ம் ஆண்டில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் முயற்சிகள் முறியடிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும் நேற்றைய தினம் நடைபெற்ற வாக்கெடுப்பில் நட்பு நாடுகளின் ஆதரவு இழக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் தூர நோக்கற்ற திட்டங்களினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

http://www.globaltam...IN/article.aspx
மீண்டும் வருவான்........! ஒருவன் மீண்டுவருவான்.......!! எமது வேலன், கரிகாலன், தமிழர் தோழன், அவன் கடவுள் மாதிரி ! இருக்கிறான் என்றாலும் இல்லைதான் என்றாலும் இருக்கும் அவன்மீது பயமும், பக்தியும் !! சூழ் உரைப்பான் நடைபெறும் என்னும் ஒரு சூரா சம்ஹாரம் !!! 
 
 
 

Advert

#2 புரட்சிகர தமிழ்தேசியன்

புரட்சிகர தமிழ்தேசியன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 6,710 posts
  • Gender:Male
  • Location:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்
  • Interests:எதிர்ப்பவர்களை போட்டு தாக்குவது.

Posted 23 March 2012 - 08:01 PM

உறவுகளில் விரிசல்





கிந்தியாவில் உற்பத்தியாகும் சங்கர் சிமெண்ட்(ரைக்டர் சங்கர் கோவித்து கொண்டாலும்) இறக்குமதி செய்து அந்த விரிசலை பூசி சரி செய்துவிடலாம் :lol: :lol:

ஈழ தமிழர்.. எங்கள் ரத்தம்..


#3 Iraivan

Iraivan

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 6,670 posts
  • Gender:Male
  • Location:இறைவன்
  • Interests:எல்லாவற்றிலும் கொஞ்சம், கொஞ்சம்.

Posted 24 March 2012 - 02:14 AM

சீனாவுடன் உறவை மேம்படுத்தலாம்.
இறைவன்

#4 இசைக்கலைஞன்

இசைக்கலைஞன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 10,627 posts
  • Gender:Male
  • Location:கனடா
  • Interests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D

Posted 24 March 2012 - 02:25 AM

உண்மையில் இந்தியாவை சிங்கள எதிர்ப்பு நிலையெடுக்க வைத்ததில் (விருப்பமில்லாவிட்டாலும்) ஏதோ ஒரு பெரிய சக்தி வேலை செய்திருக்கிறது..! பொறுத்திருந்து பார்ப்போம்..! :D
கண்ணை நம்பாதே.. உன்னை ஏமாற்றும்..




Advert


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]