Jump to content


Orumanam
Photo

தமிழகத்தில் எதிர்வரும் பத்து ஆண்டுகளில் மிகப் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தவுள்ளதாக ஜெயலலிதா அறிவித்தார்


 • Please log in to reply
5 replies to this topic

#1 akootha

akootha

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 27,339 posts
 • Gender:Male
 • Location:Canada
 • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 23 March 2012 - 04:11 PM

தமிழகத்தில் எதிர்வரும் பத்து ஆண்டுகளில் மிகப் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தவுள்ளதாக ஜெயலலிதா அறிவித்தார்

தமிழகத்தில் அடுத்த பத்து ஆண்டுகளில் மிகப் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதுதான் தமது நோக்கமென தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

தொலைநோக்கு திட்டம் 2023 என்ற ஆவணத்தை நேற்று சென்னையில் வெளியிட்டு அவர் உரையாற்றினார்.

இந்தியாவின் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகம் அனைத்துத்துறைகளிலும் சிறந்து, முதன்மை மாநிலமாக விளங்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக அவர் கூறினார்.

மாநில மக்களுக்கு சுத்தமான குடிநீர் மற்றும் பாதுகாப்பான சுகாதார வசதிகள் அனைத்தும் 2023-ம் ஆண்டுக்கு முன்னதாக கிடைக்கச் செய்யப்படுமெனவும், திறந்த வெளியில் மலம் கழித்தல் தமிழகத்தில் இருந்து முற்றிலுமாக அகற்றப்படுமெனவும் ஜெயலலிதா தெரிவித்தார்.

25 லட்சம் வீடுகளைக் கட்டிக் கொடுத்து தமிழகத்தை குடிசைகள் இல்லாத மாநிலமாக மாற்றவுள்ளதாகவும், அனைவருக்கும் இடைநிலைக் கல்வி, கல்லூரிகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமாக மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது போன்ற திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படுமென அவர் கூறினார்.

தமிழகத்தில் அடுத்த 10 ஆண்டுகளில் 20 ஆயிரம் மெகாவாட் கூடுதல் மின்சாரம் கிடைக்க கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படுமெனவும், இந்தத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு 15 லட்சம் கோடி ரூபா தேவையெனவும் ஜெயலலிதா தெரிவித்தார்.


http://thamilfm.com/...l.aspx?ID=11481

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.


ninaivu-illam

#2 விசுகு

விசுகு

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 18,923 posts
 • Gender:Male
 • Location:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்?
 • Interests:எதுவானாலும் ஈழத்தை நோக்கியே...........

Posted 23 March 2012 - 04:51 PM

வாழ்த்துக்கள்
தமிழகம் உயரணும்

அறை வாங்கினேன்
மறு கன்னத்திலும்
ஏசுவே
இனி என்ன செய்ய???????
(காசி ஆனந்தன் நறுக்குகள்)

 

http://imageshack.us...es/593/rit.gif/


#3 nunavilan

nunavilan

  நிர்வாகம்

 • கருத்துக்கள நிர்வாகம்
 • 30,561 posts
 • Gender:Male
 • Location:USA

Posted 23 March 2012 - 04:58 PM

தமிழகத்தில் அடுத்த பத்து ஆண்டுகளில் மிகப் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதுதான் தமது நோக்கமென தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.கொள்ளையர்கள் ஆட்சியை தமிழ் நாட்டு மக்கள் கண்டும் கேட்டும் உள்ளார்கள்.நீங்கள் அதற்கு விதிவிலக்காக இருந்தாலே போதுமானது.

உணர்ச்சி மிகுந்தவர்கள் தலைகளைக் கீழே வைத்துக் கொண்டு நிற்பவர்கள் . அவர்களுக்கு எல்லாமே தலைகீழாகவே தெரியும்.
-         பிளேடோ

#4 வீணா

வீணா

  உறுப்பினர்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPip
 • 790 posts
 • Gender:Female

Posted 23 March 2012 - 04:59 PM


முதல்வரின் தொலைநோக்கு திட்டம்: 'வஞ்சிக்கப்படும்' விவசாயம்


தமிழக அரசின் 'தொலைநோக்கு திட்டம் 2023' என்கிற ஆவணத்தை சென்னையில் வியாழக்கிழமை வெளியிட்டு முதல்வர் ஜெயலலிதா பேசுகையில், "இந்த நிகழ்வு, மாநிலப் பொருளாதார வரலாற்றில் மிகவும் குறிப்பிடத்தக்கது.

எனது தலைமையிலான அரசு பொறுப்பேற்றபோது, இந்தியாவின் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகம் அனைத்துத் துறைகளிலும் சிறந்து, முதன்மை மாநிலமாக விளங்க இலக்கு நிர்ணயித்தேன்" என்று சொன்னார்.

ஆனால், அந்தத் தொலைநோக்குத் திட்டத்தில், வேளாண்மைக்கு குறைவாகவும், தொழில்துறைக்கு அதிகமாகவும் முக்கியத்துவம் கொடுத்துள்ளார்.

தொலைநோக்குத் திட்டம் 2023-ல் வேளாண்மைத் துறையில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த ரூ.40 ஆயிரம் கோடி முதலீட்டுக்கான இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அடுத்த 10 ஆண்டுகளில் முக்கிய துறைகளில் தனியாரின் பங்களிப்புடன் பிரதான திட்டங்களில் முதலீடுகளைச் செய்வது குறித்து தொலைநோக்குத் திட்டத்தில் குறிப்பிடப்பிட்டுள்ளது.

10 ஆண்டுகளில் கூடுதலாக 20 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய எரிசக்தித் துறையில் ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் கோடி அளவுக்கு முதலீடு தேவையென இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தொழில் மற்றும் வணிகத் துறையில் ரூ.1.5 லட்சம் கோடி முதலீடு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதே முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் அமர்ந்தவுடன், "வேளாண்மைக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பேன்," என்று முழங்கினார். அதே வேகத்தில் பல அறிவிப்புக்களையும் வெளியிட்டார். ஆனால், அவை ஒன்று கூட உருப்படியாக செயல்படவில்லை என்பதுதான் உண்மை.

மின்வெட்டால் பயிர் செய்ய முடியாமல், விவசாயிகள் கஷ்டப்படுகிறார்கள். விவசாயம் வளர்ந்தால், அத்தனை துறைகளுக்கும் மூலப் பொருட்கள் கிடைக்கும் என்று தெரியாத பொருளாதராப் புலிகளும், எலிகளும் அரசுக்கு ஆலோசனை இப்படித்தான் இருக்கும்.

தொடர்ந்து விவசாயிகளை வஞ்சிக்க இன்னும் எத்தனைப் பேர்தான் காத்திருக்காறர்களோ..!

http://news.vikatan.com/?nid=7182

#5 akootha

akootha

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 27,339 posts
 • Gender:Male
 • Location:Canada
 • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 24 March 2012 - 01:35 AM

பொருளாதார ரீதியில் நிச்சயம் முன்னேறவேண்டும், அந்த வளர்ச்சியில் சகல மக்களும் பயன்பெற வேண்டும். அத்துடன் நிச்சயம் ஊழல் ஒழிப்பு திட்டமும் இருக்கவேண்டும். விவசாயமும் நவீனமயப்படுத்தப்படல் வேண்டும்.

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.


#6 புங்கையூரன்

புங்கையூரன்

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 9,511 posts
 • Gender:Male

Posted 24 March 2012 - 01:47 AM

வழக்கம் போல, உழைச்சு வடக்கை வளம் படுத்துங்கள்!
இதைத் தானே, சிங்களமும் எங்களிடம் எதிர் பார்க்கின்றது!

"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்"

http://www.punkayooran.comயாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]