Jump to content


Orumanam
Photo

பிரபாகரன் போராட்டம் சரியானதே! தமிழீழம் மலர வேண்டும் என்பதே எனது வாழ்நாள் லட்சியம்!-கருணாநிதி!


 • Please log in to reply
15 replies to this topic

#1 nunavilan

nunavilan

  நிர்வாகம்

 • கருத்துக்கள நிர்வாகம்
 • 30,600 posts
 • Gender:Male
 • Location:USA

Posted 23 March 2012 - 03:10 PM
பிரபாகரன் போராட்டம் சரியானதே! தமிழீழம் மலர வேண்டும் என்பதே எனது வாழ்நாள் லட்சியம்!-கருணாநிதி!Posted Image
தனி ஈழத்துக்கான பிரபாகரன் போராட்டம் தவறானது என்று கூறும் அளவுக்கு நான் முட்டாள் இல்லை. அவர் போராட்டம் சரியானதே. தமிழர்களுக்கென்று இலங்கையில் ஒரு தாயகம் வேண்டும். தமிழ் ஈழம் மலர வேண்டும். அதுதான் எனது வாழ்நாள் லட்சியம் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்க தீர்மானம் வெற்றி பெற்றதையடுத்து கருத்து தெரிவித்த கருணாநிதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கைத் தமிழர்களுடைய வாழ்வின் முன்னேற்றத்தை மையமாகக் கொண்டு என்னென்ன செய்ய வேண்டும் என்பதையெல்லாம் யோசித்து, முடிந்தால் தமிழகத்திலே உள்ள அனைத்துக் கட்சிகளுடைய துணையோடு இப்போது எப்படி இந்தத் தீர்மானத்தில் இந்தியா ஆதரிக்க வேண்டுமென்று குரல் கொடுத்தோமோ அதைப் போல ஒருமித்த குரலைக் கொடுத்து ஆவன செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதனால் இலங்கை இதுவரை தமிழர்களுக்குப் புரிந்த கொடுமைகளுக்கு பரிகாரம் தேடுகின்ற நெருக்கடி ஏற்படும்.
ஏனென்றால் சிசுக்கள், இளைஞர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், பெண்கள், முதியவர்கள் என்று ஆயிரக்கணக்கான தமிழ்த் தாய்மார்களும், தமிழர்களும் சித்திரவதைக்கு ஆளாகியிருக்கிறார்கள்.
சவக்குழிக்களுக்குச் சென்றிருக்கிறார்கள். இந்தக் கொடுமைகளுக்கெல்லாம் பரிகாரம் ஏற்படவும், உலக நாடுகள் முன்னால் தலை குனிந்து நின்று காரண காரிய விளக்கங்கள் சொல்லவும் இலங்கை அரசு கடமைப்பட்டிருக்கிறது.
இப்போது தான் பெரும்பாலான நாடுகளுடைய தீர்மானம் நிறைவேறியிருக்கிறது. இதைத் தொடர்ந்து அந்த நாடுகள் தான் என்ன நடவடிக்கை எடுப்பது என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்றார் கருணாநிதி.
பிரபாகரன் போராட்டம் சரியானதே.. ஆனால் சகோதர சண்டைதான் ஈழம் அமைவதைக் கெடுத்தது
தனி ஈழத்துக்கான பிரபாகரன் போராட்டம் தவறானது என்று கூறும் அளவுக்கு நான் முட்டாள் இல்லை. அவர் போராட்டம் சரியானதே. ஆனால் சகோதரச் சண்டைதான் தமிழ் ஈழம் அமைவதைக் கெடுத்தது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
ஐநாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறிய பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் கேட்கப்பட்ட முக்கிய கேள்வி, தமிழ் ஈழம் பற்றியதுதான். அதற்கு அவர் அளித்த பதில்களின் தொகுப்பு:
ஈழத்தில் நடந்த சகோதர யுத்தம்தான் தமிழீழம் உருவாவதைத் தடுத்துவிட்டது என்பது என் கருத்து என்றார் கருணாநிதி.
அப்போது, புலிகள் நடத்திய சகோதர யுத்தம் தவறானது என்று சொல்கிறீர்கள். தந்தை செல்வா போன்றோர் அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போதும் தமிழர்கள் மீது அத்துமீறல்கள் நடந்தன. அதனால்தான் நாங்கள் போராடத் தொடங்கினோம்' என்று பிரபாகரன் சொல்லியிருந்தாரே?அது தவறா? என்று ஒரு நிருபர் கேட்டார்.
உடனே பதிலளித்த கருணாநிதி: "பிரபாகரன் போராட்டத்தைக் குறை கூறும் அளவுக்கு நான் முட்டாள் அல்ல. அவர் முன்னெடுத்த போராட்டம் சரியானதே. அதை திமுகவும் ஆதரிக்காமலில்லை. புலிகள் நடத்திய சகோதர யுத்தம் என்று நான் சொன்னது அவர்களைப் பற்றி மட்டுமே அல்ல.
ஆனால் பிரபாகரனும் முகுந்தனும், பத்நாபாவும், ஸ்ரீசபாரத்தினமும் மோதிக் கொண்டு அதில் இரத்த ஆறு ஓடியதைத்தான் நான் மிகுந்த வேதனையோடு அப்போதும் தடுத்தேன். இப்போதும் அந்த நிலை வரக்கூடாது" என்று வேண்டுகிறேன் என்றார் கருணாநிதி.

http://www.thedipaar...ws.php?id=43182உணர்ச்சி மிகுந்தவர்கள் தலைகளைக் கீழே வைத்துக் கொண்டு நிற்பவர்கள் . அவர்களுக்கு எல்லாமே தலைகீழாகவே தெரியும்.
-         பிளேடோ

ninaivu-illam

#2 sudalai maadan

sudalai maadan

  உறுப்பினர்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPip
 • 264 posts
 • Gender:Male

Posted 23 March 2012 - 04:55 PM

மாபாவி சாகானோ ஒரு மாரி மழை பெய்யாதோ?
 • Nellaiyan likes this

#3 Nellaiyan

Nellaiyan

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 5,371 posts
 • Gender:Male
 • Location:London

Posted 23 March 2012 - 05:04 PM

... இன்னும் ஒருதரம் ஈழம் அமைவதற்கு, தமிழக கருணா, தனது இரு மனைவியர் புடைசூழ ஒரு மணி நேரமோ அல்லது இரு மணி நேரமோ உண்ணாவிரதம் இருப்பது நல்லது ..


நெற்றிக் கண்ணை திறப்பினும், குற்றம் குற்றமே

Nellaiyaan@yahoo.com

#4 pulihesi

pulihesi

  உறுப்பினர்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPip
 • 225 posts

Posted 23 March 2012 - 06:24 PM

கிழவனுக்கு அறளை பெயர்ந்திட்டுப்போல.....................

#5 விசுகு

விசுகு

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 18,945 posts
 • Gender:Male
 • Location:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்?
 • Interests:எதுவானாலும் ஈழத்தை நோக்கியே...........

Posted 23 March 2012 - 07:45 PM

மாபாவி சாகானோ ஒரு மாரி மழை பெய்யாதோ?


:lol: :icon_idea: :icon_idea:

அறை வாங்கினேன்
மறு கன்னத்திலும்
ஏசுவே
இனி என்ன செய்ய???????
(காசி ஆனந்தன் நறுக்குகள்)

 

http://imageshack.us...es/593/rit.gif/


#6 பரதன்

பரதன்

  உறுப்பினர்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPip
 • 189 posts

Posted 23 March 2012 - 09:45 PM

மாபாவி சாகானோ ஒரு மாரி மழை பெய்யாதோ?


:rolleyes: :rolleyes: :D

#7 தமிழரசு

தமிழரசு

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 23,284 posts
 • Gender:Male
 • Location:அகதிக்கு ஏது நிரந்தர இருப்பிடம் ?
 • Interests:தமிழ்மக்களுக்காக ஒரு நாடு ஒன்றை உருவாக்க உறவுகளுடன் இணைத்து செயல்படுவது

Posted 23 March 2012 - 09:58 PM

இந்தாள் இப்படி சொன்னால் அடுத்து சொல்லும் வசனம் சகோதரப்படுகொலை ......... இதற்கு இதைப்பற்றி பேசாது இருப்பதே சிறந்தது

கேட்டுகேட்டு புளிச்சுபோட்டுது, இந்தாளை யார் கேட்டார்கள்? வேறு ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்.

அல்லது நீங்கள் எப்படி மூன்று மனைவிமாருடனும் மகிழ்வாக வாழ்ந்தீர்கள் என்பதுபற்றி கட்டுரை எழுதலாம். :lol: :icon_mrgreen:
வெள்ளை என்பது அழகல்ல .... நிறம் !
ஆங்கிலம் என்பது அறிவல்ல .... மொழி !     முகநூளில் சுட்டது

 


#8 யாழ்அன்பு

யாழ்அன்பு

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 5,420 posts
 • Gender:Male
 • Location:Switzerland
 • Interests:இசை,அரசியல்
  (தமிழினத் துரோகிகளை கருவறுப்போம்)

Posted 23 March 2012 - 10:45 PM

Posted Image

#9 பையன்26

பையன்26

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 7,044 posts
 • Gender:Male
 • Location:பதுங்கி தாக்கும் இடம்
 • Interests:தாயகப் பாடல்கள்

Posted 23 March 2012 - 11:06 PM

:) :D

Ljc62.gif 7cwLd.jpgXPD8E.jpgJ34XK.jpgojBbW.jpg


#10 சனியன்

சனியன்

  உறுப்பினர்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPip
 • 328 posts
 • Gender:Male
 • Location:அம்பாறை

Posted 23 March 2012 - 11:21 PM

தமிழீழம் மலர வேண்டும் என்பதே எனது வாழ்நாள் லட்சியம்!-கருணாநிதி!


என்ன நாசமறுப்புடா இது.
சுட்டா சாக வேணும்.... சும்மா நொட்டிக் கொண்டு இருக்கப்படாது.

- பீல்ட் மார்சல் கந்தவனம்

#11 Sooravali

Sooravali

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 4,454 posts
 • Location:அகண்ட வெளி

Posted 24 March 2012 - 12:00 AM

புலிகள் இல்லாவிட்டாலும் அவர்கள் கொலையாளிகள் என்று சொல்ல ஆட்களை வெளியில தேடத் தேவை இல்லை.
திரும்பிப்போய் தொடக்கத்தை யாராலும் மாற்ற முடியாது,
தொடந்து சென்றால் முடிவையாவது மாற்றமுடியும்.

வரலாறு விட்ட வழியில், காலம் இட்ட கட்டளைப்படி சிங்கள அந்நிய ஆக்கிரமிப்பு அகலும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம்.

#12 தமிழ்சூரியன்

தமிழ்சூரியன்

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 5,086 posts
 • Gender:Male
 • Location:யோசிப்பது தமிழீழம்.....வசிப்பது ஒல்லாந்து
 • Interests:இசைப்பது,ரசிப்பது,

Posted 24 March 2012 - 12:50 AM

Posted Yesterday, 10:45 PM
:D :lol: :icon_idea: Posted Image

தமிழரின் இன்றைய நிலை மாறும்.
மாறும் என்ற சொல்லைத்தவிர உலகில் எல்லாம் மாறும். 

                      

         


#13 Iraivan

Iraivan

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 6,881 posts
 • Gender:Male
 • Location:இறைவன்
 • Interests:எல்லாவற்றிலும் கொஞ்சம், கொஞ்சம்.

Posted 24 March 2012 - 12:54 AM

ஈழத்திற்காக முயற்சி செய்யுங்கள். ஒறு சிறு சிலையாவது அங்கே வைக்கப்படும்.
இறைவன்

#14 akootha

akootha

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 27,339 posts
 • Gender:Male
 • Location:Canada
 • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 24 March 2012 - 01:07 AM

மன்மோகன் சிங்கின் அரசில் பங்கு வகிக்கும் தி.மு.க.உறுப்பினர்கள் பதவிகளை துறப்போம் என கூறியமை அமெரிக்காவின் தீர்மானத்திற்கு அது ஆதரவாக வாக்களித்தமைக்கு ஒரு காரணமாக இருக்கலாம். அந்த வகையில் இந்த தி.மு.க. முடிவுக்கு காரணமாக இருந்த தமிழக உறவுகளுக்கு நன்றிகள்.

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.


#15 தமிழ்சூரியன்

தமிழ்சூரியன்

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 5,086 posts
 • Gender:Male
 • Location:யோசிப்பது தமிழீழம்.....வசிப்பது ஒல்லாந்து
 • Interests:இசைப்பது,ரசிப்பது,

Posted 24 March 2012 - 01:20 AM

இந்த விடயத்தைப்போல் தமிழக கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட்டால் நிச்சயம் எமக்கு ஓர் விடிவு கிடைக்கும்..............மீண்டும் ஒன்றிணைந்து ஓர் அணியில் நிற்பார்களா....................

தமிழரின் இன்றைய நிலை மாறும்.
மாறும் என்ற சொல்லைத்தவிர உலகில் எல்லாம் மாறும். 

                      

         


#16 Iraivan

Iraivan

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 6,881 posts
 • Gender:Male
 • Location:இறைவன்
 • Interests:எல்லாவற்றிலும் கொஞ்சம், கொஞ்சம்.

Posted 24 March 2012 - 01:28 AM

இந்த விடயத்தைப்போல் தமிழக கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட்டால் நிச்சயம் எமக்கு ஓர் விடிவு கிடைக்கும்..............மீண்டும் ஒன்றிணைந்து ஓர் அணியில் நிற்பார்களா....................ஓரணியில் நிற்கவேண்டும் என்ன செய்வது, குடும்ப அரசியலும் ஊழலில் ஈடுபட்ட அரசியலாளர்களும் தம்மைத் தாம் காப்பதற்காக எமது இனத்தின் ஆறாத ரணங்களை தமக்குள் பேரம் பேசிக்கொள்கிறார்கள்.

எப்படியாயினும் ஒரே கருத்தை அனைவரும் பிரதிபலித்தாலே ஈழத்தமிழருக்கான வழி திறந்துவிடும்.

இறைவன்


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]