Jump to content

தமிழர் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள படைகளை சிறிலங்கா விலக்கிக் கொள்ள வேண்டும் – இந்தியா


Recommended Posts

மிழர் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள படைகளை சிறிலங்கா விலக்கிக் கொள்ள வேண்டும் – இந்தியா [ வெள்ளிக்கிழமை, 23 மார்ச் 2012, 01:39 GMT ] [ தா.அருணாசலம் ]

India_Flag.jpgஉயர்பாதுகாப்பு வலயங்களை குறைத்து, தமிழர் நிலங்களை அவர்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்றும், தமிழர் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள சிறிலங்கா படைகளை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நேற்று கொண்டு வரப்பட்ட சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தின் மீது உரையாற்றிய போதே இந்திய பிரதிநிதி இவ்வாறு கூறியுள்ளார்.

“சிறிலங்காவின் நல்லிணக்க ஆணைக்குழு வழங்கிய பரிந்துரைகளை இந்தியா வரவேற்றிருந்தது.

சிறிலங்காவில் வாழும் அனைத்து இன மற்றும் மதக் குழுக்களுக்கும் மதிப்பளிக்கும் வகையிலான அரசியல்தீர்வு மூலமான நல்லிணக்கத்தை அந்த நாட்டில் கொண்டு வருவதற்கு இந்தப் பரிந்துரைகள் ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தரும் என்று இந்தியா நம்புகிறது.

அரசியல் தீர்வை சிறிலங்கா அரசாங்கம் ஆர்வத்துடன் தலைமையேற்று முன்னெடுக்க வேண்டும் என இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது.

13வது அரசியலமைப்புத் திருத்தத்தையும் அதற்கும் மேற்பட்ட அதிகாரங்களை பகிர்ந்தளிக்கப்படுவதை நோக்கி சிறிலங்கா அரசாங்கம் முன்னேறிச் செல்ல வேண்டும்.

பரந்துபட்ட கலந்துரையாடலுடன் கூடிய அரசியல் நடவடிக்கைகளை அது முன்னெடுக்க வேண்டும்.

மீறல்களை மேற்கொண்டவர்களை அதற்குப் பொறுப்பேற்கச் செய்வதிலும் மனிதஉரிமைகளைப் பேணுவதிலும், தனக்கு இருக்கின்ற அனைத்துலக கடப்பாடுகளை நிறைவேற்றும் நோக்கில் சிறிலங்கா நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

அதேவேளை, நல்லிணக்கம், சமாதானம் போன்ற இலக்குகளை அடைய சிறிலங்கா போன்ற ஒரு ஜனநாயக நாட்டுக்கு போதிய அவகாசமும், செயற்படுவதற்கான இடமும் வழங்கபட வேண்டும்.

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை சிறிலங்கா தமது இலட்சியங்களை எட்ட உதவியாக இருக்க வேண்டும், தடையாக இருக்கக் கூடாது.

காணாமல் போனவர்கள் மற்றும் தடுப்புக்காவலில் உள்ளவர்களின் விபரங்கள் கணக்கெடுக்கப்பட்டு வெளிப்படுத்தப்பட வேண்டும்.

சிறிலங்காவில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு வீடு கட்டித்தருவது, சுகாதாரம் வசதிகளை சீர்செய்வது, கண்ணிவெடிகளை அகற்றுவது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு இந்தியா உதவி செய்யும்.

உயர் பாதுகாப்பு வலயங்களை சிறிலங்கா அரசு உடனடியாக குறைத்துக் கொள்ள வேண்டும். இடம்பெயர்ந்த தமிழர்களுக்கு சொந்தமான இடங்களை ஒப்படைக்க வேண்டும்.

தமிழர்கள் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள சிறிலங்கா இராணுவத்தை திரும்பப் பெறவேண்டும்“ என்று இந்தியப் பிரதிநிதி மேலும் கூறியுள்ளார்.

http://www.puthinappalakai.com/view.php?20120323105845

Link to comment
Share on other sites

வடக்கில் இருந்து இராணுவத்தை மீளப் பெறுமா அரசு? (அமெரிக்காவின் பிரேரணை இணைப்பு)

March 22nd, 2012 அன்று வெளியிடப்பட்டது -

america-100x100.jpg

ஐ.நா மனித உரிமைச் சபையில் சிறிலங்கா தொடர்பில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணை, தீர்மானமாக நிறைவேற்றியுள்ளது. சிறிலங்கா அரசாங்கம் மாபெரும் இராஜதந்திரச் தோல்வியைச் சந்தித்துள்ளது. கடந்த 4 வாரங்களாக, உலகத் தமிழர்களின் எதிர்பார்புக்கு மட்டுமல்ல, இலங்கைத் தீவை மையப்படுத்திய உலக அரசியல் வெளியிலும், இப்பிரேரணை விவகாரம் முக்கியவிடயமாக மாறியிருந்தது.இந்நிலையில் இன்று ஐ.நா கூட்டத் தொடர் அமர்வில் கடும் வாதப் பிரதிநதிவாதங்களுக்கு மத்தியில் இந்தப் பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்பட்ட இன்று வாக்கெடுப்பு நடைபெற்றிருந்தது..

பிரேணையின் தமிழ் வடிவம் வருமாறு,

ஐக்கிய நாடுகள் சாசனம், சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம், மனித உரிமைகளுக்கான அனைத்துலக உடன்படிக்கைகள் மற்றும் பிற தொடர்புடைய விதிகளுக்கு அமைவாக…

பயங்கரவாதத்திற்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் அனைத்தும் சர்வதேச விதிகளுக்கு அமைவாக இருப்பதை உறுதிப்படுத்தும் உறுப்பு நாடுகளது கடமைக்கு அமைவாகவும், குறிப்பாக பொருத்தமான சர்வதேச மனித உரிமைகள், பாதுகாப்பு, மனிதாபிமான விதிகளுக்கு அமைவாகவும்…

சிறிலங்காவின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் முடிவுகளையும் பரிந்துரைகளையும் மற்றும் சிறிலங்காவில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் இவ்வறிக்கை வழங்கிய பங்களிப்பை ஏற்றும்..

சட்டத்திற்கு முரணாக மேற்கொள்ளப்பட்டதாக கருதப்படும் படுகொலைகள் மற்றும் காணாமற் போதல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளையிட்டு பக்கசார்பற்ற விசாரணை மேற்கொள்ளுதல், வடக்கிலிருந்து இராணுவத்தை விலக்குதல், காணி தொடர்பான பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான பாரபட்சமற்ற பொறிமுறையை உருவாக்குதல், தடுத்து வைத்தல் தொடர்பான கொள்கைகளை மீளாய்வு செய்தல், சுயாதீனமான சிவில் சமூக கட்டமைப்புகளை பலப்படுத்துதல், மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பரவலாக்குதல் மூலம் இனப்பிரச்சனைக்கான தீர்வைக் காணுதல், அனைவரதும் கருத்து வெளிப்பாட்டு உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல், சட்ட ஆட்சி முறை தொடர்பான சீர்திருத்தங்களை மேற்கொள்ளுதல் போன்ற விடயங்கள் சார்ந்து கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்வைத்துள்ள ஆக்கபூர்வமான பரிந்துரைகளை வரவேற்று…

சர்வதேச சட்ட விதிகள் தீவிரமாக மீறப்பட்டமை குறித்து கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு போதுமான அளவு கவனம் செலுத்தவில்லை என்பதையும் கவனத்திற்கொண்டு..

1. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள ஆக்கபூர்வமான பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதுடன் நீதி, பொறுப்புப் கூறுதல், சகல இலங்கையர்க்கும் இடையிலான நல்லிணக்கம் போன்றவற்றை உறுதிப்படுத்த, பொருத்தமானதும் நம்பிக்கையானதுமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவும் சட்டரீதியான கடமைகளையும் பொறுப்புக்களையும் நிறைவேற்றவும் சிறிலங்கா அரசைக் கோருதல்

2. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துதல் தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட மற்றும் தொடர்ந்து எடுக்கப்படவுள்ள விபரங்கள் உள்ளிட்ட, விரிவான செயற்திட்டத்தை விரைந்து முன்வைக்குமாறும், சர்வதேச சட்டவிதிகள் மீறப்பட்டமை குறித்த குற்றச்சாட்டுகள் குறித்து கவனம் செலுத்துமாறும் சிறிலங்கா அரசாங்கத்தைக் கோருதல்

3. மேற்சொன்ன திட்டங்களை நடைமுறைப்படுத்தவதற்குரிய ஆலோசனைகளையும் தொழில்நுட்ட உதவிகளையும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தை வழங்குமாறும் சிறிலங்கா அரசாங்கத்தை இதனை ஏற்றுக்கொள்ளுமாறும் வேண்டுவதுடன் இது தொடர்பாக மனித உரிமைகள் ஆணையகத்தின் 22 வது கூட்டத்தொடரில் வழங்கப்பட்ட உதவிகள் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தை வேண்டுதல்

http://www.saritham.com/?p=54886

Link to comment
Share on other sites

தமிழர் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள படைகளை சிறிலங்கா விலக்கிக் கொள்ள வேண்டும் – இந்தியா

வரதராஜப்பெருமாள் .டாக்கியின் கீழ் உள்ள படைகளின் கட்டுப்பாட்டிற்குள் தமிழ் மக்கள் வாழவேண்டும்- இந்தியா

Link to comment
Share on other sites

இந்தியாவின் இந்தக் கெஞ்சல் யாரை ஏமாற்றுவதற்கு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவத்தை வெளி ஏற்றுவதனால் எமக்கு தமிழீழம் கிடைத்து விடாது

அதற்காக இந்தியாவினால் ஏதாவது செய்ய முடியுமானால் செய்வதே இன்றைய ஈழத்தமிழரின் தேவையும் அதற்காக இந்தியா ஏதாவது செய்யுமா ?????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதனை நாங்கள் வரவேற்போம். இதற்காகவும் தானே நாங்கள் ஆயுதம் தூக்கி போராடினோம். வடக்கு மட்டுமல்ல.. தமிழர் தாயகம் எங்கிருந்தும் மலையகத்தில் இருந்தும் படை விலகல் நடந்தாக வேண்டும்..! இதனை இந்தியா வலியுறுத்தின் அதனை தமிழ் மக்கள் வரவேற்கலாம். அதற்காக இந்தியா எல்லாவற்றையும் பெற்றுத்தரும் என்று மட்டும் நம்ப வேண்டாம்.

பிரேமதாசா அரசிற்கு அன்றிருந்த ஜே வி பி நெருக்கடியைப் பயன்படுத்தி இந்தியப் படைகளை விலக்க வைத்தது போல.. இந்தச் சூழ் நிலையையும் நாம் மிக அவதானமாக கையாண்டு.. எமக்கு சாதகமான அரசியல் கள நிலையை தாயக மண்ணில் இயன்றவரை ஏற்படுத்த வேண்டும்.

அங்கு சிங்கள இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் இருந்து துன்பப்படும் மக்களுக்கு ஒரு இடைக்கால நிம்மதியாவது கிடைக்க இந்த அமெரிக்க தீர்மானத்தை பயன்படுத்துவது நன்றே..!

எல்லாவற்றிற்கும் மேலாக.. இந்தக் கோரிக்கைகளை சிங்களம் நடைமுறைப்படுத்துமா என்பதும் கேள்வியே. நடைமுறைப்படுத்தா விட்டாலும் அதையும் நமக்கு சாதகமாகப் பயன்படுத்த வேண்டும்..!

இப்போது எதுவுமே இன்றி இருந்த எமக்கு சில காய்களை நகர்த்தும்.. சந்தர்ப்பமாவது கிடைத்திருப்பது நல்ல சூழலே. இதனை சரி வர பாவிக்க வேண்டும். அதற்காக அமெரிக்க .. இந்திய.. விசுவாசம் வளர்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நடுநிலையோடு நாம் நின்று தான் செயற்பட்டுப் பார்க்கலாமே..! :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் உடன் முழுமையாக உடன்படுகின்றேன்.

நல்ல காரியங்கள் நடக்க ஆரம்பிப்பது யாழிலும் தெரிகிறது

எல்லாவற்றிற்கும் முதலில் தமிழன் ஒரே குரலில் பேசணும்.

அந்த மாற்றம் எம்மில் வரணும்.

Link to comment
Share on other sites

இந்தியத்தின் முதலாவது நகர்வு இது. பிராந்திய நலன் என்பதற்கு முன்னுரிமை கொடுத்து அது செயலாற்றப் போகிறது. சிலங்கா தனது திகைப்பிலிருந்து வெளியேறுவதற்கு முன் சில கோரிக்கைகளை முன்வைப்பது போன்றே காரியமாற்றும்.

இந்தியாவின் இந்தத் தொனி ஈழத்தமிழருக்கு ஒரு விதத்தில் சார்பானதுதான். இந்தியாவின் கைக்குள் அனைத்தும் திரும்பி வந்திருப்பதை இப்போது சிறிலங்கா உணர்ந்திருக்கும்.

ஈழத்தமிழருக்கான பொது எதிரி சிறிலங்கா.

சிறிலங்காவிற்கான பொது எதிரி இந்தியா.

எதிரிக்கு எதிரி நண்பன் என்ற நிலைதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது பிரச்சனையை, அமேரிக்கா கையில் எடுத்ததும், இந்தியாவுக்கு ரோசம் பொத்துக் கொண்டு வந்து விட்டது, போலும்!

அமெரிக்கா ஏதோ, ஒரு நிபந்தனையுடன் தான், பிரேரணையில் மாற்றம் கொண்டு வந்திருக்கின்றது போல!

Link to comment
Share on other sites

அரசியலில் நிரந்தர எதிரிகளும் இல்லை; நண்பர்களும் இல்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா... முதலில், தனது நாட்டு மீனவர்களை பாதுகாத்து விட்டு,

எமது பாதுகாப்பை.... உறுதி செய்ய வேண்டும்.

பம்மாத்து அரசியல், எங்கும் செல்லுபடியாகாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள படைகளை சிறிலங்கா விலக்கிக் கொள்ள வேண்டும் – இந்தியா

வரதராஜப்பெருமாள் .டாக்கியின் கீழ் உள்ள படைகளின் கட்டுப்பாட்டிற்குள் தமிழ் மக்கள் வாழவேண்டும்- இந்தியா

Link to comment
Share on other sites

முதல்ல கச்சை தீவில பறிச்சு வைச்சிருக்கிற சாமான்களை கழட்ட வழியை பார்ப்பிர்களா?

Link to comment
Share on other sites

செய்தி உண்மையானால் ஆச்சரியப்படவைக்கும் மாற்றமே. ஆனால் பனையால விழுந்தவனை மாடு ஏறிமிதிக்கும் நிலையாகக்கூடாது.

Link to comment
Share on other sites

தமிழரின் பாதுகாப்புக்கு ஐ.நா. படைகளை நிறுத்த வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரின் பாதுகாப்புக்கு ஐ.நா. படைகளை நிறுத்த வேண்டும்.

எனது கருத்தும் அதுவே,

இல்லையென்றால் திரும்பவும் இந்தியான் அமைதிப்படை என்ற பெயரில் கொலைகாரப்படை வந்து குந்தியிடும் ^_^

Link to comment
Share on other sites

ஐ நா படையினர் அனுமதிக்கப்படப் போவதில்லை.

இலங்கை இராணுவத்திற்குள் பிரச்சனைகளை ஏற்படுத்துவதற்கு வழிகோலப்படும் என்பதே எதிர்பார்ப்பு.

அப்படியாயின் எந்தப்படை வரும்?

வருவதற்கான சாத்தியங்கள் எந்தப் படைகளுக்கு அதிகம்? என்பதை ஊகித்துக் கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரசியலில் நிரந்தர எதிரிகளும் இல்லை; நண்பர்களும் இல்லை

]

அப்ப மனைவியை கையிலே பிடித்து இழுத்துக்கொண்டு...........

அவளுடைய புருசனுடன் சமரசம் பேசுவதா அரசியல்?

Link to comment
Share on other sites

தென் கொரியாவின் பாதுகாப்புக்கு என அமெரிக்க படைகள் உள்ளன, அந்த அரசின் வேண்டுகோளின் படி.

சிரியாவில் உருசிய படைகள் உள்ளன, அந்த அரசின் வேண்டுகோளின் படி.

சிங்கள நாட்டின் பாதுகாப்புக்கு சீனப்படைகள் ஒப்பந்தம் செய்யலாம். செய்தால் ??

Link to comment
Share on other sites

தென் கொரியாவின் பாதுகாப்புக்கு என அமெரிக்க படைகள் உள்ளன, அந்த அரசின் வேண்டுகோளின் படி.

சிரியாவில் உருசிய படைகள் உள்ளன, அந்த அரசின் வேண்டுகோளின் படி.

சிங்கள நாட்டின் பாதுகாப்புக்கு சீனப்படைகள் ஒப்பந்தம் செய்யலாம். செய்தால் ??

இது நிகழக் கூடியதுதான். இந்திய இலங்கை ஒப்பந்தம் சிலவேளை இதற்குத் தடையகவரலாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.