இந்த ஒத்திகையில் சீனாவின் ஜெ-10 ரக குண்டு வீச்சு விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டன. திபெத்தில் 3,500 அடி உயரமுள்ள பீடபூமியில் இந்த ஒத்திகை நடைபெறுவதாகவும், இது போன்ற ஒத்திகை நடைபெறுவது இதுவே முதல் தடவை என்று அதிகாரிகள் தெரிவித்ததாக சீன செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் இரவு பகலாக நடைபெற்ற இந்த ஒத்திகையின் போது லேசர் துணையுடன் கூடிய குண்டுகளை குறிப்பிட்ட இலக்கில் வீசி வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்த ரக போர் விமானங்கள் உயரமான மலைப்பகுதியில்(ஆக்சிஷன் குறைவாக இருக்கும் இடம்) சென்று குண்டு வீசும் திறம் படைத்தது என்றும் கூறப்படுகிறது.
http://www.newsonews.com/view.php?22yOld0bcs80Qd4e3UMM302cBnB3ddeZBnT202eMAA2e4U08qacb3lOU42





















