மார்ச் 22.2012
அமெரிக்க தீர்மானத்தைஆதரித்தும்சுயாதீனவிசாரணையைவலியுறுத்தியும்இடம்பெறுகின்றஆதரவுப் பேரணி
இன்று 22.மார்ச்.2012 வியாழக்கிழமை ஐ.நா சபையின் 19வது மனிதவுரிமை அமர்வில் இலங்கைக்குஎதிராக அமெரிக்காவால் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைக் கனடியத் தமிழர்தேசிய அவை உலக அரங்கிலே எம்மினத்தினுடைய விடிவைநோக்கிய பயணத்தின் முதற்படியாகப்பார்க்கின்றது. இலங்கை அரசு பெருமளவிலான முயற்சிகளை மேற்கொண்டு இத்தீர்மானம்தோல்வியுறச் செயற்பட்டபோதும் அமெரிக்க அரசின் பெருமுயற்சியினாலும் நாம் வாழும் நாடாம்கனடாவின் பூரண ஒத்துழைப்பாலும் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதற்கு ஆதரவு தெரிவிக்குமுகமாகவும் மென்மேலும் சர்வதேச அளவில் எம்மினத்தின் விடிவைநோக்கிய நகர்விற்கு அமெரிக்க அரசு ஆக்கபூர்வமான செயற்பாடுகளைமேற்கொள்ளு முகமாகவும் நாளைய நாள் கனடியத் தமிழர் சமூகத்தாலும் மாணவர் சமூகத்தாலும் ஒழுங்கமைக்கப்பட்ட ஆதரவுப் பேரணி ஒன்று ரொறன்ரோ மொன்றியல் மாநிலங்களில் உள்ளஅமெரிக்கத் துணைத்தூதரகங்களுக்கு முன்பாக காலை 11.00 மணி தொடக்கம் மாலை 18.00 மணிவரை நடைபெற ஏற்பாடாகியுள்ளது. ஒட்டாவாவில் அமைந்துள்ள கனடியப் பாராளுமன்றமுன்பாகஎதிர்வரும் ஏப்பிரல் 2ந் திகதி திங்கட்கிழமை மாபெரும் மக்கள் பேரணியும் நடைபெறவுள்ளது.
இவ்விரு பேரணிகளிலும் கனடாவாழ் தமிழ் மக்கள் அனைவரும் பெருமளவில் கலந்துகொண்டுகனடிய அரசிற்கும் மனிதாபிமானமுறையில் செயற்பட்ட அத்தனை நாடுகளுக்கும் எமதுநன்றியினைத் தெரிவித்துக்கொள்வதுடன் மென்மேலும் உலக அரங்கில் எம்மினத்தின் விடிவைநோக்கிய பயணத்திற்கு உலகநாடுகளின் ஆதரவினைவேண்டி நடைபெறுகின்ற பேரணியில் கனடாவாழ் தமிழ் மக்கள் அனைவரும் பெருந்திரளாகக் கலந்துகொள்ள வேண்டுமெனக் கனடியத் தமிழர்தேசிய அவை வேண்டிநிற்கிறது.
தொடர்புகளுக்கு: கனடியத் தமிழர் தேசிய அவை (NCCT)
தொலைபேசி :– 1.866.263.8622 - 416.646.7624
மின்னஞ்சல் :- info@ncctcanada.ca















