Jump to content


Orumanam
Photo

கடைசிப் பாலகனின் இரத்தம் - குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக - தீபச்செல்வன்


 • Please log in to reply
6 replies to this topic

#1 நிழலி

நிழலி

  ர.சி.க.ன்

 • கருத்துக்கள பொறுப்பாளர்கள்
 • 9,123 posts
 • Gender:Male
 • Location:Canada
 • Interests:காமமும் கலவியும்

Posted 23 March 2012 - 02:09 AM

கடைசிப் பாலகனின் இரத்தம் - குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக - தீபச்செல்வன்

மூட மறுக்கும் பாலகர்களின் கண்களில்
குற்றங்களின் முடிவற்ற காட்சிகள் அசைகின்றன
இறுதியில் எதையோ சொல்ல முயன்றபடியிருக்கும்
மூடாத வாய்களில்
மறைக்கப்பட்ட வாக்குமூலங்கள் ஒலிக்கின்றன

இரத்தத்தில் பிறந்து
இறுதிவரையில் இரத்தம் காயாமல்
பிசுபித்தபடி உடல் எங்கும் வழிய
குண்டுகளால்சிதைக்கப்பட்ட பாகங்கள் உதிர
எனது நிலத்து பாலகர்கள் திரிகையில்
இலையான்கள் காயங்களை அரித்து
அவர்களைத் தின்று முடித்தன

எல்லோருடைய கண்களின் முன்பாகவும்
எனது தேசத்திற்கெதிரான போரில்
பாலகர்களை பலியிடும் பொழுது
தாய்மார்களை நோக்கி அவர்கள் அழுகையில்
தாய்மடிகளில் இரத்தம் பெருகியிருந்தது

பெண்குறியிலிருந்து குழந்தைகள்வரை சிதைக்கப்பட
பாலகர்களின் பூமியின் வேர் கருகியது

போர் ஆயுதங்கள் மிகுந்த ரசனையொடு
பாலகர்களை சிதைத்துக் கொன்று தின்றன

ஏங்கும் குழந்தைகளின் கண்களை பிடுங்கி
வார்த்தைகளை அழித்து
அவர்கள் இல்லாமல் செய்யப்பட்டனர்

பாலகர்களுக்கு எதிரான போரில்
வேருடன் அவர்கள் அழித்தொழிக்கப்பட்ட பொழுது
பூமி வெளித்துப் போனது

அழிக்கப்படும் தேசத்தில் பிறந்த
ஏதும் அறியாத பாலகர்களைக் கொன்று
இரத்தத்தை உறிஞ்சிப் பருகும் போர்ப்படைகள்
பூமியின் கடைசிப் பாலகனின்
நெஞ்சில் துப்பாக்கிகளால் துளைகளையிட்டு
இரத்தத்தை உறிஞ்சிக் குடித்த பொழுது
எல்லாக் குழந்தைகளும் நிலத்தில் வீழ்ந்து கிடந்தனர்.

http://www.globaltam...IN/article.aspx

ninaivu-illam

#2 KuLavi

KuLavi

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 1,510 posts
 • Gender:Male
 • Location:உலகெனும் கல்.
 • Interests:தமிழீழத்தையும், நாம் வாழும் நாட்டையும் உலகே வியக்கும் நாடுகளாக
  கட்டியெழுப்புதல்!

Posted 23 March 2012 - 03:31 AM

இவங்களை மரியாதை கொடுத்து ஜனாதிபதி என்று அழைத்து சால்வை போடும் சிறி லங்கா தமிழரும் சேர்ந்து ஸ்ட்ரா வைத்து இரத்தம் உறிஞ்சினர்.

கருமவினை கெட்டது.  🔥
கொதித்தெழும் தமிழக உறவுகளுக்கு எல்லா ஈழத்தமிழர் சார்பிலும் நன்றி.

திறமையாக செயல் படும் BTF, TYO, CTC, ATC, TGTE, TAG, PEARL அமைப்புகளுக்கும் நன்றி.

எம்மை காப்பாற்றி, வளர்த்து அரசியல் தீர்வு தேடி தரும் மேற்கு உலக நாடுகளுக்கும் நன்றி.

தமிழீழத்திற்காக உயிர் பிரிந்தவர்கள் எல்லோருக்கும் தமிழீழத்தை காணிக்கையாக்குவது எமது கடமை.

#3 புங்கையூரன்

புங்கையூரன்

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 9,522 posts
 • Gender:Male

Posted 23 March 2012 - 03:48 AM

பாலகர்களுக்கு எதிரான போரில்
வேருடன் அவர்கள் அழித்தொழிக்கப்பட்ட பொழுது
பூமி வெளித்துப் போனது


தீபச் செல்வனின் வரிகள், தங்களை இங்கே இனங் காட்டுகின்றன!
நன்றிகள், நிழலி!!!

"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்"

http://www.punkayooran.com


#4 நிழலி

நிழலி

  ர.சி.க.ன்

 • கருத்துக்கள பொறுப்பாளர்கள்
 • 9,123 posts
 • Gender:Male
 • Location:Canada
 • Interests:காமமும் கலவியும்

Posted 25 March 2012 - 06:37 PM

THE BLOOD OF THE LAST LITTLE BOY

A poem by deepachelvan
Translated into English by Latha Ramakrishnan

In the eyes of those little boys that refuse to close
float scenes infinite of crimes.
In those mouths that remain open
trying to utter something till the very end
dying declarations, hidden, keep echoing.
Born in blood
and with the blood not getting dried up
all through their lives
but sticking and oozing all over the body-
with their limbs, torn to shreds by bullets and bombs,
falling apart
when the little boys of our land kept wandering
the ‘Ilaiyaangal’ relished their wounds,
having a real feast at their expense and
so made them cease to be.
When, in the full glare of everybody-
in the raging war against our Mother Land
when the children were sacrificed,
when they were weeping, looking at their mothers
the laps of those hapless mothers were
filled with blood.
From vaginas to babies -with everything smashed and torn
The root of our children’s soil was burnt.
The Weapons of War
went on a killing spree, inflicting wounds of the worst kind
and killing the children,
with a fine sense of Cruelty.
Plucking out the longing eyes and erasing their words-
the little boys were wiped out
without a trace.
when in the bitter war against little boys
they were wiped away, rooted out
the Eartyh turned deserted.
When the battalions that butcher the innocent children_
born as sons of the soil in the land being destroyed­­_
so systematically
sucking and relishing their blood,
made holes with the gun in the heart of
the last child of the land
and sucked his blood to their heart’s content
all the children had been felled.

http://www.globaltam...US/article.aspx

#5 குமாரசாமி

குமாரசாமி

  மப்புறுப்பினர்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 14,190 posts
 • Gender:Male
 • Location:கள்ளுக் கொட்டில்
 • Interests:கள்ளடித்தல்

Posted 25 March 2012 - 10:10 PM

எல்லாம் தலைவிதி.

#6 விஜயகுமார்

விஜயகுமார்

  புதிய உறுப்பினர்

 • கருத்துக்கள உறவுகள்
 • Pip
 • 83 posts
 • Gender:Male
 • Location:தமிழர்கள் உலகம்.
 • Interests:மென்மையான தமிழ் பாடல்கள் கேட்பது, கவிதை வரைவது ,மென்பொருட்கள் பற்றி புதிய தகவல்கள் பெறுவது

Posted 27 March 2012 - 11:21 AM

நன்றி!! தீபச்செல்வன் வரிகள் முகப்பு வலையில் படித்த கவிதை !!
என்றும்

ப. விஜயகுமார்

#7 மெசொபொத்தேமியா சுமேரியர்

மெசொபொத்தேமியா சுமேரியர்

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 4,343 posts
 • Gender:Female
 • Location:மெசொப்பொத்தேமியா
 • Interests:எதைச் சொல்லுறது

Posted 18 September 2012 - 08:02 AM

தீபச் செல்வனின் எழுத்து நடந்தவற்றை நேரில் பார்க்கும் உணர்வைத் தருகின்றன.

ஊரோடும் உறவோடும் உயிரிற்கு மேலான மண்வாசனையோடும் உறவாட

 

http://poongkaadu.blogspot.uk/

 யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]