Jump to content


Orumanam
Photo

தமிழ் கடை முதலாளிக்கும், அவரது மனைவிக்கும் 14 மாதங்கள் சிறைத் தண்டனை


 • Please log in to reply
7 replies to this topic

#1 குட்டி

குட்டி

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 4,460 posts
 • Gender:Male

Posted 21 March 2012 - 06:05 PM

தமிழ் கடை முதலாளி அல்பிரேட் ஜீவராஜா, அவரது மனைவி ஆன் ஜீவராஜாவுக்கும் தமது குற்றத்தை ஒப்புக் கொண்டதால் 14 மாதங்கள் சிறைத் தண்டனை Norwich Crown Court ல் வழங்கப்பட்டது.

இவர்களின் வாடிக்கையாளரான 73 வயதுடைய முதியவர் (Gwyn Badham-Davies) ஒருவர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் லாட்டரி ஐந்து இலக்கங்களுடன் £156 659 தொகையக்கு அதிஷ்டசாலியானார். அவர் அல்பிரேட் ஜீவராஜா என்பவரின் கடையில் தனது அதிஷ்டச் சீட்டுடன் சென்றுள்ளார். அங்கு கடைக்காரரின் மனைவியிடம் (ஆன் ஜீவராஜா) தனது சீட்டைக் கொடுத்துள்ளார். ஆனும் சீட்டை அந்த வயதான வாடிக்கையாளரிடம் இருந்து பெற்று, அவர் வெறும் £10 மட்டுமே வென்றதா
சொல்லி காசைக் கொடுத்து அனுப்பி வைத்து விட்டு அந்தத் தொகையை ( £156 659) தாம் பெற்றுக் கொள்ள முற்பட்டு இருக்கிறார்.

ஒரு வாரத்திற்குப் பிறகு, தாமே அந்தச் சீட்டை வாங்கியதாக £156 659 தொகைக்கு உரிமை கோரியுள்ளார்கள். அதில் எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டது. அந்த லாட்டரி சீட்டு எங்கே வாங்கியது என்று உரிமை கோரியவர்களால் திட்டவட்டமாகக் கூறமுடியாமல் போய்விட்டது. 14 மாதச் சிறைத்தண்டனை முடியும் வரை இவர்களின் 10 வயது மகளை அவர்களது உறவினர்கள் பராமரித்துக் கொள்ளுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. Gwyn Badham-Davies க்கு கிடைக்க வேண்டிய முழுத்தொகையும் அவருக்கே கொடுக்கப்பட்டுள்ளது.


மூலம்... http://www.dailymail...y-winnings.html

Edited by குட்டி, 21 March 2012 - 06:24 PM.

சொந்த வீடுன்னை வாவென்று அழைக்குதடா தமிழா

ninaivu-illam

#2 குண்டன்

குண்டன்

  உறுப்பினர்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPip
 • 383 posts
 • Gender:Male

Posted 21 March 2012 - 06:55 PM

£156 659 தொகையக்கு என்ன வான்கலாம் சார்?????? வீடு வான்க கானுமோ :unsure:
அப எனகும் இபிடிதான் நடன்ததோ????????
:( :( :(

#3 குட்டி

குட்டி

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 4,460 posts
 • Gender:Male

Posted 21 March 2012 - 07:46 PM

£156 659 தொகையக்கு என்ன வான்கலாம் சார்?????? வீடு வான்க கானுமோ :unsure:
அப எனகும் இபிடிதான் நடன்ததோ????????
:( :( :(


வீடு வாங்கலாமோ இல்லையோ... ஒரு நல்ல தமிழ் வாத்தியாரை வைத்து அழகான தமிழைத் தெளிவாக எழுதக் கற்றுக் கொள்ளலாம்... (சும்மா பகிடிக்குக் கோவிக்கக் கூடாது... :D)
சொந்த வீடுன்னை வாவென்று அழைக்குதடா தமிழா

#4 விசுகு

விசுகு

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 18,923 posts
 • Gender:Male
 • Location:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்?
 • Interests:எதுவானாலும் ஈழத்தை நோக்கியே...........

Posted 21 March 2012 - 07:50 PM

வீடு வாங்கலாமோ இல்லையோ... ஒரு நல்ல தமிழ் வாத்தியாரை வைத்து அழகான தமிழைத் தெளிவாக எழுதக் கற்றுக் கொள்ளலாம்... (சும்மா பகிடிக்குக் கோவிக்கக் கூடாது... :D)


நித்திரை கொள்பவரை எழுப்பமுடியும்
நித்திரைபோல் நடிப்பவரை....???? :lol: :icon_idea: :icon_idea: :icon_idea:

அறை வாங்கினேன்
மறு கன்னத்திலும்
ஏசுவே
இனி என்ன செய்ய???????
(காசி ஆனந்தன் நறுக்குகள்)

 

http://imageshack.us...es/593/rit.gif/


#5 தமிழ் சிறி

தமிழ் சிறி

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 25,846 posts
 • Gender:Male
 • Location:தூணிலும்,துரும்பிலும்.
 • Interests:இலையான் அடிப்பது.

Posted 21 March 2012 - 08:41 PM

ஒன்றரை லட்சம் பவுண்ஸ் பரிசு பெற்றவருக்கு, வெறும் பத்து பவுண்ஸ்சுடன், அல்வா கொடுக்க நினைத்திருக்கிறார்களே..... :o
நல்ல காலம், அந்த வயது போன தம்பதிகள் உசாராக இருந்ததால்.... குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க முடிந்தது.
இப்படிப் பட்டவர்களின் செய்கையால்.... தமிழ்க் கடைக்கே வெள்ளைக்காரன் வராமல் விடப் போகின்றான்.
Posted Imageதமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.

#6 தப்பிலி

தப்பிலி

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 4,336 posts
 • Gender:Male
 • Location:மோகம் கொண்டு மேகத்துக்குள்
 • Interests:புகைப்படம், விவசாயம், கனவு காணுதல்

Posted 21 March 2012 - 10:54 PM

ஒரு வயதான உழைப்பாளியை ஏமாற்றி உள்ளார்கள். கேவலமானவர்கள்.
இன்று தினசரியிலும் வந்தது. இவர்களின் சொத்துக்கள் பறிக்கப்பட்டுள்ளன.

#7 nedukkalapoovan

nedukkalapoovan

  நெடுக்ஸ்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 21,601 posts
 • Gender:Male
 • Location:எனக்கே தெரியாது எங்கே என்று.
 • Interests:nothing

Posted 22 March 2012 - 08:47 AM

எப்படியோ தமிழ் ஆக்கள் காசு பார்க்கிறதில கெட்டிக்காரர்கள். கள்ள மட்டை என்றால் என்ன.. சீட்டு என்றால் என்ன.. இப்படி களவெடுக்கிறது என்றால் என்ன.. உதுகளால இப்ப போற இடமெல்லாம்.. சட்டதிட்டங்களும் கடுமையாகிட்டு வருகுது.

முந்தி எல்லாம் வங்கிக் கணக்குத் திறக்க.. சும்மா ஒரு ஆள் அடையாளம் இருந்தா போதும். இப்ப அதைக் கொண்டுவா.. இதைக் கொண்டுவா.. இரண்டு கிழமை பொறு.. கடவுளே. நம்ம சனத்தில சிலதுகள் செய்யுற கூத்தால எல்லோருக்கும் பாதிப்பு..!

இதுகள் திருந்துங்கள்..என்று நினைக்கிறீங்க...???! :) :(
Posted Image உங்கள் ஒரு ரூபாயில் ஒரு துளி இரத்தத்தை உங்கள் உறவுகள் உயிர் வாழ வழங்குங்கள். தாயக உறவுகளுக்கு உதவி நில்லுங்கள்.

எம்மீது சேறடிக்க விரும்புறவங்க தொடர்பு கொள்ள வேண்டிய இணைய முகவரி: http://kundumani.blogspot.com/

#8 Eas

Eas

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 1,578 posts
 • Gender:Male
 • Location:யாதும் ஊரே
 • Interests:கருப்பு-வெள்ளை படங்கள். MSV , இளையராஜா பாடல்கள். புத்தகங்கள்.

Posted 22 March 2012 - 10:08 AM

14 மாதத் தண்டனை போதாது. இவர்களின் பிள்ளை பாவம்.


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]