.
அரசியல், பொருளாதாரம் போன்ற துறைகளில் பயன்படுத்தப்படும் ஒரு "முக்கியமான" கொள்கை இந்த "கேம் தியரி" ( Game Theory ).
இதன் படி இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்டவர்கள் விளையாடும் ஒரு விளையாட்டில் ஒருவர், விளையாட்டில் பங்கு பற்றும் ஏனையோரது நலன்கள்/தீர்மானங்கள் என்பவற்றைக் கருத்தில் எடுக்காது, தான் தனியே, தன்னிச்சையாக தனது நலன்களை மட்டும் கருத்தில் எடுத்து தீர்மானங்களை எடுப்பாராயின் அத்தீர்மானங்களால் அவருக்கு நன்மை விளையப் போவதில்லை என்பதே மையக்கருத்தாகும்.
விளையாட்டில் உச்ச பலனைப் பெற பங்கு பற்றும் ஒவ்வொருவரும் மற்றவர்களின் தீர்மானங்களைக் கருத்தில் எடுத்தே தமது தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்று சொல்கிறது. இது விளையாட்டில் பங்கு பற்றுவோரிடையே ஓரளவிற்கு குறைந்த பட்ச ஒத்துழைப்பையாவது கோரிநிற்கிறது.
இங்கே விளையாட்டில் "சமநிலை" ( Equilibrium ) எனப்படும் நிலையாவது, பங்கு பற்றுவோர் தீர்மானங்கள் பங்கு பற்றுவோரிடையே ஏற்படும் பரஸ்பர புரிந்துணர்வு நிலையில் ஏற்படுகின்றது. எப்போது ஒருவர் தன்னிச்சையான தீர்மானங்களை எடுக்க ஆரம்பிக்கின்றாரோ அப்போது இந்தச் சமநிலை குழம்பி விளையாட்டு ஒரு திசையில் நகர ஆரம்பிக்கின்றது.
உலகத்தின் பல அரசியல் சிக்கல்கள் இந்த "கேம் தியரி" யை நிரூபித்துள்ளன. ஈழப்பிரச்சனையும் இந்த கேம் தியரியின் படியே நகர்ந்தது, நகருகின்றது.
இந்த கேம் தியரியை கண்டுபிடித்த ஜோன் நாஷ் என்பவர் நொபேல் ஞாபகார்த்த பரிசை வென்றார்.
http://en.wikipedia....ash_equilibrium
1 reply to this topic
#1
Posted 19 March 2012 - 02:04 PM
- Justin, இணையவன் and நிழலி like this

#2
Posted 19 March 2012 - 02:11 PM
இது தொடர்பாக quality management வகுப்பில் செய்முறை விளையாட்டுக்களோடு படிச்ச ஞாபகம். பகிர்விற்கு நன்றி ஈசன்.

http://www.mazeworks.com/hex7/
இதில் ஒரு விளையாட்டு இருக்கு விளையாடிப் பாருங்க..!
விதிமுறை: The players take turns placing their pieces on any unoccupied hex. The object of the game is for each player to connect their sides of the board with an unbroken chain of their own pieces. For White, the chain of white pieces would run from the lower left to upper right edge. For Black, from the lower right to upper left. The chain may twist and turn freely on its way from one edge to the other.
விளையாட்டின் இலக்கு.. மேற்படி இணைப்பில் தோன்றும் கட்டங்களில் வெள்ளை, கறுப்பு புள்ளிகளை இட்டு பெரிய உருவத்தின் வெள்ளை விளிம்புகளுக்கிடையே வெள்ளை முறிவுறாத சங்கலியையும்.. கறுப்பு விளிம்புகளுக்கிடையே கறுப்பு முறிவுறாத சங்கிலியையும் உருவாக்க வேண்டும். இரு போட்டியாளர்கள் மாறி மாறி புள்ளிகளை இட்டு விளையாடும் இந்த விளையாட்டில் யார் முதலில் இலக்கை முறிவுறாத சங்கிலி முலம் எட்டுகிறாரோ அவர் வெற்றி பெற்றவராவார். இன்றைய எமது அரசியல் காய் நகர்த்தலும் இதே நிலையில் தான் உள்ளது. நாம் நேர் கோட்டில் சங்கிலி அமைக்க நினைத்தால் எதிரி இன்னொரு வழியில் தன் இலக்கை அடைய அது வழிவிடும். நாம் குறுக்கும் நெடுக்கும் போட்டால் கூட எதிரிக்கு அங்கும் வாய்ப்பிருக்கும். எனவே எல்லா வகையில் ஒவ்வொரு நகர்வையும் நிதானித்து செய்யுன் இலக்கை நாம் அடைவது கடினம் அல்ல..!
மேலும் சில விளையாட்டுக்கள்..
http://www.gametheor...mes/online.html

Edited by nedukkalapoovan, 19 March 2012 - 04:06 PM.
உங்கள் ஒரு ரூபாயில் ஒரு துளி இரத்தத்தை உங்கள் உறவுகள் உயிர் வாழ வழங்குங்கள். தாயக உறவுகளுக்கு உதவி நில்லுங்கள்.எம்மீது சேறடிக்க விரும்புறவங்க தொடர்பு கொள்ள வேண்டிய இணைய முகவரி: http://kundumani.blogspot.com/
யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]