அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர்களை ஜெனீவாவுக்கு அனுப்புகிறது அரசு
#1
Posted 16 March 2012 - 11:50 PM
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்டுள்ள இலங்கை தொடர்பான பிரேரணையில் இலங்கைக்கு சார்பாக முஸ்லிம் நாடுகளின் ஆதரவினை திரட்டுவதற்காக பிரபல்யம் வாய்ந்த இரண்டு முஸ்லிம் உலமாக்களை அரசாங்கம் ஜெனீவா அனுப்பவுள்ளது என அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார்.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய் றிஸ்வி முப்தி மற்றும் பிரதி தலைவர் அஷ்ஷெய் ஏ.சீ.அகார் முஹம்மத் ஆகியோரே ஜெனீவா செல்லவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இவர்கள் இருவரும் தன்னுடன் ஜெனீவா பயணமாக உள்ளதாக அமைச்சர் றிசாட் தெரிவித்தார்.
இந்த உலமாக்கள் இருவருடனும் இணைந்து முஸ்லிம் நாடுகளின் பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
விடுதலைப் புலிகளினால் முஸ்லிம்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகள் தொடர்பிலும் தற்போது, ஏனைய இனங்களுடன் ஒற்றுமையாக வாழ்வது குறித்தும் நாடுகளுக்கு விளக்கவுள்ளதாக அவர் கூறினார்.
குறித்த பிரேரணையை தோற்கடிப்பதற்கு ஆதரவு வழங்குமாறு இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அமைச்சர் றிசாட் பதியுதீனுடன் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் ஜெனீவா செல்லவுள்ளனர்.
இதேவேளை, அமைச்சர் ஹக்கீம் ஏற்கனவே ஜெனீவாவில் தங்கியுள்ள நிலையில் இலங்கை தூதுக்குழுவினருக்கு அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தலைமை தாங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
http://tamilmirror.lk/2010-07-14-09-13-23/37744-2012-03-16-12-12-14.html
Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.

#2
Posted 17 March 2012 - 12:37 AM
அமைச்சர் றிசாட் பதியுதீனுடன் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் ஜெனீவா செல்லவுள்ளனர்.
சர்வதேச அறிக்கைகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இந்த கடத்தல், கொள்ளை என்பனவற்றில் ஈடுபடும் குறுநில மன்னன் மீது வழக்கு போடா முடியாதா??
Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.
#3
Posted 17 March 2012 - 12:38 AM
இதேவேளை, அமைச்சர் ஹக்கீம் ஏற்கனவே ஜெனீவாவில் தங்கியுள்ள நிலையில் இலங்கை தூதுக்குழுவினருக்கு அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தலைமை தாங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
அப்ப தமராவுக்கு என்ன நடந்தது.??? சிலமனைகாணவில்லை .....................
மாறும் என்ற சொல்லைத்தவிர உலகில் எல்லாம் மாறும்.
/imagesCAK3MKZ8.jpg
#4
Posted 17 March 2012 - 12:44 AM
அப்ப தமராவுக்கு என்ன நடந்தது.??? சிலமனைகாணவில்லை .....................
தமரா சிங்களத்தின் ஜெனீவாவுக்கான நிரந்தர பிரதிநிதி.
Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.
#5
Posted 17 March 2012 - 01:20 AM
இந்த ஈனப்பிறவிகளின் அறிக்கைகளை, செவ்விகளை கூட்டமைப்பினரும் சேகரித்து வைத்து உரிய நேரத்தில் பயன்படுத்த வேண்டும்.
சுமார் 1000+ ஆண்டுகளின் முன்னர் வந்தேறு குடிகளான சிங்கள பௌத்தக் காடையர் கும்பல் வகை தொகையின்றி பிள்ளைகளைப் பெற்று, இன்று பெரும்பான்மையாகி நடாத்தும் பயங்கரவாதம் முற்றாக அழிக்கப்பட்டு, இலங்கை முழுவதும் மண்ணின் பூர்வீக குடிகளான தமிழ் மக்களின் கட்டுப்பாட்டில் வரும் காலத்துக்கான அனைத்து வழியிலான செயற்பாடுகளையும் முன்னெடுக்க திடசங்கற்பம் பூணுவோம்! இலக்கை அடையும் வரை தொடர்ந்து அயராது உழைப்போம்!!!