Jump to content

இலங்கைக்கு ஆதரவான பிரேரணையொன்றை சீனா முன் வைக்கவுள்ளது:அமெரிக்க - சின ஆடுகளமாக மாறுகிறதா ஜெனீவா!


Recommended Posts

ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணையை நிறைவேற்றிக் கொள்வதற்கு அமெரிக்கா தீவிரமாக செயற்பட்டுள்ள தற்போதைய சூழ்நிலையில், இலங்கைக்கு ஆதரவான பிரேரணையொன்றை சீனா முன் வைத்து அதை நிறைவேற்றுவதற்காக அவசர மந்திராலோசனைகளை நடத்திவருகிறது என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜெனிவாவில் தமக்கு இக்கட்டானதொரு நிலைமை வரப்போகின்றது என்பதை உள்ளூர அறிந்து வைத்துள்ள இலங்கை அரசு, சீனாவிடம் மண்டியிட்டு விடுத்த அவசர வேண்டு கோளையடுத்தே இவ்வாறு இலங்கைக்கு ஆதரவான பிரேரணை ஒன்றை சீனா தாக்கல் செய்வதற்கு ஆலோசித்து வருகின்றது எனவும் அந்த வட்டாரங்களிலிருந்து தெரிய வருகின்றது.

இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அமெரிக்கா தாக்கல் செய்துள்ள பிரேரணை எதிர்வரும் 22 ஆம் அல்லது 23 ஆம் திகதிகளில் வாக்கெடுப்புக்கு விடப்படலாம் என்பதால் அதற்கு முன்னர் இந்தப் பிரேரணையைக் கொண்டுவந்து இலங்கைக்கு ஆதரவைத் தேடிக்கொடுக்கும் முயற்சியிலேயே சீனா இறங்கும் எனக் கூறப்படுகின்றது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடொன்று சபை அமர்வில் பிரேரணை ஒன்றைத் தாக்கல் செய்ய வேண்டுமாயின் மாநாடு நிறைவடைவதற்கு 72 மணித்தியாலங்களுக்கு முன்னரே அறிவிக்க வேண்டும். அந்த அடிப்படையில் எதிர்வரும் 19 ஆம் திகதிக்கு முன்னரே இலங்கைக்குச் சார்பான பிரேரணையை சபையில் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

உள்நாட்டு போரின் பின்னர் இலங்கை அரசு முன்னெடுத்துவரும் நல்லிணக்க செயற்பாடுகள், மனித உரிமைகள் மேம்பாட்டுத்திட்டம் உள்ளிட்ட கொழும்பு அரசுக்குச் சார்பான பல விடயங்களை பீஜிங் அந்தப் பிரேரணையில் முன்வைப்பதற்கு ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது. அதேவேளை, ஐ.நா.மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிரான பிரேரணையைக் கடந்த புதன்கிழமை அமெரிக்கா சமர்ப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.seithy.com/breifNews.php?newsID=57090&category=TamilNews&language=tamil#.T12jf3BYly0.facebook

Link to comment
Share on other sites

சீனாவின் பிரேரணை வெற்றி பெறவேண்டும்.

Link to comment
Share on other sites

கிந்தியாவை செய்ய வைக்கலாம். கீழாலே கொஞ்ச காசு விசுக்க சரி.

இவர்களால் சீனாவை இலகுவில் உசுப்ப முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீனா பிரேரணை வைக்கும் போது இந்தியா அப்பிரேரணையை ஆதரிக்கப் போகிறதா அல்லது எதிர்க்கப்போகிறதா அல்லது மெளனமாக இருக்கப்போகிறதா?

Link to comment
Share on other sites

சீனாவுக்கு நண்பர்கள் குறைவு, உள்ளவர்களையும் அமெரிக்கா பறித்து வருகின்றது.

சீனாவை பொறுத்தவரையில் அது இன்றுவரைக்கும் மேற்குலகுடன் எந்த விதத்திலும் மோத தயாரில்லை. சிலவேளை அதற்கான காலம் கனிந்துவரும்வரை பொறுத்து இருக்கலாம். இலிபியாவில் தொடங்கி இன்று சிரியா வரை அது விட்டுக்கொடுத்தே வந்துள்ளது.

அமெரிக்காவை பொறுத்தவரையில் அது உருசியாவையும் இந்தியாவையும் கூட சீனாவுக்கு எதிராக நகர்த்திவருகின்றது. அத்துடன் பரம எதிரிகளை, ஜப்பான் / தாய்வான் ஆகியவனவற்றையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

Link to comment
Share on other sites

இது நடந்தால் ஓர் இனப்படுகொலையை சீனா ஆதரிக்கும் முதல் சந்தர்ப்பம் இதுவென நினைக்கிறேன்?

இதன் மூலம் தாமும் இந்தியக் காட்டுமிராண்டிகளுக்கு சளைக்காத காட்டுமிராண்டிகள் என்பதை வரலாற்றில் பதிவு செய்வர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Somesone sent this via email, I attach here for your action:

------------------------------------------------------

செய்திகளின் படி பத்தொன்பது நாடுகள் மட்டமே கடந்த வார இறுதிவரை ஆதரவு தருவதா தெரிகிறது. பங்களாதேஷ் பிலிப்பைன்ஸ் இந்த இரண்டு நாடுகளின் ஆதரவு மிக முக்கியம். முடித்தால் கடிதம் எழுதுங்கள்.

They say about 22 countries favouring the resolution. The rest 25 is more chance of voting against it.

Openly 10 countries said they are not supporting to US resolution.

Out of the ten Philippines and Bangaladesh is including. It is expected the voting may be on March 17 th.

There is a fair chance of turning these two countries to our support.

Philippines:-

Is generally a pro American Country. Due to Srilanka's high level of lobbying(full of lies) they are convinced and like to support them.

The present President is former President Madam Cory Aquino's son. She was the lady who ousted President Marcos in an Army Rebellion in 1980s.

Details given below:-

His Excellency Benigno S. Aquino lll,

President of the Republic of Philippines.

His Excellency Albert F. Del Rosario

Minister of Foreign Affairs.

Philippines Ambassador to Canada's e-mail address, and you may forward it through him.

Philippines Ambassador:-

His Excellency Leslie Gatan

E-Mail address:- embassyofphilippines@rogers.com

Bangaladesh:-

Her Excellency Sheikh Hasina,

Prime Minister of Bangaladesh.

E-Mail Address:- info@pmo.gov.bd

Her Excellency Dr. Dipu Moni,

Minister of Foreign Affairs.

Her separate e-mail address is unable to get it, but we can send this letter through the PM's e-mail or Cabinet Secretary's e-mail.

His Excellency Captain(rtd) AB Tajul Islam

Minister of Liberation War Affairs.

For him also we have to send through the e-mails of either PM or Cabinet Secretary. He may know well about the Srilanka's complicity with Pakistan during the 1971 war with Bangagladesh.

Cabinet Secretary:-

Honourable Mr. Musharraf Hossain Bhuiyan,

E-Mail :- cab_secy@cabinet.gov.bd

To be noted:-

I have attached the Bio- data of the Madam foreign minister. She is a women rights activist and a very qualified doctor of medicine and a lawyer. I think if we write a very toching letter to our plight of the war affected women, 89,000 war widows, rapes and totured to death of the women after rape, with attached photos and channel 4 vedio clippings, still continuing the sexual violence to our women, can change both of these ladies and their countries support.

Also we have to say during the Pakistan - Bangaladesh Civil war in 1971; Srilanka was allowing the Pakistan war planes and Army planes to land for re-fuelling in Colombo Air port, and return to do bombing missions again and again on the people of Bangaladesh. If not for Srilanka's landing facilities, Pakistan has no friendly countries in that region to do this bombing mission. Air support for Pakistan was crucial to their war with Bangaladesh during that time. This support was provided to them, only by Srilanka by that time. So, Srilanka was complicit in killing several thousand Bangaladesh civilians and freedom fighters. If Srilanka refuses the re-fuelling; the Pakistan would not have operated their planes. The victory to Bangaladesh people would have achieved with less loss of live.

A very touching letter to both of these ladies, reminding how the Srilanka govt. behaved during the Pakistan - Bangaladesh war in 1971 will help a lot, in changing their mind.

I know your pens are very strong. It will change their minds in favour of us.

We have no government to send representatives on tax-payers money, to meet them personally.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • டிசம்பர் 2014 இல், ஓக்லாண்ட் இன்ஸ்டிடியூட் [Oakland Institute] ஒரு கள ஆய்வு இலங்கையின் வடக்கு கிழக்கில் நடத்தியது. போரின் பின் அதன் நிழலும், போருக்குப் பிந்தைய இலங்கையில் நீதிக்கான போராட்டம் பற்றியது அது [The Long Shadow of War: the Struggle for Justice in Postwar Sri Lanka,] பருந்து போல நிறைந்த இராணுவ சூழலில் மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் மற்றும் துயரங்கள் பற்றியது அது. அத்துடன் பல வழிகளில்  அரசாங்க நிறுவனங்கள், அரசின் ஆசீர்வாதத்துடனும் பாதுகாப்புடனும்  செயல்படுத்தப்பட்ட தீவிரமான நில அபகரிப்பு மீது முக்கிய கவனம் செலுத்தியது.  வடக்கு மற்றும் கிழக்கில் பல்வேறு உத்திகள் மூலம் அரசாங்கம் கையாளும் தந்திரங்களையும் அடக்குமுறைகளையும்  2015 ஆண்டு தங்கள் அறிக்கை மூலம் அம்பலப்படுத்தியது அதில் நில அபகரிப்பு மற்றும் இராணுவமயமாக்கல் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு மற்றும் அதன் தொடர்ச்சியான பயன்பாட்டை வெளிப்படுத்தியது.  நீர்ப்பாசனத் திட்டங்கள் மற்றும் வன்முறை போன்ற நில அபகரிப்புக்கான பழைய உத்திகளுடன் புதிதாக  புத்த கோவில்கள் அமைத்தல், தொல்பொருள் உருவாக்கம் உள்ளிட்ட புதிய முறைகள், பாதுகாப்புகள், உயர் பாதுகாப்பு வலயங்கள் மற்றும் சிங்களமயமாக்க சிறப்பு பொருளாதார வலயங்கள் என பல வழிகளில்  வடக்கு மற்றும் கிழக்கு - தமிழர்களின் பாரம்பரிய தாயகம் - கட்டாயத்தால் பறிப்பட்டுக்கொண்டு இருப்பதை எடுத்துக்காட்டியது. கொழும்பில் எந்த தமிழரும் நிலத்தை அபகரித்து குடியேறவில்லை. அது சிங்களவரின் பாரம்பரிய நிலமும் அல்ல. இலங்கையின் மன்னர் ஆட்சியை எடுத்துக்கொண்டால்,       Anuradhapura period (377 BCE–1017) Polonnaruwa period (1056–1232) Transitional period (1232–1505) இங்கு Jaffna Kingdom , Kingdom of Gampola , Kingdom of Kotte , Kingdom of Sitawaka , & Vanni Nadu என் நாம் அறிகிறோம்  The Kingdom of Kandy was a monarchy on the island of Sri Lanka, located in the central and eastern portion of the island. It was founded in the late 15th century and endured until the early 19th century. Initially a client kingdom of the Kingdom of Kotte, Kandy gradually established itself as an independent force during the tumultuous 16th and 17th centuries, allying at various times with the Jaffna Kingdom, the Madurai Nayak dynasty of South India, Sitawaka Kingdom, and the Dutch colonizers to ensure its survival. / கண்டி இராச்சியம் சேனாசம்பந்தவிக்கிரமபாகு என்பவனால் உருவாக்கப்பட்டது (1467- 1815)  கொழும்பு வை எடுத்துக்கொண்டால்  பதினாறாம் நூற்றாண்டுக்கு முந்திய காலப்பகுதியில் கோட்டை அரசின் ஒரு பகுதியாகவும், இந்தியத் தமிழர் மற்றும் இசுலாமிய வர்த்தகர்களின் ஒரு தளமாகவும் விளங்கிய இவ்விடம், பொ.ஊ. பதினாறாம் நூற்றாண்டுக்குப் பின்னர், போர்த்துக்கேயரின் வரவுக்குப் பின்னரே முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. அதாவது இங்கு சிங்களவர் பெரிதாக இருக்கவில்லை . இது உங்களுக்கு ஆச்சரியமாகக் கூட இருக்கலாம் , ஆனால் அதுவே உண்மை . இந்தியத் தமிழர் மற்றும் இசுலாமிய வர்த்தகர்களின் பேச்சு மொழி அதிகமாக தமிழே! 2001 சனத்தொகை கணக்கெடுப்பின்படி கொழும்பு நகர மக்கள் தொகையியல் இன அடிப்படையில் பின்வருமாறு காணப்படுகிறது. இல    இனம்    சனத்தொகை    மொத்த % 1    சிங்களவர்    265,657    41.36 2    இலங்கைத் தமிழர்    185,672    28.91 3    இலங்கைச் சோனகர்    153,299    23.87 4    இலங்கையின் இந்தியத் தமிழர்    13,968    2.17 5    இலங்கை மலேயர்    11,149    1.73 6    பறங்கியர்    5,273    0.82 7    கொழும்புச் செட்டி    740    0.11 8    பரதர்    471    0.07 9    மற்றவர்கள்    5,934    0.96 10    மொத்தம்    642,163    100 இதில் நீங்கள் கவனிக்க வேண்டியது 2001 இல் கூட சிங்களவரை விட [41.36] மற்றவர்களின் கூட்டுத்தொகையே கூட! Traveller Ibn Battuta who visited the island in the 14th century, referred to it as Kalanpu. Arabs, whose prime interests were trade, began to settle in Colombo around the eighth century AD mostly because the port helped their business by the way of controlling much of the trade between the Sinhalese kingdoms and the outside world. It was popularly believed that their descendants comprised the local Sri Lankan Moor community, but their genetics are predominantly South Indian [தென் இந்தியர் - ஆகவே தமிழே அங்கு கூடுதலாக பேசப்பட்டுள்ளது]  இதை ஒருக்கா முழுமையாக பாருங்கள். அதைத்தான், இலங்கை அரசு இன்று பின்பற்றுகிறது போல புரிகிறது. Israel’s Occupation: 50 Years of Dispossession  [amnesty international அறிக்கை]   Since the occupation first began in June 1967, Israel’s ruthless policies of land confiscation, illegal settlement and dispossession, coupled with rampant discrimination, have inflicted immense suffering on Palestinians, depriving them of their basic rights.    THE WORST THING IS THE SENSE OF BEING A STRANGER IN YOUR OWN LAND AND FEELING THAT NOT A SINGLE PART OF IT IS YOURS. Raja Shehadeh, Palestinian lawyer and writer     நன்றி 
    • துணிவான தமிழ் அரசியல்வாதிகளான கருணா, பிள்ளையான், டக்கிளஸ், வியாழேந்திரன் போன்று இனிவரும் இளைய தலைமுறையைச் சேர்ந்த துணிவான இளைஞர்கள் பின்வருவனவற்றை செய்வதன் மூலம் அரசுடன் இணைந்துகொள்ளலாம், 1. உரிமை பற்றிப் பேசுவதை முற்றாக நிறுத்துதல். 2. தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்கள் குறித்தோ, மேய்ச்சல் நில அபகரிப்புக் குறித்தோ பேசுவதை நிறுத்துதல். 3. தமிழர் தாயகத்தில் நடைபெற்றுவரும் பெளத்த மயமாக்கல் குறித்த எதிருப்புப் போராட்டங்களை நிறுத்துதல். 4. தமிழர் தாயகத்தின் இருப்புக் குறித்துப் பேசுவதை நிறுத்துதல். 5. போர்க்குற்ற விசாரணை, அரசியல்த் தீர்வு குறித்துப் பேசுவதை நிறுத்துதல். ஆகிய விடயங்களைச் செய்துவிட்டு அரசுடன் இணைந்தால், யாழ்ப்பாணத்தைக் காத்தான்குடியாக மாற்றலாம், மட்டக்களப்பில் ஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு நிகரான பல்கலைக்கழகம் ஒன்றைக் கட்டலாம். தமது தம்பி, அண்ணா, சகோதரிகளுக்கு பணம் பார்க்கும் வியாபாரங்களை எடுத்துக் கொடுக்கலாம். லாண்ட்ரோவரோ அல்லது லாண்ட்குறூசரோ எடுத்து ஓடலாம். இப்படிப் பல விடயங்களைச் செய்யலாம். 
    • வாலிபத்தில் தவற விட்டவைகளை எண்ணி வயோதிபத்தில் அசை போடுகிறீர்கள் போல. எழுதம் கதை கவிதை எல்லாமே காதல் மயமாகவே உள்ளதே?
    • பொன்னுஞ்சல் ஆடுகிறான் ஐயப்பன் பொன்னுஞ்சல் ஆடுகிறான் ஐயப்பன்    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.