Jump to content

Photo

இனியாவின் தவிப்பு ...... (பாகம் 12 இருந்து 14 வரை)

தொடர் கதை

 • Please log in to reply
40 replies to this topic

#21 கல்கி

கல்கி

  உறுப்பினர்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPip
 • 318 posts
 • Gender:Female
 • Location:Nature
 • Interests:to make good friendship, reading books and writing poems

Posted 25 March 2012 - 08:51 AM

இனியாவின் தவிப்பு இரட்டிப்பாகிறது. ஆனாலும் சுபமாக முடியும் என நினைக்கிறேன். பாடல் வரிகள் அருமையாக உள்ளன... பாராட்டுக்கள்...
கல்கி Posted Image

#22 ilankathir

ilankathir

  உறுப்பினர்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPip
 • 179 posts
 • Gender:Male
 • Location:அவுஸ்ரேலியா
 • Interests:web site design and reading books

Posted 25 March 2012 - 03:11 PM

இந்த கதை இழுபடுறதே “........தவிப்பு” ஆலை தான். தவிப்பை விட்டால் எல்லாம் அடங்கிவிடும்.

#23 தமிழரசு

தமிழரசு

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 22,010 posts
 • Gender:Male
 • Location:பிரித்தானியா GB
 • Interests:தமிழ்மக்களுக்காக ஒரு நாடு ஒன்றை உருவாக்க உறவுகளுடன் இணைத்து செயல்படுவது

Posted 25 March 2012 - 04:02 PM

இனியாவின் தவிப்பு ...... (பாகம் 14)

Posted Image

அதிகாலை வேளையில் வானத்தில் கதிரவன் மங்களகரமான உடையணிந்து புலருகின்றான்,
கடல் நதிகளோ தூக்கத்தைவிட்டு தன் இறகுகளான அலைகளோடு நீந்துவதற்கு எழுகின்றது ........ கோழிகள் கதிரவனைப்பார்த்து பாடல் வரிகளை சொல்லி வரவேற்கின்றன ........
பறவைகளோ தமக்கு இரை தேட தம்மினத்தை இனிமையான ...... மொழிகளில் அழைக்கின்றன ........ மிருகங்களோ ஒன்றுகூட்டி ஒன்றுக்கொன்று கதை சொல்லி ஓடி, .... மகிந்து, விளையாடுகின்றன ....... தெய்வீக திருப்பணி செய்ய அழைகின்றதோ ! கோவிலின் மணி ஓசை ....... !!!!
நம் இனமோ வாழ்வின் விடியல்தேடி ........!வாசலைப்பெருக்கி தண்ணீர் தெளித்து அவர்கள் விரும்பும் சுகந்தத்தை வரவேற்க காத்து இருக்கின்றனர்,
பூக்களின் வாசனையோ வண்ண வண்டுகளை அழைத்து முத்தமிட்டு கதை பேசி மகிழ்கின்றன .......
இந்த இனிமையான காலை வேளையில் பேரூந்து பருத்தித்துறை வந்தடைந்தது, அந்தவேளையில்

என்ன தினா கனவோ ...... ? நான் ஒரு கணம் பயந்தே போய்விட்டேன்,

தம்பியவை என்ன ..... கனவோ !
கனவில் வாய்விட்டு சத்தமிட்டு எங்களை பயம் உறுத்திவிட்டீர்கள்,

அது அண்ணா ....... உங்களுக்கு எங்களின் நிலை தெரியாது !

இல்லை .... தம்பி எங்களுக்கும் எல்லாம் தெரியும், எங்களின் சூழ்நிலை என்ன நடந்தாலும் தெரியாததுபோல் வாழ்வதுதான் இன்றைய காலகட்டத்தின் கட்டாயம் !

அண்ணா எங்களை தப்பாக நினைக்கவேண்டாம்

அதெல்லாம் ஒன்றும்மில்லை ........
இடம் வந்துவிட்டது இறங்குங்கோ ......

மச்சான் ஒரு கார் பிடிப்போம் வீட்டுக்கு போவதற்கு

(இருவரும் காரில் எரிச்செல்கின்றனர் )

சரி புகழ், என்னை எனது வீட்டில் இறக்கிவிட்டு
நீங்கள் போங்கோ
என்வீடுதாண்டித்தானே உங்கள் வீடு மதியம் எல்லோரும் ஒன்றாக வீட்டில் சந்திப்போம்.

சரி மச்சான் சந்திப்போம் வாறன்.

அஹ ..... அப்பா கார் சத்தம் கேட்கிறது ஒருவேளை அண்ணாவாக இருக்குமோ !

எங்க ...... பிள்ள ஒருக்கா பார்ப்போம்

இன்செரிங்கோ ..... இன்சபாருங்கோ,
பிள்ள தினா வந்திட்டான், அஹ வாப்பு .....

தினா, ..... என்ர அய்யா வந்துவிட்டியோ! வா ...... வாப்பு (என்றவாறே கட்டிதளுவினார்கள் இருவரும்)

வாங்கோ அண்ணா ..... வாங்கோ (என்றவாறே அண்ணாவை அனைத்து கன்னத்தில் முத்தமிட்டாள்)

அம்மா ... புகழும் அவர்களின் அம்மா அப்பாவும் மதியம் வீட்டுக்கு வருவதாக இருக்கின்றார்கள், அவர்களுக்கு சாப்பாட்டு ஒழுங்கு செய்யவேணும் .....

சரி ..... இந்த காப்பியை குடித்துவிட்டு குளித்துவிட்டு வா ராசா, எங்க, ஏதாவது உடம்பில காயம் இருக்கோ ஒருக்கா பார்ப்போம்,

அப்படி ஒன்றும் இல்லை அம்மா நிறைய அழுக்காக இருக்கு, குளித்துவிட்டு வாறன் தொடாதீர்கள் அம்மா,

நீங்கள் போய் ஒரு இடத்தில் இருங்கோ .......

சரி .... அப்பு கெதியில வாங்கோ தங்கச்சி உங்களுக்கு விருப்பமான கருவாட்டு பொரியலும் அரிசிமா புட்டும் செய்து வைத்திருக்கின்றார்,
Posted ImagePosted Image
கருவாட்டு பொரியலோ ......? ம் ...... யம்மா ஒரு பிடிக்கலாம்.

இனியா வீட்டு வேலை எல்லாவற்றை செய்து முடித்தபின்பு வீட்டு வாசலை வழிமேல் விழிவைத்து புகழின் வருகைக்காக மலர்ந்த செந்தாமரைபோல் காத்துகொண்டு இருக்கின்றாள்

(ரேடியோவில்) ........

அறிவுப்பாளர் ........

கல்லாய் இருந்தேன்; சிலையாய் ஏன் வடித்தாய். சிலையாய் வடித்தது மட்டுமல்லாமல் சிலையுருக்கொண்ட என்னைக் காதல் உயிர்தந்து வளர்த்தாய். தேன் எனினும் இன்பச் சுவையை உணர்வில் தினம் தினம் உண்டு திளைக்கும்போதில் நீ தீண்டுவாய் எனத்தினம் தினம் துடிக்கின்றேன்.

இதோ .... பாடலை கேட்டுப்பாருங்கள் ..........

கல்லாய் இருந்தேன்
சிலையாய் ஏன் வடித்தாய்
சிலையாய் வளர்ந்தேன்
உயிரை ஏன் கொடுத்தாய் ......

உன் நெஞ்சின் உணர்வுகள்

இங்கு என்னுள்ளில் புகுந்ததே

சொல்லி வருமோ வருமோ

சொல்லை எடுத்துத் தருவாய்

கல்லாய் இருந்தேன்

சிலையாய் ஏன் வடித்தாய் .....

உன்னைப் பார்த்த கண்கள்

விலகாது என்றும்

உன்னிலே பதியும் .....

யார் யார்க்கு மண்ணில்

நிலைக்காத அழகு

காலத்தின் ஒழுங்கு

இனியா ..... இனியாக்குட்டி,

ஓம் ...... இதோ ...... வருகிறேன்.

என்ன எல்லாம் அசத்தலாக இருக்கு,

அண்ணா ..... உங்களுக்கு எப்போதும் கிண்டல்தான்,

இனியா .... இன்னொரு விஷயம்,

என்ன ... அண்ணா .....

ஒன்றுமில்லை ....... என்ன, எல்லாம் புகழைப்பற்ரியதுதான் ...... அழகுக்கும் ஆளுக்கும் சம்மந்தமில்லை ...... அதில இருக்கும் மன்குண்டான் மாதிரி (என்று கிண்டலாக சொன்னார்)

அது ...... பரவாயில்லை, அவர் மனசு எனக்கு பிடிச்சிருக்கு (கிண்டலாக சிரித்தாள் )

நான் சும்மாதான் சொன்னேன் தங்கச்சி, புகழ் பார்க்க அழகான தோற்றம் நல்ல அறிவு நல்ல பழக்கவழக்கம் உங்களின் குணத்திற்கு ஏற்றவர்.

அண்ணா உங்களுக்கு பிடித்தமாதிரி மீன் வகையில் அசத்தி விடுகிறேன்.
Posted Image
இனியா ..... அண்ணாவுக்கு உங்கள் சமையல் எல்லாம் பிடிக்கும் ஆனால் வரப்போகும் மாமா மாமிக்கு பிடிக்கவேணுமே !

அண்ணா யோசிக்காதேங்கோ மனசு ஒத்து போனால் உணவும் ஒத்து போகும் கொஞ்சம் பொறுத்துதான் பாருங்கோவேன்.

அதுசரி ......
எங்கே அம்மா அப்பா ?

அம்மாவும், அப்பாவும் அன்றில் பறவைபோல் இணைபிரியாமல் எங்காவது இருப்பினம் வாங்கோ பார்ப்போம்

அண்ணா இங்கே பாருங்கோ என்ன ....... பாட்டு பார்க்கினம் என்று ......... நான் சொன்னது சரிதானே ?

தொலைக்காட்சியில் .........

http://youtu.be/aHR0BfPNF7U

இனியாவின் தவிப்பு தொடரும் ........ ?!

Edited by தமிழரசு, 25 March 2012 - 04:47 PM.

வெள்ளை என்பது அழகல்ல .... நிறம் !
ஆங்கிலம் என்பது அறிவல்ல .... மொழி !     முகநூளில் சுட்டது

#24 nunavilan

nunavilan

  நிர்வாகம்

 • கருத்துக்கள நிர்வாகம்
 • 29,409 posts
 • Gender:Male
 • Location:USA

Posted 26 March 2012 - 12:46 AM

தொடருங்கள் தமிழரசு. இப்போ தான் உங்கள் தொடரை வாசிக்க தொடங்கி உள்ளேன்.

உணர்ச்சி மிகுந்தவர்கள் தலைகளைக் கீழே வைத்துக் கொண்டு நிற்பவர்கள் . அவர்களுக்கு எல்லாமே தலைகீழாகவே தெரியும்.
-         பிளேடோ

#25 தமிழரசு

தமிழரசு

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 22,010 posts
 • Gender:Male
 • Location:பிரித்தானியா GB
 • Interests:தமிழ்மக்களுக்காக ஒரு நாடு ஒன்றை உருவாக்க உறவுகளுடன் இணைத்து செயல்படுவது

Posted 26 March 2012 - 11:23 AM

இப்பகுதியும் விறுவிறுப்பாக தான் செல்கிறது. இப்பகுதியில் அவர்கள் மயிரிழையில் தப்பி விட்டது போல் கூறி மீண்டும் இறுதியில் என்ன நடக்கப்போகிறது என எதிர்பார்க்குமாறு முடித்துள்ளீர்கள்.

உண்மையை கூறியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

நீங்கள் விட்ட சில எழுத்துப்பிழைகளை இங்கு சுட்டிக்காட்டுகிறேன், வரும் பாகங்களில் திருத்துங்கள். எழுத எழுத எல்லாம் சரி வந்து விடும்.

கொடுமைய என்பது கொடுமையடா என்றும்
மேற்க்கொண்டார் என்பது மேற்கொண்டார் என்றும்
கேட்க்என்பது கேட்க என்றும்
எவளவோ என்பது வ்வளவோ என்றும்
போணில் என்பது போனில் என்றும் வர வேண்டும்.சாஜ் என்று வர வேண்டும்.

முடியும் என்றும் போனில் சாஜ் என்றும் வர வேண்டும்

ஜோசிக்கின்றீர்கள் என்பது யோசிக்கின்றீர்கள் என்றும்
பாசக்காதங்கை - பாசக்கா தங்கை என்றும்
ரிவிபோட்டு - ருவிபோட்டு என்றும் வர வேண்டும்.

பிள்ளை என்றும் நள்ளிரவு என்றும் வர வேண்டும்.

அத்துடன் இவ்வரியில் தெளிவில்லை. "சில வேளை அண்ணா நள்ளிரவு தொலைபேசி எடுத்தாலும், அசதியாக நித்திரை கொள்ள வேண்டாம்" என்று வர வேண்டுமா?

கொஞ்சம் என்று வர வேண்டும்.

நன்றி காதல்,
நான் விட்ட தவறுகளை சுட்டிகாட்டியதினால் இப்போது அந்த தவறுகளை கருத்தில் கொண்டு புதிய பாகத்தை எழுதியுள்ளேன் படித்துவிட்டு உங்கள் கருத்தைதாருங்கள்.

பாகம் 13ம் படிச்சாச்சு..என்ன ஒரே எங்காவது உயிர் ஆபத்துக்களில் அகப்படுவது போல எழுதி வெளியில் கொண்டு வாறீங்கள்.அப்புறம் வேறை என்ன வளமைபோல் நன்று தான்..

நன்றி யாயினி,

தொடந்தும் உங்கள் கருத்து அறிய ஆவலாகவுள்ளேன்.
வெள்ளை என்பது அழகல்ல .... நிறம் !
ஆங்கிலம் என்பது அறிவல்ல .... மொழி !     முகநூளில் சுட்டது

#26 தமிழரசு

தமிழரசு

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 22,010 posts
 • Gender:Male
 • Location:பிரித்தானியா GB
 • Interests:தமிழ்மக்களுக்காக ஒரு நாடு ஒன்றை உருவாக்க உறவுகளுடன் இணைத்து செயல்படுவது

Posted 26 March 2012 - 11:52 AM

அத்துடன் இவ்வரியில் தெளிவில்லை. "சில வேளை அண்ணா நள்ளிரவு தொலைபேசி எடுத்தாலும், அசதியாக நித்திரை கொள்ள வேண்டாம்" என்று வர வேண்டுமா?அசதியாக நித்திரை கொள்ள வேண்டும் என்றுதான் வரவேண்டும்.

மீண்டும் ஒருமுறை நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன் காதல்
வெள்ளை என்பது அழகல்ல .... நிறம் !
ஆங்கிலம் என்பது அறிவல்ல .... மொழி !     முகநூளில் சுட்டது

#27 துளசி

துளசி

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 7,929 posts
 • Gender:Female
 • Location:கடலுக்கடியில்
 • Interests:இயற்கையை ரசித்தல், கதைப்புத்தகம் வாசித்தல்.

Posted 26 March 2012 - 05:03 PM

இந்த இனிமையான காலை வேளையில் பேரூந்து பருத்தித்துறை வந்தடைந்தது, அந்தவேளையில்

என்ன தினா கனவோ ...... ? நான் ஒரு கணம் பயந்தே போய்விட்டேன்,

தம்பியவை என்ன ..... கனவோ !
கனவில் வாய்விட்டு சத்தமிட்டு எங்களை பயம் உறுத்திவிட்டீர்கள்,

ஐயையோ, இம்முறையும் ஒன்றும் நடக்கவில்லையா? (நான் என்ன நடக்கப்போகிறது என்று கற்பனையெல்லாம் பண்ணி பார்த்தன் :D ).

அதிகாலை வேளையில் வானத்தில் கதிரவன் மங்களகரமான உடையணிந்து புலருகின்றான்,
கடல் நதிகளோ தூக்கத்தைவிட்டு தன் இறகுகளான அலைகளோடு நீந்துவதற்கு எழுகின்றது ........ கோழிகள் கதிரவனைப்பார்த்து பாடல் வரிகளை சொல்லி வரவேற்கின்றன ........
பறவைகளோ தமக்கு இரை தேட தம்மினத்தை இனிமையான ...... மொழிகளில் அழைக்கின்றன ........ மிருகங்களோ ஒன்றுகூட்டி ஒன்றுக்கொன்று கதை சொல்லி ஓடி, .... மகிந்து, விளையாடுகின்றன ....... தெய்வீக திருப்பணி செய்ய அழைகின்றதோ ! கோவிலின் மணி ஓசை ....... !!!!
நம் இனமோ வாழ்வின் விடியல்தேடி ........!வாசலைப்பெருக்கி தண்ணீர் தெளித்து அவர்கள் விரும்பும் சுகந்தத்தை வரவேற்க காத்து இருக்கின்றனர்,

பூக்களின் வாசனையோ வண்ண வண்டுகளை அழைத்து முத்தமிட்டு கதை பேசி மகிழ்கின்றன .......

காலைப்பொழுதை ரசிக்கும் படி தந்துள்ளீர்கள். வாழ்த்துகள்.

எல்லா படங்களும் ரசிக்க வைக்கிறது, புட்டும் கருவாட்டு பொரியலும் பசிக்க வைக்கிறது.....

மேலும் தொடருங்கோ....

Edited by காதல், 26 March 2012 - 05:49 PM.

#28 தமிழரசு

தமிழரசு

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 22,010 posts
 • Gender:Male
 • Location:பிரித்தானியா GB
 • Interests:தமிழ்மக்களுக்காக ஒரு நாடு ஒன்றை உருவாக்க உறவுகளுடன் இணைத்து செயல்படுவது

Posted 27 March 2012 - 08:59 AM

இனியாவின் தவிப்பு இரட்டிப்பாகிறது. ஆனாலும் சுபமாக முடியும் என நினைக்கிறேன். பாடல் வரிகள் அருமையாக உள்ளன... பாராட்டுக்கள்...நன்றி, கல்கி,

உங்களின் எதிபார்ப்பு போல் அமையுதா ......?

பொறுமையுடன் காத்திருங்கள்!

இந்த கதை இழுபடுறதே “........தவிப்பு” ஆலை தான். தவிப்பை விட்டால் எல்லாம் அடங்கிவிடும்.

நன்றி, இளங்கதிர்.

வெள்ளை என்பது அழகல்ல .... நிறம் !
ஆங்கிலம் என்பது அறிவல்ல .... மொழி !     முகநூளில் சுட்டது

#29 தமிழரசு

தமிழரசு

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 22,010 posts
 • Gender:Male
 • Location:பிரித்தானியா GB
 • Interests:தமிழ்மக்களுக்காக ஒரு நாடு ஒன்றை உருவாக்க உறவுகளுடன் இணைத்து செயல்படுவது

Posted 27 March 2012 - 11:57 AM

தொடருங்கள் தமிழரசு. இப்போ தான் உங்கள் தொடரை வாசிக்க தொடங்கி உள்ளேன்.நன்றி, நுனாவிலான்.

தொடர்ந்தும் வாசித்து கருத்து எழுதுங்கள்.
வெள்ளை என்பது அழகல்ல .... நிறம் !
ஆங்கிலம் என்பது அறிவல்ல .... மொழி !     முகநூளில் சுட்டது

#30 Eas

Eas

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 1,578 posts
 • Gender:Male
 • Location:யாதும் ஊரே
 • Interests:கருப்பு-வெள்ளை படங்கள். MSV , இளையராஜா பாடல்கள். புத்தகங்கள்.

Posted 27 March 2012 - 12:34 PM

உங்கள் ஆக்கத்துக்கு நன்றி தமிழரசு. தொடருங்கள்.
இடையிடையே, வெட்டி, வெட்டி, கதை நகருகின்றது. அதைத் தவிர்க்கலாமோ என்று தோன்றுகிறது.

#31 தமிழரசு

தமிழரசு

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 22,010 posts
 • Gender:Male
 • Location:பிரித்தானியா GB
 • Interests:தமிழ்மக்களுக்காக ஒரு நாடு ஒன்றை உருவாக்க உறவுகளுடன் இணைத்து செயல்படுவது

Posted 27 March 2012 - 09:02 PM

ஐயையோ, இம்முறையும் ஒன்றும் நடக்கவில்லையா? (நான் என்ன நடக்கப்போகிறது என்று கற்பனையெல்லாம் பண்ணி பார்த்தன் :D ).

காலைப்பொழுதை ரசிக்கும் படி தந்துள்ளீர்கள். வாழ்த்துகள்.

எல்லா படங்களும் ரசிக்க வைக்கிறது, புட்டும் கருவாட்டு பொரியலும் பசிக்க வைக்கிறது.....

மேலும் தொடருங்கோ....நன்றி, காதல்

கருவாட்டு பொரியல் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும்,
உங்களுக்கும் பிடிக்குமா ?
வெள்ளை என்பது அழகல்ல .... நிறம் !
ஆங்கிலம் என்பது அறிவல்ல .... மொழி !     முகநூளில் சுட்டது

#32 தமிழரசு

தமிழரசு

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 22,010 posts
 • Gender:Male
 • Location:பிரித்தானியா GB
 • Interests:தமிழ்மக்களுக்காக ஒரு நாடு ஒன்றை உருவாக்க உறவுகளுடன் இணைத்து செயல்படுவது

Posted 28 March 2012 - 12:26 PM

உங்கள் ஆக்கத்துக்கு நன்றி தமிழரசு. தொடருங்கள்.
இடையிடையே, வெட்டி, வெட்டி, கதை நகருகின்றது. அதைத் தவிர்க்கலாமோ என்று தோன்றுகிறது.நன்றி, ஈஸ்.
தொடர்ந்தும் படித்து கருத்து எழுதுங்கள்.
வெள்ளை என்பது அழகல்ல .... நிறம் !
ஆங்கிலம் என்பது அறிவல்ல .... மொழி !     முகநூளில் சுட்டது

#33 நிலாமதி

நிலாமதி

  advanced member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 6,890 posts
 • Gender:Female
 • Location:canada
 • Interests:கதை,கவிதை,
  இசை,பாடல்
  இயற்கையை
  ரசிக்க பிடிக்கும்

Posted 28 March 2012 - 02:26 PM

வழக்கம் போலவே மண் வாசனையோடு ..பதிவு (14 .) நன்றாக இருக்கிறது தொடருங்கள் .

 உளி விழுவது வலி என அழுதால் கல்லும் சிற்பம் ஆகாது 

விடிவெள்ளி தோன்றும்வரை இருள் ஆட்சி செய்வதை தவிர்க்க முடியாது 

#34 துளசி

துளசி

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 7,929 posts
 • Gender:Female
 • Location:கடலுக்கடியில்
 • Interests:இயற்கையை ரசித்தல், கதைப்புத்தகம் வாசித்தல்.

Posted 28 March 2012 - 05:47 PM

நன்றி, காதல்

கருவாட்டு பொரியல் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும்,
உங்களுக்கும் பிடிக்குமா ?

எனக்கு அசைவ உணவுகள் சாப்பிடும் பழக்கம் குறைவு. அதிலும் கருவாட்டு பொரியல் சின்ன வயசில் சாப்பிட்ட நினைவு. (ஒரு 10, 12 வருடத்திற்கு முன்) என்றாலும் நீங்கள் போட்ட படத்தை பார்த்தவுடன் சாப்பிட வேணும் போலிருக்கு. ஒருநாள் சாப்பிட்டா போச்சு.....

#35 ரதி

ரதி

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 7,858 posts
 • Gender:Female
 • Location:தேம்ஸ் நதிக்கரையோரம்
 • Interests:வாசித்தல்

Posted 28 March 2012 - 07:46 PM

தமிழரசு கதையை அதிகம் இழுக்காமலும்,எழுத்துப் பிழையை கவனித்து எழுதினால் கதை என்னும் சிறப்பாக இருக்கும் என்பது எனது கருத்து.
பெண்ணை அடக்கலாம்;பெண்ணின் மனதை அடக்க முடியுமா?

#36 ரதி

#37 தமிழரசு

தமிழரசு

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 22,010 posts
 • Gender:Male
 • Location:பிரித்தானியா GB
 • Interests:தமிழ்மக்களுக்காக ஒரு நாடு ஒன்றை உருவாக்க உறவுகளுடன் இணைத்து செயல்படுவது

Posted 28 March 2012 - 11:24 PM

வழக்கம் போலவே மண் வாசனையோடு ..பதிவு (14 .) நன்றாக இருக்கிறது தொடருங்கள் .

நன்றி, நிலாமதி.

வெள்ளை என்பது அழகல்ல .... நிறம் !
ஆங்கிலம் என்பது அறிவல்ல .... மொழி !     முகநூளில் சுட்டது

#38 தமிழரசு

தமிழரசு

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 22,010 posts
 • Gender:Male
 • Location:பிரித்தானியா GB
 • Interests:தமிழ்மக்களுக்காக ஒரு நாடு ஒன்றை உருவாக்க உறவுகளுடன் இணைத்து செயல்படுவது

Posted 29 March 2012 - 01:48 PM

எனக்கு அசைவ உணவுகள் சாப்பிடும் பழக்கம் குறைவு. அதிலும் கருவாட்டு பொரியல் சின்ன வயசில் சாப்பிட்ட நினைவு. (ஒரு 10, 12 வருடத்திற்கு முன்) என்றாலும் நீங்கள் போட்ட படத்தை பார்த்தவுடன் சாப்பிட வேணும் போலிருக்கு. ஒருநாள் சாப்பிட்டா போச்சு.....நன்றி, காதல்.

எனக்கு பிடித்த உணவுகளில் கருவாடும் ஒன்று அதுவும் பழைய கருவாட்டு குழம்பு ...... ம் ...... அந்தமாதிரி இருக்கும்.

ஊரில் பழைய சோறும் கருவாட்டு கறியும் சாப்பிட்டால் அதின் சுவை இருக்கே ..... வாவ் என்று சொல்லுமளவுக்கு இருக்கும்.

தமிழரசு கதையை அதிகம் இழுக்காமலும்,எழுத்துப் பிழையை கவனித்து எழுதினால் கதை என்னும் சிறப்பாக இருக்கும் என்பது எனது கருத்து.நன்றி, ரதி.
தொடர்ந்தும் படித்து கருத்து எழுதுங்கள்.
வெள்ளை என்பது அழகல்ல .... நிறம் !
ஆங்கிலம் என்பது அறிவல்ல .... மொழி !     முகநூளில் சுட்டது

#39 sathiri

sathiri

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 5,314 posts
 • Gender:Male
 • Location:பிரான்ஸ்
 • Interests:எதுவும் இல்லை

Posted 10 April 2012 - 10:33 PM

இவ்வளவு பெரிய இடைவேளையா விடுவீங்கள் சோடா வாங்க காசு கூட இல்லை :lol: :lol:
மண்ணிற்காகவும் மக்களிற்காகவும் போராடி மரணித்த என் தலைவனிற்கும் ஆயிரமாயிரம் போராளிகளிற்கும். மண்ணிற்காக மரணித்த அனைத்து மக்களிற்கும் வீரவணக்கங்கள்.

[b]விழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்[/b

http://sathirir.blogspot.com

#40 Eas

Eas

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 1,578 posts
 • Gender:Male
 • Location:யாதும் ஊரே
 • Interests:கருப்பு-வெள்ளை படங்கள். MSV , இளையராஜா பாடல்கள். புத்தகங்கள்.

Posted 11 April 2012 - 01:25 PM

அவ்வளவு நேரத்துக்கும் சோடா குடித்தால் சர்க்கரை வியாதி வருவது நிச்சயம்.

தமிழரசு ஒருதரம்.... தமிழரசு இரண்டு தரம் .............யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]