Jump to content

Orumanam
Photo

எனக்குப் பிடித்த பாடல்கள்

 • Please log in to reply
171 replies to this topic

#141 ரதி

ரதி

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 8,208 posts
 • Gender:Female
 • Location:தேம்ஸ் நதிக்கரையோரம்
 • Interests:வாசித்தல்

Posted 01 March 2012 - 08:51 PM

"காதலுக்கு மரியாதை" படத்தில் இருந்து இசைஞானியின் இசையில் ஹரிகரன்,பவதாரிணி ஆகியோர் பாடியுள்ளனர்.என்னைத் தாலாட்ட வருவாளோ
நெஞ்சில் பூமஞ்சம் தருவாளோ
தங்க தேராட்டம் வருவாளோ
இல்லை ஏமாற்றம் தருவாளோ
தத்தளிக்கும் மனமே தத்தை வருவாளா?
முத்து இதழ் முத்தம் ஒன்று தருவாளா?
கொஞ்சம் பொறு கொலுசொலி கேட்கிறதே
என்னைத் தாலாட்ட வருவாளோ
நெஞ்சில் பூமஞ்சம் தருவாளோ
தங்க தேராட்டம் வருவாளோ
இல்லை ஏமாற்றம் தருவாளோ.............................

பெண்ணை அடக்கலாம்;பெண்ணின் மனதை அடக்க முடியுமா?

ninaivu-illam

#142 ரதி

ரதி

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 8,208 posts
 • Gender:Female
 • Location:தேம்ஸ் நதிக்கரையோரம்
 • Interests:வாசித்தல்

Posted 02 March 2012 - 09:46 PM

ஜூலி கணபதி திரைப்படத்தில் இருந்து இசைஞானியின் இசையில் அருமையான குரலில் ஸ்ரேயா கோசால் பாடிய பாட்டு இது;

எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே
என்னைப் பிடித்த நிலவு அது உன்னை பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக் கூட்டுமே
உதிர்வது பூக்களா? மனது வளர்த்த சோலையில் காதல் பூக்கள் உதிருமா?(2)

மெல்ல நெருங்கிடும் போது நீ தூரப் போகிறாய்
விட்டு விலகிடும் போது நீ நெருங்கி வருகிறாய்
காதலின் திருவிழா கண்களில் நட‌க்குதே
குழந்தையைப் போலவே இதயமும் தொலையுதே
வானத்தில் பறக்கிறேன்...மோகத்தில் மிதக்கிறேன்
காதலால் நானுமோ காற்றாடி ஆகிறேன்
எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே
என்னைப் பிடித்த நிலவு அது உன்னை பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக் கூட்டுமே

வெள்ளிக் கம்பிகளைப் போல ஒரு தூறல் போடுதோ
விண்ணும்,மண்ணில் வந்து சேர‌ அது பாலம் போடுதோ...ஓ
நீர்த்துளி நீந்தினால் நீ தொடும் ஞாபகம்
நீ தொட்ட இட‌மெல்லாம் வீணையின் தரிச‌னம்
ஆயிர‌ம் அருவியாய்,அன்பிலே நட‌க்கிறாய்
வேகம் போல எனக்குள்ளே மோக மழைக்குள் நனைகிறாய்
எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே
என்னைப் பிடித்த நிலவு அது உன்னை பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக் கூட்டுமே
உதிர்வது பூக்களா? மனது வளர்த்த சோலையில் காதல் பூக்கள் உதிருமா?
எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே

ஸ்ரேயாவின் அருமையான குர‌லில் எத்தனை தர‌ம் கேட்டாலும் அலுக்காத பாட‌ல்...வட‌க்கத்திய பாட‌கியாக இருந்தாலும் இப்ப இருக்கும் தமிழ் பாட‌கிகளை விட‌ தமிழை அழகாக பாடுகிறார்

பெண்ணை அடக்கலாம்;பெண்ணின் மனதை அடக்க முடியுமா?

#143 ரதி

ரதி

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 8,208 posts
 • Gender:Female
 • Location:தேம்ஸ் நதிக்கரையோரம்
 • Interests:வாசித்தல்

Posted 01 April 2012 - 09:12 PM

பெண்ணை அடக்கலாம்;பெண்ணின் மனதை அடக்க முடியுமா?

#144 ரதி

ரதி

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 8,208 posts
 • Gender:Female
 • Location:தேம்ஸ் நதிக்கரையோரம்
 • Interests:வாசித்தல்

Posted 02 April 2012 - 06:48 PM

எனக்குப் பிடித்த ஹரிகரன்,சித்ராவின் குரலில்,அருமையான வரிகளில் அமைந்த அருமையான பாட‌ல்

மலர்களே மலர்களே இது என்ன கனவா
மலைகளே மலைகளே இது என்ன நினைவா
உருகியதே எனது உள்ளம்
பெருகியதே விழி வெள்ளம்
விண்ணோடும் நீதான்
மண்ணோடும் நீதான்
கண்ணோடும் நீதான்
ஆஆஆ....
(மலர்களே..)

மேகம் திறந்து வந்து உன்னில் இறங்கி வந்து
மார்பில் ஒளிந்து கொள்ள வரவா
மார்பில் ஒளிந்து கொண்டால் மாறன் அம்பு வரும்
கூந்தலில் ஒளிந்து கொள்ள வா வா
என் கூந்தல் தேவன் தூங்கும் பள்ளி அறையா அறையா
மலர் சூடும் வயதில் என்னை மறந்து போவது தான் முறையா
நினைக்காத நேரம் இல்லை காதல் ரதியே ரதியே
உன் பேரை சொன்னால் போதும்
நின்று வழி விடும் காதல் நதியே நதியே
என் ஸ்வாசம் உன் மூச்சில் உன் வார்த்தை என் பேச்சில்
ஐந்தாறு நூற்றாண்டு வாழ்வோம் என் வாழ்வே வா
(மலர்களே..)

பூவில் நாவில் இருந்தால் காற்று வாய் திறந்தால்
காதல் காதல் என்று பேசும்
நிலா தமிழ் அறிந்தால் அலை மொழி அறிந்தால்
நம்மில் கவி எழுதி வீசும்
வாழ்வோடு வளர்பிறை தானே வண்ண நிலவே நிலவே
வானோடு நீளம் போலே இணைந்து கொண்டது இந்த உறவே
உறங்காத நேரம் கூட உந்தன் கனவே கனவே
உன்னோடு உயிரை போலே புதைந்து போனது தான் உறவே
மறக்காது உன் ராகம் மரிக்காது என் தேகம்
உனக்காக உயிர் வாழ்வேன் வா என் வாழ்வே வா
(மலர்களே..)
பெண்ணை அடக்கலாம்;பெண்ணின் மனதை அடக்க முடியுமா?

#145 ரதி

ரதி

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 8,208 posts
 • Gender:Female
 • Location:தேம்ஸ் நதிக்கரையோரம்
 • Interests:வாசித்தல்

Posted 05 April 2012 - 08:09 PM

பெண்ணை அடக்கலாம்;பெண்ணின் மனதை அடக்க முடியுமா?

#146 ரதி

ரதி

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 8,208 posts
 • Gender:Female
 • Location:தேம்ஸ் நதிக்கரையோரம்
 • Interests:வாசித்தல்

Posted 09 April 2012 - 07:43 PM
படம்;ரிதம்

இசை ஏ ஆர் ரஹ்மான்(2000)

குரல்: உன்னிகிருஷ்ணன், கவிதா கிருஷ்ணமூர்த்தி, குழுவினர்
வரிகள்: வைரமுத்துகாற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்
நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன்
சுவாசத்தில் இருந்ததாக சொல்லிச் சென்றாய்
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு
நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு

காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்

காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்

கார்காலம்மழைக்கும்போது ஒளிந்துகொள்ள நீ வேண்டும்
தாவணிக் குடை பிடிப்பாயா
அன்பே நான் உறங்க வேண்டும் அழகான இடம் வேண்டும்
கண்களில் இடம் கொடுப்பாயா
நீ என்னருகில் வந்து நெளிய நான் உன் மனதில் சென்று ஒளிய
நீ உன் மனதில் என்னுருவம் கண்டுபிடிப்பாயா
பூக்களுக்குள்ளே தேனுள்ள வரையில் காதலர் வாழ்க (2)
பூமிக்கு மேலே வானுள்ள வரையில் காதலும் வாழ்க

காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்
நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன்
சுவாசத்தில் இருந்ததாக சொல்லிச் சென்றாய்

நெடுங்காலம் சிப்பிக்குள்ளே உருண்டு நிற்கும் முத்துப்போல்
என் பெண்மை திறண்டு நிற்கிறதே
திறக்காத சிப்பி என்னைத் திறந்துகொள்ளச் சொல்கிறதா
என் நெஞ்சம் மருண்டு நிற்கிறதே
நான் சிறு குழந்தை என்று நினைத்தேன் உன் வருகையினால் வயதறிந்தேன் என்னை மறுபடியும் சிறு பிள்ளையாய் செய்வாயா
கட்டிலிடும் வயதில் தொட்டிலிடச் சொன்னால் சரியா சரியா (2)
கட்டிலில் இருவரும் குழந்தைகள் ஆனால் பிழையா பிழையா

காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாக...
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு
நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு

இந்தப் பாட்டைஉன்னிக் கிருஸ்ணனின் குர‌லுக்காக எத்தனை தட‌வையும் கேட்கலாம்
பெண்ணை அடக்கலாம்;பெண்ணின் மனதை அடக்க முடியுமா?

#147 ரதி

ரதி

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 8,208 posts
 • Gender:Female
 • Location:தேம்ஸ் நதிக்கரையோரம்
 • Interests:வாசித்தல்

Posted 19 April 2012 - 06:50 PM

வேதம் புதிது படத்தில் இருந்து தேவேந்திரன் :unsure: இசையில் எஸ்பிபி,சித்ரா ஆகியோர் பாடியுள்ளனர்

 • குட்டி likes this
பெண்ணை அடக்கலாம்;பெண்ணின் மனதை அடக்க முடியுமா?

#148 தப்பிலி

தப்பிலி

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 4,336 posts
 • Gender:Male
 • Location:மோகம் கொண்டு மேகத்துக்குள்
 • Interests:புகைப்படம், விவசாயம், கனவு காணுதல்

Posted 20 April 2012 - 12:48 PM

'கண்ணுக்குள் நூறு நிலவா' மிகவும் விருப்பமான பாடல்களில் ஒன்று.
தேவேந்திரன் 'மண்ணுக்குள் வைரம்' படத்திற்கும் இசையமைத்தார். நல்ல இசையமைப்பாளர். இளையராஜா எனும் சுனாமியில் அடிபட்டுப் போனவர்களில் ஒருவர்

#149 குட்டி

குட்டி

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 4,460 posts
 • Gender:Male

Posted 20 April 2012 - 02:43 PM

வேதம் புதிது படத்தில் இருந்து தேவேந்திரன் :unsure: இசையில் எஸ்பிபி,சித்ரா ஆகியோர் பாடியுள்ளனர்

http://www.youtube.com/watch?v=QqKA8pgY4S4

அழகான பாடல் :)

ஆண் : கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைகுட்டை காதல் கடிதம் எழுதிய உறவா

கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைகுட்டை காதல் கடிதம் எழுதிய உறவா

நாணம் விடவில்லை தொடவில்லை
ஏனோ விடையின்னும் வரவில்லை

ஐய்யர் வந்து சொல்லும் தேதியில்தான் வார்தை வருமா
ஐய்யர் வந்து சொல்லும் தேதியில்தான்வார்தை வருமா

பெண் : கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைகுட்டை காதல் கடிதம் எழுதிய உறவா

(இசை) சரணம் - 1

பெண்குழு : அம்பா சாம்பவி சந்தரா மெளலி
ரகல பத்நா உமா பார்வதி
காளி வைபவதி சிவாத்ரி நயனா
காத்யயினி பைரவி சாவித்ரி
நவ யெளவன சுப ஹரி
சாம்ராஜ்ய லஷ்மி ப்ரதா...

ஆண் : தென்றல் தொட்டதும் மொட்டு வெடித்தால்
கொடிகள் என்ன குற்றம் சொல்லுமா

பெண் : கொல்லை துளசி எல்லை கடந்தால்
வேதம் சொன்ன சட்டங்கள் விட்டு விடுமா

ஆண் : வானுக்கு எல்லை யார் போட்டது
வாழ்கைக்கு எல்லை நாம் போட்டது

பெண் : சாஸ்திரம் தாண்டி தப்பி செல்வதேது

ஆண் : கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைகுட்டை காதல் கடிதம் எழுதிய உறவா

(இசை) சரணம் - 2

பெண்குழு : பூவே பெண் பூவே இதில் அதிசயம்
இளமையின் அவசியம் இனி என்ன ரகசியம்
இவன் மனம் புரியாலயா

பெண் : ஆணின் தவிப்பு அடங்கிவிடும்
பெண்ணின் தவிப்பு தொடர்ந்து விடும்

ஆண் : உள்ளம் என்பது உள்ள வரைக்கும்
இன்ப துன்பம் எல்லாமே இருவருக்கும்

பெண் : என்னுள்ளே ஏதோ உண்டானது
பெண்ணுள்ளம் இன்று ரெண்டானது

ஆண் : ரெண்டா ஏது ஒன்று பட்ட போதும்

பெண் : கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைகுட்டை காதல் கடிதம் எழுதிய உறவா

நாணம் விடவில்லை தொடவில்லை
ஏனோ விடையின்னும் வரவில்லை

ஆண் : ஐய்யர் வந்து சொல்லும் தேதியில்தாண் வார்தை வருமா
ஐய்யர் வந்து சொல்லும் தேதியில்தான்வார்தை வருமா

பெண் : கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா

ஆண் : கைகுட்டை காதல் கடிதம் எழுதிய உறவா...
சொந்த வீடுன்னை வாவென்று அழைக்குதடா தமிழா

#150 ரதி

ரதி

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 8,208 posts
 • Gender:Female
 • Location:தேம்ஸ் நதிக்கரையோரம்
 • Interests:வாசித்தல்

Posted 20 April 2012 - 08:09 PM

நான் இவ்வளவு நாளும் இந்தப் பாட்டுக்கு இசை அமைத்தது இசைஞானி என்று நினைத்திருந்தேன்...நேற்றுத் தான் தேவேந்திரன் என்று ஒரு இசையமைப்பாளர் இருக்கிறார் என்று தெரியும்...குட்டி பாடல் வரிகளை எழுதினதிற்கு நன்றி
பெண்ணை அடக்கலாம்;பெண்ணின் மனதை அடக்க முடியுமா?

#151 குமாரசாமி

குமாரசாமி

  மப்புறுப்பினர்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 14,178 posts
 • Gender:Male
 • Location:கள்ளுக் கொட்டில்
 • Interests:கள்ளடித்தல்

Posted 20 April 2012 - 08:49 PM

நான் இவ்வளவு நாளும் இந்தப் பாட்டுக்கு இசை அமைத்தது இசைஞானி என்று நினைத்திருந்தேன்...நேற்றுத் தான் தேவேந்திரன் என்று ஒரு இசையமைப்பாளர் இருக்கிறார் என்று தெரியும்...குட்டி பாடல் வரிகளை எழுதினதிற்கு நன்றி

தங்கச்சி! இதைமாதிரித்தான் மற்ற விசயங்களுமோ?????ஏனெண்டால் அரசல்புரசலாய் உங்களைப்பத்தி கனகதையள் உலாவுது....எல்லாம் ஐமிச்சமாய்க்கிடக்குது :( :) :D :lol:

#152 ரதி

ரதி

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 8,208 posts
 • Gender:Female
 • Location:தேம்ஸ் நதிக்கரையோரம்
 • Interests:வாசித்தல்

Posted 20 April 2012 - 09:17 PM

தங்கச்சி! இதைமாதிரித்தான் மற்ற விசயங்களுமோ?????ஏனெண்டால் அரசல்புரசலாய் உங்களைப்பத்தி கனகதையள் உலாவுது....எல்லாம் ஐமிச்சமாய்க்கிடக்குது :( :) :D :lol:

நான் அச்சாப் பிள்ளை அண்ணா :lol: :lol: :D என்ன கதை அண்ணா கேள்விப்பட்டனீங்கள்?
பெண்ணை அடக்கலாம்;பெண்ணின் மனதை அடக்க முடியுமா?

#153 துளசி

துளசி

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 8,083 posts
 • Gender:Female
 • Location:கடலுக்கடியில்
 • Interests:இயற்கையை ரசித்தல், கதைப்புத்தகம் வாசித்தல்.

Posted 20 April 2012 - 10:33 PM

இன்று தான் உங்கள் திரிக்கு வந்துள்ளேன்... வாழ்த்துகள்.... :)

#154 ரதி

ரதி

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 8,208 posts
 • Gender:Female
 • Location:தேம்ஸ் நதிக்கரையோரம்
 • Interests:வாசித்தல்

Posted 21 April 2012 - 10:15 AM

இன்று தான் உங்கள் திரிக்கு வந்துள்ளேன்... வாழ்த்துகள்.... :)

காதல் உங்கள் வருகைக்கும்,கருத்துப் பகிர்வுக்கும் நன்றி :D
பெண்ணை அடக்கலாம்;பெண்ணின் மனதை அடக்க முடியுமா?

#155 குட்டி

குட்டி

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 4,460 posts
 • Gender:Male

Posted 21 April 2012 - 01:14 PM

தங்கச்சி! இதைமாதிரித்தான் மற்ற விசயங்களுமோ?????ஏனெண்டால் அரசல்புரசலாய் உங்களைப்பத்தி கனகதையள் உலாவுது....எல்லாம் ஐமிச்சமாய்க்கிடக்குது :( :) :D :lol:

கு.சா. அண்ணா எனக்கும் ஐமிச்சமாகிடக்கு... நீங்கள் குறிப்பிட்ட 'உங்களை' என்பது ஒருமையா? பன்மையா? ^_^ :lol: :D
சொந்த வீடுன்னை வாவென்று அழைக்குதடா தமிழா

#156 ரதி

ரதி

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 8,208 posts
 • Gender:Female
 • Location:தேம்ஸ் நதிக்கரையோரம்
 • Interests:வாசித்தல்

Posted 27 April 2012 - 08:01 PM

புன்னகை மன்னன் படத்திலிருந்து இசைஞானியின் இசையில் எஸ்பிபி பாடிய பாடல்;
என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் மொழியா?
என்ன சத்தம் இந்த நேரம் ரதியின் ஒலியா?
கிளிகள் முத்தம் தருதா? அதனால் சத்தம் வருதா அடடா
என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் மொழியா?
என்ன சத்தம் இந்த நேரம் ரதியின் ஒலியா?

கன்னத்தின் முத்தத்தின் ஈர‌ம் அது காயவில்லையே
கண்களில் ஏன் உந்த கண்ணீர் அது யாராலே?
கன்னியின் கழுத்தைப் பார்த்தால் மணமாகவில்லையே
காதலன் மடியில் பூத்தால் ஒரு பூப் போலே
மன்னவனே உன் விழியால் பெண் விழியை மூடு
ஆதர‌வாய் சாய்ந்து விட்டால் ஆரிவரோ பாடு
ஆரிர‌ரோ...இவர் யார் எவரோ?...பதில் சொல்வார் யாரோ?

என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் மொழியா?
என்ன சத்தம் இந்த நேரம் ரதியின் ஒலியா?
கிளிகள் முத்தம் தருதா? அதனால் சத்தம் வருதா அடடா
என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் மொழியா?
என்ன சத்தம் இந்த நேரம் ரதியின் ஒலியா?

கூந்தலில் நுழைந்த கைகள் ஒரு தாளம் போடுதோ
தன்னிலை மறந்த பெண்மை அதை தாங்காதோ
உதட்டில் துடிக்கும் வார்த்தை அது உலர்ந்து போனதோ
உள்ளங்கள் துடிக்கும் ஒசை இசையாகதோ
மங்கை இவள் வாய் திறந்தால் மல்லிகைப் பூ வாச‌ம்
ஓடை எல்லாம் பெண் பெயரை உச்சரித்தே பேசும்
யார் இவர்கள்? இரு பூங்குயில்கள்...இளம் காதல் மான்கள்

என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் மொழியா?
என்ன சத்தம் இந்த நேரம் ரதியின் ஒலியா?
கிளிகள் முத்தம் தருதா? அதனால் சத்தம் வருதா அடடா
என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் மொழியா?
என்ன சத்தம் இந்த நேரம் ரதியின் ஒலியா?
பெண்ணை அடக்கலாம்;பெண்ணின் மனதை அடக்க முடியுமா?

#157 ரதி

ரதி

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 8,208 posts
 • Gender:Female
 • Location:தேம்ஸ் நதிக்கரையோரம்
 • Interests:வாசித்தல்

Posted 29 April 2012 - 05:45 PM

இசைஞானியின் இசையில் எஸ்பிபி பாடிய பாட்டு
ஆஆஆ...
மலையோரம் வீசும் காத்து...மனசோடு பாடும் பாட்டு கேட்டுதா? கேட்குதா?(2)
ஆராரோ பாடினாலும் ஆராரோ ஆகாதம்மா
சொந்தங்கள் தேடினாலும் தந்தை தாய் ஆகாதம்மா
என்னோட தாயி தந்த பாட்டுத் தானம்மா
மலையோரம் வீசும் காத்து...மனசோடு பாடும் பாட்டு கேட்டுதா? கேட்குதா?

வான் பறந்த தேன் சிட்டு நான் புடிக்க வாராதா
கள் இருக்கும் ரோசாப்பூ கை கலக்க கூடாதா
இராப் போது ஆனால் உன் ராகங்கள் தானா
அன்பே சொல் நானா தொட‌ ஆகாத ஆணா
உள் மூச்சு வாங்கினேனே முள் மீது தூங்கினேனே
இல்லாத பாரம் எல்லாம் நெஞ்சோடு தாங்கினேனே
நிலாவை நாளும் தேடும் வானம் நான்
மலையோரம் வீசும் காத்து...மனசோடு பாடும் பாட்டு கேட்டுதா? கேட்குதா?

குத்தாலத்து தேனருவி சித்தாடை தான் கட்டாதா
சித்தாடைவே கட்டியே கையில் வந்து முட்டாதா
ஆத்தோர‌ம் நாணல் பூங்காத்தோடு ஆட‌
ஆவார‌ம் பூவில் அது தேவார‌ம் பாட‌
இங்கே நான் காத்திருக்க என் பார்வை பூத்திருக்க
எங்கேயோ நீயிருந்து என் மீது போர் தொடுக்க
கொல்லாதே பாவம் இந்த ஜீவன் நான்
மலையோரம் வீசும் காத்து...மனசோடு பாடும் பாட்டு கேட்டுதா? கேட்குதா?(2)
ஆராரோ பாடினாலும் ஆராரோ ஆகாதம்மா
சொந்தங்கள் தேடினாலும் தந்தை தாய் ஆகாதம்மா
என்னோட தாயி தந்த பாட்டுத் தானம்மா
மலையோரம் வீசும் காத்து...மனசோடு பாடும் பாட்டு கேட்டுதா? கேட்டுதா
பெண்ணை அடக்கலாம்;பெண்ணின் மனதை அடக்க முடியுமா?

#158 ரதி

ரதி

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 8,208 posts
 • Gender:Female
 • Location:தேம்ஸ் நதிக்கரையோரம்
 • Interests:வாசித்தல்

Posted 23 May 2012 - 09:10 PM

மந்திரப் புன்னகை என்னும் படத்தில் இருந்து வித்தியாசாகரின் இசையில் மதுபாலக்கிருஸ்ணன்,அனுசியா[அறிமுகப் பாடகி] பாடிய பாடல் இது;

மேகம் வந்து போகும்
தாகம் வந்து போகும்
மோகம் வந்து போகும்
காதல் வந்தால் போகாது....இப் பாடகிக்கு அருமையான குரல்வளம் :)
பெண்ணை அடக்கலாம்;பெண்ணின் மனதை அடக்க முடியுமா?

#159 ரதி

ரதி

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 8,208 posts
 • Gender:Female
 • Location:தேம்ஸ் நதிக்கரையோரம்
 • Interests:வாசித்தல்

Posted 14 June 2012 - 07:38 PM

இசைஞானி,ஜேசுதாஸ்,எஸ்பிபி ஓரே மேடையில்;

பெண்ணை அடக்கலாம்;பெண்ணின் மனதை அடக்க முடியுமா?

#160 ரதி

ரதி

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 8,208 posts
 • Gender:Female
 • Location:தேம்ஸ் நதிக்கரையோரம்
 • Interests:வாசித்தல்

Posted 14 June 2012 - 09:42 PM

சிந்துபைரவி படத்தில் இருந்து இசைஞானியின் இசையில் ஜேசுதாஸ் பாடிய அற்புதமான பாடல் ...இந்தப் படத்தின் எல்லாப் பாட்டும் அருமை...ஜேசுதாசுக்கும்,சித்ராவிக்கு தேசிய விருது இந்தப் படத்தின் மூலம் கிடைத்தது...இனிமையான இசைக்காகவும்,ஜேசுதாசின் குரலுக்காகவும் இந்தப் பாட்டை ரசிக்கலாம்.
தொம் தொம் நந்த தொம் தொம் தொம்தநந்த தொம் தொம்(2)
மோகம் என்னும் தீயில் என் மனம் வெந்து,வெந்து உருகும்
வானம் எங்கும் அந்தப் பிம்பம் வந்து வந்து விலகும்
மோகம் என்னும் மாயைப் பேயை நானும் கொன்று போட‌ வேண்டும்
இல்லை என்ற போது எந்தன் மூச்சு நின்று போக வேண்டும்
தேகம் எங்கும் மோகம் வந்து யாகம் செய்யும் நேர‌ம் நேர‌ம்
தாயே இங்கு நீயே வந்து தண்ணீர் ஊற்ற வேண்டும் வேண்டும்
மனதில் உனது ஆதிக்கம்...இளமையின் அழகு உயிரைப் பாதிக்கும்
கிர‌கம் இர‌வை சோதிக்கும்...கனவுகள் விடியும் வரையில் நீடிக்கும்
ஆசை என்னும் புயல் வீசி விட்டததடி...ஆனி வேர் வரையில் ஆடி விட்டதடி....காப்பாயடி காப்பாயடிடிடி...........

தானந்த தானத் தம்தம் தானந்த தானத் தம்தம் ஆனந்தம்
ஆனந்த தானத் தம்தம் ஆனந்த தானத் தம்தம் ஆனந்தம்
தொம்த தொம்தன தொம்த தொம்தன தொம்ததனதொம்(2)
தொம் தொம் தொம்.......................தொம்தனன தொம் தொம் (2)
ஆ.......................................
பெண்ணை அடக்கலாம்;பெண்ணின் மனதை அடக்க முடியுமா?

யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]