அரசின் இழப்புகளை ஈடுசெய்ய யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ்ப் பெண்களை பயன்படுத்த திட்டம்
தென்னிலங்கையின் ஆடைத் தொழிற்சாலைகளில் ஏற்பட்டுள்ள இழப்புகளை வட மாகாண யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களை வைத்து ஈடு செய்துக் கொள்ள அரசாங்கம் முயற்சிக்கிறது.
இதன் அடிப்படையில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இருந்து யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இளம் பெண்களை தென்னிலங்கைக்கு அழைத்து வந்து ஆடைத் தொழிற்சாலைகளில் வேலைக்கு அமர்த்தும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன.
அண்மையில் ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்பட்டு வந்த ஜீ எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக ஆடைத் தொழில் துறை பாரிய இழப்பை சந்தித்து. இதனை அடுத்து அதில் பணியாற்றியவர்கள் ஆட்குறைப்பு செய்யப்பட்டதுடன் பணியாளர்களுக்கான வேதனமும் குறைவடைந்தன.
இதனை அடுத்து அதிக அளவிலான ஆடைத்துறை சார்ந்து பெண்கள் பணிகளில் இருந்து விலகிக் கொண்டனர். இந்த நிலையிலேயே வடக்கில் இருந்து இளம் பெண்கள் குறைந்த வேதனத்துடன் வேலைக்கமர்த்தப்பட்டு வருகின்றனர். இதேவேளை அவ்வாறு வேலைக்கு அமர்த்தப்படுகின்ற பெண்கள் துஸ்பிரயோகங்களுக்கு உட்படுத்தப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
http://www.pathivu.com/news/13984/57//d,article_full.aspx
அரசின் இழப்புகளை ஈடுசெய்ய யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ்ப் பெண்களை பயன்படுத்த திட்டம்
Started by
nunavilan
, Nov 02 2010 02:50 PM
No replies to this topic
#1
Posted 02 November 2010 - 02:50 PM
உணர்ச்சி மிகுந்தவர்கள் தலைகளைக் கீழே வைத்துக் கொண்டு நிற்பவர்கள் . அவர்களுக்கு எல்லாமே தலைகீழாகவே தெரியும்.
- பிளேடோ

யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]













