
பச்சரிசி - 400 கிராம்
பாசிபருப்பு- 100 கிராம்
மிளகு - 1 ஸ்பூன்
சீரகம்- 1 ஸ்பூன்
முந்திரிபருப்பு- 10
நெய் அல்லது டால்டா - 25 கிராம்
உப்பு - தேவையான அளவு
செய் முறை
அடுப்பில் சாதம் வடிப்பது போல ஒரு பானையில் 1 1/2 லிட்டர் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.. கொதிவந்தவுடன் அதில் அரிசையும் பருப்பையும் நன்றாக கலந்து போடவும்.. சாதம் பாதி வெந்திருக்கையில் மிளகை ஒன்றிரண்டாக உடைத்து போடவும் சீரகத்தினை சுத்தம் செய்து அப்படியே போடவும் நன்கு வெந்தவுடன் உப்பு போட்டு நன்றாக கிளறவும்... சாதம் நன்றாக குழைந்து பக்குவதிற்கு வந்தவுடன் சிறிது நெய்யில் அல்லது டால்டாவில் முந்திரியை வருத்து போடவும்... மீண்டும் அடிப்பிடிக்காமல் கிளறவும் .. நன்றாக பக்குவத்திற்கு வந்த உடன் இறக்கவும்..
குக்கரில் செய்பவர்களுக்கு: அதே செய்முறை... 4 விசில் வந்த வுடன் இறக்கவும்.. கடைசியில் நெய்யில் மிளகு சீரகம் முந்திரி ஆகியவற்றை வறுத்து சேர்க்கவும்... நன்றாக கிளறி பிறகு சிறிது நேரம் மூடிவைத்து பிறகு பரிமாறவும்..
பின்குறிப்பு : பொன்னி அரிசியில் செய்தால் சுவை டாப்பு டக்கர்..
+
பாசிபருப்பு சாம்பார்
பாசிபருப்பு - 100 கிராம்
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - 1
பூண்டு - 3 பல்
சாம்பார் பொடி - 1 ஸ்பூன்
புளி- சிறிதளவு
உப்பு தேவையான அளவு
தாளிப்பதற்கு
எண்ணைய் - 2ஸ்பூன்
கடுகு - 1/2 ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்
உளுந்து - 1/2 ஸ்பூன்
கறுவேப்பிள்ளை- சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
செய்யும் முறை:
பாசிபயறு அல்லது தட்டை பயறு எண்ணைய் விடாமல் லேசாக வறுத்து 2 டம்பளர் தண்ணீர்விட்டு வேகவிடவும்.. புளி உப்பை ஊற வைக்கவும்..வெங்காயம்... தக்காளியை நறுக்கிகொள்ளவும். பயிறு பாதி வெந்தவுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் தக்காளியை போடவும்.. பயிறு நன்றாக வெந்த பின்பு புளி. உப்பு கரைத்து ஊற்றி சாம்பார் பொடியை போட்டு பூண்டு பல்லை தோல் உரிக்காமல் நன்றாக நசுக்கி போடவும். நன்கு கொதி வந்த வுடன் 2 ஸ்பூன் எண்ணைய் விட்டு கடுகு சீரகம். உளுந்து கருவேப்பிலை கொட்டி தாளித்து ஒரு கொதி வந்தவுடன் கொத்தமல்லி தழை கிள்ளி போட்டு இறக்கவும்..கம கம பாசிபருப்பு சாம்பார் ரெடி.
இதை பூரிக்கும் தொட்டுகொள்ள சுவையாக இருக்கும்..
நன்றி: ராஜஸ்வரி பதிப்பகம் சிவகாசி

























