இத்தால் சகலரும் அறிவது
#1
Posted 26 April 2007 - 01:22 PM
யாழ் கருத்துக்களம் தொடர்பான அறிவித்தல்கள்,
மாற்றங்கள் - புதியன தொடர்பான விளக்கங்கள்,
உறுப்பினர்கள் தொடர்பான அறிவித்தல்கள்,
கவனயீர்ப்புகள், எச்சரிக்கைகள், அறிவுறுத்தல்கள்
போன்றன இத்தலைப்பின் கீழ் இடம் பெறும்!
நன்றி
வலைஞன்

#2
Posted 26 April 2007 - 01:28 PM
1. புதிய கருத்துக்கள விதிமுறைகளை இதுவரை படிக்காதவர்கள், தயவுசெய்து அவற்றை ஒருமுறை வாசித்தறியவும். > கருத்துக்கள விதிமுறைகள்
2. கருத்துக்களத்தில் இணைக்கும் படங்களின் அளவு கருத்துக்கள விதிமுறைகளில் குறிப்பிட்டதற்கு அமைய இருக்கவேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்க. (அகலம்: max 640px)
வலைஞன்
#3
Posted 29 April 2007 - 01:21 AM
#4
Posted 09 May 2007 - 11:15 AM
thamizthukkudu, ithayakani ஆகிய இரண்டு கள உறுப்பினர்களும் யாழ் கருத்துக்களத்தில் தடைசெய்யப்படுகின்றனர். அவர்கள் யாழ் அரிச்சுவடி பகுதியில் தொடங்கிய தலைப்புகளும் நிர்வாகம் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
இவர்களின் கோமாளித்தனமான செயற்பாடுகள் புதிதாக இணையும் உறுப்பினர்களுக்கு அசெளகரியங்களைக் கொடுக்கும் என்பதாலும், இவர்களின் நோக்கம் எமக்கு சந்தேகங்களைக் கொடுப்பதாலும் கருத்துக்களத்தில் தடைசெய்யப்படுகின்றனர்.
வலைஞன்
#5
Posted 15 May 2007 - 12:34 PM
2. சக கருத்துக்கள உறவுகளை மறைமுகமாகவோ, நேரடியாகவோ தாக்கிக் கருத்து எழுதுவதையும், அவர்களின் அனுமதி இல்லாமல் நையாண்டி செய்வதற்கு அவர்களின் பெயர்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
3. கருத்துகள விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள பிரிவுகள் தவிர ஏனை பிரிவுகளில் வீண் அரட்டைகளைத் தவிர்க்கவும்.
* கருத்துக்கள விதிமுறைகளில் உடன்பாடு இல்லாதவர்கள் அல்லது கருத்துக்கள விதிமுறைகளுக்கு அமைவாக செயற்பட விரும்பாதவர்கள் "கட்டாயம்" கருத்துக்களத்தில் கருத்துகள் எழுதவேண்டுமென கள நிர்வாகம் ஒருபோதும் வலியுறுத்தவில்லை. எனவே தயவுசெய்து!!!
தொடர்ந்தும் கருத்துக்கள விதிமுறைகளுக்கு முரணாக செயற்படின் எச்சரிக்கை வழங்கப்பட்டு கருத்துக்களத்தில் இருந்து தடைசெய்யப்படுவீர்கள் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம். யாராக (பழைய, புதிய, நீண்டகால..) இருப்பினும் பாகுபாடில்லாமல் இது செயற்படுத்தப்படும் என்பதையும் அறியத் தருகிறோம்!!!
கருத்துகள நிர்வாகத்தோடு ஒத்துழைத்து செயற்படுமாறு அனைத்து கருத்துக்கள உறுப்பினர்களையும் அன்புடனும், நட்புடனும் கேட்டுக்கொள்கிறோம்.
வலைஞன்
#6
Posted 18 May 2007 - 10:02 AM
தலைப்புக்களை/ஆக்கங்களை உரிய பகுதிகளில் இணைக்கவும். சற்றும் பொருத்தமில்லாத பிரிவில் பொருத்தமில்லாத தலைப்பை இணைப்பதைத் தவிர்க்கவும். (சில தலைப்புகளை எங்கு இணைப்பது என்பதில் குழப்பம் வரலாம் - அவற்றை எம்மால் புரிந்துகொள்ளமுடியும்). ஆனால், அறியாதவர்கள் போல் செய்திகளை அறிமுகப்பகுதியில் இணைப்பதை என்னவென்று சொல்வதென்று தெரியவில்லை.
யாழ் அரிச்சுவடி, யாழ் உறவோசை போன்ற பிரிவுகளை அவற்றுக்குரிய கருத்துக்களுக்கு மட்டும் பயன்படுத்தவும். ஏனைய விவாதங்களைத் தவிர்க்கவும். அங்கே, பொருத்தமில்லாத தலைப்புக்களை இடுவதையும் தவிர்க்கவும்.
எச்சரிக்கை!
ஜமுனா, வானவில் ஆகிய இருவருக்கும் நாம் மீண்டும் அறிவுறுத்த விரும்புகிறோம்: தயவுசெய்து தேவையற்ற அரட்டைகளைத் தவிர்க்கவும். கருத்துக்கள விதிமுறைகளில் குறிப்பிடப்பட்ட பகுதிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் வீண் அரட்டைகளைத் தொடர்வதை இனியும் அனுமதிக்க முடியாது. ஏற்கனவே பலமுறை எச்சரித்திருக்கிறோம் - தனிமடல்கள் ஊடாகவும் அறிவுறுத்தியிருக்கிறோம் - தடைசெய்யப்பட்டு, மீளவும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ஏனைய கருத்துக்கள உறுப்பினர்களை சீண்டும் வகையிலான கருத்துக்களைத் தவிர்க்கவும். இதனைக் கடைசி எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளவும். தொடர்ந்தால், தடைசெய்யப்படுவீர்கள் என்பதையும் குறிப்பிட விரும்புகிறோம். புரிந்துகொண்டு ஒத்துழைப்பீர்கள் என நம்புகிறோம்!
வலைஞன்
#7
Posted 07 June 2007 - 09:56 AM
கருத்துக்கள உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
அண்மைக் காலங்களாக வெவ்வேறு புதிய பெயர்களில் இணைந்து கருத்துக்கள விதிமுறைகளுக்கு முரணாகவும், கோமாளித்தனமாகவும் கருத்துக்களை வைக்கப்பட்டுக்கொண்டிருப்ப
ை நீங்கள் அறிவீர்கள். கருத்துக்கள நிர்வாகமும் அவற்றை முடிந்தளவு தணிக்கை செய்து நிர்வாகப் பகுதிக்குள் நகர்த்தும் நடவடிக்கையில் ஈடுபட்டதை அறிவீர்கள். அதேபோல், அவர்களும் தொடர்ந்து தடைசெய்யப்பட்டு வந்துள்ளார்கள். இருந்தபோதிலும், புதிய பெயர்களில் இணைந்து கோமாளித்தனமாக செயற்பட்டுக்கொண்டிருக்கிற
ர்கள். நாம் முன்னர் ஏனைய பகுதிகளுக்கு அனுமதி கொடுத்திருந்தோம். கோமாளித்தனமாகவும், களவிதிமுறைகளை மீறி நடந்த போதிலும் நெகிழ்வுப் போக்கையே கடைப்பிடித்தோம். இருந்தும், அது தவறாகப் பயன்படுத்தப்பட்டது. எனவே தான் தடைசெய்யும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டோம்.
தொடர்ந்தும் இணைந்தபோதும், ஏனைய பகுதிகளுக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. ஆயினும், வரவேற்புப் பகுதியில் நடாத்தப்படும் இந்தக் கோமாளித்தனமான வேலைகளால் புதிதாக இணையும் ஏனைய உறுப்பினர்களுக்கு அது குழப்பத்தையும், அசெளகரியத்தையும் ஏற்படுத்துகிறது.
எனவே,
தயவு செய்து இப்படியான கோமாளித்தனமான கருத்துக்களை கவனத்தில் எடுக்காது புறக்கணிக்குமாறு உங்களைக் கேட்டுக்கொள்கிறோம். அவை முடிந்தளவு வேகமாக நிர்வாகத்துக்குள் நகர்த்தப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். எனவே உங்கள் எழுத்துக்களையும், நேரத்தையும் வீணாக்கி இப்படியான கருத்துக்களுக்கு பதிலளிப்பதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறோம். அனைவரையும் ஒத்துழைக்குமாறு மீண்டும் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி
வலைஞன்
#8
Posted 08 June 2007 - 07:47 PM
#9
Posted 16 June 2007 - 11:37 AM
மதம்சார் பிரச்சார வடிவிலான எந்தப்பதிவுகளையும் யாழ் கருத்துக்களத்தில் இணைக்கவேண்டாம். விவாதங்களுக்கான களம் இது என்பதைக் கருத்தில்கொண்டு - விவாதத்தளத்துக்குள் மதங்களைக் கொண்டு செல்லும் விதமாக பதிவுகளை இடுவதை நாம் வரவேற்கிறோம். ஆனால், வெறுமனே எந்தவொரு மதம்சார்ந்த பிரச்சாரப் பதிவுகளையும் யாழ் கருத்துக்களத்தில் இணைப்பது தவிர்க்கப்படவேண்டும். இனி மதம்சார்ந்து இணைக்கும் பரப்புரை வடிவிலான பதிவுகள் அனைத்தும் நிர்வாகம் பகுதிக்கு நகர்த்தப்படும் என்பதை அறியத்தருகிறோம்.
* மதம்சார்ந்த பதிவுகள் தொடர்பாக முடிவெடுப்பதற்கு நீண்ட காலம் எடுத்தமைக்கு வருந்துகிறோம்.
வலைஞன்
#10
Posted 16 June 2007 - 09:59 PM
யாழ் கருத்துக்களத்திற்கு புதிய மட்டுறுத்துனர் ஒருவர் இணைக்கப்பட்டுள்ளார்.
பெயர்: இணையவன்.
குறிப்பா செம்பாலை (செய்திக்களம்) பகுதியில், செய்திகளைத் தொகுத்து ஒழுங்கமைக்கும் பணியை இவர் செய்வார். கருத்துக்கள உறவுகள் அனைவரும் உங்கள் ஒத்துழைப்பை இணையவனுக்கு வழங்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
வலைஞன்
#11
Posted 17 June 2007 - 12:31 PM
ஒருவரையொருவர் மறைமுகமாகத் தாக்குவதும், கருத்தாடற் பண்புமுறையை மீறிக் கருத்தாடுவதும், சக கருத்துக்கள உறுப்பினர்களைச் சீண்டும் விதமாகக் கருத்துக்களை முன்வைப்பதும், இங்கு கருத்து எழுதும் ஒவ்வொருவருக்கும் சமூகப்பொறுப்பு இருக்கிறது என்பதை உணராமல் உணர்ச்சிவசப்பட்டு கருத்துக்களை எழுதுவதும், ஆக்கபூர்வமான கருத்தாடல்களைத் தொடராமல் வெறுமனே மற்றவரைத் தாக்கவேண்டும் என்பதற்காகவே கருத்துக்களை பதிவதும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. நாம் பலமுறை அறிவுறுத்திவிட்டோம். பலதடவைகள் எச்சரித்துவிட்டோம். இதற்குமேலும் நிர்வாகம் பொறுமைகாக்கும் - நெகிழ்வுப் போக்கைக் கடைப்பிடிக்கும் என எதிர்பார்க்கவேண்டாம்.
கருத்துக்களத்தில் எச்சரிக்கை முறை இன்றிலிருந்து அறிமுகப்படுத்தப்படுகிறது. பண்பற்ற முறையில், கருத்துக்கள விதிமுறைகளை மீறும் வகையில் கருத்துக்கள் முன்வைக்கப்படின் எச்சரிக்கை (warning) வழங்கப்படும். அது கருத்துக்கள உறுப்பினரின் பெயருக்குக் கீழ் காண்பிக்கப்படும். குறிப்பிட்ட அளவு எச்சரிக்கை வழங்கப்பட்டபின் கருத்துக்களத்திலிருந்து தடைசெய்யப்படுவீர்கள். இங்கு புதிய உறுப்பினர்கள், நீண்டகால உறுப்பினர்கள், முன்னர் நல்ல கருத்துக்கள் எழுதியவர் என்கிற தயவு எதுவும் பார்க்கப்படமாட்டாது.
கருத்துக்கள உறவு "பூனைக்குட்டி" க்கு எச்சரிக்கை வழங்கப்படுகிறது. அண்மைக்காலங்களில் கருத்துக்களவிதிமுறைகளை மீறும்வகையில் கருத்தெழுதிய அனைவருக்கும் மீண்டும் அறிவுறுத்துகிறோம். உங்கள் சமூகப் பொறுப்பை உணர்ந்து கருத்துக்களை எழுதுங்கள்.
வலைஞன்
#12
Posted 22 June 2007 - 05:23 PM
யாழ் கருத்தில்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள் அனைத்தும் தமிழிலேயே எழுதப்படல் வேண்டும் .
இடையிடையே ஆங்கிலத்தை தமிழில் எழுதுவதை அல்லது ஆங்கில வார்த்தைகளை அவசியமின்றி பயன்படுத்துவதை அனைவரும் தவிர்ப்பது நல்லது.
Edited by yarlpaadi, 22 June 2007 - 08:28 PM.
#13
Posted 25 June 2007 - 11:11 PM
பலரும் தனிமடலூடாகவும், பொதுவிலும் இது தொடர்பாக கேட்டபடியால் தெளிவுபடுத்தும் பொருட்டு இந்த விளக்கம்: யாழ் கருத்துக்களத்தில் warn system அறிமுகப்படுத்தப் பட்டிருப்பது அனைவரும் அறிவீர்கள். இதற்கான அடையாளமாக உங்கள் உங்கள் பெயர்களின் கீழ் warn (0%) என்று காண்பிக்கும். உங்களது மட்டும் தான் உங்களுக்குக் காண்பிக்கும். மற்றவர்களுடையது உங்களுக்கு காண்பிக்கப்படமாட்டாது. warn என்பது 0% இருக்கும் வரை நீங்கள் எந்தக் குழப்பமும் அடையத்தேவையில்லை.
வலைஞன்
#14
Posted 20 July 2007 - 05:02 PM
* கருத்துக்கள விதிமுறைகளை மதித்து செயற்படாமை
* கருத்துக்கள உறுப்பினர்கள் மீதான தனிநபர் தாக்குதல் கருத்து எழுதியமை
* கருத்துக்கள கருத்தாடல் பண்பை மீறியமை
* கருத்துக்கள நிர்வாகத்தினரின் நிர்வாகம்/மட்டுறுத்தல் சார் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவித்தமை
போன்று காரணங்களுக்காக
சிவக்கொழுந்து (Sivakolunthu)
டங்கிளஸ் (Danklas)
தூயவன்
காவியா (kaviya)
நேசன்
ஆகிய நால்வருக்கும் முதலாவது எச்சரிக்கை வழங்கப்பட்டிருக்கிறது. அவர்களுக்கும் அது தொடர்பாக தனிமடலில் அறியக்கொடுக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கள உறுப்பினர்கள் மீதான தனிநபர் தாக்குதல் கருத்துக்கள் எழுதுவதையும் - அவற்றுக்கு பதிலளிப்பதையும் தவிர்க்கவும். கருத்துக்கள நிர்வாகத்தினரின் நிர்வாகம் மற்றும் மட்டுறுத்தல் சார் செயற்பாடுகளுக்கு அனைவரும் ஒத்துழைப்புத் தருவீர்கள் என நம்புகிறோம்.
நன்றி
வலைஞன்
#15
Posted 21 July 2007 - 08:17 PM
* கருத்துக்கள விதிமுறைகளை மீறி செயற்பட்டமை
* கருத்துக்கள கருத்தாடல் பண்பை கடைப்பிடிக்காமை
ஆகிய காரணங்களால்
Panangkai என்கிற உறுப்பினருக்கு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.
வலைஞன்
#16
Posted 22 July 2007 - 01:36 PM
1. தயவுசெய்து தனிப்பட்ட பிரச்சனைகளை பொதுக்களத்துக்கு கொண்டு வராதீர்கள்.
2. களம் சார்ந்த பிரச்சனைகளை "யாழ் உறவோசை பகுதியில்" எழுதுங்கள்.
3. முறைப்பாடுகளை நிர்வாகத்தினரோடு தொடர்புகொண்டு தெரியப்படுத்துங்கள்.
4. தனிநபர் தாக்குதல் இடம்பெறுவதாகக் கருதினால் பதிலுக்கு தனிநபர் தாக்குதலை நிகழ்த்தாமல், நிர்வாகத்துக்கு அறியத் தாருங்கள்.
5. தனிமடல்களை பொதுக்களத்தில் பிரசுரிக்காதீர்கள்.
6. தனிமடலை யாராவது தவறாகப் பயன்படுத்தினால் நிர்வாகத்திடம் எழுதித் தெரிவியுங்கள்.
நிர்வாக மற்றும் மட்டுறுத்தல் பணிகளைச் செய்வதற்கு நிர்வாகத்தினர் இருக்கிறோம் என்பதை பலர் பல சந்தர்ப்பங்களில் மறந்து போய்விடுகிறார்கள். நாம் சிலவேளைகளில் சில தலைப்புகளை கவனிக்காமல் போகலாம் - அதனால் சில பிரச்சனைகள் எமக்கு தெரியாமல் போகலாம். எனவே, அறிந்தவர்கள் நிர்வாகத்தினருக்கு தெரியப்படுத்தலாம்.
வலைஞன்
#17
Posted 26 July 2007 - 07:19 PM
4. தனிமடற் சேவை
1. கருத்துக்கள உறுப்பினர்களோடு தனிப்பட நட்புப் பாராட்ட தனிமடற் சேவையினை பயன்படுத்தலாம்.
2. தனிமடற் சேவையினை தவறான முறையில் பயன்படுத்தல் ஆகாது.
3. (அப்படி ஏதாவது நடந்தால், சம்பந்தப்பட்டவர்கள் நிர்வாகத்துக்கு அறியத்தரலாம்)
4. தனிமடற் சேவையினை நிறுவனங்களுக்கான விளம்பரங்களுக்கு பயன்படுத்தல் ஆகாது.
இது தனிமடல் தொடர்பாக யாழ் கருத்துக்களத்தின் விதிமுறையில் உள்ளது. அனைவரும் வாசித்திருப்பீர்கள். இதுவரை வாசித்தறியாதவர்கள் கருத்துக்கள விதிமுறைகளை மறுபடியும் வாசிக்கவும்.
கருத்துக்களத்தில் அண்மைக் காலமாக தனிமடல் பிரச்சனை தொடர்பாக சில முறைப்பாடுகள் வந்துள்ளன. இவை தொடர்பாக கருத்துக்கள நிர்வாகம் சில விசாரிப்புக்களை மேற்கொண்டுள்ளது. அதனடிப்படையில் நாம் சில விடயங்களை அனைவருக்கும் மீண்டும் தெளிவுபடுத்த விரும்புகிறோம்.
1. தனிமடல் சேவையானது கருத்துக்கள உறுப்பினர்கள் தமக்குள் நட்புப் பாராட்டுவதற்கும், கருத்துக்களம் தொடர்பான விடயங்களைப் பகிர்ந்துகொள்வதற்கும், கருத்துக்கள நிர்வாகத்தினரோடு தொடர்புகொள்வதற்குமான ஒரு சேவையாகவே அமையவேண்டும். இவை தவிர்த்து நிறுவனங்களை விளம்பரப்படுத்துவதற்கோ, வேறு இணையத்தளங்களை விளம்பரப்படுத்துவதற்கோ, எரிதங்களை (SPAM MAILS) அனுப்புவதற்கோ பயன்படுத்துதல் ஆகாது. உங்கள் இணையத்தளம் பற்றி அறியத் தர விரும்பின் - அதனை யாழ் வழிகாட்டி பகுதியில் இணைக்கலாம். யாழ் கருத்துக்களம் சாராத எந்த விளம்பரங்களுக்கும் அனுமதியில்லை என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறுகிறோம்.
2. உங்களின் (கருத்துக்களம் சாராத) தனிப்பட்ட பிரச்சனைகளை தனிமடலில் பகிர்ந்துகொள்வதைத் தவிர்க்கவும். யாழ் கருத்துக்களம் என்பது கள உறுப்பினர்களிடையே பகையுணர்வை வளர்ப்பதற்கான களமில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்துக்கள் இருக்கும் - எல்லோரும் ஒரே கருத்தைக் கொண்டிருந்தால் யாழ் கருத்துக்களம் என்பது அவசியமில்லை. எனவே, கருத்துக்களத்தில் ஏற்படும் கருத்தாடல் முரண்பாடு என்பது வெளியில் பகையுணர்வாக வளரக்கூடாது என்பதே எமது அவா. அப்படி வளருமானால் அதற்கு கருத்துக்கள நிர்வாகம் எவ்விதப் பொறுப்புமேற்காது. அந்தவகையில், உங்கள் "சண்டைகளுக்கு" - "பகையுணர்வுக்கு" கருத்துக்கள தனிமடற் சேவையினை பயன்படுத்திக்கொள்ள வேண்டாம்.
3. ஒரு கருத்துக்கள உறுப்பினர்க்கு இன்னொரு கருத்துக்கள உறுப்பினர் (நிர்வாகத்தினர் தவிர) தன்னோடு தொடர்புகொள்வது விருப்பமில்லையெனின் தனிமடல் சேவையில் அவரை தடைசெய்யும் அனைத்து உரிமையும் உள்ளது.
4. கருத்துக்களம் சாராத வேறு விடயங்களை - குறிப்பாக கருத்துக்களம் சாராத உங்களின் தனிப்பட்ட பிரச்சனைகளை வேறு சேவைகளின் ஊடாக பேசிக்கொள்ளலாம். அவைபற்றி நீங்கள் அறிந்திராவிடின், சில உதாரணங்கள் இதோ: தொலைபேசி, மின்னஞ்சல் சேவை, msn messenger, yahoo messenger போன்றவைகள்.
5. யாழ் கருத்துக்களத்தில் கருத்துக்கள உறுப்பினர்களின் தனிப்பட்ட விபரங்களை - உதாரணம்: மின்னஞ்சல் முகவரி - தவறான முறையில் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது. தனிப்பட்ட விபரங்களை வெளியில் வேறு நபர்களுக்கு, நிறுவனங்களுக்கு வழங்குவது தவிர்க்கப்படவேண்டும்.
6. தனிமடல்களை பொதுக் களத்தில் இடுவதுவும் - அதுபற்றி பொதுக்களத்தில் விவாதிப்பதுவும் - தடைசெய்யப்பட்டுள்ளது. கருத்துக்கள உறுப்பினர் ஒருவர் உங்களுக்கு அனுப்பும் தனிமடலை அவரது அனுமதியின்றி இன்னொருவருக்கு (நிர்வாகத்தினர் தவிர) அனுப்புவது தவிர்க்கப்படவேண்டும்.
7. ஒரு கருத்துக்கள உறுப்பினர் பற்றி ஏனைய கருத்துக்கள உறுப்பினர்களுக்கு அவதூறான செய்திகளை, வதந்திகளை மற்றும் கோள்மூட்டல்களை பரப்புவதுவும் முற்றிலும் தவிர்க்கப்படவேண்டும்.
8. தவறான முறையில் தனிமடல் சேவை பயன்படுத்தப்படுவது பற்றி அறிந்தால் கருத்துக்கள நிர்வாகத்துக்கு அறியத்தாருங்கள்.
9. தனிமடல் சேவை ஊடாக பிற கருத்துக்கள உறுப்பினர்களால் உங்களுக்கு தொந்தரவு ஏற்படின் அதனை நிர்வாகத்துக்கு தெரியப்படுத்துங்கள்.
10. ஆதாரமான தனிமடல்களினை உடனே அழிக்காமல் - சேமித்து வைத்து நிர்வாகத்தினருக்கு அனுப்புங்கள்.
மேற்கண்ட விடயங்களை கவனத்தில் எடுத்து அனைத்து கருத்துக்கள உறுப்பினர்களும் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.
வலைஞன்
#18
Posted 26 July 2007 - 07:40 PM
யாழ் கருத்துக்களத்தை (முன்னரே குறிப்பிட்டது போன்று) உங்களின் தனிப்பட்ட பிரச்சனைகளை, பகையுணர்வினை வளர்த்துக்கொள்ளும் இடமாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டாம். இது ஒரு கருத்தாடற் களம் என்பதை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தவேண்டியுள்ளது.
- கருத்துக்களில் இருக்கும் முரண்பாடுகள் தாண்டி அனைவரும் நட்பு பாராட்ட வேண்டும் என்பதே எமது அவா.
- கருத்துக்களம் சாராத உங்களின் தனிப்பட்ட பிரச்சனைகளை கருத்துக்களத்துக்கு அப்பால் மட்டுமே வைத்துக்கொள்ளுங்கள்.
- உங்களின் தனிப்பட்ட பிரச்சனைகளை "மறைமுகமாகவோ, நேரடியாகவோ" களத்தில் எழுதாதீர்கள்.
- மறைமுகமாகவோ, நேரடியாகவோ ஒருவரைத் தாக்கி எழுதுவதைத் தவிர்க்கவும்.
- உங்களின் (கருத்தக்களம் சாராத) தனிப்பட்ட பிரச்சனைகளை கருத்துக்கள நிர்வாகம் தீர்த்துவைக்க முடியாது.
- கருத்துக்களம் சார்ந்த பிரச்சனைகளாக இருப்பின் நிர்வாகத்தினருக்கு அறியத்தாருங்கள்.
வலைஞன்
#19
Posted 26 July 2007 - 08:18 PM
உங்களின் தனிப்பட்ட விபரங்களை யாழ் கருத்துக்களம் ஊடாகவோ, யாழ் கருத்துக்கள தனிமடற் சேவையூடாக பகிர்ந்துகொள்வதால் வரும் விளைவுகளுக்கு யாழ் இணையம் எவ்வகையிலும் பொறுப்பேற்காது. உங்கள் பாதுகாப்புக்கு நீங்களே பொறுப்பு. இணையத்தைப் பொறுத்தவரை முதலில் நீங்களே உங்கள் தனிப்பட்ட பாதுகாப்பை உறுதிசெய்யவேண்டும்.
வலைஞன்
#20
Posted 21 August 2007 - 11:52 AM
தயவுசெய்து வேறு ஒரு தளத்திலிருந்து எடுத்து ஒரு ஆக்கத்தை யாழ் இணைய கருத்துக்களத்தில் இணைக்கும்போது, அவ்வாக்கம் பெறப்பட்ட இடத்தைக் குறிப்பிடுங்கள். முன்னரும் பலமுறை நாம் அறிவுறுத்தியிருக்கும். ஏனைய கருத்துக்கள உறவுகளும் முறைப்பாடு செய்திருக்கிறார்கள். எனவே, இனிவரும் காலங்களில் பெறப்பட்ட இடம் குறிப்பிடப்படாவிட்டால் அவ் ஆக்கத்தை நீக்க வேண்டி ஏற்படும் என்பதை நட்புடன் அறியத்தர விரும்புகிறோம்.
வலைஞன்














