Jump to content


Tamil Star News
Photo

ஈழத் தமிழரின் கண்ணீரை வைத்து கருணாநிதி அரசியல் நடத்த வேண்டாம்; தமிழருவி மணியன் கோரிக்கை


  • Please log in to reply
No replies to this topic

#1 யாழ்அன்பு

யாழ்அன்பு

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 2,171 posts
  • Gender:Male
  • Location:Switzerland
  • Interests:Music

Posted 16 August 2012 - 11:23 AM

Posted Imageஈழத் தமிழரின் கண்ணீரை வைத்து தி.மு.க தலைவர் கருணாநிதி அரசியல் நடத்த வேண்டாம் என காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
கருணாநிதி அண்மையில் நடத்திய டெசோ மாநாட்டால் ஈழத் தமிழர்களுக்கு எள்ளவு பயனும் ஏற்படப் போவதில்லை.
மாநில அரசின் தடுப்பு நடவடிக்கை இல்லாமல் இருந்திருந்தால், எந்தத் தடயமும் இல்லாமல் அந்த மாநாடு முடிந்திருக்கும்.ஜனகூட்டம் கூடும் உரிமையையும் கருத்துகளை வெளிப்படுத்தும் உரிமையையும் தடுப்பது ஜனநாயக அரசின் நேர்மையான செயல்பாடாக இருக்க முடியாது.என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
மாநாடு நடத்துவதைத் தடுக்க முயன்ற மாநில அரசின் செயல் கண்டிக்கத்தக்கது.டெசோ மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானத்தில் மத்திய அரசு ஈழத் தமிழர்களுக்கு அரசியல் வாழ்வாதார உரிமையைப் பெற்றுத் தர வேண்டும் எனத் தீர்மானம் போடப்பட்டுள்ளது.
மத்திய அரசில் தி.மு.க தற்போது இடம் பெற்றுள்ளது. செய்ய வேண்டிய இடத்தில் இருந்து கொண்டுச் செய்ய முடியாத மக்களைத் திரட்டி தீர்மானத்தை மட்டும் போடுவது கருணாநிதியின் கபட நாடகத்தைக்காட்டுகிறது. ஈழத் தமிழர்களின் கண்ணீரில் அரசியல் நடத்துவதை அவர் கைவிட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

www.irruppu.com

Advert



Advert


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]