Jump to content


Tamil Star News
Photo

உறுதி மொழிகளால் ஏமாற்றப்படும் முல்லைத்தீவு மக்கள்.


  • Please log in to reply
No replies to this topic

#1 chinnavan

chinnavan

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 1,915 posts
  • Gender:Male

Posted 27 July 2012 - 04:30 PM

வவுனியாவில் உள்ள இடம்பெயர்ந்தோருக்கான இடைத்தங்கல் முகாம்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் மூடப்பட்டு அங்குள்ள முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் அவர்களது சொந்த இடங்களில் குடியேற்றப்படுவார்கள் என பல உறுதிமொழிகள் வழங்கப்பட்டபோதும் ஆக்கபூர்வ நடவடிக்கைகள் எவையும் எடுக்கப்படாத நிலையே தொடர்வதாக மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் மடுத்தியம்பற்று, புதுக்குடியிருப்பு ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளில் 9 கிராமசேவகர் பிரிவுகளில் ஆயிரத்து 595 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் மீள்குடியேற்றப்படாத நிலையில் தொடர்ந்தும் வவுனியா செட்டிகுளம் முகாமில் தங்கவைக்க ப்பட்டிருக்கின்றனர்.
இதில் மடுத்தியம்பற்று பிரதேசத்தின் கீழ், கேப்பாபுலவு, முள்ளிவாய்கால் மேற்கு, முள்ளிவாயக்கால் கிழக்கு. அம்பலவன் பொக்கணை ஆகிய கிராமசேவகர் பிரிவுகளிலும், புதுக்குடியிருப்பு பிரதேசத்தின் கீழ் ஆனந்தபுரம், புதுக்குடியிருப்பு மேற்கு, கிழக்கு, மந்துவில் உள்ளிட்ட 5கிராமசேவகர் பிரிவுகளிலும் மக்கள் மீள்குடியேற்றப்படவில்லை.
இதேவேளை, இந்தப்பகுதிகளைச் சோந்த 206 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் கோம்பாவில் – திம்பில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இடைத்தங்கல் முகாமில் தற்காலிக இருப்பிடங்கள் வழங்கப்பட்டு தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், சிவநகர், முள்ளிவாய்கால் மேற்கு ஆகிய கிராமசேவகர் பிரிவுகளில் சிறு பகுதியில் 167 குடும்பங்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஏனைய பகுதிகளில் கண்ணிவெடியகற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்படும்போதும் அந்த பணிகள் துரிதமாக இடம்பெறவில்லை என மக்கள் சுட்டிக்காட்டியுள்ளதுடன், அரசாங்கம் தொடர்ந்தும் வாக்குறுதிகளை வழங்கிக் கொண்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.
http://thaaitamil.co...களால்-ஏமாற்றப்/

ஒரு மானுட சமூகத்தின் இயக்கத்தில் இலட்சியங்கள் தோற்றதில்லை" எனவே; எமது மக்களின் விடுதலைக்காய் எம் இறுதி மூச்சு உள்ளவரை உறுதியுடன் போராடுவோம்!

 http://dinaithal.com


Advert



Advert


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]