சுஷ்மா சுவராஜ் தலைமையில் எம்பிக்கள் குழு இன்று இலங்கை செல்கிறது. இந்த குழுவில், அதிமுகவை தொடர்ந்து திமுகவும் பங்கேற்கவில்லை என்று அறிவித்துள்ளது. இலங்கை செல்லும் எம்பிக்கள் குழுவில் திமுக, அதிமுக எம்.பிக்கள் பங்கேற்காதது குறித்து, தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
"இலங்கை செல்லும் எம்பிக்கள் குழுவிற்கு பாஜ கட்சியை சேர்ந்த சுஷ்மா சுவராஜ் தலைமை வகிக்கிறார். காங்கிரஸ், திரிணாமுல், சமாஜ்வாடி உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள் இடம்பெற்றுள்ளனர். திமுகவும் அதிமுகவும் அக்குழுவில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளது வருத்தமளிக்கிறது. இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
மொத்தம் 6 நாள் பயணத்தின் போது, தமிழர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகளை பார்வையிடுகிறார்கள். வீடு கட்டும் திட்டம், ரயில்வே பணிகள், துறைமுக மேம்பாட்டு பணிகளையும் பார்வையிடுகிறார்கள். இலங்கை எதிர்கட்சி தலைவர்கள், தமிழ் எம்பிக்கள் உள்பட பல்வேறு அமைப்பு பிரதிநிதிகளை சந்தித்து பேசுகிறார்கள். தமிழர் பகுதிகளில் செய்யப்பட்டுள்ள வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்கிறார்கள்."வ்வாறு ஞானதேசிகன் கூறினார்.
அதிமுகவும், திமுகவும் புறக்கணித்துள்ள நிலையில், சுஷ்மா சுவராஜ் தலைமையில் எம்.பி.க்கள் குழு 21ம் தேதி வரை 6 நாட்கள் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்கின்றனர். இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஸ மற்றும் அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகளை எம்.பி.க்கள் சந்தித்து பேசுவார்கள். இலங்கை செல்ல உள்ள தமிழக காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி.க்கள் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை டெல்லியில் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
http://www.seithy.co...&language=tamil















