Tuna மீனை பொரிப்பது எப்படி? உதவி தேவை..
#21
Posted 16 April 2012 - 01:46 PM

#22
Posted 16 April 2012 - 09:22 PM
MMR தடுப்பூசியில் உள்ள மேர்குரியே குழந்தைகளுக்கு 'ஒட்டிசம்' ஏற்படக் காரணம் என்று சர்ச்சைகள் எழுந்து வழக்கு நடந்து, (ரோனி பிளேயரின் ஆட்சிக் காலத்தில், அரசியல் காரணங்களும் இருந்ததால்) அது பிழையென நீதிமன்றத்தில் தீர்ப்பளித்தார்கள்.இதில் இருக்கும் மெர்குரி (mercury) தற்போது பெருகிவரும் ஆடிசம் (Autism) குறைபாட்டிற்கு காரணமாக இருக்கலாம் என்றும் ஒரு ரேசெர்ச் (Research) பேப்பரில் படித்துள்ளேன். தொடர்ந்தும் மீன்களை விரும்பி சாப்பிடுபவர்கள் சிறிய மீன்களை உண்பதே சிறந்தது. கூடிய அளவில் கால்சியமும் இவற்றுள் இருப்பது விரும்ப தக்கது.
குழந்தை பிறந்தவுடன், மழலைக்கு பாலூட்டும் தமிழ்த் தாய்மார்களுக்கு தினமும் சுறாமீன் சரக்குக் குழம்பு கொடுப்பார்கள். இது புலத்திலும் அதிகளவில் நடக்கின்றது. இதனால் ஏதும் பாதிப்புக்கள் ஏற்படுகின்றதா என கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
Edited by தப்பிலி, 16 April 2012 - 09:23 PM.
#23
Posted 17 April 2012 - 01:19 AM
"வாழ்க தமிழ் மலர்க தமிழீழம்"
#24
Posted 17 April 2012 - 01:56 AM
தப்பிலி, இலங்கையில் காணப்படும் சுறாக்கள், 'பால் சுறா' எனும் வகையைச் சேர்ந்தவை!MMR தடுப்பூசியில் உள்ள மேர்குரியே குழந்தைகளுக்கு 'ஒட்டிசம்' ஏற்படக் காரணம் என்று சர்ச்சைகள் எழுந்து வழக்கு நடந்து, (ரோனி பிளேயரின் ஆட்சிக் காலத்தில், அரசியல் காரணங்களும் இருந்ததால்) அது பிழையென நீதிமன்றத்தில் தீர்ப்பளித்தார்கள்.
குழந்தை பிறந்தவுடன், மழலைக்கு பாலூட்டும் தமிழ்த் தாய்மார்களுக்கு தினமும் சுறாமீன் சரக்குக் குழம்பு கொடுப்பார்கள். இது புலத்திலும் அதிகளவில் நடக்கின்றது. இதனால் ஏதும் பாதிப்புக்கள் ஏற்படுகின்றதா என கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
இவை உணவுச் சங்கிலியின் உச்சத்தில் இருப்பவை இல்லாதபடியால், மெர்குரி இவற்றின் உடலில் சேர்வதில்லை!
ஆனால், புலத்தில் விற்கும் சுறாக்கள், பெரியவை. இவற்றைத் துண்டுகளாக வெட்டி விற்கின்றார்கள்! இவற்றில் மெர்க்குரி, அதிகம் உண்டு!
இதனை இலங்கையர் மட்டுமே வாங்குவதனால், சிட்னி மீன் சந்தையில், வெள்ளை தமிழிலேயே 'சுறா' என்று கத்திக்கத்தி விற்பதைக் காணலாம்!
இதே போல பொன்னாங்காணியைப் போல வளரும், ஒரு நஞ்சுச் செடியை,(இதிலும் மெர்க்குரி அதிகம்) வீட்டில் வளர்த்து எமது மக்கள், சாப்பிடுவதைத் தற்செயலாகக் கண்டுபிடித்து, இவற்றை அழிக்க, அரசாங்கம் பெரும் பணம் செலவு செய்த சம்பவமும், சில வருடங்களின் முன்பு, இங்கு நடந்தது!
"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்"
http://www.punkayooran.com
#25
Posted 17 April 2012 - 02:56 AM
இதே போல பொன்னாங்காணியைப் போல வளரும், ஒரு நஞ்சுச் செடியை,(இதிலும் மெர்க்குரி அதிகம்) வீட்டில் வளர்த்து எமது மக்கள், சாப்பிடுவதைத் தற்செயலாகக் கண்டுபிடித்து, இவற்றை அழிக்க, அரசாங்கம் பெரும் பணம் செலவு செய்த சம்பவமும், சில வருடங்களின் முன்பு, இங்கு நடந்தது!
எனக்கும் ஈமெயிலில் இந்த விபரங்கள் முன்னம் வந்தது, இருந்தால் இதில் இணைத்துவிடுவீர்களா, பலருக்கு உபயோகமாக இருக்கும். இலைகளில் வித்தியாசம் இருக்கனும்
இனிமைத் தமிழ்மொழி எமது - எமக்கின்பந் தரும்படி வாய்த்தநல் அமுது!, கனியைப் பிழிந்திட்ட சாறு - எங்கள் கதியில் உயர்ந்திட யாம்பெற்ற பேறு! தனிமைச் சுவையுள்ள சொல்லை - எங்கள் தமிழினும் வேறெங்கும் யாங்கண்டதில்லை! - பாவேந்தர் பாரதிதாசன்
When we establish objectives which are achievable, little by little we go far! Our current habits and routines are the result of many years of experience. While it is not realistic to think we can change all of our bad habits and convert them into empowering routines tomorrow, taking small steps to Challenge Routine utilizes our mind to our benefit instead of to our detriment - Rob McBride














