
இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையினால் மார்ச் 28ஆம் திகதி முதல் மார்ச் 31ஆம் திகதி வரை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பிரமாண்டமாக நடத்தப்பட்ட ‘EXPO 2012′ கண்காட்சி எவ்விதத்தில் பயனற்றுப் போனதாக ஏற்றுமதி அபிவிருத்திச் சபை தெரிவிக்கின்றது.
ஊடகங்களில் பிரமாண்டமாக காண்பிக்கப்பட்ட போதிலும் இந்தக் கண்காட்சி நடத்தப்பட்டதன் ஊடாக இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கோ, ஏற்றுமதிக்கோ எவ்வித நன்மையும் கிடைக்கவில்லை.
இந்தக் காண்காட்சியைப் பார்வையிடுவதற்காக உலகின் பல நாடுகளிலிருந்து முதலீட்டாளர்கள் வருகைதந்ததாக அரச ஊடகங்கள் தொடர்ச்சியாக கூவி வந்தன.
எனினும், குறித்த நாடுகளிலுள்ள இலங்கை தூதரகங்கள், வழங்கிய இலவச விமானப் பயணச் சீட்டு, இலவச தங்குமிட வசதிகள் ஆகியன காரணமாகவே குறித்த முதலீட்டாளர்கள் கண்காட்சிக்கு வருகை தந்துள்ளனர்.
இவ்வாறு வருகை தந்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள், வர்த்தகர்கள், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் உரையை தெளிவாகக் கேட்க வேண்டும் என்பதற்காக குறித்த மண்டபத்திலிருந்த குளிரூட்டி இயந்திரயங்களையும் செயலிழக்கச் செய்துள்ளனர்.
இலங்கையில் தற்போது உஷ்ணமான காலநிலை நிலவுவதால் இதனைப் பொருத்துக் கொள்ள முடியாத வெளிநாட்டுப் பிரமுகர்களில் அநேகமானோர் இடைநடுவிலேயே தமது விடுதிகளுக்குச் சென்றுள்ளனர்.
இதன்பின்னர் வெளிநாட்டு வர்த்தகர்களுடன் இலங்கை ஏற்றுமதியாளர்கள் பல சந்தர்ப்பங்களில் கலந்துரையாடியுள்ளனர்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், தாம் இலங்கைக்கு வந்தது, தமது உற்பத்திகளை இலங்கைக்கு அனுப்புவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றதா என்பதை ஆராய்வதற்கே அன்றி இலங்கைப் பொருட்களை தருத்துவித்துக் கொள்வதற்கு அல்ல எனத் தெரிவித்துள்ளனர்.
கண்காட்சி முடிவில் ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் பிரதிநிதிகளைச் சந்தித்த வெளிநாட்டு பிரமுகர்கள், இலங்கையில் தமக்கு விடுமுறையைக் கழிப்பதற்கு வசதிகளை செய்துகொடுத்தற்கு நன்றி தெரிவித்துச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில், தேசத்திற்கு மகுடம் போன்றே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மதிப்பை அரசியல் ரீதியாக மட்டும் உயர்த்திக் கொள்வதற்கு மட்டுமே இந்த எக்ஸ்ஃபோ 2012 கண்காட்சி பயன்படுத்தப்பட்டதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.
http://www.saritham.com/?p=56308
















