சில சமயம் யார் எக்கேடு கெட்டு போனாலென்ன என்ரை அலுவலை மட்டும் பாத்துக்கொண்டிருப்பம். (இதுதான் என் மனைவி சொல்லும் வேதம்)
கடைசி சொல்ல வருவதை ஒருவித நாகரீகத்துடன் சொல்லாம் என்பதும் போலிருக்கும்,
எதுவாக இருந்தாலும் சொல்ல வேண்டியதை அந்த நேரம் சொல்லாமல் விட்டு ,அதுவும் சொல்லப்படவேண்டிய பாணியில் சொல்லாமல் விட்டு காலம் கடந்தபின் சொல்லாமல் வீட்டு விட்டோமே என்று அங்கலாய்ப்பதில் எதுவித பயனுமில்லை.
யாழில் பலர் என்னை விட வயதில் குறைந்தவர்கள் என்பதும், அதைவிட அரசியல் அனுபவத்தில் மிக மிக குறைந்தவர்கள் என்றும் எனக்கு தெரியும்.
நடைமுறையிலும் எந்தளவு செய்தார்கள்,யார் யாரை சந்தித்தார்கள், எவற்றை எல்லாம் வாசித்தார்கள் என்பது எனக்கு தெரியாது. ஆனால் தேசியம் என்ற ஒன்றிற்காக குருட்டுவழியில் எவர் பின்னும் போக தயாராக இருக்கின்றார்கள் என்பது மட்டும் தெளிவு.
தமிழ்நாட்டில் வெறும் நோட்டிஸ் ஓட்ட போகும் தொண்டனுக்கு அரசியல் பற்றியோ,சரி பிழை பற்றியோ அக்கறை இல்லை,கழக விசுவாசம் என்ற ஒன்றுமட்டுமே அவன் உயிர்,உடல்,உடமை அத்தனையும். இதை நன்கு உணர்ந்த கட்சி தலைமைகள் அவர்களை எப்படியெல்லாம் பாவிக்கின்றார்கள் என்பது உலகறிந்த விடயம்.(தீ குளிப்பு உட்பட).
இங்கு நான் அரசியல் எழுதமுதல் அரசின் கைக்கூலி,டக்கிலசின் எடுபிடி,முன்னாள் சொத்துப்பாசல் என்றெல்லாம் ஒரு சிலர் கூக்குரல் இடுகின்றார்கள்.நான் அப்படியாக இருந்தால் யாழில் வந்து குப்பை கொட்டாமல் கியூபாவில் கடற்கரை மணலில் படுத்திருப்பேன்.
பலருக்கு கோவம் இவ்வளவு தியாகங்கள் செய்த புலிகளை வசை பாடுவதா என்று ?.நியாயம் தான்.எனது கோவம் இவ்வளவு தியாகங்களும் வீணாகி விட்டதே என்றுதான்.
திரும்ப திரும்ப இன்று கூட்டமைப்பும் இதைத்தான் சொல்கின்றது “கிடைத்த எத்தனையோ சந்தர்பங்களை தவற விட்டு விட்டோம்’ என்று.
புலிகள் பிழையே விடவில்லை என்பவர்களுடன் கதைத்து பிரயோசனம் இல்லை,புலிகளும் பிழை விட்டார்கள் என்பவர்கள் தான் பெரும்பான்மை,அவர்களிடம் ஒரு கேள்வி? அப்படியாயின் அவர்கள் பிழை விடும் போது அவற்றை சொன்னீர்களா? அல்லது அவற்றை சுட்டி காட்டினிர்களா? சொல்லுங்கள் பார்ப்பம்.
புலிகள் ஏகப்பிரதிநிதிகளாகி மற்றைய இயக்கங்களை விட மலையளவு வளர்ந்து உலகம் வியக்கும் இராணுவ அமைப்பாக வளர்ந்து உண்மை,ஆனால் அரசியல் ரீதியில் ஏதாவது ஒரு நாட்டினாவது அங்கீகாரத்தை பெற்றதா என்றால் இல்லை,நாடு விடுதலை பெற முதலே A.N.C பல நாடுகளில் இராஜதந்திர அங்கீகாரத்துடன் அலுவலகங்கள் வைத்திருந்தது.
புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து இன்று ஓடித்திரிபவர்கள் இந்த இருபது வருடமாக என்னை செய்தார்கள்.அந்த அந்த நாடுகளில் புலிகளை தடை செய்ய வழிவகுத்ததை விட வேறொன்றுமில்லை.
சரி நடந்து முடிந்துவிட்டது இனியாவது ஒன்றாக எதுவும் நாட்டில் இருப்பவர்களுடன் சேர்ந்து செய்யலாம் என்றால்?
தலைவர் இருக்கின்றார் வருவார் என ஒரு கூட்டம்,
போராட்டம் மவுனிக்கபட்டது தொடரும் என்று இன்னொரு கூட்டம்
நாடு கடந்த அரசு என்று ஒன்று ,தேசிய பேரவை என்று ஒன்று ,இவர்கள் யாராவது கூட்டமைப்புடன் தொடர்பிலா என்றால் அதற்கும் பதிலில்லை.
சேர்த்த பணம்,கணக்கு,முதலீடுகள் எல்லோரும் கையை விரிக்கின்றார்கள்.
அதை விட நாட்டில் அரசுடன் நின்று அரசியல் செய்தவர்களெல்லாம் புலம் பெயர் தலைமை பதவிக்கு அடிபடுகின்றார்கள்.
இவர்கள் எல்லோருமே புலிகளின் பெயரை பாவித்து புலிகள் விட்டு போன தலைமையையும் அதிகாரத்தையும் புலம் பெயர்ந்த நாடுகளில் கைப்பற்ற பார்க்கின்றார்களே ஒழிய யாரும் நாட்டில் இருக்கும் மக்களுக்காக போராடுபவர்களாக தெரியவில்லை.
புலம் பெயர்ந்தவர்களும் தங்கள் தங்கள் அலுவல்களை பார்த்துக்கொண்டு ஏதாவது ஒரு அமைப்பிற்கு உதவினால காணும் என்ற மனப்பான்மையில் இருந்தால் சர்வதேசம் எம்மில் கவனம் செலுத்தும் இந்நேரம் நாம் பிரிந்து அடிபட்டால், எம்மால் அடுத்து ஒரு அடி கூடதானும் வைக்க முடியாமல் போய்விடும்.
எமக்கும் நாம் என்ன செய்கின்றோம் என்பதைவிட டக்கிளஸ்,கருணா ,பிள்ளையான் ,கக்கீம் என்ன செய்கின்றார்கள் என்பதில் தான் அக்கறை.அவர்களை திட்டி தீர்ப்பதில் கொஞ்ச நேரம் நாட்டிற்காக செலவிட்டால் கொஞ்சமாவது பிரயோசனமாக இருக்கும்.
அரசியலில் பலவருடம் இருந்தவன் ,பலரை சந்தித்தவன் என்ற ரீதியில் சொல்லுகின்றேன் நாம் சரியான பாதையில் சிறிதளவும் போகவில்லை என்பதே உண்மை,தேசிய போர்வைக்குள் புகுந்து குளிர் காய்பவர்களுக்கு பின்னால் நின்றால் ஆயுளுக்கும் நீங்கள் நடுறோட்டில் தான்.
Edited by arjun, 06 April 2012 - 12:40 AM.
















