அமெ. பொருளாதாரத் தடையால் தேயிலை ஏற்றுமதியில் பாதிப்பா?; ஆராய்கிறது இலங்கை அரசு
ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடைகளால் நாட்டின் தேயிலைக் கைத்தொழிலுக்கு ஏற்படக்கூடிய தாக்கங்களை இயன்றளவு குறைக்கும் வழிவகைகளை இலங்கையில் அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
இலங்கையின் தேயிலையின் இரண்டாவது பெரிய கொள்வனவாளராக உள்ள ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளால் குறிப்பிடத்தக்க தாக்கம் ஏதும் இல்லை என கூறப்படுகின்றபோதும் பெயர் குறிப்பிட விரும்பாத இலங்கைத் தேயிலை சபையின் உயர் அதிகாரி ஒருவர், இலங்கைத் தேயிலை வர்த்தகத்தின் எதிர்காலம் நிச்சயமற்றதாக உள்ளது என குறிப்பிட்டார்.
இதன் காரணமாக எது நடந்தாலும் சமாளிக்கும் வகையில் மூலோபாயங்களை வகுப்பதற்குத் தொடர்புடைய பங்குதாரர்களுடன் பேச்சுகள் நடந்துவருவதாக அவர் கூறினார்.தற்போது கொடுப்பனவுகள் அரச வங்கிகள் ஊடாக செய்யப்படுகின்றன. இப்போது பிரச்சினை ஏதும் இல்லை. நல்ல விளைவும் கிடைக்கின்றது. இந்த வாரமும் நாம் தேயிலை அனுப்பினோம். ஆனால் அடுத்து என்ன நடக்கும் என எமக்கு தெரியாது. எதற்கும் எச்சரிக்கையாக இருப்பதே நல்லது என அவர் கூறினார்.
ஈரான் வருடாந்தம் 45 மில்லியன் கிலோகிராம் தேயிலையை இலங்கையிலிருந்து கொள்வனவு செய்கின்றது. இதன் மொத்த பெறுமதி 200 மில்லியன் அமெரிக்க டொலர் ஆகும். அண்மையில் மத்திய கிழக்கில் ஏற்பட்ட கிளர்ச்சிகள் காரணமாக இலங்கையின் தேயிலைக் கைத்தொழில் பின்னடைந்தது.
தற்போது தேயிலைச் கைத்தொழில் மீது தாக்கம் ஏதும் இல்லை. ஆயினும் இவ்வருட நடுப்பகுதியில் நிலைமை பாதகமாகலாம் என இலங்கை தேயிலை ஏற்றுமதியாளர் சங்கத்தை சேர்ந்த நிராஜ் டி மெல் கூறினார்.
http://184.107.230.1...200937804545003
Edited by nunavilan, 04 April 2012 - 06:12 PM.














