Jump to content


Tamil Star News
Photo

ஒஸ்றேலியாவில் அமெரிக்க கடற்படையினர் தரையிறங்கினர்! கோபத்தில் சீனா


  • Please log in to reply
3 replies to this topic

#1 அகரன்

அகரன்

    உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 244 posts

Posted 04 April 2012 - 11:46 AM

Posted Image

http://naathamnews.com/?p=4828
சீனாவினைச் சுற்றிவளைக்கும் நோக்கம் கொண்ட அமெரிக்காவின் ஆசிய-பசுபிக் பிராந்திய பாதுகாப்பு பொறிமுறையின் ஒர் அங்கமாக ஒஸ்திரேலியாவின் வடபகுதி துறைமுகமான டார்வினை அமெரிக்காவின் ஒரு தொகுதி கடற்படையினர் சென்றடைந்துள்ளனர்.

ஒஸ்திரேலியாவுக்கு அமெரிக்க அரசுத் தலைவர் பராக் ஒபாமா கடந்த ஆண்டு மேற்கொண்ட பயணத்தின்போது ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் வழியே தற்போது அமெரிக்கப் படைகள் ஒஸ்றேலியாவில் கால்பதித்துள்ளனர்.

2500 வான்-கடல் சிறப்பு அதிரடிப்படையினர் ஒஸ்றேலியாவில் முகமாமிடவுள்ள நிலையில் இதன் முதற்கட்டமாக 200 போ இன்று ஒஸ்றேலியாவினைச் சென்றடைந்துள்ளனர்.

ஒஸ்திரேலியாவுக்கான அமெரிக்கத் தூதர் ஜெப்ரி ப்ளீச், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் அமைதியையும் நிலைத்தன்மையையும் உருவாக்க அமெரிக்கா தொடர்ந்து பாடுபடும் என தெரிவித்துள்ளதோடு , சர்வதேச கடல்வழி வர்த்தகத்தில் முக்கியப் பங்காற்றும் இந்தியப் பெருங்கடல், பசிபிக் பெருங்கடல் மற்றும் திமோர் கடற்பரப்பை எளிதில் எட்டக் கூடியவகையில் டார்வின் துறைமுகம் அமைந்திருப்பது சிறப்புக்குரியது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எமது கடற்படையினர் இப்பிராந்தியத்தில் எங்கும் பயிற்சி பெறுவதற்கு எமக்குக் கிடைத்திருக்கக் கூடிய அற்புதமான வாய்ப்பு என அமெரிக்காவின் பசிபிக் பிராந்திய கடற்படை தளபதி டுயானே திசென் தெரிவித்துள்ளார்.

வியட்நாம் போருக்குப் பிறகு இந்தப் பிராந்தியத்தில் அமெரிக்கா மேற்கொண்டிருக்கும் மிகப்பெரிய முதலாவது ராணுவ நடவடிக்கை இதுவென அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

Advert

#2 மின்னல்

மின்னல்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 1,761 posts
  • Gender:Male
  • Location:முகில்களுக்குள்

Posted 04 April 2012 - 12:01 PM

தமிழர்களின் கனவை நிறைவேற்றினால்திருகோணமலைத் துறைமுகத்தில் கூட இவ்வாறான தளத்தை அமெரிக்கா அமைத்துக் கொள்ளலாம்.
Posted ImagePosted Image
----------------------------------------------------------------------------------------------------------------------
தமிழரின் தாயகம் தமிழீழத் தாயகம்

#3 akootha

akootha

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 27,339 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 04 April 2012 - 01:23 PM

சீனாவின் நகர்வுகள் அவதானிக்கப்படவேண்டும். குறிப்பாக இலங்கையில் தனது கரங்களை பலப்படுத்துமா இல்லையா என்பதை.

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.


#4 தமிழரசு

தமிழரசு

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 15,410 posts
  • Gender:Male
  • Location:பிரித்தானியா
  • Interests:தமிழ்மக்களுக்காக ஒரு நாடு ஒன்றை உருவாக்க உறவுகளுடன் இணைத்து செயல்படுவது .

Posted 04 April 2012 - 02:12 PM

Posted Image

ஒஸ்றேலியாவில் அமெரிக்க கடற்படையினர் தரையிறங்கினர்!

கோபத்தில் சீனா!!
மீண்டும் வருவான்........! ஒருவன் மீண்டுவருவான்.......!! எமது வேலன், கரிகாலன், தமிழர் தோழன், அவன் கடவுள் மாதிரி ! இருக்கிறான் என்றாலும் இல்லைதான் என்றாலும் இருக்கும் அவன்மீது பயமும், பக்தியும் !! சூழ் உரைப்பான் நடைபெறும் என்னும் ஒரு சூரா சம்ஹாரம் !!! 
 
 
 




Advert
Advert


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]