Forums

 1. யாழ் இனிது [வருக வருக]

  1. யாழ் அரிச்சுவடி

   தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு

   32,380
   posts
  2. யாழ் முரசம்

   கள விதிமுறைகள் | அறிவித்தல்கள் | உதவிக்குறிப்புகள்

   3,837
   posts
  3. யாழ் உறவோசை

   குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்

   15,193
   posts
 2. செம்பாலை [செய்திக்களம்]

  1. 68,503
   posts
  2. உலக நடப்பு

   இந்தியச் செய்திகள் | உலகச் செய்திகள் | காலநிலை | நாணயமாற்று

   20,391
   posts
  3. நிகழ்வும் அகழ்வும்

   செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

   10,568
   posts
  4. செய்தி திரட்டி

   விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

   5,825
   posts
 3. படுமலைபாலை [தமிழ்க்களம்]

  1. துளித் துளியாய்

   தாயக மக்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கு உதவுதல்/உதவி கோரல்கள்

   1,459
   posts
  2. எங்கள் மண்

   தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

   10,369
   posts
  3. வாழும் புலம்

   புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

   31,150
   posts
  4. பொங்கு தமிழ்

   தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு

   11,067
   posts
  5. தமிழும் நயமும்

   இலக்கணம் | இலக்கியம் | கலைச்சொற்கள் | பழந்தமிழ்க் காப்பியங்கள்

   4,660
   posts
  6. உறவாடும் ஊடகம்

   நாளிதழ்கள் | வானொலிகள் | தொலைக்காட்சிகள் | இணையத்தளங்கள்

   3,378
   posts
  7. மாவீரர் நினைவு

   மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்

   13,725
   posts
 4. செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]

  1. கவிதைப் பூங்காடு

   கவிதைகள் | பாடல் வரிகள்

   46,140
   posts
  2. 33,022
   posts
  3. வேரும் விழுதும்

   கலைகள் | கலைஞர்கள்

   2,719
   posts
  4. தென்னங்கீற்று

   குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்

   5,171
   posts
  5. நூற்றோட்டம்

   நூல்கள் | அறிமுகம் | விமர்சனம்

   3,354
   posts
 5. அரும்பாலை [இளைப்பாறுங்களம்]

  1. வண்ணத் திரை

   சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

   17,916
   posts
  2. சிரிப்போம் சிறப்போம்

   நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

   25,901
   posts
  3. விளையாட்டுத் திடல்

   விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

   18,637
   posts
  4. இனிய பொழுது

   மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

   50,585
   posts
 6. கோடிப்பாலை [அறிவியற்களம்]

  1. கணினி வளாகம்

   கணினி | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

   4,073
   posts
  2. வலையில் உலகம்

   இணையம் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

   2,630
   posts
  3. தொழில் நுட்பம்

   தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

   2,565
   posts
  4. அறிவுத் தடாகம்

   அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி

   6,455
   posts
 7. விளரிப்பாலை [சிந்தனைக்களம்]

  1. அரசியல் அலசல்

   அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

   2,630
   posts
  2. மெய்யெனப் படுவது

   மெய்யியல் | நற்சிந்தனைகள் | இசங்கள் | பகுத்தறிவு

   9,999
   posts
  3. சமூகச் சாளரம்

   சமூகம் | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள்

   18,821
   posts
  4. பேசாப் பொருள்

   பேசாப் பொருளைப் பேச நாம் துணிந்தோம்

   4,580
   posts
 8. மேற்செம்பாலை [சிறப்புக்களம்]

  1. நாவூற வாயூற

   சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்

   11,470
   posts
  2. நலமோடு நாம் வாழ

   உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்

   10,655
   posts
  3. நிகழ்தல் அறிதல்

   நிகழ்வுகள் | கொண்டாட்டங்கள் | விழாக்கள் | சந்திப்புகள்

   2,378
   posts
  4. வாழிய வாழியவே

   வாழ்த்துக்கள் | திருநாட்கள் | பாராட்டுக்கள்

   18,886
   posts
  5. துயர் பகிர்வோம்

   இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்

   6,087
   posts
  6. தேடலும் தெளிவும்

   பொதுவெளியில் நம்முன் எழுகின்ற கேள்விகளும் அதற்கான பதில்களும் இங்கே பதியப்படலாம்.

   69
   posts
 9. யாழ் உறவுகள்

  1. யாழ் ஆடுகளம்

   கள உறுப்பினர்களுக்கான போட்டிகள் | பட்டிமன்றம் | விளையாட்டு

   53,837
   posts
  2. யாழ் திரைகடலோடி

   பிறமொழி ஆக்கங்கள் | பயனுள்ள ஆக்கங்கள்

   4,670
   posts
  3. யாழ் தரவிறக்கம்

   மென்பொருள் தரவிறக்கங்கள் | இணைப்புகள்

   • No posts here yet
 10. யாழ் களஞ்சியம்

  1. புதிய கருத்துக்கள்   (335,600 visits to this link)

   இறுதியாக பதியப்பட்ட கருத்துக்களைப் பார்வையிட

  2. முன்னைய களம் 1   (11,201 visits to this link)

   யாழ் இணையத்தின் ஆரம்ப கால களம் இது. 17000த்திற்கு மேற்பட்ட பதிவுகளுடன், பாமினி எழுத்துரு அமைப்பில் உள்ளது.

  3. முன்னைய களம் 2   (11,598 visits to this link)

   யாழ் இணையத்தின் 2வது களம். 180000 கருத்துக்களுடன், தற்போது பார்வைக்கு மட்டுமே உள்ளது

  4. 107
   posts
 • Topics

 • Posts

  • காந்தள் பூக்கும் காலம்
   நேற்றைய இரவு முழுதும்
   அழுதபடியிருந்தவர்களை
   கண்டு தாளாது போரிட சென்றவர்கள்
   வெற்றியோடு திரும்பினர் மதியம் நமது தோழனென நம்பியிருந்த பகல்
   பெரும்பூதமென மீண்டுமொரு காரிருளை
   வாரியிரைத்து போனது வடக்கே அமைதியாக இரவும், பகலென வேடமிட்ட நிசியும்
   பிணைந்த புணர்வில் பிறந்த
   குழந்தை பதிமூன்று ஆணா? பெண்ணா?
   என அறிவதில் கழிந்தது காலம் இடையில் கீரிடத்தை பறிக்க
   சிந்தனையில்லா கோமகனை கொன்று
   நம்மை பழிகடாவாக்கின பூதகணங்கள் விதியென நொந்தும் வெயிலென
   காய்ந்தும் புயலென வீழ்ந்திடாமலும்
   பூத்தன கார்த்திகை பூக்கள் சூல்கொண்ட மகவு தாயை பிரசவிக்கமுன்
   விழித்துக்கொண்ட இருளின் பிள்ளைகள்
   கைகுலுக்கிக் கொண்ட நாட்களில்
   சிவப்பு கழுத்துப்பட்டையுடைய கொலைகார
   மிருகத்தை போதிமரத்தடியில் வளர்த்தனர் அதன்பின்பொரு கோடை காலத்தில் நாம் தோற்றவராயிருந்தோம் அம்மணமாயிருந்தோம் பிணமாயிருந்தோம் இன்று சங்ககராவின் சதத்தை நீயும்
   கோலியின் சதத்தை நானும்
   கொண்டாடும் நிர்பந்தத்திலிருக்கிறோம்... நமது நாட்கள் நகர்வதேயில்லையென
   கவலையுறாதே "காந்தள் பூக்கள் கார்த்திகையில்
   மலர்வது மாவீரர்களுக்கு மரியாதை
   செய்யும் பொருட்டே" ~ ராஜன் விஷ்வா நன்றி முகடு இதழ், பாரிஸ்    
  • இளமை புதுமை பல்சுவை
   புரூஸ் லீயைப் பற்றிய இந்த 7 உண்மைகள் உங்களுக்குத் தெரியுமா?   இளமைப் பருவத்தில் அனைத்து உலக இளைஞர்களின் ஆதர்சமாக இருக்கும் புருஸ் லீயின் பிறந்தநாள் இன்று. இன்றும் நாம் புருஸ் லீயைக் கொண்டாட பின்வரும் காரணங்கள் சின்ன சாம்பிள்! 

   1. புரூஸ்லி தன்னுடைய டீன் வயதில்  'Tigers Of Junction Street' என்ற பெயரில் இயங்கிவந்த ஹாங்காங்கின் கேங்ஸ்டர் குழுவில் இணைந்தார். எங்கே சண்டை என்றாலும் சும்மா தேடித் தேடிவந்து இந்தக்  குழு உறுப்பினர்களைத்தான் மொத்தியிருக்கிறது மற்ற பெரிய சைஸ் குழுக்கள். இதுக்கும் மேலயும் பாடி தாங்காது என்ற உண்மை உறைத்த பிறகுதான், தன் தாயிடம் சொல்லி கராத்தே வகுப்பில் சேர்ந்திருக்கிறார்.

   2. கத்தி, சைக்கிள் செயின் சகிதம் வளையவந்த லீ, ஒருசமயம் லோக்கல் கவுன்சிலரின் மகனை பெண்டு நிமிர்த்திவிட்டார். தொடர்ச்சியாக நிறைய வம்புகளில் மாட்டிவந்த லீயை அமெரிக்கா அனுப்பிவிட பெற்றோர் முடிவு செய்தனர். அவர்மீதான சில சில்லறை வழக்குகளுக்காக போலீசாருக்கு 'கப்பம்' கட்டி வெற்றிகரமாக விசாவை சேஸ் செய்தனர்.

   3. புரூஸ்லி  சண்டை போட்டு பார்த்திருப்பீங்க, பஞ்ச் பண்ணி பார்த்திருப்பீங்க, டான்ஸ் ஆடி பார்த்திருக்கீங்களா... பார்த்திருக்கீங்களா?  கராத்தே வகுப்புக்குச் சென்ற அதேநேரத்தில், 'காதலியை கரெக்ட் பண்ண உதவும்’ என்ற ஒரே காரணத்துக்காக புரூஸ் லி 'சா சா' நடனமும் கற்றிருக்கிறார். 18- வயதில் அவர் ஹாங்காங்கின்  'சா சா' சாம்பியன். அமெரிக்காவுக்கு வண்டி கட்டியபோது அவரிடம் இருந்தது 100 டாலர்கள் மட்டுமே. உடன் பயணித்த பயணிகள் சிலருக்கு சா சா நடன உத்திகளை சொல்லிக்கொடுத்து ஃப்ளைட் தரைதொடும் முன்னே சில எக்ஸ்ட்ரா டாலர்களை சம்பாதித்தார்.
    
      
     4. அமீர்கானை அறைந்தால் ஒரு லட்சம், அந்த சவால் விட்டவரை அறைந்தால் பதிலுக்கு ஒரு லட்சம் என இங்கே கும்மியடிப்பதுப் போல ஒரு சவால் புரூஸ் லீக்கும் வந்தது. சீனர்களுக்கு மட்டுமே உரிய குங்ஃபூவை அமெரிக்கர்களுக்கு கற்றுத் தந்த புரூஸ் லீயிடம் சீன பழமைவாத குரூப் ஒன்று உரண்டை இழுத்தது. தங்களுடன் புரூஸ் லீ சண்டையிட்டு தோற்றால், சீனர்களைத் தவிர வேறு யாருக்கும் குங்ஃபூவை கற்றுத்தரக்கூடாது என்பதுதான் போட்டியின் முடிவு. போட்டிக்கான நாள் குறித்தனர். களத்தில் லீயும் எதிராளியும். போட்டி ஆரம்பிப்பதற்கான நேரம் தோராயமாக‌ காலை பத்து மணி என்று வைத்துகொள்வோமே. பத்து மணி மூன்று நிமிடங்களில் அடுத்தடுத்த தன்னுடைய குங்ஃபூ வகுப்புகளுக்கு அமெரிக்ககர்களிடம் சந்தா வசூலிக்க ஆரம்பித்தார் லீ. விளம்பர இடைவேளைக்குக்கூட நேரம் தராமல் போட்டியை முடித்துவிட்டார் லீ.

   5. 'உத்யோகம் புருஷ லட்சணம்' என்ற பழமொழிக்கு இணையான சீன பழமொழி ஒன்றையும், மேலும் சில புத்திமதிகளையும் சொல்லித்தான் லீயை வேலைத்தேடச்சொல்லி அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தனர் பெற்றோர். லீ பார்த்த வேலை என்ன தெரியுமா? அமெரிக்காவின் பெரும் பணக்காரர்கள், நடிகர்கள் என பலருக்கும் குங்ஃபூவை சொல்லிக் கொடுத்தார். 'உத்யோகம் புருஷ லட்சணம்' என்பது 'உதையோகம் புரூஸ் லீ லட்சணமா'கிற அளவுக்கு பிரபலமானார்.

   6. 'என்டர் த ட்ராகன்' படத்தில் லீ ஹீரோ. 'யெஸ் பாஸ்' என்று சொல்லி ஹீரோவிடம் அடிவாங்கும் ஸ்டன்ட் ஆர்ட்டிஸ்ட் கேரக்டரில் ஜாக்கி சான். ஒரு சண்டை காட்சியில் கையில் இருக்கும் தடியால் சானின் முகத்தில் விழுகிறது ஒரு கும்மாங்குத்து. 'கல்லானாலும் திருச்செந்தூரில் கல்லாவேன், அது பஞ்ச்சானாலும் புரூஸ் லீ கையால் பஞ்சராவேன்' என்று லீ புகழ் பாடிச்சென்றார் சான்.

   7. புரூஸ் லி இறந்தபோது 'கேம் ஆஃப் டெத்' என்ற படம் நிறைவடையாமல் இருந்தது. லீயின் பழைய படங்களில் இருந்து சில காட்சிகள், நிறைய டூப்கள் என ஒருவழியாக படத்தை எடுத்து முடித்து வெளியிட்டபோது வாங்கிக்கட்டிக்கொண்டது தயாரிப்பாளர் தரப்பு.  காரணம், புரூஸ் லியின் இறுதி ஊர்வலத்தில் இடம்பெற்ற சில உண்மை காட்சிகளையும் படத்தில் இணைத்து வசூல் செய்யப் பார்த்ததால்!

   உலகம் எப்போதும் மிஸ் செய்யும் நபர்கள் பட்டியலில் புரூஸ் லீக்கு எப்போதும் இடம் இருக்கும்! http://www.vikatan.com/news/miscellaneous/55680.art
  • இந்தியா எதிர் தென் ஆபிரிக்கா டெஸ்ட் போட்டி தொடர் செய்திகள்
   'கில்லி’ அஷ்வின், 'பாகுபலி’ கோலி, ‘சிங்கம்’ ஜடேஜா! - இந்தியா ஜெயித்தது இப்படித்தான்!   உலகின் நம்பர் ஒன் அணியான தென்னாப்பிரிக்காவை, கோலி தலைமையிலான இந்திய அணி வீழ்த்தி, டெஸ்ட் தொடரை வெல்லும் என இரண்டு மாதங்களுக்கு முன்னர் சொல்லியிருந்தால் பலரும் வாய்விட்டுச் சிரித்திருப்பார்கள். சுமார் ஒரு வருடத்துக்கும் மேலாக பல இடங்களில், பல அணிகளிடம் அடிவாங்கி டெஸ்ட் தரவரிசையில் ஏழாம் இடத்துக்கு தள்ளப்பட்டு இருந்தது இந்திய அணி. இந்நிலையில்தான் விராட் கோலி தலைமையில் இலங்கையில் டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்தது. எனினும், தீவிர ரசிகர்கள் இவ்வெற்றியை பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. தென்னாப்பிரிக்க அணியிடம் எலி போல மாட்டிக் கொண்டு இந்தியா திணறும் என்றே பலரும் சொன்னார்கள். ஆனால், இன்று நடந்ததெல்லாம் தலைகீழ். தோனி தலைமையில் இந்திய அணி டி20, ஒருதின தொடர்களை இழக்க, யாருமே எதிர்ப்பார்க்காத வகையில் அபாரமாக டெஸ்ட் தொடரை வென்றிருக்கிறது இந்திய அணி.    
   ஒன்பது ஆண்டு காலமாக அயல்மண்ணில் எந்த அணியிடமும் தோற்காத அணி என பெருமையுடன் வளைய வந்த தென்னாப்பிரிக்காவை மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் சேர்த்து ஆறே நாளில் நசுக்கி, வெற்றி மகுடத்தை சூடி, பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது இந்திய அணி. இந்தியாவின் அசத்தல் வெற்றிக்குக் காரணம் என்ன?   1. 'அஷ்வினே' ஆயுதம்

   அறிவே ஆயுதம் எனப் பெரியோர்கள் சொல்வார்கள். இந்திய அணியைப் பொறுத்தவரையில் 'அஷ்வினே' ஆயுதம். அஷ்வினின் சிறப்பு என்ன தெரியுமா? தடாலடியாக முடிவை மாற்றி சமயோசிதமாக செயல்படுவது தான். இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 55 விக்கெட்டுகள் எடுத்து உலகின் நம்பர் 1 பவுலராக திகழ்கிறார் அஷ்வின். பல தடைகளைத் தாண்டிதான் இச்சிறப்பைப் பெற்றுள்ளார். 'ஒரே சமூகத்தை சேர்ந்தவர் மட்டுமே தமிழக அணியில் இடம் பிடிக்க முடியும், தோனிக்கு நண்பன் அதனால் தான் அஷ்வின் அணியில் இருக்கிறார். அஷ்வின் சி.எஸ்.கே கோட்டா'  என பல சர்ச்சைகள் அஷ்வினை சுற்றினாலும், இன்று உலகத்துக்கே தான் எப்படிப்பட்ட சிறந்த பவுலர் என்பதை நிரூபித்து விட்டார்.

   இலங்கையின் ஜாம்பவான் பேட்ஸ்மேனான சங்கக்காராவை அவர்கள் மண்ணிலேயே வைத்து நான்கு இன்னிங்சிலும் அவுட் ஆக்கினார் அஷ்வின். இதற்கு மேல் அஷ்வின் சிறந்த பவுலர் என்பதை எங்கு நிரூபிக்க வேண்டும்? சுழலுக்குச் சாதகமான மைதானங்களில் அஷ்வின் பந்துகளை எதிர்கொள்வது எந்தவொரு பேட்ஸ்மேனுக்கும் மிகப்பெரிய சவால். டெஸ்ட் போட்டியில் டி வில்லியர்ஸ் விக்கெட்டை சாய்க்கவில்லை எனப் பலரும் குறைப்பட்டு கொண்டிருந்த நிலையில், இத்தொடரில் அதையும் செய்து காட்டிவிட்டார் அஷ்வின். அவர் தற்போது உச்சகட்ட ஃபார்மில் இருக்கிறார். இதே நிலையில் அவர் இருந்தால் முரளிதரன், வார்னே ஆகியோரின் சாதனைகளையெல்லாம் தூக்கி சாப்பிட்டு உலகின் ஆல் டைம் நம்பர் 1 ஸ்பின்னர் என்ற அந்தஸ்தை எளிதில் எட்டிப் பிடிக்கலாம்! 2. 'அஞ்சான்' விராட் கோலி

   இந்தியாவின் இந்த வெற்றிக்கு விராட் கோலியின் பங்கு மகத்தானது. ஒரு பேட்ஸ்மேனாக இந்த தொடரில் சிறப்பாக  விளையாடவில்லை என்றாலும் கூட, கேப்டன் பொறுப்பில் மிகச்சிறப்பாக  செயல்பட்டார். இலங்கை தொடரை விராட் கோலி வென்றாலும் அவருக்கு தோனியை போன்ற பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. பலரும் தென்னாப்பிரிக்கா தொடரைக் கவனிப்போம் என்றனர். தென்னாப்பிரிக்காவை விராட் கோலியை போல வேற எந்தவொரு கேப்டனும் கலங்க வைத்திருக்க முடியாது. டெஸ்ட் போட்டியில் கூட ஒவ்வொரு ஓவரிலும், ஒவ்வொரு பந்திலும் கவனம் செலுத்தினார் விராட் கோலி. பீல்டிங்கில் கிடுக்கிப்பிடி போட்டார்.

   தனது முடிவு தவறு என தெரிந்தால், வலுக்கட்டயமாக தான் எடுத்த முடிவு சரி என நிரூபிக்க முயலாமல் முடிவுகளை மாற்றிக்கொண்டே இருந்தார். குறிப்பாக, இந்த டெஸ்டில் இரண்டாவது நாளில் முதல் ஓவரையே அஷ்வினுக்கு கொடுத்தது 'மாஸ்டர் ஸ்ட்ரோக்'. டுபிலசிஸ், அம்லா இருவரும் விடாமல் போராட, அவர்களுக்கு சிறிதும் ரன்கள் சேர்க்க இடம்கொடுக்காமல், அவர்களை ஒரு விதமான அழுத்தத்துக்கு உட்படுத்தினார். சிறந்த பவுலிங், சிறந்த ஃபீல்டிங் ஆகியவைதான் வெற்றிக்கு உதவும் என ரகசியம் உடைக்கிறார் விராட் கோலி.

   ஒவ்வொரு பிட்சுக்கும் ஏற்றார்போல பவுலிங் டிப்பார்ட்மெண்டை தேர்வு செய்வதில் மெனக்கெடுகிறார் கோலி. 'கிரிக்கெட் விளையாடுவதே வெற்றி பெறுவதற்குதான், டெஸ்ட் போட்டிகளில் சதமடிப்பதும், இரட்டைச் சதமடித்து, சாதனை செய்வதும் முக்கியமல்ல, போட்டியை வெல்ல வேண்டும்’ என உறுதியாகச் சொல்கிறார் விராட் கோலி. சொன்னதைச் செய்தும் காட்டியிருக்கிறார். ஆக, இந்திய டெஸ்ட் கேப்டன்களில் சிறந்த கேப்டன் வரிசையில் விராட் கோலி இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கலாம்.
    
   3. சாதகமான பிட்ச்

   இந்த தொடரில் இந்திய பிட்ச் பற்றி முன்னாள் வீரர்கள், இந்நாள் வீரர்கள், மீடியாக்கள், ரசிகர்கள் எனப் பலரும் பல விதமாக விமர்சனம் செய்து வருகிறார்கள். இந்திய பிட்ச்கள் சாதகமானவை என்பது உண்மைதான். ஆனால், அவை இந்திய அணிக்கோ, தென்னாப்பிரிக்க அணிக்கோ சாதகமான பிட்ச்கள் கிடையாது. இரு அணிகளுக்கும் சூழலுக்குச் சாதகமான, பேட்டிங் செய்ய கடினமான பிட்ச்கள்.

   ஒவ்வொரு நாடும் அந்த நாட்டு வீரர்கள் எதில் தேர்ந்தவர்களோ, சுற்றுப்பயணம் செய்யும் அணி எதில் தடுமாறுவார்களோ அதற்கேற்றவாறு பிட்ச் தயாரிக்கின்றனர். பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகள் ஒரு இன்னிங்ஸில் 50 ரன்களுக்குள் சுருண்ட கதையெல்லாம் இதற்கு முன்னர் நடந்திருக்கிறது. அந்த மூன்று போட்டிகளும் நடந்தது தென்னாப்பிரிக்க மைதானங்களில் என்பது கூடுதல் தகவல்.

   ஸ்பின்னுக்கு சாதகமான இந்த பிட்ச்களில் எப்படி விளையாட வேண்டும் என நிஜத்தில் மற்றவர்களுக்கு காட்டியது யார் தெரியுமா? கண்டிப்பாக இந்தியா வீரர்கள் கிடையாது. ஹஷிம் அம்லா, டு பிளசிஸ் ஆகியோர்தான். நாக்பூர் டெஸ்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸில் இருவரும் டெஸ்ட் போட்டிக்கே உரித்த நேர்த்தியுடன் பேட்டிங் செய்தனர். இருவரும் இணைந்து 278 பந்துகளில் 72 ரன்கள் சேர்த்தனர். இவ்வகை பிட்ச்கள் தடுப்பாட்டம் விளையாட ஏதுவானவை. குறிப்பாக ஹாஷிம் அம்லாவுக்கு தாக்குதல் பாணியில் பந்துவீசியும் 167 பந்துகளைச் சமாளித்தார்.

   இப்போதைய சூழ்நிலையில் உலகம் முழுக்க டெஸ்ட் கிரிக்கெட் நன்றாக விளையாடும் திறன் கொண்ட பேட்ஸ்மேன்கள்  எண்ணிக்கையில் குறைந்து வருகிறார்கள். டி20 ஆதிக்கம் செலுத்தும் இக்காலத்தில் நீண்ட நேரம் நிலைத்து விளையாடும் திறன் பெற்ற தகுதி வாய்ந்த பேட்ஸ்மேன்கள் குறைந்து விட்டனர் என்பதே உண்மை. இதற்கு பிட்ச்சை குறை சொல்லலாமா?   4.   படுத்தே விட்ட 'தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்கள்'

   நாக்பூர் போன்ற சுழலுக்குச் சாதகமான மைதானங்களில் சில சமயங்கள் சேவாக் பாணி ஆட்டம் கைகொடுக்கும். ஆனால், இரு அணியிலும் சேவாக் போன்று அடித்தது ஆடும் ஆட்டபணியை யாருமே பின்பற்றவில்லை. தொடர்ந்து பந்துகளை வீசி ரன்களை வேகமாக சேர்க்கும்போது பீல்டிங்கில் வீரர்கள் கோட்டை விட ஆரம்பிப்பார்கள். இந்திய அணி இரண்டாவது இன்னிங்க்ஸ் விளையாடும்போது புஜாரா, தவான் ஆகியோர் அவ்வபோது பவுண்டரிகளை ஓடவிட்டு வேகமாக ரன்களை சேர்த்தனர். அது போன்ற தைரியமான இன்னிங்க்ஸ் தென்னாப்பிரிக்க தரப்பில் ஓரிருவர் கூட விளையாடவில்லை என்பதே அந்த அணியின் தோல்விக்கு ஒரு சிறு காரணம்.

   அஷ்வின் மற்றும் ஜடேஜா பந்தை எப்படி எதிர்க்கொள்ள வேண்டும் என்றே புரியாமல் தான் பெரும்பாலான வீரர்கள் அவுட்டானார்கள். குறிப்பாக, கடந்த  சில வருடங்களில், அரிதிலும் அரிதாக முதன் முறையாக ஜடேஜா பந்தை குழப்பத்துடன் அரைகுறை மனதோடு விளையாடி 'டக்' அவுட் ஆனார் டி வில்லியர்ஸ். கடந்த முறை தென்னாப்பிரிக்கா இந்தியாவில் சுற்றுபயணம் மேற்கொண்டபோது இதே நாக்பூர் டெஸ்டில் இரட்டைச் சதமடித்தவர் ஹாஷிம் அம்லா. ஆனால், இந்த டெஸ்ட் தொடரில் ஒரு இன்னிங்ஸ் தவிர, மற்ற அனைத்து இன்னிங்ஸிலும் சொற்ப ரன்களில் அவுட்டானார்.

   வரலாற்றில் இந்தியாவுக்கு எதிராக மோசமாக பேட்டிங் செய்தது தற்போதைய தென்னாப்பிரிக்க அணிதான். அந்தளவுக்கு உலகின் நம்பர் 1 அணிக்கான எந்த தகுதியும் தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்களிடம் காணப்படவில்லை. ஒரு இன்னிங்ஸில் கூட 250 ரன்கள் கூட அடிக்க முடியவில்லை. குறிப்பாக அஷ்வினிடமும், ஜடேஜாவிடமும் 'படுத்தே விட்டார்கள்' தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்கள்.

   5. அதிர வைத்த 'சர்' ஜடேஜா

   'சொல்லி வை ரிட்டர்ன் ஆஃப் தி 'சர்'னு... சொல்லி வை’ என டிவிட்டரில் சர் ஜடேஜாவுக்கு லைக்ஸ் தட்டுகிறார்கள் நெட்டிசன்ஸ். தனது மாயாஜால பந்துவீச்சில் தென்னாப்ரிக்காவை நிலைகுலைய வைத்தார் ஜடேஜா. மெதுவாக சுழன்று, வேகமாக பவுன்ஸ் ஆகும் வகையிலான டாப் ஸ்பின் பந்துகளை சரியான லைனில் வீசினார் ஜடேஜா. அஷ்வின் வீசும் பந்துகள் வேகமாக திரும்பும் என்பதால் தென்னாப்பிரிக்க வீரர்கள் நெருக்கடிக்குள்ளாகுவர். அந்தச்  சமயத்தில் ஜடேஜா முற்றிலும் அதற்கு நேர்மாறாக பந்தை வீசும்போது செய்தவறியாது திகைத்து, தவறான ஷாட் விளையாட முற்பட்டு, பலர் ஜடேஜா பந்தில் போல்ட் முறையில் அவுட் ஆயினர்.

   தோனி ஜடேஜாவுக்கு வாய்ப்பு கொடுக்கும்போதெல்லாம் சி.எஸ்.கே கோட்டா என ரசிகர்கள் கலாய்ப்பர். ஆனால், இப்போது ஒருதின டெஸ்ட் போட்டிகளில் ஜடேஜாவை மிஸ் செய்கிறோம் என அதே நெட்டிசன்ஸ் ஸ்டேட்டஸ் தட்டும் அளவுக்கும், ஃபுல்ஃபார்மில் பந்து வீசுகிறார் ஜடேஜா. பந்து வீச்சு மட்டுமின்றி பேட்டிங்கிலும் கணிசமான ரன்களை சேர்க்கிறார். இந்த தொடரில் ஜடேஜாவை விட பெரும்பாலான் தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் குறைவாக ரன்கள் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.   6. 'பார்ட்னர்ஷிப் ப்ரேக்கர்' அமித் மிஸ்ரா

   மொகாலி டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும் டி வில்லியர்சை அவுட்டாக்கினார் அமித் மிஸ்ரா. அப்போட்டியில் மற்ற வீரர்கள் வரிசையாக பெவிலியனுக்கு நடையைக் கட்ட, அதிரடியாக விளையாடி கொண்டிருந்தார் டி வில்லியர்ஸ். எந்த நிலையிலும் போட்டியின் முடிவுகளை மாற்றும் திறன் கொண்டவர் டி வில்லியர்ஸ். அவரை எப்படி அவுட் ஆக்குவது என மற்ற பந்துவீச்சாளர்கள் திணறியபோது, ஒரே டெஸ்ட் போட்டியில் இரண்டு முறை தொடர்ந்து போல்டாக்கினார் மிஸ்ரா.

   மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வழக்கத்துக்கு மாறாக நீண்ட நேரம் பார்ட்னர்ஷிப் போட்டு அற்புதமாக விளையாடிக் கொண்டிருந்தனர் அம்லாவும் - டு பிளசிசும். கிட்டதட்ட மூன்று மணி நேரத்துக்கும் அதிகமாக 46 ஓவர்களாக இந்திய அணிக்கு தலைவலியை ஏற்படுத்திய இக்கூட்டணியை மிஸ்ரா பிரித்தார். இந்தக் கூட்டணி மட்டும் மேலும் 10-20 ஓவர்கள் நின்று விளையாடி இருந்தால் போட்டி நான்காவது நாளுக்கு நீட்சி அடைந்திருக்கும் தவிர, தென்னாப்பிரிக்கா வெற்றியை நோக்கிப் பயணித்திருக்கும். ஆனால், அதற்கு இடம் கொடுக்கவில்லை அமித் மிஸ்ரா.  இரண்டு பேரையும் அடுத்தடுத்த ஓவர்களில் அவுட் ஆக்கினார். 7. நெருக்கடி - பலமும், பலவீனமும்

   இரண்டு அணியினருக்கும் இந்த டெஸ்ட் தொடர் கடுமையான நெருக்கடியாக அமைந்தது. ஒரு தின போட்டிகள் மற்றும் டி20 தொடர் ஆகியவற்றை தென்னாப்பிரிக்கா கைப்பற்றியதால் டெஸ்ட் போட்டி தொடரை இந்தியா இழக்கக் கூடாது என ரசிகர்கள் எண்ணினர். விராட் கோலி முழு நேர கேப்டனாக முதல் டெஸ்ட் தொடரில் வென்று விட்டார். இரண்டாவது டெஸ்ட் தொடரை விராட் கோலி தலைமையில் இந்தியா வென்றிருக்காவிட்டால், 'பலரும் கோலிக்கு அதிர்ஷ்டம். இலங்கை வீரர்கள் ஃபார்மில் இல்லை. அதனால்தான் அப்போது இந்தியா வென்றது’ என சப்பைக்கட்டு கட்டியிருப்பார்கள்.

   ஆனால், முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வென்றது. இதனால் இந்தியாவுக்கு நெருக்கடி குறைந்தது. அதே சமயம் சுழற்பந்து வீச்சுக்கு எதிராகக் கடுமையாக தடுமாறினர் தென்னாப்ரிக்க வீரர்கள். ஆக, ஒரே போட்டியில் தென்னாப்பிரிக்க அணி பலவீன நிலைக்குச் சென்றது. 'இதுவரை 1-0 என பின்தங்கிய நிலையில் இருந்து டெஸ்ட் தொடரை வென்றதே இல்லை' என்ற மோசமான வரலாறு. அதே சமயம், 'கடந்த 9 வருடங்களாக அயல் மண்ணில் தென்னாப்பிரிக்கா தொடரை இழந்ததில்லை' என்ற சாதனையை வேறு காப்பாற்ற வேண்டும் என்பதால் கடுமையான நெருக்கடிக்குள்ளானது தென்னாப்பிரிக்கா. இச்சமயத்தில் இந்தியாவின் கை ஒங்க, அதைச் சாதகமாக பயன்படுத்திக்கொண்ட இந்திய வீரர்கள் தென்னாப்பிரிக்க வீரர்களை அழுத்தத்தில் இருந்து மீள விடாமல் கடும் நெருக்கடி கொடுத்து தொடரை வென்று சாதனை படைத்திருக்கின்றனர்!

   ஆக சிம்பிளாக, வெல்டன் இந்தியா!   http://www.vikatan.com/news/sports/55704.art  
  • சௌதியில் பலருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்ற திட்டம்- அம்னெஸ்டி
   சௌதியில் பலருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்ற திட்டம்- அம்னெஸ்டி   சௌதி அரேபியா பல டஜன் கணக்கானோருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றத் திட்டமிடுவதாக வரும் செய்திகள் குறித்து அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பு அச்சம் தெரிவித்திருக்கிறது. I சௌதியில் பலருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றத் திட்டம் - அம்னெஸ்டி 55 பேர் "பயங்கரவாதக் குற்றங்களுக்காக" மரண தண்டனையை எதிர்நோக்கியிருக்கிறார்கள் என்று ஒக்காஸ் என்ற பத்திரிகை கூறியது. ஆனால் அல் ரியாத் பத்திரிகையில் வெளியாகி, தற்போது நீக்கப்பட்ட செய்தி ஒன்றில், 52 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவிருப்பதாக்க் கூறப்பட்டிருந்த்து. இதில் அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்ட ஷியா முஸ்லீம் பிரிவினரும் அடங்குவர் என்று கருதப்படுகிறது. இந்த ஆண்டு மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட எண்ணிக்கையில் காணப்பட்ட அதிகரிப்பை வைத்து பார்க்கும்போது, இந்த செய்திகளை உண்மையாக இருக்கக்கூடுமென்று கருதாமல் இருக்கமுடியவில்லை என்று அம்னெஸ்டி கூறியது. குறைந்த்து 151 பேராவது இந்த ஆண்டு இதுவரைக்கும் சௌதி அரேபியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர் என்று அம்னெஸ்டி நம்புகிறது. இதுதான் 1995லிருந்து பதிவான மிக அதிக எண்ணிக்கையாகும். 2014ம் ஆண்டில் 90 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இன்னும் சில தினங்களில் மரண தண்டனையை எதிர்நோக்குபவர்கள், அல் கைதா "பயங்கரவாதிகள்" மற்றும் அவாமியா பகுதியை சார்ந்தவர்கள் என்று சவுதி செய்தித்தாள்கள் கூறுகின்றன. அரசைக் கவிழ்க்க இந்த அல் கைதா தீவிரவாதிகள் முயன்றதாக ‘ஓக்காஸ்’ பத்திரிகை தெரிவிக்கிறது. "தீவிரவாத ஒழிப்புப் போர்வையில் பழிவாங்கல்கள்" சவுதி அரபிய அதிகாரிகள் தீவிரவாதத்தை ஒழிக்கும் போர்வையில், அரசியல் பழிவாங்கல்களில் ஈடுபடுகின்றனர் என்று அம்னெஸ்டியின் மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவின் துணை இயக்குனர், ஜேம்ஸ் லின்ச், கூறியுள்ளார். அவமியா பகுதியைச் சேர்ந்தவர்கள் காவல் துறையினர் மீது தாக்குதல் நடத்தியதற்காகவும், பஹரெனில் கலவரத்தில் ஈடுபட்டதிற்காகவும் கொல்லப்படவிருக்கிறார்கள். அவாமியவை சேர்ந்த 6 ஷியா பிரிவினருக்கு நியாயமற்ற விசாரணை நடத்தப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அம்னெஸ்டி தெரிவிக்கிறது. அந்த 6 பேரில் மூன்று பேர் குழந்தைகளாக இருக்கும் போது செய்த குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் குற்றங்களை ஒப்புக்கொள்வதற்காக சித்திரவதை செய்யப்பட்டதாகவும் அம்னெஸ்டி கூறுகிறது. ஆனால் எல்லா மரணதண்டனைகளும் ஷாரிய முறைப்படியும் நியாயமான விசாரணை மூலமாகவும் நடப்பதாக சௌதி அரபியா வாதிடுகிகிறது. http://www.bbc.com/tamil/global/2015/11/151127_saudiamnesty
  • செந்தூரா உன் உடல் கருகிய தீச் சுவாலையில், இரும்பாய் போன இதயங்கள் இழகட்டும், ஈரம் கசியட்டும்…
   செந்தூரா உன் உடல் கருகிய தீச் சுவாலையில், இரும்பாய் போன இதயங்கள் இழகட்டும், ஈரம் கசியட்டும்…   நடராஜா குருபரன்:-
   உன் மரணத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை அப்பனே… உன் உயிரை தற்கொடையாக கொடுத்ததன் ஆழ அகலம் பற்றி ஒன்றும் அறியேன்… உன் மரணத்திற்கு பலரும் பல்வேறு கற்பிதங்களை மெருகேற்றிக் கொண்டு இருக்கிறார்கள்….

   மாவீரர் வாரத்தில் நவம்பர் 27ஆம் நாளுக்கு அண்மித்த உன் மரணம், வீர மரணம் என்கிறார்கள்… தற்கொடை என்கிறார்கள்… வீர மறவன், தமிழர் மானம் காக்க புறப்பட்ட வீரத் தமிழன், மாவீரன் என்றெல்லாம் புகழாரங்கள் சூட்டுகின்றார்கள்… இணையங்கள் சமூக வலைத்தளங்கள் யாவற்றிலும், நீ வியாபித்து இருக்கிறாய்…

   உன் வயதில் எனக்கோர் மகன் இருக்கிறான்.. வெளியில் போகும் அவன் வீடு திரும்பப் பிந்தினால், என்மனம் படும் பாட்டை பதபதைப்பை நானே அறிவேன்… உன்னையும் என்னில் இருந்து பிரித்துப் பாரக்க எனக்கு முடியவில்லை…

   என் கல்லூரி நாட்களில,; கொக்குவில் இந்துக் கல்லூரியில் நான் பயின்ற காலத்தை நினைத்து பார்க்கிறேன்.. உன் உடலை தாங்கிச் செல்லும் மாணவர்கள் அணிந்து சென்ற கழுத்துப் பட்டியை அக்காலத்தில் நாமும் அணிந்திருந்த ஞாபகங்கள் என்னை அமைதியிழக்கச் செய்கின்றன… உன்வயதில் விடுதலைக்காக புறப்பட்டு, நான் கற்ற கல்லூரியில், நானே அரசியல் வகுப்புகளை எடுத்ததை நினைத்துப் பார்க்கிறேன்… எல்லாம் கனவுபோல் விரிந்து செல்கின்றன….

   வீறுகொண்ட தமிழ்த் தேசிய எழுச்சிக் காலம் அந்தக்காலம்… ஈழக் கோரிக்கைக்காக விடுதலை இயக்கங்களில், ஆயிரமாயிரம் இளைஞர்கள் அணி திரண்ட காலம்… ஆளும் அரசாங்கங்களுடன் ஆயுதங்கள் பேசிய காலம்.. இளைஞர்களின் எழுச்சிக்கு அர்த்தம் இருந்த காலம. அது…

   செந்துரா உனது இன்றைய காலம், முள்ளிவாய்க்காலில் ரத்தம் கரைபுரண்டோடி  5 வருடங்கள் விழலுக்கு இறைத்த நீராய் போன காலம் எடா…..

   திக்குத் தெரியாது, நாம் திணறிக் கொண்டிருக்கும் உன் காலத்தில், பொய்மைகளும், வஞ்சகங்களும், பிறர் தியாகங்களை தம் தியாகங்களாக்கி, குளிர் காயும் அயோக்கியத் தனங்களும், தமது அரசியல் இருப்புகளுக்காக, பிறரைப் பலிகொடுத்து வீரகாவியங்களை புனையும் காலமடா….

   ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்ட போராளிகளின் உயிர்த் தியாகங்களும், லட்சக்கணக்கான மக்களின் மரணங்களும், இன்று சுய நலன்களுக்காகவும், அரசில் பேரம் பேசல்களுக்காகவும் வாழ்வின் இருத்தலுக்குமான, வியாபாரமாகிப் போன துயரத்தை உன் பிஞ்சுமனம் அறிந்திருக்குமா?

   இன்னும் என்னால் உன் மரணத்தை ஏற்க முடியவில்லை செந்தூரா… வெறும் உணர்வுகள் மட்டும் ஒரு இனத்தின் விடுதலையை பெற்றுத் தராது என்பதனை, ஊடக கற்கையை ஒரு பாடமாக எடுத்து, நாளாந்தம் பல பத்திரிகைகளை புரட்டும் உணக்குமா புரியவில்லை?

   முள்ளிவாக்காலில் இரத்த ஆறு ஓடிக்கொண்டு இருக்கையில், தமிழகத்தில் இருந்து, புலம்பெயர் நாடுகளில் இருந்து ஐநா முன்றலில் முருகதாஸன் வரை எத்தனை பேர் தமது உயிர்களை தற்கொடை ஆக்கினார்கள்…. உலம் மருண்டதா? இலங்கையின் ஆட்சியாளர்கள்தான் அசைந்தார்களா? இல்லேயே….

   ஏன், அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியா சிறைச்சாலையில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார்கள். பின்னர் சிறைச்சாலை உத்தியோகத்தரை பணயமாக பிடித்து போராடினார்கள்.. அப்போது அங்கு போராட்டத்தை ஆரம்பித்தவர்கள் என்னுடன் பேசினார்கள்…
   உணர்ச்சிவசப்பட்டு கடுமையான முடிவுகளை எடுக்காதீர்கள்… மகிந்த சகோதரர்களுடன் மோதுவது மலையுடன் மோதுவது என்றேன்.... அவர்கள் கேட்கவில்லை, புலம்பெயர் உறவுகளும், தமிழ்க் கட்சிகளும் தம்முடன் இருப்பதாக சொன்னார்கள்..
   செந்தூரா.. இறுதியில் நடந்தது என்ன? உசுப்பேத்தியவர்களில் பலர் ஐராப்பாவில் உல்லாசவாழ்வு வாழ்ந்தனர், வாழ்கின்னறனர். போராடியவர்களில்   நிமலரூபன் வதைபட்டு மாண்டு போனான்… பலர் நையப்புடைக்கப்பட்டு தெற்கின் சிறைகளுக்கு மாற்றப்பட்டனர்.. சிலர்  அனுராதபுரத்தில் மலம் தின்ன வைக்கப்பட்டார்கள்…

   செந்துரா உன்மரணத்தை வீரகாவியமாக்கும் பல பெற்றோர்கள், உன்வயதுப் பிள்ளைகளை தமது மடிக்குள் வைத்திருக்கிறார்கள்;. அவர்களை வைத்தியர்களாகவும், கணக்காளர்களாகவும், பொறியலாளர்களாகவும், இன்னும் பல துறைகளில் விற்பனர்களாகவும் உருவாக்குவற்கு, ஐரோப்பிய தேசங்களிலும், உள்நாட்டிலும் ஓடாய் தேய்கிறார்கள்…
   பணம் தேடி உண்டு கழித்து உறங்குவதற்கு முன் எடுக்கும் ஓய்வுப் பொழுதில் ஊரார் வீட்டு பிள்ளைகளுக்கு உசுப்பேத்தி இல்ங்கை அசுடன் யுத்தம் புரியும் சமூக வலைத்தள போராளிகளாகிறார்கள்…

   குழந்தாய் உன்மரணம் ஆட்சியாளர்களை ஒருபோதும் தட்டி எழுப்பப் போவதில்லை..  குறைந்தபட்சம் மற்றவர்களின் மரணங்களில் வீரகாவியங்களை படைக்க முயலுபவர்களின்  இதயங்களையாவது உறைய வைக்குமா?

   உன்னுடன் இந்த தற்கொலை கலாசாரம் முடிவுக்கு வரட்டும் செந்தூரா.. உன்முடிவு ஈழத்து குழந்தைகளுக்கு ஒரு போதும் முன் உதாரணமாக அமையக் கூடாது… பதிலாக உன் மரணம் அவர்களின் சிந்தனைகளை தூண்டுவனவாக, இனத்துவ மேலான்மைகளை தகர்த்தெறிவதற்கான, அறிவார்ந்த ஆழுமைகளை வளர்ப்பதற்கான மரணமாக அமையட்டும்….

   சென்றுவா.. செந்தூரா.. உன்னுள் உறைந்த உணர்வுகளை உணர முடியாது தவிக்கிறேன்… உன்னை மாமனிதனாகவோ, மாவீரனாகவோ, வீர மறவனாகவோ, வீரருஸனாகவோ, இல்லை வீர மைந்தனாகவோ அழகுபடுத்தி, என் இருப்பை பேண ஒரு போதும் நான் துணிய மாட்டேன்… “நீ வரலாறாகிப் போன உன்னத மனிதன்”

   உன் உடல் கருகிய தீச் சுவாலையில் இரும்பாய் போன இதயங்களில் ஈரம் கசியட்டும்… http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/126365/language/ta-IN/article.aspx
 • Popular Contributors

 • Recent Event Reviews

 • Member Statistics

  • Total Members
   9,137
  • Most Online
   1,326

  Newest Member
  இ.பு.ஞானப்பிரகாசன்
  Joined
 • Images

 • Today's Birthdays

  1. Panangkai
   (38 years old)
  2. kaduvan
   (24 years old)
  3. Seeraalan
   (33 years old)
  4. smkonli
   (28 years old)
 • Upcoming Events

  No upcoming events found
 • Blog Entries

 • Forum Statistics

  • Total Topics
   146,163
  • Total Posts
   991,907