Forums

 1. யாழ் இனிது [வருக வருக]

  1. யாழ் அரிச்சுவடி

   தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு

   32,379
   posts
  2. யாழ் முரசம்

   கள விதிமுறைகள் | அறிவித்தல்கள் | உதவிக்குறிப்புகள்

   3,834
   posts
  3. யாழ் உறவோசை

   குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்

   15,193
   posts
 2. செம்பாலை [செய்திக்களம்]

  1. 68,496
   posts
  2. உலக நடப்பு

   இந்தியச் செய்திகள் | உலகச் செய்திகள் | காலநிலை | நாணயமாற்று

   20,362
   posts
  3. நிகழ்வும் அகழ்வும்

   செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

   10,558
   posts
  4. செய்தி திரட்டி

   விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

   5,821
   posts
 3. படுமலைபாலை [தமிழ்க்களம்]

  1. துளித் துளியாய்

   தாயக மக்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கு உதவுதல்/உதவி கோரல்கள்

   1,459
   posts
  2. எங்கள் மண்

   தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

   10,368
   posts
  3. வாழும் புலம்

   புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

   31,143
   posts
  4. பொங்கு தமிழ்

   தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு

   11,067
   posts
  5. தமிழும் நயமும்

   இலக்கணம் | இலக்கியம் | கலைச்சொற்கள் | பழந்தமிழ்க் காப்பியங்கள்

   4,660
   posts
  6. உறவாடும் ஊடகம்

   நாளிதழ்கள் | வானொலிகள் | தொலைக்காட்சிகள் | இணையத்தளங்கள்

   3,378
   posts
  7. மாவீரர் நினைவு

   மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்

   13,687
   posts
 4. செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]

  1. கவிதைப் பூங்காடு

   கவிதைகள் | பாடல் வரிகள்

   46,104
   posts
  2. 33,011
   posts
  3. வேரும் விழுதும்

   கலைகள் | கலைஞர்கள்

   2,719
   posts
  4. தென்னங்கீற்று

   குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்

   5,171
   posts
  5. நூற்றோட்டம்

   நூல்கள் | அறிமுகம் | விமர்சனம்

   3,354
   posts
 5. அரும்பாலை [இளைப்பாறுங்களம்]

  1. வண்ணத் திரை

   சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

   17,916
   posts
  2. சிரிப்போம் சிறப்போம்

   நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

   25,901
   posts
  3. விளையாட்டுத் திடல்

   விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

   18,606
   posts
  4. இனிய பொழுது

   மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

   50,551
   posts
 6. கோடிப்பாலை [அறிவியற்களம்]

  1. கணினி வளாகம்

   கணினி | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

   4,073
   posts
  2. வலையில் உலகம்

   இணையம் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

   2,629
   posts
  3. தொழில் நுட்பம்

   தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

   2,565
   posts
  4. அறிவுத் தடாகம்

   அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி

   6,449
   posts
 7. விளரிப்பாலை [சிந்தனைக்களம்]

  1. அரசியல் அலசல்

   அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

   2,630
   posts
  2. மெய்யெனப் படுவது

   மெய்யியல் | நற்சிந்தனைகள் | இசங்கள் | பகுத்தறிவு

   9,999
   posts
  3. சமூகச் சாளரம்

   சமூகம் | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள்

   18,819
   posts
  4. பேசாப் பொருள்

   பேசாப் பொருளைப் பேச நாம் துணிந்தோம்

   4,580
   posts
 8. மேற்செம்பாலை [சிறப்புக்களம்]

  1. நாவூற வாயூற

   சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்

   11,466
   posts
  2. நலமோடு நாம் வாழ

   உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்

   10,655
   posts
  3. நிகழ்தல் அறிதல்

   நிகழ்வுகள் | கொண்டாட்டங்கள் | விழாக்கள் | சந்திப்புகள்

   2,378
   posts
  4. வாழிய வாழியவே

   வாழ்த்துக்கள் | திருநாட்கள் | பாராட்டுக்கள்

   18,863
   posts
  5. துயர் பகிர்வோம்

   இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்

   6,086
   posts
  6. தேடலும் தெளிவும்

   பொதுவெளியில் நம்முன் எழுகின்ற கேள்விகளும் அதற்கான பதில்களும் இங்கே பதியப்படலாம்.

   69
   posts
 9. யாழ் உறவுகள்

  1. யாழ் ஆடுகளம்

   கள உறுப்பினர்களுக்கான போட்டிகள் | பட்டிமன்றம் | விளையாட்டு

   53,837
   posts
  2. யாழ் திரைகடலோடி

   பிறமொழி ஆக்கங்கள் | பயனுள்ள ஆக்கங்கள்

   4,669
   posts
  3. யாழ் தரவிறக்கம்

   மென்பொருள் தரவிறக்கங்கள் | இணைப்புகள்

   • No posts here yet
 10. யாழ் களஞ்சியம்

  1. புதிய கருத்துக்கள்   (335,533 visits to this link)

   இறுதியாக பதியப்பட்ட கருத்துக்களைப் பார்வையிட

  2. முன்னைய களம் 1   (11,197 visits to this link)

   யாழ் இணையத்தின் ஆரம்ப கால களம் இது. 17000த்திற்கு மேற்பட்ட பதிவுகளுடன், பாமினி எழுத்துரு அமைப்பில் உள்ளது.

  3. முன்னைய களம் 2   (11,593 visits to this link)

   யாழ் இணையத்தின் 2வது களம். 180000 கருத்துக்களுடன், தற்போது பார்வைக்கு மட்டுமே உள்ளது

  4. 107
   posts
 • Topics

 • Posts

  • மாவீரர் தினம் – அழித்தவர்களே நடத்தும் அவமானகரமான களியாட்டம்
   ஈழத்தில் நடைபெற்ற ஆயுதப் போராட்டம் எவ்வளவு தியாகங்களையும் அர்ப்பணங்களையும் எமக்கு முன்னால் விட்டுச் சென்றிருக்கிறதோ அதே அளவிற்கு தனிநபர் பயங்கரவாதம், உட் கட்சிப் படுகொலைகள், அதிகாரவர்க்க அரசியல் என்ற அனைத்தையுமே தன்னகத்தே கொண்டிருந்தது. அன்னிய அரசுகள் போராட்டத்தின் எச்ச சொச்சங்களே தெரியாத அளவிற்கு அழித்துத் துடைத்தெறிவதற்கான அடிப்படைகளே அவற்றிலிருந்து தான் ஆரம்பமானது. அவை அனைத்துமே போராட்டத்தின் நியாயங்களாக புதிய சந்ததிக்குக் கூறப்பட்டது. முழுமையான இருளுக்குள் மூழ்கடிக்கப்பட்ட புதிய தலைமுறைக்கு உண்மையை அறிந்துகொள்ளும் உரிமையை இனவாதிகளும், ஏகாதிபத்திய அடியாட்களும், குற்றவாளிகளும் மறுத்தனர். வர்த்தகத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட ஊடகங்கள் அவர்களுக்குத் துணை சென்றன. தோற்றுப் போனதற்கான காரணங்களைப் புதிய தலைமுறைக்கும் உலகத்திற்கும் எடுத்துச் செல்வதற்கான வழிகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. போராட்டத்தின் தோல்விக்கு நாம் காரணமல்ல சர்வதேசம் உள்ளே புகுந்து அழித்துவிட்டது என்று தவறுகள் அனைத்தையும் நிறுவனமாக்கும் பிழைப்புவாதிக்ளின் கூட்டம் அழிவுகளின் பின்னான தலைமையைக் கையகப்படுத்திக்கொண்டது. ஒடுக்குமுறைக்கு எதிராகக் கிளர்ந்த ஒரு சந்ததியே நமது தவறான அரசியலால் அழித்துத் துவம்சம் செய்யப்பட்டுள்ளது. இவற்றை சுய விமர்சனத்திற்கும் விமர்சனத்திற்கும் உட்படுத்தி புதிய அரசியல் திசை வழியை அமைத்துக்கொள்ள தேசியப் பிழைபுவாதிகள் அனுமதிப்பதில்லை. கொலைகளையும், கோராங்களையும், மனித விழுமியங்களுக்கு எதிரான வன்முறைகளையும் நியாயப்படுத்தும் பிழைப்புவாதக் கும்பல்கள் சிறுகச் சிறுக எமது சமூகத்தைக் கொன்று தின்றுகொண்டிருக்கின்றன. அவர்களின் கொலை வெறியைத் தூண்டியது பணப் பசி மட்டுமே. இப் பணப் பசியின் உச்சமாக நவம்பர் மாதத்தில் கொண்டாட்டப்படும் களியாட்டமான மாவீரர் தினம் அமைந்துள்ளது. உலக மக்களுக்கும், ஒடுக்கப்படும் மக்கள் கூட்டங்களுக்கும், ஜனநாயகவாதிகளுக்கும், மனிதாபிமானிகளுக்கும் நமது சமூகத்தின் அரசியலை பிழைப்புவாத வன்முறையின் உச்சம் என வெளிப்படையாக் கூற மாவீரர் நாளைப் பிழைப்புவாதிகள் பயன்படுத்திக்கொள்கின்றனர். விட்டில் பூச்சிகள் போன்று மரணித்துப் போவதற்கு என்றே புலிகளுடன் இணைந்துகொண்ட தியாக உணர்வு மிக்க பல போராளிகள் இப் பிழைப்புவாதக் கும்பலை நிராகரிக்கின்றார்கள். தவறுகளை வெளிப்படையாக விமர்சனத்திற்கு உட்படுத்தி அவற்றை எதிர்கால சந்ததிக்குச் வெளிப்படுத்தி, அவற்றிலிருந்து கற்றுக்கொண்டு புதிய அரசியல் வழிமுறைய முன்வைக்க வேண்டும் என்ற உணர்வு இறுதிவரை போராடிய போராளிகள் மத்தியில் தோன்றியுள்ளது. இந்த மாற்றம் புதிய அரசியல் சக்தியாக உருவெடுக்கும் போது தேசியப் பிழைபுவாதிகள் ஓரம் கட்டப்படுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. பிரபாகரனுக்கு ஒளிவட்டம் கட்டி மரணித்துப் போனவர்களின் தியாகங்களின் மீது பிழைப்பு நடத்தும் இக் கும்பல்களே பிரபாகரனின் மரணத்திற்கும் காரணமாயின. தாம் கடவுளுக்குச் சமமாக நேசிப்பதாகக் கூறும் பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்த மாவீரர் தினத்தில் எந்த விளக்கும் ஏற்றப்படுவதில்லை. TELO, LTTE, EROS, EPRLF இயக்கத் தலைவர்கள் பிரபாகரனைப் பயன்படுத்தி மக்கள் பணத்தைச் சூறையாடிய இக் கும்பல்கள் அவரை அனாதையாக்கியுள்ளன.
   ——–*——-
   1980 களின் மத்திய பகுதியில் நான்கு பிரதான விடுதலை இயக்கங்கள் ஒரு கூட்டமைபை ஏற்படுத்திக்கொண்டன. இக் கூட்டமைப்பிற்கு ENLF என்று பெயர் சூட்டப்பட்டது. ஈழப் போராட்டத்தின் மீது மக்களின் நம்பிக்கை வைக்க ஆரம்பித்திருந்தனர். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இயக்கங்களில் இணைந்துகொண்டனர். தமது இளவயதின் மகிழ்ச்சி என்பதே போராடி மரணிப்பது என்றே அவர்கள் நம்பினர். பள்ளிக்குப் போவதாக புத்தகங்களையும் காவிக்கொண்டு சென்ற குழந்தை இராணுவப் பயிற்சிக்கு என இந்தியா சென்றுவிட்டதாக பெற்றோர்கள் கேள்ள்வியுற்று மகிழ்ச்சியடைந்த காலம் ஒன்று இருந்தது. மக்கள் வெறும் பார்வையாளர்களாக இருந்திருக்கவில்லை. வெகுசனப் போராட்டங்களால் தெருக்கள் ஆர்ப்பரித்தன. இந்திய அரசு இயக்கங்களை ஒன்று சேர்த்து அழிப்பதற்காகவே உருவாக்கப்பட்டது ENLF என்பதை அப்போது யாரும் தெரிந்து வைத்திருக்கவில்லை. புலிகள் இயக்கம் முதலில் தமிழீழ விடுதலை இயக்கம் என்ற TELO ஐ அழித்தது. போராளிகள் ஏன் செத்துப் போகிறோம் என்று தெரியாமலே தெருக்களில் மரணித்துப் போனார்கள். கிழக்கு மாகாணத்திலிருந்து யாழ்ப்பாணம் வந்திருந்த இளைஞர்களுக்கு போக்கிடம் இருந்திருக்கவில்லை. பதினைந்திற்கும் இருபத்தைந்து வயதிற்கும் இடைப்பட்ட போராளிகள் கிடைக்கும் இடங்களில் மறைந்துகொண்டார்கள். திருனெல்வேலியில் இரண்டு கிழக்குமாகாண இளைஞர்கள் புலிகளின் மேலிடத்து உத்தரவால் உயிரோடு எரிக்கப்பட்டார்கள். டெலோ உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் சரண்டைய வேண்டும் என ஒலி பெருக்கி உத்தரவால் யாழ்ப்பாணம் அதிர்ந்தது. வழமையாக விமானக் குண்டு மழை பொழியும் இலங்கை அரச விமானங்கள் அன்று அனைத்தையும் நிறுத்திக்கொண்டன. இவை எல்லாம் நியாயம் எனப் போதிப்பதற்கு புதிய கூட்டம் ஒன்று தோன்றியது. இறுதி நாள் வரை டெலோவின் ஊதுகுழலாகச் செயற்பட்ட புதுவை இரத்தினதுரை புலிகளின் கவிஞனாக மாறினார். தவறுகளை நியாயப்படுத்த என்றே புதிய புத்திசீவிகள் கூட்டம் தோன்றியது. இதே போலத்தான் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி என்ற ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கமும் அழிக்கப்பட்டது. போராளிகள் தெருத்தெருவாகக் கொல்லப்பட்டனர். புத்திசீவிகள் என்று கூறிக்கொண்ட கூட்டம் முழு மக்களின் மனிதாபிமான உணர்வுகளைக் குழி தோண்டிப் புதைப்பதற்குத் துணை போயிற்று. மனிதத்தின் மீதான வன்முறையை நியாயம் எனப் போதித்தது. உலகிற்கு தமிழினத்தை வன்முறை மீது காதல்கொண்ட இனமாக அறிமுகப்படுத்திற்று. அக்கூட்டம் முள்ளிவாய்க்கால் வரை புலிகளை அழைத்து வந்து கொன்று போடும் அளவிற்கு விருட்சமாக வளர்ந்து இன்றும் எமது அவமானச் சின்னமாக உலகில் வலம் வருகின்றது. இன்று வரைக்கும் வன்முறைகளுக்குப் பொழிப்புக் கூறும் இக் கூட்டம் தவறுகளை நியாயப்படுத்தி எதிர்காலத்தை இருளின் விழிம்பிற்குள்ளேயே வைத்திருக்கிறது. இவர்களுக்குப் பயன்படுவது பிரபாகரனும் புலிகளின் அடையாளமும் மட்டுமே. புதிய தலைமுறைக்கு உண்மையை அறிந்துகொள்ளும் உரிமையை மறுக்கும் இந்த வன்முறைக் கும்பல்களின் பிடியிலேயே மாவீரர் தினம் என்ற பொன்முட்டை போடும் வாத்து அடைத்துவைக்கப்பட்டிருக்கிறது. பிரபாகரனுக்கு அஞ்சலி செய்வதன் ஊடாக உலகத்திற்கு உண்மையைச் சொல்லும் தலைமுறை வளர்த்தெடுக்கப்பட வேண்டும். பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்தப்படுமானால், சிறீ சபாரத்தினம், பத்மநாபா போன்றவர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட வேண்டும். போராடி மரணித்துப் போன அனைத்து இயக்கப் போராளிகளும் துரோகிகள் பட்டியலிலிருந்து நீக்கப்பட வேண்டும்.அவர்கள் அஞ்சலிக்குரியவர்களே. நம்மை வன்முறையாளர்கள் பட்டியலிரிருந்து நீக்கிக் கொண்டு உலக மக்கள் மத்தியில் ஜனநாயகவாதிகளாக அறிமுகப்படுத்தும் முதல்படியாக இது அமையும். வக்கிர மனோபாவம் நிறைந்த சந்ததி ஒன்று உருவாகுவதைத் தடுப்பதற்கான நுளைவாசலாக இது அமையும்.   www.inioru.com  
  • காதல் ஒன்று கவிதை இரண்டு
   அவள் தந்த நினைவு ....
   பரிசுகள் ஒவ்வொன்றும் ....
   இதயத்தின் அருங்காட்சி ....
   பொக்கிஷங்கள்......
   அவளின் ஒவ்வொரு வார்த்தையும் ....
   ஒவ்வொரு கவிதைகள் ....!!!

   +

   எனக்கு கல்லறை ....
   கட்டதேவையில்லை ....
   என் இதயமே கல்லறை ....
   ஆகிவிட்டது ....!!!
   எனக்கு கல் வெட்டு ...
   அடிக்கதேவையில்லை ....
   என் கவிதைகளே ....
   கல் வெட்டுக்களாகிவிட்டன ...!!!

   @
   கவிப்புயல் இனியவன் 
   காதல் ஒன்று கவிதை இரண்டு
  • ஐ.எஸ் இயக்கத்தில் இருந்து தப்பிக்க முயன்ற சிறுமி அடித்துக்கொலை
   ஐ.எஸ் இயக்கத்தில் இருந்து தப்பிக்க முயன்ற சிறுமி அடித்துக்கொலை     ஐ.எஸ் இயக்கத்தில் இருந்து தப்பிக்க முயன்ற சிறுமி ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். சிரியா- ஈராக்கின் சில பகுதிகளை கைப்பற்றி இஸ்லாமிய நாடாக அறிவித்துள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் பல்வேறு நாடுகளில் தீவிரவாத தாக்குதலுக்கு திட்டம் தீட்டி உள்ளது.  
   ஐ.எஸ்.ஐ.எஸ்.  தீவிரவாதிகள் முகாம் மீது அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும்  விமான தாக்குதல்களை நடத்தி வருகின்றன.  ரஷ்யாவும் சிரியாவுக்கு ஆதரவாக விமான தாக்குதல்களை நடத்தி வருகிறது.   உலக நாடுகளின் இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் மிக கொடூரமான தாக்குதலை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்தியிருந்தனர். இந்நிலையில் போஸ்னிய பெண் சம்ரா கெசினோவிச் (வயது 17)  இவர் ஆஸ்திரியாவைச் சேர்ந்தவர். இவரது தோழி சபினா செலிமோவிச்(15) ஆகியோர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நாட்டை விட்டு வெளியேறி சிரியா சென்றனர்.  ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்து போராடப் போவதாக அவர்கள் கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்றார்கள். ராக்கா நகரை அடைந்த அவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்தனர். சம்ரா மற்றும் சபினா ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளை திருமணம் செய்து கொண்டனர். ஆரம்பத்தில் இரு ஜோடிகளும் ஒரே அறையில் வசித்து வந்துள்ளனர். பின்னர் சபினா தனது கணவருடன் வேறு வீட்டிற்கு சென்றுவிட்டார். சிரியாவில் இருந்து தப்பியோட சம்ரா முயற்சி செய்துள்ளார். அப்போது அவரை பிடித்த தீவிரவாதிகள் அவரை அடித்தே கொலை செய்துள்ளனர். இந்த செய்தி ஆஸ்திரியாவைச் சேர்ந்த பல ஊடகங்களில் வெளியாகியுள்ளன. ஆஸ்திரியாவில் இருந்து சிரியா சென்ற 2 சிறுமிகளில் ஒருவர் பலியாகிவிட்டதாக ஐ.நா. அதிகாரி ஒருவர் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு ஆட்களை சேர்க்கும் வகையில் வெளியான போஸ்டர்களில் சம்ராவும், சபினாவும் கையில் துப்பாக்கியுடன் தீவிரவாதிகளுடன் காணப்பட்டனர். 
   இந்நிலையில் தப்பியோட முயற்சித்த சம்ரா கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் சிரியாவில் தான் மகிழ்ச்சியாக இருப்பதாக சபினா தெரிவித்துள்ளார் http://www.virakesari.lk/articles/2015/11/25/%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88
  • பரிஸ் தாக்குதலாளியாக்கப்பட்ட மொரோக்கோவின் அப்பாவிப் பெண்
   பரிஸ் தாக்குதலாளியாக்கப்பட்ட மொரோக்கோவின் அப்பாவிப் பெண்     பரிஸில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களோடு சம்பந்தப்பட்டதாகக் கருதப்படும் பெண்ணொருவர், பரிஸில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போது மரணமடைந்திருந்தார். அங்கு உயிரிழந்தவர் எனக் கருதப்பட்டு, சில ஊடகங்களால் வெளியிடப்பட்ட புகைப்படங்களில் காணப்படுபவர், உயிரிழந்தவர் அல்லர் எனத் தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவரின் பெயர் ஹஸ்னா அய்ட் பௌலசென் என இனங்காணப்பட்டார். தற்கொலை அங்கியை வெடிக்க வைத்தே அவர் உயிரிழந்ததாக முன்னர் அறிவிக்கப்பட்ட போதிலும், ஆணொருவரே அதை வெடிக்க வைத்ததாகப் பின்னர் உறுதிப்படுத்தப்பட்டது. அவர் தொடர்பில் ஆரம்பத்தில் வெளியிடப்பட்ட புகைப்படம் சரியென்ற போதிலும், பின்னர் வெளியிடப்பட்ட தொடர்ச்சியான புகைப்படங்கள், அவருடையதல்ல என அறிவிக்கப்படுகிறது. குளியலறையில் குளிப்பது போலவும், கட்டிலில் படுத்திருப்பது போலவும், நண்பர்களுடன் செல்பி எடுப்பது போலவும் வெளியிடப்பட்ட புகைப்படங்கள், மொரோக்கோவைச் சேர்ந்த நபிலா பக்கத என்பவருடையது என அறிவிக்கப்படுகிறது.
   அது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், தனக்கும் ஹஸ்னாவுக்குமோ அல்லது பயங்கரவாத்துக்குமிடையிலோ, எந்தவிதச் சம்பந்தமும் கிடையாது எனவும், தானும் ஹஸ்னாவும் ஒரே மாதிரியாக இருப்பதன் காரணமாக, வேண்டுமென்றே தனது புகைப்படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். தனது 15 வயதில் பிரான்ஸில் வசித்த அவர், 2007ஆம் ஆண்டில் மொரோக்கோவுக்குத் திரும்பியிருந்தார்.
   தனது நண்பியொருவரால் அந்தப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டதாகவும், இருவரும் தற்போது ஒருவரோடு ஒருவர் கதைப்பதில்லை எனவும், தானும் ஹஸ்னாவும் ஒரே மாதிரியாக இருப்பதைப் பயன்படுத்திய அவர், அதை ஊடகவியலாளரொருவருக்கு விற்றுள்ளதாகவும் தெரிவித்தார். இந்தச் சம்பவங்களால், தனக்கு மனவுளைச்சல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், வெளியே செல்ல முடியாதுள்ளதாகவும், கடுமையான பயத்தின் கீழ் வாழ்வதாகவும் தெரிவித்தார். தற்போது மொரோக்கோவில் தனது குழந்தைகளுடன் வசிக்கும் நபிலா, அவரது கணவரை விவாகரத்துச் செய்து வாழ்கின்றமை குறிப்பிடத்தக்கது. - See more at: http://www.tamilmirror.lk/159917/%E0%AE%AA%E0%AE%B0-%E0%AE%B8-%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%B3-%E0%AE%AF-%E0%AE%95-%E0%AE%95%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%AE-%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%B5-%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%B5-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%A3-#sthash.crYCz4Yw.dpuf
  • பங்களாதேஷ் பிரீமியர் லீக்
   பிழையைத் தட்டிக் கேட்டமைக்காக வசைபாடப்பட்டேன்: தமிம்     இடம்பெற்றுவரும் பங்களாதேஷ் பிறீமியர் லீக் தொடரில், சிட்டகொங் விக்கிங்ஸ் அணிக்கும் சியல்கொட் சுப்பர்ஸ்டார்ஸ் அணிக்குமிடையிலான போட்டியில் ஏற்பட்ட சர்ச்சையைத் தொடர்ந்து, தன் மீது வசைபாடப்பட்டதாக, சிட்டகொங் அணியின் தலைவர் தமிம் இக்பால் தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற இப்போட்டியில், சியல்கொட் அணியின் ரவி போப்பாரா, ஜொஷ் கொப் ஆகிய இரண்டு வெளிநாட்டு வீரர்களுக்கான, இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் அனுமதிச் சான்றிதழ் கிடைக்காத காரணத்தால், நாணயச் சுழற்சியானது 15 நிமிடங்களால் தாமதிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர், நாணயச் சுழற்சி இடம்பெற்ற போது, தமிம் இக்பாலிடம் கையளிக்கப்பட்ட சியல்கொட் அணி விவரத்தில், போப்பாரா, கொப் இருவரினதும் பெயர் இடம்பெற்றிருக்கவில்லை. 4 வெளிநாட்டு வீரர்கள் பங்குபற்ற வேண்டிய விதி காணப்பட்ட நிலையில், 2 பேரை மாத்திரம் சேர்க்க, அவ்வணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும், தமிம் இக்பாலும் திலகரட்ண டில்ஷானும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாகக் களமிறங்கும் போது, போப்பாராவும் கொப்-உம், களத்தடுப்பில் ஈடுபட ஆயத்தங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தமையால், சர்ச்சை ஏற்பட்டது. விதிகளுக்கு முரணாக, வழங்கப்பட்ட அணி விவரத்தில் உள்ளடக்கப்படாத வீரர்களை விளையாட அனுமதிக்க முடியாது என தமிம் வாதிட, தங்களுக்கு அனுமதி கிடைத்திருப்பதாக சியல்கொட்டின் முஷ்பிக்கூர் ரஹீம் தெரிவித்தார். இப்பிரச்சினையைத் தொடர்ந்து ஒரு கட்டத்தில், தன்னை நோக்கி வந்த சியல்கொட் அணியின் உரிமையாளரான அஸிஸூல் இஸ்லாம், தன்னை நோக்கித் துர்வார்த்தைகளைப் பயன்படுத்தி, தன் குடும்பத்தைப் பற்றி வசைபாடியதாக, தமிம் தெரிவித்துள்ளார். தேசிய அணியின் வீரர்கள், மதிக்கப்பட வேண்டியவர்களெனத் தெரிவித்த தமிம், பணமிருக்கிறது என்பதற்காக, தேசிய வீரர்களை எவரும் பிச்சைக்காரர்களைப் போல் நடத்தக்கூடாது எனத் தெரிவித்துள்ளார். விளையாடுவதற்கே அங்கு சென்றதாகத் தெரிவித்த அவர், தனது குடும்பத்தைப் பற்றிய வசைகளைக் கேட்பதற்காக அன்று எனவும் மேலும் குறிப்பிட்டார். - See more at: http://www.tamilmirror.lk/159901#sthash.NIFZ9T9i.dpuf
 • Popular Contributors

 • Recent Event Reviews

 • Member Statistics

  • Total Members
   9,136
  • Most Online
   1,326

  Newest Member
  IPS Support
  Joined
 • Images

 • Today's Birthdays

  1. tamil_thambi
   (31 years old)
  2. வேலவன்
   (38 years old)
 • Upcoming Events

  No upcoming events found
 • Blog Entries

 • Forum Statistics

  • Total Topics
   146,047
  • Total Posts
   991,203