Help - Search - Members - Calendar
Full Version: புல்மோட்டையில் தாக்குதல்
யாழ் கருத்துக்களம் > தகவற் களம் > செய்திகள் : தமிழீழம்
தூயவன்
புல்மோட்டை இராணுவத் தளம் மீது பதிலடித் தாக்குதலை புலிகள் மேற்கொண்டதாகச் செய்திகள் வந்திருக்கின்றன. இழப்புக்கள் பற்றிய செய்திகள் என்னும் வெளிவரவில்லை. இருப்பினும் 350 வரையிலான குடும்பங்கள் இடம் பெயர்ந்து பாடசாலையில் தஞ்சமடைந்திருப்பதாக அறிய முடிகின்றது

தகவல்: கள உறவு
மோகன்
புல்மோட்டைக் கடற்பரப்பில் பாரியமோதல்?

புல்மோட்டைக் கடற்பரப்பில் பாரியமோதல்கள் நடைபெற்றுவருவதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் பொலன்நறுவப்பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலொன்றில் ஒரு உயர் அதிகாரி உட்பட இருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நன்றி: மட்டக்களப்பு ஈழநாதம்
Sriramanan
கொக்குத்தொடுவாய் கடற்படையினரின் நிலைகள் மீது தாக்குதல்: 3 கடற்படையினர் காயம்.
திருலை புல்மோட்டைக் கடற்பரப்பினுள் ஊடுருவிய இனம் தெரியாதோர் கொக்குத்தொடுவாய் கடற்கரையில் அமைந்துள்ள சிறீலங்கா நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இத்தாக்குதலில் 3 கடற்படையினர் காயமடைந்துள்ளனர்.

தாக்குதலை அடுத்து கொக்குத் தொடுவாயில் உள்ள சிங்கள மக்கள் ஆயிரம் பேர் வரை இடம் பெயர்ந்துள்ளனர்.

http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=2&
This is a "lo-fi" version of our main content. To view the full version with more information, formatting and images, please click here.
Invision Power Board © 2001-2010 Invision Power Services, Inc.