Help - Search - Members - Calendar
Full Version: ஜெனீவா பேச்சுக்களில் பங்கேற்பு இல்லை
யாழ் கருத்துக்களம் > தகவற் களம் > செய்திகள் : தமிழீழம்
adsharan
ஜெனீவா பேச்சுக்களில் பங்கேற்பு இல்லை: விடுதலைப் புலிகள் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு
[ஜெனீவாவில் எதிர்வரும் 24 ஆம் நாள் நடைபெற உள்ள இரண்டாம் சுற்றுப் பேச்சுக்களில் பங்கேற்கப் போவதில்லை என்று தமிழீழ விடுதலைப் புலிகள் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.


கிளிநொச்சியில் இலங்கைக்கான நோர்வே சிறப்புத் தூதுவர் ஹன்சன் பௌயருடனான சந்திப்புக்குப் பின்னர் இம்முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர் தாயகப் பகுதியில் தமிழர்கள் மீதான வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வந்து இயல்பு நிலைமையை ஏற்படுத்தா வரை பேச்சுக்களில் பங்கேற்கப் போவதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


www.puthinam.com
kurukaalapoovan
ஜெனிவா-2 இற்கான சாத்தியங்கள் பிரகாசமாகிறது (Chances of Geneva II brighten up) என்று தலையங்கம். ஆனால் உள்ளே? laugh.gif
http://www.hindustantimes.com/news/7598_16...00500020002.htm

"Informed Tamil sources told Hindustan Times that the LTTE might accept the government's offer of a large helicopter to transport its senior commanders from the East to the North, for consultations ahead of the peace talks in Geneva."

அதொன்ன பெரிய உலங்குவனூர்தி, காத்து அடிச்சுக் கொண்டு போகாது என்றா?


"Diplomatic sources said on Saturday, that the LTTE would go for the talks in Geneva mainly to publicise the issue of the "Tamil paramilitaries" allegedly working in collaboration with the Sri Lankan armed forces."

இதைத்தானே ஜெனிவா-1 இல் விபரமான அறிக்கை சமர்பித்து அம்பலப்படுத்தியாச்சு.


"It will also highlight the issue of the anti-Tamil riots in Trincomalee, which according to Tamil sources, had led to the death of more than 20 people and the displacement of over 4,000 families."

திருகோணமலையில் நடந்த படுகொலைகளிற்கு ஒட்டுப்படைகளை வைத்து தாக்குதல் நடத்திவிட்டு கருணா என்று பூச்சாண்டி காட்டுவது போல் எந்த வியாக்கியானமும் இல்லையே அம்பலப்படுத்த.

"Tamil sources expect Geneva II to break up within a day, without any agreement, because there is no meeting ground between the two sides."

இப்படி சமாதான முயற்சிகள் தோல்வி கண்டபின்னர் எப்படி தென்னிலங்கையூடாக புலிகளின் குழுத தாயகம் திரும்ப முடியும்?

இவருடைய Informed Tamil sources யார்? புலிகள் மீது பழிபோடுவதற்கு திட்டமிட்டு ஜெனிவா எதிர்பார்ப்புகளை அதிகரிக்கும் வகையில் பிரச்சாரங்களா? :roll:
kurukaalapoovan
மகிந்த நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் Chances of Geneva II brighten up என்று மறை முகமாக சொல்லியிருக்கிறார். laugh.gif
This is a "lo-fi" version of our main content. To view the full version with more information, formatting and images, please click here.
Invision Power Board © 2001-2010 Invision Power Services, Inc.