sayanthan
Apr 13 2006, 04:37 PM
சற்று முன்னர் ஜெயா தொலைக்காட்சியில் செல்வி ஜெயலலிதாவின் செவ்வியில் ரவி பெர்ணாட் வைகோ திருமா ஆகியோரின் தமிழ் உணர்வுகள் குறித்து குறிப்பிட்டு ஈழப்பிரச்சனையில் ஜெயலலிதாவின் நிலை குறித்துக் கேட்டார். அதற்கான ஜெயாவின் முழுமையான பதில் கீழே..
ஈழம் என்று நீங்கள் குறிப்பிட்டீர்கள். ஈழம் என்பது ஒரு concept, ஒரு லட்சியம், ஒரு கனவு, ஒரு குறிக்கோள். ஒரு லட்சியத்தை அடைய வேண்டும் என்று ஒரு கனவு காண்கிறார்கள். அவர்களைத்தான் நீங்கள் ஈழத்தமிழர்கள் என்று குறிப்பிடுகிறீர்கள். அதையே நான் இலங்கைத் தமிழர்கள் என்று சொல்கின்றேன். அவ்வளவுதான் வேறுபாடு. ஆனால் நான் இலங்கைத்தமிழர்கள் என்று சொல்வதற்கு இன்னொரு காரணமும் உண்டு. ஈழத்தை அடைய வேண்டும் என்று ஒரு தொகுதியில் இருக்கின்றவர்களைத்தான் இன்று ஈழத்தமிழர்கள் என்று சொல்கின்றோம். ஆனால் வேறு பகுதிகளிலும் தோட்டத்தொழிலாளர்களாக பணி புரியும் மலையக பகுதிகளில் வாழ்கின்ற தமிழர்களும் இருக்கின்றார்கள். அவர்களையும் இணைத்து தான் நான் சொல்கின்றேன். ஆகவே நான் ஒட்டு மொத்தமாக இலங்கைத்தமிழர்கள் என்று சொல்கின்றேன். என்னுடைய கொள்கையில் ஆரம்பத்திலிருந்து இன்று வரை எந்த மாறுபாடும் இல்லை. இலங்கைத்தமிழர்கள் மதிப்போடும் மரியாதையோடும் பாதுகாப்போடும் அங்கே வாழ்க்கையை நடாத்த வேண்டும். அதற்கான ஒரு உகந்த சூழ்நிலையை இலங்கை அரசு ஏற்படுத்த வேண்டும். இலங்கைத்தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். இதில் இரண்டாம் கருத்துக்கே இடமில்லை. இது தான் என்னுடைய கொள்கை.
காவடி
Apr 13 2006, 07:08 PM
[quote]
ஒரு குறிக்கோள். ஒரு லட்சியத்தை அடைய வேண்டும் என்று ஒரு கனவு காண்கிறார்கள்
[/quote]
அப்படியென்றால்..
நேசன்
Apr 13 2006, 09:55 PM
சரி எங்களை நிராகரிக்காமல் ஒரு இலட்சியம் என்று சொல்வது நல்ல பண்பான சொல் பிரயோகம். அவ்வளவுதான்
Vasampu
Apr 13 2006, 11:08 PM
[i]முதலில் அம்மணிக்கு ஈழம் என்பது முழு இலங்கையைத் தான் குறிப்பதென்பது தெரியவில்லையா??
என்ன நேசன் உம்மை நீரே தேற்றிக் கொள்கின்றீரா??
அம்மணி செப்பியது:
ஒரு குறிக்கோள். ஒரு லட்சியத்தை அடைய வேண்டும் என்று ஒரு கனவு காண்கிறார்கள்
nallavan
Apr 13 2006, 11:14 PM
இன்றைய நிலையில் ஈழத்தமிழர் என்பது முழு இலங்கைத் தமிழர்களையும் குறிப்பதில்லை. இந்த விசயத்தில் ஜெயலலிதா சொன்னது சரியே.
கனவு காண்பது பற்றிச் சொன்னதன் சரியான அர்த்தம் எனக்கும் புரியவில்லை. நடக்கமுடியாத என்ற அளவில் சொல்கிறாரா? அல்லது இலட்சியம் என்ற அளவில் சொல்கிறாரா? என்று குழப்பமாக உள்ளது.
நேசன்
Apr 13 2006, 11:34 PM
ஈழம் என்பது எங்கள் தாய்நாட்டைத்தான் குறிக்கும். முழு இலங்கையும் அல்ல. இலங்கைத்தீவில் இரண்டு நாடுகள்.
ஈழம் மற்றது சிறீலங்கா.
எனவே ஜெயா அக்கா சொன்ன தமிழர் இலங்கைத்தீவில் இரண்டு நாட்டிலும் உள்ள தமிழர் பற்றி.
நேசன்
Apr 13 2006, 11:37 PM
ஜெயா அக்காவும் கனவுத்தொழிற்சாலையில் இருந்துதானே வந்தவா. அந்த பழக்கதோசம் தான். கனவு என்கிறா போலும்
வாழ்க டமில்நாடு
adithadi
Apr 13 2006, 11:53 PM
தமிழக அரசியல்வாதிகள் உருப்படியில்லாத புண்ணாக்குகள். எமது தீவிர போரட்டம் 23 வருடங்களை கடந்து விட்டது. இவ் அரசியல்வாதிகளின் சுயநலத்தால் எமது விடுதலை முடிவுக்கு வரவில்லை. ஆங்காங்கே தமிழ் நாட்டுபற்றாளர்கள் குரல் கொடுத்தால் அவர்களையும் சிறையில் போட்டு விடுகிறார்கள். தமிழ்நாடு மாபியா அரசியல்வாதிகளின் கைகளில் உள்ளது. இவர்களின் இலட்சியம் பணம் சம்பாதிப்பதுதான். :oops:
Selvamuthu
Apr 14 2006, 12:03 AM
அரசியல்வாதிகளின் வேலை மக்களை அடிக்கடி குழப்புவதுதானே!
அதைத்தான் இவரும் செய்கிறார்.
sayanthan
Apr 14 2006, 05:46 PM
QUOTE
கனவு காண்பது பற்றிச் சொன்னதன் சரியான அர்த்தம் எனக்கும் புரியவில்லை. நடக்கமுடியாத என்ற அளவில் சொல்கிறாரா? அல்லது இலட்சியம் என்ற அளவில் சொல்கிறாரா? என்று குழப்பமாக உள்ளது.
ம்.. ஆனால்.. அந்தச் செவ்வியில் அதனை அவர் சொன்ன தொனியில் நிறைவேறாத கனவு என்பது போன்று சொன்னதாக தோன்றவில்லை. எதுவோ அவர் அடக்கி வாசிக்க வேண்டிய கட்டாயம்.
இன்னும் கேட்டிருக்கலாம்.. கிளறியிருக்கலாம்..
sayanthan
Apr 14 2006, 05:48 PM
மற்றும் படி ஈழம் என்பது இன்றைய நிலையில் அது இலங்கையல்ல என்ற நிலையில்தான் நோக்கப்படுகிறது. நடைமுறையில் இது தான் யதார்த்தம். வேண்டுமானால் விவாதிக்கலாம் இல்லையென்று.
Vasampu
Apr 14 2006, 06:16 PM
பலர் ஈழம் என்பது வடகிழக்குத் தமிழர்களின் தாயகத்தைத் தான் குறிப்பதாக தவறாக எண்ணுவதாலேயே அப்படித் தெரிகின்றது. மற்றும் படி ஈழம் என்பது முழு இலங்கையையே குறிக்கின்றது. இல்லை யதார்த்தம் அதுவல்ல என்றால் பின்பு ஏன் தமிழீழம் என்ற வார்த்தைப் பிரயோகம்.
அகிலன்
Apr 14 2006, 06:43 PM
QUOTE(Vasampu)

அட பாவமே. இதில வசம்பூக்கு என்ன சந்தேகம்.?
சிங்கள நாட்டில் சிங்கள சொல்லாகிய ஈழம் எண்ற சொல்லை நாங்கள் நேரடியாக கடன் வாங்காமல் தமிழ்ழீழம் எண்டு தமிழோடை சேத்து சொல்லுறம்.... ஈழம் எப்படி சிங்களவனுக்கு சொந்தமோ அப்படியே அந்த சொல்லும் சொந்தம் எண்டு நீங்கள் சொல்லிதான் எங்களுக்கு தெரிய வேணும் எண்டதில்லை.
Vasampu
Apr 14 2006, 07:07 PM
அகிலன் wrote:

[i]அப்பு அகிலன்
முதலில் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று கருத்தெழுதுவதைத் தவிருங்கள். பக்கத்தை முழுமையாகப் படித்து விட்டு கருத்தெழுதுங்கள். மேலே சிலருக்கு ஏற்பட்ட சந்தேகத்தை தீர்க்கவே நான் எழுதினேன்.
அது சரி எப்போதிருந்து ஈழம் சிங்களச் சொல்லானது. பாடசாலையில் ஈழம் என்பது இலங்கையின் இன்னொரு பெயராகப் படிக்கவில்லையா??
அகிலன்
Apr 14 2006, 07:16 PM
[quote=Vasampu]
அகிலன் wrote:
[i]
அப்பு அகிலன்
முதலில் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று கருத்தெழுதுவதைத் தவிருங்கள். பக்கத்தை முழுமையாகப் படித்து விட்டு கருத்தெழுதுங்கள். மேலே சிலருக்கு ஏற்பட்ட சந்தேகத்தை தீர்க்கவே நான் எழுதினேன்.
அது சரி எப்போதிருந்து ஈழம் சிங்களச் சொல்லானது. பாடசாலையில் ஈழம் என்பது இலங்கையின் இன்னொரு பெயராகப் படிக்கவில்லையா??
அப்ப என்ன சொல்லுகிறீர்கள் தமிழ் சொல்லான ஈழம் சிங்கள நாட்டின் பெயரா ? அல்லது ஈழம் முழுவதும் தமிழரின் சொந்தமானதை சிங்களவன் பிடித்துவிட்டானா.?
பள்ளிக்கூடத்தில் வாத்தியார் சொல்லித்தாறதைப்பற்றி சிந்தித்து பார்க்கவே மாட்டீர்களா.? ஈழம் எண்ற பெயர் எதனால் எப்போ வந்தது எண்று யாரும் சொல்லித்தரவில்லையா.?
Vasampu
Apr 14 2006, 07:23 PM
அகிலன்
இல்லை ஈழம் என்ற பெயர் எப்போ எதனால் வந்ததென்று உமக்குத் தெரிந்ததை எடுத்து விடும். பார்ப்பவர்களுக்கு தெரியும் யார் வரலாறு தெரியாமல் புலம்புவது என்று!!!!!!!
அகிலன்
Apr 14 2006, 07:28 PM
QUOTE(Vasampu)
இல்லை ஈழம் என்ற பெயர் எப்போ எதனால் வந்ததென்று உமக்குத் தெரிந்ததை எடுத்து விடும். பார்ப்பவர்களுக்கு தெரியும் யார் வரலாறு தெரியாமல் புலம்புவது என்று!!!!!!! 
:lol:
அண்ணா நீங்கதான் எல்லாம் தெரிஞ்ச சுப்பர் எடுத்து விடுங்கண்ணா.
களத்தில இருக்கிற அனேகர் அறிவாளிகள் அவர்களுக்கு நான் சொல்லி தெரிய வேண்டி இல்லை. ஒண்று இரண்டு அரவேக்காடுகள் உங்களைபோல இருக்கிறார்கள்தான் அவர்களுக்கு சொல்லி வேலை இல்லை.
Vasampu
Apr 14 2006, 07:45 PM
அகிலன்
பறுவாயில்லை நான அரைவேக்காடென்றே வைத்துக் கொள்வோமே. எங்களுக்காக ஒரு முறை எடுத்து விடுங்கோ உங்க அறிவாளி;தனத்தை. தெரியாது புலம்பியிருந்தால் ஒத்துக் கொள்ளும். அதை விடுத்து புலம்பலை மறைக்க பொய் சொல்லி நழுவ வேண்டாம்.
அகிலன்
Apr 14 2006, 07:48 PM
QUOTE(Vasampu)
அகிலன்
பறுவாயில்லை நான அரைவேக்காடென்றே வைத்துக் கொள்வோமே. எங்களுக்காக ஒரு முறை எடுத்து விடுங்கோ உங்க அறிவாளி;தனத்தை. தெரயாது புலம்பியிருந்தால் ஒத்துக் கொள்ளும். அதை விடுத்து புலம்பலை மறைக்க பொய் சொல்லி நழுவ வேண்டாம்.
தெரியாது என்பதை ஒத்து கொள்ளுறீங்கள் போல நல்லது...
Vasampu
Apr 14 2006, 08:04 PM
[i]நான் தெரியவில்லை என்பதால்த் தானே உம்மைச் சொல்லும் படி கேட்கின்றேன். எல்லாம் தெரிந்தவர் எடுத்து விடுமன். எனியும் சொல்ல முடியவில்லை என்றால் புலம்பியதை ஒத்துக் கொள்ளும்.
எனிமேலாவது தேவையில்லாமல் எல்லாம் தெரிந்தவன் மாதிரிக் காட்டிக் கொள்ளும் அதி முட்டாள்த் தனத்தை நிறுத்திக் கொள்ளும்.
narathar
Apr 14 2006, 08:05 PM
ஈழம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தற்காலத்தில் இலங்கை என அழைக்கப்படும் தீவு பழங்காலத்தில் ஈழம் என அறியப்பட்டது. பழந்தமிழ் இலக்கியங்களில் காணப்பட்ட 'ஈழத்துணவு', 'ஈழத்துப் பூதந்தேவனார்' போன்ற சொற்கள் மேற்படி தீவின் தொடர்புகளைக் காட்டி நின்றன. பழந் தமிழ் மன்னர்களால் வெளியிடப்பட்ட சாசனங்களும் ஈழம் அல்லது ஈழ மண்டலம் என்ற பெயரைப் பயன்படுத்தின.
[தொகு]
பெயர்த் தோற்றம்
ஈழம் என்ற பெயர்த் தோற்றம் பற்றிப் பொதுக் கருத்து இல்லை இது பற்றிய வாதங்களும், எதிர் வாதங்களும் இன்னும் தொடர்ந்து வருகின்றன. ஈழம் என்ற பெயர் இத் தீவைக் குறிக்கும் பாளிமொழிச் சொல்லான 'சிஹலம்' என்பதிலிருந்து திரிந்தது எனக் கிருஷ்ணசாமி ஐயங்கார் போன்றவர்கள் கருதினார்கள். வேறு சிலரோ ஈழம் என்ற சொல்லே 'சிஹலம்' என்று திரிபடைந்தது என்பர். இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலேயே நிலை இப்படியாயின், இவ்வாறான ஆய்வுகள் அரசியல் பின்னணியால் பாதிக்கப்படுகின்ற தற்காலத்தில் முரண்பாடுகள் குறையும் வாய்ப்பு இல்லை.
[தொகு]
'தமிழு'ம் 'ஈழ'மும்
ஈழம் என்ற சொல்லுக்குப் பாளி அல்லது சிங்கள மூலம் காட்டுகின்ற அதேவேளை சில ஆய்வாளர் 'தமிழ்' என்ற சொல்லும் ஈழம் என்ற சொல்வழியாக, 'சிஹலம்' என்பதிலிருந்தே உருவானதாகக் காட்ட முயல்கின்றனர்.
[தொகு]
தற்காலத்தில் 'ஈழம்'
இலங்கையில் இன முரண்பாடுகள் அதிகம் கூர்மையடையாதிருந்த காலத்தில் ஈழகேசரி, ஈழநாடு போன்ற பெயர்கள் செய்திப் பத்திரிகைகளின் பெயர்களாகப் பிரபலம் பெற்றிருந்தன. அரசியலில் இன வேறுபாடுகள் விரிவடைந்துவந்தபோது, அரசியல் அரங்கில், இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளைக் குறிக்கத் 'தமிழீழம்' என்ற சொல்லைப் பயன் படுத்திவந்தனர். இலங்கையில் தமிழர்களுக்குத் தனி நாடு வேண்டுமென்ற கோரிக்கையைச் சில அரசியல் கட்சிகள் முன்வைத்தபோது, கோரப்பட்ட அந்நாட்டுக்கும் 'தமிழீழம்' என்ற பெயரையே பயன்படுத்தினார்கள். காலப்போக்கில், பேச்சு வழக்கிலும், சிங்கள இனத்தவர் மத்தியிலும் 'தமிழீழம்' சுருங்கி ஈழம் ஆகியது. ஒரு காலத்தில் முழு இலங்கைத் தீவையும் குறிக்கப் பயன்பட்ட சொல், இன்று அதன் ஒரு பகுதியை மட்டுமே குறிக்கும் சொல்லாக மாறியுள்ளது.
"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D" இலிருந்து மீள்விக்கப்பட்டது
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%88%E0%...%AE%AE%E0%AF%8D
Thala
Apr 14 2006, 09:14 PM
QUOTE(narathar)
ஈழம்
[தொகு]
பெயர்த் தோற்றம்
ஈழம் என்ற பெயர்த் தோற்றம் பற்றிப் பொதுக் கருத்து இல்லை இது பற்றிய வாதங்களும், எதிர் வாதங்களும் இன்னும் தொடர்ந்து வருகின்றன. ஈழம் என்ற பெயர் இத் தீவைக் குறிக்கும் பாளிமொழிச் சொல்லான 'சிஹலம்' என்பதிலிருந்து திரிந்தது எனக் கிருஷ்ணசாமி ஐயங்கார் போன்றவர்கள் கருதினார்கள். வேறு சிலரோ ஈழம் என்ற சொல்லே 'சிஹலம்' என்று திரிபடைந்தது என்பர். இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலேயே நிலை இப்படியாயின், இவ்வாறான ஆய்வுகள் அரசியல் பின்னணியால் பாதிக்கப்படுகின்ற தற்காலத்தில் முரண்பாடுகள் குறையும் வாய்ப்பு இல்லை.
இவ்வளவு பிரச்சினை இருக்கும் போது ஆராயாமல் வசம்பு தான் சொல்லுற சொல்தான் சரி என்கிறாரே..... அது சரியா நாரதார் அண்ணா...???
Thala
Apr 14 2006, 09:15 PM
[quote=Vasampu]
எனிமேலாவது தேவையில்லாமல் எல்லாம் தெரிந்தவன் மாதிரிக் காட்டிக் கொள்ளும் அதி முட்டாள்த் தனத்தை நிறுத்திக் கொள்ளும்.
அறிவுரை எல்லாம் சொல்லுறீங்கள் போலகிடக்கு...... மற்றவைக்கு மட்டும்தானே அறிவுரை...????
Vasampu
Apr 14 2006, 09:23 PM
நாரதர்
ஏன் அவசரப்பட்டீர். சிலரின் புலம்பலை பார்க்க விட்டிருக்கலாமே. எனிப் பாரும் இதைத்தான் தான் சொல்ல வந்ததாக வந்து ரீல் விடுவார்.
ஈழம் என்பதன் மூலம் பாளி மொழியிலிருந்து வந்ததாக கருதப்படுகின்றதேயொழிய ஈழம் என்ற சொல் சிங்களச் சொல்லல்லவே. அது தமிழ் தான். ஈழம் ஈழதுபீபம் என்பன இலங்கையை குறிப்பவை தானே.
அடுத்தவரும் வந்திட்டார் சேர்ந்து புலம்ப
Vasampu
Apr 14 2006, 09:30 PM
இங்கே ஈழம் என்பது சிங்களச் சொல் என்று அகிலன் எழுதிய தவறைத் தான் நான் சுட்டிக் காட்டினேன். அது புரியாமல் தலாவும் ஏன் புலம்புகின்றாரோ??
Thala
Apr 14 2006, 09:48 PM
QUOTE(Vasampu)
நாரதர்
ஏன் அவசரப்பட்டீர். சிலரின் புலம்பலை பார்க்க விட்டிருக்கலாமே. எனிப் பாரும் இதைத்தான் தான் சொல்ல வந்ததாக வந்து ரீல் விடுவார்.
ஈழம் என்பதன் மூலம் பாளி மொழியிலிருந்து வந்ததாக கருதப்படுகின்றதேயொழிய ஈழம் என்ற சொல் சிங்களச் சொல்லல்லவே. அது தமிழ் தான். ஈழம் ஈழதுபீபம் என்பன இலங்கையை குறிப்பவை தானே.
அடுத்தவரும் வந்திட்டார் சேர்ந்து புலம்ப
வசம்பர் யாழ்ப்பாணம் பற்றிய பதிவை யாழ்களத்தில் பல மாதங்களுக்கு முன்னரே இட்டு இருக்கிறேன்.... அதுவும் இதே விக்பீடியா தமிழில் இருந்து சுட்டு..... ( உதவி செய்ததும் என்னுடன் கூட இருந்ததும் அகிலன்)
http://www.yarl.com/forum/viewtopic.php?t=6493
அப்போது நாங்கள் படித்த விடயம்தான் நாரதர் போட்டது...!
முதலில் வசம்பர் பொது அறிவை வளர்பது நல்லது... சுற்றி பலவிடயம் நடைபெறுகிறது... ஆராய வேண்டி பல விடயம் இருக்கிறது....
Thala
Apr 14 2006, 09:50 PM
QUOTE(Vasampu)
இங்கே ஈழம் என்பது சிங்களச் சொல் என்று அகிலன் எழுதிய தவறைத் தான் நான் சுட்டிக் காட்டினேன். அது புரியாமல் தலாவும் ஏன் புலம்புகின்றாரோ??
அது சரி விளுந்தனீர் இப்ப மீசையில மண்பட இல்லை எண்டுறதுபோலகிடக்கு.... உப்பிடி பலபேரைப்பாத்திட்டம்....
Vasampu
Apr 14 2006, 10:12 PM
[i]தலா
தலைகால் தெரியாமல் புலம்புவதை நிறுத்தும். விக்கிபீடியாவின் தகவலை இணைத்த நீரே மேலே இருக்கிற தகவல்களில் பிழை இருக்கலாம். சரியான தகவல் தெரிந்தோர் தயவு செய்து திருத்த உதவவும்...
Subiththiran
Apr 14 2006, 11:31 PM
காலப்போக்கில்இ பேச்சு வழக்கிலும், சிங்கள இனத்தவர் மத்தியிலும் 'தமிழீழம்' சுருங்கி ஈழம் ஆகியது.ஒரு காலத்தில் முழு இலங்கைத் தீவையும் குறிக்கப் பயன்பட்ட சொல் இன்று அதன் ஒரு பகுதியை மட்டுமே குறிக்கும் சொல்லாக மாறியுள்ளது.
வசம்பு இதையாவது ஏற்றுக்கொள்வீர்கள் என்று நினைக்கின்றன்.
காவடி
Apr 15 2006, 05:06 AM
ஐயாக்களே.. ஈழம் இலங்கையைக் குறிக்கின்ற சொல்லாகத்தான் இருந்தது. ஆனால்.. நடைமுறையில் ஈழம் தமிழீழத்தின் சுருக்கசொல்லாகி விட்டது. (பல நாடுகளுக்கு இரண்டு பெயர் இருப்பதில்லையா..) இலங்கை அரசு கூட.. தனது அரச ஊடகத்துறைக்கு ஈழம் என்பது பிரிவினையை உணர்த்தும் சொல் என அறிவித்தது. அதனால் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் அது வரை ஒலித்துவந்த.. ஈழம் என்ற சொற்கள் உள்ள பல பாடல்களை ஒலிபரப்பமுடியாமல் போனது. (உ+ம்) மீன் மகள் பாடுகிறாள்..
இதுக்குபிறகும் இல்ல ஈழம் எண்டால் இலங்கை தான் எண்டு சொன்னால்.. அன்ரன் பாலா சொன்னமாதிரி.. ஐயாக்கள்.. இது நீதிமன்றம் இல்ல.. சட்ட நுணுக்கங்களோடை உங்கடை விவாத திறமையை காட்ட.. நடைமுறையில என்ன நடக்குது எண்டு பாருங்கோ..
mathanarasa
Apr 15 2006, 05:26 AM
வசம்பு சொல்வது சரி! ஈழம் என்றது தொன்று காலம் தொட்டே வழங்கி வந்த பெயர்!! இலங்கையை சிங்களவர்களுக்கு சொந்தமானது. தமிழர்கள் எல்லாம் சிங்களவர் என்ற மரத்தைச் சுத்தி வழரும்படர் கொடிகள் என்று முந்தி ஆட்சி புரிந்த சந்திரிக்கா( முந்தி அம்மா என்று எல்லாம் மதிப்பு கொடுப்போம். ஆனால் எனி தேவையில்லைத் தானே! அவரின் ஆட்டம் முடிந்து விட்டது தானே. இப்போது மகிந்தாவிற்கு தான் கால் பிடிக்க வேணும்)சொல்லும்போது அதை ஏற்றுக் கொண்டவர்கள் நாங்கள். எனவே ஈழம் என்ற சொல் சிங்களவர்கள் பின்பற்றி வந்த பாளி மொழியில் இருந்து தான் வந்தது என்பதை அடித்துக் கூறுவோம்.
எம்மோடு நல் உறவாக இருக்கம் வசம்பு பொன்றவர்களை அவமதிப்பது இலங்கையின் இறைமையை அவமதிப்பதற்கு சம்ம் என்று சொல்லி வைக்க விரும்புகின்றேன்
mathanarasa
Apr 15 2006, 05:34 AM
QUOTE(Vasampu)
முதலில் அம்மணிக்கு ஈழம் என்பது முழு இலங்கையைத் தான் குறிப்பதென்பது தெரியவில்லையா??
என்ன நேசன் உம்மை நீரே தேற்றிக் கொள்கின்றீரா??
QUOTE(Vasampu)
முதலில் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று கருத்தெழுதுவதைத் தவிருங்கள். பக்கத்தை முழுமையாகப் படித்து விட்டு கருத்தெழுதுங்கள். மேலே சிலருக்கு ஏற்பட்ட சந்தேகத்தை தீர்க்கவே நான் எழுதினேன்.
QUOTE(Vasampu)
[i]
அகிலன்
இல்லை ஈழம் என்ற பெயர் எப்போ எதனால் வந்ததென்று உமக்குத் தெரிந்ததை எடுத்து விடும். பார்ப்பவர்களுக்கு தெரியும் யார் வரலாறு தெரியாமல் புலம்புவது என்று!!!!!!!

:lol: :lol:
QUOTE(Vasampu)
அகிலன்
பறுவாயில்லை நான அரைவேக்காடென்றே வைத்துக் கொள்வோமே. எங்களுக்காக ஒரு முறை எடுத்து விடுங்கோ உங்க அறிவாளி;தனத்தை. தெரியாது புலம்பியிருந்தால் ஒத்துக் கொள்ளும். அதை விடுத்து புலம்பலை மறைக்க பொய் சொல்லி நழுவ வேண்டாம்.
எங்கள் வசம்பு அவர்கள் எவ்வளவு அற்புதமாக மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லியிருக்கின்றார். அதை கௌரவிக்க முதலில் கற்றுக் கொள்ளுங்கள்.
புலம்ப வேண்டாம்.
அரைவக்காடு
கற்றுக் கொள்ளுங்கள்
எடுத்தேன், கவிழ்த்தேன்
பொய் கூறுதல்
நழுவ வேண்டாம்
என்று இன்னாரென்ன தமிழின் அரிய சொற்களைப் பாவித்து, ஒரு பேராசிரியர் தகுதிளை நிருபித்துள்ளார். (யாரும் களவாக இந்தியாவில் சேட்விக்கட் வாங்கியதாக நினைக்க வேண்டாம். இந்தியாவிற்கான அந்த உறவு முறை வேறு)
தொடர்ந்து பல அரிய சொல்களைப் பாவித்து கட்டுரை வரைய வசம்புவை கௌரவிக்கின்றோம்.
kavithaa
Apr 15 2006, 05:37 AM
இவர்கள் தேர்தல் காலத்தில் என்ன வேண்டுமானலும் சொல்வார்கள்
Vasampu
Apr 15 2006, 11:08 AM
அப்பு மதனராசா
சும்மா சொல்லக் கூடாது நன்றாகத்தான் ஜால்ரா அடிக்கின்றீர். அரைவேக்காடு என்ற சொல்லை யார் உபயோகித்தது என்று பக்கத்தை முழுவதுமாக படித்துப் பாரும் தெரியும். அப்படி எழுதியதைத் தான் நான் சுட்டிக் காட்டி எழுதியுள்ளேன். கண்களில் ஒன்றும் கோளாறு இல்லைத் தானே.
Thala
Apr 15 2006, 03:39 PM
[quote=Vasampu][i]தலா
தலைகால் தெரியாமல் புலம்புவதை நிறுத்தும். விக்கிபீடியாவின் தகவலை இணைத்த நீரே
மேலே இருக்கிற தகவல்களில் பிழை இருக்கலாம். சரியான தகவல் தெரிந்தோர் தயவு செய்து திருத்த உதவவும்...
நான் அங்கு சொன்னது இதைவிட விளக்கமான விளக்கம் இருந்தால் வந்து தெளிவுபடுத்துங்கள் என்பது உமக்கு நான் விளக்கம் இல்லாமல் கேட்டதாக தெரிகிறதா...???
ஈழம் என்கின்ற பதம் தோண்ற காரணம் என்ன எந்த மொழியில் இருந்து வந்தது என்கின்ற ஆராச்சியை மொழியியலாளர்கள், தொல்லியல் ஆய்வாளர்களாலேயே சொல்ல முடியவில்லை... இதுக்குள்ள நீர் வந்து பாடப்புத்தகத்தில வந்தது... ஆசிரியர் சொன்னவர், சரியாய்தான் இருக்கும் எண்று சொல்லி கொள்கிறீர்.... அதை ஏற்றுக்கொள்ள மாட்டம் என்பவர்களை உமது பாணியில் தூற்றாமல் வேறவேலையைப்பாருமோய்...
இல்லை யாராவது சிங்களவனிடம் அவன் ஈழத்தவன், தன் நாடு ஈழம் எண்று எழுத்தில் வாங்கிவாரும்...! பாக்கலாம் ( இதுதான் நிதர்சனம்.)
Nitharsan
Apr 15 2006, 10:13 PM
எவனோ புட்ட பற்றி கதைக்க இவங்கள் சோத்தை பற்றி கதைக்கிறாங்க... :roll: :roll:
ஒரு செய்தி வந்தா அதற்க்குரிய விமர்சனங்களை வைக்கலாமே! அதை விடுத்து தேவையற்ற விவாதங்களை தவிர்க்கலாமே! :idea: :!: :!: :!:
Thala
Apr 15 2006, 10:30 PM
நீங்க வேறயப்பா நிதர்சன்..! :twisted:
ஜெயலலிதா சொன்ன ஈழம் எண்ட பதம் பிழையாமில்லை அதுதான் விவாதம்... கருப்பொருளை அண்டித்தான் விவாதம் நடக்குது ஆக்கும்.... அதுவும் வசம்பண்ணா பாணியிலேயே.... 8) 8) 8)
நேசன்
Apr 15 2006, 11:53 PM
ஈழம் என்றால் நாங்கள் தான்,பிறகு என்ன ஆராய்ச்சி.
எதிலுமே தளம்பல் நிலை.
ஈழம்+சிறீலங்கா =இலங்கைத்தீவு
KULAKADDAN
Apr 16 2006, 06:55 AM
இப்பகுதியில் ஈழம் , இலங்கை என்பவை தமிழ் சொல்லா என பலரும் சந்தேகத்தோடு கருத்துக்கள் எழுதியிருப்பதால் அச்சொற்கள் பற்றி இராம , கி அவர்கள் தனது பதிவு ஒன்றில் எழுதிய விளக்கம்.
தமிழ் சொற்கள் எந்த அடிச்சொல்லில் இருந்து உருவாகி இருக்கலாம் என பல கட்டுரைகளை அவர் தந்துள்ளார்.
இலங்கு>இலங்கை = ஒளிவிடுகிற இடம்; அங்குள்ள காடெல்லாம் மஞ்சளாகப் பூத்ததோ, என்னமோ, எனக்குத் தெரியாது. கடல் கொண்ட பழந் தமிழகம் (அதன் மிஞ்சிய பகுதிகளில் இன்றைய இலங்கையும் ஒன்றே. யார் ஏற்காவிட்டால் என்ன, நம்முடைய பழைய நிலம் அங்கும் அதற்குத் தெற்கும் இருக்கிறது.) பற்றிப் பேசுகிற போது 49 நாடுகள் தவிர, ஒளி நாடு என்ற ஒன்றும் சொல்லப்படும்.
இலம்>ஈலம்>ஈழம் = இதுவும் ஒளி விடுகிற இடம் தான்.
ஒளி என்பது போக, இன்னொரு விதமாவும் இந்தச் சொற் பிறப்பைப் பார்க்கலாம். அது ஈல்தல் = பிரித்தல்; ஈலம்>ஈழம் என்பது பெருநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்ட நிலம்; ஈலப் பட்ட நிலம் என்றும் சொல்லலாம். ஈல்தலின் நீட்சியாய் ஈள்தலும், அந்த ஈள்தலைச் செய்யும் ஓர் ஆயுதம் ஈட்டி என்பதையும் எண்ணிப் பார்க்கலாம்.
நன்றி இராம கி.
http://valavu.blogspot.com/2006/03/blog-post_13.html
இதை தொகுப்பதில் உதவிய வசந்தனுக்கும் நன்றி.
அதற்கப்பால்
ஈழம் எனும் சொல் சங்க இலக்கியங்களில் இருந்து பாவனையில் இருக்கும் சொல், சங்க காலத்தில் சிங்களம் எனும் மொழியே தொன்றாத காலம்.
அப்படி இருக்கும் போது சிங்களத்தில் இருந்து தமிழுக்கு வந்திருக்குமோ எண்டது சந்தேகம் தான்.
This is a "lo-fi" version of our main content. To view the full version with more information, formatting and images, please
click here.