புலம்

தூரத்துத் தமிழரின் தூதுவராய்......

கைகளிலிருந்து விடுபட்டு காற்று மண்டலம் தாவும் பலூன்களே.... ஈழத் தாய் நிலம் விரைய எவருக்குத்தான் ஆசையில்லை! இருந்தாலும் - எங்களின் உணர்வுகளையும் எடுத்துப் போங்கள் சிவப்பாய்.... மஞ்சளாய் சின்னச் சின்னக் குமிழ்களாய் ஆடி அசைந்து அலை அலையாய் மேலெழும்பும் மெல்லிய பாலுன்களே காற்றடைத்த உங்கள் உடலில் - எம் கனவுகளையும் அடைத்துப் போங்கள் தூரத்துத் தமிழரின் தூதுவராய் சேதி சொல்லத் தேன்தமிழ் ஈழம் போங்கள்.

பெண்கள் சந்திப்பு மலர் 2002 - ஒரு பார்வை

30/09/2003

உணர்வுகள் கூடாத போது ஒருவனுடன் கூட வேண்டிய உளவலி தரும் பால்வினைத் தொழிலால் உலகளாவிய ரீதியில் பெண்கள் துன்புறும் போது அது பற்றி நாம் பேசுவதே தப்பு என்றும், பாரதூரமான குற்றமென்றும், அருவருப்பான செயலென்றும், அது பற்றிப் பேசுபவர்கள் பண்பற்றவர்கள், அத்தொழிலில் ஆர்வம் கொண்டவர்கள்... என்றும் எமது சமூகத்துள் பல்வேறு திசைகளிலிருந்தும் குரல்கள் எழுகின்றன.

புலம்பெயர் எழுத்தாளருக்கான அறை கூவல்.

11/01/2003

புலம்பெயர் எழுத்தாளர் சிலர் தமது திறமையில் நம்பிக்கை இல்லாததால் இந்த கொடிய தன்மை மனதுள் விழுது விடத்தொடங்கி உள்ளது எனலாம். எனது கட்டுரையை கொள்ளையடித்தார் என்றும் எனது கவிதையை கொள்ளையடித்தார் என்றும் பலவாறாக அடித்துக்கொள்கிறார்கள். ஒருவர் தான் எதையாவது எழுத வேண்டும் என எழுத்துலகத்துள் கால் ஊன்றுவதில்லை. மன உணர்வுகளையே எழுத தொடங்குகின்றான்.

புலம்பெயர்வாழ்வில் எம் இளைய சமூகத்தின் கல்வி

12/12/2001

சொந்த மண்ணிலிருந்து வேரோடு பிடுங்கியெடுக்கப்பட்டு, ஒரு அந்நியச்சூழலில், புலம்பெயர் நாடுகளில் தம் இருப்பை நிலை நாட்டும் எம் சமூகத்தின் ஏக்கமும் அக்கறையும் எம் வருங்காலத் தலைமுறை சார்ந்து இருப்பது உண்மை. குறிப்பாக கல்வித் தகைமையே பெருமளவில் எம் தலைமுறையின் எதிர்காலத்தை இப்புலம்பெயர் நாடுகளில் நிர்ணயிக்கப் போகின்றது என்பதில் சந்தேகமில்லை. அத்துடன் போர்ச் சூழலின் மத்தியில் கல்வி கற்பதற்கான அனைத்து அடிப்படை வசதிகளும் மறுக்கப்பட்டு, எம் மண்ணில் நாம் பாரம்பரியமாகக் காத்து வந்த கல்விச் சொத்தை எம் மாணவ சமூகம் இழந்து நிற்கும் இக்காலகட்டத்தில் புலம்பெயர் நாடுகளில் கல்விக்கான அனைத்து வசதிகளையும் கொண்டு வாழும் இளைய சமுகத்திற்கு, "தமிழன்" என்ற ரீதியில் சிறந்த கல்வியைப் பெற்று எம் தாய்நிலத்தின் நாளைய வரலாற்றைக் கட்டியெழுப்ப வேண்டிய தார்மீகக் கடமையுமுண்டு. இவற்றைக் கருத்திற் கொண்டு புலம்பெயர் வாழ்வில் எம் இளம் சமுதாயத்தின் கல்வி சம்பந்தமான சில கருத்துக்களை முன்வைப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

அந்த மௌன நிமிடங்களில்.........

நூற்றுக்கணக்கான கிலோமீற்றர்களைக் கடந்து வந்த களைப்பையும் மீறிய சோகம் மாவீரர் குடும்பத்தினருக்கென மண்டபத்தின் முன்வரிசையில் ஒதுக்கப்பட்டிருந்த ஆசனங்களில் அமர்ந்திருந்தவர்களின் முகங்களில் அப்பியிருந்தது. தமிழர்களின் பழங்காலக் கோட்டை வடிவில் அமைக்கப்பட்டிருந்த மேடையும், மேடைக்கு இடது புறமாக அமைக்கப்பட்டிருந்த துயிலும் இல்லமும், அதைச்சுற்றி வைக்கப்பட்டிருந்த மலர்களும், ஓலித்துக் கொண்டிருந்த மாவீரர் கானமும்------- யேர்மனியின் வர்த்தகநகரான டோட்மூண்ட் (Dortmund] நகன் மத்தியில் அமைந்துள்ள அந்த மண்டபத்தின் உள்ளே நுழைந்த போதே எனக்குள்ளே ஒரு பயபக்தியை ஏற்படுத்தி விட்டது. நான் வேறொரு உலகத்தினுள் வந்து நிற்பது போலவே உணர்ந்தேன். யேர்மனியின் நெரிசல் நிறைந்த சாலைகளும் அழுத்தம் நிறைந்த வாழ்வும் எனக்கு மறந்து விட்டது.

புலத்தில் தமிழ் அடையாளம்!

புலம் பெயர் தேசங்களில் வாழும் இளைய தலைமுறையினர் தாய்நிலத்தின் எண்ணங்களோடும் உணர்வோடும் வாழ்கின்றார்களா? அல்லது புலச் சமூகத்தோடு ஒன்றி வாழ்கின்றார்களா? என்பது பலர் மனங்களில் எழுகின்ற கேள்வியாக இருக்கின்றது. அத்தோடு "இங்கேயே பிறந்து வளரும் குழந்தைகளின் எதிர்காலம் இங்கேதான் நிச்சயிக்கப்படுகின்றது. ஆகவே அவர்களுக்கு தாயகம் பற்றிய சிந்தனை அவசியமற்றது" என்ற கருத்துடைய சிலரும் இருக்கத்தான் செய்கின்றார்கள். ஆகவே இப்படியான கேள்விகளுக்கு விடை காணும் நோக்குடன் தமிழ் அடையாளத்தின் தன்மைகள் அலசப்படவேண்டும். இளைய சந்ததியினர் மத்தியில் தமிழ் அடையாளம பற்றிய விரிவானதும் தெளிவானதுமான பார்வையை உருவாக்க வேண்டிய தேவையும் இன்றியமையாததாகின்றது.