இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் சூடுபிடித்திருக்கும் இந்த வேளையிலே இரு பிரதான கட்சி வேட்பாளர்களும் தமது வெற்றிக்கான பிரச்சார நடவடிக்கையினை ஆரம்பித்துள்ளார்கள். அடிப்படையில் எந்தவித வேறுபாட்டையும் இரு கட்சிகளுக்கும் இடையில் காணமுடியவில்லை. மகிந்த ராஜபக்சா இனவாத சிந்தகனைகள் கொண்ட கட்சியிடமும், ரணில் விக்கிரமசிங்கா சிறுபான்மைக்கட்சியுடனும் கூட்டுச் சேர்ந்து தேர்தல் பிரச்சாரங்களை முடுக்கிவிட்டாலும், தமிழர் பார்வையில் இந்த இரண்டு கட்சிகளுமே பேரினவாத சிங்கள பெரும் தேசியத்துடனும், அதனுடைய வர்க்க நலன்களுடன் தம்மை இணைத்து பெரும்பான்மை சிங்கள சமூகத்தின் பொருளாதார சமூக கலாச்சார விழுமியங்களில் மாத்திரமே அக்கறை கொண்டவர்களாக தம்மை இந்த இரண்டு கட்சிகளும் அடையாளப்படுத்தி நிற்பதையும், தமிழர்களினது சமூக, பொருளாதார, அரசியல், கலாச்சார மாற்றங்களிலோ அல்லது சிறுபான்மை இனங்களினது பிரச்சனையில் ஓர் நிரந்தரத் தீர்வை காணவேண்டும் என்ற அடிப்படையில் இன்னும் ஓர் தெளிவான தீர்வை இவர்கள் முன்வைக்கவில்லை.