தடையா எனக்கேட்ட ரொறன்ரோவின் பொங்குதமிழ்!
தடையா எனக்கேட்ட
ரொறன்ரோவின் பொங்குதமிழ்!
எங்கெங்கு காணினும் மக்களடா-அட
இரண்டுநிறம் அவர் வண்ணமடா-அந்தப்
பொங்குதமிழ் வந்து கனடியமே-புதுப்
பூவாய் விரிந்தது புலத்திலடா-மடை
தங்குதடை யின்றிப் பாய்ந்துவரும்-ஆறாய்த்
தானைப டைத்தது தமிழினமே-யாம்
இங்கு(ம்)த டையில்லை எங்குமில்லை-எனும்
இடியோசை கண்டது வானமதே!
மஞ்சள் சிவப்பென்ற வண்ணமடா-அந்த
மணித்திடல் எங்ஙணும் இலட்சமடா-எங்கள்
கொஞ்சும் சிறுவரும் பேரருமாய்-வந்து
கூப்பிடக் கண்டது உலகமடா-வான்
மஞ்சு வெடித்திடச் சேதிசொன்னார்-பூமி
மன்றில்நாம் ஒற்றுமை என்றுரைத்தார்-தடை
நெஞ்சில் இடித்திட்ட நீளுலகே-எங்கள்
நீதிக்கு வேலியா கேளுமென்றார்!
பாரே ஒருமுறை பாருமென்றார்-நீர்
பாரின் குருடரா சொல்லுமென்றார்-செம்
ஆறாய் ஓடுமெம் குருதியிலே-எம்மை
அழிக்கும் சிங்கள ஆட்சியிலே-புகை
நீறாய் எரிகின்ற நிலத்தினிலே-முட்டி
நெஞ்சு வெடிக்குது புலத்தினிலே-பெரும்
வாறாய் நீங்கள் தடையிடவோ-நாளை
வருந்தவே கண்டிடும் கனடியமே!
என்றவோர் இலட்சக் குரலெழுந்து-ஒன்றாய்
ஏற்று உரைத்தனர் பிரகடனம்-சிங்கர்
கொன்று குவித்திடும் தாயகத்தில்-விலை
கொடுத்தும் ஈழமே கண்டிடுவோம்-தடை
நின்று கொடுத்திடும் தனியவரே-இனி
நீவிரே கண்டிடத் தமிழீழம்-நாம்
வென்று எடுப்போம் என்றனரே-ஓசை
விண்வெளி யெங்கும் பரந்ததுவே!
-புதியபாரதி
Recent comments
39 weeks 6 days ago
40 weeks 3 days ago
48 weeks 3 days ago
49 weeks 6 days ago
1 year 18 weeks ago
1 year 47 weeks ago
2 years 24 weeks ago
2 years 37 weeks ago
2 years 37 weeks ago
2 years 37 weeks ago