வரலாற்றோடு வாழ்ந்தவன்

Palraj

ஈழத்தமிழரின் வரலாற்றை எழுதிய
வன்னிச் சிங்கம் ஒன்று கண்ணை மூடிக் கொண்டது
முடியாது என்ற சொல்லுக்கு முற்றுப் புள்ளி வைத்தவனே
சொல்லுக்கும் செயலுக்கும்
வடிவம் எழுதிய வரலாற்று வீரனே
என்னத்தை நான் எழுத
அடங்காத புலி உனக்கு
தமிழன் பெருங் காடே கவி எழுதும்
தமிழ் ஈழப் பெரும் கனவை
உன் மூச்சுக்குள்ளே சுமந்தபடி
முடிவைத் தேடி திரிந்தவன் நீ
எதிரி அவன் வீயுகத்தையே
தைரியமாய் உடைத்தவன் நீ
பத்தி வந்த பகை நெருப்பை
ஒத்தக்காலாலே சத்தமின்றி நூத்தவன் நீ
போரியலின் தத்துவத்தை
புரிய வைத்த புரட்சி வீரா
உன்னையா இழந்தோம்
எம் மண்ணையல்லவா இழந்தோம்
பாண்டவரின் களத்தினிலே
நீண்ட பகை முடித்தவனே
அருச்சுனனின் சேனையிலே
அபிமன்யுவா போய்விட்டான்
ஆ புத்திரனே
தர்மத்தின் விரோதிகளை
எங்கள் மண்ணுக்குள்ளே புதைத்தவனே
உன்னையா இழந்தோம்
உன் பாதம் பட்ட பாதையெல்லாம்
வீரத்தின் விளைச்சல் கண்டோம்
எங்கள் மண் எழுதும் வரலாற்றில்
நெப்போலியன் நீ என்று
எப்போதும் நினைவு கொள்வோம்
மண்ணிற்குள் புதைக்காதீர்
இந்த மாமனிதனின் வித்துடலை
எங்கள் மனங்களிலே விதைத்துவிட்டோம்
இந்த மாவீரன் சரித்திரத்தை.

நோர்வேயிலிருந்து பா. உதயகுமார்