தேசத்தின் குரலான தேசப் பிதாமகன்

aaa3.jpg

தமிழீழ மண்ணின் வாசனையை
தரணியெங்கும் விதைத்த தமிழா
தமிழ்மொழியின் இனிமைதனை
இனிமையாய் உரைத்த மதியழகே

தலைவனின் அரசியல் பலமாகி
தேசத்தின் குரலாக ஒலித்தவனே
ஆறுதல் தேடிவரும் தலைவனை
அணைத்து நிற்கும் அண்ணனே

நெருப்புக் கடலுக்கு நிகராக
நேர்முகம் நிமிர்த்தி நின்றவரே
நிரப்ப முடியாத பேரிழப்பாகி
நெஞ்சில் நிறைந்த கலாநிதியே

நெஞ்சை பிளக்கும் நிகழ்வுகளை
நிதானமாக சொல்ல வல்லவரே
துயரங்கள் ஆன்மாவை அமுக்க
நீங்காத நினைவாக நிலைத்தவரே

பேச்சாற்றல் கொண்ட போராளியாக
பெரும்பகை தொலைத்த பிதாமகனே
எழுத்தாற்றல் கொண்ட பேரொளியாக
தமிழீழத்தில் எழுந்த தலைமகனே

புற்றிலிருந்து வெளியேறும் விசமிகளை
புன்னகையால் புதைத்த புண்ணியனே
புற்றுநோய் தாக்கியும் புலன்கெடாத
புத்துயிராய் பூத்துநின்ற புலிமகனே

விடுதலைக் குடும்பத்தின் முத்தாக
வீரத்தாய் நிலத்தின் முதல்சொத்தாக
ஊரிலுள்ள பெருசுகளின் முகவரியே
உலகத்து இளசுகளின் முதல்வரியே

கார்த்திகையில் தலைவன் அருள்பொழிய
எங்களுக்குப் பொருள்பொழியும் தந்தையே
தமிழ் அகராதியின் முதற்சொல்லாய்
என்றுமே உச்சரிக்கக்கூடிய அன்புத்தாயே

தமிழ்க்குடில் இணையத்தின் ஒப்பாரியாக
உங்கள் உடல்நிலை நலமறிந்தோம்
நிமிடமுட்கள் சுழன்றுபோக துடிதுடித்தோம்
நினைவு அலைகளில் வலிசுமந்தோம்

மாபெரும் அரங்குகளில் விசிலடித்து
உங்கள் வாஞ்சைத்தமிழை ரசித்தோம்
விறைத்த முகத்திலே விழிநீர்கசிய
விடுதலைப்பாதையில் விரைந்து நடப்போம்

தமிழன்
நோர்வே

Tiger aircraft flies over Trincomalee

Tiger aircraft flies over Trincomalee!

(14th July 2007 - 09:00 S.L.T) 

 

A light air craft belonging to tiger organization flew over the northern coastal area in Trincomalee say reports. This has been confirmed by radar and the S.L. Navy too has observed the air craft say these reports. Several civilians too have reported seeing the air craft.

The aircraft had flown to northern coastal area in Trincomalee and then had flown towards Pulmude.

Security sections say the flight may have been a training exercise of the tigers. However, security has been tightened to meet any eventuality say security sources. owever, However