பொங்கு தமிழ்
Submitted by admin on Sun, 15/06/2008 - 08:43.
பொங்குதமிழ் பொங்குதமிழ்
எல்லைகள் கடந்து எங்கும் தமிழ் என்றே
பொங்குதமிழ் பொங்குதமிழ்
எரிமலையின் உச்சியிலே பிறப்பெடுத்த அக்கினிபோல்
உணர்வது பெங்கி உயிர்த்தெழு தமிழே
மூச்சதுதெறிக்க
நீ மூண்டெழு தமிழே
மூண்டெழு மூண்டெழு
முடிவு ஒன்றை காணும் வரை
சொந்த மண்ணில் சுதந்திரம் பிறக்க
சங்கே முழங்கென்று நீ பொங்குவாய் தமிழே
உயிர் தனை விதைத்து நிலமதை மீட்ட
விடுதலை வீரனின் கனவுகள் மெய்ப்பட
எழுவாய் தமிழா எங்கள் நிலமது விடியவே
பறவைகள் கூட தன் நிலமது திரும்பும்
உனக்கொரு தேசம் உலகத்தின் உண்டா
அதுவரை பொங்கு அடைவது நிச்சயம்
தனி ஒரு அரசே இனி தமிழனுக்கு விடிவாம்
இது தான் முடிவென விடியலின் வாசலில்
சுடர் விட்டுப் பொங்கு
நிலையது தழும்பா தலைவனின் பாதையில்
நிச்சயம் அடைவோம் விடுதலை என்றே
எங்கும் தமிழாய் பொங்குவாய் தமிழே
இது வரை துன்பம் அடைந்தது போதும்
இனி வரும் காலம் விடுதலை என்றே
சங்கே முழங்கென்று நீ பொங்குவாய் தமிழே
எது தடைவரினும் எழுவாய் தமிழா
சரிநிகர் உரிமையும் சமத்துவ வாழ்வும்
எங்கள் நிலமதில் மலர
மலை என பொங்கு
இந்த வையகம் அதிர
வேர்களை பிரிந்த எம் வேதனை வாழ்விலும்
விழுதுகள் நாங்கள் விட்டா பிரிவோம்
நித்திய வேள்வியில்
நாங்கள் நிமிர்வது நிச்சயம்
அது வரை பொங்கு
நீ அடைவாய் இலட்சியம்
நோர்வேயிலிருந்து பா. உதயகுமார்
Recent comments
39 weeks 6 days ago
40 weeks 3 days ago
48 weeks 3 days ago
49 weeks 6 days ago
1 year 18 weeks ago
1 year 47 weeks ago
2 years 24 weeks ago
2 years 37 weeks ago
2 years 37 weeks ago
2 years 37 weeks ago