இணையத்தில் இன்று பரவலாக ஈ-கலப்பை அல்லது கீ மான் எனப்படும் ஒரு செயலி மூலம் பலரும் தமிழ் கணனியில் எழுதத்தெரியாதவர்களும் தமிழை பற்பல ஊடகங்களில் உள்ளிடுகிறார்கள்
கணனித் தமிழின் அடுத்த பாய்ச்சலான யூனிக்கோட் முறையில் எழுதுவதற்கு ஆங்கில முறை மூலம் அமைந்த யூனிஅவரங்கால் எனும் கலப்பை உண்டு. இது கூடுமானவரையில் தமிழை ஆங்கில முறைப்படி எழுதுபவர்களுக்கு இலகுவானதாகும்.
இந்தமுறையையே தமிழ்நாட்டவர் பலரும் பயன்படுத்துகிறார்கள்
நாம் பாமினியில் தட்டச்சு செய்து பழகியவர்கள். எமக்கு இந்த ஆங்கிலமுறைப்படி தமிழ் எழுதுவது எமது வேகத்தை கட்டுப்படுத்துகிறது.
எனவே தான் பாமினி வழியாக தட்டச்சு செய்பவர்களுக்கான கலப்பை இது. நீங்கள் வழக்கம் போல் பாமினி முறையில் தட்டச்சு செய்ய இது யூனிக்கோட் முறையில் தமிழை உள்ளிடும்.
விபரம் தெரிந்தவர்களுக்கான பந்தி இது
பாமினியில் ஆகார வரிசையில் வருபவனவற்றை shift key அழுத்திக்கொண்டு அடிக்கவேண்டும். இங்கு ; உள்ளிட்ட பதிய முறைப்படி அ அடிப்பதறகு பாமினியில் m என்ற எழுத்தை பயன்படுததுகிறோம் ஆ வன்னா அடிப்பதற்கு கப்பிற்றல் M அடிக்கிறோம் புதிய முறைப்படி இரண்டுதரம் mm அடித்தால் ஆவன்னாவாகும். இதே போல் மற்றைய எழுத்துக்களும் shiftkey தொல்லை இல்லை. அதேபோல் ஈகாரத்திற்கு வரும் தீ பீ சீ போன்றவற்றிற்கும் P பதிலாக 2 p அடித்தால் போதும்
மற்றும் க ச ல ப...... போன்றவற்றுடன் சேர்த்து ஒரு மைனஸ் அடித்தால் க குவாக மாறும். இரண்டுதரம் மைனஸ் அடித்தால் க கூவாக மாறும். அதே சமயம் பழைய முறையும் இருக்கும்
ஏற்கனவே கீமான் வைத்திருப்பவர்கள் http://www.yarl.com/downloads/Bamuni.zip தரவிறக்கம் செய்து அதனுடன் இணைத்துக் கொள்ளலாம்.
அவ்வாறு தனியாக கீமான் இல்லாதவர்கள் http://www.yarl.com/downloads/vanni.zip தரவிறக்கம் செய்து இணைத்தக் கொள்ளலாம். இதில் தனியாக பாமினி என்று மட்டுமல்லாது ஆங்கில உச்சரிப்பு முறைப்படி எழுதுவதை நேரடியாக யுனிகோட் அமைப்பிற்கு எழுதுவதற்கான முறைகளும் உண்டு.
இந்த கீமானில் விரைவாக தமிழிலே அல்லது ஆங்கிலத்திலோ மாற்றிக்கொள்ள hotkey முறையினைப்பயன்படுத்தினால் இலகுவாக தமிழினையும் ஆங்கிலத்தினையும் கலந்து எழுத முடியும்.

படம் 1 - கீமான் Configuration

படம் 2 - இங்கு பாமினியில் இருந்து யுனிகோட் அமைப்பிற்கு மாற்ற hotkeyயாக F2 என்பதைத் தெரிவு செய்துள்ளேன். இதன் மூலம் F2 என்பதைனை அழுத்தி விட்டு தமிழில் எங்கும் எழுதலாம்.

படம் 3 - இங்கு Keyman Off Hotkey என்பதில் F3 என்பதைத் தெரிவு செய்துள்ளேன். இதன் மூலம் இந்த கீமான் செயற்பாட்டினை நிறுத்திவிட முடியும். அதாவது யுனிகோட் அமைப்பிற்கு மாற்றி எழுதுவது நிறுத்தப்பட்டு ஆங்கிலம் (அல்லது வேறு மொழிகள்) கலந்து எழுதக்கூடியதாக இருக்கும்.
இதுதவிர சுரதாவின் இணையத்தளத்தில் (http://www.suratha.com) பலவிதமான தமிழ் எழுத்தமைப்புக்களில் இருந்தும் யுனிகோட் எழுத்தமைப்பிற்கோ அல்லது யுனிகோட் அமைப்பிலிருந்து ஏனைய தமிழ் எழுத்துரு அமைப்பிற்கோ மாற்றியமைக்கக்கூடிய வழிமுறைகள் உள்ளன.
Recent comments
24 weeks 1 day ago
30 weeks 4 days ago
2 years 11 weeks ago
2 years 25 weeks ago
2 years 30 weeks ago
2 years 30 weeks ago
2 years 38 weeks ago
2 years 39 weeks ago
2 years 40 weeks ago
2 years 40 weeks ago