இலங்கை அரசியலில் படுகொலைகள் சித்திரவதைகள் அங்கீகாரம் பெற்றுள்ளன.
சனநாயகக் கோட்பாட்டில் சர்வாதிகாரத்தை புகுத்தி பாராளுமன்றம் ஓடுகிறது. மனித வளங்களும் விழுமியங்களும் நேரடியாகவும் மறைமுகமாகவும் அழிக்கப்படுகிறன. உலகம் என்று சொல்லப் படுகின்ற அதிசக்தி வாய்ந்த ஐக்கிய நாடுகள்சபை(U N O) உண்மைகளை அறிந்தும் தெளிந்தும் உள்ளது. ஆனாலும் கால்நூற்றாண்டைக் கடந்தும் பேரழிவின் யுத்தவடுகக்களை மட்டும் பார்த்து நிற்கிறது. மனித அவலங்களையோ படுகொலைகளையோ எண்ணியே பார்க்கவில்லை.
இப்போது இலங்கைத் தீவில் சமாதனம் என்னும் நிழலில் போர்தான் நடைபெறுகிறது. இது இன்னமும் உள்நாட்டுப் போரல்ல. உடனடியாகவே தீர்க்கப்பட வேண்டடிய இரண்டு நாடுகளின் போர். இலங்கைத் தீவில் இரண்டு தேசிய இனங்களும், இரண்டு தேசங்களும் உள்ளன. ஐக்கிய நாடுகள் அமைப்பு உணர்ந்தும், அறிந்தும், கண்டும், உள்ளதை மறைக்க முடியாது. World War 11 Holocaust survivor Mr. Elie Wiesel, a Nobel Peace Prize winner who sounds the alarm to prevent, “If the world had listened to those of us who tried to speak, we may have prevented Darfur, Cambodia, Bosnia and Rawanda”. இன்று இரண்டாவது உலக யுத்தத்தின் அறுபதாவது ஆண்டிலும் இனஅழிப்பின் குரல்களுக்கு செவிமடுக்காதது விந்தையிலும் விந்தையல்லவா? மரணங்களின்; கல்லறைகளுக்கு பூச்சொரிதலை நவயுகம் ஏற்கப்போவதில்லை.
இலங்கைத்தீவை கிறிஸ்த்துவுக்கு முன்பும் - பின்பும் (A.D – B.C) என்று பார்த்தாலும் தமிழர்கள் தனித்து ஆண்ட வரலாறுகள் உள்ளன. போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், பிரித்தானியர் ஆவணக் காப்பகங்களில் சான்றுகளைப் பெறுமுடியும்..
இன்று இலங்கையில் அரசியல் இனப்படுகொலையே அரசியலாக மாறி உள்ளது. தமிழினத்தை அழிப்பதில் உறுதியாக உள்ளார்கள். அண்டை அயல் நாடுகளின் ஆதரவு சிங்கள நாட்டுக்கு உண்டு. தமிழினத்தை உயிர்உள்ள மனித இனமாக மதிப்போரும், எண்ணுவோரும் இந்தப் பூமியில் இதுவரை இல்லை? இயற்கையின் அழிப்புக்கு கண்ணீர் சொரியும் உலகமே! சிங்கள அரசுகள் திட்டமிட்டு தமிழினத்தை அழிக்கின்றன நீ எங்கே?
பொதுக்கட்டமைப்போ அல்லது இடைக்கால நிர்வாக வசதிகளோ தமிழன் உயிர்களுக்கும், உரிமைகளுக்கும் பாதுகாப்பாக இல்லை. இதுவொரு நாகரிக உலகமாய் இருந்தால், தமிழீழ நாடு அங்கீகிக்கப்பட வேண்டும். இதுவரை மாண்டவர்கள் தொகை உலகநாடுகளுக்கு சரியாக எட்டவில்லை. தினமும் படுகொலைகள் நடப்பதால் ஒரு இலட்சத்தைக் கடந்து நிற்கிறது. சிறுவர்களை தேடிக் கொல்லும் சிங்கள நாகரிகத்தில் தமிழன் உடன்பாடு கொள்ள முடியாது. சிறுவர்களுக்குப் பாதுகாப்பு சிங்கள அரசுகளிடம் இல்லை. புலிகளின் தமிழ் அரசிடம்தான் உள்ளது. இதனை U N O சபையில் உள்ள U N H C R, U N I C E F போன்ற அமைப்புகள.; அறிந்து செயற்பட வேண்டும்;.
தமிழீழ தேசத்தில் மிகத் தகுதி உள்ள தலைமை இன்று உள்.ளது. சிங்கள தேசத்தில் எல்லோரும் தலைவர்கள். ஜனாதிபதிகள் - பாதாளபதிகள் - முப்படையதிபதிகள் - பொலிஸாதிபதிகள் இவர்களே சிங்கள தேசத்தை ஆள்கிறார்கள். மொத்த வடிவில் அனைத்து அரசஇயந்திரங்களும் இனஅழிப்பை நகர்த்திக் கொண்டிருக்கின்றன. இப்போது பௌத்த மகாதிபதிகளும் எழுந்துள்ளார்கள். எனவேதான் யதார்த்தத்தை உணர்ந்து, தமிழினத்தை காப்பாற்ற ஐக்கிய நாடுகள் சபை உடனடியாக செயற்படவேண்டும்;.
தமிழினம்; தன்னால் முடிந்தவரை போராட்டங்களை நடத்தியுள்ளது. சாத்வீகப் (Non violence) போரில் இருந்து ஆயுதம் (Arms conflict) வரை முடிந்துள்ளது. ஆனால் தீர்வு என்பது தூரத்திலும் இல்லை. இதனை சர்வதேசம் புரிந்து செயற்படாதவரை தமிழினம் அழிவது தவிர்க்க முடியாதது.
இலங்கைத் தீவின் அயல்நாடு இந்தியா. இது தனது பிராந்திய வல்லரசு எண்ணத்தால் தமிழினத்தின் போராட்ட வலுவை சிதைப்பதில் முனைந்து நிற்கிறது. இந்தியாவின் அரசியலுக்காக ஈழத்தமிழன் அழிக்கப்படுவது எந்தவிதத்திலும் நீதியும் நியாயமும் அற்றதாகும். தமிழீழ மக்கள் எப்போதும் இந்தியாவை ஒரு நேசமிகு சக்தியாகவே கருதி வருகின்றனர். ஆனாலும் இந்தியா தமிழினம்மீது கழுகுப்பார்வையே வைத்துள்ளது. இந்தியா தமிழீழத்தை அங்கீகரிப்பதின் மூலம் பலவீனம் அடையும் என்கின்ற வாதம் போலித்தனமாகும். இந்தியாவின் தார்மீகக் கடமை தமிழீழத்தை அங்கீகரித்து ஈழத்தமிழர்களுக்கு உதவியாக இருத்தலே.
அன்றைய சோவியத் யூனியன் உடைந்து தனிநாடுகள் உருவாகியபோதிலும் உரூசியா பலமுள்ள நாடாகவே உள்ளதை யாரும் மறுப்பதற்கில்லை. எனவேதான் தமிழீழம் தனித்து நிற்பதன்மூலம் இந்தியாவுக்கோ சிங்கள மக்களுக்கோ ஆபத்துக்கள் இல்லை. இக்காரணங்களை முன்நிறுத்திப் பார்க்கையில் தமிழினத்தின் வாழ்வுக்கும் வசதிக்கும் தமிழீழமே ஒரேயொரு தீர்வாகும். என்பது தெளிவாகிறது.
உலககநாடுகள் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய அபாயம் இலங்கைத் தீவின் சிங்களவர் தேசத்தில் உருவாகி உள்ளது. மாக்ஸிஸம் என்னும் குறியுடன் தீவிர இனவாதத்தை முன்னெடுத்துச் செல்கிறது J.V.P பிற்போக்குக் கும்பல். இதில் விமல் வீரவன்ஸா ஹால்மாக்ஸாகவும் - சோமவன்சா இலெனினாகவும் வேடமிட்டு சிங்கள இளைஞர்களை ஏமாற்றி இனவாதத்திற்கு மாபெரும் பலத்தை கட்டி எழுப்பியுள்ளார்கள். மாக்ஸிஸம் என்னும் நற்பண்புள்ள தீவிரவாதத்தினுள் நஞ்சுகலந்த இனவாதம் தமிழர்களின் பேரழிவுகட்கு வழிகோலும் என்பதில் ஐயமில்லை.J.V.P யின் பயங்கரவாதம் உலகம் அறிந்த ஒன்று. பதவிக்காகத் துடிக்கும் இந்த பிற்போக்குக் கும்பல், சிங்கள மக்களை கொன்று குவித்த வரலாற்றை அவர்கள் மறந்தது துர்ப்பாய்க்கியமே. இனவாதமே பயங்கரவாதிகள் தூக்கிய இன்றய துப்பாக்கியுமாகும்.
சமீபகால படுகொலைகளுக்குப் பின்னால் இருக்கும் தீவிரவாதத்தை தமிழினம் முற்றாக உணர்ந்துகொள்ளுதல் அவசியமாகும்.
சட்டத்தரணி குமார் பொன்னம்பலம் உட்பட்ட ஊடகவியலாளர்கள் நிமலராஜன் - நடேசன் - இன்று தாராக்கி டி. சிவராம் வரிசை போதிக்கும் பாடங்கள் அலட்சியம் செய்துவிட முடியாதவை. இவர்கள் யார்…?. சுதந்திர ஊடகங்களின் வல்லுனர்கள். இவர்களது தொழில் என்ன…?. உண்மையான செய்திகளைத் தேடித் திரட்டி உலகுக்கு உணவாகக் கொடுப்பது. இவர்கள் செயற்படும் முறை எவ்வாறானது..?.தேனீக்கள் ஊரெல்லாம் பறந்து திரிந்து தேன் சேகரிக்கும் தன்மையதல்லவா?. ஊடகவியலாளர்கள் பேனாதூக்கிய புத்திஜீவிகள். இவர்கள் மனித இரத்தம் குடிக்கத் துடிப்பதில்லை. நாம் இருந்த இடத்தில் இருந்துகொண்டே உலக நடவடிக்கைகளை அறிந்துகொள்வது இவர்களால்.
சிங்கள ஜனநாயக வாதிகள், ஊடகவியலிலும் சர்வாதிகாரத்தை புதைத்து தமிழின அழிப்புக்கு திட்டம் தீட்டிவிட்டார்கள். படுகொலை செய்யப் பட்ட மூன்று ஊடகவியலாளர்களும் செய்த குற்றம், சிங்கள அரசின் துரோகத்தனங்களை செய்திகளாக வெளிக் கொணர்ந்தமையே. உண்மை பேசுவது சனநாயகம் இல்லையா? டி.சிவராம் போன்ற யதார்த்த ஊடகவியலாளர்களை கொல்வதன் மூலம் அரசு எதுவும் சாதித்து விடமுடியாது. சிங்களப் பத்திரிகைள் தமிழர்கள் பற்றி ஒருதுளி உண்மையும் இல்லாத பொய்களை எழுதிக் குவிக்கின்றன. இவர்களுக்கு உள்ள சனநாயகம் உண்மைகளை எழுதும் தமிழர்களுக்கு மறுக்கப்பபடுகிறுது.
இந்தச் சிங்கள அரசியல்களில் தமிழினத்திற்கு அற்ப சொற்ப உரிமைகளும் கிடைக்கப் போவதில்லை. பிரிந்து செல்வோம் துணிந்து எழுவதே ஒரேவழி.
பாகிஸ்த்தானில் இருந்து வங்காளம் (கிழக்குப் பாகிஸ்த்தான்) பிரிந்தபோது சர்வதேசம் கவலை கொள்ளவில்லை.Who care Pakistan என்னும் போக்கில் அங்கீகாரம் வழங்கியது, UNO ஆதரித்து அங்கத்துவத்தை ஏற்றுக்கொணடது. ஆனால் தமிழினம் உயிர்ப்பிச்சைக்காக போராடுவதை உணர்ந்தும் இன்னமும் தூரத்தில் நிற்பது ஆச்சரியமே! ஆனால் சர்வதேசம் அறிய வேண்டிய உண்மை இதுவேதான்,
போரின் விளிம்பில் தமிழினம் நிற்கிறது. வாளின்மேல் தினமும் உறங்கி விழிக்கிறது தமிழினம். இன்றா நாளையா என்று போர்முனை துடிக்கிறது. இனி ஒரு தமிழன் இறப்பானாய் இருந்தால் வயதெல்லையின்றி போரில் அழிவதே தமிழினத்திற்கு சமாதான மிச்சம் ஆகும்.
கனடாவிலிருந்து மாதுளா
Recent comments
46 weeks 6 days ago
47 weeks 4 days ago
1 year 3 weeks ago
1 year 4 weeks ago
1 year 25 weeks ago
2 years 2 weeks ago
2 years 31 weeks ago
2 years 44 weeks ago
2 years 44 weeks ago
2 years 44 weeks ago