Chandravathana's blog

அவளும் பெண்தானே!

தமாரா விழித்துக் கொண்ட போது அவளோடு சேர்ந்து சோகமும் விழித்துக் கொண்டது. அவளால் தன்னுள்ளே படிந்து விட்ட சோகத்தின் சுமையை எந்த வழியிலும் இறக்க முடியாதிருந்தது. மனசு மிகவும் பாராமாக இருந்தது. பக்கத்துப் படுக்கையைப் பார்த்தாள். அது வெறுமையாகவே இருந்தது. இன்றோடு மூன்று மாதம். காந்தன் அவளை விட்டுச் சென்று மூன்று மாதங்கள் சென்று விட்டன. அவளால் எதையுமே ஜீரணிக்க முடியவில்லை.

வேஷங்கள்

காலைப்பொழுதுக்கே உரிய அவசரத்துடன் ஜேர்மனியின் கிராமங்களில் ஒன்றான அச் சிறு கிராமத்து வீதி இயங்கிக் கொண்டிருந்தது. கோடை என்றாலும் குளிர்ச்சியான காலை. பச்சையாய், பசுமையாய் மரங்களும், பூக்களுமாய் ஜேர்மனி அழகாகத்தான் இருந்தது. சிக்னலுக்காக காரில் காத்துக் கொண்டிருந்த உமாவின் மனது மட்டும் அந்தக் காலைக்குச் சிறிதும் பொருந்தாது புழுங்கிக் கொண்டிருந்தது. கோபத்தில் தகித்தது என்று கூடச் சொல்லலாம்.

அவள்

நடுரோட்டில் நின்றவள் என்னைக் கண்டதும் ஓடி வந்து கையைப் பிடித்தாள். தனது கணவனை ஜெயிலில் இருந்து விடுவித்துத் தரும்படி மன்றாடினாள். அவள் யாரென்பதையே அவளைக் கேட்டுத்தான் தெரிந்து கொண்டேன். அடையாளமே தெரியாமல் உரு மாறிப் போயிருந்தாள். உதடுகள் வெடித்துக் காய்ந்து கருமை பேர்ந்திருந்தன. கண்கள் சோபை இழந்து சோகத்துக்குச் சொந்தமாகியிருந்தன. கன்னங்கள் ஒட்டி உலர்ந்திருந்தன. பன்னிரண்டு வருடங்களின் முன் நான் சந்தித்த மதுதான் இவளென்பதை என்னால் நம்ப முடியாமல் இருந்தது.

சினிமாப் பாடல்கள் எனது பார்வையில் - 14

நலந்தானா...? நலந்தானா...?
உடலும் உள்ளமும் நலந்தானா...?
இப்பாடலைக் கேட்கும் போதெல்லாம் எனக்குள்ளே இனம் புரியாதவொரு சந்தோசமும் கூடவே மெல்லிய சோகமும் இழைந்தோடும்.காரணம் என்னுடைய அப்பா.

என்னுடைய அப்பாவுக்கு இந்த நாதஸ்வரம், தவில் எல்லாம் நிறையவே பிடிக்கும். அவர் இலங்கையின் எந்தப் பாகத்தில் கடமையில் இருந்தாலும் ஊரில் ஏதாவதொரு கோயிலிலே மேளக்கச்சேரியோ, நாதஸ்வரமோ நடைபெறப் போகிறதென்று தெரிந்தால் உடனேயே விடுப்பெடுத்துக் கொண்டு வந்து விடுவார்.

சினிமாப் பாடல்கள் எனது பார்வையில் - 13

படம் - இருவர்
பாடியவர் - சந்தியா
வரிகள் - வைரமுத்து

'பூக்கொடியின் புன்னகை
அலை நதியின் புன்னகை
மழை முகிலின் புன்னகை
நீ காதலின் புன்னகை'

சின்ன வயதில் என் அப்பாவுடன் நிறைய சிவாஜி கணேசனின் படங்களைப் பார்த்திருக்கிறேன். அதற்கேற்ப திருமணத்தின் பின் என் கணவருடன் நிறைய எம்.ஜி.ஆர் படங்களைப் பார்த்தேன்.

சினிமாப் பாடல்கள் எனது பார்வையில் - 12

cinema-12.jpg

தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசிலை
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்பிலை
பாடியவர்கள் - இளையராஜா ஜானகி
இசை - இளையராஜா
படம் - அவதாரம்

கண் இல்லாமல் காதலே இல்லையென்பது இன்னும் பல பேரின் வாதமாயுள்ளது.
ஆனால் தினமும் கண்களால் எத்தனையோ பேரைக் காண்கிறோம். எத்தனையோ கண்களை நேருக்கு நேர் சந்திக்கிறோம். அத்தனை கண்களும் காதல் வயப் பட்டு விடுகின்றனவா? இல்லையே! காரணம் அங்கு மனங்கள் இணையவில்லை.

எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது

emmai_ninaithu.jpg

தொன்மை தொனிக்கும் தமிழ் வீர வரலாற்றில்
வர்ணம் பூசி வெறும் வாய் ஜாலம் காட்டுகின்ற
புல்லர் கூட்டங்கள் புதுக்கதிரை தேடி நிற்கும்
பொல்லாத பொழுதிலும் விடலைகள் நாம் திரண்டு
உடலை உயிரை உடன் பிறந்தோரையெலாம்
உற்றார் பெற்றார் உறவென வந்தோரையெலாம்
கல்லாய் மனமிறுக்கிப் புல்லாய் ஒதுக்கி விட்டு
வல்லான் வளர்த்தெடுத்த விறல்மிகு கரும்புலியாய்
மெய் மேல்க் குண்டு கட்டி
பொய்யோர் குகை தகர்க்கையிலே
எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது.

சினிமாப் பாடல்கள் எனது பார்வையில் - 11

cinema-11.jpg

தகிடததுமி தகிடததுமி தந்தானா
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா
இருதயம் அடிக்கடி இறந்தது என்பேனா
என் கதை எழுதிட மறுக்குது என் பேனா

தகிடததுமி தகிடததுமி தந்தானா
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா
இருதயம் அடிக்கடி இறந்தது என்பேனா
என் கதை எழுதிட மறுக்குது என் பேனா

சலங்கை ஒலி படத்தில் S.P.பாலசுப்ரமணியம்

சினிமாப்பாடல்கள் எனது பார்வையில் - 10

cinema-10.jpg

கண்மணி அன்போடை
காதலன் நான் எழுதும் கவிதை
பொன்மணி
உன் வீட்டில் சௌக்கியமா ?
நான் இங்கு சௌக்கியமே

கண்மணி அன்போடை
காதலன் நான் எழுதும் கவிதை
பொன்மணி
உன் வீட்டில் சௌக்கியமா....?

படம் - குணா 
பாடியவர்கள் - கமலஹாசன், ஜா
னகி
இசை - இளையராஜா
                                              

காதல் என்பது காட்டாறு
அது கண் தெரியாத மோட்டாறு

என்றார் கண்ணதாசன்.
காதலித்துப் பார்
உன்னைச் சுற்றி ஒரு ஒளிவட்டம் தெரியும்

என்றார் வைரமுத்து.

சினிமாப்பாடல்கள் எனது பார்வையில் - 9

cinema-09.jpg

அந்த வானுக்கு இரண்டு தீபங்கள்
அவை சூரியச் சந்திரரே
என் வாழ்வுக்கு இரண்டு தீபங்கள்
என் தாயொடு தந்தையரே

அந்த வானுக்கு இரண்டு தீபங்கள்
அவை சூரியச் சந்திரரே
என் வாழ்வுக்கு இரண்டு தீபங்கள்
என் தாயொடு தந்தையரே
படம் - பூமகள் ஊர்வலம்
பாடியவர் - உன்னி கிருஷ்ணன்
இசை - சிவா

தாய் தந்தையருக்கு இணையாக இந்த உலகில் வேறெதுவுமே இல்லை.
அந்தப் பாசதீபங்கள் இல்லையென்றால் நாமும் இல்லை. ஆனாலும் நாமெல்லோரும் தாய் தந்தையரின் அருகில் இருக்கும் போது அவர்களின் அன்பையும் அருமையையும் புரிந்து கொள்வதில்லை. அன்பைப் புரிந்தாலும் அவர்களின் தியாகங்களைப் புரிந்து கொள்வதில்லை.

Syndicate content