Aggregator

மாப்பிள்ளை சம்பா, கருப்புக் கவுனி, காட்டுயானம் ஆகியவற்றில் எந்த அரிசி உடலுக்கு நல்லது?

2 weeks 3 days ago
மிக உறுதியாக இது போன்ற வதந்திகளை நீங்கள் நம்புகிறீர்கள் போல தெரிகிறது😂. அமெரிக்காவில், ஐரோப்பாவில், இவை போன்ற முன்னேறிய நாடுகளில் தரவுகள் (data) என்பவை கணணிக்கு முன்னால் இருந்து ஒருவர் சும்மா ரைப் செய்து விட்டு வெளியே விடுபவை அல்ல. இப்படி தான் விடயம் தெரியாத பலர் நம்பிக் கொண்டிருக்கிறார்கள், ஆனால் ஆரோக்கியம், உணவு, மருந்து என்று வரும் போது ஆயிரக் கணக்கானோரின் பல வருட கால உழைப்பினால் வரும் தரவுகள் தான் உங்களுக்கு ஆலோசனைகளாகவும், மருந்துகளாகவும் உருவாக்கப் பட்டுக் கிடைக்கின்றன. இந்த நடைமுறை தெரியாமல் இருப்பது பாரிய குறைபாடல்ல, ஆனால் தெரியாத ஒரு விடயத்தைத் தேடியறியாமல் தவறான கருத்துகளைப் பரப்புவது கொஞ்சம் நெருடலான விடயம். உங்களுக்குப் பொருத்தப் பட்ட ஸ்ரென்ரை எடுத்துக் கொள்ளுங்கள். இன்று 10 கம்பனிகள் வரை இந்த ஸ்ரென்ற் தயாரித்து விற்கின்றன, ஆனால் அந்தக் கம்பனிகள் போலித் தரவுகளை வைத்து ஸ்ரென்ற் தயாரிக்கவில்லை. 80 களில் இருந்து, Material Scientists எனப்படும் நிபுணர்களும் , பன்றி இதயத்தில் இவற்றை பொருத்தி ஆராய்ந்த டசின் கணக்கான மிருக வைத்தியர்களும், மனிதர்களில் பரிசோதனைகள் செய்த சில டசின் மருத்துவர்களும் என்று சில ஆயிரம் பேரின் உழைப்பினால் உருவான ஸ்ரென்ற் உங்களுக்குப் பொருத்தப் பட்டது. சும்மா கார்ப்பரேற் உருவாக்கிய கற்பனைத் தரவுகள் அல்ல ஸ்ரென்ரின் ஆரம்பம்.

சிரியாவில் அமைந்திருக்கும் ஈரானிய விசேட படைகளின் கட்டடம் மீது இஸ்ரேல் விமானத் தாக்குதல் ‍- ஈரானின் மூத்த தளபதி பலி

2 weeks 3 days ago
@இணையவன் எதற்காக ❤️ போட்டிருக்கிறீர்கள்? செய்தியை இணைத்ததற்காகவா அல்லது இஸ்ரேலிய விமானங்கள் குண்டு வீசியதற்காகவா அல்லது ஈரானியத் தூதரகம் தாக்கப்பட்டதற்காகவா அல்லது ஈரானியத் தளபதிகள் கொல்லப்பட்டதற்காகவா,....... சும்மா ஒரு புரிந்துணர்வுக்காகத்தான் கேட்கிறேன்,..😁

"அறம் பேசுமா?"

2 weeks 3 days ago
உங்களின் ஆக்கங்களுக்கு மிக்க நன்றிகள், தில்லை ஐயா. இலக்கியத்திலும், சினிமாவிலும், சமயத்திலும் அறம் எப்பொழுதும் பேசுகின்றது. நாளாந்த நடைமுறை வாழ்வில் அறம் பேசுமா என்றால் சரியான சந்தேகமாகவே இருக்கின்றது. அப்பழுக்கற்ற நேர்மையுடனும், வெளிப்படைத் தன்மையுடனும் இருந்தால், 'விவரம் பத்தாது' என்றே சொல்கின்றனர். சமீப வருடங்களில் தமிழில் வந்த சிறுகதை தொகுதிகளில் மிக அதிகமாக பேசப்பட்டதும், விற்பனையானதும் ஜெயமோகனின் 'அறம்' என்னும் சிறுகதைத் தொகுப்பே. வாசித்திருக்கின்றேன். மிகநல்ல கதைகள், அறத்துடன் வாழ வேண்டும் என்ற உத்வேகத்தை கொடுக்கும் கதைகள்.

கச்சத்தீவு விவகாரத்தில் கருணாநிதி செய்த துரோகம் நாளை வெளியிடப்படும்- அண்ணாமலை

2 weeks 3 days ago
அண்ணாமலையார் 'கச்சதீவு துரோகம் - பகுதி 2' ஐ அடுத்த நாள் வெளியிடுவதாகச் சொல்லி இரண்டு நாட்கள் போய்விட்டன. இன்னமும் வெளிவரவில்லை.....🤣 ஜீவன் தொண்டமான் இலங்கையிலிருந்து பதில் சொல்லியிருக்கின்றார் - இந்தியா கச்சதீவை ஒரு போதும் திருப்பிக் கேட்கவும் இல்லை, நாங்கள் கொடுக்கப் போவதும் இல்லை என்ற ரீதியில். ஜீவனும், அண்ணாமலையும் இனி இந்த விடயத்தை பார்த்துக் கொள்வார்கள் போல...😀

வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….

2 weeks 3 days ago
வணக்கம் கோசான்.இப்ப தான் இந்தப்பதிவைக் கன்டேன்.முழவதுமாக வாசித்து முடித்தேன்.இங்குள்ள நிலவரங்களை அனுபவ ரீதியாக எழுதியமைக்கு நன்றி.

“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்

2 weeks 3 days ago
ம‌ன்னிக்க‌னும் க‌ந்த‌ப்பு அண்ணா 2009க்கு பிற‌க்கு எங்க‌ட‌ நாட்டு தேர்த‌ல‌ எட்டியும் பார்த்த‌து கிடையாது 2002க‌ளில் த‌லைவ‌ர் த‌மிழ்தேசிய‌ கூட்ட‌மைப்பை உருவாக்கின‌தில் இருந்து 2009வ‌ரை பின் தொட‌ர்ந்தேன் இன‌ அழிப்புபோட‌ அவ‌ர்க‌ளின் தேர்த‌ல‌ எட்டியும் பார்ப்ப‌து கிடையாது..............2002க‌ளில் சும‌த்திர‌ன் என்ர‌ திருட‌னை த‌லைவ‌ர் அறிமுக‌ம் செய்து வைக்க‌ வில்லை ஆனால் அவ‌ர் பின் க‌த‌வால் வ‌ந்து ப‌ல‌ குள‌று ப‌டிக‌ள் செய்து அவ‌ரை வெல்ல‌ வைத்த‌தாய் க‌தை வ‌ந்த‌து சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முத‌ல்................ அண்ண‌ன் சீமானே ப‌ல‌ வாட்டி சொல்லி விட்டார் பார‌ள‌ம‌ன்ற‌ தேர்த‌ல‌ விட‌ எங்க‌ளுக்கு ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌ல் தான் மிக‌வும் முக்கிய‌ம் என்று.................நாம் த‌மிழ‌ர் ஏற்க‌ன‌வே 6/75 ச‌த‌வீத‌ம் வைச்சு இருக்கின‌ம் வாக்கு வித‌ம் குறைய‌ வாய்ப்பு மிக‌ குறைவு கூடுத‌லா 2ச‌த‌வீத‌ வாக்கு கூடும்..................ப‌ல‌ர் தேர்த‌ல் ஆனைய‌த்தை க‌டின‌மாய் விம‌ர்சிக்கின‌ம்.................. என‌து பார்வையில் புது சின்ன‌த்தை இளைஞ‌ர்க‌ள் ம‌த்தியில் ஒரு நாளில் சென்று அடைந்து விட்ட‌து பெரிய‌வ‌ர்க‌ள் ம‌த்தயில் அதிக‌ம் சென்ற‌டைய‌ வில்லை......................

“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்

2 weeks 3 days ago
அதிகரித்து 8% வரை போகும் என நினைக்கிறேன். போன சட்டசபை தேர்ததில் திமுக +/அதிமுக + க்கு போட விரும்பாத வாக்குகளை கமல் பிரித்தார். இவை இந்த முறை இவை மீள நோட்டா அல்லது சீமானுக்கு விழும் என நினைக்கிறேன். அதிமுக வாக்கை பாஜக+பாமக கூட்டணி கொஞ்சம் பாதிக்கும். அதே போல் மோடி/பாஜக எதிர் வாக்கை முழுவதும் திமுக போகாமல், அதிமுக, நாதக பிரிப்பார்கள்.

“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்

2 weeks 3 days ago
2009 முள்ளிவாய்க்கால் அவலம் நடந்து முடிந்தபின்பு 2010 இல் நடந்த இலங்கை ஜனாதிபதி தேர்தலில் யாழ்மாவட்டத்தில் கிடைத்த வாக்குகளில் முதலிடம் பிடித்தார் சரத் பொன்சேகா. மகிந்தாவை தோற்கடிக்க சரத் பொன்சேகாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்து. அத்தேர்தலில் போட்டியிட்ட தமிழர் சிவாஜிலிங்கம் அல்லது விக்கிரமபாகு கருணாரட்னா போன்றவர்களுக்கு வாக்களித்திருக்கலாம். ஆனால் தங்கள் இனத்தினை அழித்த சரத் பொன்சேக்காவுக்கு, மகிந்தா தோற்க வேண்டும் என்பதற்காக அங்கு மக்கள் வாக்களித்தார்கள். வட இந்தியாவில் மோடி ஆதரவு அதிகமென்றாலும், தமிழகத்தில் மோடி எதிர்ப்பு அதிகம். இதனால்இத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு 6.58% ( சென்ற சட்டசபை தேர்தல்) விட அதிகளவு கூடுமா என்பது யோசனையாக இருக்கிறது. நான் நினைக்கிறேன் 5% - 8% வீத வாக்குகள் கிடைக்கும். சட்ட சபை தேர்தல் என்றால் வாக்கு வீதம் அதிகரிக்கலாம். அடுத்த சட்டசபை தேர்தலில் விஜய் போட்டியிடுகிறார். யாரின் வாக்குகளை கவரபோகிறார்?. விஜயின் திரைப்பட இரசிகர்கள் இளைஞர்கள். அவர்கள் விஜய்க்கு வாக்களிப்பார்களா?

வாழ்வில் நம்மை கடந்துப் போவோர்க்கு நல்ல வழிக்காட்டும் வழிப் போக்கனாய் அமைதல் அவசியம்

2 weeks 3 days ago
வாழ்வில் நம்மை கடந்துப் போவோர்க்கு நல்ல வழிக்காட்டும் வழிப் போக்கனாய் அமைதல் அவசியம் .. படித்ததிலிருந்து....

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

2 weeks 3 days ago
வணக்கம் வாத்தியார்........! ஆண் : அரைச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் அழகு நெத்தியிலே ஒரு அழகு பெட்டகம் புதிய புத்தகம் சிரிக்கும் பந்தலிலே ஆண் : முழு சந்திரன் வந்தது போல் ஒரு சுந்தரி வந்ததென்ன ஒரு மந்திரம் செஞ்சதுப் போல் பல மாயங்கள் தந்ததென்ன இது பூவோ பூந்தேனோ ஆண் : பூவடி அவ பொன்னடி அதை தேடிப் போகும் தேனீ தேனடி அந்த திருவடி அவ தேவலோக ராணி ஆண் : தாழம்பூவு வாசம் வீசும் மேனியோ அந்த ஏழு லோகம் பார்த்திராத தேவியோ ஆண் : ரத்தினம் கட்டின பூந்தேரு உங்களைப் படைச்சதாரு என்னைக்கும் வயசு மூவாறு என் சொல்லு பலிக்கும் பாரு இது பூவோ பூந்தேனோ ஆண் : மான்விழி ஒரு தேன்மொழி நல்ல மகிழம்பூவு அதரம் பூநிறம் அவ பொன்னிறம் அவ சிரிக்க நினைப்பு சிதறும் ஆண் : ஏலப்பூவு கோலம் போடும் நாசிதான் பல ஜாலத்தோடு ஆடப் போகும் ராசிதான் ஆண் : மொட்டுக்கள் இன்னைக்குப் பூவாச்சு சித்திரம் பெண்ணென ஆச்சு கட்டுறேன் கட்டுறேன் நான் பாட்டு கைகளைத் தட்டுங்க கேட்டு இது பூவோ பூந்தேனோ.......! --- அரைச்ச சந்தனம் ---

“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்

2 weeks 3 days ago
விஜ‌ய‌காந் ப‌ல‌ ப‌ட‌ங்க‌ளில் ந‌டிச்சு ம‌க்க‌ள் ம‌த்தியில் பிர‌ப‌ல‌மான‌ ந‌ப‌ர் அதோடு அவ‌ர் ஏழை எளிய‌ ம‌க்க‌ளுக்கு ந‌ல்ல‌து செய்த‌வ‌ர்..............ஆர‌ம்ப‌த்தில் சொன்னார் தான் ம‌க்க‌ளுட‌ன் தான் கூட்ட‌னி வேறு க‌ட்சிக‌ளுட‌ன் கூட்ட‌னி கிடையாது என்று 2011ம் ஆண்டு ஆதிமுக்கா கூட‌ குட்ட‌னி வைச்சு எதிர் க‌ட்சி த‌லைவ‌ர் ஆனார்................அத‌ற்க்கு பிற‌க்கு விஜ‌ய‌காந்தின் அர‌சிய‌ல் சிறு கால‌த்தில் அதிக‌ வீழ்ச்சி அடைந்த‌து ம‌க்க‌ள் ந‌ல‌க் கூட்ட‌னிக்கு பிற‌க்கு தே மு தி க்கா க‌ட்சியை யாரும் கூட்ட‌னிக்கு சேர்க்க‌ வில்லை க‌ட‌சியில் அவ‌ர்க‌ளின் வாக்கு வித‌ம் 2க்கு குறைவு............... உல‌க‌ நாய‌க‌ன் க‌ம‌ல் க‌ட்சி ஆர‌ம்பிச்சு 2 தேர்த‌லோட‌ அவ‌ரின் க‌ட்சி ச‌ரி..............க‌ம‌ல் பெற்ற‌ வாக்கு ச‌த‌ வீத‌ம் 4க்குள் என்று நினைக்கிறேன் ச‌ரி சீமானின் அர‌சிய‌லுக்கு வ‌ருவோம் சீமான் ஒன்றும் பெரிய‌ ப‌ட‌ த‌யாரிப்பாள‌ர் கிடையாது குறைந்த‌து ஒரு சில‌ ப‌ட‌ம் தான் எடுத்தார் சில‌ ப‌ட‌ங்க‌ளில் சின்ன‌ க‌தா பாத்திர‌த்தில் ந‌டித்தார்....................விஜ‌ய‌காந் ம‌ற்றும் க‌ம‌லுட‌ன் ஒப்ப்பிடும் போது......................விஜ‌ய‌காந் க‌ம‌ல் த‌மிழ‌க‌ ம‌க்க‌ளால் ந‌ங்கு தெரிய‌ ப‌ட்ட‌ ந‌ப‌ர்க‌ள் ஆனால் சீமான் அப்ப‌டி இல்லை சீமான் ம‌க்க‌ள் ம‌த்தியில் பிர‌ப‌ல‌மாக‌ அவ‌ரின் பேச்சு ம‌ற்றும் த‌மிழீல‌ தேசிய‌ த‌லைவ‌ரை நேசிக்கும் ம‌க்க‌ள் சீமான் பின்னால் போன‌வை ஆனால் சீமான் 2010க‌ளில் க‌ட்சி ஆரம்பிச்சார் க‌ம‌ல் 2017க‌ளில் க‌ட்சி ஆர‌ம்பிச்சார் க‌ம‌லை விட‌ சீமான் 2019 பார‌ள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் அதிக‌ ஓட்டை பெற்றார் 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் முன்பை விட‌ கூடுத‌லா 13ல‌ச்ச‌ம் ஓட்டு கூட‌ பெற்றார்........................................ க‌ம‌லுட‌ன் ச‌ர‌த்குமார் கூட்ட‌னி வைச்சு கூட‌ இவ‌ர்க‌ளால் த‌மிழ் நாட்டில் மூன்றாவ‌து இட‌த்தை கூட‌ பிடிக்க‌ முடிய‌ல‌......................ஆனால் த‌னித்து நின்ற‌ நாம் த‌மிழ‌ர் மூன்றாவ‌து இட‌த்தை பிடிச்ச‌து............................சீமானின் வாக்கு ச‌த‌வீத‌ம் ஏறிட்டு தான் போகுது..................விவ‌சாயி சின்ன‌த்தை ஏன் ப‌றித்து ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு குடுத்தார்க‌ள் என்று இந்தியா நாட்டை ஆளும் வீஜேப்பிக்கு ந‌ங்கு தெரியும் சீமானின் வ‌ள‌ர்ச்சி எதை நோக்கி போகுது என்று 30ல‌ச்ச‌ ஓட்டும் ச‌ல்லி பைசா குடுக்காம‌ கிடைச்ச‌ ஓட்டு.......................யாழில் சில‌ர் சீமானின் வ‌ள‌ர்ச்சிய‌ பார்த்து பொறுத்து கொள்ள‌ முடியாம‌ எரிச்ச‌லில் வ‌ன்ம‌த்தை க‌க்குவ‌தை க‌ண் கூடாய் பார்க்க‌ தெரியுது............... 2000ரூபாய் அதோட‌ ப‌ல‌ கூட்ட‌னி ஊட‌க‌ ப‌ல‌ம் இப்ப‌டி தான் ஊழ‌ல் கூட்ட‌ம் தேர்த‌ல‌ ச‌ந்திக்கின‌ம் பெரியார் ச‌மாதி மீது தீ மு க்கா ச‌த்திய‌ம் ப‌ண்ண‌ட்டும் பாப்போம் தேர்த‌ல் நேர‌ம் ம‌க்க‌ளுக்கு காசு கொடுக்காம‌ தேர்த‌ல‌ ச‌ந்திக்கிறோம் என்று உவிய‌காந்தின் உங்க‌ட‌ பார்வை 100/100 ச‌ரி க‌ந்த‌ப்பு அண்ணா வாழ்த்துக்க‌ள்........................................................

சிரியாவில் அமைந்திருக்கும் ஈரானிய விசேட படைகளின் கட்டடம் மீது இஸ்ரேல் விமானத் தாக்குதல் ‍- ஈரானின் மூத்த தளபதி பலி

2 weeks 3 days ago
ஈரானிய விசேட படைகளின் கட்டடமல்ல. அது ஈரானிய தூதரகக் கட்டடம். 👇 Israel strikes Iran consulate in Syria’s capital Damascus: What we know Iran has promised a response after an alleged Israeli attack on its consulate killed seven including two top commanders. Emergency services work at the consulate building [Omar Sanadiki/AP] Published On 2 Apr 20242 Apr 2024 Save articles to read later and create your own reading list. Iran has promised a response after its consulate in the Syrian capital Damascus was destroyed in a suspected Israeli missile attack, killing seven people including a top commander and his deputy. Brigadier General Mohammad Reza Zahedi, a senior commander in the Quds Force of the Islamic Revolutionary Guards Corps (IRGC) and his deputy General Mohammad Hadi Hajriahimi were killed in Monday’s attack, the IRGC said in a statement. Israel has long targeted Iran’s military installations in Syria and those of its proxies but Monday’s attack was the first time it had targeted the embassy compound itself. Here’s what we know: What happened? The consulate, which is next to the main embassy building in Damascus’s Mezzeh district, was struck at about 5pm (14:00 GMT) on Monday. Photos from the scene showed piles of rubble and twisted steel with an Iranian flag still hanging from a pole nearby. Who was there? Several IRGC military advisers were in the building at the time of the attack and seven were killed, according to the IRGC statement. The statement said Zahedi and Hajriahimi were among the dead. https://www.aljazeera.com/news/2024/4/2/attack-on-iran-consulate-in-damascus-what-do-we-know

“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்

2 weeks 3 days ago
க‌த்தையா நான் வெளிப்ப‌டையாய் சொல்லுகிறேன் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சிய‌ ப‌ற்றி ஒரு கோதாரியும் தெரியாது.....................ஏதோ உங்க‌ட‌ ம‌ன‌சில் இருக்கும் வ‌ன்ம‌த்தை இந்த‌ திரிக்குள் கொட்டுறீங்க‌ள் கொட்டுங்கோ😁😜...........................

தமன்னாவை... பார்க்க ஏறிய பனைமரம்  வெட்டி வீழ்த்தப்பட்டது.

2 weeks 4 days ago
தமன்னா காவோலை தா…காவோலை தா என்றுதானே கேட்டவா? ஏன் மரத்தையே வெட்டி கொடுத்துள்ளார்கள்🤣. பிந்திய செய்தி வெட்டிய மரம் எட்டுக்கோடிக்கு ஏலம் போனது🤣

“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்

2 weeks 4 days ago
குறையும் காரணம் 10 வருடங்களில் சீமான் வயோதிபர். இளைஞர்கள் வாக்குகள் கிடையாது வயோதிபரகள் மட்டுமே போடுவார்கள் அனேகமாக வயோதிபர்கள் இந்த உலகில் இருக்க வாய்ப்புகள் இல்லை எனவேதான் குறையும் 🤣🤣 எனது பிள்ளைகள் என்னை அப்பா என்று தான் சொல்வார்கள் ஆனால் நாங்கள் தமிழர்கள் என்று சொல்வதில்லை நான் சொல்லி கொடுத்தாலும் அவர்கள் நாங்கள் ஜேர்மனியார்கள் என்பார்கள் 😀 தெரியாது நிச்சயமாக ஆனால் பிரயோஜனம் அற்றது

1950களில் வீரகேசரி நாளிதழின் அலுவலகம்.

2 weeks 4 days ago

spacer.png

1950களில் வீரகேசரி நாளிதழின் அலுவலகம். 
இந்தப் புகைப்படம் தொடர்பாக ஒரு அன்பரின் கருத்து இதோ...
வீரகேசரி நிறுவனம் 1930 ஆம் ஆண்டு சுப்ரமணிய செட்டியாரால் செட்டியார் தெருவில் ஆரம்பிக்கப்பட்டது. வீரகேசரி என்பது அவரது மகனின் பெயர். சில மாதங்களே செட்டியார் தெரு அலுவலகம் செயற்பட்டது. பின்னர் சில காலங்கள் மருதானையில் செயற்பட்டது. பின்னரே கிராண்ட்பாஸ் கட்டிடத்திற்கு மாற்றப்பட்டு இன்று வரையும் இயங்கி வருகின்றது. மருதானையில் அலுவலகம் செயற்பட்ட காலத்தில் எடுக்கப்பட்ட படமே இது. இப்படத்தில் தோளில் கருப்பு துண்டுடன் நிற்பவர் இலங்கை திராவிட கழகச் செயலாளராகவும் இந்திய இலங்கை தொடர்பாளராகவும் விளங்கிய ஏ.எஸ்.மணவைத் தம்பி ஆவார். இந்த படம் அவரிடமே இருந்தது. தற்போது இலங்கை இந்திய தொடர்பாளராகவும் சிறந்த பண்பாளராகவும் விளங்கும் நண்பர் Manavai Asokan மணவை அசோகன், மணவைத் தம்பியின் மகனாவார். அவரே இந்த படத்தை எமது நிறுவன முகாமைத்துவ இயக்குநருக்கு வழங்கினார். இப்போது அந்த படம் எமது நிறுவனத்திலேயே உள்ளது. அலுவலகத்துக்கு வெளியே நிற்கும் கார் அவருடையது. காரில் திராவிட கழக கொடி இருப்பதை காணலாம்.

1950களில் வீரகேசரி நாளிதழின் அலுவலகம்.

2 weeks 4 days ago
1950களில் வீரகேசரி நாளிதழின் அலுவலகம். இந்தப் புகைப்படம் தொடர்பாக ஒரு அன்பரின் கருத்து இதோ... வீரகேசரி நிறுவனம் 1930 ஆம் ஆண்டு சுப்ரமணிய செட்டியாரால் செட்டியார் தெருவில் ஆரம்பிக்கப்பட்டது. வீரகேசரி என்பது அவரது மகனின் பெயர். சில மாதங்களே செட்டியார் தெரு அலுவலகம் செயற்பட்டது. பின்னர் சில காலங்கள் மருதானையில் செயற்பட்டது. பின்னரே கிராண்ட்பாஸ் கட்டிடத்திற்கு மாற்றப்பட்டு இன்று வரையும் இயங்கி வருகின்றது. மருதானையில் அலுவலகம் செயற்பட்ட காலத்தில் எடுக்கப்பட்ட படமே இது. இப்படத்தில் தோளில் கருப்பு துண்டுடன் நிற்பவர் இலங்கை திராவிட கழகச் செயலாளராகவும் இந்திய இலங்கை தொடர்பாளராகவும் விளங்கிய ஏ.எஸ்.மணவைத் தம்பி ஆவார். இந்த படம் அவரிடமே இருந்தது. தற்போது இலங்கை இந்திய தொடர்பாளராகவும் சிறந்த பண்பாளராகவும் விளங்கும் நண்பர் Manavai Asokan மணவை அசோகன், மணவைத் தம்பியின் மகனாவார். அவரே இந்த படத்தை எமது நிறுவன முகாமைத்துவ இயக்குநருக்கு வழங்கினார். இப்போது அந்த படம் எமது நிறுவனத்திலேயே உள்ளது. அலுவலகத்துக்கு வெளியே நிற்கும் கார் அவருடையது. காரில் திராவிட கழக கொடி இருப்பதை காணலாம். Thevarasha Pramilan