கதை கதையாம்

இன்னொருவர் கடந்து வந்த பாதை

2 weeks 4 days ago
http://1.bp.blogspot.com/_XsbRJpGRhp0/TFR50OkOdtI/AAAAAAAAAXc/Irhmr0Fwxio/s320/life.jpg
 
ஊருக்குப் போயிருந்த போது ஏதேட்சையாக சந்தித்த மனிதரெருவரைப்பற்றிய கதையிது.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர், ஆனால் அவர் தமிழில் மட்டக்களப்பு வாசம் பலமாய் வீசியது. ஆண்டுகள் பலவாகிவிட்டதாம் புலத்தினுள்ளேயே புலம் பெயர்ந்து.

அமைதியன முகமும், அதுக்கேற்ற புன்னகையையும் கொண்டிருந்தார். முகத்தில் வயதுக்கு மீறிய முதிர்ச்சுி தெரிந்தது. வயது 20 களின் முடிவில் அல்லது 30 களின் ஆரம்பத்தில் இருக்கும். நான் தங்கியிருந்த ஒரு விடுதியில் முகாமையாளராக தொழில் புரிவதாய்ச் சொன்னார்.

ஓரு நாள் மாலை 10 மணியளவில் ஏதேட்சையாக சந்திக்கக் கிடைத்தது இவரை. பழகி சில நிமிடங்களுக்குள்ளாகவே மிகவும் அன்னியோன்யமாய் பேசினார்.

பலாலி கிழக்கில் காணி, நிலங்களுடன் பெருமையாய் வாழ்ந்திருந்ததாயும், பாதுகாப்புவலையத்துக்குள் அவை உட்பட்டுப் போனதால் தங்களின் குடும்பச் சொத்துக்கள் என்று அவற்றை தம்மால் உரிமைகொண்டாடவோ, விற்பனை செய்யவோ முடியாதிருக்கிறது என்றார்.

விடுதலைப்போராளியாய் வாழ்ந்திருந்திருக்கிறார் மட்டக்களப்பில். உட்கட்சிப் பிரச்சனையின் பின் விடுதலை வெறுத்து ஓதுங்கிக் கொண்டாராம்.

வெளிநாட்டில் வேலை செய்து தங்கைகளுக்கு கலியாணம் முடித்துக் கொடுத்திருக்கிறார். தாயார் தன்னுடன் வசிக்கிறாராம். அவருக்கு இன்னும் கல்யாணகமாகவில்லை  என்றும் அறியக்கிடைத்தது.

பிரான்ஸ்,  நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இரண்டு வருடம் விசா இன்றி அலைந்திருக்கிறார். அது பற்றி அவர் சொன்ன விடயங்களே என்னை அதிகமாக சிந்திக்கவைத்தது. வாழ்வின் உச்சம் தொட்டாரோ என்னவோ, ஆனால் நிட்சயமாக வேதனையின் உச்சம் தொட்டிருந்தார் இந்த மனிதர்.

பிரான்சில் விசா இல்லாமல் பல தமிழர்களிடம் கள்ளமாய் வேலை செய்த பணம் இன்னும் நிலுவையில் இருப்பதாய் புன்னகையுடன் சொன்னார். மேசன் வேலை, கழுவல் வேலை, கடையில் எடுபிடி வேலை, என்று எத்தனையோ வேலைகள் செய்திருக்கிறார். வேதனை என்னவென்றால் அடிமாட்டு சம்பளத்தை பெற்றுக் கொள்வதற்கும் பல நாட்கள் கைகட்டி, வாய்பொத்தி அலையவேண்டியிருந்ததாம். ”மனிசனுக்கு மதிப்பில்ல அங்க” என்று அவர் சொன்னபோது ஏனோ பலமாய் வலித்தது.

பிரான்ஸ்சில் இன்னொரு குடும்பத்துடன் ஒரு வீட்டில் வாடகைக்கிருந்தாராம்,. அந்த வீட்டில் இரண்டு அறைகள் இருந்ததாயும் அவற்றில் ஒன்றில் அக்குடும்பமும் மற்றயதில் இவருடன் சேர்த்து 5 ஆண்களும் வாழ்ந்திருந்திருக்கிறார்கள்.

வீட்டு உரிமையாளர் இவரை தினமும் குளிக்காதீர்கள் தண்ணீர் ”பில்” அதிகமாய் வருகிறது என்று சொன்னதாயும், தான் அவரிடம், மேசன்வேலை 15 மணிநேரம் செய்து வந்தபின் எப்படி குளிக்காமல் இருப்பது என்று கேட்ட போது அது உங்கட பிரச்சனை என்று அவர் சொன்னதாயும், பின்பு தான் அதிக வாடகை குடுத்த பின்பே தினமும் குளிக்க அனுமதிக்கப்பட்டதாகக் கூறினார்.

எனக்கு இதை நம்பவும் முடியவில்லை, நம்பாமலும் இருக்க முடியவில்லை. இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா என்பது ஆச்சர்யமாகவும், வேதனையாகவும் இருந்தது.

வெளிநாட்டில் பணத்துக்காய் மனிதர்கள் பிணமாவாதயும், வாழ்கையை மனிதத்துடன் வாழ மறுக்கிறார்கள் என்றும் சொன்னார்.

நெதர்லாந்தில் ஒரு தோட்டத்தில் வேலை செய்ததாயும், வின்டர் குளிரில் வாழ்ந்திருந்த நேரத்தை விட விறைத்திருந்த நேரங்களே அதிகமென்றார்.

ஒரு கட்டத்தில் வெளிநாட்டு வாழ்க்கை வெறுத்து IMO மூலமாக ஊர் திரும்பியிருக்கிறார். 

வெளிநாடு போவதற்கு பட்ட கடனையும், தங்கைகளுக்கு கலியாணத்தையும் செய்ய வெளிநாடு தனக்கு உதவியிருந்தாலும், அது கற்பித்த பாடங்களே தனக்கு பிச்சையெடுத்தென்றாலும் ஊரிலே வாழ் என்று உபதேசம் பண்ணியதாம்.

ஊர் வந்து, ‌ ஹோட்டேல் மனேஜ்மன்ட் படித்து, தற்போது விடுதி முகாமையாளராக வாழ்வதாயும், வருமானம் சிறிது என்றாலும், வலியில்லாத வாழ்க்கை வாழ்வதாய் சொன்ன போது அவரின் முகத்தைப் பார்த்தேன், உண்மையின் உண்மை தெரிந்தது அவர் முகத்தில்.

சிறு கதை - 124 / "தற்கொலை தீர்வாகுமா?"..[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,அத்தியடி, யாழ்ப்பாணம்]

3 weeks 4 days ago
சிறு கதை - 124 / "தற்கொலை தீர்வாகுமா?"
 
காவியா தனது ஸ்கூட்டரில் அரசடி சந்தியால் திரும்பி, வைமன் வீதியால், அத்தியடி புது வீதியூடாக, யாழ் போதனா வைத்திய சாலைக்கு வேலைக்கு காலை புறப்பட்டாள். அவள் ஒரு இளம் செவிலியாக அண்மையில் தான் பணிக்கு சேர்ந்தவள். அவள் முகத்தில் புன்னகையைக் காணவில்லை. எதோ ஏக்கம் துக்கம் அவளை வாட்டுவது அப்படியே தெரிகிறது. அதை அவளால் மூடி மறைக்க முடியவில்லை. அத்தியடி புதுவீதியால் போகும் பொழுது, அந்த வீட்டில் பலர் கூடியிருப்பதைக் கண்டு, செவிலி தானே, என்ன ஏது என்று தன்னை யறியாமலே விசாரித்தாள். தானே தற்கொலை செய்து, வாழ்வை முடிக்க திட்டமிட்டவளுக்கு, இப்ப அது உண்மையில் தேவையில்லாத ஒன்றுதான். தன் வேலையிடத்தில், தான் பார்க்கும் நோயாளிகளை முறையாக இன்னும் ஒரு செவிலியிடம் பாரம் கொடுத்து விட்டு, தற்கொலையை எனோ ஒரு தீர்வாக எடுத்து, இரவு இந்த உலகை விட்டு போக வேண்டும் என்பதே அவளின் இறுதி முடிவாக இருந்தது. அதற்கிடையில் இது!
 
ரமேஷ் மீதான அவளுடைய காதல் ஆழமாக இருந்தாலும், காலத்தையும் சமூக எல்லைகளையும் தாண்டிய ஒரு பந்தம் இருவருக்கும் இடையில் இருந்தாலும், அவர்களின் காதல் சமூகத்தின் கடுமையான மரபுகளுடன் மோதியதால், காவியா விரக்தியின் தவிர்க்க முடியாத வலையில் சிக்கிக் கொண்டாள். சமூக எதிர்பார்ப்புகளின் கனமும், அவளது காதலுக்கும் வேரூன்றிய மரபுகளுக்கும் இடையிலான மோதலும், ரமேஷ் இல்லாத எதிர்காலத்தைப் பற்றிய பயமும் காவியாவிற்குள் ஒரு நம்பிக்கையற்ற உணர்வை உருவாக்கியது. தான் ஆழமாக நேசித்த ஒருவரிடமிருந்து வலுக்கட்டாயமாகப் பிரிந்து போக வேண்டும் என்ற எண்ணமும், அவர்களின் காதல் செழிக்கக் கூடிய எதிர்காலத்தை கற்பனை செய்ய முடியாத இயலாமையும் சேர்ந்து, அத்தகைய சோகமான தீர்வை யோசிக்க வைத்தது அவளுக்கு.
 
எல்லாத் தற்கொலைகளும் மூடத்தனமானதுதானா? தன் உயிருக்கு மேலாகத் தான் நம்பும் ஒன்றை நிறுவ உயிரை மாய்க்கும் சமூக விழுமியத்தை நாம் தக்கவைக்க வேண்டாமா? தற்கொலைகளில் தியாகமாக? ஒரு மானுட உச்சமா? அவளால் சிந்தித்து பார்க்கும் நிலையில் அவள் இப்ப இல்லை. வில்லியம் ஷேக்ஸ்பியரின் பல நாடகங்களில் அவரது கதாபாத்திரங்கள் தற்கொலையால் இறக்கின்றன. ரோமியோ ஜூலியட்டின் இறுதிக் காட்சியில், இளம் காதலர்கள் இருவரும் தற்கொலை செய்து கொள்கின்றனர். அது கதைக்கு ஒரு கவர்ச்சியை கொடுத்து இருக்கலாம்? மற்றும் படி அது எந்த தீர்வையும் தரவில்லை என்பதே உண்மை!
 
இலங்கையின் யாழ்ப்பாணத்தின் பரபரப்பான தெருக்களில், யாழ்ப்பாணத்துக்கே உரிய மசாலா வாசனை, பாரம்பரியத்தில் ஊறிய கலாச்சாரத்தினையும் சேர்த்து ஆழமாக எதிரொலிக்க, பாலச்சந்திரன் குடும்பம் அங்கு பெருமையுடன் பின்னிப்பிணைந்து வாழ்ந்து வந்தது. பாலச்சந்திரனுக்கு ரமேஷ் என்ற ஒரு மகனும் மூன்று மகளும் இருந்தனர். அதில் ஒருவளுடன் சிறு வயது முதல் நண்பியாக இருப்பவள் தான் காவியா. அதனால் ரமேஸுடனும் தோழியாக, சிறுவயதில் நெருக்கமாக இருந்ததால். பிற்காலத்தில் அது காதலாக மாறி, ஒருவருக்கொருவர் சகவாசத்தில் ஆறுதல் கண்டனர். என்றாலும் அவர்களின் காதல் இரகசியமாகவே மலர்ந்தது. ஏனென்றால் அவர்களுக்கிடையில் சமூக ஏற்றத் தாழ்வுகள், அவர்களின் இணைப்புக்கு குறுக்காக நின்றது. ஐயபொட் டிட்ட அழகுவாள் நுதலும் அழகிய விழியும் [அழகாகத் திலகம் இட்ட அழகிய ஒளி பொருந்திய நெற்றியும், அழகிய கண்களும்] மட்டும் அல்ல,
 
"அறம்திகழ் தவமும் அகிலமும் இதனால்
அழியுமென் றயன்படைத் திலனோ
சிறந்தவேல் விழியை முன்படைத்தயர்ந்து
செங்கரம் சோர்ந்ததோ திகைத்து
மறந்ததோ கரந்து வைத்ததோ களப
வனமுலைப் பொறைசுமந் துருகி
இறந்ததோ உளதோ இல்லையோ இனிமேல்
எய்துமோ அறியொணா திடையே."
 
அறநெறி விளங்கும் வீட்டு நெறியும் உலகியல் நெறியும் இடையினால் அழியும் என்று எண்ணி இடையினைப் படைக்கவில்லையோ? சிறந்த வேல் போன்ற கண்களை முதலில் படைத்து இளைத்துச் சிவந்த கைகள் தளர்ந்தனவோ? செய்வதறியாது மதிமயங்கி மறந்துபோனினனோ? அல்லது அவள் வடிவில் மறைத்து வைத்திருக்கிறானோ? சந்தனக் குழம்பணிந்த அழகிய முலைகளின் பாரத்தைச் சுமந்து உருகி இற்றுப்போயிற்றோ? இடை இருக்கிறதோ இல்லையோ அல்லது இனி மேல்தான் உண்டாகுமோ? இடை இருப்பதாகவே அவளிடம் தெரியவில்லை. அப்படி ஒரு அழகு அவள். அவள் தான் காவியா!
 
அவள் தனது பிரகாசமான புன்னகையுடனும் உறுதியுடனும், காதல் அனைத்தையும் வெல்லும் எதிர்காலத்தை கனவு கண்டாள். ரமேஷ், சமமான உற்சாகத்துடன், ஆனால் குடும்பப் பொறுப்புகளின் சுமைகளை சுமந்து கொண்டு, தனது இதயத்தின் ஆசைகள் மற்றும் தன் மீது சுமத்தப்பட்ட கடமைகளுக்கு இடையே, தவிர்க்க முடியாத மோதலுடன் போராடினான். தன்னால் இரண்டையும் சமாளிக்க முடியும் என்ற தெம்பு அவனிடம் இருந்தது. ரமேஷ், யாழ்ப்பாணத்தில் உள்ள பல மேல் மட்ட தமிழ் மக்களைப் போலவே, பாரம்பரியத்தில் மூழ்கிய ஒரு இறுக்கமான சமூகத்தில் பிறந்து வளர்ந்தவன். சிறு வயதிலிருந்தே, குடும்ப மரியாதை, கடமை, பெரியவர்களுக்கு மரியாதை போன்ற மதிப்புகளை ஊட்டி வளர்க்கப் பட்டவன். அதிலும் மூன்று தங்கைகளுடன் பிறந்தவன் என்பதால் பொறுப்பும் அதிகம் இருந்தது. இந்த கலாச்சார, கடமை நெறிமுறைகள் அவனது தனிப்பட்ட அபிலாஷைகள் மற்றும் ஆசைகளுடன் மோதின.
 
ரமேஷின் போராட்டத்தின் அடிப்படையானது காவியா மீதான அவனது இதயப்பூர்வமான பாசத்திற்கும் அவனது குடும்பம் அமைத்துள்ள, முன்னரே தீர்மானிக்கப்பட்ட பாதைக்கும் இடையிலான மோதலாகும். பாரம்பரிய நம்பிக்கைகளில் ஆழமாக வேரூன்றியிருந்த அவனது குடும்பம், ஸ்திரத்தன்மை, சமூக அந்தஸ்து மற்றும் குடும்ப உறவுகள் பற்றிய அவர்களின் கருத்துக்களுடன் இணங்கக்கூடிய இன்னும் ஒரு ஒத்த குடும்பத்தில் அவனுக்கு ஒரு திருமணத்தை ஏற்பாடு செய்யத் தொடங்கினர். இருந்தாலும் ரமேஷின் இதயம் காவியாவுக்கே ஏங்கியது. குழந்தைப் பருவத்தில் உருவான அவர்களின் பிணைப்பு, காலப்போக்கில் வலுப்பெற்று, எல்லைகளைத் தாண்டிய காதலுக்குச் சான்றாக இருந்தது. அவன் தனது இதயத்தின் கட்டளைகளைப் பின்பற்றவும், அன்பே வழிகாட்டும் சக்தியாக இருக்கும் எதிர்காலத்தைத் தழுவவும் விரும்பினான்.
 
இதனால், தன் தங்கையினூடாக தன் காதலை பெற்றோரிடம் தெரியப்படுத்தினான். தான் காவியாவை திருமணம் செய்தாலும், கட்டாயம் மூன்று தங்கையின் வாழ்வை தீர்மானிப்பேன், நான் நல்ல உத்தியோகத்தில் இருக்கிறேன். ஆகவே பயம் தேவையில்லை என்று உறுதிமொழியும் கொடுத்தான். என்றாலும் அவனது தந்தை பாலச்சந்திரன் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. தாயும் கூட தந்தையின் பக்கமே நின்றாள். இதனால் ஏற்பட்ட தவறான புரிதல்களும் குடும்ப அழுத்தங்களும் காவியா, ரமேஷ் இடையே கடக்க முடியாத சுவர்களை எழுப்பின. ஏங்கித் தவிக்கும் இரு இதயங்களுக்கும் ரமேஷ் குடும்பத்தின் தவிர்க்க முடியாத கோரிக்கைகளுக்கும் இடையில் அகப்பட்ட காதலர்கள் இருவரும், வாழ்வில் ஒரு பள்ளத்தை எதிர்கொண்டனர். தங்கள் காதலுக்கு, தாங்கள் சேர்ந்த உலகில் ஒருபோதும் இடம் கிடைக்காது என்ற மனவருத்தம் தரும் உணர்வு அவர்களை கடுமையான நடவடிக்கைகளைச் சிந்திக்கத் தள்ளியது. என்றாலும் ரமேஷ் தான் இன்னும் பெற்றோருடன் கதைத்து பேசி நல்ல முடிவுக்கு வரலாம் என்ற நம்பிக்கையுடன் இருந்தான்.
ஆனால், குடும்ப எதிர்பார்ப்புகளுக்கு இணங்க வேண்டிய அழுத்தம், சமூகத்தின் தீர்ப்பு பற்றிய பயம் மற்றும் அவர்களின் இக்கட்டான நிலைக்கு சாத்தியமான தீர்வு கிடைக்காது என்ற விரக்தி ஆகியவை காவியாவின் தோள்களில் தாங்க முடியாத பாரமாக மாறியது. இது அவளுடைய தனிப்பட்ட ஆசைகளைப் பற்றியது மட்டுமல்ல, அவர்களின் அன்பைத் தடுக்கும் சமூகத் தடைகள் மற்றும் அவர்களின் மகிழ்ச்சியின் வழியில் நிற்கும் கடக்க முடியாத தடைகள் பற்றியதாகவும் விரிந்தது. தன் இறப்பு மூலம் தன் வேதனைக்கு, மனச் சஞ்சலத்துக்கு முடிவு கட்டலாம் என்பதுடன் இது பெற்றோர்களுக்கு ஒரு பாடமாக அமைந்து, பிள்ளைகளின் கருத்தையும் அலசும் ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் என்று எண்ணினாள்.
 
காதல் வெற்றி பெற முடியாததால், அவள் இதயம் வேதனைப் பட்டபோது, அவளுடைய வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் எண்ணம் ஒரு தீர்வாக அவளுக்கு தோன்றியிருக்கலாம்? இது ஒரு பகுத்தறிவு முடிவு அல்ல, மாறாக அவளது வேதனையின் ஆழத்தின் பிரதிபலிப்பு, அவளுடைய கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட சூழ்நிலைகளால் அவள் மூழ்கடிக்கப் பட்ட போது தன்னை இழந்த நிலையில், ஏற்பட்ட ஒரு உணர்வு.
 
அவள் தன் உணர்வுகளை சமாளித்துக் கொண்டு அந்த வீட்டுக்குள் நுழைந்தாள். ஆனால், அது பிந்திவிட்டது. பக்கத்து வீட்டாரின் துணை பெற்று, கதவு உடைத்து திறக்க நேரம் கடந்து விட்டது. தந்தையின் எதிர்பாராத திடீர் விபத்து மரணத்தால், மனம் உடைந்த இளம் உயர் வகுப்பு மாணவன் தாயின் சீலையில் கழுத்தில் தூக்கு போட்டு அங்கு சடலமாக தொங்கிக் கொண்டு இருந்தான். அவன் விட்டு சென்றது தாயும், தங்கையும், தந்தை இல்லா நேரம் ஒரு வலுவான துணையாக இருந்து பொறுப்புகளை சுமக்க வேண்டிய ஒருவன், தன்னை மரித்து அதில் இருந்து தப்பிவிட்டான் என்று தான் சொல்லவேண்டும் என்று அவளுக்கு, காவியாவுக்கு தோன்றியது. அப்படி என்றால் ? அவள் சிந்திக்க தொடங்கினாள்!
 
ரமேஷ் மீதான அவளது காதலுக்கு இடையூறுகள் தோன்றி, கடக்க முடியாத தடைகளை எதிர்கொண்டபோது, அவள் அனுபவித்த தீவிரமான உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருந்து, தற்கொலை என்ற இந்த கடுமையான நடவடிக்கை பற்றிய அவளது சிந்தனை தோன்றியது என்னவோ உண்மையே. ஆனால் இப்ப இந்த தொங்கும் சடலத்தையும், வெம்பி வெம்பி அழுது புலம்பிக் கொண்டு இருக்கும் அவனின் தாயையும் தங்கையையும் பார்த்த பின், அவள் மனதில் ஒரு ஞானம், ஒரு தெம்பு பிறந்தது. தான் சாவதால் ஒன்றும் நடக்கப் போவதில்லை, தன்னை விரும்பியவர்களுக்கு, தன் குடும்பத்துக்கு கவலை மற்றும் துன்பத்தையே அது கொடுத்து, அவர்களின் வாழ்வைக் கூட அது சிதைக்கலாம் என்ற ஞானமே அது!
 
அவள் அன்று வேலை முடிய நேராக ரமேஷ் வீட்டுக்கு போனாள். முன்பு எத்தனையோ தடவை ரமேஷின் தங்கையுடன் அங்கு போனவள் தான். அவனின் பெற்றோர்களை சந்தித்தவள் தான். ஆனால் இந்த சூழ்நிலை வேறு. "தற்கொலை தீர்வாகுமா?" என்ற மனதில் ஏற்பட்ட போராட்டத்துக்கு ஒரு மறுமொழியாக அங்கு போகிறாள். வலது கால் எடுத்து மங்கள வாத்தியம் ஒலிக்க ரமேஷின் குடும்பத்துடன் இணைவதற்கு, தானே அவர்களுடன் கதைத்து, விளங்கப்படுத்தி உறுதிகொடுக்க போகிறாள். அது தான் வேறுபாடு.
 
காவியாவுடன் ரமேஸும் இணைய, இருவரின் உணர்ச்சிபூர்வமான நேர்மையும் ஆர்வமும் நிறைந்த வேண்டுகோள், ரமேஷின் பெற்றோர்களுக்கு எதையோ தூண்டியது. மெதுவாக, பாரம்பரியத்தின் விறைப்பு தணிந்து, புரிதல் மற்றும் பச்சாதாபத்தின் ஒரு மினுமினுப்புக்கு வழிவகுத்து, பெற்றோர்களின் மன மாற்றத்திற்கான வாய்ப்பு அடிவானத்தில் மின்னியது.
 
பாலச்சந்திரன் குடும்பம், காவியா ரமேஷின் நேர்மையால் நகர்ந்து, அது உணர்த்திய ஞானத்தால் ஈர்க்கப்பட்டு, அவர்களின் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்தனர். இதனால் காவியாவும் ரமேஷும் நம்பிக்கையுடன் மீண்டும் உற்சாகமடைந்தனர், அவர்கள் கைகோர்த்து நின்றனர், இது ஒரு உடனடி புரட்சி அல்ல, ஆனால் மாற்றத்தின் விதை விதைக்கப் பட்டு, ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் புரிந்துகொள்வதற்கான பயணத்தின் தொடக்கத்தை ஏற்படுத்தியது.
"தற்கொலை தீர்வாகுமா?" என்றால் கட்டாயம் இல்லை. காவியா அதைத்தான் அந்த கடைசி நிமிடத்தில் மனம் மாறி தெம்பு பெற்று, ரமேஸுடன் சேர்ந்து செய்தாள். அந்த இளம் உயர் வகுப்பு மாணவனின் தற்கொலை எந்த தீர்வையும் தந்ததா? என்ற காவியாவின் கேள்வி, அவளுக்கும் ஒரு வாழ்வு சமைக்க வழிவகுக்கிறது என்று நம்புவோம். பாலச்சந்திரனும் அதற்கு எந்த தடையும் இல்லாமல் ஒத்துழைக்கட்டும்!
 
"தற்கொலை தீர்வா? இல்லை
வாழ்க்கை ஒரு பாடல்!
ஒவ்வொரு இசைச்சுரமும் இடைநிறுத்தமும்
வளர ஒரு வாய்ப்பு!
வலி கடந்து போகும்
காயங்கள் காய்ந்து குணமாகும்!
ஆறுதல் ஒன்று தேடுங்கள்
அன்பில், நண்பரில் உங்களில்!"
"பொறுமையுடன் வாழ்நாள் இருந்தால்
பல பெருமைக்கு ஆளாவாயே!
துணிந்து நின்றால் துர்க்கையையும்
நீ வதம் செய்திடுவாயே!
சரித்திரத்தில் இடம் பெற்று
சாதிக்க பிறந்த மனிதா!
நிற்காமல் ஓடு மானிடா
தற்கொலை உனக்கு எதற்கடா?"
 
நன்றி
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
430667976_10224782078762084_383574583930429970431_10224782079642106_732898873804430657300_10224782078882087_565978060447

யேசுநாதரே! நீங்களா வந்திருக்கிறீர்கள்?

1 month ago
யேசுவாக நானா அல்லது நானாக யேசுவா?
 
 

என்னை பரவசப்படுத்தியதோர் விடயம் ஏறத்தாள 19 ஆண்டுகளுக்கு முன் நடந்தது. அந்நாட்களில்  நான் ஒஸ்லோவிலுள்ள ஒரு வயோதிபமடத்தில், வயோதிபர்களைப் பராமரிக்கும்  தொழில் செய்துகொண்டிருந்தேன்.

அது ஒரு பனிக்காலத்து நாள். அன்றைய காலைநேரத்து இளவெயில் குளிரை விரட்ட முயற்சித்துக்கொண்டிருந்தது. உச்சந் தலையில் இருந்து உள்ளங்கால்வரையில் மூடிக்கட்டிக்கொண்டு வேலைத்தளத்துக்குள் உட்புகுந்து  உடைமாற்றி, வெள்ளை பான்ட், வெள்ளை சட்டை போட்டுக்கொண்டேன்.

மேலதிகாரி எமக்கு என்ன என்ன வேலைகள் இன்று உள்ளன என்றும்,  நான் யார் யாரை ‌எழுப்பி பராமரிக்க வேண்டும் என்ற அட்டவணையைத் தந்தார்.
எனது வேலையைத் தொடங்கினேன்.

முதவாமவரைத் துயிலெழுப்பி, பராமரித்து விட்டு இரண்டாவது நபரிடம் செல்ல வேண்டிய நேரம் வந்தது.

நான் சற்று இந்த இரண்டாம் நபரைப்பற்றி இவ்விடத்தில் கூறவேண்டும்.

85 - 90 வயதிருக்கும், அன்பான பெண்.. கண்பார்வை  மிகவும் மங்கலாகிவிட்டது. என்னுடன் நன்றாகவே பழகுவார்.  தன்னருகே எப்போதும் இயேசு இருப்பது போல் நினைத்தபடியே உரையாடிக்கொண்டிருப்பார், அவர்.

மிகவும் குசும்பு பிடித்தவர். ஒரு நாள் அவருக்கு நான் உடைமாற்றிக்கொண்டிருந்த போது, நீ என்ன நினைக்கிறாய் என்று நான் சொல்லவா என்றார். நானும் சிரித்தபடியே சரி கூறுங்கள் என்றேன். அவர் இப்படிக் கூறினார்: ”இந்தக் கிழவி ஒரு இளம் பெண்ணாக இருந்து அவளுக்கு நான் உடைமாற்றினால்  எப்படியிருக்கும்” என்று தானே நினைக்கிறாய் என்றார். இல்லை, இல்லை என்று அசட்டுச் சிரிப்பு சிரித்தபடியே  அன்று அவரிடம் இருந்து தப்பினேன்.

அன்றைய நாளின் பின் இவரிடம் வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக் கொள்ளக்கூடாது என்பதில் கவனமாயும் இருந்தேன்.

அவரின் அறைக் கதவினைத் தட்டிப்பார்த்தேன். பதில் இல்லை. மெதுவாய் அறையைத் திறந்து அவரின் அறைக்குள் சென்றேன். அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். எனவே வெளியே சென்று வேறு ஒருவரைப் பாராமரித்துவிட்டுத் திரும்ப வந்தேன்.

இனி இந்தக் கதை நடைபெறும் சூழலை நான் சற்றே விபரிக்கவேண்டும். அப்போது தான் இந்தக் கதையின் முக்கியமான பகுதி உங்களுக்குப் புரியும்.

எனது காற்சட்டையும், மேற்சட்டையும் வெள்ளை. அந்த வெள்ளைக்கு நேரெதிரானது எனது நிறம்.

அந்த முதியவரின் அறையின் ஜன்னலின் ஊடாக கண்ணைக் கூசவைக்கும் வெய்யில் எறித்துக்கொண்டிருக்கிறது.

நான் ஜன்னல் திரைச்சீலையை இரு பக்கங்களுக்கும் இழுத்துவிட்டு அவரை நோக்கிச் செல்வதற்காகத் திரும்பும் போது வெய்யில் என் முதுகுப் பக்கமாக எறித்துக் கொண்டிருக்கிறது.

ஜன்னல் கண்ணாடியில் ‌சூரிய வெளிச்சம் தெறித்து, அறைக்குள் ஒருவித வௌ்ளை நிறக் கதிர்கள் தெறித்துக்கொண்டிருக்கின்றன.

இப்போது நான் அவரை நோக்கித் திரும்பி நிற்கிறேன்.

இப்போது உங்கள் கற்பனைக் குதிரையை சற்றுத் தட்டிவிடுங்கள்.

என்னை நினையுங்கள். நான் வெள்ளை உடையுடன் நிற்கிறேன். எனக்குப் பின்புறத்தில் இருந்து ஒளிக்கதிர்கள் ஒளிர்கின்றன. முகத்தில் எத்தனை சூரியன்களின் ஒளி பாய்ந்தாலும் கறுப்பாகவே இருக்கும்படியான நிறத்தில் நான். எனவே நான் யார் என்று அந்து முதியவருக்குத் தெரிவதற்கு சற்தப்பம் இல்லை. அத்தோடு அவருக்கு இரண்டடிக்கு அப்பால் என்ன நடந்தாலும் தொரியாத அளவில் அவரின் கண்பார்வை மங்கலாகியிருக்கிறது.

அந்த சுரியக்கதிர்களுக்கு நடுவில் தேவதூதர்கள் போல் நான் நிற்கிறேன். அறையினுள் வேறு வெளிச்சங்கள் இல்லை

அப்படியே உங்களின் கற்பனைக் குதிரையை நிறுத்திக்கொள்ளுங்கள்.

அம்முதியவரின்  கட்டிலுக்கு அருகிற்சென்று அவரின் கையைப் பற்றி அவவின் பெயரை சொல்லி அழைக்கிறேன். பதில் இல்லை.. அமைதியாய் சில கணங்கள் நகர்கின்றன.

மீண்டும் அவர் கையை மெதுவாய்த் தடவி, மீண்டும் மெதுவாய் அவரின் பெயர் சொல்லி அழைக்கிறேன். நித்திரையால் எழும்ப முயற்சிக்கிறார்.
மீண்டும், மீண்டும் அவர் கையை மெதுவாய் தடவியபடியே அவர் பெயர் சொல்லி அழைக்கிறேன்.

தூக்கக் கலக்கத்துடன் சற்றே கண்களைச் சுருக்கியபடியே என்னைப்பார்க்கிறார்.

மௌனமாய் சில கணங்கள் கலைகின்றன.

அவரின் சீரான மூச்சின் ஒலி அறையின் நிசப்தத்தைக் கலைத்துக்கொண்டிருக்கிறது.

சிறிது நேரத்திற்குப்பின் என்னைப் பார்த்தபடியே கேட்டார்... ”யேசுநாதரே! நீங்களா வந்திருக்கிறீர்கள்” என்று எனக்கு சர்வமும் அடங்கிவிட்டது.... என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவரின் நம்பிக்கையை கலைக்கவிருப்பாத இயேசுநாதராக நின்றிருந்தேன், நான். என்னையறியாமலே எனது கைகள் அவரின் தலையைத் தடவிக்கொடுத்தது,  கைகளை மெதுவாய் நீவிவிட்டேன்.

அவர் மீண்டும் அப்படியே தூங்கிவிட்டார்.

மெதுவாய் என் கையை விடுவித்துக்கொண்டு வெளியில் வந்தேன். என்னால் அமைதியாய் இருக்க முடியவில்லை. மனதினை ஒரு வித சுகமும், சுமையும் ஆட்கொண்டிருந்தது.

ஏனையவர்கள‌ை பராமரித்த பின் அவரிடம் சென்று அவரைப்பராமரித்தேன். அன்று ஏனைய நாட்களைப் போலல்லாது மகிழ்ச்சியாக இவர் இருக்கிறார்போலிருந்தது எனக்கு.

எப்போது நினைத்தாலும் மனதை இதமாகத்தடவிப்போகும் நிகழ்வு இது.

நான் நினைக்கிறேன், நானோ காகத்தின் நிறமானவன், வெளிச்சமும் முகத்தில் படவில்லை, சூரியகதிரும், வெள்ளை ஆடையும் இந்த பாவியை புனிதராக்கி விட்டதென்று.
இயேசுநாதர் கறுப்பாக இருப்பாரா? என்று நக்கல் கேள்வி எல்லாம் கேட்கக் கூடாது .. ஆமா.

http://visaran.blogspot.com/2009/10/blog-post_19.html

சித்திரப்பேழை......  ஷோபாசக்தி.

1 month 2 weeks ago
சித்திரப்பேழைகதைகள்

‘தமிழீழத்தை ஆதரிக்கும் மாவோயிஸ்டுக்கு மணமகள் தேவை’ என்று அமரேசன் செய்திருந்த விளம்பரத்தைப் பார்த்துத்தான், முப்பது வருடங்களுக்கு முன்னால் அவரை யசோதா பதிவுத் திருமணம் செய்துகொண்டார். அப்போது அமரேசனுக்கு முப்பத்து நான்கு வயது. யசோதாவுக்கு இருபத்தெட்டு வயது.

சென்ற வருடத்தின் கொடுங்குளிர் காலத்தில், அமரேசன் புற்றுநோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவரது தொண்டையில் துளையிட்டுப் புகுத்தப்பட்டிருந்த மெல்லிய குழாய் காரணமாக அவரால் பேச முடியவில்லை. அவர் பேசுவதற்கு முயற்சிக்கவே கூடாது என்றுதான் மருத்துவர்கள் கண்டிப்பாக உத்தரவிட்டிருந்தார்கள். அந்த நிலையிலும் அமரேசனின் முகம் வேதனையால் நெளிந்து விரிய, அவர் சில வார்த்தைகளைத் தட்டுத் தடுமாறி யசோதாவிடம் முனகினார்:

“யசோ… என்னுடைய சாம்பலை கொம்யூனிஸ நாடொன்றின் கடலில் கரைக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை”

இவையே உண்மையில் அமரேசனின் இறுதி வார்த்தைகளாக இருந்தன. யசோதா தன்னுடைய சுட்டுவிரலை மென்மையாகக் கணவரின் மெல்லிய உதடுகளின் மீது வைத்து மூடியவாறே, கணவரின் கண்களைப் பார்த்தார். அப்போது, அமரேசன் சிரமப்பட்டுத் தனது உதடுகளைப் பிரித்துப் புன்னகைத்தார். அந்த வரண்ட உதடுகள் யசோதாவின் விரலை முத்தமிட்டு மூடிக்கொண்டன. இரண்டு நாட்கள் கழித்து அமரேசன் இறந்துபோனார்.

மின் மயானத்தில் அமரேசனின் சிறிய உடலை எரியூட்டிய பின்பாக, ஒரு சித்திரப்பேழைக்குள் பிடி சாம்பலை வைத்து யசோதாவிடம் கொடுத்தார்கள். தீக்கோழி முட்டையின் அளவிலும் வடிவத்திலுமிருந்த அந்தச் சித்திரப்பேழை கருப்பு நிறத்திலிருந்தது. அதன் தலையிலும் அடிப்பாகத்திலும் வெள்ளிப் பூச்சால் சித்திர வேலைப்பாடுகளிருந்தன. இடைப்பட்ட பகுதியில் வெண்ணிறத்தில் பொட்டுப் பொட்டாகச் சின்னஞ்சிறிய பெகோனியாப் பூக்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பொறிக்கப்பட்டிருந்தன.

இப்போது யசோதா அந்தச் சித்திரப்பேழையுடன் வீட்டில் தனித்தே இருக்கிறார். இரண்டு அறைகளும் சிறிய கூடமுள்ள அந்த வீடு ஊரிலிருந்து சற்று ஒதுங்கியிருக்கிறது. அந்த ஊரும்கூட பாரிஸ் நகரத்திலிருந்து தெற்குத் திசையாக அறுபது கிலோமீற்றர்கள் தொலைவில் தனித்துத்தான் இருக்கிறது. பாரிய தொழிற்சாலைகளுக்கும், அங்கு வேலை செய்பவர்களுக்குமாகவே அந்த ஊர் உருவாக்கப்பட்டிருக்கிறது.

சலவைத் தொழிற்சாலையில் வேலை முடிந்து பிற்பகலில் யசோதா வீட்டுக்குத் திரும்பிவிட்டால், இந்தச் சித்திரப்பேழையே அவருக்குத் துணை. அமரேசனின் உருவப்படம் வைக்கப்பட்டிருந்த மேசையிலிருக்கும் பிடி சாம்பல் சித்திரப்பேழையை எடுத்துத் தனது மடியில் வைத்தவாறே மணிக்கணக்காக யசோதா சாய்மனை நாற்காலியில் உட்கார்ந்திருப்பார். முதுகில் வலியெடுக்கும் போது, சித்திரப்பேழையை ஏந்தியவாறே எழுந்து இரண்டு நிமிடங்கள் வீட்டுக்குள்ளேயே நடந்துவிட்டு, மறுபடியும் சாய்மனை நாற்காலியில் உட்கார்ந்துவிடுவார். சற்றே உடல் பெருந்திருந்த அவரது எடையால் சாய்மனை நாற்காலி தாழ்ந்து போகும். அய்ம்பத்தெட்டு வயதில் இயல்பாகவே ஏற்படக்கூடிய உடல் உபாதைகள் யசோதாவுக்கு இருந்தாலும், குறைந்தது இன்னும் ஆறு வருடங்களாவது அவர் சலவைத் தொழிற்சாலையில் இயந்திரங்களோடு இயந்திரமாக உழைக்கத்தான் வேண்டியிருந்தது. இந்த வீட்டை வாங்குவதற்காக வங்கியில் பெற்றிருந்த கடன்தொகையில் எஞ்சியிருக்கும் எழுபது மாதங்களுக்கான தவணைத் தொகையை இப்போது அவர் தனித்தே செலுத்த வேண்டியிருக்கிறது.

அவர்களுடைய ஒரேயொரு மகள் மேதினி தன்னுடைய பத்தொன்பதாவது வயதிலேயே வீட்டைவிட்டு வெளியேறி, பாரிஸ் நகரத்தில் நண்பர்களுடன் வசிக்கச் சென்றுவிட்டாள். அவள் ஏதோவொரு பிரச்சினையான இசைக் குழுவில் இருக்கிறாள் என்பது மட்டுமே யசோதாவுக்குத் தெரியும். அந்தக் குழுவில் இருக்கும் எல்லோரும் எப்போதுமே கருப்பு ஆடைகளையே அணிவார்கள். கால்களில் தடித்த பூட்ஸ்கள் போட்டிருப்பார்கள். உடலில் எங்கெங்கு இடமிருக்கிறதோ அங்கெல்லாம் சித்திரப் பச்சை குத்துவார்கள். பச்சை குத்தியிருக்காத இடங்களில் உலோக வளையங்களை அணிந்திருப்பார்கள். மேதினியும் அப்படித்தானிருந்தாள். நடு நாக்கில் கூட அலகு குத்துவதுபோல ஓர் ஆணியைக் குத்தியிருந்தாள். அவள் எப்படி அந்த ஆணி நாக்கால் பாடுகிறாள் என்பது யசோதாவுக்குப் புரியவேயில்லை.

மேதினி திடீரென ஒருநாள் சொல்லாமல் கொள்ளாமல் பெற்றோரைப் பார்க்க வருவாள். அவளிடமும் வீட்டுச் சாவி ஒன்றிருந்தது. வீட்டுக்கு வந்தால் ஒருநாளுக்கு மேல் தங்கும் வழக்கம் மேதினிக்குக் கிடையாது. இப்போது, தனிமையை எதிர்கொள்ள முடியாமல் யசோதாவின் உடல் புகைந்து, அது மேதினி மீதான எரிச்சலாக வீட்டுக்குள்ளேயே அலைந்துகொண்டிருந்தது.

அமரேசன் இறந்து இரண்டு மாதங்கள் கழித்துத்தான் மேதினி மறுபடியும் ஆடிப்பாடி வீட்டுக்கு வந்தாள். அவளுடைய முதல் கேள்வி “அம்மா! எதற்காகச் சாம்பல் பேழையை வீட்டுக்குள் வைத்திருக்கிறீர்கள்?” என்பதாகயிருந்தது.

“நானே உன்னிடம் சொல்ல வேண்டும் என்றிருந்தேன் மேதினி… தன்னுடைய சாம்பலை கொம்யூனிஸ நாடொன்றின் கடலில் கரைக்க வேண்டுமென்று உன்னுடைய அப்பா இறப்பதற்கு முன்னால் என்னிடம் சொல்லியிருக்கிறார்…”

தன்னுடையை உருண்டைக் கண்களை இன்னும் பெரிதாக விரித்து, ஒல்லி உடம்பைக் குலுக்கிக்கொண்டே யசோதாவை விநோதமாகப் பார்த்த மேதினி “அம்மா… கொம்யூனிஸ நாடு என்று எதுவும் இப்போது உலகத்தில் இல்லை” என்றவள் சற்று நிறுத்தி “எப்போதுமே இருந்ததில்லை” என்றாள்.

மேதினி பேசிய தோரணை யசோதாவுக்கு எரிச்சலூட்டியது. மேதினி எப்போதுமே தன்னைப் பற்றிச் சிந்திக்கிறாளே தவிர பெற்றோரைக் குறித்தோ அவர்களது விருப்பங்களைக் குறித்தோ அவள் என்றுமே அக்கறைப்பட்டதில்லை. யசோதா சற்று ஆத்திரத்துடன் “இல்லாத ஒன்றை உன்னுடைய அப்பா சொல்லியிருக்க மாட்டார் மேதினி” என்றார்.

“அப்பா தன்னுடைய கடைசி நாட்களில் எப்படியிருந்தார் என்பது உங்களுக்குத் தெரியாதா அம்மா? அவர் எல்லா விஷயங்களையும் குழப்பிப் பேசிக்கொண்டிருந்தார். அவரது மூளை அவருக்கு முன்பே செத்துக்கொண்டிருந்தது…”

“வாயை மூடு மேதினி! நீ அடுத்தமுறை வீட்டுக்கு வரும்போது இந்தச் சித்திரப்பேழை இங்கிருக்காது” என்று யசோதா சொல்லிவிட்டுச் சாய்மனை நாற்காலியிலிருந்து எழுந்து, சித்திரப்பேழையுடன் படுக்கையறைக்குள் சென்றுவிட்டார்.

2

அமரேசனோடு வாழ்ந்த முப்பது வருடங்களின் ஒவ்வொரு பகலும் இரவும் ஈரச் சுண்ணாம்புச் சாந்துமீது இயற்கை வண்ணங்களால் வரையப்பட்ட சித்திரம் போன்று யசோதாவின் மனதில் பதிந்திருக்கிறது. வருத்தப்படக் கூடிய ஒரேயொரு தருணம் கூட அவற்றில் இருந்ததில்லை. அமரேசன் பொய் பேசியோ, கோபப்பட்டோ யசோதா பார்த்ததில்லை. தங்கள் இரண்டு பேருக்குமிடையில் எப்போதாவது அபிப்பிராய பேதம் ஏற்பட்டிருக்கிறதா என்று இப்போது யசோதா மீண்டும் மீண்டும் தனது மூளையைத் திருகி யோசித்துப் பார்த்தாலும், அப்படி எதுவுமே நிகழ்ந்ததில்லை என்பது அவரது மனதை ஆற்றுப்படுத்துகிறது. யசோதாவை முதன்முதலாகச் சந்தித்தபோது அமரேசன் எவ்வாறு மலர்ந்து சிரித்தாரோ, அதே புன்னகை அவர் இறந்துகிடக்கும் போதுகூட அவரது முகத்தில் இருந்ததை யசோதா பார்த்திருக்கிறார். சவப்பெட்டியில் கிடத்தப்பட்டிருந்த அமரேசனுக்கு அறுபத்து நான்கு வயதென்று யாராலும் சொல்லிவிட முடியாதென்றே யசோதா நினைத்துக்கொண்டார். யசோதா முதன்முதலில் அமரேசனைப் பார்த்தபோது, அமரேசன் என்ன தோற்றத்தில் இருந்தாரோ அதே தோற்றத்திலேயே சாகும் போதும் அமரேசன் இருந்தார். அவரது விஷயத்தில் காலம் உறைந்திருந்தது என்று கூடச் சொல்லலாம்.

அவர்களிடையேயான முதல் சந்திப்பு 1993-ம் வருடத்தின் கோடைகாலத்தில் நிகழ்ந்தது. அப்போது, இந்த ஊரிலுள்ள தொழிலாளர் விடுதியொன்றில் யசோதா தங்கியிருந்தார். ஞாயிற்றுக்கிழமைகளில் இரயிலைப் பிடித்து பாரிஸிலுள்ள தமிழ்க் கடைத்தெருவுக்குப் போய் ஒரு வாரத்திற்குத் தேவையான சமையல் பொருட்களையும் காய்கறிகளையும் வாங்கி வருவார். வீடியோக் கடையில் தவறாமல் ஏழு தமிழ்த் திரைப்பட வீடியோ கஸெட்டுகளை வாடகைக்கு எடுத்துக்கொள்வார். ஒருநாளைக்கு ஒரு தமிழ்ப்படம். வேலை, சமையல், வீடியோப் படம், தூக்கம், எஞ்சிய வேளைகளில் கண்ணீர் இவற்றைத் தவிர அவருடைய வாழ்க்கையில் வேறெதுவுமே அப்போது இருந்ததில்லை. யாழ்ப்பாணத்திலிருக்கும் குடும்பத்தாருக்குத் தொலைபேசி அழைப்பு எடுத்துப் பேசுவதைக் கூட அவர் விரும்புவதில்லை. அவர்களோடு பேசுவது யசோதாவுக்குச் சித்திரவதையாகவும் பெரும் துக்கமாகவுமிருந்தது.

தமிழ்க் கடைத்தெருவில் சினிமா விளம்பரங்களும், கோயில் விளம்பரங்களும், புலிகள் இயக்கத்தின் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருக்கும். அவை ஒவ்வொன்றையும் நின்று நிதானித்துப் படித்துச் செல்வது யசோதாவுக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு. தமிழ்ச் சமூகத்திற்கும் அவருக்குமான தொடர்பு அவ்வளவுதான். அப்படிப் படித்துக்கொண்டிருக்கும் போதுதான், அமரேசனின் ‘மணமகள் தேவை’ விளம்பரத்தை யசோதா பார்த்தார். அந்த விளம்பரம் உள்ளங்கையளவு வெள்ளைக் காகிதத்தில் பேனாவால் எழுதப்பட்டுக் கடைத் தெருவிலிருந்த எல்லா விளக்குக் கம்பங்களிலும் நன்றாகப் பசை போட்டு ஒட்டப்பட்டிருந்தது. பல விளக்குக் கம்பங்களிலிருந்து அந்த விளம்பரக் காகிதத்தை யாரோ சுரண்டிக் கிழிக்க முயற்சித்திருக்கிறார்கள். ஒரு விளக்குக் கம்பத்தின் மீது வெற்றிலைச் சாறு உமிழப்பட்டிருந்தது.

‘தமிழீழத்தை ஆதரிக்கும் மாவோயிஸ்டுக்கு மணமகள் தேவை’ என்ற விளம்பரத்தைப் படித்தபோது, உண்மையிலேயே யசோதா ‘மாவோயிஸ்ட்” என்பது ‘பார்மஸிஸ்ட்’, ‘ரிசப்ஷனிஸ்ட்’ போன்றதொரு வேலையாகத்தான் இருக்க வேண்டும் என்றே எண்ணிக்கொண்டார். மணமகன் ‘தமிழீழத்தை ஆதரிப்பவர்’ என்று தன்னை அறிவித்திருந்ததும் யசோதாவைக் கவர்ந்திருந்தது. துணிச்சலும் நேர்மையுமுள்ளவராகத்தான் இந்த மணமகன் இருக்கவேண்டும் என்று யசோதா நினைத்துக்கொண்டார். அவர் அங்குமிங்கும் பார்த்துவிட்டு, விளக்குக் கம்பத்தில் ஒட்டப்பட்டிருந்த விளம்பரத்தின் இடது மூலையை மட்டும் பிய்த்தெடுத்துத் தனது கைப்பைக்குள் பத்திரப்படுத்திக்கொண்டார். அந்தத் துண்டில்தான் தொடர்புகொள்ள வேண்டிய மணமகனின் தொலைபேசி இலக்கம் எழுதப்பட்டிருந்தது.

யசோதா நான்கு சகோதரிகளுடன் ஒரு தம்பியுடனும் பிறந்தவர். அவர்களோடு ஆடியோடி வளர்ந்த யசோதாவை பிரான்ஸில் தனிமை எரித்து அவரது உடலைப் புகைய வைத்தது. வாரம் தவறாமல் யாழ்ப்பாணத்திலிருந்து அவரது தந்தையார் அனுப்பிவைக்கும் கடிதங்களில், யசோதாவை உடனேயே கல்யாணம் செய்யுமாறும் அல்லது இலங்கைக்கே திரும்பி வந்துவிடுமாறும் எழுதப்பட்டிருக்கும். ‘எனக்கு விரைவிலேயே திருமணம் நடக்கவிருக்கிறது’ என்றுதான் யசோதாவும் பதில் எழுதிக்கொண்டிருக்கிறார். ஆனால், யாரைத் திருமணம் செய்வது, எப்படிச் செய்வது என்பதெல்லாம் யசோதாவுக்குத் தெரியவில்லை. அவருக்கு உற்றார் உறவினரென்று ஒருவர்கூட பிரான்ஸில் இருக்கவில்லை. அவர் வேலை செய்யும் சலவைத் தொழிற்சாலையில் ஒன்றிரண்டு காதல் கோரிக்கைகள் வரத்தான் செய்தன. ஆனால், அவை காதலுக்கான கோரிக்கைகள் மட்டுமே. யசோதாவைக் கல்யாணம் செய்யக் கோரிக்கையாளர்கள் தயாரில்லை. யசோதாவுக்கோ காதலைவிடக் கல்யாணமே முக்கியமானதாகயிருந்தது. அதை வைராக்கியம் என்றே சொல்லலாம். சில வருடங்களாகவே அவரது மனிதில் பழுக்கக் காய்ச்சிய ஆணியால் அந்த வைராக்கியம் ஆழமாகப் பொறிக்கப்பட்டிருக்கிறது.

யசோதா நிச்சயமாகவே ஓர் அவசரக் குடுக்கை கிடையாது. தீர ஆலோசித்துத்தான் ஒரு முடிவெடுப்பார். முக்கியமாக, தீர ஆலோசிப்பது போலப் பாவனை செய்து மண்டையைக் குழப்பிக்கொண்டு பிரச்சினைகளை ஆறப்போடும் வழக்கம் அவரிடம் கிடையாது. அய்ந்து நிமிடங்களுக்குள் அவரால் ஒரு முடிவுக்கு வந்துவிட முடியும். யசோதா கடைத்தெருவிலிருந்து தன்னுடைய அறைக்குத் திரும்பியதும் அய்ந்து நிமிடங்கள் கண்களை மூடி யோசித்தார். ஆறாவது நிமிடத்தில் ‘மணமகள் தேவை’ விளம்பரத்திலிருந்த இலக்கத்திற்குத் தொலைபேசி வளையத்தைச் சுழற்றினார்.

மறுமுனையில் “ஹலோ” என்ற குரல் ஒலிக்கும் தருணத்திற்காக யசோதாவின் காது குவிந்திருந்தபோது “அமரேசன்” என்ற சாந்தமான குரல் கேட்டது.

“வணக்கம், என்னுடைய பெயர் யசோதா இராசையா… நீங்கள் ஒட்டியிருந்த மணமகள் தேவை விளம்பரத்தைப் பார்த்தேன்…”

அய்ந்து நிமிடங்கள் மட்டுமே அவர்கள் உரையாடினார்கள். யசோதா வசிக்கும் ஊரிலுள்ள கோப்பிக் கடையொன்றில் வரும் சனிக்கிழமையன்று இருவரும் சந்தித்து நேரில் பேசுவதாக முடிவானது.

சந்திப்பு நடந்த அன்று அமரேசன் கருப்பு நிறத்தில் காற்சட்டையும், கருநீல நிறத்தில் முழுக்கைச் சட்டையும் அணிந்து வந்திருந்தது யசோதாவுக்கு இப்போதும் ஞாபகத்திலிருக்கிறது. அமரேசன் அய்ந்து அடிகள் உயரமேயுள்ள குள்ளமான மனிதர். அவரது உடலும் குழந்தையின் உடல்போல சிறிதாகவேயிருந்தது. யசோதாவின் வாட்டசாட்டமான உடல்வாகுக்குச் சுலபமாக அமேரசனைத் தூக்கித் தன்னுடைய இடுப்பில் வைத்துக்கொள்ள முடியும். அமரேசனுக்கு உருண்டைக் கண்கள். தலைமுடி சரியாக வாரப்படாமல் கலைந்து கிடந்தது. அடர்த்தியான மீசை வைத்திருந்தார்.

அமரேசன் அண்ணாந்து யசோதாவின் கண்களைப் பார்த்துக்கொண்டே யசோதாவுடன் கைகுலுக்கி அறிமுகம் செய்துகொண்டது யசோதாவுக்குப் பிடித்திருந்தது. கைகுலுக்கும் போது கண்களைப் பார்ப்பவர்களை யசோதா அரிதாகவே சந்தித்திருக்கிறார். அமரேசன் மிக மென்மையாகவும் சரளமாகவும் உரையாடலை ஆரம்பித்தார். அந்தச் சரளம் யசோதாவையும் தொற்றிக்கொண்டது.

“யசோதா… நான் பிரான்ஸில் பத்து வருடகாலமாக இருக்கிறேன். மெக்கானிக்காக வேலை செய்கிறேன்”

“நான் இங்கே வந்து இரண்டு வருடங்கள்தான்… பத்து வருட விசா இருக்கிறது”

“நான் எண்பத்து மூன்றாமாண்டு கலவரத்தோடு இலங்கையிலிருந்து கிளம்பி வந்தவன்”

“நான் கல்யாணம் செய்வதற்காக இலங்கையிலிருந்து அனுப்பப்பட்டவள்” என்றார் யசோதா. அமரேசனிடம் எதையுமே மறைத்துப் பேசக்கூடாது என அவர் தீர்க்கமாக முடிவெடுத்திருந்தார்.

3

யசோதாவுக்குப் பின்னாலும் வயதுக்கு வந்த நான்கு பெண் பிள்ளைகள் இருந்ததால், யசோதாவின் தகப்பனார் ‘மரம்’ இராசையா யசோதாவுக்குச் சீக்கிரமே மாப்பிள்ளை தேடத் தொடங்கியிருந்தார். அவர் மிகவும் பிடிவாத குணமுள்ள மனிதர். அதனால்தான் அவருக்கு ஊருக்குள் ‘மரம்’ என்ற பட்டம் கிடைத்திருந்தது. தகப்பனாரை எதிர்த்துப் பெண் பிள்ளைகள் பேசுவது என்ற பேச்சுக்கே அந்தக் குடும்பத்தில் இடமில்லை. சொல்லப்போனால் அவர்கள் தகப்பனாருடன் பேசுவதேயில்லை. அதுதான் அங்கே வழக்கம்.

இரண்டு மூன்று வருடங்களாகப் பலர் யசோதாவைப் பெண் பார்க்க வந்தும் எதுவுமே சரிவரவில்லை. இவ்வளவுக்கும் ‘மரம்’ இராசையாவிடம் காசுபணத்திற்கும் சொத்துப்பத்திற்கும் குறைவில்லை. மாப்பிள்ளைக்குப் பார்த்துப் பாராமல் சீதனம் கொடுப்பதற்கு அவர் தயாராகவேயிருந்தார். ஆனால், அதைத்தாண்டியும் யசோதாவின் தோற்றமே எல்லாவற்றுக்கும் குறுக்கே தடையாக நின்றது. காசுபணத்தால் எதையும் சாதித்துவிடலாம் என்று நினைத்திருந்த ‘மரம்’ இராசையா கூடச் சற்றே தளர்ந்து போனார்.

யசோதாவைப் பெண் பார்த்தவர்களில் சிலர் ‘நோயாளிப் பெண்’ என்று யசோதாவின் காதுபடவே பேசியிருக்கிறார்கள். இந்த வார்த்தைகளைக் கேட்டுக் கேட்டு யசோதாவின் காதுகள் அவிந்துபோயிருந்தன. அப்போதெல்லாம் யசோதா அழுதுகொண்டிருந்தார். திமிங்கலத்தின் வாந்தி திரண்டு மீனாம்பல் ஆவது போன்று யசோதாவின் கண்ணீர் திரண்டு வைராக்கியமாகியது. ‘நான் கல்யாணம் பண்ணிக் குழந்தை பெற்று உங்களுக்கு முன்னே வாழ்ந்து காட்டுவேன்’ என்ற அந்த வைராக்கியத்தை நினைத்துக்கொண்டேதான் மேதினியைப் பெற்றெடுக்கும்போது யசோதா பிரசவ வலியைப் பொறுத்துக்கொண்டார். இவ்வளவு மனத்திடமுள்ள பெண்ணைத் தாங்கள் பார்த்ததேயில்லை எனப் பிரசவம் பார்த்த தாதிகள் கூடச் சொன்னார்கள்.

யசோதா பருவமடைந்த பின்பாகத்தான் அவரது உடல் மாறத் தொடங்கியது. முன்தலையிலிருந்து முடிகள் உதிர்ந்து நெற்றி மேலேறியது. பின் கழுத்துத் தோலில் முதலில் விழுந்த சுருக்கம் மெல்ல மெல்ல உடல் முழுவதும் பரவிவிட்டது. அவரது சருமம் வரண்டுபோய் மீன் செதில் போல சிறிய சிறிய வெள்ளைப் புள்ளிகள் உடலில் பெருகத் தொடங்கின. இந்தக் குறைபாட்டைக் குணப்படுத்த முடியாது என்று யாழ்ப்பாணத்திலுள்ள எல்லா வைத்தியர்களும் கைவிரித்து விட்டார்கள். கொழும்புக்குப் போயும் பார்த்தார்கள். அங்கேயும் எதுவும் நடக்கவில்லை. ஆனால், அங்கே ஓர் ஆலோசனை கிடைத்தது. குளிர்ப் பிரதேசத்தில் வாழ்ந்தால் காலப்போக்கில் இந்தக் குறைபாடு மறைந்துவிடும் எனச் சொன்னார்கள். இந்திரா காந்திக்கு இதேபோன்று குறைபாடு ஏற்பட்டபோது, நேரு புத்திசாலித்தனமாக மகளை சுவிற்ஸர்லாந்துக்கு அனுப்பி வைத்தார் என்றொரு தகவலைக் கூட ஒரு மருத்துவர் சொன்னார். இதற்குப் பின்பாகத்தான் யசோதாவின் தகப்பனார் வெளிநாட்டில் மாப்பிள்ளை தேட ஆரம்பித்தார்.

அவ்வாறாகத் தேடிய முதலாவது சம்பந்தமே கைகூடிவிட்டது. மாப்பிள்ளையின் பெயர் சந்திரன். பிரான்ஸில் ஒரு நிறுவனத்தில் மனேஜராக வேலை பார்க்கிறானாம். வெளிநாட்டு மாப்பிள்ளை என்பதால், சம்பந்தி வீட்டார் கொஞ்சம் அதிகமாகவே சீதனப் பணம் கேட்டார்கள். யசோதாவின் தகப்பனார் அதற்கும் சம்மதித்தார். தன்னுடைய மகளின் சருமப் பிரச்சினை குளிர்ப் பிரதேசத்தில் வாழ்ந்தால் சரியாகிவிடும் என்று மருத்துவர்கள் உறுதியாகச் சொல்கிறார்கள் என்று சம்பந்தி வீட்டாரிடம் விளக்கிச் சொல்லும்போது, ஆதாரத்திற்கு இந்திரா காந்தியின் கதையையும் சேர்த்தே சொன்னார். ‘மகளின் புகைப்படத்தை மாப்பிள்ளைக்கு அனுப்பிவிட்டீர்கள்தானே’ என்று ஒன்றுக்கு இரண்டு தடவைகள் சம்பந்தியிடம் கேட்டார். யசோதாவின் உடல் தோற்றத்தைக் குறித்துச் சம்பந்தி வீட்டார் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. மாப்பிள்ளையின் சாதகக் குறிப்போடு யசோதாவின் சாதகக் குறிப்பு கச்சிதமாகப் பொருந்திப் போனதே அவர்களுக்குப் பெரும் திருப்தியளிப்பதாகச் சொன்னார்கள். நாடு இருக்கும் நிலையில் மாப்பிள்ளை இலங்கைக்கு வருவது சாத்தியமில்லை என்பதால், யசோதாவைப் பயண முகவர் மூலமாக பிரான்ஸுக்கு அனுப்பும் செலவையும் ‘மரம்’ இராசையாவே ஏற்றுக்கொண்டார்.

கடுமையாகப் பனி கொட்டிக்கொண்டிருந்த ஒரு நாளில்தான் இத்தாலியிலிருந்து இரயிலில் எல்லையைக் கடந்து யசோதா பிரான்ஸுக்குள் நுழைந்தார். பாரிஸ் இரயில் நிலையத்தில் காத்திருந்த சந்திரன் கம்பளி ஆடைகளால் மூடப்பட்டுக் குளிரில் நடுங்கியவாறு இரயிலில் இருந்து இறங்கிய யசோதாவைப் பார்த்ததும் முகத்தில் ஒரு வரண்ட புன்னகையை மட்டுமே காட்டினான். மாப்பிள்ளை கொஞ்சம் கூச்ச சுபாவமுள்ளவர் என்றுதான் மாப்பிள்ளையின் தகப்பனார் சொல்லியிருந்தார். பார்த்த மாத்திரத்திலேயே சந்திரனின் தோற்றம் யசோதாவைக் கவர்ந்துவிட்டது. மிக நாகரிகமாக அவன் உடையணிந்திருந்தான். அவனுடைய நெற்றியில் இடைவிடாது நெளிந்துகொண்டிருந்த யோசனை ரேகைகள் அவனை அறிவாளி போலக் காண்பித்தன.

யசோதாவைக் காரில் ஏற்றிக்கொண்டு சந்திரன் இரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டதிலிருந்து வீடு வந்து சேரும்வரை இருவரும் மிகச் சில சம்பிரதாய வார்த்தைகளையே பேசிக்கொண்டார்கள்:

“நீங்கள் எங்கே படித்தீர்கள்?” என்று சந்திரன் கேட்டான்.

“ஹொலி ஃபமிலி கொன்வென்ட்”

“இங்கே உங்களுக்கு அண்ணன் தம்பி யாராவது இருக்கிறார்களா?” எனச் சந்திரன் முகத்தைத் திருப்பாமலேயே கேட்டான். யசோதாவின் குடும்ப விபரங்களையெல்லாம் சம்பந்தி வீட்டாருக்கு ‘மரம்’ இராசையா தெளிவாகவே சொல்லியிருந்தார். சம்பந்தி வீட்டார் தங்களது மகனுக்கு அவற்றைச் சரிவரத் தெரிவிக்கவில்லைப் போலிருக்கிறது என்று யசோதா நினைத்துக்கொண்டார்.

“எனக்கு ஒரேயொரு தம்பி இருந்தான். அவன் இயக்கத்தில் இருந்தவன். கோட்டைச் சண்டையில் வீரச்சாவு” என்று யசோதா சொன்னபோது ‘அய்யோ’ என்றொரு மெல்லிய சத்தத்தை மட்டுமே எழுப்பிவிட்டுச் சந்திரன் முகத்தைப் பத்துத் தடவைகள் குறுக்குமறுக்காக வேகமாக அசைத்துக்கொண்டான்.

சந்திரன் பேசும் வார்த்தைகளை விட அவனது முகம் கோணல்மாணலாகிச் சொல்லும் செய்திகளே அதிகமாகயிருந்ததை யசோதா கவனித்தார். அவனால் முகத்தை ஒரு விநாடி கூட ஒழுங்காக வைத்திருக்க முடியவில்லை. சந்திரன் தன்னைத் தொட்டுப் பேசுவான் என யசோதா எதிர்பார்த்திருந்தார். அவன் தொடும்போது எப்படி நடந்துகொள்ள வேண்டும் எனப் பல நாட்களாக மனதிற்குள் ஒத்திகையும் செய்திருந்தார். ஆனால், சந்திரன் வீதியிலிருந்த தனது பார்வையை யசோதாவின் பக்கம் திருப்பவேயில்லை.

சந்திரனின் வீட்டுக்குள் நுழைந்ததும் யசோதா கம்பளி மேலங்கிகளைக் களைந்தபோது, யசோதாவின் கைகளையும் கழுத்தையும் நெற்றியையும் பாதங்களையும் சந்திரன் உற்றுப்பார்த்தான். “நீங்கள் கை கால் முகத்தைக் கழுவிக்கொண்டு வாருங்கள். அதற்குள் நான் என்னுடைய அப்பாவுக்குத் தொலைபேசி செய்து நீங்கள் வந்து சேர்ந்த செய்தியைத் தெரிவித்துவிடுகிறேன்” என்று சொல்லிக்கொண்டே சந்திரன் குளியலறைக் கதவைத் திறந்துவிட்டான்.

குளியலறைக்குள் நுழைந்து கதவைத் தாழிட்டுவிட்டு, அந்தப் புதினமான குளியலறையை எப்படி உபயோகிப்பது, தண்ணீர் குழாயின் குழிழை எந்தப் பக்கம் திருப்புவது என்றெல்லாம் யசோதா யோசித்துகொண்டிருந்தபோது, சந்திரன் குரலை அடக்கிப் பேசும் மெல்லிய சத்தத்தை அவர் கவனித்தார். ஒரு கட்டத்தில் திடீரென சந்திரன் குரலை உயர்த்திக் கத்தினான்:

“நீங்கள் கொழுத்த சீதனம் வாங்குவதற்காக ஒரு கொழுத்த எருமைமாட்டையா என்னிடம் அனுப்பி வைப்பீர்கள். இத்தனை வருடங்களாகக் குளிருக்குள் கிடந்து இரவு பகலாக நான் உழைத்து அனுப்பிய பணம் உங்களுக்குப் போதாதா? உடனேயே சீதனப் பணத்தை இந்தப் பெண்ணின் வீட்டில் கொண்டுபோய்க் கொடுத்துவிடுங்கள். அதுவரை என்னைத் தொலைபேசியில் அழைக்காதீர்கள். இவளைப் பார்க்கவே எனக்குப் பயமாக இருக்கிறது. இவளுடைய தோல் பாம்புத் தோல் போலிருக்கிறது. அந்தச் செத்த தோலிலிருந்து ஒரு கெட்ட நாற்றம் வருவதை காரில் வரும்போதே நான் கவனித்தேன். இப்போது அந்தத் துர்நாற்றம் என்னுடைய வீடு முழுவதும் பரவியிருக்கிறது. இவளுடன் ஒரு விநாடி கூட என்னால் இருக்க முடியாது.”

யசோதா தன்னுடைய உதடுகளைக் குவித்து உள்ளங்கையில் ஊதி, உள்ளங்கையை முகர்ந்து பார்த்தார். அவருடைய உடல் முழுவதும் நடுங்கிக்கொண்டிருந்தது. சட்டெனக் குளியலறைக் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்து கூடத்திலிருந்த நாற்காலியில் உட்கார்ந்தார். அவருக்கு மயக்கம் வருவது போலிருந்தது.

“போகலாம்” என்றவாறு சந்திரன் யசோதாவின் பயணப்பையைத் தூக்கிக்கொண்டான். யசோதாவின் இருதயம் மரத்துப் போயிருந்தது. மூளை மட்டும் அவ்வப்போது விழித்துப் பார்த்தது. இவன் தன்னை இலங்கைக்குத் திருப்பி அனுப்பப் போகிறான் என்று அவரது மூளை சொன்னபோது, அவர் சட்டென நாற்காலியிலிருந்து எழுந்து தரையில் உட்கார்ந்துகொண்டார். இலங்கைக்குத் திரும்பிப் போவதைப் பற்றி நினைக்கும்போதே யசோதாவின் கண்கள் மங்கலடைந்து மேலே செருகிக்கொண்டன. கல்யாணம் செய்வதற்காகத் தூரதேசம் சென்ற பெண் சில நாட்கள் கழித்துத் தனியாகத் திரும்பி வந்தால், அந்த அவமானத்தைக் குடும்பம் எப்படி எதிர்கொள்ளும்? அயலவரின் முகத்தில் எப்படி யசோதாவால் விழிக்க முடியும்? அவருக்கு இனி எப்போதுமே கல்யாணம் நடக்காது.

“போகலாம்” என்று சந்திரன் மறுபடியும் சொன்னான். மெதுவாகத் தலையை நிமிர்த்திய யசோதா சந்திரனைப் பார்த்து “எங்கே?” என்று கேட்டார். “நீங்கள் தங்கப் போகும் இடத்திற்கு” என்று சந்திரன் மெல்லிய குரலில் சொன்னான்.

சற்று நேரம் கழித்து, அகதிகளுக்கு ஆதரவளிக்கும் தொண்டு நிறுவனமொன்றின் வாசலில் யசோதாவை இறக்கிவிட்டுச் சந்திரன் புறப்பட்டான். அப்போதும் அவன் வரட்சியாகப் புன்னகைத்தது போல யசோதாவுக்குத் தெரிந்தது. எனவே யசோதாவும் உதடுகளைப் பிரித்துப் பற்களைக் காட்டினார். அதுவொரு வைராக்கியப் புன்னகை போலிருந்தது.

4

“அந்தக் கொழும்பு மருத்துவர் சொன்னது உண்மையில்லை. குளிர்ப் பிரதேசத்திற்கு வந்தும் என்னுடைய உடல்நிலையில் மாற்றமில்லை” என்று யசோதா சொன்னபோது, அமரேசன் தனது வலது கையை நீட்டி யசோதாவின் இடது கையைப் பற்றினார். சரியாக ஆறு வாரங்கள் கழித்து அவர்கள் பதிவுத் திருமணம் செய்துகொண்டார்கள்.

யசோதா வேலை செய்யும் சலவைத் தொழிற்சாலை மிகப் பெரியது. மருத்துவமனைகள், ஆய்வுகூடங்கள், நட்சத்திரத் தங்குவிடுதிகள் போன்றவற்றுக்கான துணிகளை இங்கே வெளுத்து அனுப்பிவைப்பார்கள். சலவை செய்யும் பிரிவில் யசோதாவுக்கு வேலை. நூறு பேர்களுக்கு மேல் வேலை செய்யும் அந்தத் தொழிற்சாலையில் இயந்திரப் பராமரிப்பாளராக அமரேசனுக்கும் ஒரு வேலை கிடைத்துவிட்டது. தொழிற்சாலைக்கு அருகிலேயே ஒரு சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்துக் குடியேறினார்கள். அமரேசனின் நூற்றுக்கணக்கான ஆங்கிலப் புத்தகங்களே வீட்டின் பாதி இடத்தை அடைத்துக்கொண்டன. அந்த வீட்டில்தான் மேதினியை யசோதா கருத்தரித்தார்.

ஒரு சனிக்கிழமையன்று, பாரிஸ் நகரத்திற்குச் சென்றிருந்த அமரேசன் திரும்பி வரும்போது, முகத்தில் இரத்தக் காயங்களுடன் வந்தார். அவரது இடது கண் வீங்கிப் பொங்கியிருக்க, கீழுதடு கிழிந்திருந்து. “என்ன நடந்தது?” எனப் பதறிப் போய் யசோதா கேட்டபோது “அரைப் பாஸிஸ்டுகள் என்னைத் தாக்கிவிட்டார்கள்” என்று அமரேசன் முணுமுணுத்தார். அவர் மிகவும் பயந்து போயிருந்தார். அவரது உடல் நடுக்கம் நிற்பதாகயில்லை. இரவு முழுவதும் தூக்கத்திலேயே ஆங்கிலத்தில் புலம்பிக்கொண்டிருந்தார்.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, பாரிஸ் நகரத்திற்குப் போவதென்றாலே அமரேசன் அஞ்சி நடுங்கினார். எப்போதாவது செல்ல நேரிட்டாலும் யசோதாவுடனேயே போவார். யசோதாவின் உடல் மறைவில் நிழல்போல யசோதாவைப் பின்தொடர்வார். யசோதாவோடு ஒரு கோப்பிக் கடையில் உட்கார்ந்து கோப்பி குடிக்கும்போதும் மிரட்சியுடன் சுற்றுமுற்றும் பார்த்தவாறேயிருப்பார்.

5

படுக்கையறைக்குள் சித்திரப்பேழையுடன் உட்கார்ந்திருந்த யசோதாவுக்கு வீட்டுக் கதவு அறைந்து மூடப்படும் சத்தம் கேட்டது. ‘என்னிடமுள்ள வைராக்கியக் குணத்தில் பாதியாவது மகளிடம் இல்லாமல் போய்விடுமா’ என நினைத்துக்கொண்டே கூடத்திற்கு வந்தவர் ஜன்னல் திரையை விலக்கிப் பார்த்தபோது, மேதினி தெருவில் நடந்து போய்க்கொண்டிருப்பது தெரிந்தது. யசோதா மீண்டும் சித்திரப்பேழையுடன் சாய்மனை நாற்காலியில் உட்கார்ந்துகொண்டார். திடீரென ஓர் உந்துதல் ஏற்படக் கைத்தொலைபேசியை எடுத்து, கூகுளில் என்று தட்டிப் பார்த்தார்.

சீனா, கியூபா, லாவோஸ், வியட்நாம் என்று கூகுள் பதிலளித்தது. ‘மேதினி வாயைத் திறந்தாலே பொய்’ என்று முணுமுணுத்தவாறே, அந்த நான்கு நாடுகளின் பெயர்களையும் கண் வெட்டாமல் யசோதா பார்த்துக்கொண்டிருந்தார். பின்பு, அவர் உலக வரைபடத்தை ஆராய்ந்தார். எல்லா நாடுகளுமே பிரான்ஸிலிருந்து மிகத் தொலைவில் இருந்தன. லாவோஸில் கடல் இல்லை. மற்றைய மூன்று நாடுகளின் பெயர்களையும் யசோதா மனதில் பதிய வைத்துக்கொண்டார். இவற்றில் ஏதாவதொரு நாட்டின் கடலில் அமரேசனின் சாம்பலைக் கரைக்க வேண்டும். ஆனால், அவ்வளவு தூரத்திலுள்ள முன்பின் தெரியாத நாடொன்றுக்கு எப்படித் தனியாகப் போவது என்று யசோதா யோசித்துக்கொண்டிருக்கும்போதே, மேதினியிடம் உதவி கேட்பதில்லை என்ற வைராக்கியம் அவரது மனதில் உருவாகிவிட்டது. தொட்டதற்கெல்லாம் வைராக்கியம் கொள்ளும் இந்தக் குணம் நல்லதா கெட்டதா என்பது யசோதாவுக்குத் தெரியாது. ஆனால், கசங்கிப் போன மனதோடு தத்தளிப்பதைவிட, வைராக்கியத்தோடு வாழ்வதுதான் அவருக்கு இயல்பாகியிருந்தது.

தன்னுடைய அப்பாவோடு மேதினி நீளநீளமாகப் பல விஷயங்களைப் பற்றியும் உரையாடுகையில் யசோதா அமைதியாக உட்கார்ந்து கேட்டுக்கொண்டிருப்பார். அந்த உரையாடல்களில் ‘வாழ்க்கையில் எல்லா விஷயங்களும் தற்செயல்களே’ என்று அடிக்கடி மேதினி சொல்வாள். அவ்வாறானதொரு தற்செயல் விரைவிலேயே யசோதாவுக்கும் நிகழ்ந்தது.

அன்றைக்கு யசோதா வேலை முடிந்து வீட்டுக்கு நடந்து வரும்போது, வழியிலுள்ள சிறிய பலசரக்குக் கடைக்குச் சென்றார். அந்தக் கடையைத் தனியொருவராக நடத்திவரும் வெள்ளைக்காரப் பெண்மணியான கரோலினுக்கு அறுபது வயதிருக்கும். யசோதாவுக்கும் அவருக்கும் கிட்டத்தட்ட முப்பது வருடப் பழக்கம். கரோலினுக்குப் பூனைகளோடுதான் சிநேகம் அதிகம். அவரது கடையில் எப்போதும் குறைந்தது பத்துப் பூனைகளாவது தூங்கிக்கொண்டிருக்கும். கரோலின் அணியும் ஆடைகளிலும் பூனைப் படம் இருக்கும். அவர் அணியும் தொப்பியில் பூனைப்படம் பொறிக்கப்பட்டிருக்கும். அன்றைக்குக் கடையின் கதவில் பூனை வடிவத்தில் கத்திரிக்கப்பட்டிருந்த ஒரு துண்டு வெள்ளைக் காகிதம் ஒட்டப்பட்டிருந்தது. அந்தத் துண்டில் ‘வரும் முதலாம் தேதியிலிருந்து பத்து நாட்களுக்குக் கடை மூடப்பட்டிருக்கும்’ என எழுதப்பட்டிருந்தது.

தனக்குத் தேவையான பொருட்களை எடுத்துக் கூடையில் போட்டவாறே “கரோலின் ஏன் கடையை மூடுகிறாய்?” என்று யசோதா கேட்டார்.

“எனக்கும் ஓய்வும் மகிழ்ச்சியும் வேண்டாமா யசோ… பத்து நாட்கள் விடுமுறையில் போகிறேன். இந்தப் பூனைகளைக் கொண்டுபோய் எனது சகோதரியின் வீட்டில் விட்டுவிட்டு கியூபாவுக்கு விமானத்தைப் பிடிக்க வேண்டியதுதான்.”

“எங்கே கியூபாவுக்கா?” என்று படபடப்புடன் கேட்டார் யசோதா. ‘ஆம்’ என்று தலையசைத்த கரோலின் நின்ற நிலையிலேயே இடுப்பை நெளித்து ஒரு சிறிய நடனமே ஆடிவிட்டார்.

யசோதா அய்ந்து நிமிடங்கள் கடைக்குள்ளேயே சுற்றிச் சுற்றி வந்தார். ஆறாவது நிமிடத்தில் கரோலினிடம் “நானும் உன்னுடன் வரட்டுமா கரோலின்?” என்று கேட்டார்.

இடுங்கியிருந்த தனது நீலக் கண்களை விரித்து யசோதாவை ஆச்சரியத்துடன் பார்த்த கரோலின் “அருமையடி பெண்ணே அருமை! என்னுடன் எலின் டீச்சரும் வரயிருக்கிறார். நீ இதுவரை அங்கே போனதில்லை இல்லையா… எங்களுடன் வா! நாங்கள் உனக்கு அற்புதங்களைக் காட்டித் தருகிறோம்” என்று துள்ளிக் குதிக்காத குறையாகச் சொன்னார்.

எலின் டீச்சரையும் யசோதாவுக்குத் தெரியும். எலினுக்கும் யசோதாவின் வயதுதான் இருக்கும். ‘கோட் டிவார்’ நாட்டைப் பூர்வீகமாகக்கொண்ட கருப்புப் பெண்மணி. மேதினி சிறுமியாக இருந்தபோது வீட்டுக்கே வந்து மேதினிக்குப் பிரெஞ்சு மொழி கற்பித்தவர். யசோதா சமைக்கும் குத்தரிசிச் சோற்றுக்கும் மீன் குழம்புக்கும் எலின் டீச்சர் பெரும் ரசிகை.

“நீங்கள் கியூபாவில் கடற்கரைக்குப் போவீர்களா கரோலின்?” என்று யசோதா கேட்டபோது, “கியூபாவின் நான்கு பக்கமும் கடல்” எனக் கரோலின் மிகையான உற்சாகத்துடன் கைகளை அகல விரித்தார்.

யசோதா வீட்டுக்குத் திரும்பியதும், கரோலின் கொடுத்திருந்த பயண முகவரின் இலக்கத்திற்குத் தொலைபேசியில் அழைத்துப் பேசினார். விமானச் சீட்டு, ஏழு பகலும் ஆறு இரவும் கடற்கரை நட்சத்திர விடுதிக்கான கட்டணம், மூன்று வேளை உணவு உட்பட ஆயிரத்து இருநூறு ஈரோக்கள் கட்டணம் என்று பயண முகவர் சொன்னார். கட்டணத்தைப் பத்து மாதத் தவணைகளில் செலுத்துவது என ஏற்பாடானது.

யசோதா மேசையிலிருந்த சித்திரப்பேழையை எடுத்து இரண்டு கைகளிலும் ஏந்தித் தனது கண்களுக்கு நேராக வைத்துப் பார்த்துக்கொண்டிருந்தார். பின்பு சித்திரப்பேழையை அதற்கான அட்டைப்பெட்டியில் வைத்து மூடினார். வீட்டுக் கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டது. “Bonjour அம்மா” எனச் சொல்லிக்கொண்டே மேதினி உள்ளே நுழைந்தாள்.

6

பாரிஸிலிருந்து புறப்படயிருந்த அந்த விமானம் வடக்கு அத்திலாந்து சமுத்திரத்திற்கு மேலாகப் பறந்து, சாத்தானின் முக்கோணம் எனப்படும் பெர்முடா முக்கோணத்தையும் கடந்து பத்து மணிநேரத்தில் கியூபாவின் ‘ஜோசே மார்த்தி’ விமான நிலையத்தில் தரையிறங்கும். விமானம் புறப்படுவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பாகவே யசோதாவும், கரோலினும், எலினும் விமான நிலையத்திற்கு வந்துவிட்டார்கள். சற்று நேரம் கழித்து, மேதினி அரக்கப்பரக்க விமான நிலையத்திற்குள் நுழைந்தாள். அவளது தோளில் ஒரு சிறிய பயணப்பை மாட்டப்பட்டிருந்தது.

மேதினி தாயாரைக் கட்டிப்பிடித்துக் கன்னத்தில் முத்தமிட்டாள். அவ்வாறே கரோலினையும் எலினையும் முத்தமிட்டாள். பின்பு, தோளிலிருந்து பயணப்பையைக் கழற்றி எடுத்துத் தாயாரிடம் கொடுத்துவிட்டு, அதை கியூபாவுக்கு எடுத்துச் செல்லுமாறு கேட்டுக்கொண்டாள்.

“இந்தப் பைக்குள் என்னயிருக்கிறது மேதினி?”

“சிறுவர்களுக்கான சில ஆடைகள், பேனாக்கள், வண்ணப் பென்ஸில்கள் உள்ளன. அங்கேயுள்ள குழந்தைகளுக்கு இவற்றைக் கொடுங்கள் அம்மா” என்று சொல்லிவிட்டு உடனேயே மேதினி கிளம்பிவிட்டாள். கொஞ்ச நேரம் காத்திருந்து தாயாரை வழியனுப்பி வைக்க அவளுக்குப் பொறுமையில்லை.

விமானத்தில் மூவருக்குமே அருகருகே இருக்கைகள். கரோலின் தன்னுடைய ஜன்னலோர இருக்கையை யசோதாவுக்கு விட்டுக் கொடுத்திருந்தார். யசோதா ஓர் அட்டைப்பெட்டியை இரண்டு கைகளாலும் பற்றிப் பிடித்து மடியில் பத்திரமாக வைத்திருப்பதைக் கவனித்த கரோலின் ‘அது என்ன?’ என்று யசோதாவிடம் கேட்கலாமா வேண்டாமா என்று தத்தளித்துக்கொண்டிருப்பது போல யசோதாவுக்குத் தோன்றியது. அவர் கரோலினிடம் “இது எனது கணவரின் சாம்பல். இதைக் கடலில் கரைப்பதற்காகத்தான் நான் கியூபாவுக்கு வருகிறேன்” என்றார்.

புன்னகைத்த கரோலின் “நானும் எலினும் எங்களது சாம்பலைக் கரைப்பதற்காகவே வருகிறோம்” என்றார்.

7

‘ஜோசே மார்த்தி’ விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கும்போது மாலை ஆறு மணியாகிவிட்டது. வெப்பத்தைத் தணிக்கும் ஆடைகளும், ஓலைத் தொப்பிகளும், இரப்பர் செருப்புகளும் அணிந்திருந்த உல்லாசப் பயணிகளால் அந்தச் சிறிய விமான நிலையம் நிரம்பி வழிந்தது. பயண முகவர் ஏற்பாடு செய்திருந்த சொகுசுப் பேருந்து விமான நிலையத்தின் வாசலில் தயாராகக் காத்திருந்தது. அதனுள்ளே ஏறிக்கொண்ட கரோலினும் எலினும் அருகருகாக உட்கார்ந்துகொள்ள, யசோதா இங்கேயும் ஒரு ஜன்னலோர இருக்கையில் அமர்ந்துகொண்டார். அவருக்குப் பக்கத்தில் அழகிய கைத்தடி வைத்திருந்த பிரெஞ்சுக் கிழவர் ஒருவர் உட்கார்ந்துகொண்டார். விமான நிலையத்தின் முற்றத்தில் சே குவேராவின் சிலை கம்பீரமாக நின்றிருந்தது.

அங்கிருந்து இரண்டு மணிநேரப் பயணத் தூரத்திலிருந்த ‘வரடேரோ’ தீவிலுள்ள நட்சத்திர விடுதியிலேயே இவர்கள் தங்குவதற்கு ஏற்பாடாகியிருந்தது. பேருந்து சென்ற பாதையில் அங்கங்கே மக்கள் கூட்டம் கூட்டமாக நின்றிருந்தார்கள். பாதையோரத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில பலகை வீடுகள் தென்பட்டன. வழி முழுவதும் சிவப்புப் பதாதைகள் வீதியோரத்தில் வைக்கப்பட்டிருந்தன. அந்தப் பதாகைகளில் நட்சத்திரங்களின் கீழே சே குவேராவும், பிடல் கஸ்ட்ரோவும், ராவுல் கஸ்ட்ரோவும் நடந்துகொண்டிருந்தார்கள். தூரத்தே மலைகளும் சமவெளிகளும் மாறி மாறித் தோன்றிக்கொண்டிருந்தன.

பாலத்தைக் கடந்து வரடேரோ தீவுக்குள் பேருந்து நுழைந்தபோது, அந்த இடம் வழியில் பார்த்த காட்சிகளிலிருந்து வேறுபட்டிருந்தது. தெருவெங்கும் பல வண்ண மின்குழிழ் சரங்கள் ஒளிர்ந்துகொண்டிருந்தன. உயரமான நட்சத்திர விடுதிகள் வரிசையாக இருந்தன. தெருவெங்குமிருந்த மதுச்சாலைகளில் அமர்ந்து உல்லாசப் பயணிகள் குடித்துக்கொண்டிருந்தார்கள். யசோதா பேருந்திலிருந்து இறங்கியபோது, நான்கு புறங்களிலுமிருந்த நடன விடுதிகளிலிருந்து மிதந்து வந்த ஸ்பானியத் துள்ளல் பாடல்கள் அவரது செவிகளை அதிரப் பண்ணின.

நட்சத்திர விடுதியில் யசோதாவுக்கு ஒதுக்கப்பட்ட அறை இரண்டாவது மாடியில் கடலைப் பார்த்தவாறிருந்தது. அறையின் பல்கனிக்கு வந்து யசோதா கடலைப் பார்த்தார். மெக்ஸிக்கோ குடாவின் தணிந்த அலைகள் விடுதியை மெல்லத் தழுவுவது போல நளினமாக வந்து திரும்பிச் சென்றன. அப்போது அறையின் அழைப்பு மணி ஒலித்தது. யசோதா அறைக்குள் சென்று கைப்பையைத் துழாவி மூக்குக் கண்ணாடியை எடுத்து அணிந்துகொண்டார். வாசற் கதவிலிருந்த கண்ணாடித் துவாரத்தின் வழியாக வெளியே பார்த்தார். கரோலினும் எலினும் தங்களை அலங்கரித்துக்கொண்டும், மினுங்கும் ஆடைகளை அணிந்துகொண்டும் வெளியே நின்றிருந்தார்கள்.

8

காலையில் அய்ந்து மணிக்கே யசோதாவுக்கு விழிப்புத் தட்டிவிட்டது. குளித்துவிட்டு வந்தவர் சேலை கட்டிக்கொள்ளத் தொடங்கினார். அவர் கடைசியாகச் சேலை கட்டியது அவர்களுடைய பதிவுத் திருமணத்தின் போதுதான். கியூபா வருவதென்று முடிவானவுடனேயே இந்தச் சேலையைப் பாரிஸ் தமிழ்க் கடைத்தெருவுக்குச் சென்று யசோதா புதிதாக வாங்கியிருந்தார். கருப்பு நிறத்தில் மஞ்சள் நிறக் கரையுள்ள அந்தச் சேலையைக் கட்டி முடித்ததும், அட்டைப்பெட்டியிலிருந்து சித்திரப்பேழையை வெளியே எடுத்து மடியில் வைத்துக்கொண்டு அய்ந்து நிமிடங்கள் கட்டிலில் உட்கார்ந்திருந்தார். ஆறாவது நிமிடத்தில் அறையிலிருந்து வெளியே வந்து வெற்றுப் பாதங்களுடன் கடலை நோக்கி நடக்கத் தொடங்கினார்.

கடற்கரையில் சீருடையணிந்திருந்த விடுதிக் காவலாளிகள் இருவர் மட்டுமே நின்றிருந்தார்கள். மற்றப்படிக்குக் கடலும் கரையும் வெறுமையாகயிருந்தன. அந்தக் கடல் சலனமின்றிக் கிடந்தது. யசோதா கடல் நீருக்குள் இறங்கி அவரது முழங்கால்கள் வரையான ஆழம்வரை சென்றார். சித்திரப்பேழையின் மூடியைத் திறந்து பேழையைக் கீழே சரித்தார். வெளிர் நீலக் கண்ணாடி போன்றிருந்த நீரில் அமரேசனின் சாம்பல் பூவாகப் பரவிச் சென்றது. யசோதா சட்டெனக் கண்களை மூடிக்கொண்டார். வெற்றுச் சித்திரப்பேழையை இறுக மூடிவிட்டு அதையும் கடல் நீரில் விட்டார். பின்பு, கரைக்கு வந்து கடலுக்கு முதுகு காட்டி மணலில் உட்கார்ந்துகொண்டு அந்த நட்சத்திர விடுதியைப் பார்த்துக்கொண்டிருந்தார். காலையில் கடற்கரையில் சந்திக்கலாம் என்று நேற்றிரவே கரோலினும் எலினும் அவரிடம் சொல்லியிருந்தார்கள்.

அந்த விடுதி கடற்காகத்தின் வடிவத்தில் கட்டப்பட்டிருந்தது. மையக் கட்டடத்திற்கு இருபுறங்களிலும் பெருஞ்சிறகுகள் போன்று வரிசையாக மூன்றடுக்குகளில் ஆடம்பர அறைகள் அமைக்கப்பட்டிருந்தன. மேற்குப் பக்கச் சிறகின் நுனியில் யசோதாவின் அறை இருந்தது. அவரது அறைக்கு எதிரேயே கரோலின், எலின் இருவரின் அறைகளுமிருந்தன. கடற்கரையில் இரண்டு மதுச்சாலைக் குடில்கள் இருந்தன. ஒரு சாய்ப்புச் சாமான் கடையுமிருந்தது. அவற்றுக்கு நடுவே நீலப் பாம்பு போல ஒரு நீச்சல்குளம் வளைந்து சென்றது.

விடுதிச் சிறகுகளுக்குள் உறங்கிக் கிடந்தவர்கள் நீச்சலுடைகளுடன் கடலை நோக்கி வரத் தொடங்கினார்கள். கிழக்குப் பக்கச் சிறகிலிருந்து வெளிவந்த ஒரு கூட்டம் இளம் பெண்கள் இடுப்பில் மட்டுமே கச்சையணிந்து திறந்த முலைகளுடன் யசோதாவை நோக்கி ஓடிவந்தார்கள். யசோதா மெதுவாகக் கடலை நோக்கித் திரும்பிக்கொண்டார். கடலுக்குள் இப்போது மக்கள் கூட்டம் கூட்டமாக கரையை நோக்கி வந்துகொண்டிருந்தார்கள். இந்த மக்கள் எப்படி, எப்போது கடலுக்குள் தோன்றினார்கள் என்று யசோதாவுக்குத் தெரியவில்லை.

அந்த மக்களில் முதியவர்களிலிருந்து குழந்தைகளை வரை இருந்தார்கள். அவர்கள் கருப்பு, மஞ்சள், வெள்ளை என எல்லா நிறங்களிலுமிருந்தார்கள். ஆனால், அந்த மக்கள் கரையேறவில்லை. கடலுக்குள் நின்றுகொண்டேயிருந்தார்கள். உல்லாசப் பயணிகள் கடலுக்குள் இறங்கியபோது அவர்களை நோக்கிக் கூட்டமாகச் சென்றார்கள். அப்போது, இடுப்பில் நிர்வாணக் குழந்தையைச் சுமந்திருந்த ஒரு கருப்புப் பெண் கடலுக்குள் நின்று யசோதாவை நோக்கிக் கையசைத்தார். யசோதாவும் அந்தப் பெண்ணை நோக்கிக் கையசைத்தார். அந்தப் பெண் கடலுக்குள் வருமாறு யசோதாவை நோக்கித் திரும்பத் திரும்பச் சைகை காட்டிப் புன்னகைத்தார். யசோதா எழுந்து நடந்து கடலின் விளிம்புக்குச் சென்றார்.

அந்தக் கருப்புப் பெண் ஆங்கிலத்தில் “எங்களது நாட்டுக்கு வந்திருக்கும் உங்களுக்கு நல்வரவு அம்மா. நீங்கள் அணிந்திருக்கும் உடை மிக அழகாகவுள்ளது. எனது குழந்தைக்கு ஒரு சட்டை வாங்கத் தயவு செய்து பணம் கொடுங்கள். இவளிடம் ஒரு சட்டை கூடக் கிடையாது” என்றார். அந்தப் பெண்ணைக் காத்திருக்குமாறு சொல்லிவிட்டு யசோதா விடுதியறையை நோக்கி நடந்தார். மேதினி கொடுத்து அனுப்பிய பயணப்பை அங்கே இருக்கிறது.

யசோதா அந்தப் பயணப்பையை எடுத்துக்கொண்டு வந்து கரையில் வைத்துவிட்டு, கடலுக்குள் நின்றிருந்த அந்தக் கருப்புப் பெண்ணிடம் கரைக்கு வந்து பையை எடுக்குமாறு சைகை செய்தார். அந்தப் பெண்ணோ பையை எடுத்துக்கொண்டு கடலுக்குள் வருமாறு பதில் சைகை செய்தார். யசோதா பையைத் தூக்கிக்கொண்டு கடலுக்குள் கால் நனைத்தபோது, அந்தப் பெண் விரைந்து வந்து பையைப் பெற்றுக்கொண்டு “அம்மா… நாங்கள் கரைக்கு வரக் கூடாது” என்றார்.

“ஏன் வரக் கூடாது?” என்று யசோதா ஆச்சரியத்துடன் கேட்டார்.

“அது சட்ட விரோதம். அங்கே பாருங்கள்! அந்தக் காவலாளிகள் எங்களையே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். எங்களது கால் நகம் கரையில் பட்டால் கூட அவர்கள் எங்களைத் துரத்தியடிப்பார்கள்” என்று சொல்லிவிட்டு அந்தப் பெண் பையைத் தலையில் வைத்து ஒருகையால் பிடித்துக்கொண்டே மறுகையில் குழந்தையுடன் கடலுக்குள் சென்றார்.

உண்மையிலேயே யசோதாவுக்கு எதுவும் புரியவில்லை. கரோலினையும் எலினையும் கடற்கரையில் காணவும் முடியவில்லை. எனவே, யசோதா விடுதியறைக்குச் சென்று மறுபடியும் குளித்துவிட்டு உடை மாற்றிக்கொண்டார். விடுதியின் உணவகப் பகுதிக்குச் சென்று காலையுணவைச் சாப்பிட்டுவிட்டு, மறுபடியும் கடற்கரையில் போய் உட்கார்ந்துகொண்டார். வெயில் ஏற ஏறக் கரையிலும் கடலிலும் மக்கள் தீர்த்தத் திருவிழா போலத் திரண்டிருந்தார்கள். அந்த மக்கள் கூட்டத்திடையே கலந்திருக்க யசோதாவுக்குப் பிடித்திருந்தது.

அப்போது, கரோலினும் எலினும் யசோதாவை நோக்கிக் கைகளை அசைத்தவாறே மணலில் நடந்து வந்தார்கள். இருவருமே நீச்சலுடையில் இருந்தார்கள். அவர்களுடன் இரண்டு இளைஞர்களும் வந்தார்கள். அவர்களும் நீச்சலுடையில் இருந்தார்கள். ஒருவன் கருப்பு நிறத்தவன். மற்றவன் வெளிர் மஞ்சள் நிறத்தவன். அந்த இளைஞர்கள் சாய்ப்புச் சாமான் கடையை நோக்கிச் செல்ல, கரோலினும் எலினும் மணலில் யசோதாவுக்கு அருகே அமர்ந்துகொண்டார்கள்.

“இரவு நன்றாகத் தூங்கினாயா யசோ?” என்று எலின் விசாரித்தார்.

‘ஆம்’ என்பதுபோலத் தலையசைத்துவிட்டு “இன்னும் உங்கள் இருவருக்கும் தூக்கம் கலையவில்லைப் போலிருக்கிறதே…எப்போது அறைகளுக்குத் திரும்பினீர்கள்?” என்று யசோதா கேட்டார்.

“நாங்கள் அறைகளுக்குத் திரும்பும்போது அதிகாலை நான்கு மணியாகிவிட்டது. இந்த அருமையான இளைஞர்களை வைத்துக்கொண்டு தூங்கவா முடியும்? தூங்குவதற்கா நாங்கள் இத்தனை தூரம் வந்திருக்கிறோம்” என்று சொல்லிவிட்டு கரோலின் தோளிலிருந்த நீளமான துவாயை எடுத்து மணலில் விரித்துவிட்டுக் குப்புறப் படுத்துக்கொண்டார். எலினும் துண்டை விரித்துவிட்டுக் குப்புறப் படுத்துக்கொண்டார். அப்போது அந்த இளைஞர்கள் இவர்களை நோக்கி ஆளுக்கொரு தைலக் குப்பியுடன் வந்தார்கள். கருப்பு நிறத்தவன் குதிரை ஏறுவது போன்று கால்களை விரித்து கரோலினின் முதுகில் ஏறிப் பட்டும்படாமலும் உட்கார்ந்துகொண்டான். மற்றவன் எலினின் முதுகில் ஏறி வாகாக உட்கார்ந்துகொண்டான். அவர்கள் அந்தப் பெண்களின் முதுகுகளில் தைலத்தைத் தேய்த்து உருவிவிடத் தொடங்கினார்கள். எலினின் முதுகில் இருந்தவன் யசோதாவைப் பார்த்தவாறே ஸ்பானிய மொழியில் எலினிடம் ஏதோ சொன்னான். எலின் சிரமப்பட்டுக் கழுத்தைத் திருப்பி யசோதாவைப் பார்த்து “உனது தோழிக்கும் ஒரு காதலன் தேவையா என்று இவன் கேட்கிறான்” என்றார்.

யசோதா உண்மையிலேயே பதறித்தான் போய்விட்டார். எலின் தனது கையை நீட்டி யசோதாவின் கையைப் பற்றிக்கொண்டார்.

“யசோ! இவர்களை நாங்கள் நேற்றிரவு நடன விடுதியில் கண்டுபிடித்தோம். இவர்கள் அழகானவர்கள் மட்டுமல்ல, இனிமையான குணமும் கொண்டவர்கள். அது இந்தத் தேசத்து ஆண்களுக்கென்றே கடவுள் வழங்கிய கொடை. ஒவ்வொருவரும் கடற்குதிரை போன்றிருக்கிறார்கள்.”

“இவர்கள் கியூபர்களா? இவர்கள் இங்கே வருவது சட்ட விரோதம் என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாரே?”

“ஆம்… இது கொஞ்சம் குழப்பமான விஷயம்தான். இந்தக் கடற்கரை இங்கே நட்சத்திர விடுதிகளை நடத்துபவர்களுக்கு உரிமையானது. கியூபர்களை இங்கே அனுமதிப்பதில்லை. ஆனால், விடுதியில் தங்கியிருக்கும் ஓர் உல்லாசப் பயணி கியூபா நாட்டவர் ஒருவரைத் தனது பொறுப்பில் இங்கே அழைத்துவரத் தடையில்லை…”

யசோதா விடுதியறையை நோக்கி நடந்தார். நடப்பதெல்லாம் புதிதாகவும் கனவு போலவும் அவருக்கிருந்தது. அடுத்த இரண்டு நாட்களும் சாப்பிடுவதற்கு மட்டுமே அவர் அறையைவிட்டு வெளியே வந்தார். அவருக்குப் பதற்றம் தணிவதாகயில்லை. பிரான்ஸுக்குத் திரும்பிச் செல்லும் நாளுக்காக அவர் ஏங்கினார் என்றும் சொல்ல முடியாது. அங்கிருக்கும் தனது வீடு இருபத்துநான்கு மணிநேரமும் நிசப்தமாகவே இருப்பதை நினைக்கும்போதே, அவரது உடல் புகையத் தொடங்கிவிடுகிறது.

9

மூன்றாவது நாள் மாலையில் யசோதாவுக்கு உடலெல்லாம் தகித்து வியர்த்து வடிந்தது. அந்த விசாலமான விடுதியறைக்குள்கூட மூச்சு முட்டுவதைப் போன்று உணர்ந்தார். தான் சாகப் போகிறேனோ என்றுகூட ஒரு கணம் அவர் சந்தேகப்பட்டார். மெல்ல அறையிலிருந்து வெளியேறி அவர் கடலை நோக்கி நடந்து சென்றபோது, கடலுக்குள் யாருமில்லை. மேற்கே பரிதி கடலுக்குள் முழுவதுமாக மூழ்கிக்கொண்டிருந்தது. கடற்கரையில் சில உல்லாசப் பயணிகள் கூச்சலும் கும்மாளமுமாகப் கைப்பந்து விளையாடிக்கொண்டிருந்தார்கள். அங்கிருந்து விலகி, கடற்கரையோரமாக மேற்குத் திசையில் யசோதா நடந்து போனார். சற்றுத் தூரத்தில் மிகக் குட்டையாக ஒரு தென்னை மரம் நின்றிருந்தது. அதன் தலை முழுவதும் மஞ்சளாகப் பூத்திருந்தது. யசோதா கடலைப் பார்த்தவாறே அந்த மரத்தின் கீழே சாய்ந்து உட்கார்ந்துகொண்டு கால்களை நீட்டிக்கொண்டார். அப்போதுதான் தன்னுடைய கணுக்கால்களில் புதிதாக ஒரு மாற்றம் ஏற்பட்டிருப்பதை யசோதா கவனித்தார். கணுக்கால்களில் காலுறைகள் போன்று வெள்ளை படர்ந்திருந்தது. அவர் தனது கால்களைக் கவனித்துக்கொண்டிருந்தபோது, ஏதோ சத்தம் கேட்டுத் திடுக்குற்று நிமிர்ந்து பார்த்தார். கடலுக்குள் ஓர் இளைஞன் நின்றிருந்து “ஹாய் லேடி பொஸ்” என்று பற்கள் தெரியச் சிரித்தான்.

அந்த இளைஞனுக்கு இருபத்தைந்து வயதிருக்கலாம். இடுப்பில் அரைக்காற்சட்டை மட்டுமே அணிந்திருந்தான். ஒல்லியான ஆனால், நேர்த்தியான உடல்வாகு. ஆறடிக்கு மேல் உயரமாகயிருந்தான். ப்ரவுண் நிறச் சருமம். அடர்த்தியான சுருட்டைமுடி. முகம் சுத்தமாக மழிக்கப்பட்டிருந்தது.

யசோதாவும் அவனைப் பார்த்துப் பதிலுக்குப் புன்னகைத்து வைத்தார். இப்போது அந்த இளைஞன் உற்சாகமாக ஓரடி முன்னே எடுத்து வைத்தவாறே “லேடி பொஸ்… நீங்கள் எந்த நாட்டிலிருந்து வந்திருக்கிறீர்கள்?” என்று ஆங்கிலத்தில் சிரித்த வாயாகக் கேட்டான்.

“பிரான்ஸ்” என்று சற்றுச் சத்தமாகவே யசோதா சொன்னார்.

உடனேயே அவன் பிரெஞ்சு மொழியில் யசோதாவிடம் பேசினான். “தனியாகவா வந்திருக்கிறீர்கள் லேடி பொஸ்?”

யசோதா கண்களைச் சுருக்கி அவனைப் பார்த்தார். அந்த இளைஞன் இன்னொரு அடி எடுத்து முன்னே வைத்துவிட்டு “இந்தக் கடற்கரையில் புழங்கினால் எல்லா மொழிகளையும் கற்றுவிடலாம். நான் ஏழெட்டு மொழிகள் பேசுவேன் லேடி பொஸ்” என்றான்.

“நான் லேடி பொஸ் அல்ல. என்னுடைய பெயர் யசோதா அமரேசன்.”
“இது அருமையான பெயர் லேடி பொஸ். ஆனால், சற்று நீளமாகயிருக்கிறது. எனக்கு உச்சரிக்கக் கஷ்டம். என்னுடைய பெயர் எட்மண்டோ. கடலுக்குள்ளால் நீண்ட தூரம் வந்திருக்கிறேன். என்னைக் கரைக்கு அழைத்தீர்கள் என்றால் உங்கள் அருகே வந்து பேசுவேன். கடல் குளிர ஆரம்பித்துவிட்டது…”

இப்போது அவன் கடலின் விளிம்புக்கே வந்துவிட்டான். அவனது அடுத்த காலடியைக் கரையில்தான் வைக்க வேண்டும். யசோதா அவசர அவசரமாக எழுந்து விடுதியறையை நோக்கி நடக்கத் தொடங்கினார்.

“லேடி பொஸ்… நடன விடுதிக்குப் போக வேண்டுமென்றால் என்னோடு வாருங்கள். இந்தத் தீவின் மிகச் சிறந்த நடன விடுதிக்கு உங்களை அழைத்துச் செல்கிறேன். நான் தனியாகச் சென்றால் உள்ளே அனுமதிக்கமாட்டார்கள். உங்களோடு வந்தால் இன்றிரவு நானும் சல்ஸா நடனம் ஆடுவேன்”

அந்தக் குரலுக்கு எந்தப் பதிலும் சொல்லாமலேயே யசோதா அறைக்குத் திரும்பிவிட்டார். அன்று இரவுணவு சாப்பிடக் கூட அவர் அறையை விட்டு வெளியே வரவில்லை. மறுநாளும் உணவை அறைக்கே வரவழைத்துச் சாப்பிட்டார். மாலை வேளையாகி இருள் கவிந்துகொண்டிந்தபோது, அவரது மனிதில் திடீரென ஓர் எண்ணம் தோன்ற பல்கனிக்குச் சென்று கடலைப் பார்த்தார். குட்டைத் தென்னை மரம் மங்கலாகத் தெரிந்தது. சற்றுத் தொலைவில் ஓர் உயரமான உருவம் கடலுக்குள் நடந்து போய் மறைந்தது.

அடுத்த நாள் காலையில் யசோதா வெள்ளை நிறக் கவுனை அணிந்துகொண்டார். வெள்ளைநிற மணிமாலையொன்றைக் கழுத்தில் போட்டுக்கொண்டார். காலணிகளும் வெண்நிறத்திலேயே இருந்தன.

காலை உணவுக்காக அவர் விடுதியின் உணவகத்திற்குச் சென்றபோது, அங்கே கரோலினையும் அவரது கருப்புக் காதலனையும் கண்டார். அவர்கள் ஒரு வாய் சாப்பிடுவதாகவும் மறுவாய் முத்தமிடுவதாகவும் காலையிலேயே மயக்கத்திலிருந்தார்கள். யசோதா அவர்களது மயக்கத்தைக் கலைப்பது போல அருகில் சென்று காலை வணக்கம் சொன்னார். போதை கலையாத கண்களால் யசோதாவைப் பார்த்த கரோலின் தங்களுடன் அமர்ந்து உணவருந்துமாறு யசோதாவைக் கேட்டுக்கொண்டார்.

“நாளைக்கு அதிகாலையிலேயே நாங்கள் விமான நிலையத்திற்குக் கிளம்ப வேண்டியிருக்கும் யசோ… எல்லா இடமும் சுற்றிப் பார்த்தாயா? எப்படியிருக்கிறது கியூபா? இது எல்லாமே சொர்க்கம் அல்லவா…”

“நான் எங்கேயும் வெளியே போகவில்லை” என்று யசோதா கொஞ்சம் வெட்கத்துடனேயே சொன்னார்.

“இங்கே வரடேரோவில் உல்லாசப் பயணிகள் மட்டுமே மொய்த்திருக்கிறார்கள். யசோ… நீ கொஞ்சம் வெளியே சென்று மக்களைப் பார்க்க வேண்டாமா? சாந்தா மார்த்தாவுக்குப் போ. இங்கிருந்து பக்கம்தான். அங்கே நீ உண்மையான கியூபாவைப் பார்க்க முடியும்.”

‘வரடேரோ’ ஒட்டகச் சிவிங்கியின் கழுத்துப் போன்ற ஒடுக்கமான தீவு. அந்தத் தீவு உல்லாசப் பயணிகளுக்காக நேர்ந்துவிடப்பட்டிருந்தது. அந்தத் தீவையும் கியூபா பெருநிலத்தையும் ஒரு பாலம் இணைக்கிறது. அந்தப் பாலத்தைக் கடந்ததும் சாந்தா மார்த்தா நகரம் வந்துவிடும்.

விடுதியில் சொல்லி யசோதா ஒரு வாடகைக் காரை ஏற்பாடு செய்துகொண்டார். இதுவரை கியூபாவில் செப்புச் சல்லியைக் கூட யசோதா செலவு செய்திருக்கவில்லை. கொஞ்ச ஈரோக்களை விடுதியில் கொடுத்து பெஸோக்களாக மாற்றிக்கொண்டார். சாலையில் வாகனங்களேயில்லை. வாடகைக் கார் சாலையில் வேகமாக வழுக்கிச் சென்றது. பாலத்தைக் கடந்ததும் காட்சிகள் தலைகீழாக மாறிவிட்டன. சாலைகள் குண்டுங் குழியுமாக வளைந்து நெளிந்து சென்றன. அந்தச் சாலைகளில் நோஞ்சான் குதிரைகள் வண்டிகளை இழுத்துச் சென்றன.

இருபத்தைந்து நிமிடப் பயணத்திற்குப் பின்பு வாடகைக் கார் ‘சாந்தா மார்த்தா’ நகரத்திற்குள் நுழைந்தது. நகர மையத்திலிருந்த சதுக்கத்தில் சே குவேரா சிலை கம்பீரமாக நின்றுகொண்டிருந்தது. அங்கேயே யசோதா இறங்கிக்கொண்டார். மதியம் பன்னிரண்டு மணிக்கு அதே இடத்திற்கு வந்து தன்னை ஏற்றிக்கொள்ளுமாறு சாரதியிடம் சொல்லிவிட்டு, யசோதா தெருவோரமாக நடந்து சென்றார்.

அதுவொரு சிறிய நகரம்தான். ஆனால், ஏதோ போரால் பாதிக்கப்பட்ட நகரம் போன்று உடைந்து கிடந்தது. நகரமே புழுதிக் காடாகக் காட்சியளித்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த சிறிய கடைகளுக்கு முன்பு மக்கள் நீண்ட வரிசைகளில் நின்றுகொண்டிருந்தார்கள். எதிர்ப்பட்ட குறுக்குத் தெருவொன்றுக்குள் புகுந்து யசோதா வேடிக்கை பார்த்தவாறே நடந்தார். அந்தத் தெருவில் குடியிருப்புகள் நெருக்கமாகயிருந்தன. வந்த வழியை மனதில் ஞாபகம் வைத்துக்கொண்டே அடுத்த குறுக்குத் தெருவுக்குள் யசோதா நுழைந்தபோது, எதிரே அந்த உயரமான இளைஞன் எட்மண்டோ வந்துகொண்டிருந்தான். அவன் யசோதாவைக் கண்டதும் கண்களை அகல விரித்துத் தனது வலது கையை உதறிக்கொண்டான். பின்பு “லேடி பொஸ்” என்று கூவியபடியே யசோதாவை நோக்கி ஓடிவந்தான். இடுப்பில் அதே அரைக் காற்சட்டைதான் இருந்தது. ஆனால், இன்று அவன் அழகானதொரு தொப்பி அணிந்து தொப்பியின் நாடாக்களைத் தாடையின் கீழே பூப்போன்று முடிந்திருந்தான்.

“லேடி பொஸ்…நீங்கள் சம்மனசு போலத் திடீரென என் முன்னே காட்சியளிக்கிறீர்கள். என்னுடைய வீடு இங்கேதான் இருக்கிறது. தயவு செய்து வீட்டுக்கு வந்து ஒரு கோப்பை தேநீர் பருகி எங்களை மகிழ்வியுங்கள்” என்று எட்மண்டோ சொல்லிவிட்டு யசோதாவின் கையைப் பிடித்துக்கொண்டு தெருவில் நடந்தான். யசோதா தன்னுடைய கையை அவனிடமிருந்து விடுவிக்க முயற்சிக்கவில்லை. உண்மையில் அந்த அழைப்பு அவருக்கு மகிழ்ச்சியையே கொடுத்தது.

அழுக்குப் படிந்துகிடந்த இரண்டு மாடிக் கட்டடம் ஒன்றின் முன்னால் எட்மண்டோ நின்று “லேடி பொஸ்… இங்கேதான் முதலாவது மாடியில் எனது வீடிருக்கிறது. மாடிப்படிகளில் வெளிச்சம் கிடையாது. என்னுடைய கையை இறுகப் பற்றிக்கொள்ளுங்கள்” என்றவாறே யசோதாவின் கையை மேலும் அழுத்தமாகப் பற்றினான். யசோதா தட்டுத் தடுமாறித்தான் படியேறிச் சென்றார். ஒவ்வொரு படியிலும் இருளுக்குள் ஆட்கள் உட்கார்ந்திருந்தார்கள்.

ஒரு சிறிய அறை மட்டுமே எட்மண்டோவின் வீடாக இருந்தது. உண்மையில் அதுவொரு இருள் பொந்துதான். அந்தப் பகல் பொழுதிலும் அறை இருண்டு கிடந்தது. அறையின் நடுவே தொங்கிகொண்டிருந்த மங்கலான சிறிய மின்குமிழின் கீழே சாய்மனை நாற்காலியில் ஒரு பெண்மணி படுத்துக்கிடந்து பைபிள் படித்துக்கொண்டிருந்தார். உள்ளே நுழைந்த யசோதாவை ஒரு விநாடி பார்த்துவிட்டு அவர் மறுபடியும் பைபிளில் மூழ்கிப் போனார். அறையின் மூலையிலிருந்த அடுப்பில் எட்மண்டோ கருப்புத் தேநீர் தயாரித்து யசோதாவுக்குக் கொடுத்தான். யசோதா தேநீரைக் குடித்தவாறே அந்தப் பெண்மணியையே பார்த்துக்கொண்டிருந்தார். தேநீரைக் குடித்து முடித்ததும் யசோதா புறப்படத் தயாரானபோது, அந்தப் பெண்மணி ஸ்பானிய மொழியில் ஏதோ சொன்னார். “லேடி பொஸ்… உங்களது கழுத்திலிருக்கும் மணிமாலை அழகாக இருக்கிறதாம். அதைத் தனக்குக் கொடுக்க முடியுமா என்று அம்மா கேட்கிறார்” என்று எட்மண்டோ தயங்கத்துடன் யசோதாவிடம் சொன்னான். யசோதா கழுத்திலிருந்த மணிமாலையைக் கழற்றியவாறே எட்மண்டோவின் அம்மாவின் அருகில் சென்று அதை அவருக்கு அணிவித்தார்.

சே குவேரா சிலையை நோக்கி இருவரும் நடந்துகொண்டிருந்தபோது “லேடி பொஸ்… நேற்று மாலை நீங்கள் கடற்கரைக்கு வரவில்லையே” என்று யசோதாவின் காதருகே எட்மண்டோ கிசுகிசுத்தான். யசோதா எதுவும் பேசாமல் நடந்துகொண்டிருந்தார். சே குவேரா சிலையருகே வாடகைக் கார் காத்திருந்தது.

அன்று மாலையில் விடுதியறையின் பல்கனியில் நின்று யசோதா கடலைப் பார்த்தபோது, பரிதி கடலுக்குள் மூழ்கிக்கொண்டிருந்தது. அவர் அங்கேயே நெடுநேரம் நின்றிருந்தார். இருள் முற்றாகக் கவிந்து கடல் அவரது கண் பார்வையிலிருந்து மறைந்தபோது, குளியலறைக்குச் சென்று குளியல் தொட்டியில் படுத்துக்கொண்டு நெடுநேரமாகக் குளித்துக்கொண்டிருந்தார். குளித்து முடித்துவிட்டுத் தொட்டியிலிருந்து அவர் கீழே இறங்கியபோது, எதிரேயிருந்த ஆளுயர நிலைக்கண்ணாடியில் முழு நிர்வாணமாக அவரது உடல் தெரிந்தது. கண்ணாடியில் தோன்றிய அந்தப் பிம்பத்திலிருந்து புகை கசிந்தது.

முற்றாக நரைத்திருந்த தலைமுடி மின்விளக்குகளின் வெளிச்சத்தில் வெள்ளியாக மின்னியது. அவரது தலை சிறிதாகவும் கழுத்து நீளமாகவுமிருந்தது. கழுத்துக்குக் கீழே உடல் அகன்று சென்று வயிற்றுப் பகுதி உப்பியிருந்தது. முழங்கால்களுக்குக் கீழே கால்கள் குச்சிகளாக ஒடுங்கிச் சென்றன. கணுக்காலில் படந்திருந்த வெள்ளைத் திட்டுகள் வெளிச்சத்தில் ஒளிர்ந்தன. உடலில் இருந்த வெண்ணிறப் புள்ளிகள் அவரது கருமையான சருமத்தில் பெகோனியாப் பூக்கள் போலத் தெரிந்தன. தீக்கோழி முட்டை வடிவச் சித்திரப்பேழையைப் போலவே தன்னுடைய உடல் ஆகிவிட்டது என யசோதாவுக்குத் தோன்றியது.

10

ஜோசே மார்த்தி விமான நிலையத்திலிருந்து பாரிஸுக்குக் கிளம்பவிருந்த விமானத்தில், கரோலின் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து வெளியே பார்த்துக்கொண்டிருந்தார். அவருக்கு அடுத்ததாக எலின் அமர்ந்திருந்தார். அவரது முகம் வாடியிருந்தது. எலினுக்கு அடுத்ததாக யசோதா உட்கார்ந்திருந்தார்.

விமானம் மேலேறிப் பறந்தபோது, திடீரென கரோலின் விசும்பி அழத் தொடங்கினார். எலினின் கண்களிலும் நீர் துளிர்த்தது. யசோதா தனது கையை எலினின் தோள்மீது வைத்தார். எலின் சற்றே சாய்ந்து யசோதாவின் காதுக்குள் அரைகுறையாக முணுமுணுத்தார்:

“ஒரு வாரக் காதலோ, ஒரு நாள் காதலோ பிரிந்து செல்லும்போது இந்தப் பாழாய் போன கண்ணீர் வந்துவிடுகிறது யசோ…”

யசோதா தன்னுடைய முகத்தை அண்ணாந்து விமானத்தின் கூரையைப் பார்த்தார். அழக் கூடாது என்ற வைராக்கியம் நேற்றிரவே அவரது மனதில் உண்டாகிவிட்டது.

(‘காலம்‘ இதழ் – ஜனவரி 2024)

 

   

https://www.shobasakthi.com/shobasakthi/

மன்னிப்புக் கேட்பவர்கள்-மிலன் குந்தேரா (Milan kundera)

2 months ago
மன்னிப்புக் கேட்பவர்கள்-மிலன் குந்தேரா (Milan kundera)
10.jpg

ஜூன் மாத காலையில், கிழக்கில் கிளம்பிய சூரியனைப் போல, மெதுவாக பாரீஸ் வீதியில் சென்று கொண்டிருந்தான் அலயன். எதிர்ப்பட்ட அனைத்து இளம் பெண்களும் குட்டையாக அணியப்பட்ட மேல் சட்டைக்கும், இறக்கமாக அணியப்பட்ட கால் சட்டைக்கும் இடையில் மையமாக, விகாசமாகத் தொப்புள் தெரியுமாறு உடுத்தி இருந்ததைக் கவனித்தவாறே நடந்தான். அவனைப் பொறுத்த வரை, பெண்கள் மீதான கவர்ச்சியின் மையல் தொடை, மார்பு, பின்புறங்களிலிருந்து ஏகமாக விலகி, இந்த வட்ட வடிவ மையப் புள்ளியில் தேங்கி விட்டதைப் போல, அந்த காட்சிகளால் ஈர்க்கப்பட்டு, வசீகரிக்கப்பட்டு, சலனத்திற்கு உள்ளாகி இருந்தான். 

தொப்புளின் மீதான இந்த திடீர் மையல், பெண்மையின் கவர்ச்சி சார்ந்து புதிய கேள்விகளையும் சிந்தனைகளையும் அவனுக்குத் தூண்டியது. விளைவாக, தொடையைக் கவர்ச்சியின் பிரதான மையமாகக் கருதுபவனின் (கருதும் தலைமுறையின்), காமம் சார்ந்த ரசனையையும், தனித்த பார்வையையும் எவ்வாறு புரிந்து கொள்வது என்ற கேள்வி எழுகிறது. களிப்பையும் நிறைவையும் நோக்கிய பயணத்தில், நீளும் ஒவ்வொரு கணத்திலும் இன்பத்தைப் பொதித்து வைத்திருக்கும் நீண்ட சாலையுடன் நீளும் கால்களை ஒப்பீடு செய்கிறான். அதன் முடிவாக, கூடலின் போது, அனுபவித்து உணர்ந்திடாத மாய ஜாலங்களை நிகழ்த்தக் கூடிய ஆற்றலைப் பெண்களுக்கு அளிக்கக் கூடியது அத்தகைய கால்கள் என்று கற்பிதம் செய்து கொள்கிறான்.

இதைத் தொடர்ந்து அதே கேள்வி பெண்களின் பின்புறங்களில் மையல் கொண்டவர்களை நோக்கி எழுகிறது. அதை இரட்டை இலக்குகளை ஒன்று சேர அடையக்கூடிய விரைவான பாதையுடன் ஒப்பீடு செய்கிறான். அதன் தொடர்ச்சியாக, அதை அதீத உற்சாகமும், முரட்டுத்தனத்தையும் வெளிப்படுத்தும் ரசனைத் தேர்வு என்ற புரிதலுக்கு வருகிறான்.

அடுத்ததாக மார்பகங்களின் மீதான ஈர்ப்பை நோக்கி அந்த கேள்வி இடம் பெயர்கிறது. அந்த ரசனை வெளிப்பாட்டை, மேரியிடம் பால் குடிக்கும் குழந்தை இயேசுவுடன் ஒப்பிட்டு, பெண் படைப்பின் புனித நோக்கங்களின் முன் ஆண்கள் மண்டியிட்டு ஆராதிப்பதாக முடிவுக்கு வருகிறான்.

ஆயினும், உடலின் மையப் புள்ளியான, குழிவான தொப்புளின் கவர்ச்சியில் மையல் கொள்ளும் ரசனையை எவ்வாறு வரையறுப்பது?

மெதுவாக வீதிகளில் உலவியபடி தொப்புளைப் பற்றிச் சிந்திப்பது அவன் வழக்கமாக இருந்தது. மீண்டும் மீண்டும் அதைப் பற்றிச் சிந்திப்பது எந்த விதத்திலும் அவனுக்குச் சலிப்பைத் தரவில்லை. அந்த சிந்தனை அவனது தாயுடனான கடைசி சந்திப்பைப் பற்றிய நினைவுகளை அடிமனதிலிருந்து மீட்பதாலேயே, பிடிவாதமாகத் தொப்புளைப் பற்றிச் சிந்தித்தான். 

அவனுக்குப் பத்து வயது இருக்கும். அலயன் விடுமுறையைக் கழிக்க நீச்சல்குளமும் தோட்டமும் கொண்ட வாடகை சொகுசு விடுதியில், தந்தையுடன் தங்கி இருந்தான். பல ஆண்டுகளுக்குப் பிறகு, அவள் இப்பொழுது தான் முதன்முறையாக அவர்களைச் சந்திக்க வருகிறாள். பூட்டிய அந்த சொகுசு விடுதி கதவுகளுக்குப் பின்னால் அவளும் அவள் முன்னாள் கணவரும் மட்டும். பல மைல் தொலைவிலும் அந்த சூழலின் உஷ்ணம் உணரப்பட்டது போல் இருந்தது. எவ்வளவு நேரம் அங்கு இருந்தாள்? அதிகபட்சம் ஒன்றிரண்டு மணி நேரம் இருக்கலாம். அந்த சமயத்தில் அலயன் நீச்சலில் பொழுதுபோக்கிக் கொண்டிருந்தான். அங்கிருந்து கிளம்பத் தயாரான அவள், அவன் நீச்சல்குளத்திலிருந்து மேலேறி வந்ததைக் கவனித்து விட்டு, அவனிடம் விடை பெறுவதற்காக நின்றாள். தனியாக இருந்த அவளிடம் அலயன் என்ன பேசினான்? அவள் என்ன பேசினாள்? எதுவும் அவனுக்கு நினைவில் இல்லை. அவனுக்கு நினைவில் இருப்பது அந்த தோட்டத்து இருக்கையில் அவள் அமர்ந்திருந்ததும், நீர் வடியும் நீச்சலுடையில் அவளைப் பார்த்தவாறு அவன் நின்றிருந்ததும் மட்டுமே. அவளுடனான சம்பாஷனைகள் அவன் நினைவுகளைத் தப்பி இருந்தாலும், ஒரு கணம் மட்டும் காலத்திற்குமாக அவன் நினைவுகளில் உறைந்து விட்டிருந்தது. அது அந்த இருக்கையிலிருந்தவாறு அவன் தொப்புளை ஊடுருவிப் பார்த்த அவள் பார்வை. இன்னமும் அந்த பார்வையின் வீச்சை அவனால் உணர முடிகிறது. அவனைப் பொறுத்தவரை அது அன்பும் அவமதிப்பும் கலந்த விவரிக்க முடியாத ஒரு பார்வை. அதே உணர்வு அவள் புன்னகையின் உதட்டு சுழிப்பிலும் பிரதிபலித்தது. அந்த இருக்கையிலிருந்தவாறே, முன் சாய்ந்து, தன் ஆள்காட்டி விரலால் அவன் தொப்புளைத் தொட்டாள். உடனடியாக எழுந்து, அவனை முத்தமிட்டு விட்டு, அந்த முத்தத்தை அவன் சந்தேகத்துக்கிடமின்றி முத்தம் என உணரும் முன், அந்த இடத்தை விட்டுச் சென்று விட்டாள். அதன் பிறகு அவளை அவன் சந்திக்கவே இல்லை. 

ஒரு பெண் காரிலிருந்து இறங்குகிறாள்

ஆற்றை ஒட்டிய சாலையில் ஒரு கார் பயணிக்கிறது. புறநகருக்கும் கிராமப்புறத்திற்கும் இடைப்பட்ட, குடியிருப்புகளும் ஜன சந்தடியும் குறைவாக இருந்த, அந்த நிலப்பரப்பின் மந்தமான சூழலை, மேலும் பரிதாபத்திற்குரியதாக உணரச் செய்தது அந்த காலையின் குளிர்காற்று. அப்பொழுது அந்த கார் சாலை ஓரத்தில் நிற்கிறது. அழகிய இளம்பெண் ஒருத்தி அந்த காரில் இருந்து இறங்குகிறாள். பூட்டப்பட்டு விடாதவாறு அந்த கார் கதவை, அவள் அலட்சியமாகச் சாத்தியது வினோதமாக இருக்கிறது. அந்த அலட்சியத்தின் பொருள் என்ன? இந்நாட்களில் திருட்டு பயம் குறைந்துவிட்டதா? அந்த பெண்ணின் கவனச்சிதறலா?

கவனச்சிதறலாக இருக்க முடியாது என்பதை அந்த பெண்ணின் முகத்தில் பரவி இருந்த தீர்க்க ரேகைகள் உணர்த்தியது. தனக்கு என்ன தேவை என்பதில் தீர்க்கமாக இருந்தாள். பரிபூரணமான நெஞ்சுரம் மிக்கவள் இவள். சாலையை ஒட்டி சில நூறு அடிகள் நடந்து, பிறகு ஆற்றுப் பாலத்தை நோக்கி நடந்தாள். அந்த பாலம் சற்றே உயரமாகவும், குறுகலாகவும், வாகனப் போக்குவரத்தில் இருந்து விலக்கப்பட்டதாகவும் இருந்தது. அவள் அந்த பாலத்தில் ஏறி மறுகரையை நோக்கி சுற்றிலும் நோட்டம் விட்டவாறு நடக்கிறாள். அந்த பார்வை யாரையும் எதிர்பார்ப்பதாக இல்லாமல், யாரும் தன்னை எதிர்பார்த்து விடக் கூடாது என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதாக இருந்தது. நடுப் பாலத்தை எட்டியவுடன் நிற்கிறாள். முதலில் தயக்கத்தால் நின்றதைப் போலத் தோன்றினாலும், தயக்கத்தின் காரணமாகவோ, திடீரென எடுத்த முடிவின் காரணமாகவோ அவள் நிற்கவில்லை; மாறாகக் கவனத்தைக் கூர்மையாக்குவதற்காகவும், தன் நெஞ்சுரத்தைத் திடப்படுத்துவதற்காகவும் நின்றாள். நெஞ்சுரம் எனில்? சரியாகச் சொல்வதென்றால் விரக்தி. தயக்கத்தைப் போல் தோன்றிய அந்த இடைவெளி, அவளது உணர்வுகளுடனான முறையிடல்- தன் விரக்தி தன்னை கைவிட்டு விடாமல், தன் முடிவிற்குத் துணையாகவும் ஆதரவாகவும் இருப்பதற்காக அவள் வேண்டுகிறாள். 

பாலத்தின் கைப்படியில் கால் வைத்து, காற்று வெளிக்குள் பாய்கிறாள். பாய்ச்சலின் முடிவில், உறைந்த ஆற்றின் மேற்பரப்பில் மோதி, குளிரால் செயலிழந்து போகிறாள். சில வினாடிக்குப் பிறகு, அவள் நீருக்கு மேல் தலை காட்டுகிறாள். அவளது உள்ளார்ந்த நீச்சல் திறன்கள், சாக விரும்பும் அவள் முடிவிற்கு விரோதமாக, அனிச்சையாக வெளிப்பட்டு விட்டது. தன்னை மூர்ச்சையடையச் செய்ய, மீண்டும் நீருக்குள் மூழ்கி, காற்றுடன் நீரையும் வலிந்து நுரையீரலுக்குள் திணிக்க முயலுகிறாள். எதிர்பாராத விதமாக மறுகரையிலிருந்து ஒரு அபயக்குரல். யாரோ ஒருவர் பார்த்து விட்டார். திடீரென மரணம் தன்னை விட்டு விலகுவதை உணர்கிறாள். தன் கட்டுப்பாட்டை மீறிய நீச்சல் திறன்களை விட, தன் கவனத்திலிருந்து தப்பிய ஒருவனே மிகப் பெரும் இடையூறாக இருப்பான் என்பது புரிகிறது. தன் சாவை மீட்டெடுக்க அவள் கடுமையாகப் போராட வேண்டி இருக்கும்.

அவள் கொல்கிறாள்

அவள் குரல் வந்த திசையைப் பார்க்கிறாள். யாரோ ஒருவர் ஆற்றினுள் பாய்ந்தார். யாருடைய முயற்சி வெற்றி பெறக்கூடும் என ஆலோசிக்கிறாள்- தண்ணீரை உள்ளிழுத்து, மூழ்கிச் சாகும் தன் முயற்சியா? தன்னை காப்பாற்ற விரைந்து வருபவரின் முயற்சியா? நுரையீரலில் நீர் புகுந்து, பலகீனமான நிலையில் மூழ்கிக் கொண்டிருக்கும் போது, அவளைக் காப்பாற்ற முனைபவரின் நோக்கத்திற்கு அவள் எளிதான இலக்காகி விடக்கூடுமல்லவா? அவன் அவளைக் கரைக்கு இழுத்துச் சென்று, படுக்க வைத்து, கையால் அழுத்தியும், வாயால் உறிஞ்சியும் நீரை வெளியில் எடுத்து, மீட்புக்குழுவையும், காவலர்களையும் அழைத்து, அவளைக் காப்பாற்றக்கூடும். இதனால் வாழ்க்கை முழுதும் கூடுதலாக அவள் அவமானப்பட நேரிடும். 

“நில்! நில்!” அவன் கத்துகிறான்.

அனைத்தும் மாறிவிட்டது. அவள் நீருள் மூழ்குவதற்குப் பதிலாக, நீருக்கு மேல் எழும்பி, ஆழமாக மூச்சை இழுத்து தன் பலத்தைத் திரட்டிக் கொள்கிறாள். இதற்கிடையில் அவன் அவளை நெருங்கி விட்டான். இந்த முயற்சியின் மூலம் நாளிதழ்களில் இடம்பிடித்து, புகழ்பெற விரும்பும் பதின்ம வயது இளைஞன் அவன். “நில்! நில்!” எனத் தொடர்ந்து கூறியவாறு, அவளை நோக்கி தன் கைகளை நீட்டுகிறான். அவன் பிடியிலிருந்து விலகுவதற்குப் பதிலாக, அவள் அந்த கைகளை இறுகப் பிடித்து, ஆற்றின் ஆழமான பகுதியை நோக்கி அவனை இழுக்கிறாள். வேறெந்த வார்த்தையையும் பேசி அறிந்திடாதவனைப் போல, “நில்!” என மீண்டும் இரைகிறான். அதுவே அவன் பேசிய கடைசி சொல். அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு, அவன் தலை நீருக்குள் மூழ்கும் விதமாக தன் உடலை அவன் உடலோடு பின்புறமாகப் பொருத்திக் கொண்டு, அவனை ஆற்றின் அடிப்பகுதியை நோக்கி இழுக்கிறாள். தண்ணீரை உள்ளிழுத்து விட்ட அவன், கைகளை வீசுகிறான், விளாசுகிறான்; அந்த பெண்ணை வீழ்த்த போராடுகிறான். ஆனால் அவன் நீருக்கு வெளியில் தலையைத் தூக்கி மூச்சை இழுத்து விட முடியாதபடி அவள் அவன் மீது அழுத்தமாகப் பரவி இருக்கிறாள். சில நீண்ட, மிக மிக நீண்ட விநாடிகளுக்குப் பிறகு, அவன் அசைவுகளை இழந்து விட்டான். சோர்ந்து, நடுங்கி, ஓய்வெடுப்பதைப் போல, அந்த நிலையிலேயே அவன் மீது சிறிது நேரம் இருந்தாள். தன் பிடியில் இருக்கும் உடலில் எந்த அசைவுகளும் மீதம் இல்லை எனச் சமாதானம் அடைந்த பிறகே அந்த உடலை விட்டு விலகினாள். நடந்து முடிந்த நிகழ்வுகளின் நிழல் கூட தன்னுடன் வராதவாறு, அங்கிருந்து திரும்பித் தான் வந்த கரையை நோக்கி நகர்ந்தாள். 

என்ன நடக்கிறது இங்கே? தன் முடிவை மறந்துவிட்டாளா அவள்? அவள் ஏன் தன்னை நீரில் மூழ்கடிக்கவில்லை? அவள் சாவை அவளிடமிருந்து பறிக்க வந்தவன் உயிருடன் இல்லை என்பதாலா? தன்னை தடுக்க யாருமில்லாத போது, அவள் ஏன் சாவை தேடிப் போகவில்லை?

எதிர்பாராத விதமாக மீட்கப்பட்ட வாழ்க்கை, அவளது தீர்மானங்களை நொறுக்கி விட்டது. தற்கொலை முயற்சியில் கவனம் செலுத்துவதற்கான மனபலத்தை அவள் இழந்து விட்டாள். திடீரென தன்னிடமிருந்த நெஞ்சுரத்தையும், பலத்தையும் இழந்து விட்டதால், அவள் நடுங்குகிறாள். அனிச்சையாக அவள் காரை விட்டு வந்த இடத்தை நோக்கி நீந்துகிறாள். 

அவள் வீடு திரும்புகிறாள்

கொஞ்சம் கொஞ்சமாக தனக்குக் கீழிருக்கும் ஆற்றின் ஆழம் குறைந்ததை உணர்ந்தவள், தரையைத் தொட்டு நிற்கிறாள். அப்பொழுது சேற்றில் புதைந்து தவறிய காலணிகளைத் தேடக் கூட தெம்பின்றி, கரையேறி, சாலையை நோக்கி நடக்கிறாள். 

இப்பொழுது இந்த உலகம் வரவேற்க்கத்தக்கதாக தோன்றவில்லை. மாறாக ஒரு பதற்றம் தொற்றிக் கொண்டது: கார் சாவி கையில் இல்லை. சாவி எங்கே? அவளது பாவாடையில் பைகளும் இல்லை. 

மரணத்தை மனதில் வரித்துக் கொண்டு செல்கையில், வழியில் எதைப் புறக்கணித்து விட்டுச் செல்கிறோம் என்பதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. அவள் காரை விட்டுச் செல்லும் பொழுது, எதிர்காலம் என்ற ஒன்று இல்லை. அவள் மறைக்க எதுவும் இல்லை. ஆனால் இப்பொழுது அவள் அனைத்தையும் ஆதாரமில்லாமல் மறைக்க வேண்டும். அவள் பதற்றம் அதிகரித்துக் கொண்டே இருந்தது: சாவி எங்கே? வீட்டை எப்படி அடைவது?

அவள் காரை அடைந்து கதவைத் திறக்க முயலுகையில், ஆச்சரியமூட்டும் விதமாகக் கதவு திறந்து கொண்டது. ஓட்டுநர் இருக்கை முன் அவளால் புறக்கணிக்கப்பட்ட சாவி அவளுக்காகக் காத்துக் கிடந்தது. இருக்கையில் அமர்ந்து, தன் வெறுங்கால்களை பெடலில் வைத்தாள். பதற்றத்தோடு குளிரும் சேர்ந்து அவள் நடுங்கிக் கொண்டிருந்த நிலையில், முற்றிலுமாக நனைந்துவிட்ட ஆடைகளிலிருந்து, அனைத்துப் புறமும் அழுக்கான ஆற்று நீர் காருக்குள் வடிந்தது. இந்நிலையில் அங்கிருந்து காரை கிளப்பினாள். 

ஒரு புறம் அவளுக்கு வாழ்வை மீட்டுத்தர முயன்றவன் நீரில் மூழ்கி இறந்து விட்ட நிலையில், மறுபுறம் அவள் கொல்ல நினைத்த சிசு இன்னும் அவள் வயிற்றில் உயிருடன் இருந்தது. தற்கொலை எண்ணத்தை மறு சிந்தனைக்கு இடமின்றி சாஸ்வதமாகக் கைவிட்டு விட்டாள். நடந்து முடிந்தவற்றை மறைக்க எதுவும் செய்யத் தயாராக இருந்தாள். அவள் நடுங்கிக் கொண்டிருந்த போதும், அவளது மனோதிடம் மீண்டும் உயிர் பெற்று விட்டது. இப்பொழுது அவள் சிந்தனை முழுவதும் அடுத்தகட்ட செயல்பாடுகள் பற்றியதாக இருந்தது: எவர் கண்ணிலும் படாமல் காரில் இருந்து செல்வது எப்படி? ஈரம் சொட்டும் ஆடையுடன் வரவேற்பாளர் கவனத்திலிருந்து தப்பி அறைக்குச் செல்வது எப்படி?

அலையன் தோளின் மீது வலிமையான தாக்குதலை உணர்ந்தான். 

“முட்டாள், கவனமாக போ” என்றொரு குரல் கேட்டது.

வேகமாகவும் ஆவேசமாகவும் தன்னைக் கடந்து செல்லும் இளம்பெண்ணை அலையன் திரும்பிப் பார்த்தான்.

மன்னிக்கவும்” என்ற அவனது பலவீனமான குரல் அவளை பின் தொடர்ந்தது. 

அவள் திரும்பாமலே பலமான குரலில் வசைச் சொற்களை உமிழ்ந்துவிட்டுக் கடந்து விட்டாள். 

மன்னிப்பு கோருபவர்கள்

இரண்டு நாட்களுக்கு பிறகும் கூட தன் தனிப்பட்ட குடியிருப்பில் இருக்கும் சமயம் அலையன் தன் தோள்பட்டையில் அந்த வலியை உணர்ந்தான். அந்த பெண் தன்னை வேண்டுமென்றே இடித்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வருகிறான். அவள் தன்னை கடுமையான குரலில் “முட்டாள்” எனத் திட்டியது நினைவுக்கு வந்தது. அதைத் தொடர்ந்து “மன்னிக்கவும்” என்ற இவன் குரலும், அவளது வசைச் சொற்களும் கூட நினைவிற்கு வந்தது. மீண்டும் ஒருமுறை தவறேதும் செய்யாமல் மன்னிப்பு கேட்டிருந்தான். எதற்கெடுத்தாலும் அனிச்சையாகவே மன்னிப்பு கேட்டுவிடுகிற தன் முட்டாள்தனத்தை எண்ணிப் பார்த்தான். அந்த எண்ணங்கள் அவனை இம்சிக்கவே, யாருடனாவது பேச வேண்டும் எனத் தோன்றியது. தன் காதலி மெடலைன்னை அழைத்தான். அவள் பாரீஸில் இல்லை. அவள் கைப்பேசியும் தற்சமயம் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. அவன் சார்லஸ்ஸை அழைத்தான். மறுமுனையில் சார்லஸ்ஸின் குரலைக் கேட்டதும் மன்னிப்புக் கேட்டான். “என் மீது கோபப்படாமல் கேள். நான் மோசமான மனநிலையில் இருக்கிறேன். உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும்”. 

“சரியான சமயத்தில் தான் அழைத்திருக்கிறாய். நானும் அதே மனநிலையில் தான் இருக்கிறேன். நீ எதனால் அப்படி இருக்கிறாய்?”.

“அனைத்து சந்தர்ப்பங்களிலும் குற்றவுணர்வுடனே இருப்பது குறித்து நான் என் மீதே கோபமாக இருக்கிறேன்”. 

“ அதுவொன்றும் மோசமான விசயமில்லை”.

“குற்றவுணர்வுடன் இருப்பதா, இல்லாமல் இருப்பதா என்பது தான் பிரச்சினை. அனைவருக்கும் அனைத்திற்கும் எதிரான போராட்டம் தான் வாழ்க்கையின் பொதுவான அம்சம். ஆனால் அந்த போராட்டம் ஒரு நாகரிகமான சமூகத்தில் எவ்வாறு நிகழ்கிறது? ஒருவர் மற்றொருவரை நேரடியாகத் தாக்குவதற்குப் பதிலாக, ஒரு குற்றம் செய்த அவமான உணர்வை மற்றவருக்கு ஏற்படுத்த முனைகிறார்கள். அந்த முயற்சியில், பிறருக்கு அந்த குற்றவுணர்வை ஏற்படுத்த இயலுகிறவர்கள் வெல்கிறார்கள். குற்றத்தை ஏற்றுக் கொள்பவர்கள் தோற்கிறார்கள். நீ ஒரு சாலையோரம் சிந்தனைவயப்பட்டு நடந்து செல்கிறாய். அப்பொழுது, தனக்கே அந்த சாலை சொந்தம் என்பது போலச் சுற்றும் முற்றும் கவனிக்காது நேரெதிரே வரும் பெண்ணுடன் மோத நேரிடுகிறது. அது தான் மனித இயல்பின் யதார்த்தம் வெளிப்படும் துல்லியமான தருணம்- யார் தன் அதட்டலால் மற்றொருவரை வீழ்த்தி சரணடைய வைக்கிறார் என்பது தான் அது. இது ஒரு வழமையான, யதார்த்தமான நிகழ்வு. அந்த விபத்தில் இருவருக்கும் சமபங்கு இருந்த போதிலும், சில சந்தர்ப்பங்களில் ஒருவர் முன்வந்து குற்றத்தை ஏற்று மன்னிப்பு கேட்கும் பொழுது, மற்றொருவர் தன்னை பாதிக்கப்பட்டவர் போல் பாவித்து குற்றம் சுமத்தத் துவங்கிவிடுகிறார். இந்த சந்தர்ப்பத்தில் நீ என்ன செய்வாய்- குற்றம் சுமத்துவாயா மன்னிப்புக் கேட்பாயா?”

“நான் நிச்சயம் மன்னிப்புக் கேட்பேன்”.

“அப்படியென்றால் நீயும் மன்னிப்புக் கேட்பவர்கள் குழுவைச் சேர்ந்தவன் தான். நீ உன் மன்னிப்பின் மூலம் அடுத்தவரைச் சமாதானம் செய்ய முயல்கிறாய்”

“ஆமாம்”

“அது தவறு. முதலில் முன்வந்து மன்னிப்புக் கேட்பதன் மூலம் நாம் நம் குற்றத்தை ஒப்புக் கொள்கிறோம். இதன் விளைவாக மற்றவர் நம் மீது பொதுவெளியில் குற்றம் சுமத்தவும் அவமானப்படுத்தவும் சந்தர்ப்பத்தையும் உரிமையையும் தருகிறோம்.”

“அதுவும் சரிதான். ஒருவர் மன்னிப்புக் கேட்டாக வேண்டியதில்லை. ஆனால் எந்த நிபந்தனையுமின்றி, உள்நோக்கமின்றி, விதிவிலக்கின்றி தேவைப்படாத சூழ்நிலைகளிலும் கூட, மனிதர்கள் மன்னிப்புக் கேட்பவர்களாக இந்த உலகில் இருக்க வேண்டுமென நான் விரும்புகிறேன்.”

அலையன் தன் கைப்பேசியை எடுத்து மீண்டும் மெடலைன்னை அழைத்தான். மறுமுனையில் பதில் இல்லை. இது போன்ற சமயங்களில் அவன் சுவரில் மாட்டி இருக்கும் அந்த புகைப்படத்தின் மீது தன் கவனத்தைச் செலுத்துவது வழக்கம். தன் தாயின் அந்த இளமைக்கால புகைப்படத்தைத் தவிர அவன் ஸ்டூடியோவில் வேறு புகைப்படம் கிடையாது.

அலையன் பிறந்த சில மாதங்களில் அவள் தன் கணவனைப் பிரிந்து சென்று விட்டாள். அவன் தந்தை ஒரு மென்மையான, கண்ணியமான மனிதர். அவருக்கே உரிய இயல்பின் காரணமாக அவளைப் பற்றி தவறாக எதுவும் பேசியதில்லை. இது போன்ற ஒரு மனிதரை ஒரு பெண் எப்படிப் பிரிந்து சென்றாள் என்பதை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. முக்கியமாகச் சிறுவயது முதலே மென்மையாகவும் கண்ணியமாகவும் நடந்து கொள்ளக் கூடிய தன் மகனை எப்படிப் பிரிய முடிந்தது என்பது அதை விடப் புதிராக இருந்தது. 

“அம்மா எங்கே வசிக்கிறாள்?” தந்தையிடம் கேட்டான்.

“அமெரிக்காவில் வசிக்க கூடும்”.

“வசிக்க கூடும் என்றால்?”

“எனக்கு அவள் முகவரி தெரியாது”.

“ஆனால் அதை உங்களுக்குத் தெரிவிப்பது அம்மாவின் கடமை”.

“அவள் எந்த வகையிலும் எனக்குக் கடமைப்பட்டவள் இல்லை”

“எனக்கும் இல்லையா? என்னைப் பற்றி அவள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லையா? நான் எப்படி இருக்கிறேன் என்று? நான் அவளைப் பற்றிச் சிந்திப்பது பற்றித் தெரிய வேண்டியதில்லையா?”

ஒருமுறை தந்தை பொறுமையிழந்து கூறினார்: “நீ தொடர்ந்து நிர்ப்பந்தித்துக் கேட்பதால் இதைத் தெரிவிக்கிறேன். அவளுக்கு உன்னைப் பெற்றெடுக்க விருப்பமில்லை. நீ சௌகரியமாகத் தூங்கும் அந்த சாய்வு நாற்காலியில் தூங்க வைக்க விருப்பமில்லை. உன்னைப் பற்றிய எதுவும் அவசியமில்லை. இப்பொழுது புரிகிறதா?

தந்தை உணர்ச்சிவசப்படக்கூடியவர் அல்ல. என் பிறப்புரிமையை மறுத்த என் தாயுடன் அவருக்குக் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அவர் இயல்பான அமைதியை மீறி, அதன் அதிருப்தி வெளிப்பட்ட போது அதை மறைக்க முயலவில்லை. 

அலையனுடைய தாயுடனான அவனது கடைசி சந்திப்பைப் பற்றி முன்பே கூறியிருந்தேன். அது அவனது பத்தாவது வயதில் ஒரு சொகுசு விடுதியின் நீச்சல் குளத்தின் அருகில் நிகழ்ந்தது. அவனுக்கு பதினாறு வயது இருக்கும் போது அவன் தந்தை இறந்து விட்டார். அவரது இறுதிச் சடங்கு முடிந்த சில நாட்கள் கழித்து, அவர்களது குடும்ப படத்திலிருந்து தாயின் படத்தைத் தனியே கிழித்து சட்டம் போட்டு தன் அறையில் மாட்டினான். அவனது தந்தையின் புகைப்படம் எதுவும் அவன் அறையில் இல்லை. அதற்கான காரணம் எதுவானாலும் அது நியாயமில்லாதது; புரிந்து கொள்ள முடியாதது. ஆனால் அது தான் உண்மை. அவன் அறையிலிருந்த ஒரே புகைப்படமான தன் தாயின் படத்துடன் அவ்வப்போது உரையாடுவான்.

ஒரு மன்னிப்புக் கேட்பவனைப் பெற்றெடுப்பது எப்படி

“நீங்கள் ஏன் கருக்கலைப்பு செய்து கொள்ளவில்லை? அப்பா தடுத்துவிட்டாரா?”

அந்த புகைப்படத்திலிருந்து ஒரு குரல் கேட்டது: “அதை உன்னால் எப்பொழுதும் தெரிந்து கொள்ள முடியாது. என்னைப் பற்றி உன்னிடம் இருப்பது அனைத்தும் மாயாவாதக் கற்பனையே. ஆனால் அவை எனக்கும் கூட பிடித்தே இருக்கிறது. ஆற்றில் ஒரு இளைஞனை மூழ்கடித்த கொலைகாரியாக என்னை நீ கற்பனை செய்தது உட்பட அனைத்தும். அது போன்று மீண்டும் ஒரு கற்பனைக்காகக் காத்திருக்கிறேன். சொல்லு அலையன்”. 

அலையன் மீண்டும் கற்பனை வயப்பட்டான். அவன் தந்தையைத் தாய் மீது கற்பனை செய்தான். தான் கருத்தடை மாத்திரை எடுத்துக்கொள்ளவில்லை என்று அவள் எச்சரித்தாள். மீண்டும் ஒரு முறை அவன் உறுதியளிக்கவும், பரஸ்பர நம்பிக்கையுடன் சல்லாபித்தனர். அவன் முகத்தில் ஏற்பட்ட மாற்றங்களிலிருந்து அவன் உச்சநிலையை அடைவதைப் புரிந்து கொண்டவள், “கவனம். என்னால் முடியாது; வேண்டாம்” எனக் கதறினாள். ஆனால் அவன் முகம் மேலும் சிவக்க, வெறுப்புணர்வு ததும்பத் தொடர்ந்தான். அவள் தன்னை ஆக்கிரமித்திருந்த தேகத்திடம் இருந்து விடுபடப் போராடினாள்; அவன் பிடி மேலும் இறுகியது. இது கண்மூடித்தனமான களிப்பால் நிகழவில்லை; தன் மீது திட்டமிட்டு மனவுறுதியுடன் வெளிப்படுத்தப்படும் வன்மம் என்று அவளுக்குப் புரிந்து விட்டது. தன் போராட்டம் தோல்வியடைந்ததன் காரணமாக, அவளுக்குள் அதுவரை இருந்த உணர்வுகள் அனைத்தும் திரண்டு கட்டுக்கடங்கா வெறுப்பாக மாறியது.

அவர்களது கூடலை அலையன் கற்பனை செய்வது இது முதல் முறையல்ல. அந்த கற்பனையால் அவன் மதிமயங்கி இருந்ததன் விளைவாக, ஒவ்வொரு மனிதனும் அவன் கருவில் உருவாகிய தருணத்தின் பிரதிபலிப்பு என்று கருதினான். கண்ணியமான, வலிமையான தன் தந்தையின் வெறுப்பும், மனதளவில் தைரியமும் உடலளவில் பலவீனமும் சேர்ந்த தன் தாயின் வெறுப்பும் என இரண்டு விதமான வெறுப்பின் கலவையான வெளிப்பாடே தான் என்று அவன் பிறப்பைக் கருதினான். கண்ணாடி முன் நின்று அந்த வெறுப்பின் ரேகைகளை தன் முகத்தில் தேடினான். 

அத்தகைய வெறுப்புகளின் சங்கமத்தால் பிறப்பவன் மன்னிப்புக் கேட்பவனாகத்தான் இருக்க முடியும் என எண்ணினான். தன் தந்தையைப் போலக் கண்ணியமாகவும் புத்திசாலியாகவும் தன்னை குறித்து எண்ணும் அதே வேளையில் தன் தாயின் பார்வையில் தன்னை ஒரு அத்துமீறுபவனாகவும் கருதினான். அத்துமீறுபவனாகவும் கண்ணியமானவனாகவும் இருக்கும் ஒருவன் தன் வாழ்நாள் முழுவதும் கண்டனத்துக்குரியவனாகவும் மன்னிப்பு கோருபவனாகவும் தான் இருக்க முடியும் என்பது மறுக்கமுடியாத யதார்த்தம். மீண்டும் சுவரில் இருக்கும் தன் தாயின் புகைப்படத்தைப் பார்க்கிறான். இப்பொழுது அவள் தன் முயற்சியில் தோல்வியடைந்து, ஈரம் சொட்டும் ஆடைகளுடன் காரில் ஏறி, எவர் கண்ணிலும் படாமல் அறையை அடைந்து, தன்னுள் அத்துமீறி உருவாகி வளரும் சுமையை அங்கேயே இறக்கி விட்டு, சில மாதங்களில் நிரந்தரமாக மீண்டும் ஒரு முறை வெளியேறுகிறாள். 

ஏவாளின் மரம்

அலையன் தன் ஸ்டுடியோவில் சுவரில் சாய்ந்தவாறு தலைகுனிந்து அமர்ந்திருந்தான். ஒருவேளை உறங்கி இருக்கலாம். ஒரு பெண்ணின் குரல் அவனை எழுப்பியது. 

என்னிடம் நீ கூறிய அனைத்தும் நன்றாக இருக்கிறது. உன் கற்பனையின் கண்டுபிடிப்புகள் அனைத்தும் பிடித்திருக்கிறது என்பதைத் தாண்டி, உன்னிடம் சொல்ல வேறெதுவும் இல்லை. ஆனால் தொப்புள் குறித்த உன் கற்பனையிலிருந்து மாறுபடுகிறேன். உன் பார்வையில் தொப்புள் இல்லாத பெண் தேவதை போல் தெரிகிறாள். ஆனால் என் வரையில் உலகின் முதல் பெண்ணான ஏவாள் தான் தொப்புள் இல்லாதள். காரணம் அவள் கருவிலிருந்து பிறப்பதற்கு மாறாக இறைவனால் படைக்கப்பட்டவள். அவளது கருப்பையிலிருந்து தான் முதல் தொப்புள் கொடி தோன்றியிருக்க வேண்டும். பைபிளின் படி, அனைத்து தொப்புள் கொடிகளும் அதில் துவங்கியே தோன்றியிருக்க வேண்டும். ஒவ்வொரு கொடியின் முடிவிலும் ஒரு ஆணோ பெண்ணோ பிணைந்திருப்பார்கள். ஆண்களின் உடலுடன் அந்த சங்கிலி தொடர்ச்சியின்றி முடிந்துவிட்டாலும், ஒவ்வொரு பெண்ணின் கருப்பையிலிருந்தும் மேலும் தொப்புள் கொடி சங்கிலி தொடர்ந்து, ஒரு ஆணுடனோ பெண்ணுடனோ பிணைந்திருந்தது. இவ்வாறாக, லட்சோபலட்சம் முறை இது தொடர்ந்து, நீண்டு, எண்ணற்ற மனித உடல்களால் ஆன ஒரு வானளாவிய மரமாக வளர்ந்து நின்றது. அந்த மரத்தின் ஆணிவேர் தொப்புளற்ற ஏவாளின் கருப்பையிலிருந்தே நீண்டிருந்தது. 

நான் கருவுற்ற சமயம், என்னை நான் அந்த மரத்தின் ஒரு பகுதியாக, ஒரு கொடியில் இணைந்திருப்பதாக உணர்ந்தேன். என்னிலிருந்து வெளிப்படும் ஒரு கொடியின் முனையில் நீ ஊசலாடிக் கொண்டிருப்பதாகக் கற்பனை செய்து கொண்டேன். அந்த சமயம் முதல், ஒரு கொலைகாரன் கத்தியோடு அந்த மரத்தின் அடியாழத்தில் ஏவாளின் கழுத்தை வெட்டுவதாகக் கற்பனை செய்தேன். மரணத்தின் பிடியில் அவள் துடிதுடிக்க, அவளுள் இருந்து கிளைத்தெழுந்த அந்த பிரம்மாண்ட மரம், வேரின்றி பிடிப்பிழந்து, வீழ்வதைக் காட்சி செய்து கொண்டேன். அதன் எண்ணிலடங்கா கிளைகள் ஒரு பெருமழையைப் போல விழுவதாகக் கண்டேன். இதை மனித இனத்தின் அழிவாகவோ, எதிர்காலத்தை நிர்மூலமாக்குவதாகவோ புரிந்து கொள்ள வேண்டாம். மாறாக, இதன் மூலம் ஆதி முதல் அந்தம் வரை, நீரோ முதல் நெப்போலியன் வரை, இயேசு முதல் புத்தன் வரை, மனிதக் குலத்தின் இருப்பையே எந்த சுவடுகளும் நினைவுகளும் இன்றி, கடந்தகாலம், எதிர்காலம் என எதுவும் இன்றி மறையச் செய்ய வேண்டும் என்பதே நோக்கம். தனக்கு எந்த நன்மையையும் விளைவிக்கவியலாத, ஒரு துயரகமான கூடலால் வரும் பின்விளைவுகளை அறியாமல், அதற்காகக் காலந்தோறும் மனிதர்கள் எத்தகைய விலையை தங்கள் வாழ்நாள் முழுவதும் கொடுக்க வேண்டி இருக்கும் என எந்த புரிதலும் இல்லாத, ஒரு தொப்புள் இல்லாத பெண்ணின் கருவிலிருந்து உருவாகி கிளைத்தெழுந்த மரத்தை முற்றிலுமாக அழித்தொழிக்க வேண்டும் என்பதும் ஆகும்”.

அந்த குரல் மீண்டும் அமைதியானது. அலையன் சுவரில் சாய்ந்து மீண்டும் உறங்கிப் போனான்.

மோட்டர்பைக்கில் நிகழ்ந்த உரையாடல்

மறுநாள் காலை பதினொரு மணியளவில், லக்சம்பர்க் தோட்டத்தின் அருகில் உள்ள அருங்காட்சியகம் முன்பு தன் நண்பர்கள் ரேமொன் மற்றும் கலிபான் இருவரையும் அலையன் காண வேண்டி இருந்தது. தன் குடியிருப்பிலிருந்து கிளம்பும் முன், தன் தாயின் புகைப்படத்திடம் திரும்பி விடைபெற்றுக் கொண்டு, கீழிறங்கி வீதிக்கு வந்து, சற்று தள்ளி நிறுத்தியிருந்த தன் மோட்டர்பைக்கை நோக்கி நடந்தான். 

அவன் பைக்கில் ஏறியவுடன், ஒருவர் அவனை நெருங்கி அவன் மீது சாய்வது போல் உணர்ந்தான். அவன் காதலி மெடலைன் அவனுடன் பைக்கில் இருப்பது போல் உணர்ந்தான். இந்த கற்பனை தடுமாறச் செய்தது; அவள் மீதான அவன் காதலை உணர்த்தியது. அவன் வண்டியைச் செலுத்தினான். 

தன் பின்னால் ஒரு குரல் கேட்டது. 

“நான் உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும்”.

அந்த உணர்வை அடையாளம் கண்டு கொண்டான். அது அவன் தாயின் குரல். 

சாலையில் போக்குவரத்து குறைவாக இருந்தது. அவன் தாய் தொடர்ந்து கூறினாள்: “நம்மிடையே பரஸ்பர புரிதல் இருப்பதாக, நாம் தவறாகக் கருதிவிடக் கூடாது என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்”.

ஒரு பாதசாரி இரு கார்களுக்கிடையில் புகுந்து சாலையைக் கடக்க முயன்றதால், அலையன் சட்டென வண்டியை நிறுத்தினான். அவன் அலையனை நோக்கி மிரட்டும் தொணியில் கையசைத்து விட்டு போனான்.

“நான் வெளிப்படையாகக் கூறுகிறேன். ஒரு உயிரை அவர்களது அனுமதியின்றி இந்த உலகில் திணிப்பதை மோசமான செயலாக உணர்கிறேன்”. 

அலையன் ஆமோதித்தான்.

“உன்னைச் சுற்றிப் பார். இங்கிருக்கும் ஒருவர் கூட தன் விருப்பத்தின் பேரில் வந்தவர் இல்லை. இப்பொழுது நான் சொன்னது இதுவரை நாம் கண்டறிந்ததிலேயே மிகச் சாதாரணமான உண்மை. அது மிகச் சாதாரணமாகவும் அடிப்படையானதாகவும் இருப்பதாலேயே நாம் அதைப் பார்ப்பதும் கேட்பதும் இல்லை”. 

சில நிமிடங்களுக்கு தன் இருபுறமும் சென்ற காருக்கும் லாரிக்கும் இடைப்பட்ட சாலையில் சீராகச் சென்றான்.

“அனைவரும் மனித உரிமையைப் பற்றிப் பிதற்றுகிறார்கள். என்ன ஒரு வேடிக்கை. நம் இருப்பே நம் விருப்பத்தின் பேரில் நிகழவில்லை. அதோடு இந்த மனித உரிமை பாதுகாவலர்கள் நாம் விரும்பிய வண்ணம் மரணத்தைத் தேடிக் கொள்ளக் கூட அனுமதிக்க மாட்டார்கள்”. 

சாலையின் சந்திப்பிலிருந்த விளக்கு சிவப்பிற்கு மாறியது. அவன் வண்டியை நிறுத்தினான். சாலையின் இருபுறமிருந்தும் மனிதர்கள் எதிர்புறத்தை நோக்கி விரைந்தனர்.

அவன் தாய் தொடர்ந்தாள்: “அவர்களைப் பார். பாதிக்கும் மேற்பட்டவர்கள் மோசமாகக் காட்சியளிப்பவர்களாக இருக்கிறார்கள். அசிங்கமாக இருப்பது கூட மனித உரிமையா? வாழ்க்கை முழுவதும் அசிங்கமான உருவத்தைச் சுமந்து திரியும் உணர்வு எத்தகையது என்று உனக்குத் தெரியுமா? ஒரு நிமிடம் கூட ஆசுவாசம் இருக்குமா? உன் பாலினம்? நீ ஒரு போதும் அதைத் தேர்வு செய்ய முடியாது. உன் விழியின் நிறம்? நீ பூமியில் வாழும் காலகட்டம்? உன் நாடு? உன் தாய்? இது எதுவும் முக்கியமில்லை. நம் உரிமைகள் என்பது முக்கியமில்லாத விசயங்களுடனே சம்மந்தப்பட்டிருக்கிறது. அதனால் உரிமைகளின் பொருட்டு நாம் சண்டையிடவோ பெரிதாக பிரகடனங்கள் செய்வதோ தேவையில்லாதது”. 

அவன் மீண்டும் வண்டியைச் செலுத்தினான். அவனது தாயின் குரலும் சற்று உயர்ந்து, “நான் பலவீனமாக இருந்ததால் நீ இவ்வாறு இருக்கிறாய். அது என் தவறு. மன்னித்து விடு” என்றாள்.

சற்று நேரம் அமைதியாக இருந்துவிட்டு, அலையன் மெதுவாகப் பேசினான். “எதற்காக நீங்கள் மன்னிப்பு கேட்கிறீர்கள்? என் பிறப்பைத் தடுக்க பலம் இல்லதாதற்காகவா? என் வாழ்க்கையில் மீண்டும் இணைந்து கொள்ளாததற்காகவா? இப்பொழுதிருக்கும் நிலையில் அதுவொன்றும் அவ்வளவு மோசமாக இல்லையே?” என்றான்.

சிறிய இடைவெளி விட்டு, “நீ சொல்வது கூட சரிதான். அப்படியானால் என் குற்றவுணர்வு இரட்டிப்பாகிறது”.

“நான் தான் உங்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். ஒரு குப்பையைப் போல் உங்கள் வாழ்விற்கிடையே விழுந்தேன். அமெரிக்காவிற்கு விரட்டியடித்தேன்” என்றான் அலையன்.

“மன்னிப்புக் கேட்பதை நிறுத்து. என் முட்டாள் மகனே, உனக்கு என் வாழ்வைப் பற்றி எதுவும் தெரியாது. உன்னை நான் முட்டாள் என அழைக்கலாமா? கோபித்துக் கொள்ள வேண்டாம். என் பார்வையில் நீ ஒரு முட்டாள் தான். ஆனால் உன் முட்டாள்தனத்தின் பிறப்பிடம் எது தெரியுமா? உன் நல்ல இயல்பு தான். உன் உன்மத்தமான நல்லதனத்தில் இருந்து தான் உன் முட்டாள்தனம் உருவாகிறது”.

அவன் லக்சம்பர்க் தோட்டத்தை அடைந்து, வண்டியை நிறுத்தினான். 

“எதிர்ப்பு தெரிவிக்காமல் என்னை மன்னிப்பு கேட்க விடுங்கள்” என்றான் அலையன். “நான் ஒரு மன்னிப்பு கேட்பவன். அப்படித்தான் நீங்கள் இருவரும் என்னை உருவாக்கினீர்கள். இப்படி இருப்பது எனக்கு மகிழ்ச்சியே. நாம் பரஸ்பரம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளும் உணர்வு நன்றாக இருந்தது. அதில் ஒரு அன்பு இருந்தது இல்லையா?” 

அவர்கள் அருங்காட்சியகத்தை நோக்கி நடந்தனர்.

தமிழில்~ கோடீஸ்வரன் கந்தசாமி
 

https://kanali.in/மன்னிப்புக்-கேட்பவர்கள்/

மீனாச்சிபாட்டி(சிறுகதை)

2 months ago
மீனாச்சிபாட்டி(சிறுகதை)
 
பாட்டிக்கு ராத்திரிபூராம் தூக்கம் வரல பொறண்டு பொறண்டுபடுக்குது குளிருவேற வீட்டுல எட்டாவது மகனோடபொண்டாட்டியும் ரெண்டுபேரப்புள்ளைகளும் நாளைக்கி ஆர் ஆரெல்லாம் வருவாக அப்பத்தான்னுகேட்டு தேஜா வருவாளா கோபிவருவானான்னு கேட்டுகளைச்சுப்போயி இப்பத்தான் அசந்து தூங்க ஆரம்பிச்சுதுக
மருமக அவ பேத்திதான் அம்மாயி உங்கமகன் அதான் என் வீடுக்காரரு நாளைக்கி வரலயாம் நு சொல்லிட்டு படுக்கப்போனா. ஏம்மா மாவெல்லாம் ஆட்டிவைச்சிட்டயா சட்ணிக்கி சாமானெல்லாம் வாங்கிவைச்சிட்டயான்னு கேட்டுக்கிட்டே இருந்துச்சு மீனாட்சிபாட்டி அதுக்கு உன் பிள்ளக பேரம்பேத்தி அம்புட்டுப்பேரும் வாராகன்னவன்ன ஒன்னபுடிக்கமுடியல வீட்டுல இருக்குற பேரம்பேத்திக எல்லாம் பெருசாத்தெரியலன்னு கிண்டல் பண்ணா மருமககாரி... வெள்ளனா எல்லாரும் வந்துருவாக எந்திரிச்சி காப்பிகீப்பி போட்டுக்குடுக்கனும் சரிசரி போயிப்படுனு சொல்லிச்சி பாட்டி
நாளைக்கி ஆராரு என்ன என்ன பண்ணுவாகன்னுன்னு யோசிக்க ஆரம்பிச்சது
போனவாரம் பாட்டியோட மூத்தமகன் முத்தையா போன் பண்ணான் அவனோட மூத்தமகன் குலதெய்வத்துக்கு பூசைபோட வரப்போறதா .ரெட்டக்கெடா வெட்டி பூசைபோடவேண்டுதலாம்
அவன் ஒலகம்பூராம் கப்பல்ல சுத்துறவன் போனவருசம்தான் கலியாணமாச்சு இன்னும் அவன்பொண்டாட்டி வயத்துல புழுப்பூச்சி தங்கல.பூசைபோட்டாவது சரியாகும்ன்னு நெனச்சான்
அப்ப ஆராருக்குசொல்லனும்னு கேட்டான் மகன்.பாட்டி நம்ம சொந்தங்கதான் அதுலயேஅம்பதுபேரு வருது அப்புறம் கோயிலுக்குவாரவுகபோறவுக எல்லாம் சாப்புடுவாக எப்புடியும் நூறநெருங்கும் னுசொல்லிச்சி பாட்டி
பாட்டிக்கு ஏழுமகன்க ரெண்டு மகளுக
உள்ளூருல மூணுபேரு மெட்ராசில ரெண்டு பக்கத்து ஊருல ஒண்னு கோயம்புத்தூருல ஒருமக பரமக்குடில ஒருமக ன்னு துண்டுதுண்டாக்கெடந்தாக
அவுக எல்லாத்தையும் இந்தபூசை ஒண்ணுசேக்கும்ன்னு நெனச்சா பாட்டி
எல்லாத்துக்கும் சொல்லிட்டயான்னு கேட்டுச்சு மகன
சொன்னேன் பரமக்குடி மக வரலயாம் கோயம்புத்தூரு மகளுக்கு ஒடம்புசரியில்லையாம்னு சொன்னான்
சரிவா பாத்துக்கலாம்னுமுத்தையா. சொல்லிச்சி பாட்டி நம்பிக்கையோட
எப்பதூங்குனோம்னு தெரியல பாட்டிக்கு
ஆரோ காலத்தொட்டமாதிரி இருந்துச்சு முழிச்சிப்பாத்தாமுத்தையாகாலத்தொட்டுகும்புட்டுகிட்டுஇருந்தான் கூட அவன் சம்சாரமும் ரெண்டாவது பேரனும்... .எந்திரிக்க நெனச்சா முடியல எம்பது வயசாச்சே
வாப்பான்னு சொன்னா மருமக கும்புட்டா
பேரனும்வணக்கம் சொன்னான் எப்ப வந்தீகன்னுகேட்டா பாட்டி காலையில வந்துட்டோம்அங்கயேகுளிச்சிட்டோம்னான்.மகன்
பேத்திய எழுப்பிவிட்டுச்சுபாட்டி
சீக்கிரம் காப்பிய கீப்பியபோடு முத்து வந்துட்டான் இனி எல்லாரும் வர ஆரம்பிச்சிருவாகன்னா
அவ காப்பிபோடபோனா
பேரன் எனக்கு வேணாம்னுன்னான் மருமக சக்கரை கம்மியாகுடுன்னா
பரமக்குடிதங்கச்சி என்னாசொல்லிச்சின்னு கேட்டுச்சுபாட்டி. அப்புடியே போன போட்டுக்குடுன்னுசொல்லிச்சி
போனுல நீ கட்டாயம் வரனும் ஒன்னப்பாக்கனும்போல இருக்கு ஆத்தான்னுசொல்லிச்சி அந்தப்பக்கம் ஏதோசொன்னவன்ன அதெல்லாம் விடு நான் சொல்றேன் வந்தே ஆகனும்னு சொல்லிடுச்சு பாட்டி
அடுத்து கோயம்புத்துருக்குப் போனப்பொடுன்னு சொல்லிச்சி போட்டுகுடுத்தவன்ன ஏம்மா பேரம்பேத்திய பாக்கனும் கூட்டிட்டு வரயான்னு கேட்டுச்சு மறுபேச்சில்ல
வாரென்னு சொல்லிடுச்சு
அதுக்குள்ள ரெண்டாவதுமகனோட மகன் வந்து அப்பத்தா எல்லாரும் வந்துட்டாகளான்னு கேட்டான் முத்தப்பாத்துட்டு வாங்க பெரியப்பான்னான்
அவனோட அப்பா இப்ப இல்ல அவனுக்கு மூணு அக்காமாருக அவுகளயும் வரசொல்லியாச்சு வாரென்னாக
மூணாவது மகனும் இப்ப இல்ல அவனோட மக மெட்ராசுல வேலபாக்குது அந்தப்பேத்தியும் வாரென்னுசொல்லிருச்சு மீதிபேரனும் பேத்தியும் உள்ளூர்தான்
நாளாவதுமகனும் மெட்ராசுதான் அவன் வரலன்னுசொல்லிட்டான் வெளியூர்போறானாம்
எப்புடிப்பாத்தாலும் முக்காவாசிப்பேரு வந்துருவாகன்னு சொல்லிச்சி பாட்டி
முத்து பூசைக்கிசாமாஞ்சட்டு வாங்க டவுனுக்குப்போயிட்டு சாயந்தரமா வந்தான்
அன்னிக்கி அமாவாசை மூணாவது மகன் இல்லாததால அங்க வெரதம் விட்டாகஅன்னிக்கி எல்லாரும் அங்கதான் சாப்பாடு.
இதுக்குநடுவுல கெடாப்புடிக்கபோனவன் போன்பண்ணான் கருப்புக்கெடா எங்கயும் கெடைக்கலன்னு மணி சாயங்காலம் ஆறு
என்னா பண்ணுறதுன்னு தெரியல கையப்பெசஞ்சான்முத்துபாட்டிசொல்லிச்சி ஒன் மச்சானக்கேட்டுப்பாரு அவனுக்கு இதெல்லாம் பழக்கம்னு.
போனபோட்டு வெவரம் சொன்னான்
கொஞ்சநேரத்துல அவன் போன் பண்ணான் திருமங்கலத்துக்குப்பக்கத்துல செங்கப்படை கிராமத்துல ரெண்டு கருப்புக்கெடா இருக்குறதா.
ஒடனே ஒரு ஆட்டோவப்புடிச்சிக்கிட்டு கெளம்புனான் முத்து அவன்கூட ரெண்டு பேரன்களும் போனாக வழில மச்சான் ஏறிக்கிட்டான்
ஒருவழியா செங்கப்படையில கெடாகெடச்சது அப்புடியே கோயில்ல கொண்டுபோயி கட்டிட்டு வந்தாக
காலையிலே கெடா வெட்டியாச்சு
ஒவ்வொருத்தரா வர ஆரம்பிச்சாக மொதல்லவந்துது கோயம்புத்துரு பேத்திதான் இப்பவும் மாசமா இருந்தா அவளோடபுருசனோட மகனும் வந்திருந்தான் அப்புறமா பரமக்குடி மக வந்துச்சு இதுக்கு நடுவுல ப்பூசபோடுற பேரன் பொண்டாட்டி மச்சானோட வந்தான்
அப்புறம் நண்டுஞ்சிண்டுமா பேரன் பேத்திக மகன்க மருமகளுக அக்கா தங்கச்சின்னு கோயிலு நெறைஞ்சிடுச்சு
புள்ளைகளுக்கு ஒரே கொண்டாட்டாம் குறுக்க நெடுக்கயுமா ஒடுச்சுக பாத்து புள்ளைகளா கீழ விழுந்துடாதீகன்னு பாட்டிசொல்லிச்சி
ஒருபக்கம் கிடா பிரியாணி சக்கரபொங்கல் புளியோதர வெந்துக்கிட்டு இருந்துச்சு
இன்னோருபக்கம் நாட்டுக்கோழிஅடச தனியா ஆம்பளைக தயார்பண்ணிக்கிட்டு இருந்தாக அது பொம்பளைக கைப்படக்குடாதுன்னு பழக்கம்
மறுபக்கம் மட்டன் குழம்பு சுக்கான்னு தயாராகிட்டு இருக்கு வாசம் மூக்கத்தொளைக்கிது
வந்தவுக எல்லாம் கதை பொறணி எல்லாம் பேசிக்கிட்டுஇருந்தாக கோயிலே கலகலப்பா இருந்துச்சு.
மறுபக்கம் சாமிகளுக்கு அபிசேகம் அலங்காரம்ன்னு களகட்டிடுச்சு
நெருக்கி எல்லாரும் வந்துட்டாக ஆனா கெடாப்புடிச்சிக்குத்த மச்சான் வரல
அவுக ஊருல ஒரு கேதமாம் வரலேட்டாகும்ன்னாக
மணி 12 ஆயிப்போச்சு இனிமே லேட்டுப்பண்ண முடியாதுன்னு பூஜையபோட்டாக சைவச்சாமிக்கி சைவ பூஜை அசைவச்சாமிகளுக்கு அசைவபூஜைன்னு கோயிலே சாம்பிராணி பத்தி வாசனையோட மட்டன் சிக்கனும்
பிரியாணியும் மணத்துச்சுபூசை முடிஞ்சிச்சி.இப்போ எல்லாரும்
பாட்டிய சுத்திநின்னாக
பாட்டி ஒவ்வொருத்தரா கூப்புட்டு துண்ணூரு குடுத்துச்சு. மூத்தமகனும் மருமகளும் கால்ல விழுந்து வாங்கிக்கிட்டாக அப்புறம் பூசைபோட்ட பேரனும் அவனோட சம்சாரமும் கால்ல விழுந்தாக கொள்ளுப்பெரனோ பேத்தியோ சீக்கிரம் வரனும்ன்னு பாட்டி சொல்லும்போது கண்ணு கசிஞ்சிச்சு
ரெண்டாவது மகனோட மகனோட மகன் வந்துகால்லவுழுந்தப்ப செத்துப்பொன மகன் நெனப்புவந்து அழுக ஆரம்பிச்சிடுச்சு. முத்தையா இவனுக்கு நல்ல ஆயுள குடுன்னுஅழுதுகிட்டே சொல்லிச்சி
மூணாவதுமகனோட மகன் மகளுக மருமக எல்லாரும் மொத்தமா கால்ல வுழுந்தப
மருகளை கட்டிப்புடிச்சி கண்ணீர் விட்டுச்சு
அவளும் கண்ணீர்விட்டா போன புருசன நெனச்சு. பக்கத்துல நின்ன எல்லாருக்கும் கண்ணீர் முட்டுச்சு. முந்தானையில தொடச்சிக்கிட்டாக
அப்புறம் நாலாவதுவராததை நெனச்சு ஏங்குச்சு அஞ்சாவது ஆறாவது ஏழாவதுன்னு பேரன் பேத்திகளுக்கு துண்ணூரு பூசிவிட்டுச்சு
அப்புறமா மூத்தமக பரமகுடிக்காரியும் அவளோட மக மருமகன் வந்திருந்தாக அவுகளுக்கும் பிள்ளயில்ல
அதநெனச்சி கண்ணீர்விட்டுச்சு
ஒருவழியா எல்லாம் முடிஞ்சி சாப்புடப்போனாக சாப்பாடு திருப்திகரமா இருந்துச்சு. சக்கரபொங்கலும் புளியோதரையும் கிடாபிரியாணியும் சுக்காவும் கொஞ்சூண்டு கருவாட்டுக் கொழம்பும் கலக்கிடுச்சு. கோயிலுக்கு வந்துருந்த எல்லாரும் சாப்புட்டாக
வெளில இருந்த பிச்சகாரவுக சாமியாருக எல்லாரும் சாப்புட்டாக அப்ப மச்சான் வந்தான் அவனும் சாப்புட்டுட்டு பேசிகிட்டு இருந்தான்
எல்லாரும் கெளம்புறதுக்கு முன்னாடி பாட்டி சொல்லிச்சி எப்பயும் இதுபோல வருசத்துக்கு ஒருதடவையாவது வாங்க மக்கான்னு சொல்லும்பொது பாட்டி அழுதிருச்சு எல்லாரும் கண்ணுகலங்க தொடச்சிக்கிட்டே கெளம்புனாக
அந்தகாலத்துல ஒம்போது புள்ளபெத்தமகராசி கண்ணுகலங்க வழியனுப்பிக்கிட்டு இருந்தா
இனிமே எல்லாம் வார வாரிசுகளுக்கு இந்தக்குடுப்பின கெடையாது
சித்தப்பா சின்னம்மா மாமா மச்சான் பெரியப்பா பெரியம்மா ஒண்ணுவிட்ட சகோதரன் சகோதரின்னு கெடையாது
அடுத்த தலமொறல எல்லாரும் தனிதான் கூட்டமே இல்ல ஆரும் ஆலமரமா இருக்க முடியாதுஎல்லாம்ஒத்தப்பனமரம்போலத்தான் ந்னு நெனைக்கும்போதுஅவவிட்ட கண்ணீருல கருப்பசாமியே கண்ணீர் விட்டமாதிரி இருந்துச்சு
இந்தக்கூட்டமான பழக்கம் இனிமே இருக்குமான்னு தெரியல நம்ம சொந்தங்கஎல்லாம் இப்புடி ஒண்ணுசேருமா இனிமேன்னு தெரியல
இப்புடி எல்லாரும் ஒண்ணா சேந்து நம்மள வழியனுப்பனும் முத்தையான்னு கையெடுத்துக்கும்புடும்போது கண்ணீரால பாட்டியோட சேல நனைஞ்சது.
 
கவிச்சிகரம் அ.முத்துவிஜயன்
May be a black-and-white image
 
 
 
 

செல்லம்மாப்பாட்டி.(சிறுகதை)

2 months ago
செல்லம்மாப்பாட்டி.     (சிறுகதை)
 
செல்லம்மா பாட்டிக்கு வாடிக்கை யாளர்கள்ரஎல்லாம் சின்னப் புள்ளைங்க தான்
காலங்காத்தால அஞ்சுமணிக்கி அடுப்புப்பத்தவைச்சி குழிப்பணியாரம் இட்லி சூடா பாசிப்பருப்பு சாம்பார் தேங்காசட்ணி காரச்சட்டிணியோட தெருவோரத்துல கடைபோட்டுருக்கும் சின்னபுள்ளக கொடுவாய் கூடக்கழுவாம
தூக்குபோணியும் காசுமா வந்து நிக்கும்
அப்பத்தா எனக்கு ரெண்டு இட்லி மூணுபணியாரம்ன்னு. அவுகளோட அம்மா மாருக செலபேரு கூட வருவாக செலபேரு புள்ளகிட்ட குடுத்து விட்டுருவாக. பல்லக் கூடவெளக்காம பிள்ளக பணியாரம் வாங்க வந்துடும்.
சின்னபுள்ளகளுக்காகவே காரமில்லாத சாம்பார் சட்டிணி இருக்கும்
காரசாரமா வேணுங்குறவுக காரச்சட்டிணி சுள்ளுன்னு தனியா இருக்கும் வாங்கிக்கலாம்.
அம்புட்டும் அம்புட்டு ருசியா இருக்கும்
வீட்டுல எல்லாராலயும் தெனம் இட்லி சுடமுடியாது. பச்ச புள்ளகளுக்கு செல்லம்மா இட்லிக்கடைதான் கைகொடுக்கும். அதேமாதிரி வயசானவுகளும் வந்து பக்கத்துல ஒக்காந்து சுடச்சுட வாங்கிச்சாப்புடுவாக
ரம்சான் மாசத்துல மாத்திரம் சாயங்காலமும் கடை தெறக்கும் பாட்டி. நோம்பு தொறக்குற நேரத்துல இட்லி பணியாரம் மொத்த மொத்தமா வாங்கிட்டுப்போவாக பாய் மாருக
அதேபோல மசூதிக்கும் வாங்கிட்டுப்போயி
எல்லாருக்கும் வாசல்ல தானமாக் குடுப்பாகஅப்ப எல்லாம் நல்ல வருமானம் பாட்டிக்கு
ஆனா என்ன மாவாட்டி இடுப்பு ஒடஞ்சுபோயிடும்.
அப்பெல்லாம் கிரைண்டர் வரல . எல்லாம் கைலதான் ஆட்டனும்
பாய்மாருக விசேசத்துக்குக் கூட வீட்டுல போயி இட்லி வடை பணியாரம் செஞ்சுகுடுக்கும். நல்லா கவனிப்பாக சேல துணிமணி காசெல்லாம் நல்லா குடுப்பாக.
காலையில பத்துமணிக்கு வியாபாரம் முடிச்சிட்டு காசக் கொண்டுபோயி நாடார்கடைல மொதநா வாங்குன அரிசி பருப்பு உளுந்து காய்கறிக்கெல்லாம் காசக்குடுத்துட்டு அன்னிக்கி வேணுங்குறத வாங்கிட்டு வரும் பாட்டி. அப்புறம் ஊரைவைச்சிட்டு சாயங்காலமா மாவாட்டும்.
கடையிலயே நெலவரத்தைபாத்துட்டு சோறுவடிக்கும் இட்லி பணியாரம் மீந்துபோச்சுன்னா அதுதான் அன்னிக்கிசாப்பாடு பாட்டிக்குக் மகனுக்கும்
பாட்டி அவரோட புருசன் போனதில இருந்து இதை வைச்சித்தான் பொழப்பு ஓட்டுச்சு
அவ்வளவு செரமத்துலயும் மகன மாவாட்ட விடாது. அதுதான் ஆட்டும். ஒடம்பு கிடம்பு அதுக்கு சரியில்லாமபோச்சுன்னா கடை தொறக்காது. சின்னபுள்ளக சாப்புடுறது
ஒட்டுவாரொட்டி மாதிரி புள்ளைகளுக்கு நோவு ஒட்டிக்கிடும்னு சொல்லும்
. பாட்டி கடதொறக்கலைன்னா சின்ன புள்ளகள அவுக அம்மா மார்களால சமாதானப்படுத்த முடியாது இந்தகஸ்டத்துலயும் மகன நல்லாப் படிக்கவைச்சாங்க பாட்டி. அவனும் நல்லாபடிச்சி நல்ல வேலைக்கிப்போனான்
வேலைக்கிபோனதும் அவன் செஞ்ச மொதவேலை கடையமூடும்மா. நீ கஸ்டப்பட்டது போதும்ன்னு சொன்னான்.
அதுக்கு பாட்டிசொல்லிச்சி வருமானத்துக்காக கடை வைச்சோம்தான். ஆனா அதைவிட முக்கியமானது அந்த சின்னபுள்ளக வயிறு ரொம்புறது. அந்த பாக்கியம் எல்லாருக்கும் கெடைக்காதுன்னு சொல்லுச்சு. அவனும் வேறவழியில்லாம கிரைண்டர் மிக்ஸி யெல்லாம் வாங்கிக்குடுத்தான். கடை ஓடிச்சி. அப்பத்தான் கலியாணம் பேசுச்சு பாட்டி மகனுக்கு. ந்ல்ல இடம் கெடச்சது. அவங்கபோட்ட ஒரே கண்டிசன் இட்லிக்கடைய மூடனும்றது
இப்ப பாட்டியால ஒண்ணும் சொல்ல முடியல
ஒத்துகிச்சி. கலியாணத்துக்கு மொதநாளு
பெரிய விருந்து . விருப்பம்போல உணவு அதான்
பப்பெட் சாப்பாடு . பொண்ணுவீட்டுல இருந்து ஏற்பாடு பண்ணிருந்தாக. பாட்டி மகன் கிட்ட ஒண்ணே ஒண்ணு கேட்டுச்சு. அந்த விருந்துல ஓரமா இட்லியும் பணியாரமும் வைக்கனும் அத நாந்தான் செய்வேண்ணு சொல்லிடுச்சு.
அவனும் வேற வழியில்லாம ஒத்துக்கிட்டான்
விருந்தும் ஆரம்பிச்சிச்சு. விருந்துக்கு வந்த இவன் கூட வேலபாக்குறவுக சாம்பிளுக்கு சாப்பிட ஆரம்பிச்சு. அடாடா விருந்து அப்ப அப்ப நடக்குறதுதான் . பாட்டி இட்லி பணியாரம் வித்யாசமா .ரொம்ப நல்லாருக்கேன்னு சாப்பிட ஆரம்பிச்சு....வந்தவுகல்ல பாதிப்பேருக்குமேல
இட்லி பணியாரம் பக்கம் வந்துட்டாக
சீக்கிரமே தீந்துபோச்சு. விருந்துக்கு வந்தவுகளெல்லாம் இதைப்பத்தியே பேசுனாக
பாட்டிக்கு ரொம்பச்சந்தோசமாஆச்சு.
அங்க வந்திருந்த ஒரு முக்கிய பிரமுகர் சொன்னாரு. செஞ்ச தொழில மறக்காம இருக்குறது பெரிய விசயம். ஏன்னா செய்யிற தொழில்ல ரொம்ப புண்ணியம் தாரது இதுதான் அதுல கவுரவக்கொறச்சல் ஏதுமில்ல. மனசாறப் பாராட்டுறேன்னாரு.
இதை ஒருத்தரு யூடுயூப்ல எடுத்து அப்லோடு பண்ணாரு. லைக்கும் கமெண்டும் குவிஞ்சிச்சி. பாட்டிக்கு ரொம்பசந்தோசமா ஆயிடுச்சி. இப்ப சம்பந்திக சொன்னாங்க பாட்டி தாரளமா கடை வச்சிக்கட்டும்னு.
சீக்கிரமே பாட்டி இட்லிக்கடை தொறந்துச்சு அப்புடி கொஞ்சநாளு ஓடுச்சு ஒருநா செல்லம்மாப் பாட்டி செத்துபோச்சு அன்னிக்கி கடைதெறக்கல அப்பயும் ரெண்டு சின்னப்புள்ளக தூக்குப்போணியோட கடைக்கிட்ட நின்னுக்கிட்டு இருந்துச்சுக ஒரு அம்மா வந்துசொல்லிச்சு பாட்டி இனிமே கடதொறக்காதுன்னு
அதுகளுக்குப்புரியல அதுல ஒண்ணு வீட்டுக்கேபோயிடுச்சு. அங்க எல்லாரும் அழுதுகிட்டு இருந்தாக. எதுக்குன்னு அதுக்குப்புரியல. அதுபாட்டுக்கு பாட்டிகிட்டபோயி பாட்டி எந்திரிச்சி வா வந்து இட்லிகுடு பசிக்குத்துன்னு சொல்லி அழுதுச்சு பாத்தவுக கண்ணு கலங்கிடுச்சு]
 
கவிச்சிகரம் அ.முத்துவிஜயன்
May be an image of 2 people
 
 
 
 

ஜூடோ - ப.தெய்வீகன்

2 months 1 week ago
ஜூடோ - ப.தெய்வீகன்

அமெரிக்காவின் அரிசோனா சிறை வளாகத்தில் கைதிகளுக்கான கிறிஸ்துமஸ் நிகழ்வுகள் ஏற்பாடாயிருந்தன. அன்றைய தினம்தான் போதைப்பொருள் கடத்தலில் சம்பந்தப்பட்ட ஈழத்தமிழ் கைதியான ரொக்ஸி சிறைக்குக் கொண்டுவரப்பட்டான். அதிகாரிகளின் கட்டளைப்படி கிறிஸ்துமஸ் உணவுக்கான வரிசையில் நின்றான். பல வகையான உணவுகள் பரிமாறப்பட்ட மேசைக்கு அருகில் சென்றபோது, ரொக்ஸிக்கு முன்னால் சென்றவன் கடதாசித் தட்டை எடுத்துக் கொடுத்தான். வறுத்த சோற்றையும் அதற்கு மேல் வார்க்கப்பட்ட குழம்பையும் எடுத்துக்கொண்டு, அவன் பின்னாலேயே ரொக்ஸியும் நடந்தான். வேறு கைதிகள் இல்லாத இடத்தில் இருவரும் குந்தினார்கள். பாதி வறண்ட வழிகள், பள்ளத்தில் வற்றிப்போன கன்னங்கள், தடித்த உதடுகள். தனது பெயர் ஜூடோ என்று கூறினான். ரொக்ஸி அவனிடம் கேட்டான்.

“உன்னுடைய வழக்கு என்ன, எத்தனை வருஷ தண்டனை?” ஜூடோவின் முகம் அமைதியாயிற்று. ரொக்ஸியின் கேள்வியால் அவன் சினமடையவில்லை. மாறாக இத்தனை வருடங்களில் சக கைதியொருவனின் நெருக்கத்தை மனத்தளவில் உணர்ந்தான். குற்றங்களுக்கு அப்பால் அவர்களைப் பிணைக்கும் ஒரு நேசமிருப்பதாக உணர்ந்தான். 

“என் முழுக்கதையையும் சொல்வதற்கு உனக்கு விதிக்கப்பட்ட ஏழு வருடங்களே போதாது” என்று புன்னகை புரிந்த ஜூடோ தன் கதையைச் சொல்லத் தொடங்கினான். 

2

ஆஸ்திரேலியாவை ஐரோப்பிய ஆக்கிரமிப்பாளர்கள் துண்டுதுண்டாகத் தின்றுகொண்டிருந்த காலம். வடமுனையிலுள்ள கரமில பெருநகரம் முடிந்தளவு எதிர்த்துப் போரிட்டபோதும், ஈற்றில் ஆக்கிரமிப்பாளர்களிடம் வீழ்ந்தது. கரமில நகரின் தொல்குடிகள் அனைவரும் முழுநிலா இரவன்று ஒதுக்குப்புறக் கிராமத்திற்கு வேட்டை நாய்களின் உதவியுடன் அழைத்துச் செல்லப்பட்டனர். கற்றைகளாக வெட்டி எரிக்கப்பட்ட வலபிப் புற்களைச் சுற்றித் துப்பாக்கி முனையில் நிறுத்தப்பட்டனர். லோகன் என்ற பெருங்காட்டின் வழிகாட்டி, தனது மனைவி பாபராவுடனும் ஒரு வயது மகனோடும் அச்சத்தில் தன் செவ்விழிகளை உருட்டியபடி கூட்டத்தில் நடுவிலிருந்தான். ஊற்றுப்பாளையில் செய்த குடுவையில் எடுத்துவந்த தண்ணீரை, பாபரா களைத்திருந்த மகனுக்குப் பருக்கிவிட்டாள். தீ ஒளியில் தெரிந்தன முகங்கள். தொல்குடிகள் அச்சத்தில் தங்கள் குல மிம்மி தெய்வத்தைத் தடித்த உதடுகளால் உச்சரிப்பது ஆக்கிரமிப்பாளர்களுக்குக் கேட்டது.

இருளிலும் வெள்ளை நாகம்போலத் தெரிந்த உயரமான ஒருவன் நீண்ட கடதாசியுடன் எல்லோருக்கும் முன் வந்துநின்றான்.

‘கலப்படமற்ற குருதி பாயும் கரியவர்களே! இந்த இருட்டில் உங்களை இனம் காண்பதே பேரிடராயுள்ளது. அதிகம் பேசுவதற்கு ஒன்றுமில்லை. சுருக்கமாகச் சொல்லிவிடுகிறேன். இந்த விலங்கு நிலத்தைச் சுத்திகரிப்பதற்கும் உங்கள் வருங்காலத் தலைமுறையை எங்களைப் போல உருவாக்குவதற்கும் இங்கு நாம் வந்திருப்பதை நீங்கள் பூரணமாய் அறிவீர்கள். காடுறை வாழ்வும் கரியதோலும் கொண்ட உங்களின் மீது ஒட்டியுள்ள அழுக்குகள் இனியாவது ஒழியவேண்டும். அவை உங்கள் அடுத்தத் தலைமுறைகளுக்கு வேண்டாம். இந்தத் திருமுழக்கத்தை உங்களின் முன்னால் கூறி, இறைச் சத்தியமான எங்களது காரியத்தை ஆரம்பிக்கிறோம். உங்கள் குழந்தைகளை நிரந்தரமாய் எங்கள் பொறுப்பில் எடுத்துக்கொள்கிறோம். அவர்கள் இனி எங்கள் பண்ணைகளில் பணிபுரியட்டும். மானிடம் போற்றும் வெண்சரும மேனியர்களாக வளரட்டும்” என்று படித்து முடித்தான்.

வாகனங்களிலிருந்து இறங்கிய சீருடைக்காரர்கள் கூட்டத்துக்குள் நுழைந்து, எல்லோருடைய குழந்தைகளையும் வேக வேகமாக இழுத்துப் பறித்தனர். தொலைவில் நின்றுகொண்டிருந்த பச்சைப் படங்கு போர்த்திய நீண்ட வாகனத்துக்குள் கொண்டுசென்றனர். தாய்மார் பாய்ந்து தடுத்தபோது, உதைத்து வீழ்த்தப்பட்டார்கள். ஆண்கள் சிலர் ஆவேசத்துடன் தங்களது குழந்தைகளைப் பறிக்க முற்பட்டபோது, துப்பாக்கிப் பிடிகளால் தரையில் சரிக்கப்பட்டார்கள். சிலர் ஓடிச்சென்று எரிதணலை எடுத்து வீசி, ஆக்கிரமிப்பாளர்களைத் தாக்கினார்கள்.

குழந்தையை இறுகப் பற்றியபடி தரையோடு மடிந்திருந்த பாபரை இழுத்துக்கொண்டு காட்டுக்குள் பாய்ந்த லோகன், இருள் காட்டிய திசையில் பறந்தான். பல மாதங்களாகக் காடுகளில் பதுங்கி அலைந்து நெடும்பயணத்தைத் தின்று செமித்தனர். நியூ சவுத் வேல்ஸ் மாநில கிஞ்சலா நதிப்பக்கமாக வந்துசேர்ந்தபோது, மூவரும் உருமாறிப் போயிருந்தனர். லோகன் குடும்பத்திற்கு சுஸானா என்ற வெள்ளைப் பெண்ணொருத்தி தஞ்சமளித்தாள்.

3

சுஸானா இங்கிலாந்திலிருந்து பொலீஸ் உத்தியோகத்திற்காகக் கணவரோடு ஆஸ்திரேலியா வந்தவள். வேட்டையில் மிகுந்த ஆர்வமுடைய சுஸானா, கங்காருகளைத் தேடிக் காட்டுக்குள் சென்றபோது, அவளது கணவர் சர்ப்பம் தீண்டி இறந்துபோனான். சுஸானா கிஞ்சலா பகுதியில் தனியாக வசித்தாள். தன் வீட்டுப்பக்கமாக ஒதுங்கிய லோகன் குடும்பத்தினை சுஸானா பிரியத்துடன் அணைத்தாள். லோகன் – பாபரா தம்பதிகளின் மகனுக்கு சுஸானா தானே பெயரைச் சூட்டினாள்.

பாபராவின் முதுகில் குழந்தையை இறுக்கமான துணியில் கட்டியபடி, பகல் நேரத்தில் மூவரும் காட்டுக்குள் நெடும்பயணம் போய் வந்தார்கள். லோகனும் பாபராவும் காண்பித்த ஆழ்வனத்தின் அதரங்கள் சுஸானாவுக்குள் பல உலகங்களாய் விரிந்தது. மனிதர்களைவிட மரங்களை அதிகம் தெரிந்திருந்த லோகனின் கால் தடங்களைப் பற்றியபடி வேட்டைத் துப்பாக்கியோடு அலைந்தாள் சுஸானா. குட்டிப்பையன் முதல் தடவையாகக் காட்டுக்குள்தான் நடை பயின்றான். பாபரா அவன் விரல்களைப் பற்றியபடி –

“ஒரு நத்தை இரண்டு நத்தை

இரண்டும் ஒன்றையொன்று பார்த்தன.

ஒரு நத்தை இரண்டு நத்தை

இரண்டும் நடை போயின

ஒரு நத்தை இரண்டு நத்தை

இரண்டும் கொஞ்சம் பேசின

ஒரு நத்தை இரண்டு நத்தை 

எங்கள் வீடு ஒன்றே என்றன.”

குழந்தைக் குரலில் பாடுவாள். சிறு கணங்களையும் மகிழ்வோடு கொண்டாடும் அவர்களைப் பார்த்து சுஸானா பரவசமடைந்தாள். இருண்ட வனத்தின் ஆழத்தில எதிர்ப்படும் குளிர்ச்சுனைகளில் நீராடினாள். இயற்கையோடு குழந்தையை வளர்ப்பதில் சுஸானாவும் அதிகப் பிரியம் கொண்டாள்.

கிஞ்சலாக் காடுகளுக்குள் திரிந்த புதியவர்களின் சத்தம், காடுகளைத் தாண்டிப் பல காதுகளை எட்டியது. பூர்வகுடிப் பெற்றோர்களிடம் குழந்தைகளைப் பறிக்கின்ற துப்பாக்கிகள் கிஞ்சலா பகுதியை வந்தடைந்தன. விடிகாலைப் பொழுதொன்றில் வேட்டைக்குப் போவதற்கு முன் சுஸானாவின் வீடு ராணுவ வாகனங்களால் சூழப்பட்டது.

பேரச்சத்தின் கருகிய வாசனை வீட்டுக்குள் எட்டியது. லோகனும் பாபராவும் மகனைத் தூக்கிக்கொண்டு பின் வளவினால் பாய்ந்தார்கள். மூன்று நான்கு வேட்டொலிகள் அதிகாலையை உலுப்பியது. லோகனும் பாபராவும் முறிந்து விழுந்தார்கள். மகன் எழுந்து நின்று வானத்தைப் பார்த்தான். பின்னர், தரையில் விழுந்துகிடந்த தாயைப் பார்த்தான். அவன் பார்த்த முதல் குருதி.

பின் கதவைத் திறந்து ஓடிவந்த சுஸானா சடலங்களுக்கு நடுவில் விழுந்து குழறினாள். இருளின் பாதைகளையெல்லாம் மின்னலாக ஓடிக்கடந்த லோகன், வெளிச்சத்தின் பொறியில் சிக்கிச் சாய்ந்து கிடந்ததைக் கண்டு கதறியழுதாள். திறந்திருந்த அவன் கண்கள் பாபராவைப் பார்த்தபடியிருந்தன. சப்பாத்தொலிகள் சூழ்ந்தன. ஒருவன் எஞ்சியிருந்த சிறுவனைத் தூக்கினான். அவனோ பிடியிலிருந்து திமிறி அலறினான். சினத்தோடு எழுந்த சுஸானா துப்பாக்கியோடு நின்றுகொண்டிருந்தவர்களின் நெஞ்சில் ஒங்கி அறைந்தாள்.

“நானும் ஒரு வெள்ளைக்காரிதானே, என்னிடம் அந்தச் சிறுவனை  தாருங்களேன்.”

“இவர்களுக்கு நாங்களே பயிற்சி கொடுக்கவேண்டியுள்ளது சுஸானா. உன் கணவரைப்போல நாங்களும் அரசு உத்தரவுகளைத்தான் நிறைவேற்றுகிறோம். குறுக்கே வராமல், தள்ளு.” அதிகாரி ஒருவன் சொன்னான்.

சீருடைக்காரர்களின் கால்களைக் கட்டியபடி சுஸானா கதறிக்கொண்டிருக்க, அந்தச் சிறுவனை ஜீப்பின் முன்னால் ஏற்றினார்கள். வாகனம் விரைந்தது.

சுஸானா காடதிர அவனதுப் பெயரைச் சொல்லி அழைத்தாள் – 

“ஜூடோ…”

4

பல நூற்றுக்கணக்கான தொல்குடிச் சிறுவர்களை அடைத்து வைத்திருந்த தொழுவமொன்றில் ஜூடோ சேர்க்கப்பட்டான். தடிகளால் அமைக்கப்பட்ட தனிக்கூடுகளில் அவர்கள் வெளியே பார்த்தபடி ஏக்கத்தோடு நின்றார்கள். எல்லோர் கன்னங்களும் கண்ணீரால் நொதித்திருந்தன. தொழுவத்திற்குள் வந்த வாகனங்கள், சிறுவர்களைத் தரம் பிரித்து ஏற்றிச்சென்றன. நீண்ட துப்பாக்கிகளும் வட்டத்தொப்பிகளும் அணிந்த பொலீஸார் பாதுகாப்பிற்காக நின்றுகொண்டிருந்தார்கள்.

தடிக்கூடுகளுக்கு வெளியே கூட்டிச்செல்லப்பட்ட உயரமான சிறுவர்களை வைத்து, அந்த வளவுக்குள்ளேயே பொலீஸார் ஒரு விளையாட்டை நடத்தினார்கள். ஒரு சிறுவனைத் தொழுவத்தின் வெளி மைதானத்தில் நிறுத்திவைத்து, பத்து சிறுவர்களை வரிசையில் சென்று அவனது முகத்தில் ஒருதடவை குத்தச் சொன்னார்கள். பத்து குத்துகளையும் சளைக்காமல் வாங்கிக்கொண்டு வலி பொறுத்த சிறுவர்கள், பாறை பிளக்கும் வேலைக்கு அனுப்பப்பட்டார்கள்.

தொழுவத்தின் பாதுகாப்பிலிருந்த தடித்த தொப்பை விழுந்த மரியோ என்ற பொலீஸ்காரன், அன்று இருள் கவிழ்ந்ததும் ஜூடோவைத் தனது ஜீப்பில் கூட்டிச்சென்றான். இரண்டு மரங்களுக்கு மத்தியில் உயரமாக அமைக்கப்பட்டிருந்த தனது தனி வீட்டிற்கு ஏணி வழியாக ஜூடோவை ஏற்றிப்போனான். ஜூடோவைப் பிரம்புக் கதிரையொன்றில் இருக்க உத்தரவிட்டான். தொழுவத்திலிருந்து மீண்டுவந்த திருப்தி ஜூடோவுக்குக் கண்களில் தெரிந்தது. தனது அறைக்குள் சென்று எடுத்துவந்த சிவப்புநிறக் குளிர்பானத்தை மரியோ, குடுவையொன்றில் ஊற்றி ஜூடோவுக்குக் கொடுத்தான். இதுவரை சுவைத்திராத இனிமையும் குளிர்மையும் சேர்ந்த அப்பானம் ஜூடோவின் தொண்டையின் வழியாகச் சிலிர்த்தபடி இறங்கியது. ஜூடோவின் கண்களில் தெரிந்த திருப்தியை மரியோ ரசித்தான். அவனது கண்களைப் பார்த்து புன்னகை செய்தான். ஜூடோவின் குளிர்ந்த உதடுகளை வருடினான். பின்னர், ஜூடோவின் முன்னால் மரியோ நிர்வாணமாய் எழுந்து நின்றான்.

அந்த வீட்டிற்குள்ளும் தொழுவத்தைப் போன்ற தடிகளாலான கூடிருந்தது. அது இலைகுழைகளால் மூடிக்கட்டப்பட்ட இருள் கரப்பு. பகலில் வெளியே போகும் மரியோ, ஜூடோவை அந்தக் கூட்டுக்குள் தள்ளிப் பூட்டிவிட்டான். மாலை வேளைகளில் வந்து ஜூடோவுக்குக் குளிர்பானத்தைக் கொடுத்தான். அவன் முன்னால் எழுந்து நின்றான். ஜூடோவின் குறியைத் திருகி, அவன் கதறியபடி கெஞ்சுகின்ற கண்களைப் பார்த்து ரசித்தான் மரியோ.

ஒருநாள் காலை மரியோ எழுந்திருக்கவில்லை. இருண்ட கூட்டுக்குள் அங்குமிங்கும் தனது உடலைப் புரட்டி ஒலியெழுப்பிய ஜூடோவுக்கு எதுவும் புரியவில்லை. இரண்டு நாட்களுக்குப் பிறகு வெளியே வாகனச் சத்தங்கள் கேட்டன. படுக்கையில் பிரேதமான மரியோவின் உடலைப் பொலீஸார் எடுத்துப்போனார்கள். கூட்டுக்குள்ளிருந்து சத்தமிட்ட ஜூடோவை அச்சத்தோடு திறந்து பார்த்த பொலீஸார் அதிர்ச்சியானார்கள். துப்பாக்கிப் பிடியால் அடித்து வெளியில் இழுத்துப் போட்டார்கள். அவனை விலங்கிட்டுத் தங்களது ஜீப்பில் தூக்கி ஏற்றினார்கள்.

மரியோவைப் புதைக்கும்போது அதனை ஜூடோ நேரில் கண்டான். அந்தப் பிரேதக்காட்டில் பணிபுரிபவனிடம் ஜூடோவை விட்டுச்சென்ற பொலீஸார், பிறகு வந்து வேறிடத்துக்கு மாற்றுவதாகச் சொன்னார்கள். ஜூடோ அங்கு எட்டு வயதுவரை பிரேதங்களைப் புதைக்கும் தொழிலைச் செய்தான். காட்டின் வேலியைத் தாண்டுவதற்கு அவன் எக்கணமும் எண்ணியதில்லை. பிரேதங்களோடு வருகின்ற பொலீஸார் கொடுக்கின்ற பழங்களையும் கிழங்குகளையும் தனது ஓலைக்கொட்டிலில் உள்ள பெட்டியில் போட்டுவைத்துத் தின்றான்.

ஒருநாள் தனது கணவரின் பிரேதத்தைப் புதைப்பதற்காக உயர் பொலீஸ் அதிகாரி ஒருவரின் மனைவி பிரேதக்காட்டுக்கு வந்தாள். அவளைப் பார்த்த ஜூடோ மிரண்டான். நீண்ட ஆடையோடு வந்த வெள்ளைத்தோலுடைய அந்தப் பெண்மணி கையுறைகள் அணிந்திருந்தாள். இதுவரை பார்த்திராத அந்த உருவம் ஜூடோவைத் தொந்தரவு செய்தது. பிரேதக்குழிக்கு அருகில் நின்று ஜூடோ அவளையே பார்த்தான். அவள் விம்மிய சத்தம், ஜூடோ இதுவரை கேட்டிராத புதிய ஒலியாக அவன் காதுகளில் ஒழுகி நுழைந்தது.

அந்தப் பெண், தன்னை உற்றுப்பார்த்துக்கொண்டிருந்த சிறுவன் யாரென்று பொலீஸாரிடம் கேட்டாள்.

பிறகு, தன் கணவரின் நினைவாக ஜூடோவைத் தன்னோடு அமெரிக்காவுக்குக் கொண்டுவந்தாள். 

5

தனது இரண்டு குழந்தைகளோடும் ஜூடோவைப் பாடசாலைக்கு அனுப்பினாள் ஒலிவியா. ஜூடோவின் மனம் நிச்சயம் மாறும் என்று நம்பினாள். அவனது கடந்தகாலங்களில் கணிசமானவற்றை மறக்கச் செய்தாள். ஜூடோ ஒழுங்காகத் தூங்கி எழுந்தான். மாத்திரைகளின் வழியாகப் பழைய நினைவுகளின் வேர்கள் அறுக்கப்பட்ட ஜூடோ, பாடசாலை சென்று வந்தான். ஒலிவியாவின் அன்பும் அரவணைப்பும் அவனைப் பரிதாபத்தின் வழியாகவே தீண்டிக்கொண்டிருந்ததால் வருடங்கள் போகப் போக அந்த அன்பு அவனை மேலும் சிதைத்தது. அவனது தலைதாழ்ந்த பாடசாலை வாழ்க்கையைப் போதைப்பொருட்கள் மீட்டன. அவனுக்குள் கேட்ட கூச்சல்களுக்கு அது விடையளித்தது. நிமிர்ந்து நடந்தான். வீடு அவனுக்கு அந்நியமானது.

அச்சத்தில் ஒலிவியா தனது இரண்டு பிள்ளைகளோடு வேறொரு நகரில் சென்று குடியேறினாள்.

போதைச் சரைகளுக்குப் பணமில்லாத ஜூடோ, திசைக்கொரு திருட்டுக்களில் ஈடுபடுவது பொலீஸாருக்குத் தெரியவந்தது. தேடுவதற்குச் சிறப்புப் படையமைக்குமளவுக்கு ஜூடோ நியூயோர்க் வீதிகளில் பிரபல குற்றவாளியாக மிளிர்ந்தான்.

சுற்றி வளைக்கும்போதெல்லாம், பொலீஸிடமிருந்து தப்பியோடுவதில் ஜூடோ மிகத் தேர்ந்தவனாக, நகரின் எல்லாப் பாதைகளையும் கால்நுனியில் அணிந்திருந்தான். திடமேறிய ஜூடோவுக்குப் புறநகரிலுள்ள “ஸ்னெய்ல்ஸ்” களியாட்ட விடுதி பல தேவைகளுக்கு இரவில் நிழல் கொடுத்தது. வயதான பெண்கள் அதிகம் வருகின்ற அந்த விடுதி, வார இறுதிகளில் போதையில் தள்ளாடும். அங்கு வந்த பெண்களுக்கு ஜூடோவின் சரீரம் இளமையை மீட்டுக்கொடுத்தது. அங்கு ஜூடோவின் நடமாட்டத்தை அறிந்த பொலீஸார் ஒருநாள் அவனைக் காரொன்றுக்குள் நிர்வாணமாக வைத்து மடக்கினார்கள். விலங்கிட்டுக் கொண்டுசென்றபோது, ஜூடோ பொலீஸ் துப்பாக்கியைப் பறித்து ஒருவனைச் சுட்டுவிட்டு இருட்டுக்குள் பாய்ந்து மறைந்தான்.

பொலீஸ் கொலையாளி ஜூடோவின் படங்கள் நியூயோர்க் நகரெங்கும் விநியோகிக்கப்பட்டன. கண்டவுடன் தகவல் தரும்படி பொதுமக்களிடம் உதவி கோரப்பட்டது. ஜூடோவின் பின்னணியைப் படிக்கத் தொடங்கிய அமெரிக்கப் பொலீஸ், ஒலிவியாவிடம் சென்று விசாரணை செய்தது. ஆஸ்திரேலிய பொலீஸாருக்கும் தகவல் அனுப்பியது.

ஒரு விடிகாலை வேளை “ஸ்னெய்ல்ஸ்” விடுதிப்பக்கமாக உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் சிகரெட்டு வாங்குவதற்கு, தலையில் குல்லா அணிந்தபடி வந்த ஜூடோவைக் காலில் சுட்டுப்பிடித்தார்கள் பொலீஸார். கொலைக்குற்றசாட்டுடன் சிறையில் அடைக்கப்பட்டான். 

பதினைந்து வருடங்களாக அரிசோனா நீதிமன்றில் நடைபெற்ற ஜூடோ மீதான வழக்கில், இறுதியில் அவனைக் குற்றவாளி என்று அறிவித்த நீதிபதி, மரணத் தண்டனை வழங்கித் தீர்ப்பெழுதினார்.

6

கிறிஸ்துமஸ் இரவுணவின்போது ரொக்ஸியிடம் தனது கதையைக் கூறிய நான்காவது நாள், ஜூடோவுக்குரிய மரணத் தண்டனை உறுதியானது. கைதிகள் அனைவரும் அவரவர் அறைகளில் பூட்டப்பட்டிருந்த நள்ளிரவு நேரம், ஐந்தாறு அதிகாரிகள் ஜூடோவின் அறைக்கதவைத் தட்டி எழுப்பினார்கள். சாவு தன்னை நெருங்கிவிட்டதை உணர்ந்துகொண்ட ஜூடோ திருப்தியோடு எழுந்து கதவைத் திறந்தான். அதிகாரிகள் அவனது கை கால்களுக்கு விலங்கிட்டு அழைத்துப்போனார்கள். தரையில் விலங்கு ஊர்கின்ற ஒலி கேட்ட கைதிகள், இருளின் சத்தத்தை கிழித்துக்கொண்டு கத்தினார்கள். அறைக்கதவில் ஓங்கி உதைத்தார்கள். தங்களில் ஒருவனைச் சாவின் மேடைக்கு இழுத்துச் செல்பவர்களை நோக்கிக் கொதிச் சொற்களை உமிழ்ந்தார்கள்.

கண்ணாடி அறையொன்றிற்குள் அழைத்துச் செல்லப்பட்ட ஜூடோவை மருத்துவர் ஒருவர் பரிசோதனை செய்தார். அவனைச்சுற்றி நின்றுகொண்டிருந்த அத்தனை அதிகாரிகளுக்கும் அச்சத்தில் விழிகள் சரிந்திருந்தன. சாவை ஏற்றுக்கொள்பவனின் கண்களை உலகில் எவரால்தான் எதிர்கொள்ள முடிந்தது! அந்தக் கணம் ஜூடோவின் அருகில் நின்றுகொண்டிருந்த அத்தனை அதிகாரிகளும் அவனது கைதிகள்போல உணர்ந்தனர்.

விருப்பமான கடைசி உணவை சிறைச்சாலை அதிகாரிகள் கேட்டார்கள். சிவப்புநிறக் குளிர்பானம் மாத்திரம் ஒரு குவளையில் தந்தால் போதும் என்றான் ஜூடோ. 

திடீரெனத் தூக்கத்திலிருந்து எழுந்த ரொக்ஸி தடித்த சிறைக்கண்ணாடிகளுக்கு வெளியே செந்நிறப் புதிய ஒளிக்கோளமொன்றைச் சில கணங்கள் கண்டான். அது வீசிய கசங்கிய ஒளி, விட்டுவிட்டுத் தன் அறைக்குள்ளே வெளிச்சம் சிந்திவிட்டு அணைவதை உணர்ந்தான்.

இறுக்கிக் கட்டப்பட்ட படுக்கையில் ஜூடோவுக்கு நச்சு ஊசி செலுத்தப்பட்டது. செவிகளை வருடிய ஆதிக்குரலொன்று தாலாட்டாய் தொடர்ந்து.

“ஒரு நத்தை இரண்டு நத்தை

இரண்டும் ஒன்றையொன்று பார்த்தன.

ஒரு நத்தை இரண்டு நத்தை

இரண்டும் நடை போயின

ஒரு நத்தை இரண்டு நத்தை

இரண்டும் கொஞ்சம் பேசின

ஒரு நத்தை இரண்டு நத்தை 

எங்கள் வீடு ஒன்றே என்றன.”

ஜூடோவின் விழிகள் சிவந்து தழும்பியது. வலபிப் புற்களுக்கு நடுவிலிருந்து ஜூடோவை அவனது அன்னை அணைத்தெடுத்தாள். வானமில்லாப் பெருவெளியில் எறிந்து பிடித்தாள். ஜூடோ சிரித்தபடி அவள் கைகளில் விழுந்தான். அவனது தடித்த கன்னமெங்கும் மெல்லக் கடித்து முத்தம் வைத்தாள். ஜூடோ மெய்கூசிப் பெரிதாகச் சிரித்தான். பாபரா தன் கைகளெங்கும் குருதிகொட்ட ஜூடோவை மீண்டும் தன் கருவறையில் புதைத்தாள். எங்கும் இருள். கரிய மலர்க் கிடங்குகளில் ஜூடோ எடையற்றுப் புரண்டான். நிர்மலமான புதிய காற்று. தனக்கு மேல் இன்னொரு இதயம் துடிக்க ஜூடோ துயிலடைந்தான்.

இன்னொரு  தொல்குடியை அவர்கள் கொன்றார்கள்.
 

https://tamizhini.in/2024/01/17/ஜூடோ/

இரண்டாம் பயணம்

2 months 1 week ago

நான் இறுதியாக ஊருக்குச் சென்றது 2018 இல். எனது சித்தியைப் பார்ப்பதற்காக அன்று சென்றிருந்தேன், கூடவே குடும்பமும். சித்தியைப் பற்றி முதல் ஒரு பதிவில் கூறியிருக்கிறேன். 1988 இல் எனது தகப்பனாரின் கொடுங்கரங்களிலிருந்து என்னை மீட்டு மட்டக்களப்பிற்கு அழைத்துச் சென்றவர். தன்னால் முடிந்தவரையில் எனக்கு உணவும், உறையுளும், கல்வியும் தந்தவர். அன்னைக்கு அடுத்த தானத்தில் இருப்பவர். என்மேல் உண்மையான அக்கறை கொண்டவர். ஆகவே, அவரது உடல்நிலை ஓரளவிற்கேனும் நல்லநிலையில் இருக்கும்போது பார்த்துவிட்டு வரலாம் என்கிற எண்ணத்தில், அதுவரை எனது 16 ஆண்டுகள் அஞ்ஞாதவாசத்தைக் கலைந்து சென்று வந்தேன். 

அந்தப் பயணம் பற்றி அதிகம் கூற எதுவும் என்னிடத்தில் இல்லை. சித்தியை ஊர்காவற்றுறையில் இருந்து அவர் இருந்த யாழ்ப்பாணம் கன்னியாஸ்த்திரிகள் மடத்தில் இருமுறை சென்று சந்தித்தோம். ஒரு சில நினைவுகளைத் தவிர பல நினைவுகளை அவர் தொலைத்திருந்தார்.  ஆனால், உடல் ஓரளவிற்குத் தாக்குப் பிடித்துக்கொண்டிருந்தது. அதிகம் பேசவில்லை. என்னையும் குடும்பத்தையும் நீண்டநேரம் பேச்சின்றிப் பார்த்துக்கொண்டிருந்தார். அவரைச் சென்று சந்தித்ததைத் தவிர அப்பயணத்தில் குறிப்பிடும்படியாக பல விடயங்கள் இருக்கவில்லை. எனது அன்னையின் இன்னும் மூன்று தங்கைகளை யாழ்ப்பாணத்தின் கரவெட்டி மற்றும் கொழும்பின் கம்பஹ ஆகியவிடங்களில் சென்று பார்த்தேன். எவருமே அதிகம் பேசவில்லை. சிலவேளை எனது குடும்பத்தை முதன்முதலில் பார்ப்பதால் வந்த சங்கோஷமாக இருக்கலாம். 
அவர்களை விடவும் நான் சந்தித்த வெகு சிலரில் எனது நண்பன் ஜெயரட்ணமும் அவனது சகோதரர் ராசா அண்ணையும் குறிப்பிடத் தக்கவர்கள். அவர்கள் பற்றியும் முன்னர் எழுதிவிட்டேன். 

அங்கிருந்த இரு வாரங்களில் மன்னாருக்கு ஒருநாள் சென்றுவந்தோம். இன்னொருநாள் காங்கேசந்துறைக்கும் கரவெட்டிக்கும் பயணம் இருந்தது. இடையில் நுவரெலியாவுக்குப் போனோம். குளிர், இதனைத்தவிர வேறு எதுவும் மனதில்ப் பதியவில்லை. நான் விரும்பிய இடங்களையும், மனிதர்கள் அனைவரையும் சந்திக்கும் சுதந்திரம் எனக்கு இருக்கவில்லை. பிள்ளைகளை விட்டு வெளியே செல்ல முடியாது, அவர்களும் வெளியே வரப்போவதில்லை. சித்திரை வெய்யில் காய்த்தெடுக்க வீட்டிலேயே இருந்துவிட்டார்கள். மேற்குநாட்டு வளர்ப்பு என்று கூறுவீர்கள், இருக்கலாம். என்னைப்போன்று இங்கிருந்து செல்லும் அனைத்துப் பெற்றொரும் முகம்கொடுக்கும் கேள்விகள் இவை, அதில் தவறுமில்லை. 

உடற்றும் பிணி – அருணா சிற்றரசு  சிறுகதை

2 months 3 weeks ago

உடற்றும் பிணி – அருணா சிற்றரசு  சிறுகதை

| வாசகசாலை வாசகசாலைJanuary 5, 20240 1,060 7 நிமிடம் படிக்க Facebook X Share via Email Print “

 

உங்களுக்கு இவன் மட்டும்தானா? இல்ல..! வேற குழந்தைகள் இருக்கா?” 

இந்தக் கேள்விக்குள் காத்திருக்கும் மாபெரும் இன்னலைக் கூடுமானவரைக் கணித்து விட்டாள் ரோகினி. மகனைப் பரிசோதித்துவிட்டு வந்த மருத்துவர் இந்தக் கேள்வியைச் சாதாரணமாகக் கூட கேட்டிருக்கலாம். ஆனால், அவள் அதை அப்படிக் கடக்கவில்லை. “வேறொரு பிள்ளை இருக்கிறதா?! மனதைத் தேற்றிக்கொள். உன் மகனுக்கு நாள்பட்ட நோய் ஒன்று உறுதியாகிவிட்டது” என்பதைச் சொல்வதற்கான முன்னோட்டமாகத்தான் அவர் அப்படிக் கேட்டிருப்பார் என்ற உறுதிக்கு மிக அருகில் இருந்தாள்.

 

“இந்த மருந்துகளைக் கொடுங்கள். ஆறு வாரம் கழித்துதான் நோயை உறுதி செய்ய முடியும்” எனச் சொல்லி அனுப்பி விட்டார் மருத்துவர். பத்து வயது மகனை இடுப்பில் தூக்கிக் கொண்டு இதயம் கனக்க படிக்கட்டுகள் வழி இறங்கினாள். மின் தூக்கி பற்றி சிந்திக்க அவளிடம் போதிய நிதானம் இல்லை.

மகனின் நோய் அறிகுறிகள் அத்தனையும் பொல்லாத நோய் ஒன்றிற்கான அம்சங்களை ஐந்தாறு பொருத்தங்களுடன் வைத்திருந்தது. துள்ளித் திரிந்த மகன் திடும் என நோயில் விழுந்ததில் தடுமாறித்தான் போயிருந்தாள் ரோகினி. துவண்டிருந்த மகன் அவளின் இடது பக்க கழுத்தில் முகம் வைத்து சிரமத்துடன் மூச்சு விட்டுக் கொண்டிருந்தான். அவனின் நீண்ட கால்கள் அவள் இடுப்பிலிருந்து முன்னும் பின்னுமாக ஆடிக்கொண்டிருந்தன.

இடுப்பில் வைக்கும் வயதைக் கடந்த குழந்தை அவன். நோய்க்குள் விழவில்லையென்றால் இந்நேரம் படிகளைத் தாவிக் கடந்திருப்பான். இரண்டு நாள்கள் முன்பு வரை இல்லாத அந்த நோய் இப்போது ஆட்சி அதிகாரம் கைப்பற்றிய கொடுங்கோலன் போல் விருப்பம் போல் அவர்களை ஆட்டுவிக்கத் துவங்கியது. காத்திருப்போர் அறையில் ஓர் இருக்கையில் மகனை உட்கார வைத்துவிட்டு, தான் பதிவு செய்திருந்த வண்டிக்காக காத்திருந்தாள் ரோகினி. அந்த அறை முழுவதும் நோய். படிக்கட்டுகள், வாயிலோரம், ஜன்னலோரம் என மூலை முடுக்கிலும் நோய்கள்.

ஒருவர் முகத்திலும் இளக்கமே இல்லை. கையில் வண்ண வண்ண கோப்புகளுடன் நோய்களைத் தாங்கியிருந்தனர். பெரியவர்களின் நோய்க்கு இல்லாத சிறப்பு வகை கூர்மையும் வலுவும் குழந்தைகள் நோய்க்கு உண்டு. அங்கே நிற்பவர்கள் அத்தனை பேரும் பிஞ்சுகளின் நோய்களைச் சுமந்து கொண்டு நின்றனர். பிறந்து ஐந்து நாள்களே ஆன குழந்தை ஒன்றின் மணிக்கட்டு நரம்புகளில் மருந்தேற்றத்திற்கான ஊசி, தைக்கப்பட்ட நிலையிலேயே இருந்தது. சீரழிந்த வாழ்வொன்றின் மிச்சமாக இருந்த நடுவயதுப் பெண் ஒருத்தி தன் மகளின் மூத்திரப்பையை அதற்கென வடிவமைத்த தோல்பை ஒன்றில் வைத்திருந்தாள். அவள் மகளின் கழுத்து ஒரு பக்கம் தொங்கியபடி நடுங்கிக் கொண்டே இருந்தது.

அந்த நடுக்கத்துடன் ஏதேதோ தன் அம்மாவிடம் அவள் பேசிக்கொண்டே இருந்தாள். ‘ஆம்.. இல்லை’ என்ற தொனியில் மகளுக்கு பதில் சொல்லிக் கொண்டே தங்கள் முறை வருகிறதா என டோக்கன் அழைக்கும் பெண்ணைப் பார்த்துக்கொண்டிருந்தாள் அந்த அம்மா. தன் பிள்ளையின் பரிசோதனை முடிவை வாங்கிய ஒரு தந்தை அப்படியே சரிந்து அமர்ந்தார். தலையில் கைகளை வைத்து முடிகளைப் பிய்த்துக் கொண்டு பின் மெல்ல முகத்திற்கு கைகளைச் சரித்தார். மொத்த முகத்தையும் தன் இரண்டு கைகளுக்குள் புதைத்தவர் பின் இரண்டு கண்களையும் தேய்த்துக் கொண்டார். அவருக்கு நேர் எதிரே ஐந்து வயது என சொல்லத்தக்க பெண் குழந்தை ஒன்று வெள்ளை நிறக் கவுனில் நீலப் பூக்கள் விரவ நின்று கொண்டிருந்தாள்.

அவளின் அம்மா யாருடனோ மிகத் தீவிரமாக கைபேசியில் பேசிக்கொண்டிருந்தாள். அந்த நீலப்பூ குழந்தை ரோகினியை வைத்த கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தது. ரோகினியும் அவள் பார்வையை அகற்றவில்லை. நீலப்பூவை ஊடுருவும் போதே ரோகினிக்கு அக்குழந்தையின் உருவம் வேறு ஒருவரின் சாயலைக் குழைத்துத் தந்தது.  ரோகினியுடன் ஏழாம் வகுப்பு படித்த இலக்கியாவின் தங்கையின் சாயல் அது. இலக்கியாவின் பெயர் நினைவில் இருக்கிறதே தவிர அவள் தங்கையின் பெயர் நினைவில் இல்லை. அந்த ஆண்டில் புது மாணவியாகச் சேர்ந்தவள் இலக்கியா. அவள் பள்ளிக்கு வந்த முதல் நாளில் இருந்தே தன் தங்கையையும் அழைத்து வருவாள்.

தூக்கித்தான் வருவாள் என்று சொன்னால் இன்னும் பொருந்தும். பிறந்து சில நாள்களே ஆன குரங்குக் குட்டி போலவே அவள் தங்கை இருப்பாள். பார்த்தாலே சொல்லிவிடலாம் தக்கை கூட அவளை விட கூடுதல் எடையாக இருக்கும் என. வட்டமான முகத்தில் கன்னங்கள் மட்டும் உப்பலாக இருக்கும். கண்களில் உயிரே இல்லாமல் இதோ இப்போது சாகப்போகிறேன் என்ற அறிவிப்பை ஒவ்வொரு நாளும் தெரிவித்துக் கொண்டிருக்கும். இலக்கியா சரியாகப் படிப்பதில்லை என ஆசிரியர்கள் திட்டிக் கொண்டிருந்தாலும் சிறுநீர் கழித்து விட்ட தன் தங்கையின் உடைகளைச் சரிசெய்து கொண்டிருப்பாள்.

விளையாட வந்தாலும் இடுப்பில் தங்கை, அங்காடிக்கு வந்தாலும் இடுப்பில் தங்கை, ஆற்றுக்கு வந்தாலும் இடுப்பில் தங்கை என தங்கையை அவள் உடலின் ஒரு பாகமாகவே வைத்திருந்தாள். இலக்கியாவின் தங்கையைத் தானும் தூக்கிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை ரோகினிக்கு. கோவிலுக்குத் தூக்கி வந்திருந்த ஒரு வெள்ளிக் கிழமையில் இலக்கியாவிடம் கெஞ்சிக்கொண்டிருந்தாள் ரோகினி. ஒரு கட்டத்தில் “ஒரு முறைதான் தருவேன், இனி கேட்கக்கூடாது” என்ற நிபந்தனையுடன் தங்கையைக் கைமாற்றினாள் இலக்கியா. தன் இடுப்பில் வாங்கியபோதுதான் ரோகினி உணர்ந்தாள்.

அவள் நினைத்திருந்த வகையான எடை அல்ல அது. நன்கு கனத்தாள் தங்கை. அவள் மீது அழுகிக்கொண்டிருக்கும் தோலின் வீச்சம் இருந்தது. அவளின் உதடுகள் ஈரமற்று வெடிப்புகளுக்குள் புதைந்திருந்தன. எங்கேயாவது அமர வைத்தால் அப்படியே அமர்ந்து கொண்டிருப்பாள் தங்கை. கால்கள் மட்டும்தான் வேலை செய்யாது. மார்பு கூடாக முன்னோக்கி நீண்டு ஒரு கைப்பிடி அளவில் இருக்கும். கழுத்திற்கு கீழ் எலும்புகளின் இருப்பு அப்பட்டமாய்த் தெரியும். வயிறு உருண்டையாக உருட்டிக்கொண்டு சுரக்குடுக்கை போல் வடிவாய் இருக்கும். கைகள் அளவு குறைந்து உடலில் பெயருக்குக் குத்திவைத்தது போல் இருக்கும்.

குரல் ஏதோ ஒரு சிறு பிராணியின் குரல் போல் இருக்கும். அன்றுதான் ரோகினிக்கு அந்தத் தங்கை பேசுவாள் என்றே தெரியும். அதை விட அதிசயம் அவள் பாடியதைக் கேட்டது. பாஞ்சாலங்குறிச்சி படத்தின், “ஒன் ஒதட்டோர செவப்பே” பாடலை முழுவதுமாக பாடி முடித்தாள் அந்தக் குட்டிக்குரங்கு. வீட்டிற்கு செல்வதற்குள் இலக்கியாவைக் கரைத்து அவள் தங்கைக்கு இருக்கும் நோய் பற்றித் தெரிந்து கொண்டாள் ரோகினி. அவளுக்கு இதயத்தில் ஓட்டை, வெகு சீக்கிரமே மரணித்து விடுவாள் இது மட்டுமே ரோகினிக்கு விளங்கியது.  அடுத்த நாள் முதல் இலக்கியாவின் வருகையில் அதிக ஆர்வம் காட்ட ஆரம்பித்தாள் ரோகினி. இடுப்பில் தங்கையுடன் வந்தால் அவள் இன்னும் சாகவில்லை.

தங்கை இல்லாமல் வந்தால் அவள் செத்துவிடாள். இந்தக் கணக்கில் ஒவ்வொரு நாளையும் அனுப்பிக் கொண்டிருந்தாள் ரோகினி. ஒரு நாள் பள்ளியில் உணவு இடைவேளையில் குட்டிக்குரங்கு சாப்பிடாமல் மேசையில் முகம் சாய்த்துப் படுத்துக் கிடந்தது. தூரத்தில் இருந்து அதைக் கவனித்துக் கொண்டிருந்த ரோகினியை அதுவும் தலைசாய்த்த வண்ணமே பார்த்துக்கொண்டிருந்தது. ரோகினிக்கு மெல்ல அதன் கண்களில் இருந்த கருவிழி ஒளி மங்குவதைப் போல் தோன்றியது. ஒரு கட்டத்தில் கருவிழி மொத்தமும் மறைந்து வெள்ளைத் திரையாகப் பரவியிருந்தது.

கருவிழி எப்படியும் மேல்நோக்கித்தான் புதைந்திருக்கும் மீண்டும் கீழிறங்கும் எனக் காத்துக் கொண்டிருந்தாள் ரோகினி. ஆனால், கருவிழி புருவங்களைப் பிதுக்கி தலைக்கேறி குட்டிக்குரங்கின் ரிப்பன் வழியாகக் காற்றில் கலந்தது. இலக்கியாவிற்கு அதன் பிறகு சுமை தூக்கும் சுமை இல்லவே இல்லை. இலக்கியாவிற்கு இடது பக்க இடுப்பு மட்டும் கூடுதல் குழிவாகவே வளர்ந்தது. அந்தச் சிறிய மரணம் கொடுத்த விடுதலை மிகப்பெரியது. தங்கை இல்லாமல் எப்பொழுதும் சோகம் அப்பிக் கிடந்தாலும் இலக்கியாவின் முகத்தில் சுடர் ஒன்று பிரகாசித்தது. ஏழாம் வகுப்பின் இறுதித் தேர்வில் இருந்த சோகம் எட்டாம் வகுப்பின் முதல் நாளில் இலக்கியாவிடம் அவ்வளவாக இல்லை. எட்டாம் வகுப்பின் காலாண்டுத் தேர்வில் வடிந்த அவ்வப்போதைய சோகமும் அரையாண்டு முடிந்ததும் முற்றிலுமாக இல்லை.

தங்கையின் ஞாபகங்களை ஏற்படுத்திய பொருள்களும் வீட்டில் குறையத்துவங்கி மாலை போட்டிருந்த புகைப்படம் மட்டுமே தங்கை என்று மாறியது. வருடங்கள் ஓட ஓட வீடுகள் மாறியதில் தொலைந்த அந்தப்படத்துடன் தங்கையும் தொலைந்து விட்டாள். அந்தக் குட்டிக்குரங்கிடம்தான் முதன் முதலில் சாவின் சாயலைப் பார்த்திருந்தாள் ரோகினி. அதே சாயல் அந்த நீலப்பூவிடமும் இருந்தது. நீலப்பூவின் அம்மாவை நினைத்து வருந்தினாள் ரோகினி. சாவைக் கடக்கலாம்; நோயைக் கடக்க முடியாது என்று முடிவெடுத்தவாறே தன் மகனைப் பதற்றத்துடன் தழுவிக் கொண்டாள். ரோகினியின் காதல் கணவன் விபத்தில் மரணித்த போது அவள் மகனுக்கு வயது ஐந்து. “சீக்கிரம் வந்துவிடுகிறேன்” என போனில் சொல்லியவன் அடுத்த பத்து நிமிடங்களில் உயிருடன் இல்லை.

அழுது துடித்து, இரவுகளுக்கு அஞ்சி, துக்க விசாரிப்புகளில் காயப்பட்டு என முதல் இரண்டாண்டுகள் தன் உடலில் ஏதோ ஓர் திசுவில் மட்டும் உயிரை வைத்துக் கொண்டு அப்பனைக் கேட்டு அழும் மகனை மடைமாற்றிக் கொண்டிருந்தாள். சந்தன முல்லையும் கணவனின் சோப்பு மணமும் அவளைக் கண்டம் துண்டமாக வெட்டிப் போடும். நினைவுகளை அதி பாதாளத்திலிருந்தும் மீட்டுக் கொணர்பவை வாசனைகள். முல்லைப்பூவின் மணத்தில் அவனின் நுனி நாக்கின் ருசி அவளின் அடித்தொண்டைக்குள் இறங்கியிருக்கும். அவனின் சோப்பு வாடையில் அவன் பின்னங்கழுத்தை முகர்ந்திருப்பாள். அத்தனையையும் கண்கள் விரிந்த நிலையில் ஏதோ ஓர் இறந்த காலத்தில் தீவிரப்புணர்வுக்கான நிகழ்வொன்றின் மீதிமிச்ச நினைவுகளுடன் தனக்குள் நிகழ்த்திக் கொள்வாள்.

நிகழ்காலத்திற்குத் திரும்பும்போது விழியோரம் உப்பு பூத்திருக்கும். இப்போது அந்த இறந்த கணவனே மீண்டு வந்தாலும் ரோகினி ஏற்கப்போவதில்லை. அவனின் இல்லாமையால் அவள் ஏற்படுத்தி வைத்திருந்த அந்த துர்வாழ்வு அவளுக்கு இணக்கமாக மாறிவிட்டிருந்தது. அப்பன் பற்றிய நினைவே மகனிடம் இல்லாத வண்ணம் முழுவதுமாகத் துடைத்து எடுத்தாள். அப்பனின் உருவப்படம் கூட வீட்டில் இல்லை. காலம் அதற்கான சகல உடன்பாட்டையும் வார்த்திருந்தது. வாழ்வின் நிரந்தரமின்மையை ஓரளவிற்கு அனுபவங்கள் வழிக் கற்றிருந்தாலும் மகனின் நோய் அவளைக் கத்தி கொண்டு செதுக்கிக் கொண்டிருந்தது. வண்டி வந்துவிட்டதாக கைபேசி காட்டியது. மகனைத் தூக்கிக் கொண்டு வெளியேறினாள்.

இரவு ஒன்பது மணி. நல்ல கோடைக்காலம் என்பதால் அந்த இரவு கூடுதல் இதமாக இருந்தது. காரின் ஏசியை அணைத்து விட்டு சன்னலை விரியத் திறந்தாள். மகன் அவள் மடியில் உறங்கி விட்டான். மகனின் நோய் எங்கெல்லாம் சென்று முடிய வாய்ப்புள்ளது என கூகுள் வழித் தேடினாள். வழக்கம் போலவே கூகுள் கட்டற்று கால் பரப்பி எல்லாத் திசைகளிலும் கைகாட்டியது. அவளை மேலும் கலவரப்படுத்தியதே தவிர சிறிதும் ஆற்றுப்படுத்தவில்லை. போனை பைக்குள் போட்டுவிட்டு காருக்கு வெளியே முகம் நீட்டினாள். புறநகர்ப் பகுதியை அடைந்திருந்ததால் பெட்ரோல் டீசலற்ற காற்று அவள் வியர்வையை ஒற்றி எடுத்துக்கொண்டிருந்தது. வியர்வையைத் தின்னும் காற்று, தாகத்தைத் தணிக்கும் தண்ணீர், பசியைக் கொல்லும் உணவு இவையெல்லாமே துன்பம் வளர்த்து நிம்மதி கொடுப்பவை. வியர்வையின்றி உணரும் காற்று அவ்வளவாக சிலாகிக்கப்படுவதில்லை. தாகமற்ற தண்ணீர் பழக்கத்தில் சேருமே தவிர நரம்புகளை ஊடுருவாது. பசியற்ற உணவிற்கு உணவுப்பாதையே கிடையாது. நாள்பட்ட நோய்க்கு ஆட்பட்ட நபர்களைப் பற்றி சிந்திக்கத் துவங்கியது ரோகினியின் ஆன்மா.

அவளின் பெரியப்பா ஒருவரைப் புற்று நோயின் கைகளுக்குள் கொடுத்து விட்டு அதன் பிடி தளர்த்த பெரியம்மா பட்ட வேதனையை நினைத்துக் கொண்டாள். பெரியப்பா ஒரு சிறந்த பேச்சாளர். அவருக்கு வந்ததோ தொண்டையில் புற்று. கடைசி ஓராண்டு காலம் அவர் காகிதங்கள் வழிதான் பேசினார். அவரை முழுவதுமாக குணமாக்க முடியாது என்றும், சாவை ஓராண்டிற்கு வேண்டுமானால் தள்ளிப்போடலாம் என்றும் மருத்துவர்கள் சொல்லி விட்டனர். இலட்சங்களைக் கொட்டி அவரை நோய்ப்படுக்கையில் உயிர் மட்டும் கண்களில் இருக்க தன்னுடன் வைத்திருந்தாள் பெரியம்மா. அவரால் நோயின் கொடுமையைத் தாளவே முடியவில்லை. தன்னால், “இதற்கு மேல் சிகிச்சைகளைத் தாங்க முடியாது. நான் இறக்கத்தயாராக இருக்கிறேன்” என பெரியப்பா எழுதியே கொடுத்து விட்டார்.

ஆனாலும், பெரியம்மாவிற்கு அவரைப் பிரிய மனமில்லை. ஒரு நாள் பெரியம்மா குளித்துக் கொண்டிருந்தபோது தனது கை நரம்புகளை வெட்டிக்கொண்டு பெரியப்பா ரத்தமாகக் கிடந்தார். மருத்துவர்களை ஓடி அழைத்து பெரியம்மா கதறும்போது, “என்னை மன்னித்துவிடு” என்று சொல்லும் விதமாக கையெடுத்துக் கும்பிட்டு விட்டு பெரியப்பா இறந்து போனார். அப்படியாகப் பயணித்த நினைவுகள் ரோகினியின் தோழியின் தந்தையிடம் வந்தன. ஓராண்டு சிகிச்சை அளித்தால் இரண்டாண்டு உயிரோடு இருப்பார் என்ற சிகிச்சை நிலை. அப்பாவை எப்படியாவது காப்பாற்றி வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை தோழிக்கு. போதிய பணவசதி இல்லை. அதுவரை ஆகிய செலவிற்கே லட்சங்களில் சொந்த பந்தங்களிடம் கடனாகி இருந்தது அந்தக் குடும்பம். மேல் சிகிச்சைக்கு வீட்டை விற்றால் பணம் புரட்டலாம் .

வீட்டை விற்கச் சொல்லி தோழி அவள் அம்மாவிடம் போராடிக் கொண்டிருந்தாள். அம்மா அந்த எண்ணத்திற்கு உடன்படவில்லை. எந்தக் கெட்டப்பழக்கமும் இல்லாத தன் கணவனுக்கு அப்படியொரு கொள்ளை நோய் வந்ததில் முற்றிலும் இடிந்திருந்தார் அம்மா. ஆனாலும் ஒரு கட்டத்தில் ஒரு முடிவிற்கு வந்திருந்தார். நோய்ப்படுக்கையில் கிடந்த கணவனே மன்றாடிக் கேட்டும் அம்மா வீட்டை விற்க சம்மதிக்கவில்லை. அந்த வீடு ஒன்றுதான் அவர்களின் சொத்து அதை விற்று கணவனின் உயிரை மீட்க முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிந்து விட்டது. மரணத்தின் தள்ளி வைக்கப்பட்ட உறுதி பிள்ளைகளின் எதிர்காலம் நோக்கி அம்மாவைச் சிந்திக்க வைத்தது.

கணவனின் மரணத்திற்கு முற்றிலும் தன்னைத் தயார் படுத்தி வைத்திருந்தார் அந்த அம்மா. கடைசிக் காலத்தில் அந்த அம்மாவின் கைகளால் உணவு ஏதும் வாங்காமலேயே வீம்புடன் இறந்தார் அப்பா. கடன்களையெல்லாம் அடைத்து பிள்ளைகளை யார் தயவுமின்றி வளர்த்து ஆளாக்கினார் அம்மா.  இவர்களையெல்லாம் மனக்கண்ணில் ஓட்டி முடிக்கையில் தன் கட்டிலில் மகனுடன் படுத்திருந்தாள் ரோகினி. ஆறு வாரங்கள் இன்னும் பெயர் சூட்டப்படாத அந்த நோயுடன் வாழ வேண்டும். அது பழக்கப்பட்ட அறைதான் என்றாலும் அன்று முற்றிலும் புதிய சூழலை ஏற்றிருந்தது. ரோகினியின் உடல் மீது அளவான தகிப்பில் நெருப்பு ஒன்று கனன்று கொண்டே இருந்தது. மகனின் மார்பில் அடிக்கடி கை வைத்து அவனின் இருப்பை உறுதி செய்து கொண்டாள். நன்கு தூங்கிக் கொண்டிருந்த மகன் திடீரென எழுந்து அமர்ந்தான்.

பதறியெழுந்து அவன் முகம் வடித்தாள் ரோகினி. குபுக்கென்று வாந்தி எடுத்தான். அப்படியே கைகளில் ஏந்தி வாங்கினாள். அவனை மெல்ல இறக்கியவாறே வாந்திக் கைகளுடன் கழுவும் அறைக்குச் சென்றாள். கைகளில் சூடாக இருந்த அந்த வாந்தியில் மகனின் உயிரின் பாகங்கள் ஏதேனும் இருக்கக்கூடுமோ எனத் தயங்கிக்கொண்டே கைகளையும் அவனையும் கழுவினாள்.  எவ்வளவு கடினம் என்றாலும் ஆறு வாரங்கள் என்பது கரையப் போவதுதான் என்பதை மூன்றாம் நாளில் உறுதிப்படுத்திக் கொண்டாள். மகனின் துள்ளலற்ற வீடு சிறையாகத் தோன்ற ஆரம்பித்ததும் ஒரு வார முடிவில் சிறைக்குள் வாழ முடிவெடுத்து விட்டாள். நோய்ப்படுக்கை ஒன்றை இரண்டாம் வாரத்தில் நேர்த்தியாக ஏற்படுத்தி இருந்தாள். மகனைக் கட்டி அணைக்கும் போதெல்லாம் விம்மும் மார்பை கல்லாகிப்போக பழக்கிக் கொண்டிருந்தாள்.

மகனை நினைவாக்கிக் கொள்ளும் திட்டம் ஒன்றும் அவளிடம் ஏற்பட்டு இருந்தது. மகனும் தானும் சேர்ந்தே மரணித்து விடலாமா என்ற எண்ணமும் அவளிடம் இல்லாமல் இல்லை. மரணத்தின் தரிசனம் திட்டமிடலுக்கு ஆட்படுவதே இல்லை என்ற ஆன்ம அறிவால் அசட்டுத் தனங்களில் ஈடுபடவில்லை. திகிலுற்ற மனங்களின் வடிகாலான பேய்க்கனவுகளுக்கு பஞ்சமில்லாமல் போனது. நிற்கும் இடங்களிலெல்லாம் மரமாய் நிலைப்பது, அடுப்பங்கறை காரியங்களை கருக்கி வைப்பது, அலுவலகப் பணிகளில் தவறுகள் செயவது என பேதலித்த கணங்களிலும் எதையோ ஒன்றைப் பற்றிக் கொண்டாள். ஆறாம் வாரத்தின் முடிவில் மகனின் நோயை ஏற்பதற்கான சகல ஏற்பாடுகளுடன் மருத்துவரைச் சந்திக்க மகனுடன் சென்றாள். அவளை மட்டும் அறைக்குள் அழைத்தார் மருத்துவர்.

அவளின் இதயத்துடிப்பு நோயின் பெயரைக் கேட்பதற்காகவே விரைந்துக் கொண்டிருந்தது. அந்தப் பெயர்தான் இனி அவளின் துயரத்திற்கான பீடம். மருத்துவர் தீவிரமாக பரிசோதனை முடிவுகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவளின் முகத்தை அவர் பார்த்த போது தீர்க்கமான தெளிவொன்றை வைத்திருந்தாள். “நாம பயந்த அந்த நோய்தான்னு உறுதியாகிருக்கு. அதுக்கேத்த மருந்துகளை ஆரம்பிக்கிறேன்” என்று கூறிக்கொண்டே நீட்டியும் சுழித்தும் ஏதேதோ எழுதினார். தன்னை வருத்தி வருத்தி அவள் சேர்த்திருந்த வலு கண்கள் வழி குமிழ்களாக வடிந்தன. நல்ல பெரிய பெரிய கண்ணீர்த்துளிகள். தேக்கப்பட்டிருந்த அத்தனை ஆற்றாமையும் பெருகிப் பொழிந்தது. வெளியே அமர்ந்திருந்த மகனை கண்ணாடிக் கதவுகளின் வழி பார்த்தாள். அப்படியே அவன் அப்பாவின் சாயலில் தெரிந்தான்.  கண்ணீர் செய்த சித்து வேலையாக இருக்கலாம். கண்களைத் துடைத்துக் கொண்டு மீண்டும் பார்த்தாள். அதுநாள் வரை மகனிடம் இல்லாத சாயல்.

அப்பன் அப்படியே அப்பிக் கிடந்தான். வெளியே வந்து மகனைத் தன்வசம் இழுத்து அணைத்துக் கொண்டாள். மின் தூக்கியைப் பயன்படுத்த அதனுள் நுழைந்து பூஜ்யத்தை அழுத்தினாள். கதவு மூடியது. மூடிய கதவில் அவளும் மகனும் பிரதிபலித்தனர். மகன் முகத்தில் சவக்களையில் கணவன்.

அச்சம் அவள் நரம்புகளை விறைப்பாக்கியது. காலணிக்குள் கால்கள் குளிர்ந்து வழுக்கியது. மின் தூக்கி 3 என இறங்கிக் கொண்டிருந்தது. அவகாசம் இல்லாதவளாய் மகன் முகத்தில் இருந்த கணவனின் சாயலை அவன் தலைமுடியைக் கலைத்து அழித்துப் பார்த்தாள். அவனிடத்திலிருந்து அப்பன் போகவே இல்லை. மின் தூக்கி 2 என இறங்கியது. மகனின் கன்னங்களைப் பிசைந்து அவன் முகத்தை வேறொன்றாக வடித்துப் பார்த்தாள். அப்பன் போகவே இல்லை.

மின் தூக்கி 1 என இறங்கியது. ரோகினியின் சுடிதாரின் கழுத்து வரம்புகள் நனைந்து அடர் நிறமாக மாறியிருந்தது. மகனின் முகத்தை இரண்டு கைகளாலும் உள்வாங்கி அவன் கண்களை ஆழக் கடந்து அவனுள் சென்றவள், சட்டென தன் நெற்றிப்பொட்டை அவன் நெற்றியில் ஒட்டினாள்.

அப்படியே ரோகினியின் சாயல்.  மின் தூக்கி பூஜ்யத்தில் வந்து நின்றது. கதவு இரண்டாகப் பிளந்தது. பெரிய பாதை கிடந்தது. அம்மாவும் மகனும் வெளியேறினர். *******

Read more at: https://vasagasalai.com/udatrum-pini-sirukathai-aruna-chitrarasu-vasagasalai-86/?fbclid=IwAR0aw0uLIb3dInIz3C9Gv6JZ5nzigsOwz_OeNunKC03W3HoEPCNzm0fi56k

திருவேட்கை - ப.தெய்வீகன் 

2 months 3 weeks ago
திருவேட்கை

01

லண்டனிலுள்ள கப்பல் கட்டுமானத் துறையில் உயர் பதவி வகித்தவர் மோர்கன். அவருடைய ஒரே மகன் அல்பேர்ட் தன்னுடைய வீட்டுப் பணிப்பெண் கரோலினாவுடன் பள்ளி முடித்து திரும்பி வந்து கொண்டிருந்தான்.  வீதியோரச் சந்தை கடையொன்றில் சரிகை வைத்த சிறிய கைக்குட்டைகள் பல வண்ணத்தில் தொங்கின. நெரிசலான கடை தெருவில் கூடத் தொடங்கிய பலரும் பெறுமதியான கைக்குட்டைகளை ரசித்து வாங்கினார்கள். ஆசிர்வதிக்கப்பட்ட நூலால் நெய்யப்பட்டதைப் போன்று சிலர் உளம் கனிந்து ஆனந்தப் பெருக்கு அடைந்தனர். கரோலினாவின் கைகளைப் பிடித்தபடி, கைக்குட்டைகளையும் அங்கே கூடியிருந்தவர்களையும் வியந்து பார்த்துக் கொண்டிருந்தான் அல்பேர்ட்.

வீட்டில் தகப்பனும் தாயும் வைத்திருந்த கைக்குட்டைகளை, அல்பேர்ட் ஒருபோதும் தொட்டறிந்ததில்லை. தந்தை மோர்கனின் கைக்குட்டையை எடுத்துப் பார்ப்பதற்கே அல்பேர்ட்டுக்குத் துணிவிருக்கவில்லை. ஒருநாளிரவு குளிர் மிகுந்திருந்தது. தணலடுப்பில் குளிர்காய்ந்தபடி புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டிக் கொண்டிருந்த தாயிடம் அல்பேர்ட் கேட்டான்.

“அம்மா எனக்குமொரு கைக்குட்டை வேண்டும்”

“என் வைரமே! கைக்குட்டையானது உனது பெருமைகளில் ஒன்று. நீ அடைய விரும்பும் உன்னதங்களில் முதன்மையானது. அதனை அணிந்து கொள்ள ஒரு மொழியிருக்கிறது. அது உன் வசப்படும் நாள் வரைக்கும் காத்திரு. இதன் மகத்துவம் இப்போதுனக்குப் புரியாது. அப்பாவும் நானும் அழகான கைக்குட்டையொன்றை உனக்குப் பரிசளிப்போம். அது வரை காத்திரு” என்றாள்.

ஆனால், இன்று கரோலினாவுடன் சந்தையில் நின்று கொண்டிருந்த அல்பேர்ட்டிற்கு வண்ணமான கைக்குட்டைகளையும், அதனை வாங்கி களிப்புறும் மக்கள் திரளையும் கண்டு மூச்சு வேகமானது. “என்னால் பெற இயலாத ஒன்றா இது?” என்ற கேள்வி எழுந்தது அவனுக்கு. அவனுக்குள் ஒரு தீ மழை இறங்கிற்று. தன்னுடைய சிறகுகளை விரித்துத் தாழப்ப றந்திறங்கும் கழுகின் மூர்க்கம் அவனுக்குள் அலகு தீட்டியது. 

வட்டத் தொப்பியணிந்து கைக்குட்டையை வைத்துப் பார்த்துக் கொண்டிருந்த வயோதிகனை இலக்கு வைத்தான். அவருடைய கையிலிருந்த கைக்குட்டையைப் பறித்துக் கொண்டு உயரப் பறக்கும் வேகத்தோடு ஓடி மறைந்தான். தன் குஞ்சைப் பறிகொடுத்த திகைப்போடு கழுகை விரட்டுபவளைப் போலவே கரோலினா, அல்பேர்ட்டை துரத்தினாள். 
“அல்பேர்ட் அல்பேர்ட்… ஓடாதே நில்லு”

வீதியின் குறுக்காய் பாய்ந்து வந்த குதிரை வண்டியில் மோதி இடறி விழுந்தான் அல்பேர்ட். கரோலினா ஓடிச் சென்று அவனைத் தாங்கிப் பிடித்தாள். இருவரின் மூச்சிரைப்பும் வீதியில் கூடி நின்றவர்களை நோக்கி குற்றத்தால் அதிகரித்தது. அல்பேர்ட் தாழ்த்திய தனது முகத்தை நிமிர்த்தாமல் பூமியையே பார்த்தான். 

அதிவேகமாக வந்த கைக்குட்டை கடைக்காரன் கரோலினாவை முதுகில் உதைத்து விழுத்தினான். அல்பேர்ட் விசுக்கென ஓடித் தப்பித்தான். கரோலினாவும் கைக்குட்டையும் வீதியில் பேசு பொருளாகின. இரண்டு போலீஸார் கூட்டத்தை விலத்திக் கொண்டு உள்ளே நுழைந்தார்கள். இரண்டு நாட்களிலேயே வோர்விக் நீதிமன்றத்தில் கைக்குட்டை திருடிய குற்றவாளியென கரோலினாவுக்குத் தீர்ப்பு வழங்கப்பட்டது. 

சர்வ வல்லமைகளாலும் தனது மகனைக் காப்பாற்றிய மோர்கன் குடும்பம் வோர்விக் நகரைவிட்டு வெளியேறினார்கள். குற்றத்தின் வேதனையில் நெளிந்தபடி அல்பேர்ட் தாயிடம் சொன்னான். 

“அம்மா, கைக்குட்டையைத் திருடியது நான்தான். இவர்கள் ஏன் கரோலினாவை தண்டிக்கிறார்கள்?”

சுவாசத்தில் வெக்கையும் அவமானமும் இருந்தது. பிளவுண்ட தன்னுடைய சொற்களை நடுங்காமல் தொகுத்து, ஒரு சூரியோதம் போல புன்னகையோடு அல்பேர்ட்டின் தாய் சொன்னாள்.

“அவர்கள் ஏழைகள். தண்டிக்கப்படுவதற்காகவே பூமிக்கு வருகிறார்கள். நீ அவர்களைப் பற்றி கவலை கொள்ளாதே”

அல்பேர்ட் தனது கண்களைத் தடாலென மூடிக் கொண்டு “கரோலினா என்னை மன்னித்துக் கொள்” என்றான்.

லண்டன் நீதிமன்றத்தில் ஐந்து வருடங்களுக்கு அதிகமாகச் சிறைத்தண்டனை வழங்கப்பட்ட குற்றவாளிகள் அனைவரையும் தனது காலனித்து நாடான ஆஸ்திரேலியாவுக்கு அனுப்புவதற்கு முடிக்குரிய பிரித்தானிய அரசு தீர்மானித்தது. கரோலினாவும் அவளது ஒரே மகனுமான டேவிட்டும் நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்தார்கள். அழுகையை உண்டாக்கும் திகிலோடு காற்று மூச்சு வாங்கி பறந்து போனது.

ஆயிரத்து நாநூற்றி எழுபத்து ஆறாம் ஆண்டு மார்ச் மாதம் இருபத்தாறாம் திகதி ஞாயிற்றுக்கிழமை மழையும் காற்றும் மிரட்டியது. ஆனாலும் குற்றவாளிகளைக் கப்பலில் அனுப்பும் முடிவில் பிரித்தானியா தாமதிக்கவில்லை. கடலில் விழுந்து அழுகினாலும் கவலையில்லையென அதிகாரிகள் அறிவித்தனர்.  கைக்குட்டை திருடிய குற்றத்தில் தண்டனை வழங்கப்பட்ட நூறுபேர் உட்பட  நூற்று நாற்பது குற்றவாளிகளுடன் “பிறின்ஸ் ஒவ் ஹம்ஷயர்” கப்பல் புறப்பட்டது. கரோலினா டேவிட்டை அணைத்து வைத்தபடி அமர்ந்திருந்தாள். விரிந்த கடலில் விழும் மானுடர் கண்ணீர் தனித்த கழிவு. 

02

ஆஸ்திரேலியாவின் வன் டீமன் தீவுக் கரையைக் கப்பல் வந்தடைந்தது. கைதிகள் இறக்கப்பட்டார்கள். அந்நியத்தின் காற்று முகம் மோத கரோலினா மகனைத் தூக்கி வைத்திருந்தாள். குற்றமற்றவர்கள் தண்டிக்கப்படும் அநீதியின் துறைமுகமென காணும் வெளிமுழுதும் நீண்டிருந்தது. கரோலினாவின் கண்ணீர் கனத்து விழுந்த கப்பல் அலைகளில் நிதானமற்று ஆடியது. நீதியின் உப்பு பூமியில் மிஞ்சுமென்று அவளால் நம்ப முடியாமலிருந்தது. 

ஈரக்காடுகள் சூழ்ந்த மலையுச்சியில் உறைந்து கிடந்த சிறை. நூற்றுக்கணக்கான பெண் சிறைவாசிகளோடு  அடைக்கப்பட்டாள். குழந்தைகளைப் பராமரிப்பதற்குப் பிரத்தியேக இடம்.  சுண்ணாம்பு சுவர்களாலான நீண்ட மண்டபத்தில் ஆடைகள் தயாரிக்கும் முழு நேர வேலை. ஏழு வருட தண்டனையை ஒவ்வொரு நாளாக எண்ணத் தொடங்கினாள் கரோலினா. பணியிடத்தில் அழுது அரற்றுபவர்களின் மேனியைச் சிறையதிகாரிகளின் கசையடிகள் ரத்தம் பார்த்தன. சிலர்  மாதக் கணக்கில் இருட்டறையில் வீசப்பட்டார்கள். 

நீண்ட வெள்ளை துணிகளைத் தொட்டிகளில் முக்கியெடுத்து, சாயம் பூசுகின்ற வேலையைப் பார்த்து வந்தாள் கரோலினா. இழந்த வாழ்வின் வண்ணங்கள் எல்லாமும் கரைந்து போனதெனும் துயர் நுரைக்க கதறி அழுவாள்.  லண்டனில்  கைக்குட்டை கடைக்காரன் தரையில் அழுத்தி  விளாசிய அவமானச் சீழ் கொதித்து வலித்தது. தண்ணீர் கொண்டு வந்த வாகனத்துக்குள் பதுங்கி சிறையிலிருந்து தப்பியோட முற்பட்ட பெண் கைதிகள் எல்லோர் முன்னிலையிலும் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். 

டேவிட்டை அணைத்த கரோலினாவின் கைகள் அச்சத்தில் நடுங்கின. நெஞ்சு அதிர்ந்தது. குற்றமே செய்யாமல், தண்டனைக்குள் தலை கவிழ்த்துக் கிடக்கின்ற பாரம். தன் குழந்தையை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்ற தாய்மையின் தவிப்பு ஓலமாய் அவளுக்குள் எரிந்தது.

ஐந்து வருட சிறைத்தண்டனை பூர்த்தியானவர்களில் நன்நடத்தையின் அடிப்படையில் சிலர் விடுதலை செய்யப்பட்டனர். ஆஸ்திரேலியாவில் அவர்கள் விரும்பிய தொழிலைச் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. கரோலினாவும் டேவிட்டும் விடுதலையாகியும் கொஞ்ச நேரம் சிறையின் முன்பாக அமர்ந்திருந்தனர். அவள் டேவிட்டின் மடியில் தலை வைத்து, வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். கண்ணீர் பெருக்கில் அவனது கால்களை நனைத்தாள்.

“அம்மா, நாம் இப்போது குற்றமற்றவர்களா?”

“டேவிட், எப்போதுமே குற்றமற்றவர்கள் நாம். ஆனாலும் எப்போதும் தண்டிக்கப்படுவோம்” என்றாள்.

“ஏனம்மா?”

“பூமியில் நாதியற்றவர்களை இப்படித்தான் பாலைப் புழுதி மூடும்” என்றாள்.
 டேவிட் கரோலினாவை முத்தமிட்டான். “பூமி நமக்கெனப் படைத்த குடிசையொன்றும் குற்றமற்ற சூரியனும் இங்கு இருக்கும். எழுந்து செல்வோம்” என்றான்.

03

லீட் பகுதியில் குடியேறினார்கள். அருகிலிருந்த கிராமத்துப் பாடசாலைக்கு டேவிட்டை அனுப்பினாள். அங்கேயே ஒரு சிற்றுண்டியகத்தை வைத்துக் கொண்டாள். எல்லா விதமான பலகாரங்களையும் விற்று வருவாயை ஈட்டினாள். ஒரு நாள் அதிகாலையில் சமையல் கட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்த கரோலினா மயக்கமாகி சரிந்தாள். பாத்திரங்களின் சத்தம் கேட்டு உறக்கம் விழித்த டேவிட் தாயின் மூச்சற்ற உடலைக் கட்டியணைத்தான். அவளது கால்களைத் தொட்டு அம்மாவென்று கதறினான். பூமி நன்றாக விடியும் வரை தாயின் கைகளைப் பற்றி வெறித்துக் கொண்டிருந்தான். குற்றமற்ற சூரியன் எழுந்து குடிலினுள்ளே ஒளி புகுந்தது. 

தாயின் பெருந்துயர் அவனுள் தகித்துக் குழம்பென உருப்பெருத்தது. நீதியால் வஞ்சிக்கப்பட்ட இனிமையான வாழ்வை இனி எவராலும் தர முடியாதென உணர்ந்தான். திருட்டுக் குற்றம் சுமத்தப்பட்ட தனது தாயின் அழிவிற்கு அவன் பதில் சொல்ல விரும்பினான்.

படிப்பை நிறுத்தினான். சிற்றுண்டியகத்தில் முழு கவனத்தையும் செலுத்தினான். முன்பிலும் பார்க்க பலர் உணவருந்த வந்தார்கள். தன்னிடம் ரொட்டியும் தயிர்க்கட்டியும் வாங்கும் அனைவருக்கும் இலவசமாக ஒரு கைக்குட்டையைக் கொடுக்கத் தொடங்கினான் டேவிட். 

தாயின் வாழ்விலிருந்து உதிர்ந்த வண்ணங்களை, ஒவ்வொரு கைக்குட்டைகளிலும் கோர்த்தெடுத்தான். இரவில் பல மணி நேரம் விழித்திருந்து கைக்குட்டைகளை உருவாக்கினான். அதன் பிறகு, காலையில் ரொட்டி செய்ய வேண்டிய மாவைப் பிசைந்து வைத்துவிட்டு, படுக்கைக்குப் போனான். டேவிட்டின் ரொட்டியைவிட, லீட் பகுதியெங்கும் அவனது கைக்குட்டையே பிரபலமானது. 

இலவச கைக்குட்டை பற்றிக் கேட்டவர்களிடம் தனது தாய்க்கு நேர்ந்தவற்றைச் சொன்னான். எந்தக் குற்றமுமற்ற அப்பாவிப் பெண்ணைப் பிரித்தானிய நீதிமன்றம் எவ்வாறு கடூழியச் சிறைக்குத் தள்ளியதென்ற சரித்திரம் லீட் பிரதேசத்தில் அனைவரிடமும் பரவியது. 

பாடசாலையிலுள்ளவர்கள் டேவிட்டின் தாய்க்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக வருத்தம் தெரிவித்தார்கள். நீண்ட இரவுகளாய் தனித்திருந்து துயரத்தின் துணியால் அவன் கைக்குட்டைகளைச் செய்தான். 

“ உன்னுடைய அம்மாவின் பொருட்டு நீ கைக்குட்டைகளை வழங்கியது போதும்” என்றனர்.

“நான் கைக்குட்டையை உங்களிடம் தருவதாக நீங்கள் நம்புகிறீர்கள். ஆனால் நான் அளிப்பது, நீதியின் கறையால் அழிக்கப்பட்ட ஒரு பெண்ணின் கருப்பையை, அவளது மேன்மையைக் கருக்கிய ரத்தம் உலராத கொடுமையின் நான்கு மூலை கொண்ட நினைவுச் சின்னத்தை” டேவிட் சொன்னான். 

04

இரண்டாயிரத்து இருபத்து மூன்றாம் ஆண்டு இயேசு பாலன் பிறந்த அன்றைக்குத் தேவாலயம் ஒன்றின் முன்பாக டேவிட்டின் சந்ததிப் பேத்தியான  மிஷேல் கைக்குட்டையை எல்லோருக்கும் வழங்கினாள். 

அவளுக்கும் எனக்குமிடையே காதல் உண்டானமைக்குப் பெரிய காரணங்கள் எதுவுமில்லை. அவளுடைய மூதாதையர்களைப் போல நானும் ஆஸ்திரேலியாவுக்குக் கடல் வழியாக வந்தவன். சொந்த மண்ணில் யுத்தத்தினால் கசக்கி வீசப்பட்ட கைக்குட்டைகளைப் போல குழந்தைகளும், பெண்களும் கொல்லப்பட்டார்கள். கரோலினாவைத் திருடியென வீதியில் அறைந்ததைப் போல, எங்களைத் தமிழர்கள் என்று கொன்று குவித்த தீவிலிருந்து வந்தடைந்தேன். மிஷேலும் நானும் முதன் முறையாகக் கலவியில் முயங்கி மீந்திருந்தபோது, அவள் சொன்னாள்.

“நானும் நீயும் ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்ளும்போது பூமிக்கு நீதி திரும்பிவிடும்”

“அப்படியான எந்த அசட்டு நம்பிக்கையும் எனக்கில்லை மிஷேல். பூமிக்கும் நீதிக்குமிடையே பெரும்பாழ் தோன்றிவிட்டது” என்றேன்.

“தளராதே, இந்தப் பூமிக்கு எங்கள் கைக்குட்டை  நீதியை அழைத்து வரும் திலீபா. நான் கைக்குட்டையைக் கையளிப்பது போல, எனக்கு நீ குழந்தையை அளிக்க வேண்டும்”

“மிஷேல். நீ என்ன சொல்ல வருகிறாய்”

“நீ ஆயுதங்களாலும், கொடூர வஞ்சகங்களாலும் அழித்தொழிக்கப்பட்ட இனத்தின் மிச்சம். கொல்லப்பட்ட குழந்தைகள். நாங்கள் கையளிக்கும் கைக்குட்டைகள் போல. இந்தப் பிரபஞ்சம் முழுதும் புலம்பெயரும் பறவைகள் கிளைகளில் அமர்ந்து பறப்பதைப் போல, ஆசுவாசம் கொள்ள எம்மிடமிருப்பது நினைவுகள் மட்டும் தான்”

“எமக்குப் பிறக்கப் போகும் குழந்தை எப்படி நினைவாக இருக்கும்”

“இருக்கும். நினைவு என்பது இறந்த காலத்தில் உறைந்தது மட்டுமல்ல. நிகழ்வதும் தான். நாம் வழங்கும் கைக்குட்டை நினைவா? நிகழ்வா? நீயே சொல்”

அவளை இறுக அணைத்து முத்தமிட்டுச் சொன்னேன். 

“பூமிக்கு நீதி திரும்பிவிடும் மிஷேல். உன்னுடைய முப்பாட்டன் டேவிட் பிறந்ததும், அவனை நல்லூர் முருகன் கோவிலுக்கு அழைத்துச் செல்வோம்”

“ஆனாலொன்று திலீபா. அவனை நாம் கடல் வழியாக அழைத்துச் செல்ல வேண்டும். சமுத்திரம் முழுதும் கைக்குட்டைகளை நிறைக்க வேண்டும்” என்றாள்.

“இங்கிருந்து போவதற்குச் சாத்தியமில்லை. அங்கிருந்து வேண்டுமானால் கடல் வழியாக வந்துவிடலாம்”

“அது எப்படி”

“அகதிகள் வருவார்கள் அல்லவா”

கடல் முழுதும் அகதிகள் படகுகளில் கையசைத்து ஆஸ்திரேயாவின் கடற்கரையில் கரையொதுங்கினார்கள். மிஷேல் சொன்னாள் “ அவன் வந்திறங்கியிருப்பான். வா சென்று பார்க்கலாம்”

“ஆர்?”

“எங்களுடைய பிள்ளை” என்று சொல்லி கட்டி அணைத்தாள். 

எனக்குள் ஒரு கடல் அந்தியொளியில் அலையற்று அசைந்தது. 
 

https://vallinam.com.my/version2/?p=9442

என்ர ராசாவுக்கு

2 months 3 weeks ago
என்ர ராசாவுக்கு
brass-natra.jpg?resize=600%2C400&ssl=1

யன்னலருகே இருந்த மேசையின் மூலையில் சிறு தொட்டியில் வைக்கப்பட்டிருந்த ரோஜா செடிக்கு கிளாசில் இருந்த தண்ணீரை ஊற்றிவிட்டு, அதன் மிருதுவான இலைகளை தடவிக்கொடுத்தார் முருகேசர்.

ஊற்றிய நீரை உறுஞ்சிய தொட்டிமண்ணை விரலினால் கிளறி ஈரப்பதத்தை பரிசோதித்த திருப்தியுடன் வெற்று கிளாசை மேசையில் வைத்தார். அந்த அறையில் உயிர்ப்புடன் இருந்தது அவரும் அந்தச் செடியும்தான்!

அவரது அறை அத்தனை பெரியது அல்ல. ஒரு கட்டில் மூலையில் அவரது உடமைகளையும் உடைகளையும் வைக்க ஒரு கப்போர்ட், சாய்ந்திருக்க ஒரு சாய்மனைக்கதிரை, சுவரில் பதித்திருக்கும் 15″ டி.வி, அதன் கீழ் ஒரு மேசை, மூலையில் உறங்கும் அவர் கைத்தடி, குளியலறையையும் டொயிலெட்டையும் இணைக்கும் ஒரு கதவு. இதுவே அவர் உலகம். ஒரு வயோதிபர் விடுதியில் இவைகளை விட வேறு எதை எதிர்பார்க்க முடியும்?

ஒரு மனிதன் மூப்படைய அவன் சஞ்சரிக்கும் பரப்பளவு குறைந்து கொண்டு போவது ஒரு சோகமான உலக நியதி. அந்த குறுகும் உலகைத் கூட கைத்தடி பிடித்து கடக்க வேண்டிய கட்டாயத்தையும் இறைவன் சமைத்துவைத்து விடுகிறான்!

அவரின் அறையில் ஹீட்டர் வசதிகள் இருந்ததால், மெல்பேர்ன் குளிர் அவரை தீண்டவில்லை. ஒன்பது வருடங்களுக்கு முன் பெற்றோர் இணைப்பு விசாவில் வந்து சேர்ந்ததால் அவருக்கு ஆஸ்திரேலிய பிரஜைக்குரிய எல்லா வசதிகளும் உரிமையாகின.
இளைய மகன் சபேசன் குடும்பத்துடன் எட்டு வருடங்கள் வாழ்ந்து, ஒரு வருடத்திற்கு முன்புதான் இந்த ‘றிவ சைட் ஏஜ் கேர்’ வாசியானார். இந்த இடப்பெயர்ச்சிக்கு சபேசன் பல காரணங்களை சொன்னாலும், தனது எண்பத்தி ஏழு வயதும் ஒரு காரணம் என்பதை அவர் அறிவார்.

“அப்பு, இஞ்ச தனிச்சுப்போவியள். நானும் செல்வியும் வேலைக்கு போனாப் பிறகு நீங்க விழுந்து கிழுந்து போட்டியள் எண்டா ஆரு பாக்கிறது? அங்க உங்கள நல்லா பாத்துக்கொள்ளுவினம். உங்கள குளிப்பாட்ட, சாப்பாடு பருக்க செல்வியால ஏலாதுதானே? அங்க உங்களுக்கு எண்டு ஒரு அறை தருவினம். குளிப்பாட்ட கிளிப்பாட்ட அங்க கெயாறஸ் இருப்பினம். சொன்ன வேளைக்கு சாப்பாடு….வருத்தம் வாதை எண்டாலும் உடனே டொக்டர அங்கயே வருவிப்பினம். இஞ்ச நானும் செல்வியும் வேலைக்கு போனாப்புறம் நீங்க தனிச்சு போவியள். மகள் ஆர்த்தியும் யூனிவர்சிற்றியும் படிப்பும் எண்டு ஓடியபடியல்லோ இருக்காள்” என்று மகன் அடுக்கிய காரணங்கள் எல்லாம் அவருக்கு வெற்று வார்த்தைகளாகவே பட்டது.

இதுவே இங்கு ஒரு நாகரீகமாய் போய்விட்டது. வெள்ளைக்காரனின் சமூக சடங்குகளை பிரதியெடுத்து வாழும் வாழ்வுதான் உயர்ந்தது எனும் ஒரு மனப்பான்மை நம்மவர்களுள் குடிகொண்டு செழித்து வளர்வதை முருகேசர் அறியாதவர் அல்ல.

இன்று மாதத்தின் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை. அவர் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நாள் அது. மெல்பேர்ன் நகரின் வட-மேற்கில் இருக்கும் ‘சன்சைன் முதியோர் தமிழ் மன்றத்தின்’ மாதாந்த சுற்றுலா நாள் இன்று. இந்த ஞாயிறுகளில் ஒரு பேரூந்தில் வீடுகளிலும் முதியோர் இல்லங்களிலும் வாழும் மூத்தபிரஜை அங்கத்தினர்களை வந்து ஏற்றிக்கொண்டு ஒரு நாள் சுற்றுலாவிற்கு அழைத்துச் சென்று, பின்னர் மாலையில் வந்து இறக்கி விடுவார்கள். முருகேசர் தவறாமல் கலந்துகொள்ளும் நிகழ்வு இது. முதியவர்களையும் சமுதாயத்தில் ஒரு துடிப்புள்ள பிரஜைகளாக வாழவைக்க ஆஸ்திரேலிய அரசாங்கம் முன்னெடுக்கும் சமூகநல முயற்சிகளில் இதுவும் ஒன்று.

பயணத்தின் போது வாய்க்கு ருசியான உணவு வகைகள் பரிமாறப்படுவதும் ஒரு விசேடம். யாழ்ப்பாணத்து கறித்தூளும் தாளித்த கருவேப்பிலையின் நறுமணமும் கட்லட், பற்றீஸ் என்ற பெயரில் பேரூந்தை நிறைக்கும்.

ஏஜ்ட் கெயாரில் பரிமாறப்படும் ‘வெள்ளைக்காரனின்’ உணவு வகைகளை விழுங்கி மரணித்த முருகேசரின் நாவு விழித்துக் கொள்ளும். “காஞ்சி போன ரொட்டி துண்டும் சூப்பும் இவரு டின்னர்” எனும் பாடலை ஞாபகமூட்டும் சாப்பாடு வகைகளை உண்டு அவருக்கு அலுத்துவிட்டது. இடையிடையே செல்வியின் சமையலை சபேசன் கொண்டுவந்து பரிமாறும்போது தான் இழந்தது உறவுகள் மட்டுமல்ல என்பதை எண்ணிக்கொள்வார்.

இன்று கடற்கரை விஜயம். அங்கு போகும் வழியில் ஒரு உள்ளூர் மார்க்கட்டுக்கும் அழைத்துச் செல்வதாய் அழைப்பு சொல்லிற்று.

பேரூந்து கலகலவென்று சம்பாஷணைகளில் நிரம்பி வழிந்தது. தமது வலிகளையும் வாதைகளையும் பகிர்ந்து கொள்பவர்கள், தம் தனிமையையும் புறக்கணிப்புகளையும் மறைக்க கோமாளி முகமூடிகளை அணிந்த சில முகங்கள், ‘இன்னும் எத்தனை நாள் இப்படி’ என்ற ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்திருக்கும் உருவங்கள், கடந்த கால இன்ப நினைவுகளை மீட்டெடுக்க தூண்டில் போடும் சில சிந்தனை முகங்கள், வழுக்கிச் செல்லும் நினைவுகளை வலிந்து பற்றி வார்த்தைகளாக்கி பகிரும் கதைசொல்லிகள் என பல வகை மூத்தோர் கூட்டம்.

அவர்கள் மாற்றியமைக்க நினைத்த உலகே அவர்களை சிறைப்படுத்தி வைத்த சோகம் பலர் முகங்களில் கோடிழுத்து நின்றன.

முருகேசர் தன் சக பயணி நண்பரான துரைராஜாவுடன் அமர்ந்துகொண்டார். இருவருக்கும் உலக அரசியலில் ஈர்ப்பு இருந்தமையினால் அதுவே அவர்கள் உறவிற்கு பசையானது.

அரைமணி நேரத்திலேயே பேரூந்து அந்த ‘சண்டே மார்க்கட்’ எனும் சந்தைக்கு வந்து சேர்ந்தது. “கெதியா இறங்கி பார்த்திட்டு வந்துருங்கோ…..வெய்யில் ஏற முன்னம் போகவேணும் கண்டியளோ” என்ற கட்டளைக்கமைய எல்லோரும் பஸ்ஸை விட்டு இறங்கினர்.

இந்த மார்க்கட்டில் உணவு வகைகள், தோட்டத்து காய்கறிகள், பழைய உடைகள், புத்தகங்கள், தோட்டவேலை செய்வதற்கான பாவித்த உபகரணங்கள், பூச்செடிகள், மற்றும் ‘தட்டு முட்டு’ சாமான்கள் என பலவகை பண்டங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. அனேகமானவை பாவித்த பொருட்களும் ‘கராஜ் சேல்’ என்ற வீட்டு வாசல் விற்பனையில் மலிவு விலையில் வாங்கி விற்பனைக்கு வைக்கப்பட்டவை.

முருகேசரும் துரைராசாவும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பொருட்களில் ஆர்வமின்றி நடைபயின்றனர்.

“அங்க பாத்தியளோ?….நம்மட ஊர் நடராசர் சிலை போல கிடக்குது. உது எங்க இஞ்ச வந்தது?” என்ற துரைராசாவின் கேள்வி முருகேசரின் கவனத்தை அந்த மேசையில் பரப்பி வைக்கப்பட்டிருந்த ‘தட்டு முட்டு’ சாமான்களுடன் கிடத்தி வைக்கப்பட்டிருந்த அந்த நடராசர் சிலை மேல் திருப்பியது.

ஆம், அது உண்மையே. வெங்கலத்தால் செய்யப்பட்ட வட்டமான சிலை. நடராசர் நர்த்தனம் புரியும் சிலை வடிவம்.

அதைத் தூக்கி அதன் பின்புறம் ஒட்டியிருந்த வெள்ளை காகிதத்தில் எழுதியிருந்த விலையை பார்த்தார். $10 என்று எழுதியிருந்தது.

“நல்ல வடிவான சிலை…. தனி வெங்கலத்தில செய்திருக்கினம்….. உதப்போல ஒரு சிலைய தேடித்திரியிறன்…. விலைய கேட்டுப்பாப்பம். $5 இற்குத் தருவானோ தெரியாது.”

“ஓம், நல்லாத்தான் இருக்குது ….விருப்பம் எண்டால் கேட்டுப்பாரும்” என்ற துரைராசாவின் அங்கீகாரத்தால் உந்தப்பட்ட முருகேசர், மேசையின் மறுபுறம் நின்றவனிடம் தன் பேரத்தை வார்த்தைகளாக்கி “கான் ஐ ஹாவ் இட் ஃபோர் $5.”

“நோ சேர்…. வட் எபவுட் $8 ? “

இது எட்டு வெள்ளிக்கு லாபமே என்பதை அவர் மனக்கணிப்பு சொல்லிற்று.
பணம் கைமாற நடராசர் முருகேசரின் உடமையானார்.

x x x x x

மாலை ஆறு மணிக்கு சுற்றுலா முடிந்து ஏஜ் கேருக்கு வந்து சேர்ந்த முருகேசருக்கு இரவு உணவு அவரது அறை மேசையில் தயாராக காத்திருந்தது.
அவருக்கோ ஊர் சுற்றிய களைப்பு. ஒரு ‘காக்காய் குளியலுடன்’ தலையை துவட்டிவிட்டு கட்டிலில் அமர்ந்து தான் அன்று சந்தையில் வாங்கிய நடராசர் சிலையை கையிலேந்தி பழைய நினைவுகளில் மூழ்கினார். நினைவுகள், அவரும் மனைவி பாக்கியமும் இன்பமாய் கழித்த நாட்களுக்கு அவரை இழுத்துச் சென்றன.

திருமணமாகி ஒன்பது மாதங்கள் கடந்திருக்கும். இருவரும் தமிழ்நாட்டு திருத்தலங்களை தரிசிக்கும் எண்ணத்தில் திருச்சி வந்திறங்கி, பின்னர் சில திருத்தலங்களை தரிசித்துவிட்டு சிதம்பரம் நடராஜர் கோவிலை வந்தடைந்தனர். ஆகம விதிமுறைகளின்படி அமைக்கப்பட்டிருந்த ராஜகோபுரங்களின் கம்பீரமும் அழகும் அவர்களை பிரமிக்கவைத்தது. கிழக்கே அமைந்திருந்த ராஜகோபுரத்தில் இருந்த நாட்டியத்தின் 108 கரணங்களை பிரதிபலிக்கும் சிற்பங்களை பாக்கியம் வியப்புடன் பார்த்து “உதுகளையெல்லாம் எப்படித்தான் கட்டியிருப்பினமோ?” என்று கூறி வியந்தாள். எல்லா சன்னதிகளையும் கோயிலின் தீர்த்தக்குளமான ஆனந்த தீர்த்தத்தையும் பார்த்தபின்பு, பிரகாரத்தை சுற்றி வந்து பூஜை செய்துவிட்டு கோயிலிலிருந்து வெளியே வந்தனர்.

கோயிலின் முன்னால் இருந்த கடைவீதியில் பல விதமான பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.

தெய்வீக உணர்வில் திழைத்திருக்கும் பயணிகள் மென்மனதில் ‘வாழைப்பழத்தில் ஊசியாக’ வணிகம் சொருகப்படும் தலங்கள் இவை.

அவர்களை கவர்ந்தது அழகான வெண்கல மற்றும் பித்தளை விக்கிரகங்கள் விற்கும் அந்தச் சிறிய கடை.
“ஐயா….நல்ல டிசைன் சிலைகளுங்க. நாங்க வாங்கி விக்கிறதில்லீங்க…எல்லாம் எங்கட தயாரிப்புங்க… இங்க சிலைய வாங்குநாக்கா நாங்களே பிஃரீயா எழுத்த பொறித்துத் தருவமுங்க….வேற இடத்தில வாங்கினீங்க….. அதுக்கு வேறா சார்ஜு பண்ணுவானுங்க” என்ற கடைப்பையனின் விற்பனை மந்திரம் எந்த கஸ்டமரையும் கட்டிப் போட்டுவிடும்.

பாக்கியம்தான் சிலை வாங்குவதில் மும்முரமாய் இருந்தாள்.
“சும்மா காசப்பாக்கம ஒண்ட வாங்குவம். சாமி அறைக்கும் ஒண்டு வேணும். இஞ்ச வாங்கின ஞாபகமும் இருக்குமல்லோ….இல்லாட்டி பேந்து துக்கப்படுவம்”
மனைவியின் கெஞ்சலுக்கு இளகிய முருகேசர், பாக்கியம் தெரிவு செய்த ஒரு நடராஜர் சிலையை வாங்கி அவள் கைகளில் திணித்து “சரி…சிலையில என்ன எழுதப்போறீர்?” என கேள்வியை தொடுத்தார். பிரபஞ்சத்தின் வட்டத்தினுள் நடராஜர் வலது கையில் அபய முத்திரையையும் இடது காலை உயர தூக்கியும் ஆனந்த தாண்டவம் ஆடும் உருவச்சிலை அது.

முருகேசரின் கேள்விக்கு பாக்கியம் பதில் அளிக்கும் முன்பே இடையில் குறுக்கிட்ட கடைப்பையன் “என்ன பொறிச்சுத் தரணுமினு இந்த பேப்பர் துண்டில எழுதிக் தாங்க அம்மா….மிஸ்டேக் இல்லாம தமிழில எழுதித் தரணுமுங்க”.
பேப்பரை வாங்கி பாக்கியம் ஒரு கண யோசனையில் பின் பேனாவால் “என்ர ராசாவுக்கு” என எழுதி பையனிடம் கொடுத்தார்.

அதை படித்த பையனின் முகம் கோணலானது. கண்களை குறுக்கி மூக்கை சுழித்து “அம்மா, ‘எனது ராஜாவுக்கு’ அப்படீணு சுத்த தமிழ்ல பொறிச்சி தரட்டுமா?”
“ஐயோ வேணாம்…நீ ஒண்டும் மாத்த கீத்த வேணாம். அதயே பொறித்துத் தா” என்று ஒரு ரகசியத்தை கூறுவது போல் சொன்ன பாக்கியத்தின் முகம் பெண்மைக்கே உரிய வெட்கத்தால் சிவந்தது. குறும்புக்கார பையனின் கேள்வி தொடர்ந்தது. “அப்படீனா ராசாவுக்கு அப்புறம் ஐயாட பேர பொறித்……”. அவன் வார்த்தையை முடிக்கும் முன்னே இடைமறித்த பாக்கியம் “அது ஒண்டும் தேவையில்ல. நான் சொன்னத செய்…..அவர விட்டா எனக்கு வேறு யாரு ராசா?” என கூறிவிட்டு பையனிடம் அதிகப்பிரசங்கித்தனமாக பேசிவிட்டேனோ என்ற உணர்வில் நாக்கை கடித்துக்கொண்டார்.

கடைக்குள் வேறு சிலைகளை பார்த்துக் கொண்டிருந்த முருகேசரின் காதுகளுக்கும் மனைவியின் இந்த சம்பாஷணை எட்டாமல் இல்லை. பாக்கியத்தின் வார்த்தைகள் அவர் இதயத்தை நெருடிச் சென்று ஒரு இதமான இன்ப அனுபவத்தை விதைத்துச் சென்றது. இந்த மென் உணர்வுகளுக்கு மானுடர் எந்தப் பெயர் சொல்லி அழைத்தாலும் ஒரு கணவனை மனைவி அன்பினால் சிறைப்படுத்தி உரிமை கொண்டாடும் இத் தருணங்கள் புனிதமானவை. பண்பாடுகளும் கலாச்சாரங்களும் அந்த உணர்வுகளுக்கு வேலி அமைத்து மண்மூடி மறைக்க எத்தனித்தாலும் மண்ணை மீறிய விதைகளாய் அவை என்றும் ஏதோ ஒரு வடிவத்தில் புலப்பட்டு தன் உரிமைகளை மீட்டுக்கொள்ளும்!

பாக்கியம் பதினைந்து வருடங்களுக்கு முன் புற்றுநோயால் மறைந்த பின்பும் அந்த நடராஜர் சிலைக்கு சாமி அறையில் முதன்மை ஸ்தானத்தை அளிக்க முருகேசர் தவறவில்லை. ஆஸ்திரேலியாவிற்கு புலம்பெயர்ந்த போதும் முருகேசர் கூட பயணித்து மகன் சபேசனின் வீட்டில் குடிகொண்டார் நடராஜர்.

ஒரு வருடத்திற்கு முன் முருகேசர் இந்த ஏஜ் ட் கெயாருக்கு வர பெட்டியை அடுக்கும்போது மகன் சொன்னது இன்னும் ஞாபகமே. “அப்பு, உதுகள எல்லாம் கட்டி சுமக்க வேணுமே? அங்க உங்கட அறையும் அப்பிடி ஒண்டும் பெரிசில்ல. இத இஞ்ச வச்சிற்றுப் போங்கோவன். நாங்க என்ன பாத்துக்க மாட்டமா?”. சபேசனின் வார்த்தையில் இருந்த அழுத்தத்தை அவர் புரிந்துகொண்டார். ஆனாலும் அவனுக்கு சிலையாக தெரிந்த நடராஜர் அவருக்கோ பாக்கியத்திடம் இருந்து புறப்பட்ட அந்தரங்க உணர்வுகளின் அடையாளம்.

பாக்கியத்துடன் வாழ்ந்த இன்ப நினைவுகள் அவர் மனதில் வரிசை கட்டி நின்றன. காலக் குடுவையின் சிறு துளையில் வடியும் மணல் பருக்கைகளாய் அவர் வாழ்வு மங்கிப் போய் கொண்டிருக்கும் இந்த முதிர் வயதில் அந்த இனிய நினைவுகளை மீட்டெடுக்கும் எந்த ஒரு சடப்பொருளும் அவருக்கு தோணியின் துடுப்பாய்ப் பட்டது.

வாழ்க்கை எனும் வானத்தில் மிதக்கும் முகில் கூட்டங்களாய் அவரின் நினைவுப்பஞ்சுகள் மெல்ல மெல்ல அவரை விட்டு எங்கோ தூர ஓடி மறைகின்றன!

நடராஜர் சிலையை கையில் ஏந்தியபடி கட்டிலில் அமர்ந்திருந்த முருகேசரின் கண்களில் பாசத்தின் ஊற்றாய் நீர் முட்டி கன்னங்களை நனைத்து சிறு துளிகளாய் சிலையில் விழுந்து தெறித்தன. சிலையில் பின்பகுதியில் ஒட்டியிருந்த $10 என எழுதியிருந்த காகிதத்தையும் நனைக்க அவை தவறவில்லை. அவரை அறியாமல் அவர் விரல்கள் சிலையில் ஒட்டியிருந்த அந்த காகிதத்தை சுரண்டி அகற்றியது.
சிலையில் பொறித்திருந்த “என்ர ராசாவுக்கு” என்ற வார்த்தைகள் அவரைப் பார்த்து சிரித்தன!

நடுங்கும் கைகளால் சிலையை மெதுவாய் உயர்த்தி நெஞ்சுடன் அணைத்த அவரின் வாயில் இருந்து “என்ர குஞ்சு” என்ற வார்த்தைகள் ஒரு மந்திர உச்சரிப்பாய் காற்றில் கலந்து மறைந்தன.

 

https://solvanam.com/2023/12/31/என்ர-ராசாவுக்கு/

நாடு காத்த சிறுவன்

2 months 4 weeks ago
நாடு காத்த சிறுவன்
-----------------------------------------------------------------------
அந்நியன் படத்தில் விக்ரம் விவேக் சதா நடிகர்ள் நடித்து ஆடி பாடிய ஹாலந்து நாட்டு அந்த அழகிய பரந்த பூந்தோட்டங்களில் நடுவில் இருந்த கைவிடப்பட்ட பழைய இராணுவ முகாம் ஒன்று இப்பொழுது அகதி முகாமாக்க பட்டிருக்கிறது.
அந்த முகாமில் ஏழாம் நம்பர் றூமில் கீழ் படுக்கையில் நான் தூங்க விரும்பியும் தூங்கமால் தவித்து கொண்டிருந்தேன்,அவன் அடிச்சு பிடிச்சு ஓடிவந்து மூச்சிரைத்து சொன்னான்
.வாடா உனக்கு ஒன்று காட்டிறன் என்று.
இவன் மோகன் தோட்டம் துரவு சந்து ,பொந்து பீச்சு கடல் என்று வேடிக்கை பார்ப்பதிலை விண்ணன்.அத்துடன் சிக்கலை மற்றவர்களுக்கு தெரிந்தோ தெரியாமால் உருவாக்கி தருபவன்
.என்பதால் காது கொடுக்காத மாதிரி மற்ற பக்கம் மாறி நித்திரை மாதிரி கிடந்தேன்.
அந்த அகதி முகாம் ஹாலந்து நாட்டின் வட பகுதியில் உள்ள புகழ் பெற்ற பீச்சுக்கு அண்மையில் அமைந்துள்ளது.இங்கு வெளிநாடுகளில் இருந்து எல்லாம் கூட பெருவாரியாக உல்லாச பிரயாணிகள் வருவதுண்டு.
இந்த பீச்சுகளில் ஆண்களும் பெண்களும் நிர்வாணமாக படுத்து சூரிய குளிப்பு செய்வதுண்டு. அதுவும் நம்மவர்கள் அண்மையில் தான் வெளிநாட்டுக்கு வந்தவர்கள் அத்துடன் பகலில் நிர்வாணம் என்றதை நேரில் காணதாவர்கள். ஏன் இரவில் கூட காணாதாவர்கள்..காண கூச்சமாக இருந்தவர்கள்..அவர்களுக்கு எந்த மனத்தடை சமூக தடை இல்லாமால் இப்படி ஒரு சந்தர்ப்பம் அமைந்தமையால் கூட்டம் கூட்டமாக அந்த கடற்க்கரைக்கு புளு பிலிம் ஓசியில் பார்க்க கிடைத்த மாதிரி இளையவர்கள் தொடக்கம் பெரியவர்கள் வரை திரிய தொடங்கி விட்டார்கள்.
அதற்க்கு தலைமை தாங்கி வழி நடத்துபவன் உந்த மோகன் தான் . ..உல்லாச பிரயாணிகளுக்கு இடையூறாகவும் அசெளகரியமாகவும் இருக்கு என நகர சபையினருக்கு செய்தி போக பின்.அகதிகளுக்கு ஊரடங்கு உத்தரவு போட்டு எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தது
.அதனால் உவன் என்னிடம் நெருங்கி நெருங்கி வந்து ஊர் உலகம் காட்டி செய்தி சொன்னால் எப்பவும் எச்சரிக்கையாகவே இருப்பதுண்டு.
என்றாலும் அவன் கூறிய வார்த்தைகள் ....அவன் சொல்வதை திரும்பி பார்க்க வைத்தன.
மச்சான்..நாடு காத்த சிறுவனின் தூபியை பார்த்தேன் கடற்க்கரையிலை வா காட்டுறன் என்றான்.
நாடு காத்த சிறுவன் பற்றி அந்த காலத்தில் எங்களுடைய நாலாம் வகுப்பு பாட புத்தகத்தில் படம் போட்டு கதை சொல்லி இருப்பார்கள்..
இது தான் அந்த கதை
ஒல்லாந்து(ஹாலந்து) தேசம் கடல் மட்டத்திற்க்கு கீழே அமைந்த தேசம்.அதனால் நாடு சூழ கடல் தண்ணீர் உள்ளை போகமால் இருப்பதற்கு அணை கட்டி இருக்கிறது. ஒரு முறை கடற்க்கரை ஓரமாக ஒரு சிறுவன் நடந்து சென்று இருக்கும் போது அணையில் இருந்து ஒரு துவார வெடிப்பூனூடக கடல் தண்ணீர் உள் புகுவதை கண்டான்,.
அந்த துவாரத்தை தன் கையால் பொத்தி கொண்டு அந்த குளிரிலும் இரவு முழுக்க இருந்தானாம் .விடிய ஊரவர்கள் கண்டு ஆவன செய்தார்களாம்.அவன் அப்படி தண்ணீர் வடிவதை தடுக்காவிடில் நாடு அழிந்திருக்குமாம்..அதனால் நாடு காத்த சிறுவன் என்று சொல்லி கெளரவித்தார்களாம்.
சின்ன வயதில் கேட்ட கதை என்றாலும் உருவக கதை என்று தான் என்னுள் இருந்தது.என்றாலும் நாடும் இடமும் கதையும் இவ்வளவு அண்மையில் இருக்கும் போது சரி பார்ப்போமே என்று கிளம்பினேன்.
வெளியில் கார் தரிப்பிடத்தில் ..கார்களில் இருந்து இறங்குபவர்களும் கார்களில் ஏறுபவர்களுமாக இருந்தார்கள் ..இங்கு இந்த அகதி முகாமில் சிலர் சில நேரம் தான் இருப்பார்கள் .மற்ற நேரங்களில் ஒரு நாள் ஜெர்மனி மற்ற நாள் பெல்ஜியம் அடுத்த நாள் பாரிஸ் என்று வாழும் நாடோடிப் பிராணிகள் ...
அவர்களுக்கு நாடு கடக்க சரியான அனுமதி இல்லாவிடினும் அந்த அந்த நாடுகளின் எல்லை வேலிகளின் துளைகளை கண்டு அதனூடாக கள்ள வேலி பாய்ந்து இலகுவாக சென்று வருவதில் சூரர்கள்.இவர்களுடன் சில சமயங்களில் காரில் உந்த கள்ள வேலி கடந்து பெல்ஜியம் ஜெர்மன் என்று சென்று வந்திருக்கிறேன்...
அப்படி செல்லும் போது மற்ற பக்கத்தினால் ஏதோ நோக்கத்துக்காக எங்கோ சென்று கொண்டிருக்கின்ற பொலிஸ் காரை பார்க்கும் போது கூட எல்லாம் என்னைத்தான் பிடிக்க வாறான் என்று நினைத்து அடி வயித்தை கலக்கும்..
நம்மவர்கள் ஜரோப்பாவின் பெருநிலத்தில் கள்ள வேலி தாண்டி இலகுவாக போய் வந்தாலும் உந்த ஆங்கில கால்வாயை கடந்து பிரித்தானியாவுக்கு செல்வது ஒரு போதும் வாய்ப்பாக இருக்கவில்லை. இஸ்லாமியர்கள் மதீனா மக்காவுக்கு ஒரு முறையாவாது போய்விடும் நினைப்பில் இருப்பது போல் இங்கு இருக்கும் பலருக்கு உந்த லண்டனுக்கு போற நினைப்பும் இருப்பதுண்டு
வாசலை தாண்டி றோட்டுக்கு இறங்கும் போது என்னை பெயர் சொல்லி அழைத்த மாதிரி ஒரு அசரீரி குரல் கேட்டது..
சுரேஸ் தான் ..அண்மையில் அவனுக்கு அகதி அந்தஸ்த்து கிடைத்தது .அது கிடைத்த தாமதமே லண்டன் போய்ட்டு வந்திருக்கிக்கிறான் ....என்னை காண வந்திருக்கிறான்....எங்களுடைய திட்டத்தை மாற்றி கொண்டு அவன் நான் இவன் மோகனுமாக அந்த பரந்த பூந்தோட்டத்தத்திலுள்ள மூலையிலுள்ள ஒரு பாருக்குள் பிரவேசித்து கொண்டோம்...எங்கள் பிரவேசத்தை வரவேற்பது மாதிரி அங்கு இசை ஒலித்து கொண்டிருந்தது.பாரில் அவ்வளவு கூட்டமில்லை
மூலையில் ஒரு இளம் ஜோடி ஒன்று ஜிகு ஜிகு மூட்டி கொண்டிருந்தது.இன்னும் கொஞ்சம் தள்ளி நடுத்தர வயது தாண்டிய ஜோடி ஒன்று பழைய முத்தங்களை நினைத்து கொண்டு புதிய முத்தங்களை சொரிந்து கொண்டிருந்தது.இன்னும் கொஞ்சம் செல்ல டச்சு கமக்காரர்களினால் இந்த பார் நிறைந்து விடும்
நாங்கள் எங்கள் மொழியை ராகத்துடன் கதைக்க கூடிய இடமாக பார்த்து மூலையான இடமாக தேர்ந்து எடுத்த கொண்டோம்
நான் தான் கதையை தொடக்கினேன்
என்ன மச்சான் ..லண்டன் போய் வந்திருக்கிறாய் இனிமேல் உனக்கு என்ன சேர் பட்டம் கிடைத்த மாதிரி தான் என்றேன்
ச்சாய்..என்னடா லண்டன் என்று அலுத்து கொண்டான்
அவனது அலுப்பை ஏமாற்றத்தை போல் ஒன்றை 70 களின் நடுப்பகுதியில் இலங்கையில் இருக்கும் போதே பெற்றிருக்கிறேன். எனது வகுப்பு தோழன் ஒருவன் பல்கலைகழக அனுமதி கிடைத்து அது தொடங்க இருக்கும் ஒரு வருட இடைவெளியில் லண்டன் சென்று வந்திருந்தான்...அவனிடம் கேட்ட போது அவன் சொன்னது நினைவில் வந்தது
ஒல்லாந்து (ஹாலந்து) நாட்டு சிறுவன் ஒருவன் (இது இன்னோரு சிறுவன்) லண்டன் தெருக்கள் எல்லாம் தங்கத்தால் செய்ய பட்டது என்று கற்பனை செய்து பின் போய் பார்த்து ஏமாந்த கதை முந்தி வாசித்திருக்கிறேன் .அதே மாதிரி தான் எனக்கு ஏற்பட்டது என்றான்
சுரேஸ் இரண்டாவது ஆட்டத்துக்கு வந்து விட்டான். நான் இன்னும் எனது முதலாவது ஆட்டத்தை முடிக்கவில்லை..எனக்கு முதலாவது கிளாஸ் உள் போகும் வரை எனது முகம் பல அஸ்ட கோண வடிவத்தில் இருக்கும்.ஏன்டா கஸ்டப்பட்டு இப்படி இவன் தண்ணி அடிக்கோணும் முன்னுக்கு இருப்பவர்களை யோசிக்க வைக்கும்.
சுரேஸ் அப்படி இல்லை நிதானமாக குடிப்பான் நிதானமாக கதைப்பான் ஏற ஏற சுவராசியமாக கதைப்பான் ..நானும் இரண்டாவது வந்து விட்டன் என்றால் குசியாகி விடுவேன் நிதானமாக குடிப்பேன். நான் கேள்வி கேள்வி மேல் கேட்டு கதையை பம்பல் ஆக்குவேன் அவனுடன் இப்படியான தருணத்தில் கதைப்பதில் எனக்கு இருக்கும் மகிழ்ச்சி அவனுக்கு நன்கு தெரியும்
.
அதனால் கதைக்க தொடங்கி விட்டான்..இனிமேல் லண்டன் புராணம் தான் என்று விளங்கி விட்டது ..இவன் மோகன் எங்களின் கதை பேச்சுகளில் அக்கறையின்றி கலை நயத்துடன் அங்கினை இங்கினை பிராக்கு பார்த்து கொண்டிருந்தான்.
லண்டனை விட நம்ம லண்டன் வாழ் தமிழர்களின் கதை சுவராசியமானது என்று தொடங்கினவன் நிற்பாட்டவே இல்லை.
வரவேற்பறையை கூட சந்தர்ப்பம் கிடைத்தால் வாடகைக்கு விட்டு விட்டு வருபவர்களை வரவேற்க்க காத்திருக்காதவர்கள்..இவர்கள்
.
இவர்களின் சிரிப்பை இவர்கள் தொலைத்து மறந்து நெடுநாளாகி விட்டது . இந்த நாட்டிலை இங்கு பல சமூகங்களுடன் பழகுகிறோம் புதியவைகளை பெற்று கொள்ளுகிறோம் ..ஏன் சிலர் இந்த நாட்டு மக்களுடன ஓன்று கலந்து காதல் செய்கிறார்கள் ,கலவி செய்கிறார்கள்,கலியாணம் செய்கிறார்கள் ,விவாகரத்து செய்கிறார்கள்..சில வேளை விவகாரப்பபடுகிறார்கள்.
..அவர்��
�ள் அப்படி இல்லை தாயகத்தில் இருந்து அப்படி பெயர்த்து எடுத்து வந்து லண்டனிலை வாழ்கிறார்கள் .இன்னும் சொல்லப் போனால் தேவை இல்லாத (rat race)எலி ஓட்ட வாழ்க்கையை ஒருவரை பார்த்து ஒருவர் ஓடி கொண்டிருக்கிறார்கள்.
மச்சான் ...அவங்கள் எதையோ தொலைத்து விட்டு என்ன தொலைத்தது என்று தெரியாமால் எங்கையோ தேடி கொண்டிருக்கிறார்களடாப்பா.
மற்ற ஒன்றடப்பா.. கொஞ்சம் படிச்ச மட்டம் என்று நினைத்து கொள்ளிறவியளினரை கூத்து பார்க்க இயலாது என்று தொடர்ந்தான்
இந்த படித்தது என்ற ஜாதி கூட்டம் ...தமிழனுக்கு முன்னாலை வெள்ளைக்காரன் மாதிரி காட்டி கொள்ளுவினம்..வெள்ளைக்காரனுக்
கு முன்னாலை தங்களை சரியான பச்சை தமிழனாக காட்டி கொண்டு நிற்ப்பினம்
என்னடா லண்டனை பற்றி கேட்டால் லண்டன் தமிழரை பற்றி சொல்லிறியே இடை மறித்து நான் கேட்டால்...
அவன் அதற்க்கு பதில் கூறவில்லை கதையை மாற்றி ஹாலந்து நாட்டிற்க்கு அவன் வந்த காலகட்டத்து கதையை ஆரம்பித்து விட்டான்
மச்சான் நான் வந்த புதிதில் அம்ஸராடமில் தான் எல்லாரும் இருந்தோம் ..சிறிலங்கா என்ற நாடு உலகத்தில் எங்கை இருக்கு என்று கூட டச்சுக்காரங்கள் அநேகமானவருக்கு தெரியாது.
எங்கட பொடியள் கூட்டம் கூட்டமாக திரிஞ்சாங்கள். அவங்கள் தோளிலை கை போட்டு சென்றதை அவதானித்த டெலிகிராப் பத்திரிகை ..எங்கிருந்தோ கூட்டம் கூட்டமாக காட்டுமிராண்டி ஓரின சேர்க்கையாளர்கள் குழுவாக அம்ஸ்டர்டாம் வந்து இறங்கி இருக்கிறார்கள் என்று இன வாதம் கக்கியது.
சொன்னால் நம்பமாட்டாய்...என்னை ஒரு டச்சு சமூக சேவகி வந்த புதிதில் ஒரு முறை கேட்டாள் உங்களுக்கு பந்து தெரியுமா ..சைக்கிள் தெரியுமா என்று ...நல்ல காலமாக அவள் இப்படி கேட்காமால் விட்டுட்டாள் காதல் தெரியுமா செக்ஸ் தெரியுமா என்று. எங்களை காட்டுக்குள் இருந்து நாட்டுக்குள் வந்த ஆட்கள் என்று நினைத்தாளோ என்னமோ.
பிறகு எங்களுடன் பழகி எங்களை பற்றி தெரிந்து கொண்ட பின் அப்படி நினைத்ததை வெட்கப்பட்டாள் என்றது வேற கதை
இவனது சம்பந்த சம்பந்தமில்லாமால் மாறும் கதையை கேட்க நான் தயாரில்லை என்று எனக்கே தெரிந்தது,,,இந்த தண்ணி அடித்த கிக் போவதற்க்குள் பல நாள் கொள்ளாத எனது நித்திரையை கொள்ள வேண்டும் நினைவு வேற உணர்த்த போவோமா என்றேன்
பாருக்கு வெளியே மூவரும் வெளியே வரத்தான் தெரிந்தது நடுநிசி கடந்து விட்டதை. .டச்சு நடுத்தர ஜோடி ஒன்று நல்ல நித்திரை கிடைக்கட்டும் டச்சு மொழியில் எங்களை வாழ்த்தி கொண்டு வெளியேறி கொண்டிருந்தது.
அதோ தூரத்தில் மங்கிய ஒளியை கக்கி கொண்டு சோம்பிய மாதிரி இருக்கும் கட்டிடத்துக்குத்தான்...திரும்ப
ப செல்ல வேண்டும்..
....இன்னும் கொஞ்ச நேரத்தில் சென்று அடைந்து விடுவோம்
01.04.2014 அன்று எழுதியது.
May be an image of 1 person and water
 
 
 
 

நேர்த்திக் கடன்  - எஸ்.அகஸ்தியர்-

3 months 2 weeks ago

நேர்த்திக் கடன்  - எஸ்.அகஸ்தியர்-

 

 

- எழுத்தாளர் எஸ்.அகஸ்தியரின் நினைவு தினம் டிசம்பர் 8. அவரது நினைவாக இச்சிறுகதை பிரசுரமாகின்றது. இதனை அனுப்பியுதவிய அவரது புதல்வி நவஜோதி யோகரட்னம் அவர்களுக்கு நன்றி. - பதிவுகள்.காம் -

 

‘உவள் ஒரு சரியான திடுமலிக் குமரி, சோக்கான வெள்ளைப் பொட்டை. அறுவாள் நல்ல சட்டையாப் போட்டுக்கொண்டு ஒதுக்கமா நில்லாம, இந்த நடுச்சந்தியில் இளிச்சுப் பிடிச்சுக்கொண்டு என்ன கண்டறியாத விடுப்புப் பாக்குது....!’

‘போச்சுடா, ஆரோ அவசரமாக வாறான். வாறவனும் இளவட்டம் தான்....?’

‘உவள் ஒரு நாய்ப் பிறவி, சிரிச்சமணீயம் அவனைத் தேடியல்லோ போறாள்? படு தோறை....’

‘சனியன் இளிக்கிற விறுத்தத்தைப்பார். மூதேவி, போற வாறவங்களுக்கெல்லாம் வாயத் துறந்து காட்டுதே?’

மரியாம்பிள்ளை அண்ணர் மனுசனாய் நிற்கவில்லை, அவர் நெஞ்சு கெந்தகித்தது.

அப்போது.....

‘அய்யா துரோய், ஏதாச்சும் தாங்கையா’ என்ற குரல் கேட்கவே, அண்ணர் திரும்பிப் பார்த்தார்.

துரை அசட்டையாகச் சட்டைப் பைக்குள் கையை விட்டுத் துழாவி, சில சில்லரைகளை எடுத்து அவள் ஏந்திய குவளைக்குள் எறிந்து விட்டு நடந்தார்.

‘அச்சாத் தொரை, நீங்க நல்லாயிருக்கோணும் துரை’

‘சிச்சீ இவளின்ர தொழில் இதுதானா?’

இதுவரை தொண்டைக் குழியில் ஊனம் வழிய ‘அவவைப் பார்த்த மரியாம்பிள்ளை அண்ணை கண்ணில் இவ இப்படி ஏந்தி ‘வாங்கும்’ காட்சி மிளகாய்ப்பொடி தூவிற்று.

மரியாம்பிள்ளை அண்ணருக்கு இது முகத்தில் ‘பளார்’ அடி, ‘சடா’ ரென்று அங்கிருந்து விலகினார். இருப்பினும் அண்ணனுக்கு எந்த ஒரு வேலையும் நேர் சீராக ஓடவில்லை. அனலாக உந்திய அவர் மேனியில் இப்போது சோர்வு தட்டிற்று. அதனால் ‘ஹாவ்டே லீவ்’போட்டு விட்டு மத்தியானத்தோடு ‘போடிங்’கிற்குத் திருப்பினார்.

மரியாம்பிள்ளை அண்ணன் அசல் யாழ்ப்பாணி. வலு கடுவலான மத விஸ்வாசி. கொழும்பிலே துறைமுகக் கப்பல்களில் வேலை, சீவியம் ‘போடிங்’கில் தான். ஆள் தனிக்கட்டையல்ல, பெண் கொள்ளாத இளந்தாரியுமல்ல. கலியாணம் செய்து பதினைந்து பதினாறு வருஷம் அரை டசினுக்கு மேல் பெத்துப் பெருக்கி விட்டார். பெரிய குடும்பஸ்தர். பொடி பொட்டைகளாக மொத்தம் ஆறுக்கு அண்ணன் அப்பன். இந்த ஆறும் போக அவவுக்கு வயிறு அழித்தது’ மூன்று உருப்படியாகப் பார்த்தால் கணக்கு ஒன்பதாகிறது. அவவுமோ வருஷக் கொத்தி. இந்தக் கோசும் அவ பெறு மாதம். ‘ஏழு மாசத்தில் ஆறு கடக்கப்படாது’ என்று நாலு பத்துத் தெரிந்தவர்கள் எழுதியிருந்தார்கள். என்றாலும், அண்ணர் கடைசிவரை வைத்திருந்து விட்டுப் போன கிழமைதான் பெறுவுக்காக அவவை யாழ்ப்பாணத்தில் விட்டு வந்து ஆறியிருக்கிறார்.

வந்து கால் ஆறவில்லை, அதற்கிடையில் இந்தக் கூத்து. அது அந்தப் போடிங்கின் சாக்குக் கட்டுவால் வந்த சூடோ, அவரோடு இருந்த தங்கராசா மாஸ்டரின் பழக்க வழக்கத்தால் ஏற்பட்ட தோஷமோ சொல்ல முடியாது. தங்கராசா மாஸ்டர் பள்ளிக்கூடச் சட்டம்பியல்ல, அவருக்கு இவர் ‘மாஸ்டர்’ அவ்வளவுதான்.

மரியாம்பிள்ளை அண்ணன் மாசத்தில் முதல் வெள்ளிக்காரன். ஒரே கோயிலும் ஜெபமும் தான். ஆளும் தானும் தன் பாடுமாயிருப்பார். வலிய இழுத்துப் பேசினாலும் ஏனென்று வாய்விட்டுக் கேளார். சாரைப்; பாம்பு போல ஒருவித சோலி சுரட்டுக்குமே போகமாட்டார். ஒரு பரம சாது.

இப்பேர்ப்பட்ட மரியாம்பிள்ளை அண்ணன்தான் இப்போ போடிங்கிற்கு வந்து அமைதியாக இருக்க முடியாமல் அந்தரப்படுகிறார்.

‘அப்போதை அவளைக் காணேக்க பட்டப் பகலாப் போச்சு. அப்பமட்டும் எப்பன் மைம்மல் பட்டிருந்தால் ஆளை வடிவாய் அமத்தியிருக்கலாம். எண்டாலும், அந்தக் கொழும்பாளவைக்கு எந்த நேரமென்டிருக்கே?’ என்று ஒரு கணம் நினைவூறினார்.

மறு கணம் அவர் ஆசை முயல் பாய்ந்தது.

‘மருதானையிலிருந்து ‘வசு. எடுத்து, கோட்டைப் பொலிஸ்ரேசனுக்குப் பின்னால் றங்கி, ஆசுப்பத்திரி றோட் முச்சந்தியில் ஏறினா, அங்கினேக்க அவளைக் காணலாம் நிண்டாளெண்டா, வாச்சுப்போம்....’

உடனே வெளிக்கிட்டுப் போக ‘அவுக்’கென்று உன்னி எழுந்தார். நாரி இழுப்பு வந்து தடி முறிந்தமாதிரி ‘நொறுக்’கிட்டது. ‘கோதாரியில போன நாரிப்பிடிப்பு இன்னும் விட்டபாடில்லை’ என்று மனம் வெதும்ப வெளியில் வந்தார்.

அப்படிக் ‘குஷி’யாக வரும்போது சொல்லிவைத்தாற்போல அன்றைக்கென்று தான் யாழ்ப்பாணத்திலிருந்து ‘அவ’வுடைய கடிதமும் வந்தது.

அக்காவின் கடிதத்தைக்கண்ட போது அண்ணனின் இதயம் கலங்கிக் கூழ் முட்டையாகி விட்டது.

‘வயித்தில வாயில இருக்கிறவ, என்னபாடோ? தனது கட்டிய புருஷனுக்கென்று ஏதாவது விசேஷமாக எழுதியிருப்பா’

பிள்ளைப் பெறுவுக்கு முந்தியே லீவு போட்டுவிட்டு எல்லாப் பிள்ளைகளுக்கும் வீட்டுக்குப் போய் வருவது அண்ணன் வழக்கம். அப்படித்தான் அவ எழுதியிருப்பா என்ற நினைப்பில் அதைப் பிரித்து வாசித்தார். அண்ணன் எதிர் பார்த்தபடி தான் அவவும் எழுதியிருந்தா.

அதிலே குருசு அடையாளம் உட்பட எழுதியிருந்த வெவ்வேறு தெய்வ வேண்டுதல்கள் போக, இஞ்ச ஆளணியில்லை ‘நாள்ச் சரக்கும்’ நேர காலத்தோட வேண்ட வேணும், ஆனமட்ட, முந்தின பிள்ளைப் பெத்துகளுக்கு வந்துபோன மாதிரி, இந்தக் கோசும் வாருங்கோ! என்று கண்டிருந்தது வாசகம்.

அவ அவரை நம்பித்தான் அப்படி எழுதினா. ஆனால், அண்ணன் இந்தக் கோசு குந்தகம் பண்ணி, ‘இப்ப லீவு கீவு எடுக்க ஏலாது. பிள்ளையை நல்ல சுகமாகப் பெற வேணுமெண்டு இஞ்ச கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் கோயிலுக்கு நேந்து ஒரு கட்டு மெழுகுதிரி கொழுத்திறன். நீ ஒண்டுக்கும் யோசியாதை, அந்தோனியார் சுகம் தருவார். எல்லாத்துக்கும் பிறகு வாறன்’ என்று நாலு வரி எழுதி அனுப்பிவிட்டு, போகவேண்டிய ஸ்தலமான கொழும்புக் கோட்டைக்கு. ‘சடா’ரென்று கிளம்பினார்.

பொழுது மைமல் பட்டுப் பூமியும் கருகிக் கொண்டு வர, அண்ணனும் கோட்டைச் சந்திக்கு வந்து விட்டார். அவரது துரதிஷ்டம், சந்தியில் அவர் எதிர்பார்த்த அந்தப் பெட்டையைக் காணவில்லை.

அவர் முகம் தொட்டாற் சுருங்கிபோல் ‘சட்’டென்று சூம்பியது.

‘பொக்கட்’டுக்குள் போட்ட கைகள் தாமாகத் துழாவ நாலா பக்கங்களும் கண்களைச் சுற்றிக் கொண்டு பெரிய ஒரு ‘துரை’ போல, சாலை ஓரம் அங்குமிங்குமாகக் கால்களை எறிந்து மெதுவாக நடந்து கொண்டிருந்தார்.

அச்சா, அண்ணனுடைய ‘அது’ இரண்டு நிமிஷத்தில் அங்கே வந்து விட்டது.

அண்ணன் தலை கால் தெரியாமல் பதறினார்.

ஆசை, நாணம், பயம் ஆகிய உணர்ச்சிகளால் தாக்குண்டு, அவற்றைத் தன்னுள்ளே அடக்கி கனலாய் எரிந்து தீயும் உடற்கட்டை, கேவலம், ஒரு சாதாரண நாணத்தின் உள்ளடக்க நரம்புகளால் தாக்குப் பிடித்தபடி அவர் மறுபடியும் சுற்றிப் பார்த்தார்.

அறிந்த முகங்கள் அங்கே தென்படவில்லை.

இனி என்ன, யோகம்தான். யாரும் நின்றால் கூட இனங்கண்டு கொள்ள முடியாது.

நல்ல செக்கல் பொழுது.

கொட்டுக்குள் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்க, அவராக வலிந்துகொண்ட தென்பும் உறுதியும் ஒருவாறு அவரை ஆட்கொண்டன.

அப்பவும் ஒரு கணம் அவர் யோசனை பயங்கரமாகத் திசை திரும்பியது.

‘கடையங்கள் ஆரெண்டாலும் இந்த நேரம் நிண்டு இதைக் கவனிச்சா....?’

கிலுக்கட்டியாக ஆடும் உடலையும், வெடவெடத்து உதறி எடுக்கும் நெஞ்சையும் அவருடைய ஒரு அற்ப ‘ஆசை’யானது உள்ளுர அவரை மாய்த்துக் கொண்டது.

அவ்வேளை யாராவது இனந்தெரியாமல் மெதுவாக வந்து ஒரு ‘டேய், போட்டால், ஆள் அப்படியே காலியாகி விடுவார். அப்படி அண்ணன் அங்கே அங்கலாய்த்துக்கொண்டிருந்தார்.

சற்றுக் கொஞ்ச நேரம் சுணங்கி, பின் பக்கமாகக் கழுத்தைத் திருகிப் பார்த்துவிட்டு, ‘அவுக்’கென்று ‘அவ’வுக்குக் கிட்டப் போய், ஏய்..... ஏய்.... இஞ்ச வா - இப்படி வா’ என்று நாக்குதறி அவர் வாய் அழைக்க, சரீரமோ மிருதங்க ஆவர்த்தனம் செய்து ஒரு ‘கிறுத்தா’ போட்டது.

‘ஐயா தொரை, ஏதாச்சும் தாங்க தொரை’ என்று வழக்கம் போல கேட்டுக் கையை நீட்டினாள் அவள்.

உடனே அண்ணன் பெரும் அந்தரக்காரரானார்.

அண்ணன் எடுத்துக்கொடுத்த ஐந்து ரூபாய் நோட்டையே அவ பவ்வியமாக வாங்கி, அதைச் சற்று உற்றுப்பார்த்து, பின் ஒரு சந்தேக வினா எழுப்பி, வியப்பில் மூழ்கிய முகத்தோடு மௌனமாகச் சாரை போல் திரும்பினா.

தொரை சல்லியைப் பார்க்காம தந்திட்டு முழுசிறாரோ? என்று நினைத்தவள், திரும்பி நின்று, நீங்க நல்லாயிருக்கோனு தொரை’ என்றாள்.

அண்ணன் நிலத்தில் நிற்கவில்லை, தேகம் பஞ்சடித்தது.

‘ஏய், இந்தா, ஏய் இஞ்ச வா’

‘சல்லியைத் திருப்பி வாங்கிறத்துக்கோ!’

தாமரை இலைமேல் குதித்த நீரோட்டத்தில் மனம் தவிக்க, வெள்ளைக் கடதாசியில் தெளித்த மையாக அவ முகம் கறுத்தது.

‘என்னது, என்னைக் கூப்பிட்டீங்களா?’

நுனி விரலின் விளிம்பு நகத்தை, நாணிய முக வாயில் கோணி வைத்துக் கடித்தபடி திரும்பி வந்து சிரித்துக் கொண்ட அவள், அவர் முன்னால் இடுப்புக் குத்தி, ஒரு சள்ளைத் தாக்கில் நின்றாள்.

அவள் பார்வையில் பெரும் பசி

‘உன்ர பேரென்ன?’

‘ம் பேரோ? ’

அவவுக்கு வெட்கக் களிப்பில் சாடையா முகம் சளித்தது. ஓட்டுக்குள்ளே வாங்கியிழுக்கும் நத்தையாக விழிகள் மேலிட, வார்த்தைகள் பிணமாகின . தலையைக் கவிழ்த்துக் கொண்டே, காற்பெரு விரலால் நிலத்தைச் சுரண்டிக் குழி பறித்த வண்ணம், ‘ஏன் தொரை பேர் கேக்கிறீங்க ‘ என்றா எடுப்பாக.

மரியாம்பிள்ளை அண்ணனுக்கு அப்போது ‘கிளக்’கிட்டு மின்னல் ஊசி ஊடுருவுவதாகப் பிரமை தட்டிற்று. ஆள், அந்தரமாகினார்.

‘வேணும், சும்மா கேட்டனான்’

‘என்னத்த வேணும்ங்கிறீங்க,’

அவ திமிறித் திமிறிச் சிரிக்கும்போது முகத்தில் மத்தாப்புப் பூக்கள் சொரிந்து கொண்டிருந்தன.

‘நீ எங்க இருக்கிறனி?’

‘அய்யய்ய, அவற்ர ஆசையைப் பாருங்களேன்’

அவ நினைவில் மிடுக்கு ஏறி, பரிகாசம் துள்ளியது.

‘ ஏன் தொரை, ஓங்களுக்கு ‘வேணும்டா பேசாம அப்படியே வர்றத்துக்கு அங்கால ஏன் ‘சும்மா’ என்னத்தையோ ஒப்பினைக்குக் கேக்கிறீங்க?’

அவர் நோக்கத்தை அவ அறிந்து விட்டா, விஷயம் பெரும் வெற்றி.

அண்ணர் பறக்கச் செட்டை கட்டினார்.

‘எங்க வாறது?’

தீவிர எடுபிடியில் குருக் குத்திய அவவின் கேள்வியில், அண்ணர் தீய்ந்து போய் நின்றார்.

‘அப்படீன்னா வாறீங்களோ?’

‘ஓம், வாறன்!’

‘அது சரி, எப்பன் நிலத்தில் நில்லுங்க’

‘எட பகுடி கூட விடுறாளே. இடம் கண்ட வேளை மடம் பிடுங்குற வேலை’

‘ ஹி....ஹி.....ஹி....’

பற்களெல்லாம் மல்லிகைப் பூக்களாகத் தெரிய, அண்ணன் வாய் ‘ஆ’ வென்று அகன்று இளித்தது.

அண்ணன் எதிர்பாராத ஒரு எரிசரப் பாணத்தைத் திடீரென்று தொடுத்தாள்.

‘தொரை, கலியாணம் செஞ்சனிங்களோ?’

‘ம்........’

‘என்ன தொரை, வாய்க்குள்ள முட்டையா?’

‘ஆங்’.....?’

‘கல்யாணம் செஞ்சனீங்களோ’ன்னு கேட்டேன்?’

‘.......இல்......லியோம்!’

அசல் துரோகம் தான். ஆனாலும், அண்ணன் இதிலே வலு துணிச்சல்காரன் என்பதை எப்படியோ பிரகடனமாக்கினார்.

‘சரி, வாங்க போவம்’

‘கிண்’ணென ஒரு எரி நட்சேத்திரக்கதிர் அவர் உடம்பில் ஊடுருவி எரிந்தது, கண் மூக்குத் தெரியவில்லை.

‘வேகமாகக் கிளம்பின புயல் தன் பாட்டுக்கு அடித்த பின் தான் அமைதி கொண்டுறையும்’

அண்ணனின் உவமானம் அசல்.

‘அற நனைந்தவனுக்குக் கூதல் என்ன கொடுகடி என்ன?’ என்றது, அவர் மனம்.

ஒருநாள் யாழ்ப்பாணத்திலிருந்து அண்ணன் பெண்சாதியின் பிள்ளைப்பெறுவை அறிவித்து அவருக்கு ஒரு தந்தி வந்தது.

அந்த வருஷ லீவு கொழும்பிலே கழிந்து விட்டதால் அவர் ‘மெடிக்கலில் ‘ தான் யாழ்ப்பாணம் போனார்.

போன இரண்டாம் நாளே யாழ்தேவியில் திரும்பி வந்து குதித்தார். வந்ததும் சிந்தனையில் ஆழ்ந்தார்.

அக்காவோ பெரும் நுணுக்கக்காரி.

அதனால் அவ, ‘நான் செத்தாலும் என்ர பிள்ளைப் பெத்துக்குத் தரும ஆசுப்பத்திரியை எட்டியும் பார்க்க மாட்டேன்’ என்று ஒரே பிடிவாதமாகச் சொல்லிவிட்டா. இதை அறிந்த அவ மாமிக்காரி ‘என்னடியாத்தை, எக்கணம் ஏதேன் வில்லங்கமெண்டால் பிறகு குத்தி மாயுறதே?’ என்று விஷயத்தைக் கேட்ட போது, அதற்கு அக்கா, ‘ஆசுப்பத்திரி வளிய போனா, ஆம்புளை டாக்குத்தர்மார் வந்து பாப்பினம், அது பெரிய கிலிசகேடு, மானம் மருவாதையான பொம்புளையள் சம்மதியாளவை. எனக்கும் அதுதான் கூச்சமாயிருக்கு’ என்று தனது ‘புருஷபக்தி’யையும் காட்டிப் பெருமை கொண்டா.’

அதனிமித்தம் வீட்டில்தான் பிள்ளை பெறுவும் நடந்தது. மரியாம்பிள்ளை அண்ணன் உண்மையில் வெறும் நோஞ்சல் தான். என்றாலும், அக்கா பெற்றெடுத்ததோ நல்ல ஆண் குஞ்சு.

இதனாலும் மரியாம்பிள்ளை அண்ணருக்கு ஒரே யோசனை.

கிட்டத்தட்ட ஆறுமாதங்கள் கழித்து, ஒருநாள் குழந்தை சம்பந்தமாக அக்கா ஒரு கடுதாசி எழுதியிருந்தா.

‘... புள்ளய மாதா கோயில்ல அடைக்கல ஆச்சியின் காலடிக்குக் கொண்டு போய் அவவின்ர சந்நிதியில் வைச்சு ‘நாளுக்கு’ச் சோறு தீத்த வேணும். ஆன மட்ட, அதுக்குக் கட்டாயம் அல்லத் தட்டாமல் வந்திடுங்கோ’

இதற்கும் அண்ணர் ‘மெடிக்கலி’ல் தான் போனார்.

பாவம், ஆறு ஏழு மாசமாக என்ர முகம் காணாமல் தவிச்சிருந்தவர்.

அக்காவுக்குப் பரிவும் வாஞ்சையும் இரக்கமாகப் பரிணமித்தன. அவவாகவே, பாயைப் போடட்டோ?’ என்று ஆசையுடன் கேட்டு வைத்தா.

அவ்வேளை அவர் தன்னுள் ‘இது பாவத்துக்குத் துரோகம் செய்யப்படாது. செய்தால் அது பெரும் கறுமம்’ என்று எண்ணிக்கொண்டு, சூம்பிப்போன தனது கைவிரல்களைச் சாடையாகத் தூக்கிப்பார்த்தார்.

அவருக்கு அருவருத்தது. கடவாய்க் கணுக்குகளோ பொருக்கு விட்டு, வெடித்து, புண்ணாகப் புரையோடிக் கிடந்தன. ஒரு தடவ காறித் துப்பிவிட்டு, பெண்சாதியைப் பரிதாபம் நிறைந்த கண்களால் நுணுகினார்.

மனம் சஞ்சலப்பட, இருமல் வேறு குமைந்து தொல்லைப் படுத்திற்று. ஒரு சவாலாக மூச்சைப் பிடித்து இருமியதால் ஆள் நன்றாகக் களைத்து விட்டார். பேசுவதற்கு வாய் திறபடாமல் இளைப்பு வேறு. அவர் கோது நெஞ்சை உயர்த்தித் தாழ்த்தியது.

. உதென்ன உந்தக் கை விரலெல்லாம் குண்டூறு மாதிரி பொருக்கு வெடிச்சிருக்கு?’

அழுகின்ற பாவனையில் அக்காவிடம் வெடித்துக் கிளம்பிய சந்தேக வினா, கிழித்த பனங்கிழங்கில் சதை வறுகி எடுத்த நிலைக்கு அவரை ஆளாக்கியது, அதற்கும் அண்ணர் ஒரு விளக்கம் கொடுத்தார்.

‘ஒருநாள் ராத்திரி, கக்கூசுக்குப் போக வாளிய எடுத்தன். ‘அவுக்’கடியேண நிலம் சறுக்கிப் போட்டுது. அந்தடியலா வாளியோட மலாரடிச்சுக்கீழே விழேக்க போணி ஒண்டுக்க கிடந்த நெருப்புத் தண்ணி தெறிச்சுக் கை முழுதும் பட்டிட்டுது.

அக்காவுக்குச் சொல்லித் தீராத கவலையாயிற்று.

‘நல்லவேளை, அது கண்ணில் பட்டிருந்தால்? ஏதோ கண்ணுக்க வாறதப் புருவத்தோட வைச்சி அந்தோனியார் காப்பாற்றியிருக்கிறார். என்ர மண்டாட்டம் வீண் போகேல்ல, என்று அவ எண்ணிய போது, அக்காவின் இருதயம் கரைந்தது, கண்கள் கசிந்து கண்ணீராகக் கொட்டின.

‘தேகத்தைக் கீகத்தைக் கவனிக்கிறேல்ல, சுகமில்லாம இருந்தாலும் ‘ஓவர் ரைம்’ எண்டு சொல்லி நித்திரை முழிச்சு ஓயாம வேலை செய்யிறது. உப்பிடி அக்கப்பாடு பட்டு எங்களைக் காப்பாத்த வேணுமே? சுவர் இருந்தால் தானே சித்திரம் கீறலாம்?’

அவ சொல்ல வாய் மூடவில்லை, கண்ணீர் பொலு பொலுத்துக் கொட்டியது. துக்கம் தொண்டையை அடைக்க வாள்கள் இதயத்தினூடாகப் பாய்ந்தன.

‘என்ர அடைக்கல ஆச்சி, அவருக்க நல்ல சுவத்தைக் குடண தாயே!’

நெஞ்சு கரைய மனசுள்ளே மன்றாடி, மாதா கோயிலுக்கு ஒரு நோர்த்திக் கடன் வைத்துப் பிரலாபித்த தனது மனைவியை, அண்ணன் ஏக்க விழிகளால் நோக்கிக் கொண்டேயிருந்தார்.

காலையில் அவர் தானாக எழுந்திருக்கவில்லை. பாயில் தீய்ந்து போய்க் கடந்த அவரை, அக்கா போட்டுக் கொடுத்த முட்டைக் கோப்பிதான் தட்டி எழுப்பியது.

அந்த வாரத்துடன் ‘மெடிக்கல் லீவு’ம் முடிந்தது.

அண்ணன் சேமமே கொழும்புக்குத் திரும்பினார். கொழும்பு அவரை உறங்க வைத்தாலும், அண்ணனோ கொழும்பை உறங்க விடாது ‘தொடு தொடு’த்துக் கொண்டிருந்தார். கொழும்பிலே யார் கேட்க இருக்கிறார்கள்?

கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து, ஒருநாள் அவர் மனைவி, பச்சாத்தாபத்தோடு எழுதிய ஒரு கடிதம், உண்மையாகவே அவரின் இருதயத்தைக் கசக்கிச் செக்காட்டியது.

கண்ணீர் வெதும்ப அதை வாசிக்கலானார்.

‘அன்னை மேரி மாதாதவை முன்னிட்டு வாழும் என்மேல் பட்சம் மறவாத ஆசை நாயகர் அறிவது என்னவெண்டால், நாங்கள் எல்லோரும் அச்சேட்ட அடைக்கல மாதாவின் கிருபையால் நல்ல சுகமாக இருக்கிறோம். அதுபோல நீங்களும் உவ்விடம் நல்ல சுகமே இருக்க, கோடி கோடி அற்புதரான கொச்சிக்கடை அந்தோனியாரைப் பாத்து அனுதினமும் மண்டாடி வருகிறோம்.

ஒரு வியளம், அது என்னவெண்டால், நீங்கள் இந்தக் கோசு வந்திட்டுப் போன் பிறகு, என்ர வாயில கொஞ்சம் அவியல் தாவியிருக்கு தேகமும் ஈக்கில் மாதிரி மெலிஞ்சு வருகுது. பால் குடிக்கிற புள்ளையும் இருமுது. அது கறுமம். அதுக்கு வாய் கீய் எல்லாம் அவிஞ்சு போய் இப்ப பரியாரி சுப்புறுமணியத்திட்டக் காட்டுறம். அது பச்சைப் பாலன், வாய் துறந்து பால் குடிக்குதில்லை. எல்லாம் ஆண்டவன் சித்தம் ஒண்டுக்கும் யோசிக்க வேண்டாம். அச்சேட்ட அந்தோனியாரும் அடைக்கல மாதாவும் எப்படியோ சுவம் தருவினம்.

நீங்கள் நல்லாச் சாப்பிட்டுத் தேகத்தைக் கவனியுங்கோ, அதுதான் முக்கியம். சுவர் இருந்தால்தானே சித்திரம் கீறலாம்? உங்கட சுகமே எங்கட பாக்கியம்.

உங்கள் அன்பான மனைவி,

ம. பெர்ணபேத்தம்மா.

கடிதத்தை வாசித்து முடிக்க, அவருக்கு ‘விஷயம்’ முற்றாகப் புரிந்து விட்டது. அப்போது அவரின் சுய உணர்வு செத்து, அவர் முகத்தில் கண்ணீர் வழிந்தது.

நெஞ்சு கரித்து அழுந்த, விறைப்பெடுத்த முகவாய்க் கட்டையைச் சால்வையால் அப்பியபடி எழுந்த போது, விம்மி வந்த அழுகையை அவரால் அடக்க முடியவில்லை.

பனங்கற்றாளைச் சாறாகக் கண்கள் நீர்த்து மினுமினுக்க, எடுத்த துவாயால் வாயைப் பொத்திக்கொண்டு, விழியுருட்டி மேலே பார்த்துப் பிரலாபித்து அழுதார்.

‘அச்சேட்ட அந்தோனி முனியோரே! அது ஒண்டும் அறியாத பாவி, எப்பனும் வஞ்சகம் இல்லாதது. அதுக்கு எந்தக் கெட்ட வருத்தமும் வராமல் காப்பாத்து ராசா. நான்தான் பாவக்காறன். வேணுமெண்டா என்னை வருத்திச் சாக்கொல்லு. அதி அற்புதரே! வாற கிழமை நான் சம்பளம் எடுத்த கையோட உன்ர ஆலயத்துக்கு ஓடி வந்து ஒரு கட்டு மெழுகுதிரி கட்டாயம் கொழுத்திறனனை.. அதுக்கு மட்டும் நோய்வராமல் காப்பாத்தி நல்ல சுகத்தைக் குடுராசா.

இப்படியெல்லாம் மனசு கதற ஒரு நேர்த்திக் கடன் வைத்து மரியாம்பிள்ளை அண்ணன் சாறு பிழிந்த தக்காளிப்பழமாக, துவைத்த கண்களும், நெகிழ்ந்த நெஞ்சுமாக அழுது கொண்டு கொச்சிக்கடை அந்தோனியார் கோயிலைத் தேடி விரைந்தார்.

போய்க்கொண்டிருக்கும்போது, அந்தக் கோயில் வீதி யோரத்திலே, அந்தக் கொழும்பு – கோட்டைச் சந்தியிலே சந்தித்த அவரின் ‘ஆசை’க்கினிய பிச்சைக்காரி, புழுக்கள் கெந்த, தேகம் பொருக்கடித்துப் பிரேதமாய்ச் செத்துக் கிடந்தாள்.

ஐயோ என்று அவர் ஆத்துமா வாயடங்கிக் குழறியது.

அண்ணன் அன்று வேலைக்குப் போக விலலை. ஆள் ‘அப்ஸ்ன்ற்’

* 1963 இல் தேனருவி இதழில் வெளியான சிறுகதை.

https://www.geotamil.com/index.php/2021-02-11-18-01-46/8292-2023-12-08-14-26-22

Checked
Thu, 03/28/2024 - 19:25
கதை கதையாம் Latest Topics
Subscribe to கதை கதையாம் feed