யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்

ஏனடி காதலால் கொல்லுகிறாய்

Sat, 15/04/2017 - 04:50

உன்......... 
கதவில்லாதா ......
உறங்கும் அறைபோல் ......
என் இதய அறைக்குள் ....
நீ .................................!

உன் ..........
கூந்தல் காற்றில் ஆடும் ......
கண பொழுதெல்லாம் .......
இதயம் படும் வேதனையை .......
எப்போது அறிவாயோ ......?

உன்னை நினைத்து .......
எழுதும் கவிதையை .......
காதல் தெரியாதவர்கள் .......
காதல் பித்தன் என்பார்கள் ......
உனக்கு புரிந்தால் போதும் .....
நான் உன்  காதல் சித்தன் .......!

&
கவிப்புயல் இனியவன் 
ஏனடி காதலால் கொல்லுகிறாய் 

தமிழ் அகராதி சொல்லில் கவிதைகள்

Sat, 15/04/2017 - 04:34

அ ன்பு உள்ளங்களே..... 
அ ன்பு காலை வணக்கம் .....
அ திகாலை எழுத்தவன் ......
அ திசக்தி ஆதவ்னையே.....
அ ருகில் வரவைப்பான்......!

அ ன்பினால் ...
அ கிலத்தையே வெல்லலாம் ....
அ ங்கிகள் தொடக்கம் ...
அ ருகில் உள்ள உயிர்வரை ...
அ ன்பு செலுத்துங்கள் .....!

அ ற்புதங்கள் என்பது ....
அ திசயம் செய்வதல்ல ...
அ ன்புக்கு கட்டுபட்டு ...
அ ண்ட சராசரத்தோடு ....
அ டக்கமாவதே .........!

அ ன்று சொன்னதை செய்ததை ....
அ ன்றே மறப்பவனே ....
அ தி உயர் மனிதன் ....
அ தையே நினைத்துகொண்டிருந்தால் ...
அ ன்றைய இன்பத்தை இழப்பாய் ....!

அ ந்தி சாயும் நேரம் ....
அ ன்றைய நிகழ்சிகளை ...
அ சைபோட்டுபாருங்கள் ....
அ ருவருப்பான செயல் எது ...?
அ ரவணைப்பு செயல் எதுவென .....!

&
கவிப்புயல் இனியவன்

ஈஸ்டர் கவிதை

Fri, 14/04/2017 - 22:51

17883823_10155197244671950_7121940480000

ஈஸ்டர் கவிதை

பாரஞ்சுமந்தவரை பக்கமழைத்து - இன்ப
பரலோக ராச்சியத்தைக் காட்டு மன்பனாய்
ஈரமனத்தினொடு பாவிகட்கெல்லாம் - தன்றன்
இரட்சிப்பை ஈந்தவரை ஏற்கும் சுதனாய்

நானே வழி எனது சத்தியத்திலே - நின்றால்
நமது பிதாவினை நீர் சென்றடைகுவீர்
வீணே வழிதவறிச் சென்றிடாமலே - எந்தன்
வௌ்ளாட்டு மந்தைக்குள்ளே வந்திணைகுவீர்

செய்திட்ட பாவெமெ்ல்லாம் கொண்டுவருவீர் - எந்தன்
சேவடி தன்னிலதை ஒப்புக் கொடுப்பீர்
உய்ய மனந்திரும்பி வாருமன்பரே - நான்
உங்களுக்காக என்றன் உயிர்கொடுப்பேன்

பாவத்தின் சம்பளமே மரணமதாம் - அந்தப்
பாவத்தை ஏற்கிறேன் பயமொழிவீர்
தேவன் எமது பிதா சன்னதியிலே - நித்ய
ஜீவன் உமக்குண்டு நீள் புவியிலே

ஆக்கினையை உங்களுக்காய் அனுபவிப்பேன் - செய்யும்
ஆட்களுக்கும் மன்னிப்பைப் பெற்றுக் கொடுப்பேன்
தூக்கிச் சிலுவையிலே தொங்க வைத்தாலும் - அந்தத்
துயர் பொறுப்பேன் உமக்காய் உயிர் துறப்பேன்

தட்டத் திறக்குமந்த அருட்கதவு - அங்கு
தாழ்பணிந்து கேட்பவர்க்கு இல்லை மறுப்பு
எட்டுத் திசையும் தேடும் இன்னலங்கில்லை - எங்கள்
இதயத்துள் உள்ள அதற் கீடிணையில்லை.

என்றுரைத்த இயேசு சுதன் ஆக்கினையினால் - ஏலே
ஏலே லாமாசபக் தானி எனவே
தன்துயரம் தாங்காமல் பரிதவித்தான் - அவன்
தவிப்பினில் பங்கெடுத்துத் துயர் பகிர்வோம்

இன்று சுதன் பட்டதுயர் நினைவில் வைத்தே - அதை
ஈஸ்டர் என இவ்வுலகம் அனுஷ்டிக்குதாம்
அன்று மனிதர் புரிந்த பாவமனைத்தும் - தாங்கி
அற்புதனின் அன்புலகில் நிலைநிற்குதாம்.

(ஏலே
ஏலே லாமாசபக் தானி - இறைவா இறைவா என்னையேன் படைத்தாய்)

 போர்ப்பரிசு

Fri, 14/04/2017 - 21:21

                                                                                                                           போர்ப்பரிசு


மருத்துவமனையிலிருந்து வெளியே வந்த சுமதிபால அங்கேயிருந்த சீமேந்தாலான இருக்கையிலிருந்து வானத்தை வெறித்துப் பார்த்தபடி, தனது முழங்காலைத் தடவிக்கொண்டு பெருமூச்செறிந்தவாறு சிந்தனையில் ஆழ்ந்தான். அம்மா! என்ற சத்தம் அவனது சிந்தனையை சிதறடிக்க சத்தம் வந்த திசையைப் பார்க்கிறான். அங்கே வெள்ளைப் பிரம்போடு ஒருவர் எழும்பமுயன்றுகொண்டிருந்தார். அருகே சென்ற சுமதிபால, அவரைத் தாங்கிக் கொண்டு வந்து தானிருந்த இருக்கையில் இருத்திவிட்டு, "வத்துறு பொனவத,, என்று கேட்டான். வெள்ளைப் பிரம்போடிருந்தவர் வேண்டமென்று தலையசைத்தார்.இவனே பேச்சைத் தொடர்த்தான். "கொய்த யன்ன,, என்று கேட்கவும், நான் தமிழ் என்று கூறிவிட்டு அமைதியாக, ஒரு சில மணித்துளிகள் அமைதியாகக் கழிந்தன. சுமதிபாலாவோ கொச்சைத் தமிழில் எங்க போகிறீர் எந்த ஊர் எப்படிக் கண் தெரியாமல் போனது போன்ற வினாக்களைத் தொடுக்கிறான். பேரூந்துக்கான நேரம் இருக்கிறது என்பதை அசைபோட்டுவாறு அமைதியாக இருந்த மயூரனின் மனதுள் உங்களாலதானடா இந்த நிலை என்று கத்தவேண்டும் போல் இருந்தது. அடக்கிக் கொண்டவனின் எண்ண அலைகள் பின்னோக்கி நகர்கிறது. 
மயூரன் ஓரளவு வசதியாக வறுமையற்ற நிலையில் வாழ்ந்த குடும்பம். தைப்பொங்கல் திருநாளிற்கு முந்தையநாள். அவனது கிராமமும் தைத்திருநாளை வரவேற்க ஆவலோடு காத்திருக்கப் பொழுது நள்ளிரவைக்கடந்திருந்தது. அப்பப்போ ஆமி வருவதும் கைது செய்வதும் காணாமலாக்கப்படுவதும் நடக்கும். ஆனால் நள்ளிரவைக் கடந்தபொழுதில், அன்று வழமைக்கு மாறாக அதிக வானங்களின் நடமாட்டம். தாய் தந்தை தமக்கையுடன் வாழ்ந்த மயூரன், பொங்கலிடுவது உறவுகளோடு களிப்பது முருகண்டிக் கோவிலுக்கு ஈருருளியில் போவது என்று மறுநாள் நடைபெற இருக்கும் பொங்கல் திருநாளின் குதூகலமான நினைவுகளோடு உறங்கிவிட்டான்."அடோ நக்கிண்ட என்ற குரல்கேட்டுத் திடுக்குற்றெழுந்த மயூரன் திகைத்துப்போய் நின்றான். தாயும் தந்தையும் முழங்காலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.தமக்கையைக் காணவில்லை. பால்ய வயதை நெருங்கியிருந்த மயூரன் நடுங்கியவாறு அழுதவனை படையினனின் மிரட்டல் நிறுத்தியது. "அடே ஒங்கட மாமா„ எங்க! அவன்... "அவர் இஞ்சை  வாறேல்லை„ என்றதை நம்பவில்லை. பொறு...கியண்டெப்பா! தமது காவலரணைக் காக்க முடியாத  சிங்களப்படைகள் இதயரூபனது தமக்கையின் வீட்டைச் சல்லடை போட்டன. இதயரூபனின் அணியே தாக்குதல் நடாத்தித் தமக்கு இழப்பை ஏற்படுத்தியது என்ற வெறியில் தேடுதல். தேடுதலின் முடிவில் தறதறவென்று இழுத்துச் செல்லப்படும் ஒலி அழுகை ஒலி என அதனைத் தொடர்ந்து சில வேட்டொலிகளும் கேட்டன. தாயும் தந்தையும் பிணமாகிச் சாயத் தமக்கை என்ன ஆனாள் என்றறியாது மயூரன் அனாதையானான். மாறி மாறி உறவுகளின் பராமரிப்பில் வாழ்ந்த மயூரன் பதிட்டுவயதை எட்டிய இளைஞனான். 
எல்லா இளையோரும் வயதுக்கேயுரிய விளையாட்டுக்களோடு களிக்க இவன் அமைதியாகவே அந்த மைதானத்தின் ஓரத்தில் நிற்பான். அப்பப்போ அங்குவரும் சைமனின் அறிமுகத்தால் புலிகளோடு பழகி பின்னர் புலியாகவே வாழ்ந்தான். பல்வேறு சிறுசிறு தாக்குதல்களை வெற்றிகரமாக நடாத்திய மயூரனுக்கு பெரும் சமரின் போர்களமாய் விரிந்த ஆனையிறவுச் சமரிலே அவனும் பங்கெடுக்கும் வாய்ப்பு. சுண்டிக்குளச் சதுப்பு நிலத்தைக் கடந்து நீர்பரப்பில் இருக்கு முட்கம்பிவேலித் தடைகளைக் களைந்து அணிகளுக்கான பாதையைத் திறக்கும் பணி. அவனோடு வந்த அணியில் இருவர் குறிசுடும் தாக்குதலில் வீரமரணமடைய, வித்துடல்களை நகர்தியவாறு தமது அணிக்குக் கொடுக்கப்பட்ட பணியை நிறைவுசெய்த திருப்தியில் மயூரன் மகிழ எங்கிருந்தோ வந்த துப்பாக்கிக் குண்டொன்று அவனையும் பதம்பார்க்கிறது. மருத்துவஅணி அவனுக்கு முதலுதவியளித்துவிட்டு மருத்துவ முகாமுக்கு அனுப்புகிறது. அன்றுதான் அவனுக்குப் பார்வைதெரிந்த இறுதிநாளாகவும் அமைந்தது. பார்வை இழந்தபோதும் அவனது கண்ணுக் கண்ணாகச் சகபோராளிகள் பரிவுகாட்டுவதும். நடக்கப் பழக்குவதும், எல்லாவற்றையும் விட ஆனையிறவின் மீட்பு அவனுக்குப் பார்வை இழந்த கவலையைப் போக்கியது. காலம் வெகு வேகமாக உருண்டோடியது.  இறுதியுத்தம் பெரும் கோரத்தாண்டவமாடி எல்லாவற்றையும் உலுப்பிக் கொட்டிவிட்டு ஓய்ந்தபொழுதில், இவன் இடம்தெரியா முகாமொன்றில் இருந்தான். அவன் முகாமிலிருந்து வெளியேறும்போது, தனியே நின்ற மார்க்கண்டர்ளூ "தம்பி! என்னோட வாருமன் என்று கேட்க, " ஐயா! நானொரு சுமைதானே ஐயா! உங்களை யாரெண்டும் தெரியாது,, என்று இழுத்தான்.  மார்க்கண்டர் அருகேவந்து, ' நீங்கள் யாரென்றும் ஊரென்றும் உறவென்றும் பார்த்தே போராடினீர்கள்! தம்பி வாரும் எனக்கும் ஒருதரும் இல்லை எல்லாரையும் குடுத்துட்டன்,, என்றார் பெருமூச்சோடு. அந்தப் பெருமூச்சில் ஆயிரம் அர்த்தங்கள் இருப்பதை மயூரன் உணர்ந்தான். அவரோடு நடக்கத் தொடங்கினான். இன்று மருத்துவப் பரிசோதனைக்காக வந்தவன் மருத்துவமனையைப் பூங்கா அமைத்து அழகுபடுத்த வைத்திருந்த கற்களில் தட்டுப்பட்டே விழுந்தான். 
அமைதியாக இருந்த சுமதிபால, மயூரனது கையை எடுத்து தனது முழங்காற் பகுதியில் வைத்தான். முழங்காலுக்கீழ் இல்லை என்பதை உணர்ந்தவாறு சுமதிபாலாவைப் பார்த்துத் தலையை அசைக்கின்றான். சுமதிபாலாளூ அவனது கனவு ஒரு ஆசிரியராகவோ அல்லது ஒரு மருத்துவராகவோ வரவேண்டும் என்று படித்தவனுக்கு குடும்பச்சூழல் இடம்கொடுக்கவில்லை. தந்தையற்ற தாயார். திருமணவயதை எட்டிவிட்ட சகோதரிகள் மூவரென்று பெரும் பொருண்மிய நெருக்கடி. தனது நண்பனான பண்டார ஆமியில் சேர்ந்தபின் அவனது குடும்பத்தில் வசதிகள் கூடியுள்ளதையும், பத்திரிகைகளில் வரும் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் எனப் பார்த்தவனுக்கு ஆமியில் சேர்ந்தால் என்ன என்ற எண்ணம் தோன்றவே, தனது தாயாரிடம் கேட்கின்றான். அவளும் அரைமனதோடு சம்மதிக்கிறாள். குறுகியகாலப் பயிற்சியோடு சுமதிபால வழங்கற்பிரிவிலே  இணைக்கப்படுகிறான். காடுகளை அண்டிய எல்லைப்பகுதிகளிலுள்ள உருமறைப்பு முகாம்களுக்குப் பொருட்களை எடுத்துச் செல்வது இவனது பணி. அப்படிச் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராது ஏற்பட்ட மோதலில் காயம்பட்டு மயக்கமடைய அவனைவிட்டுவிட்டு ஓடிவிடுகின்றனர். தேடுதலில் ஈடுபட்ட புலிகளால் மீட்கப்பட்டு மருத்துவம் பார்க்கப்படுமவன், மயக்கம் தீர்ந்து கண்விழித்தவனுக்கு அங்கேதெரிந்த வரிப்புலிச் சீருடையாளர்களைக் கண்டதும் ஒருவிதபயமும் அதிர்வலைகளும் அவனை ஆக்கிரமிக்கத், தானிப்போது புலிகளிடம் பிடிபட்டுவிட்டதையும்; தனது கால்போனதையும் உணர்கின்றான்.  அவனுக்கு அவித்த பயறும் தேனீர் வழங்கப்படுகிறது. ஒருவித தயக்கத்தோடு உண்கின்றான்.  ஆனால், அவனது ஆழ்மனதில் பலவிதமான வினாக்கள் எழுகிறது. படைமுகாம்களுக்கு வரும் பிக்குகள் தமிழர்களை பேய்களெனவும் புலிகளைப் பயங்கரமானவர்கள் எனவும் மனிதாபிமானவற்றவர்கள் எனவும்  போதனைசெய்வதைத் தாம் கேட்டபோது ஏற்பட்ட உணர்வும், அவர்கள் தன்னைப் பார்க்;கும் விதத்தால் நேரடி அனுபவம் வேறாகவும் அல்லவா இருக்கிறது என எண்ணிக்கொள்கின்றான். அன்றையபொழுது கழிந்து போகிறது. 
மறுநாள் தனக்கு ஒருவர் உதவிக்குவரத் தனது கடமைகளை முடித்தவனிடம் காலை உணவின்பின் ஒரு சீருடையணிந்த புலி வருகிறார். நலம் விசாரிப்போடு ஒரு தகவலைக் கூறுகிறார். பயங்கரவாதிகளுடனான மோதலில் சுமதிபால என்ற இராணுச் சிப்பாய் இறந்துவிட்டதாகவும் அவரது உடலை எடுக்கமுடியவில்லையென்றும் உங்கள் லங்க புவத் கூறியது. முதலில் உங்களின் முழுப்பெயர் முகவரி தொலைபேசி எண் போன்ற விபரங்களைப் பெற்றவாறு படையில் சேர்ந்த நோக்கம் போன்ற விபரங்களைத் திரட்டிக் கொண்டு போக இப்போது இவரை இன்னொரு அணிபொறுப்பேற்றுக் கொள்கிறது. அங்குதான் அவனொரு புதிய உலகைக் காண்கிறான் புரியாத மொழியைப் பழகும் வாய்ப்பு. தன்னை எதிரியாகப் பார்க்காது ஒரு கைதியாக வைத்திருந்தாலும் ஒரு கைதியைப்போலன்றி சாதாரணமாக தன்னோடு நடந்துகொள்ளும் புலிகள் எனப் புலிகள்பற்றிய தவறான கற்பிதங்கள் அவன் மனதிலிருந்து சாய்ந்து விழுகிறது. அவனது காயம்மாறி ஊன்றுகோலின் உதவியோடு நடக்கத்தொடங்கியிருந்தான். அவனிடம் திரட்டிய தகவலின் உதவியோடு சுமதிபாலாவின் தாயாருக்கும் அவன் தங்களிடம் இருப்பதை அறிவித்த புலிகள், நந்தவனத்திற்கு கடிதம் கொடுத்துவிட்டால் சுமதிபாலவுக்குக் கிடைக்கும் என்று அறிவிக்கிறார்கள்.  கடிதப்போக்கு  வரத்தையடுத்து சுமதிபாலாவின் தாயார் பாரப்பதற்கு வரமுயற்சிக்கிறார். ஆனால் போரரக்கனின் பொல்லாத பொழுதுகள் தீவிரமாகித் தாக்குதல் அதிகரிக்க, அவனைப் பாதுகாப்பது பராமரிப்பது எனச் சிக்கல்கள் தோன்றுகிறது. 
தமது காவலில் உள்ள போர்கைதிகள் தொடர்பான ஆலோசனைகளின் பேரில், அவர்களைப் பாதுகாப்பாகச் செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்குமாறு பணிக்கப்படுகிறது. செங்கதிரும் வாகையனுமாக சுமதிபாலாவை அழைத்துக்கொண்டு ஆவணங்களைப் பரிமாறி அவர்களிடம் ஒப்படைத்துவிடுகின்றனர். சுமதிபாலா அந்தக்கணத்தில் அவர்களை அழைத்துக் கைகளைப் பற்றி நன்றியைக் கண்ணீரால் பரிமாறுகிறான். விடைபெறும்போது, கவனமாகப் போய்வரவும் என்று சிங்களத்தில் கூறிய வாகையனையும் செங்கதிரையும்  விழிகள் விரியப்பார்க்கிறான் சுமதிபாலா. போராளிகள், „அதுதான் எங்கள் அண்ணன்' என்று கூறியவாறு,  அவர்கள் சென்றுவிட இவனது பயணம் தனது ஊரைநோக்கித் தொடர்கிறது.
சிலமணிநேரங்களில் செஞ்சிலுவை சங்கத்தினரால் எல்லைப்பகுதியிலே உள்ள  இருபகுதியினரோடும் உரையாடி அனுமதியைப் பெற்று அழைத்துச் செல்லப்பட்டு ஒப்படைக்கப்பட அவன், வன்னிக் கட்டளைப் பணியகத்தின் படைத்துறை ஆளணிப்பிரிவுக்கு அனுப்பப்படுகிறான். அங்கு பல்வேறு விசாரணைகள் புலிகளின் பலம் பலவீனம் யார்யாரைப் பார்த்தாய் போன்ற வினாக்கள். அவனுக்குள்ளே இவர்களது வினாக்கள் எரிச்சலையும் வெறுப்பையும் ஏற்படுத்தச் சகித்துக்கொண்டு அனைத்தையும் முடித்தபின் மருத்துவ பரிசோதனைகள் முடிய மாற்றுவலுவுள்ளோர் முகாமுக்கு செல்லச் சொல்கிறார்கள். ஆனால் அவன் தனக்கு நிரந்தர விடுப்புக்கோரி எழுதிக்கொடுத்துவிட்டு அங்கிருந்து வெளியேறுகிறான். அவனை வீட்டிலே இறக்கிவிடுமாறு அங்கிருந்த ஒரு அதிகாரி பணிக்கிறார். காலிழந்தவனாக வீடு வந்தவனைக் கடைசிச் சகோதரியும் தாயுமாகப் பெரும் அழுகையோடு கட்டியணைக்கின்றனர். அவனது உள்ளம் பெருமோலமிட்டு அழுகிறது. தான் எதற்காக படைக்குச் சென்றானோ அதனை முழுமையாக நிறைவேற்ற முடியாத துயரம் சூழ்கிறது. 
இன்று அவன் பொய்க்கால் அணிய நோவதனால் அதனைச் சீர்செய்யவே மருத்துவமனைக்கு வந்திருந்தான். அங்கே அவனுக்குப் புதுக்கால் செய்ய அளவெடுத்துவிட்டு அனுப்பியுள்ளார்கள். இருவரது இறுக்கமும் தளர்ந்து ஒரு இயல்பான நட்புரீதியான உரையாடல் நிலைக்கு மயூரனும் சுமதிபாலாவும் வந்திருந்தனர். சுமதிபாலா சொல்கின்றான். இனவாதம் உங்களை மட்டுமல்ல எங்களையும் முடமாக்கியுள்ளது. இன்று ஒரு புதியதலைவர் ஆள்கிறார். அன்று போர் நடத்தியோர் சொகுசாக வாழ்கிறார்கள். ஆனால் நானும் நீயும் அதன் வலிகளைச் சுமந்தபடி. மயூரன், எமது அடுத்த தலைமுறையாவது அமைதியாக வாழநாங்கள் சிந்திப்போமா? மயூரன் பெரிதாகச் சிரித்தேவிட்டான். நாங்கள் இதனையேதான் எழுபது ஆண்டுகளாகக் கேட்டுக்கொண்டிருக்கின்றோம். என்று ஆழ்மனம் அசைபோட அவன் தொடரூந்துத் தரிப்பிடம் நோக்கி நடக்கிறான்.
                                               முற்றும். 
 

உயிரே.....

Fri, 14/04/2017 - 11:03

உயிரே!  உனக்கேன் என்னோடு பந்தம். .?

வசந்தங்கள் உன்னோடு சொந்தம்.

எனக்கேன் உன் மீது  மோகம் ...?

இந்த விடை தெரியாத வினாக்கு

விடை  தேடலே என் வாழ்க்கையாய்போனது.

நீ சில வேளைகளில் கண்ணைக் சிமிட்டும் போது !

அந்த நொடி சிதறி கிடந்த என் கவிதைகள் எழுந்து  தடுமாறின.

உன் விழிகள்இரண்டும் பேசியதால் என் உதடுகள்  ஊமையானது.

என் இதயம்  !

உன் நினைவுகளை கூவிச் சென்றது. 

விடைபெறும்  தருணத்தில் உன்னிடத்தில் சொல்ல விட்டு போகின்றேன். 

ஆனால் ! 

என்னுடன்  வர மறுக்கின்றது.

என் மனசு..........

நரகவேதனை என்றால் என்ன?

என்பைத  அப்போதுதான் உணர்கிறேன், 

அந்த  நொடி என் மெளனங்களை  

படித்து பார்.

ஓராயிரம் அர்த்தங்களை  செல்லும் உயிரே........

 

கனத்த என் இதயம்,

Thu, 13/04/2017 - 21:47

இரும்பாய் கனத்த என் இதயம் 
துடுப்பிழந்த படகைப்போல் அலைகளால் 
இழுத்து செல்லப்பட்டு அன்னிய 
தேசத்தில் அனாதையாய் எங்கெங்கோ 
புலப்படும் ஒளி இழந்த மின் விளக்குகள் 
போல் தெரிகிறேன் கொஞ்சம் கொஞ்சமாய் !

என்னுள் அன்று இழந்தவையோ 
இருக்கின்றன இன்னும் 
அணையாமல் நினைவெனும் 
நினைவிடத்தில் !

என் நிதர்சனத்தின் நீண்ட
பயணத்தில் நீங்காது
நீள்கின்றன நீறு பூத்த 
ஆறாத ரணங்களாய்
எட்டாண்டின் நினைவுகள் !

காலச்சுழற்சியில் கற்பனைகளும் 
கலைந்துப்போக வன்னி மண் நினைவுகள் 
மட்டும் என் உணர்வை விலை பேசியதாய் 
ஏன் தானோ நிலையாய் நிற்கின்றன?

உணர்வுகள் உருக்குலைந்தன
உறவுகளும் உடைந்துபோகின
நிதானமான என்னை நிர்கதியாக்கின 
அன்றைய நாள்...
என்னை நித்தமும் நிர்குலைய 
செய்கின்றன இறுதி வரை 
இணைந்திருந்த எம் மண் 
வாசனையின் நியாயமான 
நினைவுகள் !

அறுந்து போயின பாச 
பிணைப்புகள் !
மரத்து போயின என் மன
உணர்வுகள் !
புளுதி படிந்த வீதியும் 
அன்றைய நினைவுகளும்...

சித்திரை வந்தாள்

Thu, 13/04/2017 - 18:31

சித்திரையைப் பர்சோனிபை (personification) செய்து எல்லோரும் சித்திரையாளாக்கி விட்டார்கள்.  அதனால் எனக்கும் சித்திரையென்னும்போது   பழைய சின்னமேள நாட்டியத்தாரகை சித்திராவின் நினைப்புத்தான் வருகிறது.   அந்தப் பெண் இப்போது கிழவியாகிச் செத்தும் போனாளோ தெரியாது.  அதற்கென்ன நாட்டியத்தாரகை பத்மினியை யாராவது கிழவியாகவா நினைத்து எழுதுவார்கள் பேசுவார்கள் அப்படித்தான் இதுவும்.

சித்திரை வந்தாள்

 

 

நித்திரையில் ஆழந்திருந்தேன் நீண்ட துயில் ரா முழுதும்

தத்திமித்தா தையெனும் ஓசை – அட

எத்திசையில் வுருகிறது என்று புலன் போனதங்கே

சித்திரையாள் என்னிடம் வந்தாள்.

 

கட்டழகி மொட்டழகிற் கச்சைகட்டித் துள்ளி நட

மிட்டதனை எங்ஙனம் சொல்வேன்  - பிடித்

திட்ட பத முத்திரைகள் ஆயிரமாம் அன்னவளின்

திட்டமென்ன என்பதறியேன்.

 

கச்சிறுக்கு மார்பழகு காட்டிடத் திமிர் அவளின்

கைகள் பிடித்திட்ட பதத்தால் – ஒரு

பொய்ச்சிரிப்பினூடு மருள் பொங்கிடத் தா தை தையென்றே

போதையெழப் பாய்ந்த விதத்தால்

 

அச்சிறுக்கி என்றனைத் தன் அடிமைகொள்ள வந்தளென்ற

ஆத்திரத்தில் மோக மயக்கில் – பெரும்

இச்சையொடு பாய்ந்தணைக்க என்னது சீ என்ற குரல்

என் மனைவி என்ன கண்றாவி.

 

நாள் முழுதும் வேலை கொஞ்சம் நானயர வேண்டுமென்றால்

நாசமது உங்களின் தொல்லை – அட

காலையெடுங்கள் நெடுகக் கனவு கண்டு கனவு கண்டு

கண்ணயர வழியுமிங்கில்லை.

 

என்றவளின் காதில் அடி இன்று புது வருஷமென்றேன்

எங்களுக்கஃதில்லை விடுங்கள் – அது

என்றுமினித் தையினிற்தான் எம்மினத்திற் கென்றனள் நான்

என் கனவில் மீண்டு லயித்தேன்.

 

தை தை தை தை முதலே தமிழர் புதுவருடமெனத்

தாளமிட்டுத் தத்தி உதைத்தாள் – அவள்

செய் கைகள் யாவினையும் தௌிவாகப் பார்த்திருந்தேன்

செய்தவள் என் அன்பு அகத்தாள்.

 

 

புதுவருடமே. .........?

Thu, 13/04/2017 - 14:27

புதுவருடமே. .........?

புது வருடமே நீ  வருகிறாய். ..

தீராத வலி  சுமக்கும்  எமக்கு 

என்ன  தரப்போகிறாய்? 

எங்கே என் தம்பி. .?

எங்கே எம்டன் இருந்த உறவுகள் எங்கே? 

யாரிடம்  கேட்பது?--....... பதில் 

காலத்தை  கேட்பதா  - இல்லை 

கடவுளை  கேட்பதா ?

தமிழனின் வாழ்க்கை இது என்று 

வாழ்வதா? 

 

வாழ்ந்தோம்  வாழ்ந்தோம்

சொந்த  ஊரில் வாழ்ந்தோம்

இழந்தோம் இழந்தோம்-- இன்று   

எல்லாம் இழந்தோம்.

கனவுகள் கலைந்து 

நினைவுகள் சிதைந்து 

காலோடு  கால்  தடுமாறி கொண்டு  தெருவோரம் நடக்கின்ற குடிகாரன் போல்  இருக்கின்ற  இன்றைய வாழ்வில். ...

புதுவருடமே வந்து என்ன செய்வசெய்வாய். ......?

கோபம் 

Thu, 13/04/2017 - 02:17

கோபம் 

 

 

 காலையில் காபி சூடாயிருந்தால் கோபம் 

பஸ் வண்டி க்கு காத்திருக்கும் போது 

ஒரு வகை எரிச்சல் உடனான கோபம் .

வேளைக்கு உணவின்றேல்.  புகைச்சலுடன் கோபம்.

ஏழைக்கு இறைவன் மீது கோபம் 

 

குழந்தை   சிந்தும் உணவின் மேல் கோபம் 

 குழந்தையின் முரண்டு பிடித்தால் கோபம்  

 உதட்டு அருகே வரும் உணவு  கீழே சிந்திய கோவம்  

எரியும்  அடுப்பில் காஸ் தீர்த்து விடடால்   கோபம் ..

ஆழ்ந்த  உறக்கத்தில் அலாரம் மீது கோபம் 

 

விரும்பியது கிடை  க்கா விடடால் கோபம் .

 காத்திருக்கும்  அவள்/அவன் வராவிடடால்  கோபம் .

பந்தி உணவில் கடைசி வரி கிடைத்தால் கோபம் 

 பசி வேளையில் உணவின்றேல் கோபம்  

நீண்ட வரிசையி ல்  குறு க்கிடல் கோபம் 

 படித்தும் உரிய வேலை  கிடைக்காவிடில்  கோபம் 

 

கள்ளுண்ட கணவனுக்கு  கருவாட்டு 

பொரிய ல்  இல்லாத கோபம் 

அடுப்பெரிக்கும் மனைவிக்கு  ஈர விறகின் மீது கோபம்

கோவிலுக்கு   செல்ல  நினைத்த  மனை யாளுக்கு

கணவன் தாமதமாய் வந்தால் கோபம்,

 எனக்கும் வரும் உனக்கும் வரும் 

எவருக்கும் வரலாம் கோபம் 

 

 சினிமா  வரிசையில் ஹவுஸ் புள் வந்தால் கோபம் ..

அண்ணனும் தம்பியும் அடிக்கடி கோபம்  

..காதலன் காதலி  செல்லக்கோபம் .

ஏறு   என்றால் எருதுக்கு கோபம்  

 இறங்க சொன்னால் முடவனுக்கு கோபம் .

 எதிர் பார்ப்பு ஏமாறும் போது வரும்  பெருங் கோபம்

நெகிழி (நிமிடக்கதை)

Wed, 12/04/2017 - 22:36

                                                                                                                              நெகிழி 

  குணாளனுக்கு சலிப்பே ஏற்பட்டுவிட்டது. குணாளனின் தந்தையார் கந்தையருக்கும் கடுப்பேறிப் பேசிக்கொண்டே துப்பரவு செய்துகொண்டிருந்தார். கந்தையற்றை துணைவி பாக்கியமக்காவும் விடுவித்தகாணியைப் பழைய நிலைமைக்குக் கொண்டு வந்திட வேணுமெண்ட அவாவிலை  ஷஷ துலைவாங்கள் நிலமெல்லாத்தையும் நாசமாக்கிப் போட்டாங்கள்,, என்று புறுபுறுத்தவாறு குப்பைவாரியால் குப்பைகளை இழுத்து ஒன்றாக்குவதில் முனைப்போடு நின்றார். ஆனால் இழுக்க இழுக்க வளவுக்குளாலை ஒரே பொலித்தீனாகவே வந்துகொண்டிருந்தது.. " உவங்கள் கண்ணிவெடியை எடுத்து முடிச்சாலும் இது முடியாதுபோல கிடக்கென்று,, அங்கலாய்த்தவாறு  இழுத்துக்கொண்டு நிற்க, அடுத்த வளவு அன்னம்மாக்காவும் தனது காணியை நோக்கி நடந்தவாறு  " என்ன பாக்கியமக்கா மண்ணோட சண்டையோ! என்று கேட்க, "அன்னம் இந்தப் பொலித்தீனாலை ஒரே தொல்லையாக் கிடக்குதடி! இழுக்க இழுக்க வந்தகொண்டேயிருக்குதடி!  

இதுவரை அமைதியாயிருந்த பொலித்தீன் "நாங்களுங்கட விழாக்கள் முதல் சொதிப்பொதி கட்டுறது வரைக்கும் தேவைப்பட்டம். எங்களைக் கக்கத்துக்க கொண்டு திரிஞ்சுபோட்டு கண்டமாதிரி எறிஞ்சுபோட்டு இப்ப குய்யோமுறையோ என்றால் என்ன நியாயமாம்! பக்குவமாகப் பாவிக்கத் தெரியாது. பிறகு எங்களை நோகிறது என்றவாறு சுழன்றடித்த காற்றில் மேலெழுந்து பறந்தது. 

சுமை

Mon, 10/04/2017 - 20:59

சுமை

எனக்கு கவிதை எழுத 

கற்றுக் தந்தவன் நீ. ...

கன தூரத்தில் இருக்கிறாய். 

ஆனால். .

நான் உன் நினைவுகளை சுமந்த படி சுமையையுடன் இருக்கிறேன். .....

கடவுள் தந்த அழகிய வாழ்வு .....

Mon, 10/04/2017 - 18:30

கைபேசியில் அலாரமாக இந்த அழகான பாடல் காற்றில் மிதந்து காதில் வருட இன்று என்னவோ காலையில் எழுந்திருக்க மனமில்லாமல் மிகவும் அசதியுடன் தன் அதிகாலை பணிகளை நினைத்தவாறே திரும்பி நேரத்தை பார்க்கின்றாள் வைதேகி. இன்னும் சிறிது நேரம் செல்ல எழும்பலாம் என்று நினைத்து திரும்பி படுக்கும் போது அவளின் மன ஓட்டம் 30 வருடங்களை பின்நோக்கி இழுத்துசெல்கின்றது.

என்ன அழகான ஒரு வாழ்க்கை! சிட்டுக்குருவிகளை போல் நண்பிகளுடன் சிறகடித்து எந்த கவலையும் இல்லாமல் பாடசாலை, மாலைநேர வகுப்பு  என்று இனிமையான காலங்கள். அந்த இனிமைக்காலத்தில்தான் தன்னோடு படித்த வாமனை சந்திக்க நேர்ந்தது. அவனின் அமைதியும் அறிவும் இவளை காதலில் விழவைத்தது. அதே போன்று வாமனும் வைதேகியின் அன்பான குணத்தாலும் அழகாலும் தைதேகி மேல் காதல் கொண்டான்.

இருவரது வீட்டிலும் தம் காதலை சொல்லவே அவர்களது பெற்றோர் முதலில் மறுத்தாலும் பின்பு அவர்கள் இருவரும் படித்து முடித்தபின்பு திருமணம் செய்து தரலாம் என்று கூறியதால் இருவரும் மிகவும் மகிழ்வுடன் தம் படிப்பை தொடர்ந்தார்கள்.

காலமும் நேரமும் யாருக்கும் காத்திருக்காமல் கரைந்து செல்ல படிப்பை முடித்த வாமன் கனடாவிற்கு செல்ல வாய்ப்பு கிடைத்தது. வாமனுடன் கூடப்பிறந்தவர்கள் ஆண் சகோதரர்கள் அதனால் அவனின் பெற்றோருக்கு பெண்பிள்ளைகள் என்றால் மிகவும் விருப்பம். தான் கனடா பயணிக்கும் முன் நாட்டுப்பிரச்சனை காரணமா வைதேகியை தன் அம்மாவுடன் கொழும்பிற்கு சென்று அங்கே அவர்களுடன் இருக்கும்படி ஆலோசனை கூற அவளும் அவர்கள் கூடவே கொழும்பிற்கு சென்று வேலைக்கு செல்லத்தொடங்கினாள்.

பிரச்சனைகளுக்கு மத்தியில் ஊர் விட்டு ஊர் போய் பல இடங்களில் இடம் பெயர்ந்தநேரங்களில் அவளுக்கு அடிக்கடி காய்ச்சல் வந்து போனது. கொழும்பிற்கு வந்த பின்பு வைத்தியரிடம் சென்றபோது இடப்பெயர்வுகளின் போது அருந்திய தண்ணீரால் அவளுக்கு மஞ்சள் காமலை வந்துள்ளதாகவும் அதனால் அவளது ஈரல் சிறிதளவு பாதிப்படைந்திருப்பதாகவும் சொல்லியபோது உலகமே தலைகீழாக சுத்தியது.

இந்த விடயத்தை வாமனிடம் சொன்னபோது வாமனுக்கு உள்ளுக்குள் ஒரு வித பயம் ஏற்பட்டாலும் அதெல்லாம் இங்கு கனடா வந்தால் சரி செய்யலாம் பயப்பிடாமல் வருவதற்கு ஆயத்தங்களை செய்யும் படி வைதேகியிடம் கூறினான்.

ஒரு விதமாக வைதேகிக்கும் வாமனின் பெற்றோருக்கும் விசா கிடைத்து கனடாவிற்கு வந்து சேருகின்றார்கள்.  வாமன் வைதேகியின் திருமணம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. வாமன் வைதேகி பலவித மனக்கோட்டைகளுடன் தங்கள் இல்லற வாழ்விற்குள் அடியெடுத்து வைக்கின்றனர்.

திருமணம் முடிந்து மகிழ்வாக சென்ற அவர்கள் வாழ்வில் திரும்பவும் வைதேகிக்கு அடிக்கடி வயிற்றுவலி வர வைத்தியரை நாடியபோது தான் எடுத்து வரும் மாத்திரைகளுக்கு பெரிதாக எந்த முன்னேற்றமும் இல்லை என்றும் இப்படியே தொடர்ந்தால் ஈரல் பாதிப்படையும் என்று வைத்தியர்கள் சொல்கின்றார்கள். அன்றிலிருந்து அவர் சாப்பாட்டில் உப்பு சேர்க்காமல் வைத்தியர்களின் அறிவுரைப்படி சாப்பிட்டு மருந்தும் எடுத்துவந்தாள் ஆனால் நாட்கள் செல்ல செல்ல வயிற்றுவலி அடிக்கடி வந்து பல முறை வைத்தியாலையில் அனுமதிக்கும் அளவிற்கு சென்றது.

வாமனோ எந்த வித முகச்சுழிப்பும் இல்லாமல் 10 வருடங்கள் வைத்தியசாலையும் வீடுமாக வைதேகியை கொண்டுதிரிந்தான். வைத்தியர்களோ வைதேகிக்கு ஈரல் மாற்றவேண்டும் என்றும் அவளுக்கு சரியாக பொருந்து ஈரல் கிடைக்கும் மட்டும் மருந்தால் காலத்தை போக்கிக்கொண்டு இருந்தார்கள். வைதேகி இருந்த அழகிற்கு தற்போது மெலிந்து கண்கள் உள்ளுக்குள் போய் ஆளை அடையாளம் காணமுடியாதளவிற்கு ஆகியிருந்தாள். இன்னும் 6 மாதத்திற்குள் அவளுக்கு பொருத்தமான ஈரல் கிடைக்காவிட்டால் அவளை காப்பாற்றுவது கடினம் என்றும் அத்துடன் தைதேகிக்கு முன்னால் 200 பேர் வரை ஈரல் மாற்று சிகிச்சகைக்காக காத்திருப்பதாகவும் வைத்தியர்கள் வாமனிடம் சொல்லிவிட்டார்கள். வாமனோ முடிந்தவரை எந்த மனக்கஸ்டத்தையும் வைதேகியிடம் காட்டிக்கொள்ளாமல் மனதிற்குள் கவலையில் வாடிபோயிருந்தான். வாமனின் பெற்றோர் வைதேகியை மிகவும் அன்புடன் பாத்துக்கொண்டார்கள்.

திடீரென்று ஒரு நாள் காலையில் வைதியசாலையில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. ஒரு 22 வயது இளைஞன் வாகனவிபத்தில் அகால மரணம் அடைந்துவிட்டதாகவும் அவன் தனது உறுப்புக்களை தானம் செய்வதாக எழுதிவைத்திருப்பதாகவும் அவனது இரத்தவகை வைதேகிக்கு பொருந்துவதாகவும் அவனது ஈரலில் ஒரு பகுதியை வைதேகிக்கும் இன்னும் ஒரு பகுதியை 10 மாத குழந்தை ஒன்றுக்கும் மாற்று சிகிச்சை செய்யப்போவதான சொல்கின்றார்கள். வாமனுக்கும் அவனது பெற்றோருக்கும் அந்த தொலைபேசி அழைப்பு கடவுளை நேரில் கண்டது போன்று தோன்றியது.

அன்றே வைதேகியை அழைத்துகொண்டு வைத்தியசாலை செல்கின்றனர். மாற்று சிகிச்சைக்கு தேவையான அனைத்து ஆயத்தங்களையும் செய்து அறுவைச்சிகிச்சை 10 மணித்தியாளங்கள் நடைபெற்று வைதேகி சுகமடைந்தாள். வைதேகிக்கும் வாமனுக்கும் தமக்கு மீண்டும் வாழ்க்கை கிடைத்திருப்பதை நம்பமுடியவில்லை.

நான்கு வருடங்கள் உருண்டோடிவிட வாமனுக்கும் வைதேகிக்கும் அழகிய ஆண்குழந்தை பிறக்கின்றது. இப்போது அவர்கள் மகனுக்கு 9 வயதும் ஆகிவிட்டது.

வாமனுக்கு குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும் ஆனால் வைதேகிக்கு வருத்தம் என்று வந்தபோது வைதேகி சுகமாக தன்னோடு இருந்தால் போதும் என்று மட்டுமே நினைத்திருந்தான். ஆனால் இரட்டிப்பு மகிழ்வாக குழந்தையும் சுகமே கிடைத்து அவர்களது வாழ்க்கை மீண்டும் பூத்துக்குலுங்கத்தொடங்கியது.

திரும்பவும் அலாரம் அடிக்கவே பழைய நினைவுகளில் மூழ்கியிருந்த வைதேகி தன் பக்கத்தில் தூங்கிக்கொண்டிருந்த மகனை முத்தமிட்டு எழுபியவாறு தனக்கு மீள் வாழ்வு தந்த அந்த இறந்து போன இளைஞனை மனதில் நினைத்து நன்றி சொல்லியவாறே அவன் அன்று அவனது உடல் உறுப்புக்களை தானம் செய்யாதிருக்காவிட்டால் இன்று தானும் இல்லை தன் குழந்தையும் இல்லை எல்லாம் அவனது தாராள உள்ளமே என்று நினைத்தபடி அன்றய நாளை மகிழ்வுடன் ஆரம்பித்தாள்.

-இது கதையல்ல நிஜம்-

-முற்றும்-

நாம் இறந்தபின்பு யாருக்கும் பயன்படமால் போகும் எம் உடல் உறுப்புகளை நாம் உயிருடன் இருக்கும் போதே தானம் செய்ய விரும்பம் தெரிவித்தால் நாம் இறந்த பின்பு எம் உறுப்பால் பலர் உயிர் வாழ்வார்கள் என்பதற்கு தைதேகியின் வாழ்வே ஒரு உதாரணம். அந்த இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு கிடைத்திருந்தது. நாம் இறந்தபின்பு வைதேகி போன்று பலருக்கு அவர்களது வாழ்வு திருப்பிகிடைக்குமென்றால் நாம் நம் உடலை தீக்கும் மண்ணுக்கும் இரையாக்குவது ஏனோ?

மனமிருந்தால்???

Fri, 07/04/2017 - 19:49

நேற்று  தாயகத்திலிருந்து (மட்டக்கிளப்பு) வைபரில் ஒரு படம் வந்தது

படத்தில்  ஒரு தாய் ஒரு மகள்

இவர் யெயந்தன் படையணியின் தளபதிகளில் ஒருவரின் மனைவி  மற்றும் பிள்ளை அண்ணை  என்று எழுதியிருந்தது

தொலைபேசி  எடுத்தேன்

அந்த பிள்ளைக்கு பாடசாலைக்கு போக ஒரு சைக்கிள் கேட்கினமண்ணை என்றார்

சரி சைக்கிள் என்னவிலை? என்பதற்கு

12 500 ரூபாக்கள் என்றார்

உங்களிடம் 12 500 ரூபா  இருந்தால் வாங்கிக்கொடுக்கமுடியுமா 

இந்த மாசம்   ஏலாது

வாற மாசம் அனுப்புகின்றேன் என்றேன்

சரியண்ணை வாங்கிக்கொடுத்துவிட்டு தொடர்பு கொள்கின்றேன் என்றார்

என்னை அவர்களுடன்  கதைக்கும்படி தொலைபேசி  இலக்கம் அனுப்பியிருந்தார்

அவர்களுக்கான தேவையை  பூர்த்தி  செய்கின்றேன்  

 நான்  தொலைபேசியில்  கதைக்க வேண்டிய அவசியமில்லை என மறுத்துவிட்டேன்.

இப்போ எனது கேள்வி  இதில காசு எவரிடமிருக்கு???

மனசு????

தாவணி தழுவும் ஆவணி.....!

Thu, 06/04/2017 - 22:30

Résultat de recherche d'images pour "தொப்புள் அழகி"

கூடைப்பந்து மைதானத்தில் நாலு 

பக்கம் கோடு போட்ட -  நான்முகன் 

நடுவில் இட்ட புள்ளி நீயே !

 

காதிலும் வளையம் மூக்கிலும் 

வளையம் நாக்கிலும் வளையம் -நாபி 

உன்னிலும் மின்னுது வளையம் !

 

கண் இமைக்கு கருமை 

கைகளுக்கு மருதாணி - தொப்புள் 

உன்னிலும் ஒளிருது ஸ்டிக்கர் !

 

கோடிகள் கொட்டும் திரையிலும் 

கொடியிடை அசைவினில் - குளோசப் 

முழுதும் கொள்ளையடிக்கின்றாய் !

 

நடிகைக்கு தரும் நான்கு  

கோடியில் மூன்று கோடி - முழுதும் 

முகம் காட்டி முழுங்குகின்றாய் !

 

எதிர்த்து வரும் வாலிபர் வெறித்த 

கண்கள் கருத்தாய் மேயும் - தாவணியில் 

மின்னும் ஆவணியும் நீதானே !

 

காலையில் கல்லூரியில் காற்று 

இன்றி  உறங்குகின்றாய் -  மாலையில்

கடைவீதியில் காலாற நடக்கின்றாய் !

 

பார்த்தால் பசி தீரும் பார்த்தபின் பசி

எடுக்கும்  தொட்டால் புல் -அரிக்கும்  

தொட்ட பின் உயிர் துடிக்கும் ! 

 

மண்ணிலே சுற்றும் பம்பரம் 

எல்லாம் இப்போது உன் - மேல் 

சுற்றுதல் அதிசயமே !

 

உன்னை வருடாது கண்கள் 

உறங்காது வந்து வருடிய - பின் 

கைகள் உறங்காது !

 

அகப்பையில் வளரும் சிசுவின் 

அட்ஷயபாத்திரமும் நீயே அல்லி - ராணி  

கோட்டையில்  அழைப்புமணியும் நீயே !

 

ஆக்கம் சுவி....!

 

 

 

 

 

இஞ்சை பார்ரா லோங்ஸ் போட்டிருக்கான்.

Thu, 06/04/2017 - 16:01

இந்த தலைப்பைப் பார்க்கும் பலருக்கு இதில என்ன புதினம் இருக்கு என்று நக்கல் நழினமாக பார்க்கலாம்.

ஆனால் என்னோடு ஒத்த வயதினருக்கு இந்த லோங்ஸ்இன் வலி புரிந்திருக்கும்.

ஏறத்தாள 45 வருடங்கள் முன்பாக யாரும் நினைத்த நேரத்தில் இந்த லோங்சை மாட்ட முடியாது.அதை மாட்டுவதற்கு ஒரு தகுதி இருக்க வேண்டும் என்று எழுதாத சட்டம் ஒன்று இருந்தது.

பாலர் வகுப்பிலிருந்து பத்தாவது வகுப்பு வரை சந்தோசமாக போகும் பள்ளி வாழ்க்கை ஜீசிஈ எனும் பரீட்சையில் வந்து தடம் புரழும்.

இதுவரை அரைக் காற்சட்டைளோடு சுதந்திரமாக திரிந்தவர்கள் இந்த பரீட்சையில் சித்தியெய்தினால் மட்டுமே அடுத்த கட்ட படிப்பு மாத்திரமல்ல எதிர் காலமே சூனியமாகிவிடும்.

இந்த சோதனைகளில் சித்தியடைந்தவர் மட்டும் புதிதாக லோங்ஸ் மாட்டிக் கொண்டு வருவார்கள்.மற்றையவர்கள் அதே அரைக் காற்சட்டையோடு கொஞ்ச காலம் பின்னர் வெளியில் வேட்டி வீட்டிலும் ஊரிலும் சாரம் தான்.

அந்த நேரங்களில் யார்யார் சோதனை பாசாகிட்டார்கள் என்று உடுப்பிலேயே தெரியும்.இஞ்சை பார்ரா லோங்ஸ் போட்டிருக்கிறான் என்றால் அவன் பாசாகிட்டான் என்றே அர்த்தம்.

இதே மாதிரி மணிக்கூடு கட்டியிருந்தால் அவர் ஏஎல் பாசாகிட்டார்.

பெண்கள் தாவணி போட்ட ஞாபகம்.வீட்டிலும் பள்ளியிலும் பெண்கள் இல்லாதபடியால் சரிவர தெரியவில்லை.இதை பெண்கள் தான் எழுத வேண்டும்.

இப்போது பிறக்கும் போதே விரும்பிய உடுப்புகள் போடலாம்.

நானும் 1971 இல் லோங்ஸ் போட்டேன்.மணிக்கூடு கட்ட முடியாமல் போய்விட்டது.அந்த நேரம் தான் பெல்பொட்டம் வந்த நேரம் மாட்டிக் கொண்டு சுற்ற வேண்டியது தானே.

யாழ் களத்திலும் இப்படி அனுபவப்பட்ட புங்கை குமாரசாமி தமிழ்சிறி சுவியர் இன்னும் பலர் இருக்லாம்.உங்கள் அனுபவத்தையும் கொட்டுங்கள் பார்க்கலாம்.

கதையல்ல.....

Thu, 06/04/2017 - 14:57

இந்த  தலைப்பில் ஒரு வரலாற்றை  எழுதத்தொடங்கினேன்

.

.

.

.

முன்னாள் எல்.ரி.ரி.ஈ. உறுப்பினர்கள் ஐவருக்கு 20 ஆண்டு கால சிறைத் தண்டனை

 

 

விடுதலைப்புலிகள் இயக்கத்துக்காக நிதி சேகரித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் உறுப்பினர்கள் ஐந்து பேர் மீதான தண்டனையை, நெதர்லாந்து நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது.

1_V_LTTE.jpg

நெதர்லாந்தில், 2003-2010க்கு இடைப்பட்ட காலங்களில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்காக நிதி சேகரித்ததாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இதன்போது பலரும் அச்சுறுத்தலுக்கு உள்ளானதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், சட்டத்துக்குப் புறம்பான முறையில் அதிர்ஷ்ட லாபச் சீட்டுக்களையும் இவர்கள் வினியோகித்ததாகவும் கூறப்பட்டது. இவை மூலம் பெறப்பட்ட பணத்தை சட்ட விரோதமாக இலங்கைக்கு அனுப்பியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இக்குற்றச்சாட்டுக்களின் பேரில் குறித்த ஐவரும் கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து, 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், சந்தேக நபர்களுக்கு இருபது ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. இவர்களில் நால்வர் மேன்முறையீடு செய்தபோதும், அவர்களது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதுடன் தண்டனையும் உறுதிசெய்யப்பட்டுள்ளது

 

இந்த  செய்தி  அதை தடுத்து விட்டது

ஏற்றுக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் தள்ளிப்போடுகின்றேன்

புலத்திலும் எமது வரலாறுகளை  எழுதும் காலம் கனியும்வரை....

நமச்சிவாய

Thu, 06/04/2017 - 13:42

 

 

 

 

          

    

ஞாயிற்றுக்கிழமை காலையில் நீச்சல் தடாகத்திற்கு செல்வது சுரேஸின் வழக்கம்..தடாகத்திலிருந்து வெளியே வந்து நீச்சல் உடை அழகிகளை ரசித்தபடி உடை மாற்றும் அறைக்கு செல்ல தயாரானான்.

"சுரேஸ்"குரல் வந்த திசை திரும்பி பார்த்தான்

கந்தர் டெனிஸ் விளையாடுற உடுப்போடு கறுத்த கண்ணாடியுணிந்து  அமர்ந்திருந்தார்.

"என்னடா ,எப்ப தொடக்கம் நீச்சலுக்கு வார எல்லா வகை நீச்சலும் இப்ப  பழகிட்டியோ"

"நீச்சலுக்கு வரயில்லை"

"பின்ன என்னத்துக்கு ஐசே தடாகத்துக்கு  வாரீர் சுவிமிங் சூட் போட்ட பெட்டைகளை பார்க்கவே"

"சும்மா போங்கண்ணே உங்களுக்கு எப்பவும் லொள்ளுதான், அதுசரி நீங்கள் கறுத்த கண்ணாடி போட்டுங்கொண்டு ரசிக்கிறியள் போலகிடக்கு"

 

"என்னதான் வயசு போனாலும் உந்த விசயத்தில் மனசு கொஞ்சம் ததும்பத்தான் செய்யுது,மகனும் மருமகளும் வெளியால போயிட்டினம்,அதுதான் நான் உவங்களை கூட்டிக்கொண்டு வந்தனான்"

 

கந்தரின்ட பேரன் ஒருத்தனுக்கு மூன்று வயதுதான் இருக்கும் கையில் ஐ போனை வைச்சு விளையாடிக்கொண்டிருந்தான் மற்றவன் ஆறு வயசிருக்கும்  தடாகத்தில் நீச்சல் பழகிக்கொண்டிருந்தான்.

"‍ஹாய் உங்கன்ட பெயர் என்ன"

திரும்பி ஒரு முழுசு முழுசிப்போட்டு மீண்டும் ஐபோனில் இளையான் கலைத்துகொண்டிருந்தான்.

"நீ என்னடாப்பா ஊர் பெடியளிட்ட கேட்கிறமாதிரி அவனிட்ட தமிழில் கேட்கிறாய் அவங்களுக்கு தமிழ் தெரியாது"

"ஏன் அண்ணே நீங்கள் தமிழ்தானே அவங்களோட தமிழில் கதைக்கலாம் தானே"

"தமிழ் உனக்கு சோறு போடப்போகுதே சும்மா தமிழ் தமிழ் என்று கொண்டு நிற்கிறாய்"

சொல்லி போட்டு தன்னுடைய பேரன்களை பற்றி புகழத்தொடங்கினார்.

"உவன் இருக்கிறானே அண்ணனை வென்டவன் .ஐபொனுக்குள்ள புகுந்து விளையாடுவான்.எனக்கு தெரியாதெல்லாம் அவனுக்கு அத்துப்படி."

"எத்தனை வயசு "

"இப்பதான் மூன்றாவது பிறந்த நாள் கொண்டாடினவன்.,காலையிலிருந்து பின்னேரம் வரை உதை வைச்சு நோன்டிகொண்டிருப்பான்  செய்யிற வேலைகள் எல்லாம்  ஆறு வயசு காரங்களின்ட வேலை. மற்ற எங்கன்ட தமிழ்பிள்ளைகளை விட இவன் கெட்டிக்காரன்."

இப்படித்தான் ஒருநாள் தாய் தகப்பனுடன் வந்தவன் ,அவையள் சூவிமிங்பூலில்  இறங்கிட்டினம் இவன் கதிரையிலிருந்து விளையாடிகொண்டிருந்தவன் திடிரென தாய் தகப்பனை பார்த்திருக்கிறான் அவையளை காணவில்லை என்று போட்டு 000 அடிச்சுபோட்டான்,அவையள் திரும்பி வரும்பொழுது பெடியன் லொலிபொப் கையுடன் பொலிஸாருடன் சிரிச்சு கதைச்சு கொடு நிற்கிறான்.

கந்தரின்ட புளுகுமூட்டைகளை நங்கு அறிந்த சுரேஸ்

"இருங்கோ அண்ணே உடுப்பை மாற்றிப்போட்டு வாரன்"உடுப்பு மாற்றும் இடத்திற்கு சென்று டவலை இடுப்பில கட்டி கொண்டு மாற்றத்தொடங்கினவன் முன்னால இரண்டு வெள்ளைக்காரன்  அம்மணமாக நின்று தங்களது ஆடைகளை மாற்றிகொண்டிருந்ததை பார்த்துவிட்டான் .கன்றாவிகள் என திட்டிப்போட்டு , சீ சீ அதேன்ன கும்பகோணத்தில அம்மணமாக நின்றால் சாமி  கங்காரு நாட்டில் நின்றால் கன்றாவியே... அவன் திறந்தவன்....இவன் துறந்தவன்

 " நமச்சிவாய"

 

மன அழுத்தம் வந்தால்" நமச்சிவாய,நமச்சிவாய"சொல்லி மனதை சமதானப்படுத்தி கொள்வது சுரேஸின் பழக்கம்.

நமச்சிவாய சொன்னவனுக்கு தனது பாடசாலை ஆசிரியர் கூறிய கதைகள் ஞாபகத்திற்கு வந்துவிட்டது

சுரேஸ் நீ சொல்லு தோடுடைய செவியன் தேவராம் பாடியது யார்?

"சம்பந்தர் சேர்"

"எத்தனை வயசில பாடினவர்"

"மூன்று வயசில"

"கெட்டிக்காரன்"

"ஏன் அந்த தேவாரத்தை பாடினவர்"

"பெற்றோர்கள் அவரை கரையில் வைத்துவிட்டு நீந்த சென்றுவிட்டார்கள்,அவர்களை காணவில்லை என்று பயந்த சம்பந்தர் சுவாமிகள் அம்மையே அப்பா என்று அபயக்குரல் எழுப்பினார் உடனே உமாபதியாரும் சிவபெருமானும் தோண்றி அவருக்கு பால் கொடுத்து அவரின் அழுகையை நிறுத்தினார்கள்"

உடுப்புக்களை மாற்றி ஈர உடைகளை பையுனுள் வைத்து தோல்பையை எடுத்துகொண்டு கந்தரிடம் சென்றான்.

"அண்ணே நான் வாரன்"

"சுரேஸ்  அவசரமாய் போறியோ"

"இல்லை அண்ணே ஏன் "

"இவனோட கொஞ்ச நேரம் இருக்கிறியோ பெரியவனின் உடுப்பை மாற்றிப்போட்டு ஒடிவாரன்"

"தம்பி இந்த அங்கிளோட இருங்கோ அண்ணாவுக்கு செஞ் பண்ணியிட்டு உடேனே வாரன்" என்று ஆங்கிலத்தில் சொல்ல‌

பார்த்து மீண்டும் ஒரு முழியள் முழிச்சு போட்டு ஐபோனில் முகத்தை புதைத்தவன், என்ன நினைத்தானோ தெரியவில்லை அவனை பார்த்து ஒரு புன்முறுவலை உதிர்ந்தவன் பக்கத்தில்  இருக்கும்படி தலையால் சைகை காட்டினான்.

தன்னை படம் எடுத்தான் பிறகு சுரேசைக் கேட்காமலயே  அவனையும் படம் எடுத்தான்.சிறிது நேரம் போக விழுந்து விழுந்து சிரிக்க தொடங்கிவிட்டான் .சுரேஸ் பயந்து போனான் ,

"வட் கப்பின் வை யு ஆர் லாவிங்"

 ஏன் இவன் சிரிக்கிறான் என்று பதட்டப்படாமல் கேட்ட படியே வந்த கந்தர்"தாங்ஸ் சுரேஸ்" என்றார்.

தமையனிடம் கைதொலைபேசியை காட்டினான் அவனும் கெக்கட்டம் விட்டு சிரிக்க தொடங்கி விட்டான்.

கந்தர் ஆங்கிலத்தில் அவங்களை திட்டிப்போட்டு கைதொலைபேசி வாங்கி பார்த்து சிரித்துவிட்டு  சுரேசிடம் காட்டினார்.

திடுக்கிட்டு விட்டான் அவனது முகம் நரியின் முகமாக மாற்றப்பட்டிருந்தது.

" வி கான் மொர்ப் யு அ பேஸ் இன்டு டொன்கி,மங்கி,அன்ட் டொக்"ஹா...ஹா ...என்று சொல்லி விடை பெற்றனர் பசங்களும் கந்தரும்.

"நமச்சிவாய.நமச்சிவாய"

மீண்டும் அவன் மனம் பாடசாலைக்கு சென்றது.

"நரியை பரி ஆக்கியது யார்"

"சிவபெருமான்"

"நமச்சிவாய....நமச்சிவாய"

வைப்பிரேசன் மோட்டிலிருந்த கைத்தொலைபேசி அதிர்ந்தது.

இதுவும் ஒரு அதிசயம் தான் ,பிறமனிதர்களின் தொடுதலின்றி எமது உடம்பை அதிர‌வைக்க‌ முடியுதே...எல்லாம் தொழிநுட்பத்தின் உச்சம் தான்.... நினைத்தபடி

‍"‍ஹலோ "

"இன்றைக்கு மாணிக்க வாசகரின்ட குரு பூஜை "

"அதுக்கு நான் என்ன செய்ய "

"நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம் வார வழியில சுதாவின்ட வீட்டை போய் அவளின்ட அம்மாவின்ட சீலை ஒன்று தருவா வாங்கி கொண்டு வாங்கோ"

 

"என்னடி ஆத்த உனக்கு அம்மாவின்ட சீலை கட்டுற வயசு வந்திட்டெ"

"ஐயோ... எங்கன்ட பெரியவளை புட்டுக்கு மண் சுமந்த‌ கதையில் வருகின்ற

 செம்மணச்செல்வியா  வெளிக்கிடித்து பின்னேரம் குரு பூஜைக்கு கூட்டிப்போக வேண்டும் அதுகுத்தான் ."

"சரி வாங்கிகொண்டு வாரன் வைக்கட்டா"

"ஓம் வையுங்கோ"

 

எல்லோருக்கும் எப்படி பிரம்படி பட்டிருக்கும் ,எப்படி எல்லோருக்கும் ஒரே நேரத்தில் மெசெஜ் பாஸ் பண்ணப்படிருக்கும்.....அந்த காலத்தில டெக்னோலொஜி இதை விட நல்லா இருந்திருக்குமோ.

இப்ப  ஐடி கார்ட் ,மொபைல் எல்லாத்தையும் கழுத்தில  தொங்கவிடுறமாதிரி அந்த காலத்தில உருத்திராட்சையை தொங்கவிட்டுகொண்டு சனம் திரிஞ்சதுகள் .இந்த உருத்திராட்சைகளுக்கும் இமயமலையிலிருந்த எம்பெருமானுக்கும் வயர்லெஸ்  தொடர்புகள் ஏற்பட வாய்ப்பு இருந்திருக்குமோ.கையில் இரும்பால் செய்த ஆயுதங்கள் ,தலையில் பரபோலிக் அன்டனா....எல்லாம் தொடர்பாடலுக்கு ஏற்றவகையிலிருந்திருக்கு...

"நமச்சிவாய  நமச்சிவாய"

என்ன கோதாரி பிடிச்ச எண்ணங்கள் என்றபடி    சுதாவீட்டுக்கு போய் சேலையை எடுத்துகொண்டு வீடு சென்று அங்கிருந்த சிவாஸை பார்த்தான்.என்ன தீர்த்தமாடப்போறியே வடுவா பயளே என்று கேட்பது போலிருந்தது ...

 

 

 

"‍

 

 

 

தொட்டில் பழக்கம்...

Wed, 05/04/2017 - 11:17

அன்று ஐரோப்பிய நாடொன்றுக்கு போய்க்கொண்டிருந்தோம்

2 மணித்தியாலய வாகன  ஓட்டத்துக்கு பின் ஒவ்வொருமுறையும்

வாகனத்தை  நிறுத்தி

நடப்பது

ஓய்வெடுப்பது

ஏதாவது சாப்பிடுவது எனது வழமை.

அதன்படி ஒரு உணவகத்துக்கு முன்னால் வாகனத்தை நிறுத்தும் போது

எமது வாகனத்துக்கு பக்கத்தில்

அதி  உயர் விலையான சொகுசு கார் ஒன்று  நிறுத்தப்பட்டிருந்தது

அதன் விலை 3 லட்சம் ஈரோக்களாவது இருக்கும்..

எனவே எமது வாகனத்திலிருந்து இறங்கும் போது 

பக்கத்து வாகனத்தில் முட்டாதபடி இறங்கினோம்

அப்பொழுது தான் ஒரு விடயத்தை  கவனித்தோம்

காரினுடைய முன் பக்கம் (எஞ்சின்  உள்ளபகுதி)  திறந்து வைக்கப்பட்டிருந்தது.

நான் மக்களுக்கு சொன்னேன்

இந்தக்காருடைய  சொந்தக்காரர் ஒரு ஆபிரிக்கராக இருப்பார் என்று.

உணவகத்துக்குள் போன போது

அங்கே ஒரு ஆபிரிக்கர் அட்டகாசமாக உட்கார்ந்திருந்தார்

அவருக்கு இரு இளைஞர்கள் காவலுக்கு நின்றார்கள்

பெரிய  பொறுப்பிலுள்ள

வசதியானவர் என்று தெரிந்தது

இருந்தும் ......??

 

தோள் கொடுப்பான் தோழன் ..

Sat, 01/04/2017 - 03:05

தோள் கொடுப்பான் தோழன் ..........

 

ராஜேந்திரன் வழக்கமாக் நண்பர்கள் கூடும் அந்த மதகின் மேல் உட்கார்ந்து யோசனையில் ஆழந்து இருந்தான். மாலை  எழு மணியாகியும் சூரியன் மறைய நேரம் இருந்தது. சூரிய  கதிர்கள் சற்று கண்களை கூச்ச மடைய  செய்யவே அருகில் இருந்த தேநீர்க்கடையில் சென்று தேநீருக்கு சொல்லிவிட்டு கடைக் காரப் பையன் வரவுக்காய் காத்திருந்தான். 

 

தாயார் கமலா அம்மாள் மாலை உணவு வேளையாகியும் மகன் வரவுக்காய்   காத்திருந்தாள். கணவன் அப்போது  தான் வேலை முடிந்து வந்து கை கால் கழுவும் ஒசைக்கேட்டுகொண்டு இருந்தது. மாலதி சாமி விளக்கு ஏற்றி வழிபட்டுக்கொண்டு இருந்தாள். .கடவுளே இந்த வரனாவது கை கூடவேண்டும். பாடசாலை யிலும் சக ஆசிரியைகளின் ஏளனப் பார்வை . வயது  முப்பதாக  போகிற எனக்கு ஒரு வழி காட்டு . என  பிரார்த்தனை செய்துவிட்டு  வந்து    சமையலறையில்  , தந்தையின் சாப்பாட்டு பெட்டியை கழுவி வர  உலர  வைத்தாள்  . சேகரம் ஐயா கடையில் வேலை பார்க்கும் சுந்தரம் மிகவும்  கட்டுப் பாடானவர் ,மது புகை போன்ற எந்த  கெட்ட பழக்கங்களும் இல்லாதவர் ..இடையில் வெற்றிலை போடுவார்.. ஆணும் பெண்ணுமாய் இரு குழந்தைகளை பெற்று வளர்த்து தனது  வசதிக்கு  ஏற்ப வேண்டிய கல்வியை கொடுத்து ஆளாக்கி விட்டவர். மூத்தவள் பெண் அந்த ஊரின் கல்லூரியில் ஆசிரியையாக்கி பார்த்தவர். இளையவன் ராஜேந்திரனை மிகுந்த சிரமத்தின் மத்தியில் கட்டிட நிர்மாணத்துறை அதிகாரியாக்கினார் .சுந்தரத்தின் க டின் உழைப்பு இரு குழந்தைகளையும் வளர்த்து ஆளாக்கியதோடு ஒரு கல்வீட்டுக்கும் சொந்தக்காரர் ஆகி இருந்தார். சாப்பிட உட்கார்ந்தவர் மகன் ராசேந்திரன் பற்றிக் கேட்டார். சாப்பிட்டு முடித்தவர். உடல் அசதியால், சற்று சாய்வு  நாற்காலியில்அ உட்க்கார்ந்து சென்ற வாரம் வந்த வரனைப் பற்றிய  யோசனையில் ஆழ்ந்தார். 

 

என் மகளுக்கு இந்த வரனாவது கை கூட வேண்டும். வீடும் ரொக்க்முமாய் கேட்கிறார்களே ....வீட்டை சீவிய உரித்து  வைத்து கொடுத்து விடலாம். நகை நட்டு கொஞ்சம் கமலா சேகரித்து  வைத்திருக்கிறாள் .செலவுக்கு கடனோ உடனோ வாங்கி சமாளித்து விடலாம்.  ரொக்கத்து க்கு என்ன செய்வது . பொருட்கள் விற்கும் விலைவாசியில் நாளாந்த சீவியமே  அப்படியும் இப்படியுமாய் போகிறது . என்று ஆழ்ந்த் சிந்தையில்  அப்படியே உறங்கிவிடடார் .

 

மதகின் மீதிருந்த இந்திரன். தேநீர் பருகியவாறே ..இருக்கையில் ..தூரத்தே மோட்டார் சைக்கிளில்  .கறுப்புக் கண்ணாடியுடன் வருபவர்  இவனை நோக்கி வேகத்தை மெதுவாககினார். எதோ வழி கேட்பவர் போலும் என்று எண்ணியவன்..சற்று அருகே வந்ததும் ..அட இவன் நம்ம கதிரேசன் போல் இரு க் கிறதே என் எண்ணினான். அதற்கிடையில் ..மாப்பிள ....என்னடா யோசினை ... ..........என்றான். அட டா ...நாம் கதிரேசு .....எப்படா வந்தாய் மிடில் ஈஸ்ட்இல் இ ருந்து ..சென்ற வாரம் தானடா ..என்று பலதும்பத்தும் கதைத்தவர்கள் , . இறுதியில் சகோதரியின் கலியாணபேச்சுக்கு   கதையில்  வந்து நின்றது . கதிரேசுவுக்கு மூன்று பெண் சகோதரிகள்.  மூத்த    ஆண்  பிள்ளையான இவனை கடன்  உடன் எல்லாம் பட்டு மத்திய கிழக்குக்கு அனுப்பிய தந்தை ..இரு வருடத்தில்  கடனும் முடிய , தன் கடமை  முடிந்த்து என மேலுலகம் சென்று விடடார்  மூத்தவனான் இவருக்கு  குடும்ப  பொறுப்பை ஏற்க வேண்டிய கடடாயம்.  தங்கை மார் படித்துக் கொண்டு இருந்தார்கள்   .நண்பர்கள் பேசிய வாறே சென்றனர் . ராஜேந்திரனை   வீட்டில்  இறக்கி விட்டவன். உள்ளே வரும்படி அழைத்தும்  கா லையில்  வருகிறேன் என் கதிரேசு சென்று விடடான் 

 

மறு நாள் காலை ராஜேந்திரன் வேலைக்கு புறப்ட்டுக் கொண்டு இருந்தான். மாலாவும் தந்தையும் பஸ் க்கு  சென்று விட்டனர். வாயிலில் மோட்டார்  சைக்கிள்  ....கதிரேசு வந்திருந்தான் .... கிளம்பிடடாயா  மாப்பிள்ளை ..இந்தா இதைக்கொண்டு உள்ளே வை என்று பணம் நிரம்பிய பார்சல் ஒன்றை நீட்டினான்.  என்னடா இது ..... .   இன்று  லீவு  எடுக்கவா என்று கேட்டான்  போக மனமின்றி .. மாலையில் பேசலாம் டா நீ புறப்படு ..   சென்று வா என்று விடை கொடுத்தான் நண்பன். . ராஜேந்திரன்நே ரே சென்று சாமி அறையில் வைத்தவன். அதில் பணம் பத்து லட்சம் இருக்க கண்டு  ஆச்சரியம்  அடைந்தான் ,  அலமாரியில் வைத்து பூட்டி திறப்பை தாயிடம் கொடுத்து   மாலையில்  வந்து பேசுவதாக சொன்னான்.  கதிரேசு கமலா ம்மா வு  டன் பேசிக் கொண்டு இருந்தாள் 

 தன மக ளுக்கு இந்த இடமாவது சரி வரவேண்டும்   இவர்களது வயதுடையவர்கள்  கையிலே குழந்தையுடன்   இருக்கிறார்கள் என் சொல்லி  ஆதங்கப்பட்  டாள்  . நல்ல  காரியம்  நடை பெற வேண்டுமேன்று மிகவும் விரும்பினாள். தேநீரை பருகி முடித்தும்  கவலைப் படாதீர்கள்  அம்மா .எல்லாம் சுபமே நடக்கும் என் விடை பெற்றான். 

 

 மறு நாள் மாப்பிள்ளை   வீட்டுக்கு   சேதி பறந்தது.  இவர்கள் கலியாண விடயமாக கலந்தாலோசிப்பதற்கு வர இருப்பதாக . பேச்சின் முடிவில் அடுத்த மாதம்  வரும் நல்ல நாளில் மண மக்கள் திருமணம் நடை பெற  வேண்டிய ஆயத்தங் களை   செய்ய தொடங்கினார்கள் 

 

மாலையில் நண்பர்கள் மீண்டும் சந்தித்தார்கள். கதிரேசு ...என்று கண் கலங்கினான்......... உனக்கும் சகோதரிகள் இருக்கிறார்கள் இந்த நிலையிலும்   எனக்கு இவ்வளவு உதவி செய்கிறாய் .. என் அவனது  நல் உள்ளத்தை பாராட்டினான் .   திருமணம் இனிதே  நடந்தது  . 

 

தருணம் அறிந்து உதவுபவர்கள் உலகில் மிகச்சிலர் தான் .  இத்தகைய சில   தக்க தருணத்தில்  உதவும் நட்புகளால் தான் பல  பெண்களின் வாழ்வு வளம் பெறுகிறது . உண்மையான நட்பை ஆபத்தில் அறியலாம் . .

 

 

ஒரு குட்டிக் கதை சொல்ல  வந்தேன்    

 .

 

கச்சதீவில், கண்டு பிடிக்கப் பட்ட...  டீனேசர்  எலும்பு. 

Fri, 31/03/2017 - 21:52

tumblr_moz180Oj2V1s0e8ajo1_500.gif  kachchativu1.jpg

கச்சதீவில், கண்டு பிடிக்கப் பட்ட...  டீனேசர்  எலும்பு. 

கச்சதீவு  பிரச்சினை?  மீண்டும், சூடு பிடிப்பதன்  காரணத்தை காரணத்தை அறிந்தால், நாம்... மூக்கில், விரல்   வைக்க வேண்டும். 

1974´ம்  ஆண்டில்....  இலங்கைக்கு, இந்தியாவால்..... அன்பளிப்பாக வழங்கப் பட்ட குறுகிய பிரதேசம் தான், கச்சதீவு.  அப்போது  தமிழக முதல்வராக இருந்தவர், கறுப்புக் கண்ணாடி போட்டிருந்ததால்... அந்த ஒப்பந்தத்தில் என்ன எழுதியிருக்கின்றது  என்று, வாசிக்க.... சிரமமாக இருந்தால், இந்திரா காந்தி கேட்டுக்  கொண்டதின் படி... கையெழுத்துத்தானே, சும்மா... போடுறது தானே...  என்று கிறுக்கி விட்டதால். இன்று... இந்தியா பல அவ மானங்களை  சுமந்து கொண்டு நிற்கின்றது.

MK_Indira1_1474652_1474652g

ஆனால்.... இன்று, கச்சதீவில். கிடைக்கும் பொக்கிஷங்களை பார்க்கும் போது....  
இந்தியாவே... திரும்ப,  கச்சதீவை.  எடுக்க வைக்கும் அளவிற்கு...  டெல்லி மத்திய அரசு,   பல விடயங்களை, இந்திய  புலநாய்வாய்களர்கள் கண்டு பிடித்துள்ளாளர்கள்.

காரணம், 1:
கச்சதீவில்.... பல புதிய கட்டிடங்களை கட்டுவதற்கு, ஸ்ரீலங்கா இராணுவம், அத்திவாரங்களை தோண்டிய போது... மனிதன் தோன்ற முதல், ஆறு மில்லியன் வருடங்களுக்கு முன் வாழ்ந்த,  "டீனேசர்" என்னும் மிருகத்தின் எலும்புக் கூடுகளை..  யாழ்ப்பாணத்தின்,  சுண்ணாம்பு பாறை.. என்று சொல்லி, இந்தியாவை   ஏமாற்றியது.   

காரணம்,  2:   
ஸ்ரீ ராமர்..  சீதையை தேடிக் கொண்டிருந்த போது...   இலங்கைக்கு வந்த அனுமான், முதல்  இளைப்பாறிய இடமும் கச்ச தீவு என்பதனை, மத்திய அரசு, பல ஆவணங்கள் மூலம் கண்டு பிடித்து விட்டதாக  செய்திகள் பல வந்து கொண்டிருப்பதால்....

ஸ்ரீலங்காவிடம்  இருந்து,  விரைவில்  கச்சதீவு பறி போகும் சந்தர்ப்பங்கள் அதிகம்,  என்பதை... அரசியல் விமர்சகர்கள்... சூசகமாக குறிப்பிட்டுள்ளார்கள்.

நன்றி: nii innun thurunthalaiya.com