தமிழகச் செய்திகள்

தினகரனுக்கு உதவிய ஹவாலா புரோக்கர் கைது

Fri, 28/04/2017 - 20:23
தினகரனுக்கு உதவிய ஹவாலா புரோக்கர் கைது
 
 
 

தேர்தல் கமிஷனால் முடக்கப்பட்ட, இரட்டை இலை சின்னத்தை மீட்க, சசிகலாவின் அக்கா மகன் தினகரன், ஹவாலா கும்பல் மூலம், பல கோடி ரூபாய் பணத்தை கைமாற்றியது தெரிய வந்து உள்ளது. தினகரனுக்கு உதவிய ஹவாலா புரோக்கர் கைது செய்யப்பட்டான்.

 

Tamil_News_large_176078920170429000638_318_219.jpg

இரட்டை இலை சின்னத்தை மீட்க, தேர்தல் கமிஷனுக்கு, இடைத்தரகர் சுகேஷ் சந்தர் மூலம், 50 கோடி ரூபாய், லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், டில்லி போலீசாரால், சில தினங்களுக்கு முன், தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

சென்னையில் முகாமிட்டுள்ள டில்லி போலீ சார், பெசன்ட் நகரில், மத்திய அரசு அலுவலக மான ராஜாஜி பவனில், இருவரிடமும் கிடுக்கிப் பிடி விசாரணை நடத்தினர். பின், இருவரது வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.
 

ஒப்புக்கொண்டார் :


இந்த ஆவணங்களை காட்டி, போலீசார் தினகரனிடம் விசாரித்தனர். அப்போது, தன் நண்பர் மல்லிகார்ஜுனா மூலம் பழக்கமான, ஹவாலா கும்பல் வாயிலாக, தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் தர, பல கோடி ரூபாய் கைமாற்றியதை ஒப்புக்கொண்டார்.அதில், 10 கோடி ரூபாய்க்கான ஆவணங்கள் மட்டுமே,

போலீசாருக்கு கிடைத்துள்ளன. இந்த பணமும், சென்னையில் இருந்து கொச்சி வழியாக, ஹவாலா கும்பல் உதவியுடன், டில்லி ஓட்டலில் தங்கி இருந்த, சுகேஷ் சந்தரிடம் சேர்க்கப்பட்டு உள்ளது.

ஆனால், சுகேஷ் சந்தரிடம் இருந்து, 1.30 கோடி ரூபாய் மட்டுமே கைப்பற்றப் பட்டுள்ளது. மீத முள்ள, 8.70 கோடி ரூபாய், தேர்தல் கமிஷனில் உள்ள அதிகாரிகளுக்கு தரப்பட்டதா என்பது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும், தினகரனின் மனைவி அனுராதாவிடம், 'ஹவாலா பணம், வீட்டில் இருந்து தான் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அதுபற்றி உங்களுக்கு தெரியுமா' என, போலீசார் கேட்டு உள்ளனர். அதற்கு அவர், 'வீட்டிற்கு கட்சியினர் பலர் வருவர். பணம் விவகாரம் எனக்கு தெரியாது' என, கூறி உள்ளார். ஆனால், தினகரன், தன் மனைவிக்கு எல்லாம் தெரியும் என கூறி இருப்பதால், அனுராதாவுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
 

காட்டி கொடுத்தார் :


இதற்கிடையில், நேற்று ராஜாஜி பவனில், தினகரன் மற்றும் மல்லிகார்ஜுனாவிடம், போலீசார் தனித் தனியாக விசாரித்தனர். அப்போது, இந்த பண விவ காரத்தில் தொடர்புடைய முக்கியபுள்ளிகள் பற்றிய தகவல்களை கூறியுள்ளனர்.

அதன்படி, ஆதம் பாக்கம், நீலமங்கை நகரில் வசித்து வரும், உறவினர் மோகனரங்கம்; பாரி முனை, நாராயண முதலி தெருவைச் சேர்ந்த, நரேந்திரகுமார்; திருவொற்றியூர் அடுத்த, சுந்தர சோழபுரம், பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த, வழக்கறிஞர் கோபிநாத்; பெரம்பூர், மதுரைசாமித் தெருவைச் சேர்ந்த, பிலிப்ஸ் டேனியல்; கொளப் பாக்கத்தை சேர்ந்த ஒரு முக்கிய புள்ளியும் சிக்கினர்.

இந்த ஹவாலா பண விவகாரத்தில், இவர்களும் ஈடுபட்டு இருப்பதாக, தினகரன் மற்றும் மல்லிகார் ஜுனா ஆகியோர், போலீசாரிடம் தெரிவித்ததாக

 

கூறப்படுகிறது. இதையடுத்து, இவர்களது வீடுகளில், உதவிகமிஷனர், சஞ்சய் ஷெராவத் தலைமையிலான போலீசார், அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, முக்கிய ஆவணங்களும் சிக்கியதாக கூறப்படுகிறது. அத்துடன், மோகனரங்கம், பிலிப்ஸ் டேனியில் உள்ளிட்ட மூன்று பேருக்கு, டில்லி போலீசார், சம்மன் அனுப்பி உள்ளனர்.தினகரன் மற்றும் மல்லிகார்ஜுனா வுக்கு உடந்தையாக இருந்தோரின் பட்டியல் நீளுகிறது.

இதனால், இன்றும் சோதனை தொடரும் என, டில்லி போலீசார் கூறுகின்ற னர்.நாளை, இருவரையும், பெங்களூரு மற்றும் ஆந்திர மாநிலம், விஜயவாடாவுக்கு அழைத்துச் சென்று விசாரிக்கஇருப்பதாகவும், டில்லி போலீசார் தெரிவித்தனர்.
 

சிக்கினான்


இந்த நிலையில், தினகரனுக்கு பணத்தை மாற்றிக் கொடுப்பதற்கு உதவிய,டில்லியைச் சேர்ந்த ஹவாலா புரோக்கர் நரேஷ், டில்லி விமான நிலையத்தில் நேற்று கைது செய்யப் பட்டான். தினகரனுக்கு பணத்தை மாற்றிக் கொடுத்தது தொடர்பாக அவனிடம் தீவிர விசாரணை நடந்து வருவதாக, டில்லி போலீசார் தெரிவித்து உள்ளனர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1760789

Categories: Tamilnadu-news

எவ்வளவு? குவாரியில் குவித்த பணம் எவ்வளவு? விஜயபாஸ்கரிடம் மீண்டும் விசாரணை

Fri, 28/04/2017 - 20:22
எவ்வளவு?
குவாரியில் குவித்த பணம் எவ்வளவு?
விஜயபாஸ்கரிடம் மீண்டும் விசாரணை
 
 
 

சுகாதாரத்துறை அமைச்சர்,விஜயபாஸ்கருக்கு சொந்தமான மணல் குவாரியில் நடந்த ஆய்வு தொடர்பான அறிக்கை, வருமான வரித் துறைக்கு கிடைத்துள்ளது. அதன் அடிப்படை யில், அவரிடம் விரைவில் விசாரணை நடைபெறவுள்ளது.

 

Tamil_News_large_1760147_318_219.jpg


கடந்த, 7ம் தேதி, விஜயபாஸ்கர், எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி, நடிகரும், ச.ம.க., தலைவருமான சரத்குமார், முன்னாள் எம்.பி., ராஜேந்திரன் ஆகியோரின் வீடுகளில், வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். பின், வரு மான வரித் துறை அலுவலகத்தில், அமைச்சர் விஜயபாஸ்கர்,10ம் தேதி ஆஜரானார்.

மேலும், சரத்குமார், அவரது மனைவி ராதிகா, கீதாலட்சுமி ஆகியோரும், விசாரணைக்கு ஆஜராகினர்.இந்த வழக்கில்,விஜயபாஸ்கருக்கு எதிரான முக்கிய ஆதாரமாக, அவரது மணல் குவாரியில் நடந்த சோதனை அறிக்கை, வருமான வரித்துறைக்கு கிடைத்துள்ளது.
இது தொடர்பாகவும், மேலும் சில விபரங்கள் பற்றி ஆராயவும், வருமான வரித் துறையினர் திட்டமிட்டுள்ளனர். அதற்காக, அமைச்சரை மீண்டும் விசாரணைக்கு அழைக்க உள்ளனர்.


இதுகுறித்து, வருமான வரி புலனாய்வு அதிகாரிகள் கூறியதாவது: மணல்கான்ட்ராக்டர், சேகர் ரெட்டி, தன்னுடைய, 'எஸ்.ஆர். எஸ். மைனிங்' நிறுவனத்தில், விஜயபாஸ்கரும் பங்குதாரர் என, கூறியுள்ளார். எனவே, அமைச் சருக்கு மேலும் பல இடங்களில் இருந்து, குவாரி மூலம் வருமானம் கிடைக்கிறதா என, விசாரணை நடத்தி வந்தோம்.

இதற்கிடையே, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கு பணப்பட்டுவாடா நடந்ததிலும், ஆர்.கே.நகர் தேர்தல் பணப் பட்டுவாடாவிலும், அவருக்குத் தொடர்பு இருந்தது தெரிய வந்தது. அதனால் தான் தாமதிக் காமல், அவரது வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினோம்.
அவரது குவாரியில், மத்திய பொதுப்பணித் துறை நடத்திய ஆய்வு தொடர்பான அறிக்கை, எங்கள் கைக்கு கிடைத்துள்ளது. அதன் அடிப்படை யில், பல ஆண்டுகளாக சம்பாதித்த தொகையை கணக்கிட்டு வருகிறோம். விரைவில், விஜயபாஸ்கரிடம் விசாரணை நடத்துவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
 

விசாரணை தாமதம் ஏன்? :


விஜயபாஸ்கரிடம் நடத்தும் விசாரணையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக, புகார் கூறப்படுவது பற்றி, அதிகாரிகள் கூறியதாவது: நாங்கள், போலீசாரை போல அதிரடியாக செயல்பட முடியாது. எங்களது பிடியில் சிக்கியவர்களை, மெதுவாக தான் விசாரிப்போம். ஆனால், அவர்கள் உரிய வரி செலுத்தாமல், தப்பிக்க முடியாது.
எந்த விசாரணையையும், நாங்கள் வேண்டுமென்றே தாமதப்படுத்த முடியாது. இங்குள்ள அதிகாரிகள் முதல், டில்லியில் உள்ளவர் கள் வரை, எங்களை தொடர்ந்து கண்காணித்த படியே இருப்பர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
 

 

 

 

கீதாலட்சுமி மீது புகார்! :துணைவேந்தர் கீதாலட்சுமி, சுகாதாரத் துறையில் பல்வேறு ஆதாயங்கள் பெற்றதாக, தகவல் கிடைத்தது. அது தொடர்பாக, அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. அவர் மீதும், விஜயபாஸ்கர் மீதும், வேறு சில புகார்களும் வந்துள்ளன; அவற்றையும் ஆய்வு செய்து வருகிறோம். கீதாலட்சுமியும் மீண்டும் விசார ணைக்கு அழைக்கப்படுவார் என, வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

சரத்குமாருக்கு உதவிய தொழிலதிபர் யார்? :


வருமான வரித் துறையினர் கூறியதாவது: சரத்குமார், பொருளாதார நெருக்கடியில் உள்ளார். அவர், தினகரனுக்கு உதவுவதற்காக வாங்கிய, ஏழு கோடி ரூபாய் தொடர்பாக, ஐந்து முறை விசாரித்துள்ளோம். இருப்பினும், பிடி கொடுக்கவில்லை. அவர், தொழிலதிபர் ஒருவர் உதவியுடன், தன் கடன்களை தீர்க்க, அந்த தொகையை பயன் படுத்தியிருக்கலாம் என, சந்தேகிக்கி றோம். அந்த தொழிலதிபரிடம் விசாரிக்கலாமா என்றும் ஆலோசித்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
-நமது நிருபர்-

http://www.dinamalar.com/news_detail.asp?id=1760147

Categories: Tamilnadu-news

திராவிடக் கட்சிகளின் 50 ஆண்டு ஆட்சி : நிதி நெருக்கடியிலும் வளர்ச்சி

Fri, 28/04/2017 - 19:39
திராவிடக் கட்சிகளின் 50 ஆண்டு ஆட்சி : நிதி நெருக்கடியிலும் வளர்ச்சி
 

( தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி 50 ஆண்டுகள் நிறைவடையும் இந்த ஆண்டில் , திராவிடக் கட்சிகளின் ஆட்சி தமிழகத்தில் ஏற்படுத்திய தாக்கம் குறித்த பல்வேறு பரிமாணங்களை ஆராயும் பல கட்டுரைகளை தொடர்ச்சியாக பிபிசி தமிழ்.காம் வெளியிடுகிறது. அதில் முதல் கட்டுரை இங்கு பிரசுரமாகிறது-- பிபிசி தமிழ்)

அண்ணா பெரியார்படத்தின் காப்புரிமைARUNKUMARSUBASUNDARAM Image captionசமூக நீதிக்கு திராவிட ஆட்சிகளின் பங்களிப்பு

100 ஆண்டுகள் நிறைவெய்தியுள்ள திராவிட இயக்கத்தின் முதல் அரசியல் அடையாளம் நீதிக்கட்சி ஆகும்.

மாகாணங்களுக்குக் குறைந்த அதிகாரங்களே வழங்கப்பட்ட நிலையிலும் 1921இல் ஆட்சி அமைத்த நீதிக்கட்சி அனைத்துத் தரப்பினருக்கும் கல்வி வேலைவாய்ப்புகளை வழங்கும் முதல் இடஒதுக்கீடு ஆணையை 1921இல் பிறப்பித்தது. 1927முதல்1947 வரை இடஒதுக்கீடு ஆணை பின்பற்றப்பட்டது.

ஆளுமைமிக்க ஐசிஎஸ் அலுவலர் கே.பி.எஸ்.மேனன் எழுதிய "இந்தியா:நேற்று-இன்று-நாளை" என்ற நூலில் நீதிக்கட்சியின் தலைவர்களின் பிராமணரல்லாத சமூகச் சிந்தனையை உணர்ந்த அன்றைய பெரும்பான்மையான பிராமண உயர் அலுவலர்கள் , தங்கள் பெயரோடு இணைத்திருந்த அய்யர், அய்யங்கார் பெயர்களை அரசாணைகள் வழியாக நீக்கிவிட்டனர், என்றார்.

இந்த இடஒதுக்கீட்டு ஆணையை 1950இல் பிராமணரான சம்பகம் ராஜன் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் நீக்கிவிட்டது.

பெரியார், அண்ணா, காமராசர் உள்ளிட்ட அனைவரும் போர்க் கோலம் பூண்டதால், இந்திய அரசியல் சட்டம் முதன்முதலாகத் திருத்தப்பட்டு இடஒதுக்கீடு கொள்கை மீண்டும் உறுதி செய்யப்பட்டது. 1990இல் வி.பி.சிங் ஆட்சியில் கொண்டு வந்த 27 விழுக்காடு இடஒதுக்கீடு ஆணை இன்று மத்திய அரசின் கல்வி வேலைவாய்ப்புகளில் ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் இடம் பெற வாய்ப்பு அளித்துள்ளது. இது திராவிட இயக்கத்தின் வெற்றியல்லவா?

மொழி, இன உரிமைகள், பகுத்தறிவு ஆகிய நோக்கங்களுடன் 1944இல் பெரியார் தலைமையில் தொடங்கப்பட்ட திராவிடர் கழகமும், 1949இல் பேரறிஞர் அண்ணா உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழகமும்- மொழி, கலை, நாடகம், இலக்கியம், திரைப்படம் என அனைத்துத் துறைகளிலும் பண்பாட்டுப் புரட்சிக்கு வித்திட்டதை யார் மறுக்கமுடியும்?

1957இல் சட்டமன்றத் தேர்தலில் முதன்முதலில் போட்டியிட்டு களம் கண்டது திமுக.

பின்னர், 1967இல் காங்கிரசை வீழ்த்தி ஆட்சி அமைத்த அண்ணா, சென்னை மாநிலத்திற்குத் தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம், பள்ளிகளில் இந்தி மொழியை அகற்றி தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிகள் ஏற்பு, ஒரு ரூபாய்க்குப் படி அரிசித் திட்டம், அரசு அலுவலகங்களில் கடவுள் பட நீக்கம், சுயமரியாதை திருமணச் சட்டம், சென்னையில் ஏழைகளுக்குத் தீப்பிடிக்காத வீடுகள், கல்லூரி வரை இலவசக்கல்வி எனப் பல முற்போக்கான சட்டங்களும், திட்டங்களும் நிறைவேற்றினார்.

அண்ணா தொடங்கிய சமூக நலத் திட்டங்களை ஐந்து முறை முதல்வராக இருந்த கலைஞரும், மும்முறை முதல்வராயிருந்த எம்ஜி.இராமச்சந்திரனும், ஐந்து முறை முதல்வராயிருந்த ஜெயலலிதாவும் மென்மேலும் வலிமைப்படுத்தினர்.

அண்ணா விரும்பிய மாநில சுயாட்சிக் கொள்கைகள் இன்று இந்திய அரசியலில் முதன்மையாகக் கருதப்படுவதற்கு திராவிட இயக்க ஆட்சிதான் காரணம்.

1969ஆண்டிலேயே முதல்வர் கலைஞர் கருணாநிதி தலைமையிலான அரசு மத்திய-மாநில உரிமைகளை ஆய்வதற்கு நீதிபதி ராஜமன்னார் தலைமையில் குழு அமைத்து, பரிந்துரைகளைப் பெற்று, மத்திய அரசிற்கு அனுப்பியது திராவிட இயக்க ஆட்சியின் ஆக்கப்பூர்வமான செயல்பாடாகும்.

கருணாநிதிபடத்தின் காப்புரிமைGNANAM

அதிகாரங்கள் குறைவு, ஆனாலும் திட்டங்களுக்குக் குறைவில்லை

1983இல் இந்திராகாந்தி ஆட்சியிலமைக்கப்பட்ட நீதிபதி சர்க்காரியா குழு, "அளவுக்கு மீறிய அதிகாரக் குவியல்களால் மத்திய அரசிற்கு இரத்தக் கொதிப்பும் மாநில அரசுகளுக்கு இரத்தசோகையும் ஏற்பட்டுள்ளது என்பதே உண்மையாகும். இதன் விளைவு- திறமையின்மையும், நோயும்தான் இதன் வெளிப்பாடாக உள்ளன. உண்மையில் அதிகாரக் குவியல் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாகத் தீமைகளைப் பெருக்கியுள்ளது" என்று கூறியது.

2000இல் வாஜ்பாய் ஆட்சியிலமைக்கப்பட்ட நீதிபதி வெங்கடாச்சலய்யா அரசமைப்புச் சட்டத்திருத்தக் குழுவின் பரிந்துரையில்(2003இல்) "வலிமையான ஒரு மத்திய அரசம், வலிமையான மாநில அரசுகளும் அமைவதால் பிளவு ஏற்படாது, இரண்டுமே வலிமையாக அமைய வேண்டும், இன்றைக்குக் காணப்படுகிற பல பிரச்சினைகளுக்கு முக்கிய காரணம் அதிகாரக் குவியலும், அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்படுவதுமே" எனச் சுட்டிக் காட்டியது.

இந்த அரசமைப்புச்சட்டம் வழியாக குறைந்த, குறைக்கப்பட்டு வருகிற மாநில அதிகார எல்லைக்குள்ளிருந்து திராவிட இயக்கம் சமூகப் பொருளாதாரத் துறைகளில் பல எடுத்துக்காட்டான திட்டங்களைச் சிறப்பாக நிறைவேற்றி வருகிறது.

இந்நிலையில் மாநிலங்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையிலும் உண்மையான கூட்டாட்சியியல் மக்களாட்சி முறை மலர்வதற்கு இவ்வல்லுநர் குழுக்களின் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவது இந்திய நாட்டு ஒற்றுமைக்கு வழிவகுக்கும். இதைத்தான் திராவிட இயக்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

திராவிட இயக்க ஆட்சிக்காலங்களில் பொருளாதார, சமூக நலத்திட்டங்கள் சிறந்த முறையில் நிறைவேற்றப்பட்ட காரணங்களால்தான் தமிழ்நாடு வளர்ந்த மாநிலமாக இருக்கிறது.

மத்திய நிதிக்குழுவின் நிதிப்பகிர்வினால் தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய நிதியாதாரங்கள் தொடர்ந்து குறைந்து வந்தபோதும் மானுட மேம்பாட்டுக் குறியீடுகளில் தமிழ்நாடு இந்தியாவின் 14 பெரிய மாநிலங்களில் முதல் மூன்று இடங்களில் தொடர்ந்து இருந்து வருகிறது.

2001ல் வாஜ்பாய் ஆட்சியில் வெளி வந்த மானுட மேம்பாட்டு அறிக்கை தமிழ்நாட்டினுடைய மக்கள் தொகை கட்டுப்பாடு, சத்துணவு போன்ற சமூகத் திட்டங்களின் வெற்றிகளைப் பாராட்டியுள்ளது.

பின்னர் 2011இல் மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் அளிக்கப்பட்ட மானுட மேம்பாட்டு அறிக்கை தமிழ்நாட்டின் சமூகநலத் திட்டங்களைப் பாராட்டியுள்ளது.

அமர்த்தியா சென், ஜீன்டிரேஸ் எழுதிய 'நிலையில்லாத புகழ்-இந்தியாவும் அதன் முரண்பாடுகளும்' நூலில் பஞ்சாப், அரியானா மாநிலங்களைவிட பெண்கள், குழந்தைகள் நல வளர்ச்சியில் தமிழ்நாடு முதன்மையாக உள்ளது (பக்77), இவ்வகையான சமூக-பொருளாதாரக் காரணிகளை ஒப்பிட்டு தமிழ்நாடு வளர்ச்சியடைந்த அய்ரோப்பிய நாடுகளோடு சமநிலையில் உள்ளது என்கின்றனர்.

ஊழலைக் காட்டி வளர்ச்சியை மறைக்கக் கூடாது

பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, கல்வி, வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு, உள்ளாட்சியில் 33% இடஒதுக்கீடு கலைஞர் கருணாநிதி ஆட்சியில் வழங்கப்பட்டன.

தமிழ்நாட்டில்தான் நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்படுகிற பொதுச்செலவு 44% அளவிற்குச் சமூக மேம்பாடு, சமூகநலத் துறைகளுக்குச் செலவிடப்படுகிறது. உலகளவில் உள்ள பொருளாதார அறிஞர்கள் தனிநபர் வருமானம் மட்டும் ஒரு நாட்டின் அல்லது மாநிலத்தின் வளர்ச்சியை எடுத்துரைக்காது, அடிப்படை மானுடத் தேவைகளை நிறைவேற்றினால்தான் பொருளாதார வளர்ச்சியின் பயன் மானுட முன்னேற்றத்தில் முடியும் என்கின்றனர்.

2016 ஐக்கிய நாடுகள் மன்றத்தால் அளிக்கப்பட்ட மானுட மேம்பாட்டு அறிக்கையில் வளர்ச்சிக் குறியீட்டு வரிசைப்பட்டியலில் இந்தியா 131 இடத்தில் இருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. குறிப்பாக, இவ்வறிக்கையில் இடஒதுக்கீடு கொள்கையைப் பின்பற்றினால்தான் தாழ்த்தப்பட்டவர்களின் வளர்ச்சி உறுதி செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது திராவிட இயக்கம் தொடர்ந்து கடைப்பிடித்து வரும் சமூகப் பொருளாதாரத் திட்டங்களுக்கு உலகளவில் கிடைத்த அங்கீகாரமே ஆகும்;.

1990இல் உலகமயமாதல் கொள்கை பின்பற்றப்பட்ட பிறகு, இந்தியாவில் ஊழலும் முறைகேடுகளும் எல்லா மாநிலங்களிலும், எல்லா கட்சிகளிலும் பெருகி வருகிறது. தமிழ்நாடு மட்டும் இதற்கு விதிவிலக்கல்ல.

இருப்பினும், எதிர்கால திராவிட இயக்கத் தலைமை நேர்மையான அரசியலை நிலைநிறுத்துவதற்கு முன்வரவேண்டும்.

திராவிட அரசியலை விமர்சிப்பவர்கள் தமிழ்நாடு பெற்றுவரும் தொடர் வளர்ச்சியையும், மானுட மேம்பாட்டுக் குறியீடுகளையும், செய்த சாதனைகளையும் மேற்கூறிய ஒரு காரணத்தைக் குறிப்பிட்டு மறைப்பது சரியான திறனாய்வன்று.

( இக்கட்டுரை ஆசிரியர் ,தமிழ் நாடு திட்டக்கமிஷனின் முன்னாள் துணைத் தலைவர். )

http://www.bbc.com/tamil/india-39541282

Categories: Tamilnadu-news

தினகரன் கைது: ஆட்சிக் கலைப்புக்கு வழிவகுக்குமா? #VikatanExclusive

Fri, 28/04/2017 - 07:49
தினகரன் கைது: ஆட்சிக் கலைப்புக்கு வழிவகுக்குமா? #VikatanExclusive
 
 

இரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்காக 50 கோடி லஞ்சம் கொடுக்க முயற்சித்ததாகக் கூறி, அ.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் கைது செய்யப்பட்ட அவரை டெல்லி போலீஸார் நேற்று சென்னைக்கு அழைத்து வந்து, அவரது வீட்டில் 6 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். தொடர்ந்து, பெங்களுரு, கொச்சி ஆகிய இடங்களுக்கும் அழைத்துச் சென்று விசாரணை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தினகரனுடன் கைது செய்யப்பட்ட அவரது நண்பர் மல்லிகார்ஜூனாவையும் சென்னைக்கு அழைத்து வந்து போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.

தினகரன்

இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்புவரை, தினகரனுக்கு ஆதரவாக இருந்து அமைச்சர்கள், அ.தி.மு.க  சட்டமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோர், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒன்றுசேர்ந்துள்ளனர்.

நாஞ்சில் சம்பத்சென்னைக்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட தினகரனைப் பார்க்க, அமைச்சர்களோ, சட்டமன்ற உறுப்பினர்களோ வரவில்லை. கட்சியின் செய்தித்தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட சிலரே தினகரனைச் சந்திக்க வந்தனர். எனினும் காவல்துறையினர் அழைத்துச் சென்றபோது, தினகரனை தாங்கள் பார்த்ததாக நாஞ்சில் சம்பத் செய்தியாளர்களிடம் தெரிவித்தார், மேலும் தினகரனுக்கு ஆதரவாக அ.தி.மு.க-வின் 87 எம்.எல்.ஏக்கள் உள்ளனர் என்று கூறினார்.

எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பதவியேற்றதும், தமிழக சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், ஓ.பன்னீர்செல்வம் உள்பட அவருக்கு ஆதரவு தெரிவித்த 12 எம்.எல்.ஏக்களைத் தவிர்த்து 122 அ.தி.மு.க. எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் அரசு வெற்றிபெற்றது. பிப்ரவரி மாதம் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இரண்டு மாதத்திற்குள் ஆட்சியிலும், அ.தி.மு.க கட்சியிலும் எண்ணற்ற நிகழ்வுகள் அரங்கேறி விட்டன. தினகரனை கட்சியில் இருந்து ஓரங்கட்டிய அமைச்சர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள், தற்போது ஓ.பி.எஸ் அணியுடன் இணைவதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்தச் சூழ்நிலையில், தினகரனை 87 எம்.எல்.ஏக்கள் ஆதரிப்பதாக நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளதால், மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

தி.மு.க செயல்தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின், சட்டசபையைக் கூட்டி அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஏற்கெனவே வலியுறுத்தி உள்ளார். சசிகலாவை சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்வு செய்த நிலையில், ஓ.பி.எஸ் தனி அணியாகப் பிரிந்து போது, கூவத்தூரில் சட்டமன்ற உறுப்பினர்களை தங்க வைத்து, பெரும்பான்மையை நிரூபித்ததைப் போன்று இப்போது காட்சிகளை அரங்கேற்ற முடியாது.  

தினகரனுக்கு ஒருசில அமைச்சர்கள், ஒன்றிரண்டு எம்.எல்.ஏக்கள் மட்டுமே ஆதரவு தெரிவிப்பார்கள் என்று கூறப்படும் சூழ்நிலையில், 87 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருப்பதாக சம்பத் கூறியிருப்பது, எடப்பாடி தரப்புக்கு கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் அ.தி.மு.க எம்.எல்.ஏக்களில் தாழ்த்தப்பட்ட வகுப்பினராக உள்ள 25 பேர் தனியாக சென்னையில் கலந்தாலோசனை செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அமைச்சரவையில் தங்களுக்கான பிரதிநிதித்துவம் போதிய அளவில் அளிக்கப்படவில்லை என்று அந்த எம்.எல்.ஏக்களின் குற்றச்சாட்டு என்று தெரிய வந்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி.தி.மு.க-வின் இரு அணிகளின் இணைப்பைப் பொறுத்தவரை நாளொரு நிபந்தனை, பொழுதொரு தலைவர்களின் பேட்டி என்ற ரீதியில் சென்று கொண்டிருக்கிறது. இரு தரப்பினருமே "பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயார்" என்று தெரிவித்துள்ள போதிலும், இதுவரை இரு அணியின் குழுக்களும் சந்திக்கவில்லை.

ஆட்சிக்கு பெரும்பான்மை உள்ளதாக என்பதை மீண்டும் நிரூபிக்க ஒருவேளை ஆளுநர் வித்யாசாகர் உத்தரவிடுவாரேயானால், நிலைமை என்னவாகும் என்று கணிக்க முடியாத நிலையில்தான் எடப்பாடி தலைமையிலான அரசு, 'நித்யகண்டம் பூரண ஆயுள்' என்ற பழமொழிக்கேற்ப ஆட்டம் கண்டுள்ளது.

அ.தி.மு.க அணிகள் இணைப்பு தொடர்ந்து தாமதமாகிச் சென்று கொண்டேயிருக்குமானால், ஆட்சியைக் கலைப்பதைத் தவிர மத்திய அரசுக்கு வேறு வழியிருக்காது. அதற்கு முன்னதாக, தமிழக ஆளுநர் பொறுப்பு வகிக்கும் வித்யாசாகர் ராவின் பங்கு, குறிப்பிடத்தக்கதாக இருக்கும். முதலில் ஆளுநரிடம் அறிக்கை கோரப்படும். ஆட்சி கலைப்புக்கு ஆளுநர் பரிந்துரை செய்யும்பட்சத்தில், தமிழக அரசு கலைக்கப்படும்.  அநேகமாக ஒரு சில மாதங்கள் வரை இதே குழப்பத்தில் அரசை செயல்பட விட்டு, பின்னர் கலைப்பதற்கான சாத்தியங்களும் உள்ளன. எனவே, எப்படி இருப்பினும் தமிழகத்தில் ஆட்சிக் கலைப்புக்கே அதிக வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

அது எப்போது என்பதுதான் இப்போதை கேள்வியாக உள்ளது!

http://www.vikatan.com/news/coverstory/87790-would-dinakaran-arrest-lead-to-the-dissolution-of-tn-government.html

Categories: Tamilnadu-news

‘அமைச்சரவையில் எனக்கு இடமே வேண்டாம்?!’ - எடப்பாடி பழனிசாமியை நெருக்கும் பி.ஜே.பி #VikatanExclusive

Fri, 28/04/2017 - 07:36
‘அமைச்சரவையில் எனக்கு இடமே வேண்டாம்?!’ - எடப்பாடி பழனிசாமியை நெருக்கும் பி.ஜே.பி #VikatanExclusive
 
 

எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.கவின் இரண்டு அணிகளும் இணைவதில் ஏராளமான குழப்பங்கள் நிலவி வருகின்றன. ‘இன்னமும் தினகரனை துணைப் பொதுச் செயலாளராக முன்னிறுத்துகின்றனர் பழனிசாமி அணியினர். இணைவது போலக் காட்டிவிட்டு, தனி ஆவர்த்தனம் நடத்தத் திட்டமிட்டுள்ளனர் அமைச்சர்கள்' என்கின்றனர் பன்னீர்செல்வம் அணியினர். 

எடப்பாடி பழனிசாமி அணி, பன்னீர்செல்வம் அணி, சசிகலா அணி என அதிகாரப்பூர்வமாக மூன்று அணிகள் செயல்படத் தொடங்கியுள்ளன. தொலைக்காட்சி விவாதங்களில் இந்த மூன்று அணிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்கின்றனர். "சசிகலாவை முழுமையாக நீக்கிவிட்டு வந்தால்தான் பேச்சுவார்த்தைக்கு வருவோம் என எடப்பாடி பழனிசாமி அணியினருக்கு உறுதியாகக் கூறிவிட்டோம். அப்படியொரு முடிவிலேயே பழனிசாமி அணியினர் இல்லை என்பது தெளிவாகிவிட்டது. நேற்று தலைமைக் கழகத்தில் மூன்றாவது நாளாக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நடத்தியிருக்கின்றனர். இந்தக் கூட்டத்தில், தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டிய ஆதாரங்களை மே 5-ம் தேதிக்குள் ஒப்படைக்குமாறு பழனிசாமி தரப்பினர் வலியுறுத்தினர். அந்த பிரமாண பத்திரங்களில், பொதுச் செயலாளராக சசிகலாவையும் துணைப் பொதுச் செயலாளராக தினகரனையும் குறிப்பிட்டுள்ளனர். 'பேச்சுவார்த்தைக்கு வாருங்கள்' எனக் கூறிக் கொண்டே, மறுபுறம் உள்ளடி வேலைகளைச் செய்து வருகின்றனர் எடபபாடி பழனிசாமி தரப்பினர். அப்படியானால், அணிகள் இணைவதில் அவர்களுக்கு விருப்பமில்லை என்றே தோன்றுகிறது" என ஆதங்கத்தோடு பேசினார் பன்னீர்செல்வம் அணியின் மூத்த நிர்வாகி ஒருவர். 

பன்னீர்செல்வம்இந்தக் கருத்தை மறுத்துப் பேசும் எடப்பாடி பழனிசாமி தரப்பினரோ, “இரண்டு தரப்பினரும் சுமூகமாகப் பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும் என்பதற்காகத்தான் தலைமைக் கழகத்தில் இருந்து பேனர்களை அப்புறப்படுத்தினோம். தினகரனும் கட்சியில் இருந்து ஒதுங்கிவிட்டார். இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு சசிகலா கட்சி அலுவலகத்துக்கு வரும் வாய்ப்பே இல்லை. அப்படியிருக்கும்போது, ‘நிபந்தனைகளை ஏற்கும் வரையில் பேச்சுவார்த்தை நடப்பதற்கான சாத்தியம் இல்லை’ என்கிறார் மா.ஃபா.பாண்டியராஜன். அவர்களது நிபந்தனை என்பது, ஜெயலலிதா மரணத்துக்கு சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்பதாக வெளியில் சொல்லப்படுகிறது. உண்மையில், ‘பன்னீர்செல்வத்துக்கு மீண்டும் முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும். அமைச்சரவையில் நாங்கள் சொல்பவருக்கு வலுவான துறை ஒதுக்க வேண்டும்’ என நிர்பந்தம் செய்கின்றனர்.

தேர்தல் ஆணையத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்பது, ஆர்.கே.நகர் தேர்தல் நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு. அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் முப்பதாயிரம் நிர்வாகிகளிடம் இருந்து பிரமாண பத்திரங்கள் பெறப்பட்டு வந்தன. பன்னீர்செல்வம் அணியினரும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆவணங்களை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளனர். எங்கள் பக்கம் உள்ள ஆவணங்களை நாங்கள் கொடுக்கிறோம். இதற்கும் பேச்சுவார்த்தைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை" என விவரித்தவர்கள், 

“இரண்டு தரப்பும் அமர்ந்து பேச வேண்டிய நேரத்தில், பழனிசாமிக்கு நெருக்கடி கொடுக்கும் விதத்தில் சில வேண்டுகோள்களை வைக்கின்றனர். இணைப்பு முயற்சிக்கு ஜெயா டி.வி நிர்வாகிகள் இருப்பதால், விவேக்கை அங்கிருந்து அகற்றுமாறு வைத்திலிங்கத்திடம் கோரிக்கை வைத்தார் பன்னீர்செல்வம். இதுகுறித்து எடப்பாடி பழனிசாமியிடம் பேசினார் வைத்தி. அவருக்குப் பதில் அளித்தவர், ‘இதுநாள் வரையில் விவேக்கிடம் நான் பேசியதுகூட இல்லை. நீங்கள் விலகுங்கள் என அவரிடம் பேசவும் முடியாது. நீங்கள் யாராவது பேசுங்கள்' எனக் கூறிவிட்டார். இந்தத் தகவல் பன்னீர்செல்வத்துக்குப் போக, கொந்தளித்து தீர்த்துவிட்டார். இதன் எதிரொலியாக, 'தன்னை நோக்கி ரெய்டு நடவடிக்கைகள் பாயும்' என்பதை அறிந்து மன நெருக்கடியில் இருக்கிறார் விவேக். இரண்டு தரப்பிலும், பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வராத வரையில் டெல்லி போலீஸாரால் தினகரன் அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டே இருப்பார்" என்றார் விரிவாக. 

“எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக திரைமறைவில் பல காரியங்கள் நடந்து வருகின்றன. நேற்று எம்.எல்.ஏக்களில் 27 பேர் பெரம்பலூர் எம்.எல்.ஏ தமிழ்ச் செல்வன் தலைமையில் தனிக் கூட்டம் போட்டதாக செய்தி வெளியானது. இந்தச் செய்தியை அமைச்சர் செங்கோட்டையன் மறுத்தார். அதேநேரம், டெல்லிக்கு சென்று வந்ததில் இருந்தே கலக்கத்தில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஆட்சி மற்றும் கட்சி தொடர்பாக தொடர்ந்து அழுத்தங்கள் வருவதால், ' நான் ஊருக்கே போய்விடுகிறேன். எனக்கு அமைச்சரவையில் இடமே வேண்டாம். நிம்மதியாக ஒதுங்கிவிடுகிறேன்' என நொந்து போய் கூறிவிட்டார். அவரைக் கொங்கு மண்டல அமைச்சர்கள் சமாதானப்படுத்தியுள்ளனர். பன்னீர்செல்வத்துக்கு பதவி உறுதியாகும் வரையில், பேச்சுவார்த்தை தொடங்குவதற்கான வாய்ப்புகள் குறைவுதான்" என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள். 

http://www.vikatan.com/news/tamilnadu/87799-bjp-takes-tough-stand-edappadi-palanisamy.html

Categories: Tamilnadu-news

அ.தி.மு.க., அணிகள் இணைப்பு பேச்சில் இழுபறி ஏன்?

Thu, 27/04/2017 - 20:15
அ.தி.மு.க., அணிகள்
இணைப்பு பேச்சில் இழுபறி ஏன்?
 
 
 

யார் பெரியவர் என்ற, 'ஈகோ' பிரச்னை தலை துாக்கி உள்ளதால், அ.தி.மு.க., அணிகள் இணைப்பு பேச்சு துவங்குவதில், இழுபறி நீடிக்கிறது.

 

Tamil_News_large_176016220170427232120_318_219.jpg

 

இரட்டை இலை :அ.தி.மு.க.,வின் இரு அணிகளும் இணைந்தால் தான், இரட்டை இலை சின்னம் கிடைப்பதற் கான சூழல் உள்ளது. உள்ளாட்சி தேர்தலில், இரட்டை இலை சின்னம் இருந்தால் தான், வெற்றி பெறமுடியும் என்ற நிலையும் உள்ளது. எனவே, இரு அணிகளையும் இணைக்க, இரு தரப்பிலும் முக்கிய நிர்வாகிகள் முடிவு செய்த னர். 'பேச்சுக்கு தயார்' என, பன்னீர்செல்வம் அறிவித்தார்;

அதை, சசி அணியினர் வரவேற்றனர். அதை தொடர்ந்து, இருதரப்பிலும் பேச்சு நடத்த குழு அமைக்கப்பட்டது. ஆனாலும், அதிகாரப்பூர்வ

மான பேச்சு துவக்கப்படவில்லை.இருதரப்பி லும், சிலர் கூறிய கருத்துக்களால், பேச்சு துவங்குவ தில் தடை ஏற்பட்டது.அதற்கு, யார் பெரியவர் என்ற, 'ஈகோ' பிரச்னை தலைதுாக்கி உள்ளதே காரணம் என, கூறப்படுகிறது.

சென்னையில் நேற்று, அமைச்சர் ஜெயகுமார் பேசுகையில்,''நாங்கள் பேச்சுக்கு தயாராக உள்ளோம்; அவர்கள் எப்போது வந்தாலும், பேசத் தயாராக உள்ளோம். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு,'' என்றார்.

பன்னீர் அணியைச் சேர்ந்த, முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் கூறுகையில், ''எங்கள் நிபந்தனை கள் ஏற்கப்படும் வரை, பேச்சு துவங்காது; அதில், எங்கள் அணி தெளிவாக உள்ளது. எங்கள் நிபந்தனை கள் குறித்து, அவர்கள் தான் தெளிவுப்படுத்த வேண்டும்,'' என்றார்.

இது குறித்து, அ.தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறிய தாவது: இரு அணிகளும் இணைந்தால், தங்களுக் குள்ள முக்கியத்துவம் குறைந்துவிடுமோ என, அமைச்சர்கள் உள்ளிட்ட சிலர் அஞ்சுகின்றனர். எனவே, அவர்கள்முரணான கருத்துக்களைகூறி, இரு தரப்பினரையும் குழப்பி விடுகின்றனர். சசி அணியில் உள்ளவர்கள், 'நம்மிடம், 122 எம்.எல்.ஏ.,க் கள் உள்ளனர்.

எனவே, அவர்கள் வந்து பேசட்டும்' என, நினைக்கின் றனர். பன்னீர் அணியில் உள்ளவர்களோ, 'கட்சி

 

தொண்டர்கள் மற்றும் மக்கள் செல்வாக்கு, நமக்குதான் உள்ளது. எனவே, அவர்கள் பேச வரட்டும்' என்கின்றனர்.'சசிகலா குடும்பம் முற்றிலுமாக, கட்சியில் இருந்து நீக்கப்பட வேண்டும்' என, பன்னீர் அணியினர் நிபந்தனை விதித்தனர். ஆனால், சசிகலா அணியினர் வாங்கும் பிரமாணவாக்குமூலத்தில், சசிகலா மற்றும் தினகரன் பெயர் நீக்கப்படவில்லை.
 

முதல்வர் பதவி :


மேலும், முதல்வர், பொதுச் செயலர் பதவி யாருக்கு என்பதை முடிவு செய்வதிலும், சிக்கல் உள்ளது. இரு தரப்பினரும், ஒருவருக் கொருவர் விட்டுக் கொடுத்தால் மட்டுமே, இணைப்பு சாத்தியமாகும். இல்லையெனில், இதே நிலையே தொடரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1760162

Categories: Tamilnadu-news

சசிகலா அணியில் கருத்து வேறுபாடு : மா.செ.,க்கள் கூட்டத்தில் மோதல்

Thu, 27/04/2017 - 20:14
சசிகலா அணியில் கருத்து வேறுபாடு :
மா.செ.,க்கள் கூட்டத்தில் மோதல்
 
 
 

இரு அணிகள் இணைப்பு தொடர்பாக,அ.தி.மு.க., - சசிகலா அணியில், கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

 

Tamil_News_large_176016020170427232245_318_219.jpg

அ.தி.மு.க.,வின் இரு அணிகளையும் இணைக்க, இரு தரப்பிலும் சிலர் முயற்சித்து வருகின்றனர். அதற்கு, சசிகலா அணியில், சிலர் தடையாக உள்ளனர். இதனால், அணி யில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க., - சசிகலா அணி சார்பில், மூன்று நாட்களாக, மாவட்ட செயலர்கள் கூட்டம், சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத் தில் நடந்தது. அதில், இரு

அணிகள் இணைப்பு தொடர்பாக பேசும்போது, கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.

தினகரன் ஆதரவாளர்களான, தங்க தமிழ்செல்வன், வெற்றிவேல், கலைராஜன் போன்றோர், அணிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். முதல் நாள் கூட்டத்தில், 'கட்சி அலுவலகத்தில் உள்ள, சசிகலா பேனர்களை அகற்ற வேண்டும்' என, அமைச்சர் வீரமணி வலியுறுத்தி உள்ளார். அதற்கு அமைச்சர் செங்கோட்டையன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து, இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. 'சசிகலா குடும்பத்தால் அமைச்சரான, செங்கோட்டையன் வேண்டுமானால், அந்தகுடும்பத்திற்கு விசுவாசமாக இருக்கட்டும்; ஜெ.,வால் வளர்ந்த எங்களுக்கு, அந்த குடும்பம் தேவையில்லை' என, சசி எதிர்ப்பு மனநிலையில் உள்ளவர்கள் தெரிவித்து உள்ளனர்.

இரண்டாம் நாள் கூட்டத்தில், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த உமாதேவனுக்கும்,

 

எம்.பி., வைத்திலிங்கத்திற்கும் இடையே, கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. மூன்று நாட்கள் நடந்த கூட்டத்தில், பெரும்பாலான மாவட்ட செயலர்கள், இரு அணிகள் இணைப் பிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அமைச்சர் கள், தங்கள் சுயலாபத்தை மட்டும் கணக்கில் கொண்டு செயல்படுவதாக, சில மாவட்ட செய லர்கள் வெளிப்படையாக குற்றம் சாட்டியுள்ளனர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1760160

Categories: Tamilnadu-news

அ.தி.மு.க. அணிகள் இணைப்பு தாமதமாகும் குட்டு உடைந்தது!

Thu, 27/04/2017 - 17:20
அ.தி.மு.க. அணிகள் இணைப்பு தாமதமாகும் குட்டு உடைந்தது!
 
 

OP_400_21323.jpg

அ.தி.மு.க.வின்  இரு அணிகளையும் இணைப்பதற்காக அ.தி.மு.க. அம்மா அணியின் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக்  கூட்டம் கடந்த 3 நாள்களாக சென்னையில் நடந்து வருகிறது.

 இந்தக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளிடம்  பிரமாணப் பத்திரம் பெறப்பட்டதாக கூறப்படுகிறது.
 அந்த பிரமாணப் பத்திரத்தில், 'கட்சியை வலுப்படுத்த பொதுச்செயலாளர் சசிகலா, துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆகியோருக்கு ஆதரவாக இருப்போம். எடப்பாடி  பழனிசாமி முதலமைச்சராக நீடிப்பதற்கு உறுதுணையாக இருப்போம்' என்று  எழுதப்பட்டு இருந்ததாக ஓ.பி.எஸ். அணிக்கு தகவல் கிடைக்கவே, பேச்சுவார்த்தை பஞ்சாயத்தாக மாறிப் போய் இருக்கிறது.

 'இணைப்பு என்ற பெயரில் இப்படியொரு  பிரமாணப் பத்திரத்தையும் ஒருபக்கம் வாங்கி வைத்துக் கொண்டு, அணிகள் இணைப்பு, கட்சி அலுவலகத்தில் சசிகலா பேனர் கிழிப்பு' என்று எதிரணி நாடகமாடுவதாக ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான புரட்சித்தலைவி அம்மா அணியினர் புலம்ப ஆரம்பித்துள்ளனர்.

ஏறக்குறைய நதிகள் இணைப்பு போலத்தான் இந்த இணைப்பும் நீண்டகால கனவுத்திட்டம் போலாகுமோ என்று தொண்டர்கள் பேசிவருகிறார்கள்.

http://www.vikatan.com/news/politics/87764-this-is-the-reason-for-the-delay-of-joining-two-sides-of-admk.html

Categories: Tamilnadu-news

'ஒற்றை தலைமை'யை இழக்கும் அ.தி.மு.க... எதிர்காலம் என்ன?

Thu, 27/04/2017 - 16:30
'ஒற்றை தலைமை'யை இழக்கும் அ.தி.மு.க... எதிர்காலம் என்ன?
 
 

எம்.ஜி.ஆர். கருணாநிதி

தி.மு.க.வில் இருந்து எம்.ஜி.ஆர். நீக்கப்பட்ட காலம் அது. புதிய கட்சியைத் துவக்க எம்.ஜி.ஆர் திட்டமிட்டார். அப்போது கருணாநிதியையும், எம்.ஜி.ஆரையும் தனியாக சந்தித்துப் பேச வைத்தால் பிரச்னை தீர்ந்து விடும் என நினைத்து அதற்கு தூதுவர்களாக சிலர் இயங்கினர். ஆனால் அதை இரு தரப்பினரும் ஏற்கவில்லை. கட்சி உடைந்தது. அ.தி.மு.க. என்ற புதிய கட்சியை எம்.ஜி.ஆர். துவக்கினார்.

அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். துவக்கிய சில ஆண்டுகளுக்குப் பின்னர், அ.தி.மு.க. - தி.மு.க.வை இணைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டது. கட்சி பொறுப்பை கருணாநிதியும், ஆட்சிப் பொறுப்பை எம்.ஜி.ஆரும் கவனித்துக்கொள்ளும் ஏற்பாடு அது. ஆனால் இதையும் இருவரும் ஏற்கவில்லை. இருவரும் இணையாமல் எதிர் அரசியலையே செய்தனர். ஆளுங்கட்சியாக அ.தி.மு.க.வும், எதிர்கட்சியாக தி.மு.க.வும் செயல்பட்டது.

கருணாநிதி

வெறுப்பு அரசியலுக்கிடையே இருந்த புரிதல்

இரு கட்சிகளிடம் இருந்த பெருவாரியான வாக்கு வங்கி, வேறு கட்சியையோ, தலைவரையோ வளர விடாமல் பார்த்துக்கொண்டது. தமிழகத்தை தொடர்ச்சியாக சிலமுறை ஆண்ட காங்கிரஸ் கரைந்து போனதும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வளர்ச்சியை கண்ட பி.ஜே.பி. தமிழகத்தில் கால் பதிக்க முடியாமல் போனதும் இதனால் தான்.  எம்.ஜி.ஆரும், கருணாநிதியும் பேசிக்கொண்டே இந்த முடிவை எடுத்திருப்பதாக கூட அப்போது கிசுகிசுக்கப்பட்டது.

இரு கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்துக்கொண்டனர். எம்.ஜி.ஆர் காலத்துக்குப் பின்னர், கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்ற ஜெயலலிதாவும், கருணாநிதியும் நேருக்கு நேர் சந்திப்பதை அறவே தவிர்த்தனர். அந்தளவு வெறுப்பு அரசியலை கடைபிடித்தனர். ஆனால் இரு கட்சிகளுக்குமிடையே ஒரு புரிதல் இருந்ததை உணர முடிந்தது. அது தான் வேறு கட்சிகளை தமிழகத்தில் கால் பதிக்க முடியாமல் பார்த்துக்கொண்டது.

மிகக் கடுமையான நெருக்கடி கால கட்டங்களில்கூட தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் மாற்று ஏற்பட்டதில்லை. தமிழகத்தில் மூன்றாவது அணி எதுவும் வலுப்பெற்றதே இல்லை. மூன்றாவது பெரிய கட்சியாக உருவான தே.மு.தி.க. அ.தி.மு.க.வுடன் அணி சேர்ந்து தேர்தலை சந்தித்து பிரதான எதிர்கட்சியானது. ஆனால் அதன் பின்னர் அந்த கட்சி தேய்ந்து போனது. வேறு கட்சிகள் கால்பதிக்க முடியாத அளவுக்கு தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தங்கள் வியூகங்களை அமைத்திருந்தன என்று தான் சொல்ல வேண்டும்.

மோடி ஜெயலலிதா

'ஒற்றை தலைமை' தான் அ.தி.மு.க.வின் பலம்

அ.தி.மு.க.வின் மிகப்பெரிய பலம் ஒற்றைத் தலைமை. எம்.ஜி.ஆர். ஜெயலலிதா என கட்சிக்கு இருந்த ஒற்றைத்தலைமை வேறு கட்சிகள் ஆதிக்கம் செய்யாமல் பார்த்துக்கொண்டன. சொத்துக்குவிப்பு வழக்கு இறுதிக் கட்டத்தை எட்டியிருந்தபோது, நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பி.ஜே.பி. கூட்டணி அமைக்க விரும்பியது. ஆனால் அதை ஜெயலலிதா அனுமதிக்கவில்லை. அதன்பின்னர் சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி ஜாமினில் வெளிவந்து வீட்டிலேயே இருந்தார் ஜெயலலிதா. அப்போது ஜெயலலிதாவை தேடிவந்து மத்திய அமைச்சர்கள் சந்தித்தார்கள். வழக்கின் மேல்முறையீட்டில் ஜெயலலிதா விடுவிக்கப்பட்ட பின்னர் பிரதமர் மோடியே ஜெயலலிதாவை வீடு தேடி வந்து சந்தித்தார்.

'2016 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. உடன் கூட்டணி சேர விரும்பியது பி.ஜே.பி. அதைத்தான் பிரதமரும், மத்திய அமைச்சர்களும் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசி வருகிறார்கள்' என அப்போது சொல்லப்பட்டது. ஆனால் 2016 தேர்தலிலும் பி.ஜே.பி.க்கு கூட்டணி வாய்ப்பு கிடைக்கவில்லை. கொள்கை ரீதியாக பி.ஜே.பி.யுடன் தி.மு.க. விலகி நிற்கும் சூழலில், ஒத்த கருத்துடைய கட்சியாக இருந்த போதும், தமிழகத்தில் பி.ஜே.பி. காலூன்றுவதை அ.தி.மு.க. விரும்பவில்லை என்பதைத்தான் ஜெயலலிதாவின் நடவடிக்கை உணர்த்தியது. ஜெயலலிதாவை மீறி பி.ஜே.பி.யால் தமிழகத்தில் கால் பதிக்க முடியவில்லை. நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்குப் பின்னர் எப்படியேனும் தமிழக சட்டமன்றத்தில் தங்கள் கணக்கை துவங்கி விட வேண்டும் என எதிர்பார்த்த பி.ஜே.பி.க்கு பெரும் ஏமாற்றமே மிஞ்சியது.

ஜெயலலிதா

ஜெயலலிதா வழியில் சசிகலா...

அ.தி.மு.க.வில் நிலவும் ஒற்றை தலைமை தான் தமிழகத்தில் பி.ஜே.பி. கால் பதிக்க இருந்த மிகப்பெரிய சிக்கல் என சொல்லப்பட்டதும் உண்டு. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னால் சசிகலா கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்துவார் எனும்போது மீண்டும் ஒரு ஒற்றை தலைமை அ.தி.மு.க.வில் உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டது. ஏற்கெனவே நிழல் அதிகாரமாக இருந்தவர், நிஜத்தில் அதிகாரம் செலுத்தியது அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கோ, அமைச்சர்களுக்கோ புதியது இல்லை. சசிகலாவுக்கு மக்கள் ஆதரவு என்பது இல்லாத போதும், கட்சியில் அமைப்பு ரீதியாக மிகப்பெரிய ஆதரவு இருந்ததை ஏற்கத்தான் வேண்டும். சசிகலா எனும் ஒற்றைத் தலைமையில் கட்சி இயங்கத்துவங்கியது.

கட்சி வரலாற்றில் அ.தி.மு.க. கடுமையான நெருக்கடிகளை சந்தித்திருக்கிறது. எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின்னர், அ.தி.மு.க.வில் பெரும் பிளவு ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட அதிகாரப்போட்டியால் சின்னம் முடக்கப்பட்டது. ஆனால் அது தற்காலிகமானதாகவே இருந்தது. இது தவிர மேலும் சிறிய பிளவுகள் ஏற்பட்டன. ஆனால் அவை கட்சியில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

சசிகலா

30 ஆண்டுக்கு பின்னர் மீண்டும் நெருக்கடி !

இந்நிலையில் 30 ஆண்டுகளுக்குப் பின்னால் கட்சி மிகப்பெரிய நெருக்கடியை சந்தித்திருக்கிறது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அ.தி.மு.க.வை வழிநடத்தப்போவது யார் என்ற கேள்வி எழுந்தது. முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றாலும், கட்சியையும், ஆட்சியையும் சசிகலாவே வழிநடத்தினார். ஒரு கட்டத்தில் சசிகலாவே முதல்வர் பதவியேற்பார் என அறிவிக்க, சசிகலாவுக்காக முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார் ஓ.பன்னீர்செல்வம். அதுவரை சசிகலாவின் கண்ணசைவில் இருந்து வந்தவர், திடீரென சசிகலாவுக்கு எதிராக திரும்பினார். ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக சில எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் இடமாறினர்.

ஆனாலும், கட்சியில் மிகப்பெரிய பிளவு ஏற்படவில்லை. பெரும்பான்மையான எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், கட்சி நிர்வாகிகள் என 95 சதவீதம் பேர் சசிகலாவுக்கு ஆதரவாகவே இருந்தனர். சசிகலா முதல்வர் பொறுப்பேற்பார் என சொல்லப்பட... திடீரென ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு வந்தது. இதில் குற்றவாளி என சசிகலா உள்ளிட்டோர் சிறைக்குச் செல்ல... சசிகலாவின் அக்கா மகன் டிடிவி தினகரன் துணைப்பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டு, கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்தத் துவங்கினார். இந்நிலையில் இரட்டை இலை சின்னத்துக்காக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டி.டி.வி. தினகரன் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

தமிழக அமைச்சர்கள்

ஒற்றை தலைமையை இழக்கும் அ.தி.மு.க.?

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மட்டுமல்ல... சசிகலா, தினகரனும் கூட அ.தி.மு.க.வின் ஒற்றை தலைமையாகத்தான் இருந்தார்கள். ஒற்றை தலைமையாக கட்சியை வழிநடத்தும் ஆற்றலை பெற்றிருந்தார்கள். பெரும்பான்மை கட்சி நிர்வாகிகளை தங்கள் கண்ணசைவில் இயங்க வைத்தனர். இந்நிலையில் தற்போது அப்படிப்பட்ட ஒரு சூழல் மறைந்திருக்கிறது.

இப்போது கட்சியில் யார் தலைமை ஏற்கப் போகிறார்கள் என்பது யாருக்கும் தெரியவில்லை. சசிகலா தரப்பு, பன்னீர்செல்வம் தரப்பு என பிரிந்து நின்ற அணிகள் ஓரணியில் சேரத் துடிக்கின்றன. சசிகலா அணி, தினகரன் அணியாகி... இப்போது யார் தலைவர் என தெரியாத அணியாக இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். தம்பிதுரை பேசுகிறார். ஜெயக்குமார் பேசுகிறார். செங்கோட்டையன் பேசுகிறார். ஆனால் இவர்களில் யார் தலைவர் என்பது மட்டும் தெரியவில்லை.

நிதியமைச்சராக உள்ள ஜெயக்குமார், ஓ.பன்னீர்செல்வம் வந்தால் நிதியமைச்சர் பதவியை தர தயாராக இருக்கிறோம் என்கிறார். சசிகலாவின் படங்களை அகற்ற வேண்டும் என்ற நிபந்தனையை ஏற்க வேண்டும் என பன்னீர்செல்வம் தரப்பு நிபந்தனை விதித்தால் அதையெல்லாம் நாங்கள் செய்ய வேண்டியதில்லை என மூத்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சொன்ன மறுநாளே சசிகலாவின் படங்கள் அகற்றப்படுகின்றன. யார் சொல்லி இது நடக்கிறது என்பது தெரியவில்லை. யார் சொன்னால் நடக்கும் என்பதும் தெரியவில்லை.

தமிழக அமைச்சர்கள்

12 பேரிடம் 122 பேர் கெஞ்ச இது தான் காரணம்...!

எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம், தம்பிதுரை, திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், ஜெயக்குமார் என பலர் கட்சியை வழிநடத்துகிறார்கள். சசிகலாவுக்கு ஆதரவாக பேசுகிறார் ஒருவர். கட்சி நலன் தான் முக்கியம் சசிகலா அவசியமில்லை என்கிறார் இன்னொருவர். அ.தி.மு.க.வின் பலமான ஒற்றைத் தலைமையை இழந்து பல்வேறு தலைமைகளுடன் பலவீனமாக காட்சியளிக்கிறது அ.தி.மு.க. 122 எம்.எல்.ஏ.க்களையும் 95 சதவீத பொதுக்குழு உறுப்பினர்களையும் தங்கள் பக்கம் கொண்ட தரப்பு, 12 எம்.எல்.ஏ.க்களையும், 5 சதவீத பொதுக்குழு உறுப்பினர்களையும் கொண்ட தரப்பிடம் கெஞ்ச நேர்ந்ததற்கு காரணம் இது தான்.

அ.தி.மு.க. இதுவரை பல சிக்கல்களை சந்தித்துள்ளது. இரு அணியாக பிரிந்து இரு ஆண்டுகள் சின்னத்தை பறிகொடுத்ததும் உண்டு. போட்டி பொதுக்குழுவை நடத்தி நெருக்கடி கொடுத்ததும் உண்டு. ஆனால் அப்போதெல்லாம் கட்சியைக் காப்பாற்றியது கட்சியின் ஒற்றை தலைமை தான். எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும், கருணாநிதியும் தமிழகத்தில் மற்ற கட்சிகளுக்கு இடம் கொடுக்காமல் பார்த்துக்கொண்டார்கள். அதற்கு காரணமும் ஒற்றைத் தலைமை தான். இப்போது அதை இழந்து அ.தி.மு.க. பரிதாபமாக காட்சியளிக்கிறது.

அ.தி.மு.க.வுக்கு இது மிகப்பெரிய வீழ்ச்சி. இது தற்காலிகமானதா, நிரந்தரமானதா என்பதைக் காலம் தான் தீர்மானிக்கும். ஒருவேளை அ.தி.மு.க. வீழ்ந்தால், அது தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். அதைத்தான் சில கட்சிகள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன. இதில் முதலிடம் பி.ஜே.பி.க்கு.

http://www.vikatan.com/news/coverstory/87715-end-of-single-leader-rule-what-is-the-future-of-aiadmk.html

Categories: Tamilnadu-news

28 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்தினார்களா?

Thu, 27/04/2017 - 16:07
28 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்தினார்களா?
 
 

அ.தி.மு.க தலைமை அலுவலகம்

“அ.தி.மு.க-வில் ஏற்கெனவே இரண்டு அணிகளாகப் பி்ளவுபட்டுக் கிடக்கும் நேரத்தில் அ.தி.மு.க அம்மா அணியில் உள்ள எஸ்.சி., எஸ்.டி எம்.எல்.ஏ-க்கள் தனியாகக் கூட்டம் போட்டுள்ளார்கள்'' என்ற தகவலால் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், ''அப்படி ஒரு கூட்டம் நடைபெறவே இல்லை'' என சில எம்.எல்.ஏ-க்கள் மறுப்பும் தெரிவித்துள்ளனர்.
 
அ.தி.மு.க-வின் இரண்டு அணிகளிலும் எஸ்.சி மற்றும் எஸ்.டி. எம்.எல்.ஏ-க்கள் உள்ளனர். இதில், ஓ.பி.எஸ் அணியில் மூன்று எம்.எல்.ஏ-க்கள் தற்போது உள்ளனர். இது தவிர, 28 எம்.எல்.ஏ-க்கள் எடப்பாடி பழனிசாமி அணியில் இருக்கிறார்கள். அதில், மூன்று பேர் அமைச்சர்களாகவும் உள்ளார்கள். இந்நிலையில் அ.தி.மு.க-வின் இரண்டு அணிகளையும் மீண்டும்  இணைப்பதற்கான வேலைகளை இருதரப்பிலும் தொடங்கியுள்ளார்கள். இரண்டு அணிகளும் இணையும்பட்சத்தில் தற்போது உள்ள அமைச்சரவையில் மாற்றம் செய்யும் வாய்ப்பும் உள்ளது. 

தமிழ்ச்செல்வன்இதனையடுத்துத் தமிழக அமைச்சரவையில் தங்களுக்குப் போதிய பிரதிநிதித்துவம் இல்லை என்ற குமுறல் எஸ்.சி., எஸ்.டி எம்.எல்.ஏ-க்களிடம் இருந்துவருகிறது. மூன்று அமைச்சர்கள் இருந்தாலும் முக்கியத்தும் வாய்ந்த துறைகள் தங்களுக்கு ஒதுக்கப்படவில்லை எனவும், அமைச்சரவையில் கூடுதல் இடங்கள் தங்களுக்கு வேண்டும் என்ற கோரிக்கையும் அவர்கள் தரப்பில் இருந்துள்ளது. புதிய அமைச்சரவையில் தங்கள் சமூகத்துக்குக் கூடுதல் பிரதிநிதித்துவம் தரவேண்டும் என்பதை வலியுறுத்தி எடப்பாடி அணியில் உள்ள எஸ்.சி., எஸ்.டி எம்.எல்.ஏ-க்கள் தனியாகக் கூட்டம் நடத்தியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பெரம்பலூர் எம்.எல்.ஏ தமிழ்ச்செல்வன் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இதில், சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு இருப்பதாகவும், அதனை முதல்வர் பழனிசாமியிடம் வலியுறுத்த இருப்பதாகவும் தகவல் வெளியானது. 28 எம்.எல்.ஏ-க்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டார்கள் எனச் செய்தி வெளியானது. ஆனால், இதில் ஒற்றை இலக்கத்தில்தான் எம்.எல்.ஏ-க்கள் கலந்துகொண்டனர். அதுவும் தமிழ்ச்செல்வன் தனக்கு வேண்டிய எம்.எல்.ஏ-க்களை மட்டும் வைத்துக்கொண்டு கூட்டம் நடத்தியிருப்பதாக எம்.எல்.ஏ-க்கள் தரப்பில் இருந்தே புகைச்சல் கிளம்பியுள்ளது. 

எஸ்.சி., எஸ்.டி பிரிவு எம்.எல்.ஏ-க்கள் பலர் சென்னையிலேயே இல்லை எனப் புலம்புகிறார்கள். ''எங்களுக்கே தெரியாமல் தமிழ்ச்செல்வன் எப்படிக் கூட்டம் நடத்தினார்'' என்று சில எம்.எல்.ஏ-க்கள் புலம்பியுள்ளார்கள். எம்.எல்.ஏ முருகுமாறனிடம், ''கூட்டத்தில் கலந்துகொண்டீர்களா'' எனக் கேட்டபோது, “அப்படி ஒரு கூட்டம் நடைபெற்றதாகவே எங்களுக்குத் தெரியவில்லை. இப்போது கட்சியிருக்கும் இருக்கும் நிலையில், அப்படி ஒரு கூட்டம் நடத்துவது தேவையில்லாத செயல்” என்றார். எஸ்.சி பிரிவு எம்.எல்.ஏ-க்கள் பலருக்கே கூட்டம் நடைபெற்றதாகத் தெரியவில்லை என்கிறார்கள். 

இப்படி ஒரு தகவலைக் கசியவிட்டதே தமிழ்ச்செல்வன்தான் என்றும், தனக்கு முக்கியத்தும் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தனக்கு வேண்டிய எம்.எல்.ஏ-க்களைக் கையில் வைத்துக்கொண்டு, அனைத்து எம்.எல்.ஏ-க்களும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டதாகச் செய்திகளை வெளியே பரப்பியுள்ளார்கள் என்று எஸ்.சி. பிரிவு எம்.எல்.ஏ-க்கள் மத்தியில் புலம்பல் எழுந்துள்ளது. 

http://www.vikatan.com/news/tamilnadu/87722-another-faction-in-aiadmk-dalit-mla-asks-representation-in-the-party.html

Categories: Tamilnadu-news

'எங்கள் பக்கம் 87 எம்.எல்.ஏ.க்கள்...!' - பகீர் கிளப்பும் நாஞ்சில் சம்பத்

Thu, 27/04/2017 - 16:00
'எங்கள் பக்கம் 87 எம்.எல்.ஏ.க்கள்...!' - பகீர் கிளப்பும் நாஞ்சில் சம்பத்
 
 

nan_1_18195.jpg

டி.டி.வி தினகரன், இன்று காலை டெல்லியில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். விமான நிலையத்தில் இருந்து, தினகரனை அவருடைய அடையார் இல்லத்துக்கு காவல்துறையினர் அழைத்துச் சென்று, அங்கு விசாரணை நடத்தினர். 

இதையடுத்து, அடையாறில் இருக்கும் தினகரன் வீட்டுக்கு முன்னால் இருந்து தினகரன் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர், 'டி.டி.வி.தினகரன் மீதான வழக்கின் விசாரணை முடிந்தவுடன் தமிழ்நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போவது அவர் மட்டுமே. தற்போது அவருக்கு எதிராக நடந்து வரும் விசாரணைக்கு நாங்கள் யாரும் இடையூறாக இருக்கமாட்டோம். அவரைக் காப்பற்றுவதற்கு நாங்கள் எதை வேண்டுமானாலும் செய்வோம். எந்த அநியாயத்தையும் அதிகார பீடத்தில் இருப்பவர்கள் செய்வார்கள். தற்போது, தினகரன் மீது பொய்யான வழக்கு புனையப்பட்டு டெல்லி தான் சதி செய்கிறது. எங்கள் பக்கம் 87 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். தொடர்ந்து 37 மணி நேரம் தினகரனிடம் விசாரணை நடத்திய பின்னரும் இன்னும் என்ன விசாரிக்க வேண்டி இருக்கிறது என்பது தெரியவில்லை. பொதுச்செயலாளர் கையெழுத்து இல்லாமல் கட்சியில் எதுவும் செய்ய முடியாது. சசிகலா கண் அசைவு இல்லாமல் எதுவும் நடக்காது.' என்று பேசியுள்ளார்.

http://www.vikatan.com/news/politics/87738-we-have-87-mlas-on-our-side-says-najil-sampath.html

Categories: Tamilnadu-news

தினகரனுடன் சென்னை புறப்பட்டது டில்லி போலீஸ்

Thu, 27/04/2017 - 06:32
தினகரனுடன் சென்னை புறப்பட்டது டில்லி போலீஸ்

 

புதுடில்லி : தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு, டில்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் தினகரன். இவரை விசாரணைக்காக டில்லி போலீசார் இன்று (ஏப்ரல் 27) சென்னை அழைத்து வருகின்றனர்.
 

 

சென்னை விரையும் டில்லி போலீஸ் :


இரட்டை இலை சின்னத்தை பெருவதற்காக தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு ரூ.60 கோடி வரை லஞ்சம் கொடுக்க முயன்றதாக தினகரன் மீது டில்லி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து அவரிடம் 4 நாட்கள் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் முடிவில் நேற்று முன்தினம் இரவு தினகரன் கைது செய்யப்பட்டார். இவர் நேற்று டில்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது தினகரன் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். தினகரனை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க டில்லி போலீசாரும் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இதில் தினகரின் ஜாமின் மனுவை நிராகரித்து நீதிபதி, அவரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி அளித்தார். இதனையடுத்து இன்று காலை 9 மணியளவில் தினகரனை அழைத்துக் கொண்டு டில்லி போலீசார் சென்னை புறப்பட்டனர். தினகரனுடன் கைது செய்யப்பட்டுள்ள அவரது நண்பர் மல்லிகார்ஜூனாவும் விசாரணைக்காக சென்னை அழைத்து வரப்படுகிறார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1760048

Categories: Tamilnadu-news

சசிகலாவின் எழுச்சியும் வீழ்ச்சியும்

Thu, 27/04/2017 - 06:12
சசிகலாவின் எழுச்சியும் வீழ்ச்சியும்

 

 
 
 
சசிகலா | கோப்பு படம்
சசிகலா | கோப்பு படம்
 
 

அதிமுக பொதுச்செயலாள ராகவும், தமிழக முதல்வராகவும் இருந்த ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக திரை மறைவில் அதிகாரம் செலுத்தி வந்த வி.கே.சசிகலா, திரைக்கு வெளியே வந்தது கடந்த 2016 டிசம்பர் 5. அன்றுதான் ஜெயலலிதா காலமானார்.

ஜெயலலிதா வீட்டிலேயே சுமார் 30 ஆண்டுகள் வசித்தாலும் அவர் உயி ரோடு இருக்கும்வரை சசிகலாவால் தன்னை சிறு அளவில்கூட வெளிப்படுத் திக் கொள்ள முடியவில்லை. ஆனால், ஜெயலலிதா மறைந்ததும் அதிமுகவை யும், தமிழக அரசையும் தன் கட்டுக்குள் கொண்டு வந்தார். அதுவே அவரது வீழ்ச்சிக்கு வழிவகுத்துள்ளது.

சாதாரண குடும்பப் பெண்ணாக இருந்த சசிகலாவின் வாழ்க்கை திரு மணத்துக்குப் பிறகு மாறத் தொடங்கியது. திமுக பின்னணி கொண்ட மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி ம.நடராஜனை சசிகலா திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்தை அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி நடத்தி வைத்தார்.

நடிகையாக தமிழ்த் திரையுலகில் ஜொலித்த ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். ஆதரவுடன் தீவிர அரசியலில் இறங்கி னார். 1983-ல் அதிமுக கொள்கைப் பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட் டார். அரசியலுக்கு புதியவரான ஜெய லலிதாவுக்கு ஆலோசனைகள் வழங்க வும், அரசியல் வளர்ச்சிக்கு வழிகாட்டவும் அப்போது கடலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த சந்திரலேகாவை எம்.ஜி.ஆர். கேட்டுக் கொண்டார்.

இதனால் ஜெயலலிதாவுக்கு நெருக்க மானார் சந்திரலேகா. அந்த நேரத்தில் கடலூர் மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்த நடராஜன், தனது மனைவி சசிகலாவை சந்திரலேகாவிடம் அறிமுகப்படுத்தினார்.

அந்த காலகட்டத்தில் சென்னை ஆழ்வார்பேட்டையில் தனது தம்பி திவாகரனுடன் இணைந்து வீடியோ கடை நடத்தி வந்தார் சசிகலா. சில படங்களின் வீடியோக்களை சந்திர லேகாவிடம் ஜெயலலிதா கேட்க, அவர் அவற்றை சசிகலாவிடம் வாங்கிக் கொடுத்தார். இப்படி வீடியோ கேசட்டு களை கொடுக்க போயஸ் கார்டன் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்த சசிகலா, ஜெயலலிதாவின் மனதில் நீங்காத இடம் பிடித்தார்.

ஜெயலலிதா - சசிகலா நட்பு வளர்ந்து கொண்டிருந்த கால கட்டத்தில் எஸ்.டி. சோமசுந்தரம், அழகு திருநாவுக்கரசர் ஆகியோர் ஜெயலலிதாவை அழைத்து மன்னார்குடியில் பொதுக்கூட்டம் நடத்தி னர். இதற்கு சசிகலாவும், திவாகரனும் ஏற்பாடு செய்தனர். இந்தக் கூட்டம் ஜெயலலிதாவின் அரசியல் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருந்ததால் அவரது முழு நம்பிக்கைக்கு உரியவராக சசிகலா மாறினார்.

மன்னார்குடி பொதுக்கூட்ட வெற்றிக் குப் பிறகு போயஸ் கார்டன் இல்லத் திலேயே குடியேறினார் சசிகலா. அன்றில் இருந்து அவரது வாழ்வில் ஏற்றம் தொடங்கியது. ஜெயலலிதா எங்கு சென்றாலும் அங்கு சசிகலாவும் செல்லத் தொடங்கினார். இருவரையும் தனித்துப் பார்க்க முடியாது என்ற நிலை உருவானது.

இந்நிலையில் 1987-ல் எம்.ஜி.ஆர். காலமானார். அப்போது ஜெய லலிதாவை அரசியலில் இருந்து ஓரங்கட்ட மூத்த தலைவர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டனர். ராஜாஜி மண்டபத்தில் எம்.ஜி.ஆர். உடல் வைக்கப் பட்டிருந்தபோது ஜெயலலிதா அவமதிக் கப்பட்டார், அப்போது சசிகலாவும், நடராஜனும் தான் அவருக்கு உறு துணையாகவும், ஆறுதலாகவும் இருந்தனர்.

எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாக உடைந்தது. 1989 சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றது. ஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவரானார். இதனால், உடைந்த அதிமுக ஜெயலலிதா தலைமையில் ஒன்றானது. இரட்டை இலை சின்னமும் கிடைத்தது. அதன்பிறகு 1991 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெற்றது. முதல் முறையாக ஜெயலலிதா முதல்வரானார்.

1991-ல் ஜெயலலிதா முதல்வரானதும் சசிகலாவின் வளர்ச்சியும் தொடங்கியது. 1991 - 1996 வரை 5 ஆண்டு கால ஆட்சியில் சசிகலா குடும்பத்தினர் கட்சியிலும், ஆட்சியிலும் ஆதிக்கம் செலுத்தியதாக பல புகார்கள் எழுந்தன. அவற்றை உறுதிப்படுத்துவதுபோல சசிகலாவின் அக்கா மகன் சுதாகரனை, தனது வளர்ப்பு மகனாக அறிவித்த ஜெயலலிதா, மிகவும் ஆடம்பரமாக திருமணம் செய்து வைத்தார்.

1991-க்குப் பிறகு 2016-ல் மரணம் அடையும் வரை 15 ஆண்டுகள் ஜெய லலிதா ஆட்சியில் இருந்தார். ஆட்சியில் இல்லாத 10 ஆண்டுகளும் அரசியல் செல்வாக்குடனேயே இருந்தார். இந்த 25 ஆண்டுகளும் கட்சியிலும், ஆட்சியிலும் அனைத்தையும் தீர்மானிப்பவராக சசிகலா இருந்தார் என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும். கூட்டணி கட்சிகளுடன்கூட சசிகலாவே பேசுவார் என்பதை யாரும் மறுக்கவில்லை.

sasikala1_3158731a.jpg

இப்படி திரைமறைவில் அதிகாரம் செலுத்தி வந்த சசிகலா, ஜெயலலிதா மரணம் அடைந்ததும் திடீரென திரையை விலக்கி அரசியலில் அடியெடுத்து வைத்தார். ஜெயலலிதாவுக்கு தாமே இறுதிச் சடங்குகள் செய்து அவரது அரசியல் வாரிசு தான்தான் என்பதை சொல்லாமல் சொன்னார்.

ஜெயலலிதா மரணம் அடைந்ததும் ஓ.பன்னீர்செல்வம் முதல்வரானார். ஆனாலும் முதல்வர் பதவியை கைப்பற்ற சசிகலா திட்டம் தீட்டினார். ஓபிஎஸ் முன்மொழிய அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதல்வராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். கட்சியும், ஆட்சியும் கைக்கு வந்துவிட்டன என சசிகலா நினைத்த நேரத்தில், திடீரென போர்க்கொடி உயர்த்தினார் ஓபிஎஸ்.

இதனால் சசிகலாவின் பதவியேற்பு தாமதமானது. அதிமுக எம்.எல்.ஏ.க்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கூவத்தூர் தனியார் விடுதியில் தங்க வைக் கப்பட்டனர். தன்னை ஆட்சியமைக்க அழைக்க ஆளுநர் தாமதப்படுத்த, கூவத்தூர் விடுதிக்குச் சென்று எம்.எல்.ஏ.க்களிடம் உணர்ச்சிமயமாக உரை யாற்றினார் சசிகலா. இனியும் பொறுத் துக் கொள்ள முடியாது என மத்திய அரசுக்கு எச்சரிக்கையும் விடுத்தார்.

ஆனால், சொத்துக் குவிப்பு வழக் கில் சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியதும் காட்சிகள் மாறின. சசிகலாவுக்குப் பதில், பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி முதல்வரானார். பெங்களூர் சிறைக்கு செல்லும் முன்பு மெரினா கடற்கரையில் ஜெயலலிதாவின் சமாதியில் ஓங்கி அடித்து சத்தியம் செய்தார் சசிகலா.

சிறைக்கு செல்லும் முன்பு கட்சியை வழிநடத்துவதற்காக தனது அக்கா மகன் டிடிவி தினகரனை துணைப் பொதுச் செயலாளராக்கினார். அவர் கட்சியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். சிறையில் இருந்தாலும் கட்சியை தனது கட்டுக்குள்ளேயே சசிகலா வைத்திருந்தார். அமைச்சர்கள் பலரும் பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்தனர்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரனே போட்டியிட்டார். ஆனால், இரட்டை இலை சின்னம் முடக்கம், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீ்ட்டில் வருமானவரித் துறை சோதனை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து ஆகியவற்றுக்குப் பிறகு நிலைமை தலைகீழாக மாறத் தொடங்கியது. சசிகலாவின் அர சியல் வாழ்க்கை சரியத் தொடங் கியது.

ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து செய்யப் பட்டாலும் நம்பிக்கை இழக்காமல் தினகரன் பேசி வந்தார். ஆனால், இரட்டை இலை சின்னத்தை மீட்க தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரை டெல்லி போலீஸார் கைது செய்தனர். இது சசிகலாவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் தினகரன் கைது செய்யப்பட்டுள்ளது சசிகலாவை நிலைகுலையச் செய்துள்ளது.

sasikala2_3158730a.jpg

இதனால் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள, ஓபிஎஸ் அணியுடன் இணைய முதல்வர் பழனிசாமி பேச்சு நடத்த முயன்று வருகிறார். சசிகலா குடும்பத்தினர் அனைவரையும் கட்சியிலிருந்து நீக்கினால் மட்டுமே பேச்சு நடத்துவோம் என ஓபிஎஸ் அணி நிபந்தனை விதித்துள்ளது. அதனை ஏற்று அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த சசிகலாவின் பேனர்கள் அகற்றப்பட்டுள்ளன.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கடந்த டிச.31-ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா அமர்ந்த இருக்கையில் அமர்ந்து பொதுச்செயலாளராக சசிகலா முறைப் படி பதவியேற்றார். ஆனால், 4 மாதங்கள் கூட முடியாத நிலையில் அதே அலுவலகத்தில் சசிகலாவின் படங்கள் இடம்பெற்ற பேனர்கள் அகற்றப்பட்டுள்ளன.

முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்யப்படும் அளவுக்கு அரசியலில் வேகமாக வளர்ந்த சசிகலா, அதே வேகத்தில் வீழ்ச்சியை சந்தித்து உள்ளார்.

http://tamil.thehindu.com/tamilnadu/சசிகலாவின்-எழுச்சியும்-வீழ்ச்சியும்/article9666057.ece

Categories: Tamilnadu-news

மும்மூர்த்திகளின் ‘க்ளீன் தமிழ்நாடு’ ஆபரேஷன்! சிக்கலில் அமைச்சர்கள் #VikatanExclusive

Thu, 27/04/2017 - 06:01
மும்மூர்த்திகளின் ‘க்ளீன் தமிழ்நாடு’ ஆபரேஷன்! சிக்கலில் அமைச்சர்கள் #VikatanExclusive
 
 

தினகரன்

குழம்பிய குட்டையில்தான் மீன் பிடிக்கமுடியும் என்பது மற்றவிஷயங்களுக்கு எப்படியோ இன்றைய தமிழக அரசியல் நிலவரத்துக்கு கனக் கச்சிதமாக பொருந்துகிறது.

முடக்கப்பட்ட கட்சிச் சின்னத்தை மீட்க தேர்தல் கமிஷனிடம் ஐம்பதுகோடி ரூபாய் பேரம் பேசிய வழக்கில் 3 நாள் விசாரணைக்குப்பின் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார் அதிமுக துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன். உறுதியான ஆதாரங்கள் கிடைத்ததன் அடிப்படையில் தினகரன் கைது செய்யப்பட்டிருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜெயலலிதாவின் மரணத்துக்குப்பின் கட்சியின் பொதுச்செயலாளரானார் சசிகலா. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைசெல்ல நேர்ந்ததால் தன் அக்கா மகன் தினகரனை அவருக்கு அடுத்த இடத்தில் துணைப் பொதுச்செயலாளராக்கிச் சென்றார். ஓ.பி.எஸ்ஸின் தனி ஆவர்த்தனத்திற்கிடையே இவ்வளவும் நடந்தது. அதிமுக தனது இரட்டை இலைச் சின்னத்தை இழக்கவேண்டியதுமானது.

அதிமுக என்ற யானையின் காதில் புகுந்த கட்டெறும்பு போல் ஓ.பி.எஸ் அணி கொடுத்த இந்த அதிர்ச்சி தினகரனுக்கு ஈகோ பிரச்னையானது. கட்சியில் ஒரு தத்தளிப்பான சூழல் ஏற்பட்டிருக்கும் நிலையில் தனது சாகசத்தால் இரட்டை இலையை மீட்டு கட்சியினர் மத்தியில் கதாநாயகனாக கனவு கண்ட தினகரனை டெல்லி போலீஸ் இரண்டு செட் உடை, ஒரு வாட்டர் பாட்டிலுடன் சிறைக்கு அனுப்பிவைத்திருக்கிறது இப்போது. 

கதாநாயகனாகவேண்டியவரை கைதியாக்கிய டெல்லி இத்துடன் தனது ஆட்டத்தை நிறுத்திக்கொள்ளாது என்கிறார்கள். டி.டி.வி தினகரனை ஜெயிலுக்கு அனுப்பியதன்மூலம் அதிமுக இணைப்புக்கு நல்ல சமிக்ஞை கொடுத்திருப்பதாக ஓ.பி.எஸ் அணி கருதினாலும் இனிமேல்தான் மத்திய அரசு, அடுத்தடுத்து பல பரபரப்பான ஆட்டத்தை துவங்க உள்ளதாக சொல்கிறார்கள் விபரமறிந்தவர்கள்.

மோடி

இதுபற்றி நம்மிடம் பேசிய பெயர் குறிப்பிட விரும்பாத பாஜக பிரமுகர் ஒருவர், “மத்திய அரசுக்கு தமிழக அரசுக்கு தொல்லை தருவது நோக்கமில்லை. கடந்த ஒரு சில வருடங்களாக தமிழகம் குறித்து அவருக்கு வந்த தகவல்கள் ரசிக்கக்கூடியதாக இல்லை. குறிப்பாக வேறு எந்த மாநிலத்தைவிடவும் தமிழகத்தில் அரசு அதிகாரிகளும் அமைச்சர்களும் கைகோத்துக்கொண்டு செய்துவரும் அதிகார துஷ்பிரயோகங்கள் அவர் காதுக்கு வந்தபோது எரிச்சலானார். இதன் உச்சகட்டமாகத்தான் ஜெயலலிதாவின் மரணத்துக்குப்பின் அன்றைய தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவ் அலுவலகத்திலேயே ரெய்டு நடத்தும் அளவுக்குப் போனது. ரெய்டின்போது 'ஜெயலலிதா இருந்திருந்தால் இப்படி ஆகியிருக்குமா?' என அவர் கொந்தளித்தார். 

உண்மையில் ஜெயலலிதா காலத்திலேயே அமைச்சர்கள்  மற்றும் அதிகாரிகளை மத்திய அரசு கண்காணிக்கத் துவங்கிவிட்டது. கடந்த 2016 செப்டம்பரில் நத்தம் விஸ்வநாதன், மேயர் சைதை துரைசாமி மற்றும் சில அதிமுக புள்ளிகளுக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களிலும் அப்போதே வருமான வரித்துறை ரெய்டு நடத்தியது.

ஜெயலலிதாவின் மரணத்துக்குப்பின், மரணம் தொடர்பான சர்ச்சைகளும் டெல்லித் தலைமைக்கு இன்னும் கோபத்தை ஏற்படுத்தியது. இறுதி அஞ்சலியின்போதே இதை சசிகலா தரப்பிடம் வெங்கய்ய நாயுடு மூலம் மறைமுகமாக தெரிவித்த டெல்லித்தலைமை, “ஜெயலலிதாவின் காரியத்துக்குள் கட்சி மற்றும் ஆட்சியிலிருந்து முற்றாக உங்கள் குடும்பத்தின் தலையீட்டை நிறுத்திக்கொண்டு கட்சிக்கு உரிய தலைமையை அமர்த்திவிட்டு விலகிவிடவேண்டும்” என எச்சரிக்கையாகவே தெரிவித்தது. ஆனால் இதை பொருட்படுத்தாமல் அடுத்தடுத்து ஆட்சி மற்றும் கட்சியில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளும் முயற்சிகளில் சசிகலா இறங்கியதை டெல்லி மேலிடம்  ரசிக்கவில்லை.

ஓ.பன்னீரசெல்வம்

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை அடைந்தபிறகும் தனது இடத்தில் தினகரனை அமர்த்தியது இன்னும் கோபத்தை தந்தது. ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியவர்களை தலைமையாகக் கொண்ட ஒரு கட்சி ஆளும் அதிகாரத்தில் இருப்பதை விரும்பாத டெல்லி மேலிடம் இதன்பிறகுதான் அதிமுக மீது இன்னமும் கூடுதலான கவனம் எடுத்தது. தமிழக அமைச்சர்கள் பற்றிய ஒரு விரிவான அறிக்கையை ரகசியமாக கேட்டுப்பெற்றது.

தனக்கு நெருக்கமான தமிழக பத்திரிகையாளர் மூலமும் தமிழக நிலவரங்களைக் கேட்டுப்பெற்றது. ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் நடந்த அத்துமீறலால் அங்கு தேர்தல் ரத்து செய்யப்பட்ட கையோடு அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட சில பிரமுகர்கள் வீடுகளில் ரெய்டு நடத்தி அதிர்ச்சி கொடுத்தது. 

ஊழல் பிரமுகர்களை வெளியேற்றி கட்சியை க்ளீன் செய்ய நினைத்த மத்திய அரசுக்கு ஒருசில அமைச்சர்கள் ஒத்துவராத அதேசமயம், தலைநகர் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி மத்திய அரசுக்கு சங்கடத்தை தந்ததன் பின்னணியில் தினகரன் இருப்பதாக மத்திய அரசுக்கு ஒரு அறிக்கை சென்றது. இதுவே  அவர் விவசாயிகளை சந்திக்க மறுக்கக் காரணம்.  இந்த நேரத்தில் கட்சி சின்னம் தொடர்பாக பேசப்பட்ட பேரம் வெளியாகி, பழம் நழுவிப் பாலில் விழுந்ததுபோல் தினகரன் சிறை செல்லும் நிலை உருவானது. இதன்மூலம் கடந்த 4 மாதங்களாக டெல்லித் தலைமை நடத்திய நாடகம் வெற்றிகரமாக முடிவுக்கு வந்துவிட்டது. டெல்லித் தலைமை நினைத்ததுபோலவே இனி அதிமுகவில் சசிகலா மற்றும் தினகரன் ஆகிய இருவரது ஆதிக்கம் முடிவுக்கு வந்துவிட்டது.” என்றார்.

“தமிழகத்தின் மீதான நிஜமான அக்கறையில் மோடி சில சட்டத்துக்குட்பட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு உள்நோக்கம் கற்பிக்கத்தேவையில்லை. கடந்த தமிழக பட்ஜெட்டில் மூன்றில் 2 பங்கு இலவசங்களுக்கு செலவிடப்பட்டது. இலவசங்களை வெறுக்கும் மோடி மக்களின் பணத்தை இப்படி தமிழக அரசு தேவையின்றி செலவிடுவதை விரும்பவில்லை. ஜெயலலிதாவிடமே சிலமுறை இதை விமர்சித்திருக்கிறார். 'திராவிட இயக்கத்தினரின் இந்த இலவசங்களால் நிதி தேவையின்றி செலவு செய்யப்பட்டதுதான் விவசாயிகள் பிரச்னை உள்ளிட்ட அவசியமான பிரச்னைகள் தீராததற்கு காரணம்' என்ற எண்ணம் மோடிக்கு வலுவாக உண்டு. திமுக, அதிமுக என்றில்லாமல்  பொதுவாக தமிழக கட்சிகளின் இந்த 'இலவச 'மனநிலை மோடிக்கு பிடிக்கவில்லை.
 

மோடி

இதனால் தமிழகத்தில் தெளிவான உறுதியான ஒரு தலைமை ஆளும்கட்சிக்கு வேண்டும் என அவர் நினைக்கிறார். ஜெயலலிதா காலத்துக்குப்பின் அப்படி ஓர் தலைமையைத்தான் அவர் எதிர்பார்த்தார். ஆனால் சசிகலா  அதிகாரத்துக்கு வர விரும்பியது அவருக்கு அதிர்ச்சி தந்தது. கட்சி எல்லையைத்தாண்டி ஜெயலிதாவுக்கும் மோடிக்கும் எல்லா காலத்திலும் ஓர் நல்ல நட்பு உண்டு. அந்த நம்பிக்கையில் கடந்தகாலத்தில் அவர் சசிகலா பற்றி பகிர்ந்துகொண்ட சில விஷயங்களால் ஊழல் புகாரில் சிக்கிய ஒருவர் மீண்டும் அதிமுகவுக்கு தலைமையேற்பதை விரும்பவில்லை. இதனாலேயே 'ஆபரேஷன் க்ளீன் தமிழ்நாடு' வை கையிலெடுத்தார் என்கிறார்கள். இதற்காக மத்திய மந்திரிகள்  அருண் ஜெட்லி, வெங்கய்ய நாயுடு மற்றும் தமிழக பத்திரிகையாளர் ஒருவர் என 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அவர்கள்தான் ஆபரேஷனை வெற்றிகரமாக முடித்தவர்கள். 

சொத்துக்குவிப்பு வழக்கு முதல் நேற்று தினகரன் கைது வரை எந்த ஓர் இடத்தில் கவனக்குறைவாக இருந்தாலும் தங்கள் பணபலத்தால் அதிகாரத்துக்கு மீண்டும் வந்து ஊழலை அரங்கேற்றுவார்கள் என்பதால் சசிதரப்பு சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி தப்பிவிடாதவாறு இந்த குழு பார்த்துக்கொண்டது. 

ஜெட்லிக்கும் சுப்ரமணியன்சுவாமிக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம் என்பதால் குழுவில் உள்ள ஜெட்லியின் முயற்சியை முறியடித்து அவரை வெறுப்பேற்றும் விதமாகவே சசிதரப்புக்கு ஆதரவாக சில நடவடிக்கைகளை சுவாமி எடுத்தார். இதன்பிறகே தினகரன் தரப்புடன் அவர் நெருக்கமானார். கடந்த வாரம் திடீர்ப் பயணமாக தமிழகம் வந்த சுவாமி, முக்கிய மடாதிபதிகளை சந்தித்துப் பேசினார். மூத்தவரை தவிர்த்து டெல்லி அரசியலை நன்கு அறிந்த இளைய மாடாதிபதியுடன் அதிக நேரம் செலவிட்ட அவர், தினகரனின் கைதை தவிர்க்கவே அவர்கள் மூலம் மோடிக்கு வேண்டுகோள் விடுத்தார். 

இதனிடையே ஓ.பி.எஸ் உடன் இணைந்து செயல்பட மூத்தஅமைச்சர் ஒருவரின் கருத்துக்கு மற்ற அமைச்சர்கள் மற்றும் சில எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது, அவர்கள் அனைவருக்கும் கடந்த 18-ம் தேதி சென்னையில் இருந்த  ஐ.என்.எஸ் போர்க் கப்பலை காண வருமாறு ரகசிய உத்தரவு ஒன்று வந்தது. அதன்படி, தரைதளத்தில் அமைச்சர்களுடன் மத்திய அரசுப் பிரதிநிதியாக ஒருவர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக சொல்கிறார்கள். 'கட்சியை ஒன்றிணைக்கும் முயற்சிக்கு ஒத்துழைக்கவேண்டுமென' கறார் குரல் வெளிப்பட்டதாம் அப்போது. தொடர்ந்து மேல்தளத்தில் எம்.எல்.ஏக்களுடன் பேச்சுவார்த்தை நடந்ததாம். இதைத்தொடர்ந்தே அமைச்சர்கள் தரப்பு ஓ.பி.எஸ் அணிக்கு இணைப்பு குறித்த சமிக்ஞையை அனுப்பியதோடு மறுதினம் தினகரனை ஒதுக்கிவைப்பதாக ஓ.பி.எஸ் அணிக்கு சாதகமான கருத்துகளை சொல்ல ஆரம்பித்தார்கள். 

ஆனாலும் ஓ.பி.எஸ் அணியினரின் பிடிவாதமான நிபந்தனைகள்தான் இப்போது இரு அணிகளும் இணைவதில் முட்டுக்கட்டையாக உள்ளன. இருப்பினும் சீக்கிரத்தில் இது நடக்கவேண்டும் என்பதில் மேலிடம் உறுதியாக இருப்பதால் ஆபரேஷன் க்ளீன் தமிழ்நாட்டை முடிக்க அவசரம் காட்டிவருகிறார்கள் மும்மூர்த்திகள் குழு” என்று முடித்தார் பா.ஜ.க பிரமுகர்.

ஹைலைட் என்னவென்றால் அதிமுக இணைவதோடு 'ஆபரேஷன் க்ளீன் தமிழ்நாடு' முடியப்போவதில்லையாம். இரு அணிகளிலும் சில 'முன்னாள்கள்' இன்றுவரை 24 மணிநேரமும் மத்திய அரசின் கண்காணிப்பில் இருக்கிறார்களாம். அதிமுக ஒன்றிணைந்தபின் அவர்களுக்கு சிக்கல் வரும் என்கிறார்கள். அதற்குப்பிறகு மத்திய அரசு திமுக பக்கம் தன் பார்வையை திருப்பும் என கிலி கொடுக்கிறார்கள் மோடியின் எண்ண ஓட்டத்தை நன்கறிந்தவர்கள். 

http://www.vikatan.com/news/tamilnadu/87642-this-is-what-central-planning-for-clean-tamil-nadu.html

Categories: Tamilnadu-news

சசிகலா உறவினர் தினகரனின் 70 நாள் ஆட்டம்

Wed, 26/04/2017 - 21:38
gallerye_2328051000_1759413.jpg

 

 

 

spaceplay / pause

qunload | stop

ffullscreen

shift + slower / faster

volume

mmute

seek

 . seek to previous

126 seek to 10%, 20% … 60%

 

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக, தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப் பட்ட, சசிகலா அக்கா மகன் தினகரனை, ஐந்து நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க, கோர்ட் அனுமதித்துள்ளது. தினகரனை சென்னை அழைத்து வந்து விசாரிக்கவும், போலீசார் முடிவு செய்துள்ளனர்.

 

Tamil_News_large_1759413_318_219.jpg

தமிழகத்தில் ஆளும் கட்சியான, அ.தி.மு.க., இரு அணிகளாக பிரிந்ததால், அந்த கட்சியின் தேர்தல் சின்னமான, இரட்டை இலை முடக்கப்பட்டது.சின்னத்தை பெறுவதற்காக, சசிகலா அணியைச் சேர்ந்த, அவரது உறவினர் தினகரன், இடைத்தரகர் சுகேஷ் சந்தர் மூலமாக, தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு, 50 கோடி ரூபாய் லஞ்சம் தர முன்வந்ததாக தெரிகிறது.

டில்லி ஓட்டல் ஒன்றில், 1.3 கோடி ரூபாயுடன் சிக்கிய, சுகேஷ் சந்தரிடம் போலீசார் நடத்திய
விசாரணையில், இந்த தகவல் அம்பலம் ஆனது. இதையடுத்து, தினகரன் - சுகேஷ் சந்தர் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் பதிவு ஆதாரம் அடிப்படையில், 'விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும்' என, டில்லி போலீஸ், தினகரனுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பியது.

அதன்படி, டில்லி சென்ற தினகரன், அவர் உதவியாளர் ஜனார்த்தனன், நண்பர் மல்லி கார்ஜுனா ஆகியோரிடம், டில்லி போலீசார் விசாரணை நடத்தினர்.
நான்கு நாட்கள் நடந்த விசாரணையில், பல்வேறு ஆதாரங்களை முன் வைத்து கேட்கப்பட்ட, கிடுக்கிப்பிடி கேள்வி களுக்கு பதில் அளிக்க முடியாமல் திணறிய தினகரன், வேறு வழியின்றி உண்மையை ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, தினகரனை, நேற்று முன்தினம் நள்ளிரவு, போலீசார் கைது செய்தனர். பின்,
ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில், நீதிபதி பூனம் சவுத்ரி முன்,தினகரனை டில்லி போலீசார், நேற்று, ஆஜர்படுத்தினர். டில்லி போலீஸ் தரப்பு வழக்கறிஞர், தினகரன் வழக்கறிஞர் வாதங் களை கேட்ட நீதிபதி, ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் வைத்து, தினகரனை விசாரிக்க அனுமதி வழங்கினார்.


தினகரனுடன் கைது செய்யப்பட்ட, அவரது நீண்ட கால நண்பர் மல்லிகார்ஜுனாவையும், ஐந்து நாள் போலீஸ் காவலில் விசாரிக்க, நீதிபதி அனுமதி வழங்கினார். இதையடுத்து, வரும், மே, 1ம் தேதி வரை, தினகரனிடம், மல்லிகார்ஜுனாவிடமும், போலீசார், அடுத்தக் கட்ட விசாரணை நடத்த உள்ளனர்.

சென்னை, பெங்களூரு, கொச்சி ஆகிய நகரங்க ளுக்கு, தினகரனை அழைத்துச் சென்று விசாரணை நடத்தவும், டில்லி போலீசார் முடிவு செய்துள்ளனர்.அ.தி.மு.க.,வையும், ஆட்சியையும் கைப்பற்ற நினைத்த தினகரன், 70 நாட்களுக்கு முன், அவரது சித்தி, சசிகலா வால், துணைப் பொதுச் செயலராக நியமிக்கப் பட்டார். டில்லிபோலீசாரின் அதிரடியால், அவரது அரசியல் ஆட்டம், தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
 

மொபைல் போன் எங்கே?


டில்லி சிறப்பு கோர்ட்டில், தினகரன் ஆஜர் படுத்தப்பட்டபோது, போலீஸ் தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் சிங், வாதிட்டதாவது:

இடைத்தரகர் சுகேஷ் சந்தருடன், தினகரன் பேசிய மொபைல் போனை கைப்பற்ற வேண்டிய அவசியம் போலீசுக்கு உள்ளது. பணப்பரிமாற்றம் நடந்த விதம் குறித்து, மேல் விசாரணை நடத்தப்பட வேண்டி உள்ளது. எனவே, ஏழு நாட்கள், போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க வேண்டியது அவசியம். இவ்வாறு அவர் வாதிட்டார்.

தினகரன் தரப்பில் ஆஜரான, மூத்த வழக்கறி ஞர், விகாஷ் பக்வா, தன் வாதத்தில் கூறியதாவது: தினகரனிடம், நான்கு நாட்களாக விசாரணை நடத்திய போலீசார், ஆதாரம் எதையும் சமர்ப்பிக்கவில்லை. எந்த சாட்சிய மும் இல்லாத நிலையில், பொய்யான விசாரணை நடக்கிறது. மிக அவசியமான சந்தர்ப்பத்தில் மட்டுமே, போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட வேண்டும்.இவ்வாறு அவர் வாதிட்டார்.
 

ரூ.60 கோடி எப்படி வந்தது? தினகரனுக்கு ஐ.டி., 'நோட்டீஸ்'


தேர்தல் கமிஷனுக்கு, 60 கோடி ரூபாய் லஞ்சம் தர முயன்றதாக, தினகரன் கைது செய்யப்ப ட்டதை தொடர்ந்து, அந்த வருமானம் வந்த விதம் தொடர்பாக விளக்கம் கேட்டு, அவருக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது.

 

இதுகுறித்து, தமிழக வருமான வரித்துறை புலனாய்வு அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை, ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட்ட தினகரன், வேட்புமனு தாக்கல் செய்தபோது, தன் சொத்து மதிப்பு, 70 லட்சம் ரூபாய் என குறிப்பிட்டு இருந்தார். தற்போது, தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு, 60 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கும் வழக்கில் கைதாகியுள்ளார்.

அவர் கொடுத்த பணம், 1.30 கோடி ரூபாயும், இடைத்தரகரிடம் சிக்கியுள்ளது. அவ்வளவு பெரிய தொகையை, அவர் இடைத்தரகருக்கு கொடுத்திருப்பதாக, டில்லி போலீஸ் வழக்குப் பதிவு செய்துள்ளதால், அவர்களை அணுகி, விபரங்களை கோரவுள்ளோம். மேலும், அந்த தொகை, தினகரனுக்கு எப்படி வந்தது என விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அனுப்பவும் முடிவெடுத்துள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
 

பலத்த பாதுகாப்பு


தினகரனும், அவரது நீண்ட கால நண்பர் மல்லிகார்ஜுனாவும், சிறப்பு கோர்ட் நீதிபதி முன், நேற்று பிற்பகல், 3:10 மணிக்கு ஆஜர்படுத்தப்பட்டனர். தினகரனை ஆஜர் செய்வதற்கு சிறிது நேரத்துக்கு முன், கோர்ட் வளாகத்தில் இருந்த பத்திரிகையாளர்களை, அங்கிருந்து வெளியேறும்படி, நீதிபதி உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து, இரு தரப்பு வாதங்கள், 45 நிமிடம் நடந்தது. முன்னதாக, 20 போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார், கோர்ட் வளாகத்தில் திரண்டிருந்த பத்திரிகையாளர்கள், தினகரனை நெருங்க முடியாதபடி, பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர். முன்னதாக, டில்லி கிரைம் பிராஞ்ச் அலுவலகத்தில், தினகரனை, அவரது மனைவி சந்தித்ததாகவும் தெரிகிறது.
 

மன்னார்குடி கும்பல் பீதி!


தினகரனிடம், டில்லி போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தும் நிலையில், இந்த பணப் பரிவர்த்தனை விஷயத்தில், அவருக்கு நெருக்கமான அமைச்சர்கள் யாரேனும் உதவி யுள்ளனரா என்ற விபரம் தெரிய வரும். அவர் கள் பெயரையும், வாக்குமூலத்தில், தினகரன் தெரிவிக்க வாய்ப்பு உள்ளது.

ஏற்கனவே, வருமான வரித்துறை கண்காணிப் பில் இருக்கும் அமைச்சர்களின் பெயரை, தினகரன் சொல்லும் பட்சத்தில், அவர்களை நோக்கி, வருமான வரித்துறை திரும்பும் என தெரிகிறது. மேலும், தினகரனின் உறவினர் களும், தங்கள் மோசடியும் அம்பலமாகுமோ என்ற பீதியில் உறைந்துள்ளனர்.

- நமது சிறப்பு நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1759413

Categories: Tamilnadu-news

சசிகலா, டி.டி.வி. தினகரன் நீக்கம்? - மா.செ. கூட்டத்தில் கிரீன் சிக்னல்

Wed, 26/04/2017 - 20:27
சசிகலா, டி.டி.வி. தினகரன் நீக்கம்? - மா.செ. கூட்டத்தில் கிரீன் சிக்னல்
ர்
 

சசிகலா

சசிகலா, டி.டி.வி.தினகரனை நீக்க, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கிரீன் சிக்னல் கொடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. சசிகலாவை நீக்க யாரிடம் அதிகாரம் இருக்கிறது என்று கட்சித் தலைமை கழக நிர்வாகி கேள்வியை எழுப்பி உள்ளார். 

ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் என இரண்டு அணிகள் அ.தி.மு.க.வில் உருவாகின. இது, அ.தி.மு.கவில் கடும் களேபரத்தை ஏற்படுத்தியது. பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா, சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்குச் சென்றுவிட்டார். கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், இரட்டை இலையை மீட்டெடுக்க குறுக்குவழியில் முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையில் சசிகலா அணியைச் சேர்ந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சர்கள் , ஓ.பன்னீர்செல்வம் அணியினருடன் பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கை மேற்கொண்டனர். இதற்கு சசிகலா, டி.டி.வி.தினகரன் தரப்பிலிருந்து பெரும் எதிர்ப்பு கிளம்பவில்லை. இந்தநிலையில் சென்னை ராயப்பேட்டை கட்சி அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், இரண்டு அணிகளும் ஒன்றிணைவது தொடர்பாகவும், சசிகலா, டி.டி.வி.தினகரன் விவகாரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது. 


 இதுகுறித்து நம்மிடம் பேசிய தென்மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர் ஒருவர் , "இன்றைய அரசியல் சூழ்நிலை குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது, அ.தி.மு.க.வில் நிலவும் பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோரை கட்சித் தொண்டர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதுவே, அ.தி.மு.க.வில் இரண்டு அணிகள் உருவாகி, சின்னம் முடக்கப்பட்டது. சின்னத்தை மீட்டெடுப்பதோடு, பிளவுப்பட்ட கட்சியை ஒன்றிணைக்க ஓ.பன்னீர்செல்வம் அணியினருடன் பேச்சுவார்த்தை தொடங்கவுள்ளோம். இதற்கு அ.தி.மு.க. அம்மா அணி மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் சம்மதம் தெரிவித்தோம்சசிகலா. அடுத்து, தேர்தல் ஆணையத்திடம் கொடுக்க ஒவ்வொரு மாவட்டங்களிலும் பிரமாண உறுதிமொழிப் பத்திரங்களில் நிர்வாகிகளிடம் கையெழுத்து பெறப்பட்டது. அதுதொடர்பாகவும் கூட்டத்தில் பேசப்பட்டது. அடுத்து, முக்கிய நிர்வாகிகள் மட்டும் ஆலோசனை நடத்தினர். அதில் சசிகலா, டி.டி.வி.தினகரன் நீக்கம் குறித்து பேசப்பட்டது. அதற்கு ஒருசிலரைத் தவிர ஒட்டுமொத்த நிர்வாகிகளும் சம்மதம் தெரிவித்தனர். இதுகுறித்து கட்சியின் மூத்த நிர்வாகிகள் கலந்து ஆலோசித்துவிட்டு அறிவிப்பை வெளியிடுவார்கள்"என்றார். 


 இந்தச் சூழ்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர், "ஆரம்பத்திலிருந்தே சசிகலா, டி.டி.வி.தினகரனை நீக்க வலியுறுத்திவருகிறோம். ஒரு குடும்பத்தின் பிடியில் அ.தி.மு.க இருக்கக்கூடாது என்ற கோரிக்கையை வைத்துள்ளோம். எங்கள் அணியைச் சேர்ந்த மதுசூதனன், அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திலிருந்து சசிகலா, டி.டி.வி.தினகரனின் புகைப்படங்களை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். எங்களின் கோரிக்கையை இன்று ஏற்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, சசிகலா, டி.டி.வி.தினகரனை நாங்கள் கட்சியிலிருந்து நீக்கி விட்டதாக அறிவித்துள்ளோம். அவர்கள் இருவரையும் நீக்குவது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்"என்றனர். 
 டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்களிடம் கேட்டபோது, "டெல்லி வழக்கில் டி.டி.வி.தினகரன் கைதாகியுள்ளார். இதனால் அவரிடம் எதுவும் பேசமுடியவில்லை. இதுதொடர்பாக கலந்து ஆலோசிக்க சிறையிலிருக்கும் சசிகலாவைச் சந்திக்க திட்டமிட்டுள்ளோம். அதற்குப்பிறகு எங்களது அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம்"என்றனர். 
 கட்சித் தலைமைக் கழக நிர்வாகி ஒருவர் கூறுகையில், "சசிகலாவின் பொதுச் செயலாளர் நியமனம் குறித்த விவகாரம் தேர்தல் ஆணையத்திடம் இருக்கிறது. தேர்தல் கமிஷன் எடுக்கும் முடிவுக்குப்பிறகே அ.தி.மு.க.வில் பொதுச் செயலாளர் விவகாரம் முடிவுக்கு வரும். இதற்கிடையில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் சசிகலாவை நீக்க வேண்டும் என்று சொல்வதில் அர்த்தமில்லை. சசிகலாவை நீக்கும் அதிகாரம் யாரிடமும் இல்லை. அ.தி.மு.க.வின் விதிப்படி அடிப்படை உறுப்பினர்களே பொதுச் செயலாளரைத் தேர்ந்தெடுக்க முடியும். எனவே, சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோரை நீக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை என்பதை ஓ.பன்னீர்செல்வம் அணியினர் புரிந்து கொள்ள வேண்டும்"என்றார். 

http://www.vikatan.com/news/tamilnadu/87622-admk-district-secretaries-might-approve-the-removal-of-sasikala-and-dinakaran.html

Categories: Tamilnadu-news

'2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஜூலை 15ல் தீர்ப்பு

Wed, 26/04/2017 - 20:24
'2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஜூலை 15ல் தீர்ப்பு
 
 
 

புதுடில்லி: தி.மு.க., வைச் சேர்ந்த, முன்னாள் மத்திய அமைச்சர், ராஜா, தி.மு.க., - எம்.பி., கனிமொழி உள்ளிட்டோர் தொடர்புடைய, '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு வழக்கை விசாரித்து வரும் சிறப்பு கோர்ட், ஜூலை, 15ல், தீர்ப்பளிக்கப் போவதாக அறிவித்துள்ளது.

காங்., தலைமையிலான, முந்தைய, ஐ.மு., கூட்டணி ஆட்சிக் காலத்தில், தி.மு.க.,வைச் சேர்ந்த ராஜா, தொலை தொடர்புத் துறை அமைச்சராக பதவி வகித்தார்.
 

சி.பி.ஐ., விசாரணை


அப்போது, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், 1.76 லட்சம் கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக, குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கை, சி.பி.ஐ., விசாரித்தது. '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு கள் தொடர்பாக, சி.பி.ஐ., தொடர்ந்த இரு வழக்கு களையும், அமலாக்கத் துறை தொடர்ந்த ஒரு வழக்கையும், நீதிபதி, ஓ.பி.ஷைனி தலைமையிலான, டில்லி, சிறப்பு கோர்ட் விசாரித்து வருகிறது.

சி.பி.ஐ., தொடர்ந்த இரு வழக்குகளில், ஒன்றில், தி.மு.க.,வைச் சேர்ந்த, முன்னாள் மத்திய தொலை தொடர்புத் துறை அமைச்சர், ராஜா,

அந்த கட்சியைச் சேர்ந்த, எம்.பி., கனிமொழி, தொலைதொடர்புத் துறை முன்னாள் செயலர் சித்தார்த் பெஹுரா ஆகியோர் மீது குற்றச்சாட்டப்பட்டது.

 

Tamil_News_large_175942020170427001127_318_219.jpg


மேலும், ராஜாவின் முன்னாள் தனிச்செயலர், ஆர்.கே.சந்தோலியா, ஸ்வான் டெலிகாம் உரிமை யாளர்கள் ஷாகித் உஸ்மான் பல்வா, வினோத் கோயங்கா, யுனிடெக் கட்டுமான நிறுவன தலைவர் சஞ்சய் சந்திரா, அனில் அம்பானி தலைமையிலான, ஆர்.ஏ.டி.ஏ.ஜி., நிறுவனத்தின் மூன்று மூத்த நிர்வாகி கள் உள்ளிட்டோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழக்கில், ராஜா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு, டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு, பின், ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

 

 

ஆறு ஆண்டுக்கு பின்:இவர்களுக்கு எதிராக, 2011ல், சி.பி.ஐ., முதல் குற்றப் பத்திரி கையை தாக்கல் செய்தது. இந்த நிலையில், ஆறு ஆண்டுகளுக்கு பின், வரும் ஜூலை, 15ல், இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப் படும் என, நீதிபதி ஷைனி அறிவித்து உள்ளார். கூடுதல் ஆவணங்கள் இருப்பின், ஜூலை, 5ம் தேதிக்குள் தாக்கல் செய்யும்படி, நீதிபதி கூறியுள்ளார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1759420

Categories: Tamilnadu-news

சசி கையில் ‛குடுமி': இணைப்பு சாத்தியமா

Wed, 26/04/2017 - 15:22
சசி கையில் ‛குடுமி': இணைப்பு சாத்தியமா

 

சென்னை: சிறையில் சசிகலா இருந்தாலும், டில்லி போலீஸ் பிடியில் தினகரன் சிக்கினாலும், உண்மையில் கட்சியும் அதிமுக அம்மா அணியின் தலைவர்களின் குடுமியும் சசிகலா கையில் தான் இருக்கின்றன.

 

நியமன புது பதவி:

அதிமுகவின் விதிமுறைப்படி, தொண்டர்கள் தான் பொதுச் செயலாளரை தேர்வு செய்ய வேண்டும். ஆனால், சசிகலா அப்படி செய்யப்படாமல், பொதுக்குழு மற்றும் செயற்குழு சேர்ந்து நியமன பொதுச்செயலாளர் என்ற புதுபதவியை உருவாக்கி, அவரை அமர வைத்தனர்.
அவர் நியமிக்கப்பட்டிருந்தாலும், பொதுச் செயலாளர் என்ற பதவியின் அனைத்து அதிகாரங்களும் அவரிடமே உள்ளன. இதன் அடிப்படையிலேயே பொருளாளராக இருந்த பன்னீர்செல்வம், அவைத்தலைவராக இருந்த மதுசூதனன், அமைச்சராக இருந்த மாபா பாண்டியராஜன் போன்றவர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கினார்.
தற்போது, தேர்தல் கமிஷனில் ஓபிஎஸ் அணி கொடுத்த பிரமாண பத்திரத்தில், ‛‛அதிமுக விதிமுறைப்படி ஒருவர் பதவிக்கு வர குறைந்தது 5 ஆண்டுகள் உறுப்பினராக இருக்க வேண்டும். ஜெயலலிதாவால் 2012ல் கட்சியை விட்டு நீக்கப்பட்டு, மீண்டும் சேர்க்கப்பட்ட சசிகலா, கட்சிக்கு மீண்டும் வந்து 5 ஆண்டுகள் முடியவில்லை. எனவே, அவர் உறுப்பினரும் அல்ல; பொதுச்செயலாளரும் அல்ல. எம்ஜிஆர் வகுத்த விதிமுறைப்படி, அனைத்து உறுப்பினர்கள், நிர்வாகிகள் சேர்ந்து தேர்தல் நடத்தி, பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்பட வேண்டும். இந்த இரண்டு காரணங்களை வைத்து, அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளது.
தேர்தல் கமிஷனில் இபிஎஸ் அணி தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், ‛‛சசி தான் பொதுச்செயலாளர்'' என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, தேர்தல் கமிஷன் முடிவு எப்போது வரும் என தெரியாத நிலையில், இன்றைய நிலவரப்படி சசி தான் பொதுச்செயலாளர் என்பது தெரிகிறது. இதில் இன்னொரு வினோதம், சசியை பதவியில் அமர வைத்தவர்களால், அவரை அதே முறையில் நீக்க முடியாது என்பது தான்.
தற்போதைய கேள்வி, இபிஎஸ் அணி, ‛‛தினகரனை ஒதுக்குவோம், தினகரன் இல்லாமல் அதிமுகவை நடத்துவோம்'' என சொல்கிறார்கள். ஆனால், சசி பெயரை உச்சரிக்க மறுக்கிறார்கள் அல்லது பயப்படுகிறார்கள்.

 

பயம், பயம், பயம்:

இது குறித்து, கட்சி நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‛‛சசியின் குணம் அனைவரும் அறிந்ததே. அவர் ஜெயலலிதாவையே கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தவர். ஜெயக்குமார் அல்லது இடைப்பாடி பழனிசாமி சசியை விமர்சித்து ஒரு பேட்டியோ அல்லது சசியை நீக்க பொதுக்குழு கூட்டப்படும் என அறிக்கை விட்டால் கூட, இவர்களை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து சசியால் நீக்க முடியும்.
அப்படி நீக்கினால், கட்சியின் விதிமுறைப்படி, கோ்ட்டுக்கு கூட போக முடியாது. இதற்கு பயந்தே தேர்தல் கமிஷனே சசியை நீக்கட்டும் என காத்திருக்கிறார்கள்.
தேர்தல் கமிஷனில் கொடுத்த பிரமாண பத்திரத்தைக் கூட வாபஸ் பெற முடியாத நிலையில் இவர்கள் சிக்கித் தவிக்கின்றனர்.

 

லெட்டர்பேடில் சசி கையெழுத்து:

இன்னொரு தகவல், அதிமுக லெட்டர்பேடில் பொதுச்செயலாளர் என கையெழுத்திட்டு தினகரனிடமோ திவாகரனிடமோ கொடுத்து கூட வைத்திருக்கலாம். சசியை எதிர்த்து பேசினால், சென்னையில் இருந்து கூட எந்த நேரத்திலும் யாரையும் கட்சியை விட்டு நீக்கி அறிக்கை வந்து விடும். இந்த பயத்தினால் தான், இபிஎஸ் அணி மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவிக்கிறது'' என்றார்.
அதிமுக ஒன்று சேர, ஓபிஎஸ் அணி விதிக்கும் நிபந்தனைகளை மனதளவில் இபிஎஸ் அணி ஏற்றுக்கொண்டாலும், சசி நியமனத்தை செல்லாது என தேர்தல் கமிஷன் அறிவிக்காமல் இணைப்பு சாத்தியமில்லை.

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1759316

Categories: Tamilnadu-news

‘தி.மு.கவைப் புதிதாகத்தான் தொடங்க வேண்டுமா?’ - மா.செக்களிடம் கடுகடுத்த ஸ்டாலின் #VikatanExclusive

Wed, 26/04/2017 - 13:08
‘தி.மு.கவைப் புதிதாகத்தான் தொடங்க வேண்டுமா?’ - மா.செக்களிடம் கடுகடுத்த ஸ்டாலின் #VikatanExclusive
 
 

ஸ்டாலின்

தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை மறுநாள் அறிவாலயத்தில் நடக்க இருக்கிறது. 'ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணியின்போது, கட்சி நிர்வாகிகளின் செயல்பாடுகளால் அதிர்ந்து போய்விட்டார் ஸ்டாலின். எனவே, கட்சியை சீரமைப்பது குறித்த ஆய்வுக்காக மாவட்டச் செயலாளர்கள் வர இருக்கின்றனர்' என்கின்றனர் அறிவாலய வட்டாரத்தில். 

சென்னை, கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் உடல்நலக் குறைவு காரணமாக தீவிர சிகிச்சையில் இருக்கிறார் தி.மு.க தலைவர் கருணாநிதி. அவரிடம் தயாநிதி மாறன், கனிமொழி உள்ளிட்டவர்கள் வாழ்த்து பெறும் படங்கள் மட்டுமே வெளியாயின. அரசியல் சூழ்நிலைகளுக்கு ஏற்ற அறிக்கைகள் எதுவும் அவரிடம் இருந்து வருவதில்லை. "தமிழக அரசியலின் முக்கியமான இந்தக் காலகட்டத்தில், அவருடைய பங்களிப்பு இல்லாமல் இருப்பதையும் தி.மு.க தொண்டர்கள் வேதனையுடன் கவனிக்கின்றனர். “கருணாநிதி இருந்திருந்தால், ஆட்சி மாற்றம் நடந்திருக்கும்’ என நிர்வாகிகள் சிலர் வெளிப்படையாகவே பேசி வருகின்றனர். இதனை செயல் தலைவர் ஸ்டாலினும் ஏற்றுக் கொண்டிருக்கிறார். அதேநேரம், கட்சி நிர்வாகிகளின் செயல்பாடுகளால் மிகுந்த அதிருப்தியில் இருக்கிறார்” என விளக்கிய தி.மு.க நிர்வாகி ஒருவர், 

“பொதுவாக, கட்சி மாநாடுகள், போராட்டம், ஆர்ப்பாட்டம் என்றால் தி.மு.க தொண்டர்களின் பங்களிப்பு மகத்தானதாக இருக்கும். தி.மு.க போராட்டத்தை நீர்த்துப் போக வைக்கும் வேலைகளில் ஆளுங்கட்சி இறங்கும். ஆனால், நேற்று விவசாயிகளுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் நடத்திய பந்த்தில் தி.மு.கவினரின் அக்கறையின்மை ஸ்டாலினை கவலையில் ஆழ்த்தியிருக்கிறது.  மாநிலத்தையே பாதிக்கும் முக்கிய விஷயம் ஒன்றுக்காக நடத்தப்பட்ட போராட்டத்துக்கு தி.மு.கவில் எந்த வீரியமான களச் செயல்பாடுகளையும் காண முடியவில்லை. போராட்டத்தில் கைதானவர்கள் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு, பிரியாணி சாப்பிட்டுவிட்டு கலைந்து சென்றுவிட்டனர். நேற்று போராட்டம் நடந்து கொண்டிருந்தபோதே, கட்சி நிர்வாகிகள் சிலர் தொழிலைக் கவனிக்கச் சென்றதையும் கணக்கில் வைத்திருக்கிறார் ஸ்டாலின். ஆளும்கட்சியினரோடு தொடர்பில் இருப்பவர்கள் பட்டியலையும் அவர் சேகரித்து வருகிறார்.

ஸ்டாலின்

அரசியல் முடிவுகள் தொடர்பாக, அறிவாலயத்தில் நிர்வாகிகளுடன் விவாதிக்கும் தகவல்கள் எல்லாம் எதிர் முகாமுக்குச் சென்றுவிடுகிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. ஆர்.கே.நகர் தேர்தல் வியூகம் உள்பட தி.மு.கவினரின் செயல் திட்டங்கள் அனைத்தும் எதிர் முகாமுக்குச் சென்றுவிட்டது என்ற தகவலால் கொதிப்பில் இருக்கிறார் ஸ்டாலின். எனவே, 'நமக்குள் இருக்கும் கறுப்பு ஆடு எது?' என்ற தேடுதலில் இருக்கிறார். தவிர, எந்த ஒரு விழா என்றாலும், பழைய கட்சிக்காரர்களைப் பார்ப்பதும் அரிதாகிவிட்டது. மேடையில் அமரும் ஆட்களில் துரைமுருகன், ஆர்.எஸ்.பாரதி தவிர, மீதம் உள்ள நிர்வாகிகள் பலரும் மாற்றுக் கட்சிகளில் இருந்து தி.மு.கவுக்கு வந்தவர்களாக இருக்கிறார்கள். முன்பெல்லாம், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அடையாளமாக பலர் இருப்பார்கள். இப்போது நிலைமை அப்படி இல்லை. 'தி.மு.க முகங்களையே பார்க்க முடிவதில்லை' என்ற ஆதங்கத்தை பலரும் வெளிப்படுத்திவிட்டனர். இப்படியே போனால், மீள முடியாத நிலைக்குக் கட்சி சென்றுவிடும் என்பதால்தான், நாளை மறுநாள் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் ஸ்டாலின்" என்றார் விரிவாக. 

 

“மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்குப் பிறகு, ஒன்றிய, நகர செயலாளர்களை வைத்து கூட்டம் நடத்த இருக்கின்றனர். இந்தக் கூட்டத்தில் வார்டு வாரியாக கட்சி நிலைமையை அறியும் பணிகள் நடக்க இருக்கின்றன. இந்த ஆய்வுக்குப் பிறகு, எந்தெந்த மாவட்டச் செயலாளர்கள் சுணக்கமாக இருக்கின்றனர் என்பதை அறிந்து, அதற்கேற்ப மாற்றங்களைச் செய்ய இருக்கிறார். ஆர்.கே.நகர் தேர்தல் களம்தான் அவருக்குள் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. அங்கு தேர்தல் பணிக்காக வந்தவர்கள் யாரும் சிறப்பாக வேலை பார்க்கவில்லை. இதனால் கொதித்துப் போனவர், ' தேர்தல் பணிகளில் காட்டும் ஆர்வத்தைப் பார்த்தால், மீண்டும் புதிதாகக் கட்சியைத் தொடங்க வேண்டும் போல் இருக்கிறது. உங்கள் பணிகளில் நான் திருப்தி அடையவில்லை' என நேரிடையாகவே கூறிவிட்டார். இதன் ஒரு பகுதியாகத்தான் நாளை மறுநாள் மாவட்டச் செயலாளர்கள் கூடுகின்றனர். வரக் கூடிய நாட்களில் பல மாற்றங்கள் நடக்க இருக்கின்றன" என்கிறார் அறிவாலய நிர்வாகி ஒருவர்.

http://www.vikatan.com/news/tamilnadu/87606-stalin-has-a-surprise-for-dmk-district-secretaries-on-april-28.html

Categories: Tamilnadu-news

தினகரன் கதை! போயஸ் கார்டன் என்ட்ரி முதல் டெல்லி கைது வரை...

Wed, 26/04/2017 - 13:07
தினகரன் கதை! போயஸ் கார்டன் என்ட்ரி முதல் டெல்லி கைது வரை...
 

டி.டி.வி.தினகரன்

‘சமாதிகளின் பூமி’ என்றழைக்கப்படும் டெல்லியில் டி.டி.வி.தினகரனின் அரசியல் வாழ்க்கை அடக்கம் செய்யப்பட்டுவிட்டது. இரட்டை இலையை மீட்கத் துடித்த தினகரன் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளதன் மூலம், அ.தி.மு.க-வில் அவருக்கிருந்த கொஞ்சநஞ்ச ஆதிக்க சக்தி, ஆட்சியில் அவருக்கு இருந்த எச்சசொச்ச செல்வாக்கு, சமீபமாக அவருக்குள் வளர்ந்திருந்த அரசியல் கனவுகள் அனைத்தும் குழி தோண்டிப் புதைக்கப்பட்டுள்ளன. 30 ஆண்டுகளுக்கு முன்பு போயஸ் கார்டனுக்குள் நுழைந்தபோது தொடங்கிய தினகரனின் அரசியல்... டெல்லியில் அவர் கைது செய்யப்பட்டதில் ‘அஸ்தமனம்’ ஆனது வரையிலான கதை... 

தினகரனின் போயஸ் கார்டன் ‘என்ட்ரி’!

சசிகலாவின் உடன்பிறந்த அக்கா வனிதாமணி. அவருடைய கணவர் டி.விவேகானந்தன். வனிதாமணி-விவேகானந்தன் தம்பதியின் மூத்த மகன்தான் டி.டி.வி.தினகரன். இவர், சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனத்தின் மகள் அனுராதாவை திருமணம் செய்துள்ளார். அனுராதாவின் உடன்பிறந்த சகோதரர்தான் டாக்டர் வெங்கடேஷ். 1987-ல் எம்.ஜி.ஆர் மறைந்ததற்குப் பிறகு ஜெயலலிதாவுக்கு ‘ஆல்-இன்-ஆல்’ ஆக இருந்தவர்கள் சசிகலாவும் அவரது கணவர் நடராசனும். அவர்கள் தயவில், சசிகலாவின் தம்பி திவாகரனும் போயஸ் கார்டனுக்குள் நுழைந்தார். அவர் தலைமையில் இயங்கிய பூனைப்படைதான் ஜெயலலிதாவுக்கு அந்தக் காலகட்டத்தில் பாதுகாப்புக் கொடுத்தது. திவாகரனைத் தொடர்ந்து தினகரனும் கார்டனுக்குள் அடியெடுத்து வைத்தார். ஜெயலலிதா செல்லும் பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகளில் மெல்ல தினகரனின் தலையும் தென்பட ஆரம்பித்தது. அதன்பிறகு கூட்டத்துக்கான ஏற்பாடுகளை பார்வையிடுவது, நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பது என்று தினகரனும் பரபரப்பானார். 1991-ல் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் ஒட்டுமொத்தமாக மன்னார்குடி குடும்பத்தின் செல்வாக்கு கட்சியிலும் ஆட்சியிலும் கொடிகட்டிப் பறந்தது. அதில், தினகரனின் செல்வாக்கும் உயர்ந்தது. ஜெயலலிதா-சசிகலாவின் வெளிநாட்டு முதலீடுகள், நிறுவனங்கள் தொடங்கும் வேலைகள், வெளிநாடுகளில் இருந்து ஜெயலலிதா கணக்குக்கு வந்த பணம் மற்றும் பரிசுப்பொருள்கள் என்று ஜெயலலிதாவின் வெளிநாட்டு பணப்பரிவர்த்தனை மேலாளராகவே தினகரன் திகழ்ந்தார். 

டி.டி.வி.தினகரன்

 

குறிப்பாக, ஜெயலலிதாவின் வங்கிக் கணக்கில் அமெரிக்க டாலர்கள் வரவு வைக்கப்பட்டது, லண்டனில் ‘காப்ஸ் கிராப்ட்’ என்ற ஹோட்டலை வாங்கியது, சசிகலா பங்குதாரராக இருந்த ‘பரணி பீச் ரிசாட்ஸ்’ நிறுவனத்தில் அமெரிக்க டாலர்கள் வரவு வைக்கப்பட்டது, ஜெ.ஜெ.தொலைக்காட்சிக்கு அப்லோடிங் கருவிகளை வெளிநாட்டில் இருந்து வரவழைத்தது என்று அனைத்திலும் தினகரனின் தலையீடு இருந்தது. 1995-ம் ஆண்டு இறுதியில், இந்த விவகாரங்களில் உள்ள வில்லங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவை ‘பெரா’ வழக்குகளாக தினகரனை வளைத்தன. 1996-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, ஜெயலலிதா, சசிகலா மீது தொடரப்பட்ட மிக முக்கியமான வழக்கு சொத்துக்குவிப்பு வழக்கு. அதில், தினகரன் பெயரில் லண்டனில் வாங்கப்பட்ட ‘காப்ஸ் கிராப்ட்’ ஹோட்டலும் சேர்க்கப்பட்டது. ஆனால், அதையும் சேர்த்து அந்த வழக்கை விசாரித்தால், இன்னும் நூறாண்டுகள் ஆனாலும் அந்த வழக்கை முடிக்க முடியாது என்பதை தி.மு.க உணர்ந்தது. இதையடுத்து, லண்டன் ஹோட்டல் விவகாரத்தை சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து பிரித்தது. அதனால், சொத்துக்குவிப்பு வழக்கில் தினகரனின் தலை தப்பியது. 

ஜெயலலிதாவின் நம்பிக்கையைப் பெற்ற தினகரன்!

1996 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்தது. பர்கூரில் போட்டியிட்ட ஜெயலலிதாவும் தோல்வி அடைந்தார். வெறும் 4 தொகுதிகளில் மட்டுமே அ.தி.மு.க வென்றது. அந்த மாபெரும் தோல்விக்குக் காரணம், சசிகலாவின் குடும்பமும், அவர்கள் கட்சியிலும் ஆட்சியிலும் செய்த தலையீடுகளும்தான் என கடுமையான விமர்சனம் எழுந்தது. இதையடுத்து ஜெயலலிதா சசிகலாவின் குடும்பத்தில் பலரை ஒதுக்கி வைத்தார். நடராசன், சுதாகரன், பாஸ்கரன் உள்ளிட்டவர்கள் ஓரம்கட்டப்பட்டனர். ஆனால், ஜெயலலிதாவின் கோபப் பார்வைக்குள் தினகரன் அப்போது சிக்கவில்லை. அதனால், 1999-ம் ஆண்டு  நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை தினகரனுக்கு ஜெயலலிதா வழங்கினார்.

டி.டி.வி.தினகரன்

 

பெரியகுளம் நாடாளுமன்றத் தொகுதியில் போய் தினகரன் போட்டியிட்டார். அப்போது, ஜெயலலிதாவே பெரியகுளத்துக்கு நேரில் சென்று தினகரனை மேடையில் வைத்து அறிமுகப்படுத்தினார். “நான் இங்கு போட்டியிடுவதாகக் கருதி தினகரனை வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்று கட்சிக்காரர்களுக்கு  கட்டளையிட்டார். அந்தத் தேர்தலில் தினகரனுக்காக தேர்தல் வேலை பார்க்க வந்தவர்தான் ஓ.பன்னீர் செல்வம். அப்போது தினகரனின் நம்பிக்கையைப் பெற்ற பன்னீர் செல்வத்துக்கு, அடுத்து எம்.எல்.ஏ சீட்டும், அமைச்சர் பதவியும், முதல்முறை முதல் அமைச்சராகும் வாய்ப்பும் கிடைப்பதற்கு தினகரன் மிக முக்கியமான காரணம். 1999 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற தினகரனுக்கு தொகுதிக்குள் ஒரளவுக்கு நல்லபெயரே கிடைத்தது. அந்தத் தொகுதியில் இருக்கும் கட்சிக்காரர்களின் வீட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது, பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை வாங்குவது, தொகுதிக்குள் நடக்கும் கோயில் விழாக்கள், சமய நிகழ்ச்சிகளுக்கு நன்கொடை வழங்குவது, மாணவர்களுக்கு உதவிகள் செய்வது என்று வலம் வந்தார்.அதனால், 2004 நாடாளுமன்றத் தேர்தலிலும் தினகரனுக்கே பெரியகுளம் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை ஜெயலலிதா வழங்கினார். ஆனால், அப்போது அந்தத்தொகுதியில் தி.மு.க கூட்டணியில் இருந்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஆருண் வெற்றி பெற்றார். தினகரன் 21 ஆயிரத்து 155 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். ஆனாலும், அதன்பிறகும் ஜெயலலிதா தினகரனைக் கைவிடவில்லை. ராஜ்யசபா எம்.பி. பதவியைக் கொடுத்து டெல்லிக்கு அனுப்பி வைத்தார். 

2011-ல் ஓரம்கட்டப்பட்ட தினகரன்!

ஜெயலலிதா, டி.டி.வி.தினகரன்2011-ல் நடைபெற்ற சட்டமன்றத்தேர்தலில் வெற்றி பெற்று அ.தி.மு.க மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. அதேநேரத்தில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் சொத்துக்குவிப்பு வழக்கும் வேகமெடுத்துக் கொண்டிருந்தது. தீர்ப்பின் முடிவு பாதகமாக வந்தால், கட்சியையும் ஆட்சியையும் யார் கட்டுப்படுத்துவது? என்று மன்னார்குடி குடும்பம் மொத்தமாக ஆலோசனையில் இறங்கியது. தஞ்சாவூரிலும் இந்த ஆலோசனை நடந்தது. பெங்களூருவிலும் அந்த ஆலோசனை தொடர்ந்தது. இதை மோப்பம் பிடித்த உளவுத்துறை ஜெயலலிதாவுக்கு ‘ரிப்போர்ட்’ அனுப்பியது. மன்னார்குடி குடும்பத்தின் நம்பிக்கைத் துரோகத்தால் கொதித்துப்போன ஜெயலலிதா... வெறுத்துப்போய் சசிகலா உள்பட அனைவரையும் கார்டனை விட்டுத் துரத்தினார். கட்சியை விட்டு நீக்கினார். ‘மன்னார்குடி குடும்பத்தோடு அ.தி.மு.க-வினர் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது’ என்று அறிக்கைவிட்டு எச்சரித்தார். ஜெயலலிதாவின் அந்த ஆவேசத்தில் தினகரனும் அடித்துச் செல்லப்பட்டார். அதன்பிறகு, 2017-வரை தினகரன் எங்கிருந்தார்... என்ன செய்து கொண்டிருந்தார்... என்ற சுவடே பதிவாகாமல் போனது. ஜெயலலிதாவின் உயிர் அவர் உடலைவிட்டுப் பிரியும்வரை அந்த நிலையே தொடர்ந்தது.

அப்போலோவில் ஐக்கியம்! 

2016 செப்டம்பர் 22-ம் தேதி ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவர் சிகிச்சைக்காக அப்போலோ ‘அட்மிட்’ ஆனார். அந்தச் சாக்கில் சிதறியிருந்த மன்னார்குடி குடும்பம் மீண்டும் ஐக்கியமானது. நடராசன் தவிர்த்து தினகரன், திவாகரன், பாஸ்கரன், சுதாகரன், மஹாதேவன் தலைகள் அப்போலோ மருத்துவமனை வளாகத்துக்குள்ளும், வேதா நிலையம் இருக்கும் போயஸ் கார்டன் தெருவுக்குள்ளும் தென்பட ஆரம்பித்தன. அப்போலோ மருத்துவமனையின் இரண்டாவது தளத்தில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை நடந்தது. மூன்றாவது தளத்தில் மன்னார்குடி குடும்பத்தின் ஐக்கியம் நிகழ்ந்தது. டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதா மரணமடைந்தார். டிசம்பர் 6-ம் தேதி அவருடைய உடல் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டு இருந்தது. அவர் உடலைச் சுற்றி அ.தி.மு.க அமைச்சர்களோ... எம்.எல்.ஏ-க்களோ நிற்கவில்லை. சசிகலா, திவாகரன், மகாதேவன், டாக்டர் சிவக்குமார், இளவரசி, பிரியா, நடராசன், பாஸ்கரன், தினகரன் ஆக்கிரமித்து இருந்தனர். ஆனால், அந்தக்கூட்டத்தில்கூட தினகரன் பிரதானமாக நிற்கவில்லை. ஆனால், அதன்பிறகு என்ன நடந்தது... எப்படி நடந்தது என்பது தெரியவில்லை; கட்சிக்காரர்களுக்கும் புரியவில்லை. நடராசன், திவாகரன், மகாதேவன் எல்லாம் சத்தமில்லாமல் ஒதுங்கி இருந்தனர். தினகரனும், டாக்டர் வெங்கடேஷ் மட்டும் போயஸ் கார்டனில் சசிகலாவின் நிழலாக வலம் வர ஆரம்பித்தனர். ஒருகட்டத்தில் சசிகலாவையே இவர்கள் கட்டுப்பாட்டுக்கு கீழ் கொண்டு வந்தனர். 

சசிகலாவை கட்டுப்படுத்திய தினகரன்!

சசிகலா, தினகரன்

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, ஊருக்குப் போகும் யோசனையில் இருந்த சசிகலாவுக்கு கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை திவாகரன் வாங்கிக் கொடுத்தார். ஆனால், அவருக்கு முதல் அமைச்சராகும் ஆசையைக் கொடுத்தது தினகரன்தான் என்கின்றனர் அ.தி.மு.க பின்னணி அறிந்தவர்கள். தஞ்சாவூரில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த நடராசன், “பன்னீர் செல்வம் தலைமையில் நல்லாட்சிதான் நடக்கிறது; அதனால், முதலமைச்சரை மாற்றத் தேவையில்லை” என்றுதான் குறிப்பிட்டார். ஆனால், தினகரனுக்கு அதில் உடன்பாடு இல்லை. “பன்னீர் செல்வம் தி.மு.க-வினரோடு நெருக்கமான உறவு வைத்துள்ளார். அவர் தலைமையில் ஆட்சி நடப்பது கட்சிக்கும் நல்லதல்ல... நமது குடும்பத்துக்கும் நல்லதல்ல...” என்று எதையோ சொல்லி சசிகலாவை மாற்றினார்கள். திடீரென ஒருநாள் முதலமைச்சர் பன்னீர் செல்வத்தையும், மற்ற அமைச்சர்களையும் போயஸ் கார்டன் வீட்டுக்கு அழைத்தனர். பன்னீர் செல்வத்தை ராஜினாமா செய்யச் சொல்லி நிர்பந்தம் கொடுத்தனர். பன்னீர் செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்தார். சசிகலா சட்டமன்ற ஆளும் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  

 

 

அ.தி.மு.க துணைப்பொதுச் செயலாளர் தினகரன்!

திண்டுக்கல் சீனிவாசன், தினகரன், எடப்பாடி பழனிச்சாமி, செங்கோட்டையன்

பன்னீர் செல்வம் ராஜினாமா செய்ய நிர்பந்திக்கப்பட்டதை அடுத்து, அவர் ஜெயலலிதா சமாதியில் தியானம் இருந்துவிட்டு, அ.தி.மு.க-வை இரண்டாக உடைத்தார். அதேநேரத்தில் சசிகலா முதல் அமைச்சர் நாற்காலியை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தார். தன்னை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று கவர்னரிடம் முறையிட்டார். அப்போது சசிகலாவோடு கவர்னரைச் சந்திக்கச் சென்றது தினகரன்தான். ஆனால், சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டுத்  தீர்ப்பு சசிகலாவின் கனவைக் கலைத்தது. அந்த வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் குற்றவாளிகள்தான் என்று வெளியான தீர்ப்பு, சசிகலாவை பரப்பன அக்ரஹாரா சிறைக்கு அனுப்பியது. ஆனாலும் அசரவில்லை தினகரன். சசிகலா சிறைக்குப் போகும் முன், கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் பதவியை கேட்டு வாங்கினார். சசிகலாவும் தினகரனை அந்தப் பதவியில் நியமித்துவிட்டுப் போனார். “ஜெயலிதா உயிரோடு இல்லை; சசிகலா சிறைக்குச் சென்றுவிட்டார்; குடும்ப உறவுகளை ஒதுக்கிவிட்டோம்” என்று நினைத்த தினகரனின் அரசியல் ஆட்டம் ‘டாப் கியரி’ல் வேகமெடுத்தது. அவர் கையில் துணைப் பொதுச் செயலாளர் பதவியும் இருந்ததால், கட்சியிலும் பெரிதாக எதிர்ப்புகள் கிளம்பவில்லை. அதன் தொடர்ச்சியாக ஆட்சியைக் கைப்பற்ற நினைத்த தினகரன் ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தார். ஒரு காலத்தில் தினகரனால் எம்.எல்.ஏ சீட் வாங்கி, அமைச்சர் பதவியை வாங்கி, முதல்முறை முதலமைச்சராகும் வாய்ப்பையும் பெற்ற பன்னீர் செல்வம் தினகரனை எதிர்த்து மதுசூதனனைக் களமிறக்கினார். கட்சி இரண்டாகப் பிளவுபட்டு நிற்பதால், இரட்டை இலைச் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கி வைத்தது. தினகரனுக்கு சின்னமாக தொப்பி கிடைத்தது. மதுசூதனனுக்கு இரட்டை மின்கம்பம் கிடைத்தது. தேர்தல் சூடு தொடங்கியது. ஆரம்பத்தில் ஆர்.கே.நகரில் தினகரனுக்கு ஆதரவே இல்லை. ஆனால், கடுமையான எதிர்ப்பு இருந்தது. ஆனால், தேர்தல் தேதி நெருங்க. நெருங்க நிலைமை மாறியது. தொகுதியில் ஒரு ஓட்டுக்கு 5 ஆயிரம் முதல் பத்தாயிரம் ரூபாய் வரை விநியோகம் செய்யப்பட்டது. தினகரனுக்கு இருந்த கடுமையான எதிர்ப்பு, கொஞ்சம் கொஞ்சமாக ஆதரவாக மாறுவதுபோல் தோன்றியது. அவர் வெற்றி பெற்றுவிடுவார் என்று பரவலாகக் கணிக்கப்பட்டது. உளவுத்துறையும் அதையே அறிக்கையாக டெல்லிக்கு அனுப்பியது. 

 

 

விறுவிறுப்பான சறுக்கல்கள்! 

ttv_with_cap_13570.jpgஇரட்டை இலையைப் பறிகொடுத்ததில் தினகரனுக்கான சறுக்கல் தொடங்கியது. ஆர்.கே.நகர் தேர்தல் களேபரங்களில் தினகரனின் சறுக்கல்கள் வேகமெடுத்தன. தேர்தலுக்கு சில நாள்களுக்கு முன், தினகரனின் ஆதரவாளரான அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் வருமானவரித்துறை நுழைந்தது. சிட்லபாக்கம் ராஜேந்திரன், நடிகர் சரத்குமார் வீடுகளிலும் ஐ.டி.துறையில் அதிரடி ரெய்டு நடந்தது. அந்த ரெய்டுகளில் ஆர்.கே.நகர் வாக்களார்களுக்கு பணம் விநியோகம் செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் சிக்கின. இதையடுத்து தேர்தல் ஆணையம் ஆர்.கே.நகர் தேர்தலை ரத்து செய்தது. தினகரனின் திட்டம் தகர்ந்தது. ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற அவரது எண்ணம் தள்ளிப்போனது. தேர்தல் ரத்து செய்யப்பட்ட  நேரத்தில் மற்றொரு அடியும் தினகரன் தலையில் விழுந்தது. தேர்தல் ஆணையத்தால் முடக்கி வைக்கப்பட்டுள்ள இரட்டை இலைச் சின்னத்தை மீண்டும் பெறுவதற்காக தினகரன் லஞ்சம் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டை டெல்லி போலீஸ் கிளப்பியது. அந்த வழக்கில் சுகேஷ் சந்திரா என்பவர் கைது செய்யப்பட்டார். “இரட்டை இலையை மீட்பதற்காக தினகரன் 60 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கத் தயாராக இருந்தார். அட்வான்ஸ் தொகையாக ஒரு கோடி ரூபாய் கொடுத்தார்” என்று சொன்னதாக டெல்லி போலீஸ் சொன்னது.  

 

 

சிறைக்கு அனுப்பிய சின்னம்! 

டெல்லியில் தினகரன்

ஆர்.கே.நகர் தேர்தல் ரத்தானபோதே, அ.தி.மு.க-வில் இருந்த அமைச்சர்கள் தினகரனுக்கு எதிராக அணி திரளத் தொடங்கிவிட்டனர். இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் டெல்லி போலீஸ் வழக்குப் பதிவு செய்ததும், “தினகரனை கட்சியில் இருந்தும் ஆட்சி அதிகாரங்களில் தலையீடுவதில் இருந்தும் முற்றிலும் ஒதுக்கி வைப்பதாக” அ.தி.மு.க-வின் மூத்த அமைச்சர்கள் அறிவித்தனர். அந்த நிலையில், பத்திரிகையாளர்களைச் சந்தித்த தினகரன், “நான் நேற்றே ஒதுங்கிவிட்டேன்” என்று சொல்லி சரண்டர் ஆனார். அதோடு தினகரனின் அரசியல் அத்தியாயம் முடிந்தது. ஆனாலும், அவருக்கு ஆதரவாகச் சிலர் கட்சியிலும் ஆட்சியிலும் பேசிக் கொண்டுதான் இருந்தனர். சாதாரணமாக இப்படி ஒதுங்கக்கூடியவர் இல்லை தினகரன் என பன்னீர் அணியும் சந்தேகத்தோடுதான் இருந்தது. ஆனால், இரட்டை இலைச் சின்னத்துக்கு லஞ்சம் கொடுத்த விவகாரத்தில், டெல்லி போலீஸ் நடத்திய விசாரணைக்கு சென்றார் தினகரன். 4 நாட்கள் 37 மணி நேரம் நடந்த விசாரணையின் இறுதியில், தினகரன் குற்றத்தை ஒப்புக் கொண்டார் என்று சொல்லி டெல்லி போலீஸ் அவரைக் கைது செய்தது. இன்று(26-ம் தேதி) தினகரனையும் அவரது நண்பர் மல்லிகார்ஜூனாவையும் ‘தீஸ் ஹசாரி’ நீதிமன்றத்தில் டெல்லி போலீஸ் ஆஜர்படுத்த உள்ளது. அதன்பிறகு தினகரன் திஹார் சிறைக்கு அனுப்பப்படுவார். சில நாட்கள் கழித்து அவர் ஜாமீனில் வெளிவரலாம். ஆனால், அவருடைய அரசியல் கனவுகள் என்பது சமாதிகளின் பூமியில் அடக்கம் செய்யப்பட்டுவிட்டது. மீண்டும் அவர் அரசியல் செய்ய நினைத்தாலும் அது எதிர்காலமற்ற செத்துப்போன அரசியலாகத்தான் இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.

http://www.vikatan.com/news/coverstory/87599-tale-of-dinakaran-from-poes-garden-to-delhi-arrest.html

Categories: Tamilnadu-news