தமிழகச் செய்திகள்

65 வயதிற்குப் பிறகுதான் கமலுக்கு ஞானோதயம் வந்துள்ளது: முதல்வர்

Wed, 15/03/2017 - 04:59
65 வயதிற்குப் பிறகுதான் கமலுக்கு ஞானோதயம் வந்துள்ளது: முதல்வர்

palanisami-150x150.jpgநடிகர் கமல்ஹாசன் ஒரு தனியார் டி.வி.க்கு பேட்டியளித்தபோது தமிழக அரசு, தனது விஷ்வரூபம் படம் விவகாரம் குறித்து பேசினார். தமிழ்நாட்டில் தற்போதுள்ள அரசு நான்காண்டுகளுக்கு தொடரக்கூடாது, பொதுத் தேர்தல் வேண்டும் என உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களையும் கூறினார்.இதற்கு அ.தி.மு.க. சார்பில் கண்டன குரல் எழுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கமல் கருத்துக்கு பதில் அளித்தார்.

இன்று சேலம் மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்டப் பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில் ‘‘65 வயதிற்குப் பிறகுதான் கமலுக்கு ஞானோதயம் வந்துள்ளது. விஸ்வரூபம் படம் வெளியாவதற்கு உதவி புரிந்தவர் ஜெயலலிதா. அந்த நன்றியை மறந்து பேசுகிறார். ஆட்சி தொடரக்கூடாது என்கிறார் கமல். எந்த கிராமத்திற்காவது சென்று அவர் மக்களை சந்தித்திருப்பாரா? குற்றம்சாட்டுபவர்கள் ஆட்சியில் என்ன குற்றம் கண்டு இருக்கிறார்கள்?’’ என்று கேள்வி எழுப்பினார்.

www.maalaimalar.com/.../Tamil-Nadu-CM-says-Kamal-gets-wisdo

Categories: Tamilnadu-news

தி.மு.க.,வில் சாமானிய வேட்பாளர் : ஜெ., பாணியில் ஸ்டாலின் முடிவு

Tue, 14/03/2017 - 20:34
தி.மு.க.,வில் சாமானிய வேட்பாளர் :
ஜெ., பாணியில் ஸ்டாலின் முடிவு
 
 
 

ஆர்.கே.நகர் தொகுதியில், புதுமுக வேட்பாளரை நிறுத்த, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.

 

Tamil_News_large_173032320170314230851_318_219.jpg

சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில், தி.மு.க., சார்பில் போட்டியிட, சிம்லா முத்துச்சோழன், காமராஜர் பேத்தி மயூரி, மருத கணேஷ் உட்பட, 17 பேர் விருப்ப மனு அளித்திருந்தனர். சென்னை அறிவாலயத்தில், நேற்று முன்தினம் நேர்காணல் நடந்தது. அன்றே வேட்பாளர் அறிவிக்கப் படுவார் என, கட்சியினர் எதிர்பார்த் தனர். ஆனால், 'தி.மு.க., தலைவர் கருணாநிதி யிடம் ஆலோசித்து, வேட்பாளர் பெயர் அறிவிக் கப்படும்' என, ஸ்டாலின் கூறியிருந்தார்;

நேற்றும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப் படவில்லை.
கட்சியில் சாதாரண பதவியில் இருக்கிற சாமானியனுக்கு, எம்.எல்.ஏ., - எம்.பி., - அமைச்சர் பதவி வழங்கிஅழகு பார்த்தவர் ஜெயலலிதா. அவரது பாணியில், ஆர்.கே.நகர் தொகுதியில், சாமானியர் ஒருவரை வேட்பாளராக்க, ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.'அதனால் தான், நேற்று வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை; இன்று முகூர்த்த நாள் என்பதால், வேட்பாளர் அறிவிக்கப் படுவார்' என, கட்சி நிர்வாகிகள் கூறினர்.
 

அடுத்த போராட்டம் ஸ்டாலின் அழைப்பு


'தமிழகம் முழுவதும் தலைவிரித்தாடும் குடிநீர் பஞ்சத்தைத் தீர்க்க, போராட்டம் நடத்துவோம்'என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:

ரேஷன் கடைகள் முன் நடத்திய போராட்டத் தில், பொதுமக்கள் பங்கேற்று ஆதரவு வழங்கி யிருப்பது, தமிழக அரசியல் களத்திலும், ஆட்சி

 

தளத்திலும், விரைவில் ஏற்படஇருக்கும் மாற்றங்களுக்கான அச்சாரம்.மக்களுக்காக, நாம் களமிறங்க, ஒரு மகத்தான போராட்டம் வெற்றிகரமாக நடந்தேறியுள்ளது.

உணவுப் பொருட்கள் தட்டுப்பாட்டுடன், குடிநீர் பஞ்சமும், தமிழகம் முழுவதும் தலைவிரித் தாடு கிறது. அவற்றைத் தீர்க்க, அறப் போர்க் களம் காண்போம். மக்களோடு இணைந்து போராடி, வெற்றியை ஈட்டுவோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார். - நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1730323

Categories: Tamilnadu-news

டில்லியில் இன்று நசீமை சந்திக்கிறார் பன்னீர்: பொது செயலர் விவகாரத்தில் இறுதி விசாரணை

Tue, 14/03/2017 - 20:32
டில்லியில் இன்று நசீமை சந்திக்கிறார் பன்னீர்:
பொது செயலர் விவகாரத்தில் இறுதி விசாரணை
 
 
 

ஆர்.கே.நகர் தொகுதியில், நாளை மனு தாக்கல் துவங்க உள்ளதால், அ.தி.மு.க., பொதுச் செயல ராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என்பதை, விரைவாக அறிவிக்கும்படி, தலைமை தேர்தல் கமிஷனரை நேரில் சந்தித்து வலியுறுத்த, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், இன்று டில்லி செல்கிறார்.

 

Tamil_News_large_173033020170314230943_318_219.jpg

அ.தி.மு.க., சட்ட விதிகளின்படி, தேர்தல் நடத்தி, கட்சி உறுப்பினர்களால், பொது செயலர் தேர்வு செய்யப்பட வேண்டும். ஆனால், சசிகலா அவ்வாறு தேர்வு செய்யப்படவில்லை. ஐந்து ஆண்டுகள்மேலும், பொதுச் செயலர் பதவிக்கு போட்டியிடுபவர், கட்சியில் ஐந்து ஆண்டுகள்
உறுப்பினராக இருந்திருக்க வேண்டும். அந்த தகுதியும் அவருக்கு இல்லை.

சசிகலா, 2011ல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு, 2012ல் மீண்டும் சேர்க்கப்பட்டார். அவர் அடிப்படை உறுப்பினராகி, ஐந்து ஆண்டுகள் நிறைவு பெறாததால், அவர் பொதுச் செயலராக முடியாது.எனவே, அவர் பொதுச் செயலராக நியமிக்கப்பட்டது செல்லாது என, அறிவிக்கக் கோரி, பன்னீர்செல்வம் அணியினர், ராஜ்ய சபா,எம்.பி., மைத்ரேயன் தலைமையில், தேர்தல் கமிஷனில் மனு கொடுத்தனர். அதை ஏற்ற தேர்தல் கமிஷன், பதில் அளிக்கும் படி,

சிறையில் உள்ள சசிகலாவுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பியது. சசிகலா சார்பில், துணை பொதுச் செயலர் தினகரன், பதில் அனுப்பினார். அதை, தேர்தல் கமிஷன் ஏற்க மறுத்துவிட்டது.

அதை தொடர்ந்து, 10ம் தேதி, 70 பக்கங்கள் கொண்டபதில் மனுவை, தேர்தல் கமிஷனுக்கு, சசிகலா அனுப்பினார். அதை, புகார்தாரர் என்ற அடிப்படை யில், மைத்ரேயனுக்கு அனுப்பி, அதற்குரிய விளக்கத்தை, 14க்குள் அனுப்பும்படி, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது.
 

மனு தாக்கல்


அதன்படி, மைத்ரேயன் உள்ளிட்டோர், நேற்று டில்லி சென்று, தேர்தல் கமிஷனில், 61 பக்க விளக்கத்தை அளித்தனர். சசிகலா அளித்த பதில் ஒவ்வொன்றும் தவறானது என, ஆதாரங்களுடன் தெரிவித்து உள்ளனர். அ.தி.மு.க., பொதுச் செயலராக, சசிகலா நியமிக்கப்பட்டது செல்லுமா, செல்லாதா என, தேர்தல் கமிஷன் முடிவு எடுக்காத நிலையில், சென்னை, ஆர்.கே.நகர் தொகுதிக்கு, நாளை வேட்புமனு தாக்கல் துவங்குகிறது.

தேர்தலில், சசிகலா அணியினரும், பன்னீர் அணியினரும் களமிறங்க முடிவு செய்துள்ளனர். சசிகலா நியமனம் செல்லாது என, தேர்தல் கமிஷன் அறிவித்தால், பன்னீர் அணியினர் கை ஓங்கும்.
மேலும், இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற கேள்வி எழும். எனவே, விரைவாக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என, அறிவிக்கக் கோரியும், இரட்டை இலை சின்னம் கோரியும், தலைமை தேர்தல் கமிஷனரை சந்திக்க, பன்னீர் அணியினர் முடிவு செய்தனர்.

அதன்படி, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில், அவரது ஆதரவாளர்கள், இன்று

 

காலை, 6:15 மணிக்கு,விமானம் மூலம் டில்லி செல்கின்றனர். மதியம், 12:00 மணிக்கு, தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதியை சந்திக்கின்றனர்.

முன்னாள் அமைச்சர்கள், கே.பி.முனுசாமி, விஸ்வநாதன், ராஜ்யசபா, எம்.பி., மைத்ரேயன், முன்னாள், எம்.பி., மனோஜ் பாண்டியன், எம்.எல்.ஏ.,க்கள் செம்மலை, பாண்டியராஜன், எம்.பி.,க்கள் சுந்தரம், அசோக்குமார் ஆகியோரும் செல்கின்றனர்.
 

சசி அணியும் தீவிரம்!


அ.தி.மு.க., பொதுச் செயலராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லும் என, தேர்தல் கமிஷன் அறிவித்தால் மட்டுமே, கட்சியையும், ஆட்சியையும் தக்க வைக்க முடியும் என்பதை, சசிகலா குடும்பத்தினர் அறிந்து உள்ளனர். எனவே, பன்னீர்செல்வம் அணியினருக்கு சாதகமாக, தேர்தல் கமிஷன் முடிவு எடுத்து விடாமலிருக்க, சசிகலாவின் கணவர் நடராஜன், தம்பி திவாகரன் ஆகியோர், டில்லியில் முகாமிட்டு உள்ளனர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1730330

Categories: Tamilnadu-news

ஜெ., மரண சர்ச்சையில் சி.பி.ஐ., விசாரணை : லோக்சபாவில் அ.தி.மு.க., வலியுறுத்தல்

Tue, 14/03/2017 - 20:31
ஜெ., மரண சர்ச்சையில் சி.பி.ஐ., விசாரணை :
லோக்சபாவில் அ.தி.மு.க., வலியுறுத்தல்
 
 
 

புதுடில்லி: 'தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள சர்ச்சை கள் குறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தர விட வேண்டும்' என, லோக்சபாவில், அ.தி. மு.க., - எம்.பி., வலியுறுத்தினார்.

 

Tamil_News_large_173033120170314231013_318_219.jpg

பார்லி., பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. நேற்று லோக்சபாவில், முன்னாள்

முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளரான, அ.தி. மு.க., - எம்.பி., சுந்தரம் பேசியதாவது:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மருத்துவமனை யில், 75 நாட்கள் சிகிச்சை பெற்றார்.முதலில், நீர்ச் சத்து குறைவு, காய்ச்சல் என்றனர். ஆனால், திடீ ரென, அவருக்கு பல்வேறு நோய்கள் உள்ளதாகவும், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாகவும் கூறினர்.

மருத்துவமனையில் இருந்த போது, அவரை சந்திக்க யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளது; இது குறித்து,சி.பி.ஐ., விசாரிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கு பதிலளித்து, பார்லி., விவகாரத் துறை அமைச்சர் அனந்தகுமார் கூறியதாவது:இது, மிகவும் முக்கியமான பிரச்னை என்பதில் சந்தேகமில்லை.

 

ஜெ., மரணத்தில் உள்ள சந்தேகங்கள் குறித்த விசாரணைக்கு,மாநிலஅரசுஉத்தரவிட்டுள்ளது.

அதன் அறிக்கை வந்தபின், அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1730331

Categories: Tamilnadu-news

பொதுச்செயலர் பதவியை தக்க வைக்க சசி கும்பல் தந்திரம்

Tue, 14/03/2017 - 20:30
பொதுச்செயலர் பதவியை
தக்க வைக்க சசி கும்பல் தந்திரம்
 
 
 

அ.தி.மு.க., பொதுச்செயலர் பதவிக்கு தேர்தல் வந்தால், வெற்றி பெற வசதியாக, புதிதாக, 20 லட்சம், அ.தி.மு.க., உறுப்பினர் அட்டைகள் அச்சிட, சசிகலா குடும்பத்தினர் உத்தரவிட்டுள்ளனர்.

 

Tamil_News_large_173035720170314231202_318_219.jpg

சசிகலா, பொதுச்செயலராக நியமிக்கப்பட்டது செல்லாது என, அறிவிக்க கோரி, பன்னீர் அணியினர், தேர்தல் கமிஷனில் மனு

கொடுத்துள்ளனர். அதை ஏற்று, சசிகலா நியமனம் செல்லாது என, தேர்தல் கமிஷன் அறிவித்தால், பொதுச்செயலர் பதவிக்கு, தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
பொதுச்செயலர் பதவிக்கு,பன்னீர் அணியினர் போட்டியிடுவர். அ.தி.மு.க., சட்ட விதிகளின்படி, கட்சியில் உள்ள, 1.50 கோடி உறுப்பினர்களும், ஓட்டு போட்டு பொதுச்செயலரை தேர்வு செய்ய வேண்டும். அடிப்படை உறுப்பினர் அனைவரும், அடையாள அட்டை வைத்திருப்பர் என, உறுதியாக கூற முடி யாத நிலை உள்ளது. இதை, தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த, சசிகலாகுடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.

எனவே, பொதுச்செயலர் தேர்தலில், பன்னீர் அணியினரை தோற்கடிப்பதற்கான சூழ்ச்சிகளை துவக்கி உள்ளனர். முதல்கட்டமாக, 20 லட்சம், அ.தி.மு.க., உறுப்பினர் அடையாள அட்டை

 

அச்சடிக்க உத்தரவிட்டுள்ளனர். இவற்றை தங்களுக்கு வேண்டியவர்களுக்கு வழங்கி, அவர்களை ஓட்டுப் போட வைக்க, சசிகலா குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். இது, பன்னீர் அணியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1730357

Categories: Tamilnadu-news

உதிர்கிறதா இரட்டை இலை?

Tue, 14/03/2017 - 17:53
உதிர்கிறதா இரட்டை இலை?
 
mgr_3143394f.jpg
 
 
 

எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு ஜானகி அணி, ஜெயலலிதா அணி என இரண்டாகப் பிரிந்தது. ஜானகி அம்மையார் எம்.ஜி.ஆர். மனைவி என்றாலும், எம்.ஜி.ஆருக்குப் பின் அவரைத் தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே, தோற்கடிக்கப்பட்டார். ஜெயலலிதா 21 தொகுதிகளில் வெற்றிபெற்றார். திமுக ஆட்சியைப் பிடித்தது. கருணாநிதி முதல்வர் ஆனார். இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டது.

அதன் பின் எனக்கு அரசியலே வேண்டாம் என்று ஒதுங்கிக்கொண்டார் ஜானகி. கட்சி ஜெயலலிதா வசம் போனபோது, முடக்கப்பட்ட இரட்டை இலைச் சின்னமும் திரும்பக் கிடைத்தது. 1991-ல் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார். அந்த அனுதாப அலை காரணமாக அதிமுக கூட்டணி மிகப் பெரும்பான்மையைப் பெற்றது. ஜெயலலிதா முதல்வர் ஆனார். ஆனால், ராஜீவ் ரத்தம் எனக்கு வெற்றியைத் தேடித் தரவில்லை. என் செல்வாக்குதான் காரணம் என்றார் ஜெயலலிதா.

சாலையில் தடுப்புகள், போக்குவரத்து நிறுத்தம் என்று பகட்டு அரசியலை ஜெயலலிதா நடத்தினார். அவரது வளர்ப்பு மகன் திருமணம் எம்.ஜி.ஆர். தொடங்கிய அதிமுகவின் ஆட்சியில் முதல் கரும்புள்ளி. பெரும் ஊழல்கள், சசிகலா குடும்பத்தினரின் மிரட்டல்கள் என்று ஜெயலலிதாவின் ஆட்சி மிகப் பெரும் விமர்சனத்துக்குள்ளானது. ஊழல் வழக்குகளுக்காக மூன்று முறை சிறை சென்றவர் ஜெயலலிதா. எப்படி ஆட்சி நடத்த வேண்டும் என்பதற்கு உதாரணம் எம்.ஜி.ஆர். எப்படி ஆட்சி நடத்தக் கூடாது என்பதற்கு உதாரணம் ஜெயலலிதா.

2016 தேர்தலில் திமுக கூட்டணிக் கோளாறுதான் இந்த முறை ஜெயலலிதாவை மீண்டும் ஆட்சியில் அமர்த்தியது. ஆட்சி வாய்ப்பை திமுக இழந்தது. ஸ்டாலினை கருணாநிதி முழுவதும் நம்பினார். ஆவரது தேர்தல் வியூகம் மற்றும் கூட்டணி கணிப்பு தவறாகப் போனது. இது மக்கள் விரும்பிய ஆட்சி அல்ல. இன்றைக்கு ஜெயலலிதாவின் மரணம் பற்றி பல்வேறு வதந்திகள் பரப்பப்படுகின்றன. ஜெயலலிதாவால் சிறிது காலம் ஒதுக்கி வைக்கப்பட்டு, மீண்டும் சேர்க்கப்பட்ட சசிகலா, ஜெயலலிதாவை அரசியலுக்கு அழைத்து வந்ததே நான்தான் என்கிறார். நான் சொல்லித்தான் யாருடன் கூட்டணி என்று ஜெயலலிதா முடிவுசெய்தார். பல முக்கிய அரசியல் முடிவுகளை நான் சொல்லித்தான் எடுத்தார் என்றும் சசிகலா சொல்கிறார். ஜெயலலிதா உயிருடன் இருந்த வரை சசிகலாவை நெருங்கிய வட்டாரம் மட்டுமே அறியும். உள்கட்சி விவகாரத்தில் சசிகலா தலையீடு இருந்தது உண்மை. ஏனெனில், ஜெயலலிதாவைச் சந்திக்க வேண்டும் என்றாலோ அவருக்குத் தகவல் தர வேண்டும் என்றாலோ சசிகலாவைத் தாண்டித்தான் அல்லது சசிகலா மூலமாகத்தான் செல்ல வேண்டும். இப்படிப் பல பிரச்சினைகள் இருந்ததை நாம் அறிவோம்.

ஜெயலலிதாவை ஏற்றுக்கொண்ட தொண்டர்கள்கூட, நமக்கும் ஒரு நாள் எம்.எல்.ஏ., எம்.பி., அமைச்சர் என்று வாய்ப்பு தருவார் என்றே எதிர்பார்த்தனர். ஜெயலலிதாவின் பலம் அதுதான். கட்சியின் கிளைக் கழகச் செயலாளர், ஊராட்சி உறுப்பினர், மாநகராட்சி கவுன்சிலர் எல்லாம் சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார்கள். எம்.ஜி.ஆர். தனது அரசியல் வாரிசு ஜெயலலிதா என்று அறிவிக்கவில்லை. ஆனால், கோடிட்டுக் காட்டினார். முதலில் சத்துணவு ஆலோசகர், பின் கொள்கைப் பரப்புச் செயலாளர், பிறகு மாநிலங்களவை உறுப்பினர் என்று கட்சியில் ஒரு முக்கிய சக்தியாக ஜெயலலிதாவை முன்னிறுத்தினார்.

ஜெயலலிதா அப்படி யாரையும் தனக்குப் பிறகு என்று அடையாளம் காட்டவில்லை. இப்போது சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், தீபா என்று ஒவ்வொருவரும் ஒரு காரணம் சொல்லி அதிமுகவைத் தங்கள் வசமாக்கிக்கொள்ள முயற்சி செய்கிறார்கள். சசிகலா மீது அடிமட்டத் தொண்டனுக்கு எந்த ஈர்ப்பும் இல்லை. உண்மையோ பொய்யோ ஜெயலலிதா மரணத்தையும் சசிகலாவையும் சம்பந்தப்படுத்தி வரும் செய்திகளைத் தொண்டர்கள் நம்புகிறார்கள். ஓ.பன்னீர்செல்வத்தைப் பொறுத்தவரை, ஜெயலலிதா ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகிப் பதவி பறிபோய் சிறை சென்றபோதெல்லாம் பன்னீர்செல்வத்தைத் தான் முதல்வராக்கினார். எம்.ஜி.ஆர். காலத்துப் பிரமுகர்கள் இப்போது சிலர் இருந்தாலும் அவர்களை யெல்லாம் நம்பாமல் பன்னீர்செல்வத்துக்கே வாய்ப்பு தந்தார்.

சசிகலாவின் ஆதரவு, பன்னீர்செல்வத்துக்கு அப்போது இருந்ததும் உண்மை. அதேபோல், சசிகலா பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது வார்த்தைக்கு வார்த்தை ‘மாண்புமிகு சின்னம்மா’ என்று சொன்னார் பன்னீர்செல்வம். இப்போது அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சொல்வது அவரது அரசியல் தற்காப்புதானே தவிர, வேறொன்றும் இல்லை. இன்னொரு உண்மையையும் எல்லோரும் ஒப்புக்கொள்வார்கள்.

ஜெயலலிதாவின் முடிவையே மாற்றும் அதிகாரம் உள்ள சக்தியாக சசிகலா இருந்தார் என்பதும் உண்மை. பன்னீர்செல்வத்தை முதலமைச்சராக்க வேண்டாம் என்று சசிகலா தீர்மானித்திருந்தால், பன்னீர்செல்வத்துக்கு அந்த வாய்ப்பு நிச்சயம் கிடைத்திருக்காது. தீபாவைப் பொறுத்தவரை அவர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் அவ்வளவே. மக்களிடம் செல்வாக்கைப் பெற்றிருந்த எம்.ஜி.ஆர். தொடர்ந்து முதல்வராக இருந்தார்.

ஜெயலலிதா அப்படி இருக்கவில்லை. இப்போது உச்ச நீதிமன்றத் தீர்ப்பைச் சுட்டிக்காட்டி, அரசு அலுவலகங்களில் அவர் படம் வைக்கக் கூடாது என்று சொல்லப்படுகிறது. அவருக்கு பாரத ரத்னா கிடைக்காது. சமாதிக்கான செலவை அரசு ஏற்கக் கூடாது என்றெல்லாம் பேச்சு எழுகிறது. இவையெல்லாம் எம்.ஜி.ஆர். தொடங்கிய அதிமுகவின் இருண்ட பக்கங்கள். இரட்டை இலை உதிரத் தொடங்கிவிட்டது.

- ஜாசன், மூத்த பத்திரிகையாளர்,

http://tamil.thehindu.com/opinion/columns/உதிர்கிறதா-இரட்டை-இலை/article9582694.ece?homepage=true&ref=tnwn

Categories: Tamilnadu-news

ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு செல்கிறதா இரட்டை இலை?

Tue, 14/03/2017 - 15:01
ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு செல்கிறதா இரட்டை இலை?

   பன்னீர்செல்வம்       

ஜெயலலிதா மறைவுக்குப் பின், அ.தி.மு.க பொதுச்செயலாளராக  சசிகலாவை நியமனம் செய்தது செல்லாது என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் தேர்தல்ஆணையத்திடம் கொடுத்துள்ள புகார்தான் தமிழக அரசியலில் தற்போது அதிகம் விவாதிக்கப்படும் செய்தியாக மாறியுள்ளது.'அ.தி.மு.க-வில் ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து அடிப்படை உறுப்பினராக இருப்பவரை மட்டுமே கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்ந்தெடுக்க முடியும்' என்ற கட்சியின் விதிகளை ஓ.பி.எஸ். அணி தங்களின் புகார் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளது. இந்தப் புகாருக்கு பதில் அளிக்குமாறு சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் ஏற்கெனவே நோட்டீஸ் அனுப்பியது. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சசிகலா, அந்த நோட்டீசை பெற்றுக்கொண்டார். எனினும் அந்த நோட்டீசுக்கு சசிகலா முதலில் பதில் அளிக்காமல், அவரால் துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட டி.டி.வி தினகரன் பதில் அளித்தார். அதில், "சசிகலாவை கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள்தான் பொதுச்செயலாளராக தேர்வு செய்துள்ளனர். அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதில் எந்தவித சட்டமீறலும் இல்லை. எனவே, சசிகலா தேர்வு செய்யப்பட்டது செல்லும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

ஓ.பி.எஸ் அணிக்குச் செல்லுமா இரட்டைஇலை?

தினகரன் அனுப்பியிருந்த பதிலைத் தேர்தல் கமி‌ஷன் ஏற்கவில்லை. அ.தி.மு.க நிர்வாகிகளாக ஏற்கெனவே இருப்பவர்கள் பதில் அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்ததுடன், தினகரனின் பதிலை நிராகரித்து விட்டது. இதனால், சுதாரித்துக் கொண்ட சசிகலா தரப்பு, உடனடியாக 70 பக்கத்துக்கு பதில் மனு தயார் செய்து, சிறையில் உள்ள சசிகலா கையெழுத்திட்டு தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைத்தது. சசிகலாவின் பதில் கடிதத்தில் என்ன சொல்லியிருந்தார் என்ற தகவல் தற்போது கசியத் தொடங்கியுள்ளது."வி..கே. சசிகலாவாகிய நான், அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக சரியான வழிகாட்டுதல்படியே தேர்வு செய்யப்பட்டுள்ளேன்.  கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள்தான் என்னைத் தேர்வு செய்தனர். 'என்னை பொதுச் செயலாளராக நியமித்தது செல்லாது' என்று புகார் கொடுத்தவர்கள்தான், கடந்த டிசம்பர் 29-ம் தேதி என்னை பொதுச்செயலாளராக தேர்வு செய்வதற்கு முன்மொழிந்தனர். தமிழகத்தில் அ.தி.மு.க. பெரிய கட்சி என்பதோடு, இந்திய அளவில் பலமான மூன்றாவது பெரிய கட்சியாகவும் இருக்கிறது. கட்சியை விட்டு வெளியேறியவர்களும், வெளியேற்றப்பட்டவர்களும் கட்சியை உடைக்கும் வேலையில் இறங்கியுள்ளனர். அவர்கள்தான் இந்தப் புகாரை அளித்துள்ளனர் என்பதை தேர்தல் ஆணையம் கவனத்தில் கொள்ள வேண்டும்" என்று சசிகலா தனது பதிலில் தெரிவித்துள்ளார். 

                                பன்னீர்செல்வம் - சசிகலா                                     

சசிகலா தரப்பு தெரிவித்துள்ள பதிலும், அ.தி.மு.க.-வின் விதிகளும் ஒன்றோடு ஒன்று பொருந்துகிறதா என்றால், அதுவும் இல்லை என்றுதான் சொல்கிறார்கள் மூத்த நிர்வாகிகள். "அ.தி.மு.க-வில் அடிப்படை உறுப்பினராக தொடர்ந்து ஐந்தாண்டுகள்  இருந்துள்ள ஒருவர்தான், கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கு  போட்டியிட முடியும். அவரைத் தேர்வு செய்வது என்பது அடுத்தக்கட்ட நிலை" என்கிறது கட்சி விதி. கடந்த 2011-ம் ஆண்டு டிசம்பர் 19-ம் தேதி, சசிகலாவை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கி, அப்போது பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா நடவடிக்கை எடுத்தார். சசிகலாவுடன் அவரது கணவர் நடராஜன், வளர்ப்பு மகன் சுதாகரன், சசிகலாவின்  உறவினர்கள் வி.என். திவாகரன், டி.டி.வி. தினகரன், பாஸ்கரன், டாக்டர் வெங்கடேஷ், ராவணன், அடையார் மோகன், குலோத்துங்கன், ராமச்சந்திரன், ராஜராஜன் உள்ளிட்ட ஏராளமானோரை ஜெயலலிதா அப்போது கட்சியை விட்டு நீக்கினார் ஜெயலலிதா. தன்னுடைய காலகட்டத்தில், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து இப்படிப் பலரை நீக்கியிருக்கிறார். 'செய்த தவறுக்கு வருந்தி மன்னிப்புக் கடிதம் கொடுத்ததால் மீண்டும் சிலரை, மன்னித்து தாயுள்ளத்தோடு கட்சியில் சேர்த்துக் கொண்டதாக' பின்னர் அறிவிப்பும் செய்திருக்கிறார். நீக்கப்பட்டவர்கள் மற்றும் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டவர்கள் போன்றோர் விபரம் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான டாக்டர் நமது எம்.ஜி.ஆர் பத்திரிகையில் பிரசுரிக்கப்படுவது வழக்கம்.

2011-ம் ஆண்டு டிசம்பர் 19-ம் தேதி சசிகலாவை நீக்கி எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்வதாக, 2012 மார்ச் 31-ம் தேதி அன்று நமது எம்.ஜி.ஆர். பத்திரிகையின் மூலம் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி பார்த்தால், வரும் 31-ம் தேதி வந்தால்தான் சசிகலா கட்சியில் மீண்டும் சேர்க்கப்பட்டு ஐந்தாண்டுகள் நிறைவடையும். 'சசிகலாவோடு சேர்த்து நீக்கப்பட்டவர்கள் மீதான நடவடிக்கை அப்படியே தொடர்கிறது, சசிகலாவை மட்டும்தான் கட்சியில் மீண்டும் சேர்த்துள்ளேன்' என்று ஜெயலலிதா அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். அதன்படி பார்த்தால், தற்போது கட்சியின் அடிப்படை உறுப்பினராகக்கூட டி.டி.வி. தினகரன் இல்லை. இப்படிப்பட்ட குழப்பமான நிலையில்தான் சசிகலா பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதை எதிர்த்து தேர்தல் ஆணையத்திடம் ஓ.பி.எஸ் அணி புகார் அளித்துள்ளது. அந்தப் புகாருக்கு டி.டி.வி. தினகரன் பதில் கொடுத்ததே தேர்தல் கமிஷனிடம் 'ட்ரையல்' பார்த்தது போன்றதுதான். தினகரன் அனுப்பிய பதிலை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டிருந்தாலோ, பெற்றுக்கொண்டு மௌனமாக இருந்திருந்தாலோ சசிகலா நியமனம் செல்லும் என்பதை உறுதி செய்து கொண்டிருக்கலாம். ஆனால், "நாங்கள் சசிகலா பதிலைத்தான் கேட்டோம்" என்று தேர்தல் கமிஷன் அனுப்பிய பதில், டி.டி.வி. தினகரன் அனுப்பிய பதிலைவிட வேகமாக இருந்தது. தினகரனின் பதில் நிராகரிக்கப்பட்ட மறுநிமிடமே சசிகலா தரப்பினரின் சுதி குறையத் தொடங்கி விட்டது என்றுதான் சொல்லவேண்டும்.

அ.தி.மு.க. உள்கட்சி விதிகளின்படி, பொதுச்செயலாளரை தேர்வு செய்யவோ, நீக்கவோ அவைத் தலைவருக்கு மட்டும்தான் அதிகாரம் இருக்கிறது. அவைத் தலைவர் நினைத்தால், பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்தே இல்லாமல், ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி பொதுச்செயலாளரை நீக்கி விடலாம். அப்படி ஒரு நீக்கம் எந்தக் காலத்திலும் நடந்து விடக் கூடாது என்பதற்காகத்தான் மிகவும் நம்பிக்கையானவர்களையே அவைத்தலைவர் பொறுப்பில் வைத்திருந்தார் ஜெயலலிதா. பொதுச்செயலாளராக தேர்வுசெய்யப்படுவோர், அந்தப் பதவிக்கு வந்ததும், அவர் நினைத்தால், அவைத்தலைவரை மாற்றும் அதிகாரம் உண்டு. அதற்கு யார் கையெழுத்தும் தேவையில்லை. நாவலர் நெடுஞ்செழியன், புலவர் புலமைப்பித்தன் ஆகியோரைத் தொடர்ந்து மதுசூதனன்  அ.தி.மு.க.வின் அவைத்தலைவர் பொறுப்பை தற்போது வகித்து வருகிறார். மதுசூதனனையும் அவைத்தலைவர் பொறுப்பில் இருந்து பொதுச்செயலாளராக பதவியில் இருப்போர் நீக்கலாம், ஆனால் நீக்குகிறவர் முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுச்செயலாளராக இருக்க வேண்டும். தமது நியமனத்தை நியாயப்படுத்தி சசிகலா தரப்பில் அனுப்பப்பட்டிருக்கும் கடிதத்துக்கு தேர்தல் கமிஷனில் இருந்து இன்னும் பதில் வரவில்லை. பதில் வர தாமதமாகிற காரணத்தாலேயே சசிகலா தரப்பு இதில் வெற்றி பெற்று விட்டதாகவோ, ஓ.பி.எஸ். தரப்பு தோற்று விட்டதாகவோ கருதமுடியாது. தேர்தல் ஆணையம், இதற்கான பதிலை எப்போது வேண்டுமானாலும் தரலாம். ஆனால், தமிழகத்தில் ஆர்.கே. நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் கமிஷன் பதிலை அதிக நாளைக்கு தள்ளிப்போட முடியாது... சசிகலா மீது புகார் கொடுத்த ஓ.பி.எஸ்.  தரப்பிடம் இப்போது கட்சியின் சின்னமும், கட்சியும் இல்லை, புகாரில் சிக்கியிருக்கும் சசிகலா தரப்பில்தான் சின்னமும், கட்சியும் இருக்கிறது. கட்சியின் அவைத்தலைவர், பொருளாளர் மற்றும் நிர்வாகிகள் கூடி கட்சிக்கு புதிய நியமனப் பொதுச்செயலாளரை தேர்வு செய்ய முடியும். அதேவேளையில், கட்சியின் பொதுச்செயலாளரை பொதுக்குழு உறுப்பினர்கள் கூடி, வாக்களித்துதான் தேர்வு செய்ய முடியும். அந்த வாக்களிப்பில் முறைகேடு நடந்துள்ளது என்று பொதுக்குழுவில் வாக்களிக்கும் தகுதியுள்ள ஒருவர், தேர்தல் கமிஷனில் புகார் அளித்தால் அந்த தேர்தல் செல்லாது என்று தேர்தல் கமிஷனால் அறிவிக்க முடியும்.


                                      பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி                     

ஏற்கெனவே, பொதுக்குழு உறுப்பினர்களை மிரட்டியும், கடத்தியும்தான் கையெழுத்து வாங்கி பொதுக்குழுவைக் கூட்டினார்கள் என்று சசிகலா தரப்பினர் மீது பல புகார்கள் தேர்தல் கமிஷனின் பார்வைக்குப் போயிருப்பதால், சசிகலா தரப்புக்கு நூறு சதவீத சிக்கல் உள்ளது. இந்த உள்கட்சி விவகாரம் தெரிந்த காரணத்தாலோ, என்னவோ மதுசூதனன் தரப்பினர் ஆர்.கே.நகரில் தேர்தல் பணிகளை இப்போதே முடுக்கி விட்டுள்ளனர். மிகவும் இக்கட்டான இந்த காலகட்டத்தில் ஓ.பி.எஸ். அணிக்கு, மேலும் சில எம்.எல்.ஏ.க்கள் திரும்ப ஆரம்பித்திருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஆக, இரட்டை இலை சின்னம்  எந்த அணிக்கு கிடைக்கிறதோ அந்த அணிக்கு சின்னத்தோடு சேர்த்து கட்சியும் வந்து விடும்... ஆளும்கட்சியான அ.தி.மு.க.வுக்கு இப்போதுள்ள  சட்ட சிக்கலை மொத்தமாகக் களைய மாதக்கணக்கில் ஆகலாம், ஆனால் அதற்கு இப்போது போதுமான அவகாசம் இல்லை. ஏப்ரல் 12-ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், இந்த இடைத்தேர்தலில் இரட்டை  இலை யாருக்கு என்று சொல்ல வேண்டிய கட்டாயம் தேர்தல் கமிஷனுக்கு ஏற்பட்டிருக்கிறது. "தேர்தலில் போட்டியிட சின்னம் கண்டிப்பாகத் தேவை. சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னத்தை தேர்தல் கமிஷனே ஒதுக்கி விடுவதால் அவர்களுக்கு அந்தக் கவலை இல்லை... கோடானகோடி தொண்டர்களை கையில் வைத்திருக்கும் ஒரு கட்சிக்கு, அதன் சின்னம்தான், தொண்டர்களின் வாக்குகளை உறுதி செய்கிறது. சின்னம் யாருக்கு என்பதை முடிவு செய்ய, நடைமுறையில் இருக்கும் ஒரு கட்சியின் விதிமுறைகளே தேர்தல் கமிஷனால் பெரும்பாலும் பின்பற்றப்படும்" என்கிறார்கள் கட்சியின் மூத்த நிர்வாகிகள். அப்படி கட்சி விதிமுறைகள் பின்பற்றப்பட்டால், அது  சசிகலா தரப்புக்கு சாதகமான நிலையில் இல்லை என்பதே நடைமுறையில் உள்ள நிஜம்!

http://www.vikatan.com/news/tamilnadu/83624-o-panneerselvam-faction-may-get-aiadmk-party-symbol.html

Categories: Tamilnadu-news

‘அம்மா இடத்தில் நீங்கதாண்ணே...!’ - தினகரனை மிரள வைக்கும் அமைச்சர்கள்

Tue, 14/03/2017 - 08:56
‘அம்மா இடத்தில் நீங்கதாண்ணே...!’ - தினகரனை மிரள வைக்கும் அமைச்சர்கள்

சசிகலா-தினகரன்

'ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் யார்?' என்பதை நாளை அறிவிக்க இருக்கிறது அ.தி.மு.கவின் ஆட்சி மன்றக் குழு.' தென் மண்டலத்தில் போட்டியிடுவதைக் காட்டிலும், ஆர்.கே.நகரில் போட்டியிட்டு வென்றால், அம்மா இடத்தில் நீங்கள் அமரலாம்' என டி.டி.வி.தினகரனுக்கு ஆலோசனை அளித்து வருகின்றனர் அ.தி.மு.க அமைச்சர்கள். 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தலை அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம். தி.மு.க வேட்பாளரை இன்று மாலை அறிவிக்க இருக்கிறது தி.மு.க. ' ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்டு 59 ஆயிரம் வாக்குகளை வாங்கிய சிம்லாவுக்கே சீட் கொடுக்கப்படலாம் அல்லது கிரிராஜன் வேட்பாளராக அறிவிக்கப்படலாம்' என்ற பேச்சும் அறிவாலயத்தில் வலம் வருகிறது. தே.மு.தி.க வேட்பாளராக வடசென்னை மா.செ. மதிவாணன் களமிறக்கப்பட்டுள்ளார். மக்கள் நலக் கூட்டணியின் முடிவு இன்னமும் தெளிவுபடுத்தப்படவில்லை.

இந்நிலையில், அ.தி.மு.க சார்பில் டி.டி.வி.தினகரன் போட்டியிட விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. "அ.தி.மு.கவின் ஆர்.கே.நகர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்க, செங்கோட்டையன் உள்ளிட்டவர்கள் அடங்கிய ஆட்சி மன்றக் குழுவை அமைத்தார் துணைப் பொதுச் செயலாளர் தினகரன். வேட்பாளர் யார் என்பதை ஆட்சிமன்றக் குழு அறிவிக்கும்” எனப் பேட்டியளித்தவர், மறுநாளே, 'சசிகலா ஆணையிட்டால் நான் போட்டியிடத் தயார்' எனக் கூறினார். அப்படியானால், 'வேறு யாரும் விருப்ப மனு கொடுப்பதை, முன்கூட்டியே தடுப்பதற்காக இப்படிச் சொன்னாரா?' என நிர்வாகிகள் மத்தியில் விவாதம் எழுந்தது. ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு கட்சியின் நிலைமை எப்படி உள்ளது என்பதை அடிமட்டத் தொண்டர்கள் உணர்ந்து வைத்திருக்கிறார்கள். இவர்களில் பெரும்பகுதியினர் ஓ.பன்னீர்செல்வம் பக்கமே சாய்ந்துள்ளனர். கணிசமான அளவுக்கு தீபா ஆதரவு மனநிலையிலும் உள்ளனர். பொதுமக்கள் மத்தியிலும் சசிகலா குடும்பத்திற்கு எதிரான மனநிலையே உள்ளது. இந்நிலையில் தினகரன் போட்டியிட்டால், சசிகலா குடும்பத்தைப் பழிவாங்கக் கிடைத்த வாய்ப்பாகவே மக்கள் பார்ப்பார்கள். 

'இப்படியொரு நெருக்கடியான காலகட்டத்தில் போட்டியிடுவது சரிதானா?' என்பது குறித்தெல்லாம் தினகரன் யோசிக்கவில்லை. அதேநேரம், சசிகலாவின் பொதுச் செயலாளர் பதவி நியமனத்திற்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளிக்கவில்லை. ஓ.பன்னீர்செல்வம் அணியினர் சார்பில் இன்று தேர்தல் ஆணையத்தில் விளக்கக் கடிதம் கொடுக்க இருக்கின்றனர். அந்தக் கடிதத்தில், 'ஐந்தாண்டுகள் தொடர்ச்சியாக உறுப்பினராக இல்லாதவர்கள், கட்சிப் பதவிக்குப் போட்டியிட முடியாது. அந்தவகையில் சசிகலா நியமனம் செல்லாது' என சட்டவிதிகளைக் குறிப்பிட்டிருக்கிறார் மைத்ரேயன் எம்.பி. இந்தப் புகாரின் அடிப்படையில், 'ஆர்.கே.நகர் தொகுதி அ.தி.மு.க வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்குமா?' என்ற கவலையும் நிர்வாகிகள் மத்தியில் எழுந்துள்ளது. வேட்பாளராக டி.டி.வி.தினகரன் அறிவிக்கப்பட்ட பிறகு, இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டால், அவமானமாக மாறிப் போகும் என்பதையும் தினகரன் தரப்பினர் உணரவில்லை. 'அம்மா இடத்தில் நீங்கள்' என அவரைப் புகழ் மயக்கத்திலேயே வைத்திருக்கின்றனர்.

ஓ.பன்னீர்செல்வம்

அவரிடம் விவாதித்த அமைச்சர் ஒருவர், 'அம்மாவுக்குப் பிறகு நீங்கள்தான் என்பதை நிரூபிப்பதற்கு ஏற்ற வகையில் ஆர்.கே.நகர் தொகுதி அமைந்துள்ளது. இங்கு வென்றால் ஜெயலலிதாவுக்குப் பிறகு, மக்கள் உங்களைத்தான் பார்ப்பார்கள். தென் மாவட்டத்தில் வேறு ஒருவரை ராஜினாமா செய்ய வைத்துவிட்டு போட்டியிட்டு வெற்றி பெறுவதைவிடவும், ஜெயலலிதா தொகுதியில் போட்டியிட்டு வெல்வது, கூடுதல் பிளஸ்ஸாக இருக்கும். அமைச்சர்களையும் ஆட்களையும் களமிறக்கி எளிதாகவே நாம் வெற்றி பெற்றுவிடலாம். மற்றவர்களைவிட நீங்கள் நிற்பதுதான் சரியாக இருக்கும். ஜெயலலிதா இடத்தைப் பிடிக்க, இதைவிட வேறு ஒரு வரலாற்று வாய்ப்பு கிடைக்காது' எனப் பேசியிருக்கிறார். மிகுந்த மலர்ச்சியோடு அவரது ஆலோசனையை ஏற்றுக் கொண்டார் டி.டி.வி.தினகரன். தொகுதியின் சாதக, பாதகங்களைப் பற்றியெல்லாம் வடசென்னை நிர்வாகிகள் அவரிடம் வகுப்பெடுத்து வருகின்றனர். ஆட்சி மன்றக் குழுவின் பரிந்துரையில் டி.டி.வி.தினகரன் இடம் பிடிப்பாரா என்பது நாளை தெரிந்துவிடும்" என்றார் ஆதங்கத்துடன். 

"ஆர்.கே.நகரில் வெற்றி பெற்றுவிட்டால், தினகரனின் அடுத்த கனவு கோட்டையை நோக்கியே இருக்கும். அவர் வெற்றி பெற்றுவிட்டால், 'எடப்பாடி பழனிசாமியின் முதலமைச்சர் பதவி எத்தனை நாட்களுக்குத் தாங்கும்?' என்ற கேள்வியும் கொங்கு மண்டல அமைச்சர்கள் மத்தியில் விவாதமாக மாறியுள்ளது. ஆர்.கே.நகரில் கோகுல இந்திரா உள்ளிட்ட சீனியர்களை களமிறக்குவது குறித்தும் நிர்வாகிகள் ஆலோசித்து வருகின்றனர். தொகுதிக்குள் பரவிக் கிடக்கும் மீனவ, தலித் மக்களின் வாக்குகளைக் கவர என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விரிவான ஆலோசனை நடந்து வருகிறது. 'இடைத்தேர்தல் என்று வந்துவிட்டால், ஆளும்கட்சியே வெல்லும்' என்ற கணக்கைத் தக்க வைக்க முடியுமா என்ற கவலையும் அமைச்சர்கள் முகத்தில் எழுந்துள்ளது. ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகான தேர்தல் என்பதால், வெற்றியை அடைந்தே தீருவது என்ற உறுதியில் இருக்கிறார் தினகரன். திருமங்கலம் ஃபார்முலாவை மிஞ்சும் வகையில் தொகுதி மக்களைக் குளிர்விக்கும் திட்டங்களை அவரிடம் எடுத்துக் கூறி வருகின்றனர் வடசென்னை நிர்வாகிகள்" என்கிறார் அ.தி.மு.க நிர்வாகி ஒருவர். 

'இரட்டை இலை சின்னம் கிடைக்குமா? ஓ.பி.எஸ் அணி முடக்குமா?' என்ற விவாதம் தீவிரமாக நடந்து கொண்டிருக்க, 'முதல்வர் கனவு தூக்கத்தில் இருந்து இன்னமும் டி.டி.வி.தினகரன் விழிக்கவில்லை' என்கின்றனர் அ.தி.மு.க சீனியர்கள். 'வேட்பாளர் யார் என்பதைப் பொறுத்தே, அடுத்தகட்டத்தை யோசிக்க முடியும்' என்பதில் உறுதியாக இருக்கின்றனர் ஆர்.கே.நகர் அ.தி.மு.க தொண்டர்கள். 

http://www.vikatan.com/news/tamilnadu/83579-admk-ministers-equate-jayalalithaa-and-dinakaran.html

Categories: Tamilnadu-news

“தினகரனா... யார் சார் அது...?” - ஆர்.கே.நகர் வல ஆச்சரியம்! #VikatanExclusive

Tue, 14/03/2017 - 05:37
“தினகரனா... யார் சார் அது...?” - ஆர்.கே.நகர் வல ஆச்சரியம்! #VikatanExclusive

ஆர் கே நகர்

ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு ஏற்பட்ட ஆட்சி அதிகாரப் போட்டியின் காரணமாக சசிகலா அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி என அ.தி.மு.க இரண்டாகப் பிரிந்தது. இதனைத்தொடர்ந்து முதலமைச்சர் பதவிக்கு பெரும்பான்மையை நிரூபிக்க தமிழக அரசியலுக்குள் நடைபெற்ற  காய்நகர்த்தல்கள் இந்தியாவையே உற்றுப் பார்க்கவைத்தது. சொத்துக்குவிப்பு வழக்கில், சசிகலா சிறைசென்றுவிட, அவர் முன் மொழிந்த எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகப் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சி அமைத்துள்ளார். கட்சிப் பொறுப்பிலோ, டி.டி.வி தினகரனை அ.தி.மு.க-வின் துணைப்பொதுச் செயலாளராக நியமித்துவிட்டுச் சென்றுள்ளார் சசிகலா. ஜெயலலிதா மறைவையடுத்து, ஆர்.கே.நகர் தொகுதி தற்போது காலியாக உள்ளது.

ஜோதிஇதனால் அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பை இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் வருகிற 16-ம் தேதி தொடங்குகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதா, தன்னை எதிர்த்து தி.மு.க சார்பில் நிறுத்தப்பட்ட சிம்லா முத்துச் சோழனை 39 ஆயிரத்து 545 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, பல்வேறு அரசியல் மாற்றங்களுக்கு இடையே ஆர்.கே.நகர் தொகுதி இந்த இடைத் தேர்தலை சந்திக்கப் போகிறது. இதுகுறித்து அந்தத் தொகுதி மக்கள் என்ன சொல்கிறார்கள்? அவர்களுடைய தற்போதைய மனநிலை என்ன என்பது குறித்து தொகுதி மக்களைச் சந்தித்துப் பேசினோம்.

ஜோதி, இல்லத்தரசி  

"அ.தி.மு.க-தான் இந்தத் தொகுதியில் இதுவரை வெற்றி பெற்று வந்தது. இனி யார் வருவார்கள் என்று எங்களுக்குத் தெரியாது. தீபா, சுஜாதாதினகரன் இவர்கள் எல்லாம் யார் என்றே எங்களுக்குத் தெரியவில்லை. ஜெயலலிதா இறந்த பிறகு இவர்கள் எல்லாம் உறவினர்கள், நண்பர்கள் என்று சொல்லிக்கொண்டு அரசியலில் குதித்துள்ளார்கள். ஏற்கெனவே பன்னீர் செல்வத்தை ஜெயலலிதா முன்னிறுத்திவிட்டுச் சென்றுள்ளார். எனவே அவருடைய தலைமை இருந்தால் நன்றாக இருக்கும் என்று கருதுகிறோம்."

சுஜாதா, இல்லத்தரசி

"அ.தி.மு.க-வில் பல குழப்பங்கள் இருக்கின்றன. இதில் வருகிற தேர்தலில் யாரைத் தேர்ந்தெடுப்பது என்றே தெரியவில்லை. ஏற்கெனவே ஜெயலலிதா முன்னிறுத்தி விட்டுச் சென்றவருடைய சார்பில் நிறுத்தப்படுகிற ஷமீம்வேட்பாளர்களை விரும்புகிறோம். அதாவது பன்னீர்செல்வம் அவர் நல்லது செய்வார் என்று நம்புகிறோம்." என்றார்.

ஷமீம், (தனியார் நிறுவன  ஊழியர்)

"மக்கள் நலத்திட்டம் தொடர்பாக எந்த அரசு அதிகாரியை அணுகினாலும் பொதுமக்களுக்கு மரியாதை தருவதில்லை. அரசு நிர்வாகம் முற்றிலும் முடங்கிப்போய் உள்ளது. ஜெயலலிதா இறந்தபிறகு, இந்தத் தொகுதியில்லட்சுமி எந்த நலத்திட்டங்களும் செயல்படுத்தப்படவே இல்லை. முதியோர் பென்ஷன் தொகை மற்றும் விதவை பென்ஷன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. ஜெயலலிதா இடத்தில் உட்கார்ந்துகொண்டால் மட்டும் போதுமா? பொதுமக்களின் நலனை பார்க்க வேண்டாமா?" என்று கொதித்தார்

லட்சுமி, (வியாபாரி)

''தேர்தல் வந்து என்ன எங்களுக்கு நல்லது நடக்கப் போகுது.? இந்த இடைத்தேர்தல் எங்களுக்குத் தேவையில்லை. அசோக்அம்மா இருந்தபோது இந்த தொகுதிக்கு சில நலத்திட்டங்களை செய்துவிட்டுச் சென்றுள்ளார். அவர் இல்லாதபோது இந்த தொகுதியில் இனி என்ன நடக்கப்  போகிறது.? சசிகலாவோ அல்லது அவர்களுடைய ஆதரவாளர்களோ வந்தால் ரவுடியிசம்தான் அதிகரிக்கும். அம்மா மறைவுக்குப் பிறகு பன்னீர்செல்வம், தீபா ஆகியோர் வந்துள்ளனர். அ.தி.மு.க-விலிருந்தே மற்றொருவரும் வந்துள்ளார். அவருடைய பெயர் எல்லாம் எனக்குத் தெரியாது." எனச் சொல்லிச் சிரிக்கிறார்.

அசோக்,  (தொழிலாளர்)

''அ.தி.மு.க என்ற கட்சியே சிதறு தேங்காய் போன்று மூன்றாக சிதறிக் கிடக்கிறது. அதனால், ஜெயலலிதா பிரபாகரன்இறந்தபோதே அ.தி.மு.க என்ற 'சாம்ராஜ்யம்' சரிந்துவிட்டது. புதிதாக வந்துள்ளவர்களை மக்கள் ஏற்கமட்டார்கள். தி.மு.க-வை  தற்போது பலமுள்ள கட்சியாக மக்கள் பார்க்கிறார்கள். இந்தத் தொகுதியில், தி.மு.க வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது." என்றார்.

பிரபாகரன், (தொகுதிவாசி)

ஜெயந்தி"இடைத்தேர்தலை மக்கள் மிகுந்த வெறுப்புணர்வோடு பார்க்கிறார்கள். அ.தி.மு.க-வில் பிளவு ஏற்பட்டு அந்தக் கட்சி அழிவை நோக்கிச் செல்கிறது. தி.மு.க-வில் கடந்தமுறை நிறுத்தப்பட்ட சிம்லா முத்துச் சோழனே இந்தமுறையும் நிறுத்தப்படலாம் என்று தகவல் வருகிறது. ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் பணத்தை அள்ளி இறைப்பார்கள். அதுதான் இந்தத் தேர்தலில் நடக்கப்போகிறது'' என்றார் ஆதங்கமாக.   

ஜெயந்தி, (மாணவி)

''நாங்கள் யாருக்குமே வாக்களிக்க விரும்பவில்லை. இரண்டு கட்சிகளுமே பிடிக்கவில்லை. யார் தலைமையாக இருக்கிறார்கள் போன்ற எந்த விவரமும் இல்லை. குழப்பமாக உள்ளது. எனவே இந்ததேர்தலை நாங்கள் விரும்பவில்லை." என்றார் விரக்தியாக

கோகிலா, (மாணவி)

''பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நிலையில், நமது சமூகம் சீரழிந்துள்ளது. குழந்தைகள், பெண்கள் வேட்டையாடப்படுகிறார்கள். கோகிலாபாதுகாப்பில்லாத சூழல் உள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்திருந்தால் இவ்வளவு குற்றங்கள் நடந்திருக்க வாய்ப்பில்லை. வரக்கூடியவர்கள் வருமானத்தைப் பெருக்கிக்கொள்ள வருகிறார்களே தவிர, இந்த சமூக நலன் கருதி ஆட்சிக்கு வரவில்லை என்பது தெளிவாகிறது. இந்தத் தேர்தலில் எங்களுடைய வாக்கை செலுத்த விரும்பவில்லை." என்றார் கோபமாக.

வழக்கமான அ.தி.மு.க - தி.மு.க மோதலாக இல்லாமல், ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தல் அ.தி.மு.க-வின் அடுத்த அதிகாரம் யார்? என்பதைத் தீர்மானிக்கும் தேர்தலாகப் பார்க்கப்படுகிறது. அந்தவகையில், தமிழ்நாடே உற்றுப்பார்க்கும் இந்தத் தேர்தலில், தொகுதி மக்கள் யாரைத் தேர்வு செய்யப்போகிறார்கள் என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.

http://www.vikatan.com/news/coverstory/83542-rk-nagar-byelection-is-nearing-parties-are-yet-to-decide-its-candidate-here-is-the-people-unaware-of-the-candidates.html

Categories: Tamilnadu-news

தமிழ்நாட்டு குழந்தைகள் தமிழை கட்டாயமாக படிக்க வேண்டும் - வைரமுத்து

Mon, 13/03/2017 - 20:48
தமிழ்நாட்டு குழந்தைகள் தமிழை கட்டாயமாக படிக்க வேண்டும் - வைரமுத்து
 

தமிழ்நாட்டில் படிக்கின்ற குழந்தைகள் தமிழை கட்டாயமாக படிக்க வேண்டும் என்ற ஒரு கருத்து வந்தாலொழிய இன்னோரு தலைமுறை தமிழுக்குள் போக முடியுமா என்பது தெரியாது என்று பிபிசி தமிழ் நேரலைக்கு அளித்த பேட்டியில் வைரமுத்து கருத்து தெரிவித்துள்ளார்.

தற்கால தமிழ் கல்வியின் தரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த வைரமுத்து, இனமும், மொழியும் வளர வேண்டும் என்றால் அந்த தாய் மொழியை பேசக்கூடிய மக்கள் மொழியை பேண வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், ''மனிதர் இல்லாவிட்டால் மொழி ஏது, இனம் இல்லாவிட்டால் மொழி ஏது, மொழிதான் இனத்திற்கு பெயர் வைக்கிறது. ஆனால் இனம் தான் மொழியை வளர்க்கிறது ஆக இது ஒன்றோடு ஒன்று பின்னி உடலும் உயிரும் போல உள்ளது.'' என்றார் வைரமுத்து.

http://www.bbc.com/tamil/india-39248570

 

 

Categories: Tamilnadu-news

ஆர்.கே.நகரில் போட்டியிட விரும்பும் ஜெ., மற்றும் எம்.ஜி.ஆர்., உறவினர்கள்

Mon, 13/03/2017 - 20:40
ஆர்.கே.நகரில் போட்டியிட விரும்பும்
ஜெ., மற்றும் எம்.ஜி.ஆர்., உறவினர்கள்
 
 
 

ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட ஜெ., அண்ணன் மகள் தீபாவும், எம்.ஜி.ஆர். உறவினர் சுதா விஜயனும் போட்டியிடுகின்றனர்.

 

Tamil_News_large_1729653_318_219.jpg

 

சேவல் சின்னம் கேட்கிறார் தீபாஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தீபா, சேவல் சின்னத்தை கேட்க முடிவு செய்துள்ளார். அது கிடைக்காவிட்டால், மீன், தராசு, உழைக்கும் கை ஆகிய சின்னங்களில், ஒரு சின்னத்தை பெறுவதற்கான ஆலோசனையை, தன் ஆதரவாளர்களுடன் நடத்தியுள்ளார்.
சென்னை, ஆர்.கே.நகர் தொகுதிக்கு, ஏப்., 12ல், இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும்,

ஜெ., அண்ணன் மகள் தீபா, போட்டியிடப் போவதாக அறிவித்தார்.
அ.தி.மு.க.,வில், இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் என்பது கேள்விக்குறியாகி உள்ளது. சசிகலா தரப்பினரும், பன்னீர் அணியினரும், இரட்டை இலை சின்னத்திற்காக,தேர்தல் கமிஷனில் மோதுகின்றனர்.
இந்நிலையில், தீபா சுயேச்சை சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளார். அதில், சேவல் சின்னத்தைப் பெற விரும்புகிறார். எம்.ஜி.ஆர்., மறைவுக்குப் பின், கட்சி உடைந்த நேரத்தில், ஜெ., அணிக்கு, சேவல் சின்னம் தான் தரப்பட்டது. அதனால், அந்த சின்னத்தை எதிர்பார்க்கிறார்.
அது கிடைக்காதபட்சத்தில், மீன், தராசு, உழைக்கும் கை ஆகியவற்றில் ஒன்றை கேட்க, தீபா முடிவு செய்துள்ளார் என, அவரது பேரவை நிர்வாகிகள் தெரிவித்தனர்.
 

எம்.ஜி.ஆர்.உறவினர்விருப்பம்


ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில், அ.தி.மு.க., சசிகலா அணி சார்பில் போட்டியிட, எம்.ஜி.ஆரின் உறவினர் சுதா விஜயன் விருப்பம் தெரிவித்துள்ளார். அ.தி.மு.க., வேட்பாளரைத் தேர்வு செய்ய, நாளை அ.தி.மு.க.,

 

ஆட்சிமன்றக்குழு கூட்டம், சென்னையில் கூடுகிறது. துணைப் பொதுச் செயலர் தினகரன், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா ஆகியோரில் ஒருவரே போட்டியிடுவார் என, கூறப்படுகிறது.
இந்நிலையில், எம்.ஜி.ஆரின் உறவினர் சுதா போட்டியிட விரும்பும் தகவலை, தினகரனிடம் தெரிவித்துள்ளார். 2016 பொதுத்தேர்தலில், ஆலந்துார் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, சுதா விஜயன் விருப்ப மனு அளித்தார். எம்.ஏ., - எம்.எட்., பட்டம் பெற்றுள்ள சுதா, 51, அ.தி.மு.க.,வில், 1990 முதல் உறுப்பினராக உள்ளார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1729653

Categories: Tamilnadu-news

'நெட்டிசன்'களிடம் வறுபடும் பள்ளிக்கல்வி அமைச்சர்

Mon, 13/03/2017 - 20:16
'நெட்டிசன்'களிடம் வறுபடும் பள்ளிக்கல்வி அமைச்சர்
 
 
 

கோவை: 'டிவி' கேமராமேன்களுடன், மாணவியர் பொதுத் தேர்வு எழுதும் அரங்குக்குள் சென்ற, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனை, 'நெட்டிசன்'கள் வறுத்தெடுக்கின்றனர்.
 

 

Tamil_News_large_1729560_318_219.jpg

தமிழகம் முழுக்க, மார்ச் 2ல், பிளஸ் 2 பொதுத் தேர்வு துவங்கியது. சென்னை, எழும்பூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், தமிழ் முதல் தாள் தேர்வு பணிகளை ஆய்வு செய்ய, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், அப்போதைய செயலர் சபிதா ஆகிய இருவரும்

சென்றனர்.
 

கடும் விமர்சனங்கள்கூடவே, அனைத்து, 'டிவி' கேமராமேன்களும் அழைத்துச்செல்லப்பட்டனர். தேர்வு அறைக்குள் அமைச்சர், அரசு செயலருடன், கேமராமேன்கள் புகுந்து படம் எடுப்பது, தேர்வெழுதும் மாணவியரை இருக்கையில் இருந்து எழுப்பி விடுவது போன்ற காட்சிகள், பெற்றோர்
 

அமைச்சர் காட்டிய அக்கறை


மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பொதுத் தேர்வு எழுதும் மாணவர் மனநிலையை புரிந்துகொள்ளாமல், விளம்பரம் தேடும் நோக்கில், அமைச்சர் செயல்பட்டதாக, கடும் விமர்சனங்கள் இணையத்தில், 'நெட்டிசன்'களால் பதிவு செய்யப்பட்டு

 

வருகின்றன. 'வாட்ஸ் ஆப்'பில், பெயர் வெளியிட விரும்பாத ஒருவரின் குரல் பதிவில், 'முதல் நாள் தேர்வு எழுதும் மாணவியரின் மனநிலையை புரிந்து கொள்ளாமல், அவர்களை இருக்கையில் இருந்து எழுப்பிவிடும் செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.'மீடியாவுக்கு, 'போஸ்' கொடுக்க, அமைச்சர் காட்டிய அக்கறையால், கிட்டத்தட்ட, 20 நிமிடங்களாவது, குறிப்பிட்ட தேர்வறையில் இருந்த மாணவியர் அவதிப்பட்டிருப்பர்' என, குறிப்பிடப்பட்டு உள்ளது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1729560

Categories: Tamilnadu-news

ஆர்.கே.நகரில் போட்டி: பன்னீர் அணியில் இணைத்த திலகவதி பேட்டி

Mon, 13/03/2017 - 20:15

 

 

 
Tamil_News_large_1729864_318_219.jpg
 
ஆர்.கே.நகரில் போட்டி: பன்னீர் அணியில் இணைத்த திலகவதி பேட்டி

 

முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மரணத்தில் ஆயிரம் சந்தேகங்கள் உள்ளன. அந்த சந்தேகங்களுக்கெல்லாம் அரசுத் தரப்பில் உரிய விளக்கம் அளிக்கவில்லை. ஒரு பொறுப்பான பிரஜையாக, அந்த சந்தேகங்களுக்கு விடை தேட வேண்டும் என, உள்ளத்தில் குமைந்து கொண்டிருந்த எண்ணங்களுக்கு, விடையளிக்கும் விதமாக, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் செயல்பாடுகள் இருந்ததால், அவருக்கு எனது தார்மீக ஆதரவைத் தெரிவித்து, அவர் பின்னால் நின்று அரசியல் செய்ய ஆசைப்பட்டு, அவர் தலைமையை ஏற்று செயல்பட முடிவெடுத்தேன் என்று, ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி திலகவதி கூறினார்.
 

 

 

சிறப்புப் பேட்டி


தமிழக காவல்துறையில் 35 ஆண்டுகள் பல்வேறு நிலைகளில் அதிகாரியாகப் பணியாற்றி இருக்கிறேன். ஒவ்வொரு நிமிடமும், மக்களுக்கு நம்மால் ஆன உதவிகளை செய்ய வேண்டும் என்று நிறைய ஆசைப்படுவேன். தண்ணீர் பிரச்னை, பள்ளிக்கூடப் பிரச்னை, கால்வாய் பிரச்னை, சாக்கடைப் பிரச்னை என்று, மக்கள் அன்றாடம் சந்திக்கும் ஆயிரம் ஆயிரம் பிரச்னைகள் என் கவனத்துக்கும் வரும். ஒரு அதிகாரியாக, கையில் இருக்கும் அதிகாரத்தை வைத்துக் கொண்டு, அந்த பிரச்னைகளையெல்லாம், என்னால் முடிந்த மட்டும் செய்து கொடுத்து வந்தேன்.

இப்படி சமூகப் பிரச்னைகள் மீது ஆர்வத்துடன் செயல்பட்ட எனக்கு, ஓய்வு பெற்றதும், அவைகளையெல்லாம் செய்ய முடியாத ஒரு சூழல் ஏற்பட்டது. அதற்கான வடிகாலாக அரசியல் மூலம் அதிகாரமே இருக்க முடியும் என நினைத்தேன். அரசியல் செய்ய வேண்டும் என்றால், எந்த கட்சியில் சேருவது என்ற குழப்பம் ஏற்பட்டது. பல கட்சிகள் பற்றியும் ஆராய்ந்தேன். எல்லா கட்சிகளிலும், சாதகத்தை விட, பாதகமே கூடுதலாக இருப்பதாக மனதில் பட்டது. இந்த சூழலில்தான், தமிழகத்தின் தன்னிகரற்ற ஆளுமை கொண்ட தலைவராக இருந்த, ஜெயலலிதாவின் மரணமும், அதனால் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களும் என்னை நிலைகுலைய வைத்தன.
 

 

 

பாராட்டு


இருந்த போதும், அந்த சமயத்தில் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட பன்னீர்செல்வத்தின் அமைதியான, அடக்கமான செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டேன். தமிழகத்தின் கலாச்சாரச் சின்னமாக, வீரவிளையாட்டாக விளங்கும் ஜல்லிக்கட்டுக்கு இருக்கும் தடையை நீக்க வேண்டும் என்று, ஆயிரக்கணக்கான இளைஞர்கள், தன்னெழுச்சியாக மெரினாவில் கூடி, தங்கள் உணர்வுகளைத் தெரியப்படுத்தினர். அவர்கள் போராட்டம் நியாயமானது. ஆனால், அவர்களின் தொடர்ச்சியான போராட்டம் எங்கு போய் முடியும்? மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுமே என்று, சமூகத்தின் மீது அக்கறையுள்ள ஒரு மனுஷியாக கவலை கொண்டேன். அந்த சமயத்தில், முதல்வராக இருந்த பன்னீர்செல்வத்தின் செயல்பாடுகளை, உலகமே வியந்து பாராட்டியது.
 

 

 

செயல்பாடு


பிரதமருக்கு வெறும் கடிதம் மட்டும் எழுதி அனுப்பி விட்டு, வழக்கமான ஒரு முதல்வராக இல்லாமல், டில்லிக்குச் சென்று, பிரதமர் மோடியை சந்தித்து வலியுறுத்தியது மட்டுமல்லாமல், ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு தேவையான எல்லாம் ஏற்பாடுகளையும் அங்கிருந்தபடியே செய்தார். ஒரே நாளில், ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு தேவைப்படும், மூன்று துறை ஒப்புதல்களையும் பெற்றார். இதற்காக, மூன்று துறை மத்திய அமைச்சர்களையும் அடுத்தடுத்து சந்தித்துப் பேசி, ஒப்புதல் பெற்று, இரண்டே நாளில், ஜல்லிக்கட்டுக்கு எதிரான தடையை நீக்கும் அவசர சட்டம் ஒன்றை கொண்டு வந்தார். அதை, பின், நிரந்தர சட்டமாகவும் ஆக்கி விட்டார்.

இப்படி அவர் செயல்பட்டவிதம், அற்புதம்; அருமை. அதேபோல, தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் என்றதும், தெலுங்கு கங்கை திட்டத்தின் கீழ், கிருஷ்ணா நதி நீரை பெறுவதற்காக, ஆந்திரா சென்று, முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்துப் பேசி, தமிழகத்துக்கு தேவையான தண்ணீரை பெற்றார் முதல்வராக இருந்த பன்னீர்செல்வம். இந்த விஷயத்துக்கும் அவர் கடிதம் எழுதி விட்டு, அமைதியாக இருந்திருக்கலாம். ஆனால், அதை செய்யாமல், நேரில் சென்று பேசியதன் விளைவு - கிருஷ்ணா நதி நீர் வந்து சேர்ந்தது. ஆனால், இத்தனையையும் செய்து விட்டு, அமைதியே திரு உருவமாக இருந்தார். தமிழகத்தை வார்தா புயல் வாட்ட்டி எடுத்ததும், பாதிக்கப்பட்ட இடங்களுக்கெல்லாம் நேரடியாக சென்று, அதிகாரிகளை முடுக்கிவிட்டு, மக்களை புயல் பாதிப்பில் இருந்து வேகமாக மீட்டெடுத்தவர் பன்னீர்செல்வம். அதிலும், தனது செயல்பாடுகளை அவர் பிரபலப்படுத்திக் கொள்ளவில்லை. இப்படி தொடர்ச்சியான அவருடைய அரசுச் செயல்பாடுகள் அனைத்தும், மெச்சக்கூடிய அளவிலேயே இருந்தது.
 

 

 

குமுறல்


இப்படியெல்லாம் சிறப்பான முதல்வராக செயல்பட்டு வந்த பன்னீர்செல்வத்தை, சசிகலா, திட்டமிட்டு, பதவியில் இருந்து கீழிறக்கி, அதில் தான் அமர வேண்டும் என நினத்ததே, ஆணவத்தின் உச்சம். அதுவும் அவரை சங்கடப்படுத்தி, அதையெல்லாம் சாதித்துள்ளனர். அதையெல்லாம் விளக்கமாக அறிந்ததும், நெஞ்சுகுமுறியது. தமிழகத்தில், ஒரு முதல்வராக இருப்பவருக்கே இதுதான் நிலையா என, குமுறினேன். மனது ரொம்பவே சங்கடத்தில் ஆழ்ந்தது.

இதற்கிடையில், ஜெயலலிதாவுக்கு போயஸ் தோட்டத்தில் இருந்த போது, அவருடைய நீரிழிவு, ரத்தக் கொதிப்பு, கிட்னி பாதிப்பு, நுரையீரல் பாதிப்பு, தைராய்டு பாதிப்பு, உடல் பருமன் பாதிப்பு என எல்லாவற்றுக்கும் என்னவிதமான சிகிச்சை அளிக்கப்பட்டது என்ற கேள்விகளும், அது தொடர்பாக கிடைக்கும் தகவல்களும், அவரது மரணத்தில் எழுந்திருக்கும் ஆயிரம் ஆயிரம் சந்தேகங்களையும் உறுதிப்படுத்தின. தமிழக மக்கள் அனைவருக்கும், ஜெயலலிதா மரணத்தில் எழும் சந்தேகங்களுக்கு யாரிடம் இருந்தும் விளக்கம் இல்லாமல் தத்தளித்து வருகின்றனர்.

மரணத்தின் பின்னணியில் எழுந்துள்ள ஆயிரம் ஆயிரம் சந்தேகங்களுக்கும் பதில் சொல்ல வேண்டிய தார்மீகக் கடமையில் உள்ள சசிகலா, சந்தேகங்களுக்கு இதுநாள் வரையில் விடை சொல்லவில்லை. ஆனால், கட்சிக்கே சம்பந்தமில்லாத மனிதராக கட்சிக்கு கொண்டு வரப்பட்டு, கட்சியின் துனைப் பொதுச் செயலர் ஆக்கப்பட்டிருக்கும் தினகரனும், சந்தேகங்களைப் போக்க, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்த சமயத்தில்தான், இனியும் பொறுப்பது, அந்த அம்மா ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம் என்று முடிவெடுத்து, ஜெயலலிதா சமாதி முன் சென்று, அவர்ந்து 40 நிமிடம் தியானம் செய்தார் பன்னீர்செல்வம்.
 

 

 

விமர்சனம்


அதன்பின், சசிகலா குடும்பத்துக்கு எதிராக வலுவான பாயிண்ட்களோடு, சசிகலா தலைமையிலான அ.தி.மு.க., அணியினரை தன்னிச்சையாக விமர்சிக்கத் துவங்கினார். அப்போது, ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்கள் அனைத்தையும் புட்டு புட்டு வைத்து பேசினார். இது மக்கள் மத்தியில், அ.தி.மு.க., சசிகலா தரப்புக்கு எதிரான நிலைப்பாட்டை ஏற்படுத்தி உள்ளது. இன்றைக்கு இல்லாவிட்டாலும், என்றைக்கும், சசிகலாதான், ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பான விளக்கத்தை அளிக்க வேண்டும். ஜெயலலிதா, உடல்நிலை பாதிக்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது முதல், ஏகப்பட்ட கருத்து முரண்பாடுகள் உள்ளன.

கேட்டால், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தாலும், தன்னுடைய இமேஜ் பற்றி கவலைப்படுகிறவர். அதனால், சிகிச்சையில் இருந்த நிலையில், அவரை போட்டோ எடுத்து வெளியிடவில்லை என்று சப்பைகட்டுக் கட்டி, பதிலளிக்கின்றனர். அதுமட்டுமல்ல, அவருக்கு அளித்த சிகிச்சைகள் குறித்து, மாற்றி மாற்றி அறிக்கை விட்டது அப்பல்லோ நிர்வாகம். இப்போது, அப்பல்லோ அறிக்கை என்று, தமிழக சுகாதாரத் துறையும் முரண்பட்ட அறிக்கைகள் வெளியிட்டுள்ளது.
 

 

 

நினைவுஇல்லம்


ஜெயலலிதா இறந்ததும், அவருக்கு சொந்தமான போயஸ் தோட்டத்து, வேதா இல்லத்தை விட்டு, சசிகலா வெளியேறி இருக்க வேண்டும். அதையும் செய்யாமல், இன்னும் அதை பிடித்து வைத்துக் கொண்டிருப்பதேன்? அவர் வெளியேறி, அதை அரசு நினைவில்லமாக்க முயற்சித்திருக்க வேண்டும். இதையெல்லாம் செய்ய வேண்டும் என்று முயற்சித்து, அதற்காக குரல் எழுப்பி வரும், பன்னீர்செல்வத்தின் அமைதியும், நேர்மையான செயல்பாடும் எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. ஜெயலலிதா மரணத்துக்கு நீதி விசாரணை கேட்டு, அவர் நடத்தும் தர்ம யுத்தமும் பிடித்திருந்தது. அவர் பின்னால் நின்று, அரசியல் செய்வது என முடிவெடுத்தேன். அவரை சந்தித்தேன். எண்ணத்தை சொன்னேன். சேர்ந்து செயல்படலாம் என்றவரிடம், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், அவர் சார்பில் வேட்பாளராகும் எனது எண்ணத்தையும் சொன்னேன்.
 

 

 

போட்டி


அவர் ரொம்பவே சந்தோஷப்பட்டார். நான் மட்டுமே, வேட்பாளரை முடிவு செய்ய முடியாது. ஆட்சி மன்றக் குழுதான் முடிவெடுக்கும். ஏற்கனவே, மதுசூதனன், ஜே.சி.டி.பிரபாகரன் ஆகிய இருவரில் ஒருவரை தேர்வு செய்யலாம் என, முடிவெடுத்துள்ளோம். உங்கள் பெயரை சேர்த்து, மூவரில் ஒருவரை தேர்வு செய்யலாம் என சொன்னார். நான், ஆர்.கே.நகர் வேட்பாளர் ஆனால், கட்டாயம், தொகுதியில் வெற்றி பெறுவேன். ஒரு சிறந்த எம்.எல்.ஏ.,வாக என்னால், செயல்பட முடியும்.

ஜெயலலிதா மரணத்துக்கு, பன்னீர்செல்வம் முன் கூட்டியே ஏன் கேள்வி எழுப்பவில்லை என்று எல்லோரும் கேட்கின்றனர். அப்படி அவர் செய்து, கட்சி உடைந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான், அவர் தயங்கினார். ஆனாலும், முதல்வர் பதவியில் இருந்து கொண்டே, ஜெயலலிதா மரணத்துக்கு நீதி விசாரணை அமைத்து விட வேண்டும் என்று நினைத்துத்தான் செயல்பட்டார். அவர் முதல்வராக தொடர்ந்து இருந்திருந்தால், அதை செய்திருப்பார். போயஸ் தோட்டமும், அரசு நினைவில்லமாக்கப்பட்டிருக்கும். அதெல்லாம் தெரிந்துதான், சசிகலா தரப்பு, அவருக்கு கடும் நெருக்கடி கொடுத்து, முதல்வர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்ய வைத்து விட்டது.

முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணைக்கு விடப்பட்டால், கட்டாயம், உண்மைகள் வெளி வந்து விடும். இத்தனை நாட்களும், பல விஷயங்களை மூடி மறைத்தவர்களின் முகமூடி கிழித்தெறியப்பட்டு விடும். இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1729864

Categories: Tamilnadu-news

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: சசிகலா அணியில் கோகுல இந்திரா, ஓபிஎஸ் அணியில் மதுசூதனன் போட்டி?

Mon, 13/03/2017 - 05:42
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: சசிகலா அணியில் கோகுல இந்திரா, ஓபிஎஸ் அணியில் மதுசூதனன் போட்டி?

 

 
 எம்.வேதன்
இடது: சசிகலா, வலது: ஓ.பன்னீர்செல்வம் | கோப்புப் படங்கள்: எம்.வேதன்
 
 

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணி சார்பில் முன்னாள் அமைச்சர் மதுசூதனன், சசிகலா அணியில் கோகுல இந்திராவை வேட்பாளராக நிறுத்த முயற்சிகள் நடந்து வருகின்றன.

ஜெயலலிதா மறைவால் காலி யாக உள்ள ஆர்.கே.நகர் தொகு திக்கு ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப் பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் வரும் 16-ம் தேதி தொடங்கி 23-ம் தேதியுடன் முடிகிறது. இத் தேர்தலில் அதிமுகவில் சசிகலா, ஓபிஎஸ் அணிகள் தவிர, ஜெய லலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாவும் தனியாக போட்டியிடு கிறார். சசிகலா அணியில் வேட் பாளரை தேர்வு செய்வதற்காக 15-ம் தேதி ஆட்சி மன்றக் குழு கூடுகிறது. ஓபிஎஸ் தரப்பும் புதிதாக ஆட்சி மன்றக் குழுவை அமைத்துள்ளது.

நாங்கள்தான் உண்மையான அதிமுக என சசிகலா, ஓபிஎஸ் தரப்பினர் கூறி வருகின்றனர். இதனால், தங்களின் செல்வாக்கை நிரூபிக்க ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஒரு வாய்ப்பாக இருக்கும் என கருதுகின்றனர். இதற்காக வலுவான வேட்பாளரை களமிறக்க இரு தரப்பிலும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஓபிஎஸ் அணியினர் முன்னாள் அமைச்சர் மதுசூதனனையும், சசிகலா அணியினர் முன்னாள் அமைச்சர் எஸ்.கோகுல இந்திராவையும் வேட்பாளராக நிறுத்த ஆலோசித்து வருகின்றனர். இதற்கிடையே, ஆர்.கே.நகரில் ஓபிஎஸ் அணியினர் ரகசிய சர்வே ஒன்றையும் நடத்தி, ஆதரவை கணித்துள்ளனர்.

இது தொடர்பாக ஓபிஎஸ் தரப்பு நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘‘ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக நிர்வாகிகள் 80 சதவீதம் பேர் எங்களுக்கு ஆதரவாக உள்ளனர். மதுசூதனன் தொகுதிக்கு மிகவும் பரிச்சயமானவர். ஏற்கெனவே 1991 தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சராகவும் இருந்தார். ஆதி ஆந்திர மக்கள் 25 ஆயிரம் பேரின் வாக்குகள் இவருக்கு கிடைக்கும். கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் ஆதரவு அதிகம் இருப்பதால், அவர் நிறுத்தப்பட்டால் நிச்சயம் வெற்றி பெறுவார்’’ என்றார்.

சசிகலா அணியை பொறுத்தவரை முதலில் டிடிவி தினகரன் போட்டியிடுவார் என்ற தகவல் வெளியானது. இதை மறுத்த தினகரன், கட்சி விரும்பும் ஒருவர்தான் வேட்பாளர் என்றார். ஆனால், தற்போது முன்னாள் அமைச்சர் எஸ்.கோகுலஇந்திராவை நிறுத்த முடிவெடுத்துள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

திமுகவில் ஏற்கெனவே போட்டியிட்ட சிம்லா முத்துச் சோழனுக்கு பதிலாக, கிரிராஜனை நிறுத்தலாமா என யோசித்து வருவதாக தெரிகிறது. தேமுதிக சார்பில் மாவட்டச் செயலாளர் மதிவாணன் வேட்பாளராக அறிவிக் கப்பட்டுள்ளார். பாஜக, கம்யூ னிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளும் களத்தில் இறங்கலாம் என்பதால் பலமுனைப் போட்டி உருவாகி யுள்ளது.

http://tamil.thehindu.com/tamilnadu/ஆர்கேநகர்-இடைத்தேர்தல்-சசிகலா-அணியில்-கோகுல-இந்திரா-ஓபிஎஸ்-அணியில்-மதுசூதனன்-போட்டி/article9581775.ece?homepage=true

Categories: Tamilnadu-news

ஓ.பன்னீர்செல்வம் அணியில் மேலும் ஒரு எம்.எல்.ஏ

Sun, 12/03/2017 - 19:03
ஓ.பன்னீர்செல்வம் அணியில் மேலும் ஒரு எம்.எல்.ஏ

ஜெயலலிதாவின் மறைவுக்குப்பிறகு, அதிமுக சசிகலா அணி, பன்னீர்செல்வம் அணி என இரு அணியாக பிரிந்துள்ளது. இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அருண்குமார் ஆதரவு தெரிவித்துள்ளார்.  இவர் எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்தவர் ஆவார்.

Arunkumar

பன்னீர்செல்வம் அணிக்கு ஏற்கெனவே11 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர். இந்நிலையில், தற்போது அருண்குமாரின் வருகையால், ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது. 

http://www.vikatan.com/news/tamilnadu/83443-coimbatore-north-constituency-mla-arunkumar-supports-panneerselvam-camp.html

Categories: Tamilnadu-news

ஓட்டுக்கு துட்டு ’நோ’! ஒரே குடும்ப ஆட்சி ‘நோ’! மக்களாட்சிக்கு ’யெஸ்’ - ஜனநாயகத்திற்காக களமிறங்கும் பெண்கள்

Sun, 12/03/2017 - 18:52
ஓட்டுக்கு துட்டு ’நோ’! ஒரே குடும்ப ஆட்சி ‘நோ’! மக்களாட்சிக்கு ’யெஸ்’ - ஜனநாயகத்திற்காக களமிறங்கும் பெண்கள்

பெசன்ட் நகர் கடற்கரையில் போராடிய பெண்கள்

"ஒளிபடைத்த கண்ணினாய் வா! வா! வா!" என்று பாரதியார் எழுதிய வரிகளுடன் தொடங்கியது அந்த நிகழ்வு. கொளுத்தும் வெயிலில் பெசன்ட் நகர் கடற்கரையோரம் சுமார் 300 பெண்கள் நீலநிறத்தில் உடையணிந்து ஒன்றாகக் குழுமியிருந்தார்கள். புரட்சி உற்சாகமூட்டும் வரிகளும், அநீதி, ஊழல், முறைகேடான ஜனநாயகத்திற்கு எதிரான பதாகைகளை அவர்கள் ஏந்தியிருந்தார்கள். மெரினாவில் 2017 ஜனவரியில் கண்ட மக்கள் புரட்சிக்குப் பிறகு கடற்கரையோரம் மக்கள் ஒன்றாகக் களமிறங்கி குரல் கொடுப்பது என்பது அடிக்கடி நிகழும் செயலாகி விட்டது. தைப்புரட்சி முழுவதுமாய் வெற்றி பெற்றதோ இல்லையோ, ஆனால் மக்கள் தங்களது தேவைகளுக்காக வீதிக்கு இறங்கி தாங்கள்தான் போராடியாக வேண்டும் என்பதை அவர்களுக்கு நன்றாகவே உணர்த்தியிருக்கிறது. மேலும் போராட்ட வடிவம் எப்படி இருக்கவேண்டும் என்பதையும் பெருவாரியான மக்களுக்கு புரிய வைத்திருக்கிறது. அந்த வகையில் ஜல்லிக்கட்டுப் போராட்டத்திற்கு ஒரு சல்யூட்!

போராடிய பெண்கள்

இன்று பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் ’மக்கள் குரல்’ என்கிற பெயரில் கூடிய பெண்கள் குழுவினர், உண்மை ஜனநாயகத்துக்கு ஆதரவாக தாங்களே எழுதி கம்போஸிங் செய்த பாடல் வரிகளைப் பாடியும், ஜனநாயகத்தில் மக்களின் ஓட்டு யாருக்காக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நிகழ்த்திய நாடகமும் முழுவதும் கலை வடிவத்தில் எடுத்துச் செல்லப்பட்ட ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை ஒட்டியே இருந்தது.

"ஓட்டுப் போட வா!
உரிமை கோர வா!
நம் நாடு அல்லவா
நம் கடமை அல்லவா!

தலைமையைத்தான் தேர்ந்தெடுக்கும் நேரமல்லவா!
நல்ல தலைமை கையில் நாட்டைக் கொடுக்கும் தருணமல்லவா!

மக்கள் குரல் கேட்காம,
மக்கள் குறைய தீர்க்காம,
எங்கதான் இருக்கீங்க,
என்னத்ததான் செய்யறீங்க,
இங்க வந்து சொல்லுங்க"

என்று அனைவரும் ஒருமித்த குரலில் பாடினார்கள்.

நாடகம்

"தமிழகம் படுத்துடுச்சா?" என்று தொடங்கி அரங்கேற்றப்பட்ட நாடகம், நம்மிடையே என்ன மாதிரியான வேட்பாளர்கள் இருக்கிறார்கள்? ஆனால், மக்கள் யாரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. 'குடும்ப ஆட்சியும், இலவச பொருட்களும் இனிமேல் எடுபடாது' என்கிற எண்ணம் அவர்களிடம் தெளிவாக இருந்தது.

  பிரதிமா

முற்றிலும் எதிர்பார்க்காத அம்சமாக, நிகழ்வில் பங்கேற்ற பெண்களில் ஒருவர், பிரதிமா கிருஷ்ணமூர்த்தி, சுதந்திரப் போராட்டத் தியாகி சத்தியமூர்த்தியின் தம்பி மகள். அவர் பேசுகையில், "எங்க பெரியப்பா காலத்தில் போராட்டம் செய்து சுதந்திரம் பெற்றுத் தந்த நாடு இன்று இப்படியிருக்கிறதே என்கிற கவலைதான், நான் போராட்டத்தில் பங்கெடுக்கக் காரணம். உடல்நிலை முடியாமல் போனாலும் எப்படியாவது பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் என்கிற மனவலிமையுடன் இதில் இணைந்து கொண்டேன். ஓ.பி.எஸ்ஸோ அல்லது ஈ.பி.எஸ்ஸோ எங்களுக்குத் தேவை ஜனநாயகம் அதற்குத்தான் இங்கே எல்லோரும் வந்திருக்கோம்” என்றார்.

அமைப்பின் ஊடகப் பிரிவு

"இதுவரை இல்லாமல் திடீரென எப்படி இந்த விழிப்புணர்வு?" என்று 'மக்கள் குரல்' அமைப்பின் ஊடகத் தொடர்பு பிரிவினரிடம் கேட்டோம். "சமீபத்தில் தமிழக அரசியலில் ஏற்பட்ட குழப்பநிலைதான் முக்கியக் காரணம். நாங்க நியாயமான முறையில ஓட்டு போட்டுத்தான் அவர்களைத் தேர்ந்தெடுத்தோம். ஆனா அவங்களுக்குள்ளே ஏற்பட்ட உட்கட்சிப் பிரச்னை மற்றும் ஆட்சி மாற்றப் பிரச்னையில் மக்களை அவர்கள் மதிக்கவேயில்லை. இனிமேலும் மக்கள் தாமதிக்கக் கூடாது என்பதற்காகத்தான் இந்த அறவழிப் போராட்டம். மீண்டும் இங்கே தேர்தல் தேவை என்பதை முக்கியமாக வலியுறுத்துகிறோம். இப்போது முந்நூறு பேர் வரை கூடியிருக்கிறோம். எங்களைப் பார்த்துவிட்டு இன்னும் பலர் எங்களுடன் இணைந்துள்ளார்கள். முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே இணைந்து, பெண்களால் மாற்றத்தை கொண்டுவர முடியும் என்கிற நம்பிக்கையுடன் தொடங்கினோம். ஆனால், பெண்கள் மட்டுமே என்று இல்லாமல் அனைவருமே இதில் இணைந்து ஜனநாயகத்திற்காகக் களமிறங்க வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். தற்போது தமிழகத்தில் நாங்கள் மேற்கொண்டு வரும் செயல்பாடுகளை மற்ற மாநிலங்களில் இருக்கும் எங்கள் நண்பர்களும் கவனித்து வருகிறார்கள். அவர்கள் வழியாக ஒவ்வொரு மாநிலத்திலும் மாற்றம் கொண்டு வரமுடியும் என்கிற நம்பிக்கை உள்ளது” என்றார்கள்.

17273982_1437208076292151_1037628077_o_1

"வரப்போகும் தேர்தல்களில் உங்களில் யாரேனும் வேட்பாளராக களமிறங்குவீர்களா?" என்றதற்கு, “எங்கள் அடையாளம் மக்கள் குரல் என்பது மட்டுமே, நாங்கள் எந்தக் கட்சியும் இல்லை; வேட்பாளர்களைக் களமிறக்கும் எண்ணமும் இல்லை. உண்மை ஜனநாயகம் அமையும் வரை, மக்களாகிய நாங்கள் தொடர்ந்து குரல் கொடுப்போம்” என்று தீர்க்கமான பதில் அவர்களிடமிருந்து வந்தது.

நாளை ஒரு போராட்டம் வீதிக்கு வா தோழி!

http://www.vikatan.com/news/tamilnadu/83424-voice-of-people-a-peoples-organization-on-a-peaceful-protest-at-besant-nagar-beach-supporting-for-democracy-in-tamilnadu.html

 

Categories: Tamilnadu-news

அநீதிகள் அதிகரிக்கும் போது மக்களிடம் கொந்தளிப்பு ஏற்படும்: கமல்ஹாசன்

Sun, 12/03/2017 - 18:43
அநீதிகள் அதிகரிக்கும் போது மக்களிடம் கொந்தளிப்பு ஏற்படும்: கமல்ஹாசன்

 

 
kamalzzz

சென்னை: அநீதிகள் அதிகரிக்கும் போது மக்களிடம் கொந்தளிப்பு ஏற்படும் என்று கூறிய நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் தன்னெழுச்சி போராட்டத்திலிருந்தே நடிகர் கமல்ஹாசன் சமூகம் சார்ந்த கருத்துக்களை வெளிப்படையாகவும் அதிரடியாகவும் தெரிவித்து வருகிறார்.

தனியார் தமிழ் தொலைகாட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், நிகழ்கால அரசியலில் ஏற்படும் அநியாயங்களுக்கு எதிராகக் குரல் கொடுக்காமல் வெறும் கலைஞனாக மட்டுமே என்னால் இருக்க முடியாது என்று கூறிய கமல்ஹாசன் அநீதிகள் அதிகரிக்கும் போது மக்களிடம் கொந்தளிப்பு ஏற்படும் என்றார்.

அரசியல் வர்த்தகமாகிவிட்டது. எளிமையான அணுகுமுறையுடன் கூடிய தலைவர்கள் தற்போது தேவைபடுகிறார்கள். அரசியல் பேசுவதற்கு குடிமகன் என்பது தான் தனது முதல் தகுதி என்றும் குறிப்பிட்டார்.

ஊழல் என்பது வாக்காளர்களிடமிருந்தே தொடங்குவதாகக் கூறிய கமல்ஹாசன், வாக்குகளை விலைபேசும்போது கேள்விகளை எழுப்ப முடியாது என்றும் தெரிவித்தார்.

காலத்தின் தேவைக்கேற்ப அரசியல் இயக்கங்கள் மாற வேண்டும். மக்களின் தேவைக்கேற்ப பழைய சட்டங்களை நீக்கிவிட்டு புதிய சட்டங்களும் இயற்றப்பட வேண்டும் என்றும் கூறினார். எந்த ஆட்சியிலும் குற்றத்தை தட்டிக்கேட்க வேண்டும்.

எனக்கு தலைவர்கள் யாரும் கிடையாது. காந்தி, பெரியார் மாதிரியான ஹீரோக்கள் தான் உள்ளனர். ஏனென்றால் காந்தி, பெரியார் இருவரும் தேர்தல் அரசியல் இல்லை. சாதியை எடுத்துவிடுவதுதான் எனது கொள்கை, சாதியே இல்லாத சமுதாயம் அமைய வேண்டும்.

திராவிடம் என்பது பூகோள ரீதியானது. அதனை யாரும் மறுக்க முடியாது. கொள்கை நேரத்துக்கு நேரம் மாறுபடும். மக்களுக்கு தேவையான அரசியலே தேவை. அந்த அரசியல் காலத்துக்கு காலம் மாறுபடும். காலத்தின் தேவையாக இருந்ததால் தான் திமுக அதிமுக இயக்கங்கள் உருவெருத்தன என்று கமல் கூறினார்.

http://www.dinamani.com/tamilnadu/2017/mar/12/அநீதிகள்-அதிகரிக்கும்-போது-மக்களிடம்-கொந்தளிப்பு-ஏற்படும்-கமல்ஹாசன்-2664734.html

Categories: Tamilnadu-news

ஆர்.கே. நகரில் போட்டியிட எனக்கு தொல்லை: தீபா

Sun, 12/03/2017 - 16:26
 
ஆர்.கே. நகரில் போட்டியிட எனக்கு தொல்லை: தீபா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
Tamil_News_large_1728849_318_219.jpg
 

சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட எனக்கு தொல்லை கொடுக்கின்றனர் என ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா கூறியுள்ளார்.ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நான் போட்டியிடுவது மக்களின் விருப்பமே .

சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த ஜெயலலிதாவில் அண்ணன் மகள் தீபா கூறுகையில் : ‛‛இரட்டை இலை சின்னத்தில் நான் போட்டியிடவில்லை. எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை சார்பாக போட்டியிடுவேன். பேரவையின் முக்கிய நிர்வாகிகளிடம் ஆலோசித்த பின்னரே முக்கிய முடிவுகள் எடுக்க இருப்பதாகவும், ஜெயலலிதாவின் வாரிசாக பொதுமக்கள் என்னை தேர்வு செய்வார்கள்.'' இவ்வாறு தீபா கூறினார்.
 

 

 

ஜெ., நினைவிடத்தில் தீபா தியானம்மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் மவுன அஞ்சலி , சிறுது நேரம் தியானம் செய்தார்.

பின்னர் தீபா கூறியதாவது: ‛‛ஒரு தாய்க்கும் மகளுக்கு உள்ள உறவு போன்றது எனக்கும் ஜெயலலிதாவிற்கும் இருந்த உறவு . இதற்கு யார் எங்களை கேள்வி கேட்பது. மக்கள் எங்களுக்கு ஆதரவு அளிப்பார்கள். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை. ஆர்.கே.நகரில் போட்டியிடக்கூடாது என எனக்கு தொல்லை கொடுக்கின்றனர்.'' என கூறினார்

http://www.dinamalar.com/news_detail.asp?id=1728849

17103484_1147025832092426_55545089255181

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை பொதுச்செயலாளர் தீபா மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்திய பின் திடீர் தியானம்

* தொடர்ந்து 40 நிமிடத்திற்கு மேலாக தியானத்தில் ஈடுபட்டு வருகிறார் தீபா.

* தியானம் கலைத்தார் தீபா

Categories: Tamilnadu-news

குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்கலாமா? - முக்கிய அரசியல் கட்சிகள் என்ன சொல்கின்றன?

Sun, 12/03/2017 - 08:29
குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்கலாமா? - முக்கிய அரசியல் கட்சிகள் என்ன சொல்கின்றன?

 

 
 
 
 
kuttram_3142575f.jpg
 
 
 

குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடைவிதிக்க வேண்டும் என டெல்லி மாநில பாஜக செய்தி தொடர்பாளர் அஸ்வினி குமார் உபாத்யாய் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருக்கிறார்.

கடந்த 3-ம் தேதி, நீதிபதிகள் ரஞ்சன் காகோய், நவீன் சின்ஹா அமர்வில் இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, குற்ற வழக்குகளில் தண்டிக்கப்பட்டவர்களுக்கு தேர்த லில் போட்டியிட வாழ்நாள் தடை விதிப்பது குறித்து தேர்தல் ஆணை யமும் மத்திய அரசும் தங்களது நிலைப்பாட்டை இரண்டு வாரங் களுக்குள் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு குறைந்தபட்ச கல்வி தகுதி நிர்ணயம் செய்வது, வேட்பாளர்களுக்கான உச்சபட்ச வயது வரம்பை நிர்ணயம் செய்வது குறித்தும் மத்திய அரசு, தேர்தல் ஆணையத்தின் கருத்தைக் கேட்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில், நீதிபதிகள் சுட்டிக்காட்டிய இந்த மூன்று அம்சங்கள் குறித்து தமிழகத்தின் முக்கிய அரசியல்கட்சி பிரமுகர் களின் கருத்தைக் கேட்டோம்.

ஆர்.நல்லகண்ணு (இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர்):

நிரந்தரமாக கிரிமினல் குற்றவாளி களாக இருந்து தண்டனை பெற்றவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடைவிதிப் பதில் தவறில்லை. தேர்தலில் போட்டியிட குறைந்தபட்ச கல்வித் தகுதி தேவைதான். ஆனால், அப்படி வரும்போது ஒருவரது நேர்மையும் அனுபவமும் புறக்கணிக்கப்பட்டு விடக்கூடாது. அதேபோல், உடம்பில் தெம்பிருக் கிற வரை பொது வாழ் வுக்கு ஓய்வு தேவையில்லை.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் (தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்):

தண்டனை பெற்ற குற்ற வாளிகள் தேர்தலில் போட்டியிட மட்டுமின்றி அரசியல் கட்சிகளில் பொறுப்பு வகிக்கவும் வாழ்நாள் தடைவிதிக்க வேண்டும். தேர்தலில் போட்டியிட பட்டப்படிப்பாவது அடிப்படை கல்வியாக இருக் கட்டும். தேர்தலில் போட்டியிட உச்சபட்ச வயதுவரம்பு தேவை யில்லை.

ஹெச்.ராஜா (பாஜக தேசிய செயலாளர்):

வாழ்நாள் தடைவிதிக்க வேண்டியது அவசியம் என கருதுகிறேன். அதுமட்டுமல்ல. அதுமாதிரியானவர்கள் அரசியல் கட்சிகளில் எந்தப் பொறுப்பை வகிக் கவும் தடைவிதிக்க வேண்டும். நாடாளுமன்ற, சட்டமன்ற வேட் பாளர்களுக்கு மட்டுமாவது குறைந்தபட்ச கல்வி தகுதி நிர்ண யிக்கப்பட வேண்டும். அனுபவம் என்பதே வயதானால்தான் கூடு கிறது என்பதால் தேர்தலில் போட்டி உச்சவரம்பு தேவை என்பதில் நான் உடன்படவில்லை.

வைகை செல்வன் (அதிமுக செய்தி தொடர்பாளர்):

குற்ற வழக்கில் தண்டனைபெற்று ஆறு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாமல் தண்டிக்கப்பட்ட ஒருவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்குவதுதான் மனிதநேயம். இதைத்தான் சட்டமும் நீதியும் சொல்கிறது. எனவே, வாழ்நாள் தடை என்பது தேவையற்றது. வேட்பாளரின் கல்வித் தகுதியும் வயது வரம்பும் அவரது சமூக சேவைக்கும் தொண்டுக்கும் தடையாக இருக்கக்கூடாது.

திருச்சி என்.சிவா எம்.பி. (திமுக கொள்கை பரப்புச் செயலாளர்):

குற்ற வழக்காக இருந்தாலும் குற்றத்தின் தன்மையைப் பொறுத்தே அதற்கான தண்டனை தீர்மானிக்கப்பட வேண்டும். அதேசமயம், அரசுப் பதவி சம் பந்தப்பட்ட குற்ற வழக்குகளில் வாழ்நாள் தடை போன்ற உச்சபட்ச தண்டனை அளிப்பதில் தவறில்லை. உடலும் மனதும் ஒத்துழைக்கும் வரை பொதுவாழ்க்கையில் யாருக் கும் தடைபோட வேண்டாமே.

பாலபாரதி - மார்க்சிஸ்ட் கட்சி மாநிலக்குழு உறுப்பினர்:

வாழ்நாள் தடை என்பது தேவையில்லாதது. கல்வி மட்டுமே மனிதனுக்கு அறிவை தந்துவிடாது. தேர்தலில் போட்டியிட உச்சவரம்பும் தேவை யில்லை. இந்த மூன்று பிரச் சினைகளுக்கும் ஒரே தீர்வு, வாக்குகளின் அடிப்படையில் விகிதாச்சார முறையில் மக்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்வது மட்டுமே.

இளங்கோவன் - பொருளாளர் தேமுதிக:

தண்டனை குற்றவாளி களுக்கு தேர்தலில் போட்டியிட ஆயுட்கால தடை என்பதை வரவேற்கிறேன். அதிகம் படிக்காத காமராஜர், எம்.ஜி.ஆர். போன்ற வர்கள் மக்கள் சேவகர்களாக இருந்திருக்கிறார்கள். எனவே, பொதுவாழ்க்கைக்கு கல்வி ஒரு தடையாக இருக்கக்கூடாது. அரசியலுக்கு வயது வரம்பு தேவையில்லை.

http://tamil.thehindu.com/tamilnadu/குற்ற-வழக்கில்-தண்டிக்கப்பட்டவர்களுக்கு-தேர்தலில்-போட்டியிட-வாழ்நாள்-தடை-விதிக்கலாமா-முக்கிய-அரசியல்-கட்சிகள்-என்ன-சொல்கின்றன/article9581263.ece?homepage=true&relartwiz=true

Categories: Tamilnadu-news

அதிருப்தி சசிகலா குடும்பத்தினர் மீது முதல்வர் பழனிசாமி... ஆட்சி மன்ற குழுவில் இடம் அளிக்க மறுப்பு தினகரன் ஆதிக்கத்தால் மந்திரிகளும் விரக்தி

Sat, 11/03/2017 - 21:15
அதிருப்தி
சசிகலா குடும்பத்தினர் மீது முதல்வர் பழனிசாமி...
ஆட்சி மன்ற குழுவில் இடம் அளிக்க மறுப்பு
தினகரன் ஆதிக்கத்தால் மந்திரிகளும் விரக்தி
 
 
 

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் போல், முதல்வர் பழனிசாமி தனித்து செயல்பட விரும்புவதால், அவருக்கும், சசிகலா குடும்பத் தினருக்கும் இடையே, கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

 

Tamil_News_large_1728312_318_219.jpg

ஜெ., மறைந்ததும், பன்னீர்செல்வம் முதல்வ ரானார். அ.தி.மு.க., பொதுச் செயலராக, சசிகலா நியமிக்கப்பட்டார். பன்னீர்செல்வத்தை முதல்வர் பதவியில் இருந்து இறக்கிவிட்டு, தானே முதல்வராக, சசிகலா முடிவு செய்தார். அதன்படி, பன்னீர்செல்வத்தை ராஜினாமா செய்ய வைத்தார். அவர், சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி துாக்கினார்.
 

தவிடுபொடியானது


அவருக்கு கட்சியினர் ஆதரவு அளித்தனர். அதை தொடர்ந்து, எம்.எல்.ஏ.,க்களை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, சசிகலா முதல்வராக முயற்சித்தார். ஆனால், சொத்து குவிப்பு வழக்கில், சிறை தண்டனை பெற்ற தால், முதல்வர் கனவு தவிடுபொடியானது.

வேறு வழியின்றி, தன் விசுவாசியான பழனிசாமியை முதல்வராக்கினார். அவரை கட்டுக் குள் வைத்திருக்க, தன் அக்கா மகன் தினகரனை, அ.தி.மு.க., துணை பொதுச் செயலராக்கினார். அவர், முதல்வர் பழனிசாமியை ஓரங்கட்டும் வகையில், அவரிடம் இருந்த நிதித் துறையை, அமைச்சர் ஜெயக்குமாருக்கு வழங்க செய்தார்.

மேலும், செங்கோட்டையனுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். இது, முதல்வர் பழனிசாமி, அமைச்சர் கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் இடையே, அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.ஆர்.கே.நகரில் நடந்த, மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கும் விழாவில், அமைச்சர் ஜெயக்குமார், முதல்வர் போல் நடந்து கொண்டார்.

முதல்வர் பழனிசாமி, பிரதமரை சந்திக்க டில்லி சென்ற போது, அமைச்சர் ஜெயக்குமார் உடன் சென்றார். சமீபத்தில், கட்சியின் ஆட்சி மன்றக் குழுவை, தினகரன் மாற்றி அமைத்தார். இதில், முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோருக்கு இடம் அளிக்கப்பட வில்லை. ஆனால், சிறையில் உள்ள சசிகலாவுக்கு இடம் அளித்துள்ளனர்.

ஜெ., மறைவு காரணமாக, இறந்தவர்களின் குடும்பத்திற்கு,கட்சி சார்பில் நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி, கட்சி அலுவலகத்தில் நடந்தது. நிதியுதவி முழுவதையும் தினகரன் வழங்க, முதல்வர் பெயருக்கு அருகில் நின்று கொண்டிருந்தார். கட்சி அலுவலகத்திற்கு, தினகரன் வரும் போது, முதல்வ ருக்கு அளிக்கப் படும் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்பதற்காக, முதல்வர் பழனிசாமியை

 

வந்து செல்லும்படி கூறுகின்றனர். கட்சி அலுவல கத்திற்குள், தினகரன் கார் மட்டும் அனுமதிக்கப் படுகிறது; முதல்வர் கார் அனுமதிக்கப்படுவதில்லை. பன்னீர் செல் வத்தை அவமானப்படுத்தியது போல், தன்னை யும் அவமானப்படுத்துவதால், முதல்வர் அதிருப்தியில் உள்ளார்.அதே போல், அமைச்சர் கள் வேலுமணி, தங்கமணி ஆகியோரும் அதிருப்தியில் உள்ளனர்.

பரபரப்புஇதையறிந்த சில முன்னாள் அமைச்சர் கள், 'சசிகலா குடும்பத்தை ஒதுக்கிவிட்டால், நாம் பன்னீர்செல்வம் அணியுடன் இணைந்து செயல்படலாம். மரியாதை இருக்கும்; மக்களி டம் வரவேற்பு இருக்கும்' என தெரிவித்து உள்ளனர். அதே போல், மேலும் பல அமைச் சர்களிடம் பேச்சு நடந்துள்ளது. இத்தகவல், அ.தி.மு.க.,வில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. - நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1728312

Categories: Tamilnadu-news