விளையாட்டுத் திடல்

மெஸ்ஸி சோபிக்கவில்லை, மீண்டும் அர்ஜெண்டினா, சிலி அணிகள் தடுமாற்றம்

Wed, 06/09/2017 - 17:54
மெஸ்ஸி சோபிக்கவில்லை, மீண்டும் அர்ஜெண்டினா, சிலி அணிகள் தடுமாற்றம்

 

 
messi

லயோனல் மெஸ்ஸி, வெனிசூலா வீரர் ஜூனியர் மொரீனோவுக்குக் கைகொடுக்கிறார்.   -  படம். | ஏ.எஃப்.பி.

2018 உலகக்கோப்பை கால்பந்துத் தொடருக்கான தகுதிப்போட்டிகள் நடைபெற்று வருகின்றன இதில் அர்ஜெண்டினா அணி வெனிசூலாவுக்கு எதிராக 1-1 என்று டிரா செய்ய சிலி அணி பொலிவியாவுக்கு எதிராக 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வி தழுவியது.

அர்ஜெண்டினா அணி இடைவேளை வரை ஏகப்பட்ட கோல் வாய்ப்புகளை கோல் அருகில் சென்று மோசமான பினிஷிங்கினால், திட்டமிடலின்மையால் தவற விட்டது. கடைசியில் வெனிசூலா அணி தன் கோலில் அடித்த ஷாட்டின் மூலமே அர்ஜெண்டீனா அணி டிரா செய்ய முடிந்தது என்பது அது ஆடிய விதத்திற்கும் முடிவுக்குமிடையேயான மிகப்பெரிய முரணாகும்.

இதன் மூலம் அர்ஜெண்டினா 16 ஆட்டங்களில் 24 புள்ளிகளுடன் 5-ம் இடத்திலும் சிலி அணி 23 புள்ளிகளுடன் 6-ம் இடத்திலும் உள்ளதால் நேரடியாகத் தகுதி பெறுவது பெரும் சிக்கலுக்குள்ளாகியுள்ளது. 5-ம் நிலையிலேயே அர்ஜெண்டினா நீடித்தால் அது நியூஸிலாந்துக்கு எதிராக பிளே ஆஃப் சுற்றில் ஆட வேண்டிய கட்டயாம் ஏற்படும். அடுத்த மாதம் 4-ம் இடத்தில் உள்ள பெரூ அணியை அர்ஜெண்டினா சந்திக்கிறது, அடுத்த கடைசி போட்டியில் உயரமான பகுதியில் ஈக்வடாருக்கு எதிராக ஆடுகிறது.

பிரேசில் அணி முதலிடத்தில் ஏற்கெனவே தகுதி பெற்று விட்டது, மேலும் கொலம்பியா அணிக்கு எதிராக 1-1 என்று டிரா செய்தது. இடைவேளைக்கு முன்னதாக வில்லியன் அடித்த அபாரமான கோல் அது. ஆனால் இந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை கொலம்பிய வீரர் ரடாமெல் ஃபால்கோ தலையால் முட்டி சமன் கோலை அடித்தார்.

அர்ஜெண்டினா, வெனிசூலா ஆட்டத்தில் அர்ஜெண்டினா கோலே அடிக்கவில்லை என்றே கூற வேண்டும், கடைசியில் வெனிசுலா அடித்த சொந்த கோலினால் அர்ஜெண்டினா கணக்கில் ஒரு கோல் சேர்ந்தது, முன்னதாக வெனிசூலா அணிக்கு கிடைத்த வாய்ப்பை அது கோலாக மாற்றியது, அர்ஜெண்டினா தடுப்பு உத்தி, பாஸ் தோல்வியடைய கிட்டத்தட்ட வெனிசூலா வீரர் ஒருவர் தன்னந்தனியாக பந்தை எடுத்துச் சென்று கோலாக மாற்றினார்.

அதற்கு முன்னதாக தொடக்கம் முதல் இடைவேளை வரை அர்ஜெண்டினா அணி ஒரு 6-7 கோல் வாய்ப்புகளையாவது தவற விட்டிருக்கும், அருமையான பாஸ்கள் மோசமான பினிஷிங்கினால் கோலாக மாறவில்லை, 49வது நிமிடத்தில் மெஸ்ஸி அடித்த ஃப்ரீ கிக் கோலுக்கு அருகே வளைந்து வெளியே சென்றது, இன்னொரு மெஸ்சியின் அபாரமான ஷாட்டை வெனிசூலா கோல் கீப்பர் டைவ் அடித்துப் பிடித்தார்.

இதற்கிடையே உருகுவே அணி பராகுவே அணிக்கு எதிரான சவாலான ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் வென்று உலகக்கோப்பை தகுதியை நெருங்கியுள்ளது. சிலி அணியை பராகுவே அணி 3-0 என்று நொறுக்கியதை அடுத்து இந்தப் போட்டி உருகுவே அணிக்கு பெரும் சவாலாக அமைந்தது. பெடரிகோ வால்வர்டே 76-வது நிமிடத்தில் அபாரமான ஷாட் ஒன்றில் உருகுவேயை முன்னிலையாக்கினார். சுவாரேஸ் இரண்டாவது கோலுக்கான வாய்ப்பை அருமையாக அமைத்துக் கொடுத்தார். இந்த வெற்றி மூலம் உருகுவே அணி 27 புள்ளிகளுடன் 2-ம் இடத்தில் உள்ளது. வெனிசூலாவை அடுத்த போட்டியில் வீழ்த்தி விட்டா உருகுவே தகுதி பெறுவது உறுதி.

வெனிசூலா அணி 7-ம் இடத்தில் உள்ளது, இது கொலம்பியாவை அடுத்த போட்டியில் வீழ்த்தி பிறகு கடைசி போட்டியில் வெனிசூலாவையும் வீழ்த்தினால் தகுதி பெற வாய்ப்புள்ளது.

http://tamil.thehindu.com/sports/article19630393.ece?homepage=true

Categories: merge-rss

ஆசிரியர் தினத்தில் சனத் ஜயசூரியவுக்கு நன்றி தெரிவித்த கோஹ்லி

Wed, 06/09/2017 - 14:13
ஆசிரியர் தினத்தில் சனத் ஜயசூரியவுக்கு நன்றி தெரிவித்த கோஹ்லி
21369310_1496597610427337_19401907605450 Image courtesy - Kholi's twitter
TP-BB-Website-Banner-visit-the-hub-728.jpg

உலக ஆசிரியர்கள் தினம் ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி கொண்டாடப்பட்டு வருகின்றது. எனினும் இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் 5ஆம் திகதி ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கிரிக்கெட் உலகின் நட்சத்திர வீரர்களான சச்சின் டெண்டுல்கர், விராட் கோஹ்லி, கௌதம் கம்பீர், விரேந்திர சேவாக் உள்ளிட்ட பலர் தமது ஆசான்களுக்கு பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் ஊடாக வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர்.

கிரிக்கெட் வீரர்களுக்கு பயிற்சியாளர்களுடன் முன்னாள் ஜாம்பவான்கள்தான் ஆசிரியர்கள். அவர்களது ஆட்டத்தை பார்த்துதான் வளர்ந்திருப்பார்கள். இதனடிப்படையில் கிரிக்கெட்டின் முன்னாள் ஜாம்பவான்களுக்கு விராட் கோஹ்லி ஆசிரியர் தின வாழ்த்துக்கள் கூறியுள்ளார்.

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கோஹ்லி தனது டுவிட்டர் சமூகவலைத்தளத்தில் கிரிக்கெட் உலகை ஒரு காலத்தில் ஆட்டிப் படைத்த முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்களின் பெயர்கள் எழுதப்பட்ட மிகப் பெரிய போஸ்டருக்கு முன்னால் அமர்ந்திருந்து ஒரு படத்தை வெளியிட்டுள்ளார்.

 

அத்துடன் ”உலகில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள். குறிப்பாக கிரிக்கெட் உலகில் உள்ள ஆசிரியர்களுக்கு ஹேப்பி டீச்சர்ஸ் டே” என்று குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், அதிரடி ஆட்டக்காரருமான சனத் ஜயசூரியவின் பெயரும் அதில் இடம்பெற்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இந்திய அணியின் மற்றுமொரு ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர், தனக்கு கல்வி புகட்டிய ஆசிரியர் மற்றும் தனது ஆரம்பகால பயிற்றுனர் ஆகியோரை நேரில் சந்தித்து ஆசிர்வாதம் பெற்றிருந்ததை அவரது டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார்.

http://www.thepapare.com/

Categories: merge-rss

கரீபியன் பிரிமீயர் லீக்: கிறிஸ் கெய்ல் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்

Wed, 06/09/2017 - 14:10
கரீபியன் பிரிமீயர் லீக்: கிறிஸ் கெய்ல் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்

 

கரீபியன் பிரிமீயர் லீக் டி20 தொடரில் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி செயின்ட் கிட்ஸ் அண்டு நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

 
 
 கிறிஸ் கெய்ல் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்
 
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் சார்பில் கரிபீயன் பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வருடத்திற்கான சீசனில் லீக் போட்டிகள் முடிவில் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ், செயின்ட் கிட்ஸ் அண்டு நெவிஸ் பேட்ரியாட்ஸ், ஜமைக்கா தல்லாவாஸ், கயானா அமேசான் வாரியர்ஸ் அணிகள் முதல் நான்கு இடத்தை பிடித்தன.

முதல் இரண்டு இடங்கள் பிடித்த ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ், செயின்ட் கிட்ஸ் அண்டு நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகள் குவாலிபையர் 1-ல் மோதின. இந்த ஆட்டம் நேற்று நடைபெற்றது. ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் வெயின் பிராவோ டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி செயின்ட் கிட்ஸ் அண்டு நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணியின் கேப்டன் கிறிஸ் கெய்ல், அதிரடி வீரர் லெவிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். லெவிஸ் 6 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

அடுத்து வந்த மொகமது ஹபீஸ் 21 ரன்னும், பிராண்டன் கிங் 30 ரன்னும், பிராத்வைட் 14 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தார். கிறிஸ் கெய்ல் அவுட்டாகாமல் 51 பந்தில் தலா மூன்று பவுண்டரிகள், சிக்சர்களுடன் 54 ரன்கள் எடுக்க செயின்ட் கிட்ஸ் அண்டு நெவிஸ் பேட்ரியாட்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது.

201709061701507624_1_Bravo-s._L_styvpf.j

பின்னர் வெயின் பிராவோ தலைமையிலான ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது. பேட்ரியாட்ஸ் அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் 19.3 ஓவரில் 111 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் 48 ரன்கள் வித்தியாசத்தில் கெய்ல் அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இன்று நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் கயானா அமேசான் வாரியர்ஸ் - ஜமைக்கா தல்லாவாஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணியுடன் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி 7-ந்தேதி நடைபெறும் குவாலிபையர் 2-ல் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/09/06170146/1106549/Patriots-march-into-final-after-stellar-bowling-show.vpf

 

Categories: merge-rss

முழு வட மாகாணமுமே எனக்கு ஆதரவு தருகின்றது – அனித்தா

Wed, 06/09/2017 - 08:56
முழு வட மாகாணமுமே எனக்கு ஆதரவு தருகின்றது – அனித்தா
TP-BB-Website-Banner-visit-the-hub-728.jpg
95ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டியில் கோலூன்றிப் பாய்தலில் தேசிய சாதனை படைத்த யாழ் வீராங்கனை அனித்தா மற்றும் அவரது பயிற்றுவிப்பாளர் சுபாஸ்கரனுடனான ThePapare.comஇன் சிறப்பு நேர்காணல்.
 

 

Categories: merge-rss

இலங்கையில் கிரிக்கெட் சுற்றுப் போட்டி ; இந்திய கிரிக்கெட் வீரர் அகால மரணம்

Wed, 06/09/2017 - 08:42
இலங்கையில் கிரிக்கெட் சுற்றுப் போட்டி ; இந்திய கிரிக்கெட் வீரர் அகால மரணம்

 

 
 

இலங்கை வந்துள்ள இந்திய கிரிக்கெட் வீரரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் இடம்பெறும் 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்வதற்காக வந்த குஜராத் மாநிலத்தை சேர்ந்த 12 வயதான வீரரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பமுனுகம ஹோட்டல் நீச்சல் தடாகத்தில் நீச்சலில் ஈடுபட்ட வீரர் ஒருவரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.நேற்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ள நிலையில் இன்றைய தினம் பிரேத பரிசோதனை இடம்பெறவுள்ளது.

இலங்கையில் கிரிக்கெட் சுற்றுப் போட்டிக்காக 19 இந்திய இளம் வீரர்கள் இங்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/24054

Categories: merge-rss

மே.இ.தீவுகள் அணியும் கிரிக்கெட்டை நேர்மையாக ஆடவில்லை: சம்பவங்களுடன் பிரையன் லாரா சாட்டையடி

Tue, 05/09/2017 - 16:02
மே.இ.தீவுகள் அணியும் கிரிக்கெட்டை நேர்மையாக ஆடவில்லை: சம்பவங்களுடன் பிரையன் லாரா சாட்டையடி
 
 
holding

நடுவர் மீதான அதிருப்தியில் ஸ்டம்பை உதைக்கும் ஹோல்டிங்.   -  படம். | கெட்டி இமேஜஸ்.

Lara%202

பிரையன் லாரா.   -  கோப்புப் படம். | ராய்ட்டர்ஸ்.

 

 

லார்ட்ஸில் எம்.சி.சி. கிரிக்கெட் ஆட்ட உணர்வுக்கான கவுட்ரி சொற்பொழிவாற்றிய பிரையன் லாரா, முன்னணி அணிகள் ஆட்டத்தின் நேர்மையைப் பாதுகாக்க உத்தரவாதம் அளித்து ஆட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும் 90-களில் மே.இ.தீவுகள் அணி நடந்து கொண்ட விதம் கிரிக்கெட் ஆட்ட உணர்வுக்கு எதிரானது என்றும் ஒரு முன்னிலை அணி அவ்வாறு நடந்து கொண்டது இளம் வீரரான தனக்கு மிகுந்த வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் அளித்ததாக மிகவும் பட்டவர்த்தனமாக போட்டு உடைத்தார் பிரையன் லாரா.

1980களிலும் 90-களின் ஆரம்பங்களிலும் மே.இ.தீவுகள் கிரிக்கெட் உலகை ஆதிக்கம் செலுத்தினாலும் சில வேளைகளில், “வீர்ர்கள் ஆடிய விதம் ஒரு ஆட்டத்தை எப்படி ஆடக்கூடாதோ அந்த உணர்வில் இருந்தது தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது” என்றார்.

குறிப்பாக 1980-ல் நியூஸிலாந்தில் நடைபெற்ற மே.இ.தீவுகள் ஆடிய டெஸ்ட் தொடர் கிரிக்கெட் உலகில் அப்போது பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இன்று பிரையன் லாரா அதனைக் குறை கூறினாலும் அந்தத் தொடரில் நியூஸிலாந்து நடுவர்கள் நடந்து கொண்ட விதம் எந்த ஒரு பொறுமைசாலியையும் நிலைதடுமாறச் செய்யக்கூடியதுதான்.

ரிச்சர்ட் ஹாட்லிக்கு மட்டும் ஒரு இன்னிங்ஸில் 9 அவுட்கள் தரப்படவில்லை என்பது ரெக்கார்டில் உள்ளது. ஆனால் லாரா அப்போதைய மே.இ.தீவுகள் வீரர்களின் நடத்தையை இன்றைய பார்வையிலிருந்து அலசுகிறார்.

கோலின் கிராஃப்ட் ஓடி வந்து நடுவரின் தோளில் இடித்தார், மைக்கேல் ஹோல்டிங் ஸ்டம்பை எட்டி உதைத்தார். அது சர்ச்சைக்குரிய நடத்தைதான் இருந்தாலும் நடுவர் மோசடிகளைத் தட்டிக் கேட்பது யார்? ஆனால் லாராவுக்கு கொலின் கிராப்ட், மைக்கேல் ஹோல்டிங் நடத்தைப் பிடிக்கவில்லை. இந்தத் தொடரோடு 1988 பாகிஸ்தான் தொடர், இங்கிலாந்துக்கு எதிரான 1990ம் ஆண்டு தொடர்களில் நடந்த சம்பவங்களைக் கொண்டு அப்போதைய மே.இ.தீவுகள் அணியின் நடத்தை அணுகுமுறைகளை விளாசினார் பிரையன் லாரா:

“நான் மே.இ.தீவுகள் அணி உலக கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்திய காலத்தில் நுழைந்தேன். 1980-லிருந்து 15 ஆண்டுகள் மே.இ.தீவுகள் டெஸ்ட் தொடரை இழந்ததில்லை. இதற்கு முன்பாகத்தான் கொலின் கிராப்ஃட் நியூஸிலாந்து நடுவர் பிரெட் குடாலை மோதித்தள்ளினார். மைக்கேல் ஹோல்டிங் தான் ஒருபோதும் கிரிக்கெட் வீரனல்ல, கால்பந்து வீரன் என்பது போல் ஸ்டம்புகளை எட்டி உதைத்தார். அந்தக் காலத்தில் இத்தகைய சம்பவங்கள் கிரிக்கெட் ஆட்டத்தில் மிகப்பெரிய தாக்கங்களை ஏற்படுத்தின.

மே.இ.தீவுகள் வெற்றி மேல் வெற்றியைப் பெற்றுக் கொண்டிருந்தாலும் அந்தக் காலக்கட்டம் பெருமைக்குரியதாக இல்லை. சில நடத்தைகள் தர்மசங்கடத்தை ஏற்படுத்தின. 1988-ல் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் இம்ரான் கான் பந்தில் விவ் ரிச்சர்ட்ஸ் ஒரு எல்.பி. தீர்ப்பில் அவுட் தரப்படாமல் இருந்தது அவரது அதிர்ஷ்டம், அப்துல் காதிர் பந்தில் ஜெஃப் டியூஜான் கேட்ச் முறையீட்டுக்கு தப்பித்தது அதிர்ஷ்டம். வீரர்கள் தாங்கள் அவுட் என்று தெரிந்தால் தாங்களே வெளியேற வேண்டும் என்று நான் கருதுகிறேன்” என்ற பிரையன் லாரா, 1990-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் மே.இ.தீவுகள் நடத்தையை சிறிதும் விரும்பவில்லை என்று தெரிவித்தார்.

“அனைவரும் கூறினர் இங்கிலாந்துக்கு வெற்றி வாய்ப்பேயில்லை என்று. ஆனால் ஜமைக்காவில் வென்றனர். டிரினிடாடில் மழைக்குப் பிறகும் கூட சிறிய இலக்கை விரட்டி வெல்லக்கூடிய அளவுக்கு கால அவகாசம் இருக்கவே செய்தது. ஆனால் மைதான பராமரிப்பாளர்களும் மைதான நிர்வாக அதிகாரிகளும் ஆட்ட நாயகன் விருதுக்காக போராடியது போல்தான் இருந்தது அவர்கள் செய்த காரியம். தாமதப்படுத்திக் கொண்டே சென்றனர், அதாவது இந்தப் போட்டி நடைபெற்று விடக்கூடாது என்பதில் அனைவரும் தீவிரமாக செயல்பட்டது போல் மந்தமாக நடந்து கொண்டனர்.

ஆனால் 2 மணி நேர ஆட்டம் சாத்தியமானது. இங்கிலாந்து வெற்றி பெற இன்னும் கால அவகாசம் இருந்தது. ஆனால் நாங்கள் என்ன செய்தோம் ஒரு மணி நேரத்தில் 7 ஓவர்களை மட்டுமே வீசி எவ்வளவு முடியுமோ அவ்வளவு தாமதப்படுத்தினோம். ஒரு மணி நேரத்தில் 7 ஓவர்களையே வீசியதால் வானிலை மோசமடைய வெளிச்சமில்லாமல் போனது, இதனையடுத்து கிரகாம் கூச் ஆட்டத்தை முடித்துக் கொள்ளலாம் என்றார். (151 ரன்கள் வெற்றி இலக்குக்கு எதிராக இங்கிலாந்து 120/5 என்று முடிந்து ஆட்டம் டிரா ஆன டெஸ்ட் போட்டியை லாரா குறிப்பிடுகிறார்).’’

ஒரு இளம் மே.இ.தீவுகள் வீரரான எனக்கு இது பெரிய தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. மே.இ.தீவுகள் அணி தோல்வியைத் தவிர்க்க காலத்தை விரயம் செய்ததைப் பார்க்கும் போது வேதனையாக இருந்தது. ஆட்டத்தை எப்படி ஆட வேண்டுமோ அப்படி ஆடவில்லை.

நான் அந்தப் போட்டியில் 12-வது வீரர். எனக்குக் குற்ற உணர்வாக இருந்தது. நான் மைதானத்துக்குள் ஷுலேஸ்கள், வாழைப்பழம், தண்ணீர், இருமல் மாத்திரைகள் என்று எடுத்துச் சென்று கொண்டிருந்தேன் (தாமதப்படுத்துவதற்காக). ஆனால் எனக்கு உண்மையில் தர்மசங்கடமாக இருந்தது.

இன்னொரு சம்பவம் அதே தொடரில்.. பார்படாஸில் அடுத்த டெஸ்ட், இதுவும் சவாலாக ஆடப்பட்ட டெஸ்ட் போட்டி, ராப் பெய்லி ஆடிக்கொண்டிருக்கிறார், அவர் லெக் திசையில் ஒரு பந்தை ஆடினார், ஜெஃப் டியூஜான் (வி.கீ) டைவ் அடித்து பந்தை பிடிக்கிறார். அப்போது கேட்ச் முறையீடு எழுந்தது, முதல் ஸ்லிப்பிலிருந்து பீல்டர் ஒருவர் (நான் அவர் பெயரைக் கூறப்போவதில்லை) நடுவரிடம் சென்று அவுட் என்கிறார். நடுவர் யோசிக்கிறார் யோசிக்கிறார் யோசித்து யோசித்து கடைசியில் அவுட் என்று கையை உயர்த்துகிறார். பெய்லி வெளியேறுகிறார், ஆனால் அது உண்மையில் அவுட் இல்லை. நாட் அவுட்.

இங்கிலாந்து அந்த டெஸ்ட் போட்டியை இழந்து மே.இ.தீவுகள் ஆண்டிகுவா டெஸ்ட் போட்டியிலும் வென்று தொடரை 2-1 என்று கைப்பற்றுகிறது.

ஒரு மேற்கிந்திய வீரனாக எனக்கு இது வேதனை அளிக்கிறது. இது மிகவும் வருத்தத்துக்குரிய ஒரு தருணமாகும். உலகின் தலைசிறந்த அணியான மே.இ.தீவுகள் கிரிக்கெட்டை வித்தியாசமாக ஆட வேண்டும் என்றே நான் உணர்ந்தேன்.

இப்படி வெற்றி பெற்றதனால் அணியின் உண்மையான பலவீனம் மறைக்கப்பட்டது, தோற்றிருந்தால் அது வெளிப்பட்டிருக்கும். 1995-ம் ஆண்டு நாங்கள் தோற்றபோது மே.இ.தீவுகள் வீழ்ச்சி தொடங்கியதாக அனைவரும் கூறினார்கள், ஆனால் கிரேட் பிளேயர்கள் ஆடிய காலத்திலேயே சரிவு கண்டோம் என்றே நான் உணர்கிறேன்.

1988, 1990-ல் பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகள் வெற்றி பெற்றிருந்தால் மே.இ.தீவுகள் கிரிக்கெட்டைச் சரிவிலிருந்து காப்பாற்ற அப்போதே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருப்பார்கள். மூத்த வீரர்களும் இளம் வீரர்களுக்கு வழிகாட்டியாக இருந்திருப்பார்கள், ஆனால் இது நடக்கவில்லை”

இவ்வாறு கிரேட் வெஸ்ட் இண்டீஸ் அணி மீது சாட்டையடி விளாசல் உரை நிகழ்த்தினார் பிரையன் லாரா.

 

http://tamil.thehindu.com/sports/article19624997.ece?homepage=true

Categories: merge-rss

ஒரே ஒரு 20 ஓவர் போட்டி: இந்தியா-இலங்கை நாளை பலப்பரீட்சை

Tue, 05/09/2017 - 10:33
ஒரே ஒரு 20 ஓவர் போட்டி: இந்தியா-இலங்கை நாளை பலப்பரீட்சை

இந்தியா- இலங்கை இடையேயான ஒரே ஒரு 20 ஓவர் ஆட்டம் கொழும்பில் நாளை நடக்கிறது. இந்திய அணி நாளைய போட்டியிலும் வெற்றி பெறும் வேட்கையுடன் இருக்கிறது.

 
 இந்தியா-இலங்கை நாளை பலப்பரீட்சை
 
கொழும்பு:

வீராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இரு அணிகள் இடையேயான டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 5-0 என்ற கணக்கிலும் இந்தியா முழுமையாக கைப்பற்றி ‘ஒயிட்வாஷ்’ செய்தது.

இந்தியா- இலங்கை இடையேயான ஒரே ஒரு 20 ஓவர் ஆட்டம் கொழும்பில் நாளை (6-ந்தேதி) நடக்கிறது.

20 ஓவர் போட்டியிலும் வென்று இந்தியா தனது ஆதிக்கத்தை நீட்டித்து கொள்ளும் ஆர்வத்துடன் உள்ளது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சமபலத்துடன் இருக்கும் இந்திய அணி நாளைய போட்டியிலும் வெற்றி பெறும் வேட்கையுடன் இருக்கிறது.

பேட்டிங்கில் கேப்டன் வீராட்கோலி, ரோகித்சர்மா ஆகியோர் மிகவும் நல்ல நிலையில் உள்ளனர். இருவருமே ஒருநாள் தொடரில் இரண்டு சதம் அடித்து முத்திரை பதித்து இருந்தனர். இதுதவிர முன்னாள் கேப்டன் டோனி, ஹர்த்திக் பாண்ட்யா, கேதர் ஜாதவ், மனிஷ் பாண்டே போன்ற சிறந்த பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.

பந்துவீச்சில் பும்ரா மிகவும் நல்ல நிலையில் உள்ளார். அவர் ஒருநாள் தொடரில் 15 விக்கெட் வீழ்த்தி முத்திரை பதித்து இருந்தார். இதுதவிர அக்‌ஷர் பட்டேல், புவனேஷ்வர்குமார் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இழந்த இலங்கை அணி 20 ஓவர் போட்டியிலாவது வென்று ஆறுதல் அடையும் ஆர்வத்துடன் இருக்கிறது. வெற்றிக்காக அந்த அணி வீரர்கள் மிகவும் கடுமையாக போராடுவார்கள்.

இரு அணிகளும் 20 ஓவர் போட்டியில் இதுவரை 10 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா 6 ஆட்டத்திலும், இலங்கை 4 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

நாளைய 20 ஓவர் ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. சோனி சிக்ஸ், டென் 3 டெலிவிசனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இந்தியா: வீராட்கோலி (கேப்டன்), ரோகித்சர்மா, ரகானே, கேதர்ஜாதவ், டோனி, ஹர்த்திக் பாண்ட்யா, மனிஷ் பாண்டே, ராகுல், அக்‌ஷர் பட்டேல், பும்ரா, புவனேஷ்வர்குமார், யசுவேந்திர சாகல், குல்தீப் யாதவ், ‌ஷர்துல் தாக்கூர்.

இலங்கை: உபுல் தரங்கா (கேப்டன்), மேத்யூஸ், டிக்வெலா, தில்சான் முனவீரா, தாசுன்‌ஷன்கா, மிலின்டா ஸ்ரீவர்த்தனா, ஹசரன்கா, தனஞ்செயா, ஜெப்ரி வான்டர்சே, இசுரு உதனா, பிரசன்னா, திசாரா பெரைரா, மலிங்கா, லக்மல், விகும் சஞ்ஜெயா.

http://www.maalaimalar.com/News/Sports/2017/09/05104204/1106290/India-vs-sri-lanka-t20-match-on-tomorrow.vpf

Categories: merge-rss

முதன்­மு­றை­யாக பக­லி­ரவு டெஸ்ட் போட்­டியில் இலங்கை

Tue, 05/09/2017 - 06:32
முதன்­மு­றை­யாக பக­லி­ரவு டெஸ்ட் போட்­டியில் இலங்கை

 

 
 

இலங்கை கிரிக்கெட் அணி தற்­போது இந்­திய அணி­யுடன் விளை­யாடி வரு­கி­றது. இவ்­விரு அணி­களும் மோதிய டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர் முடி­வ­டைந்­துள்ள நிலையில் ஒரே­ஒரு இரு­ப­துக்கு 20 கிரிக்கெட் போட்டி நாளை கொழும்பு ஆர்.பிரே­ம­தாச சர்­வ­தேச கிரிக்கெட் அரங்கில் நடை­பெ­ற­வுள்­ளது.

இந்தத் தொடர் நிறை­வ­டைந்­த­வுடன் இலங்கை அணி பாகிஸ்­தா­னுடன் மோத­வுள்­ளது.

இந்தத் தொடர் ஐக்­கிய அரபு எமி­ரேட்ஸில் இம்­மாத இறு­தியில் ஆரம்­ப­மா­கின்­றது.

அனைத்து சர்­வ­தேச அணிகளும் பாது­காப்பு கார­ண­ங்களுக்காக பாகிஸ்தான் சென்று விளை­யாட மறுத்து வரு­கின்­றன. இதனால் பாகிஸ்தான் தனது போட்­டி­களை ஐக்­கிய அரபு எமி­ரேட்ஸில் நடத்தி வரு­கி­றது.அந்த வகையில் இலங்கை -– பாகிஸ்தான் அணிகள் மோதும் தொட­ரையும் ஐக்­கிய அரபு எமி­ரேட்ஸில் இம்­மாத இறு­தியில் நடத்­து­வ­தற்கு முடி­வு­செய்­துள்­ளது.

அதன்­படி இரண்டு போட்­டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இம்­மாதம் 28ஆம் திகதி நடை­பெ­ற­வுள்­ளது. இரண்­டாவது டெஸ்ட் போட்டி பக­லி­ரவு டெஸ்­டாக நடை­பெ­ற­வுள்­ளமை விசேட அம்­ச­மாகும்.

காரணம் இலங்கை அணி முதன்­மு­றை­யாக பக­லி­ரவு டெஸ்ட் போட்­டியில் விளை­யா­ட­வுள்­ளது.

பாகிஸ்தான் சென்று விளை­யா­ட­வுள்ள அணியைத் தேர்வு செய்­வ­தற்­கான முதற்­கட்ட அணியை இலங்கைக் கிரிக்கெட் நிறு­வனம் நேற்று அறி­வித்­தது.

அதன்­படி 25 பேர் கொண்ட அந்த குழாமில் சில வீரர்கள் மீண்டும் அணிக்கு உள்­வாங்­கப்­பட்­டுள்­ளனர். அதன்­படி காயம் கார­ண­மாக போட்­டி­க­ளி­லி­ருந்து வில­கி­யி­ருந்த நட்­சத்­திர வேகப்­பந்து வீச்­சா­ள­ரான தம்­மிக்க பிரசாத் இணைத்துக் கொள்­ளப்­பட்­டுள்ளார்.

அதேபோல் டெஸ்ட் போட்­டி­களில் தொடக்க வீர­ராகக் கள­மி­றங்கும் கௌஷால் சில்­வாவும் அழைக்­கப்­பட்­டுள்ளார். 

இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணித் தலை­வ­ரான உபுல் தரங்க கேட்­டு­க்கொண்­ட­தற்­கி­ணங்க அவர் டெஸ்ட் தொடருக்கு உள்­வாங்­கப்­ப­ட­வில்லை என்றும் இலங்கைக் கிரிக்கெட் நிறு­வனம் விடுத்­துள்ள அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

அதன்­படி பாகிஸ்தான் தொட­ருக்­கான முதற்­கட்ட அணி வீரர்­களின் விபரம்...

சந்­திமால் (அணித் தலைவர்), திமுத் கரு­ணா­ரத்ன, கௌஷால் சில்வா, குசல் மெண்டிஸ், மெத்­தியூஸ், திரி­மான்ன, திக்­வெல்ல, சதீர சம­ர­விக்­கி­ரம, ரங்­கன ஹேரத், சுரங்க லக்மால், நுவன் பிரதீப், சந்­தகான், விஷ்வ பெர்னாண்டோ, லஹிரு குமார, ஜெப்ரி வெண்டர்சே, மிலிந்த சிறிவர்தன, தனஞ்ய டிசில்வா, துஷ்மந்த சமீர, தில்ருவன் பெரேரா, மலிந்த புஷ்பகுமார, ரொஷேன் சில்வா, அகில தனஞ்சய, சரித் அசலங்க, சமிந்த எரங்க, தம்மிக்க பிரசாத்.

http://www.virakesari.lk/article/24010

Categories: merge-rss

ரந்தீவை ஞாபகப்படுத்திய பொலார்ட்

Tue, 05/09/2017 - 05:25
ரந்தீவை ஞாபகப்படுத்திய பொலார்ட்
 

image_709a4e64b9.jpg

கரீபியன் பிறீமியர் லீக் போட்டிகள் இடம்பெற்றுவரும் நிலையில், இலங்கை நேரப்படி நேற்றுக் காலை இடம்பெற்ற போட்டியொன்று, இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் சுராஜ் ரந்தீவின் செய்கைகளை ஞாபகப்படுத்திவிட்டுச் சென்றது.

பிரிட்ஜ்டௌணில் இடம்பெற்ற இந்தப் போட்டி, பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ் அணிக்கும் சென். கிற்ஸ் மற்றும் நெவிஸ் பட்ரியட்ஸ் அணிக்குமிடையில் இடம்பெற்றது.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய, பொலார்ட் தலைமையிலான ட்ரைடென்ட்ஸ் அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 128 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் டியோன் வெப்ஸ்டர் 32 (25) ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் கார்லொஸ் பிறத்வெய்ட் 4 ஓவர்களில் 15 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். தப்ராஸ் ஷம்ஸி, 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

129 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பட்ரியட்ஸ் அணி, அதிரடியாகத் துடுப்பெடுத்தாடியது. 7 ஓவர்களின் நிறைவில் விக்கெட் இழப்பின்றி 128 ஓட்டங்களுடன் காணப்பட்ட அவ்வணிக்கு ஓர் ஓட்டமே தேவைப்பட்டதோடு, 31 பந்துகளில் 97 ஓட்டங்களுடன் காணப்பட்ட எவின் லூயிஸுக்கு, சதத்துக்காக 3 ஓட்டங்கள் தேவைப்பட்டன.

எனினும், 8ஆவது ஓவரின் முதலாவது பந்தை வீசிய பொலார்ட், அதை முறையற்ற பந்தாக வீசினார். அது, முறையற்ற பந்தாக அறிவிக்கப்பட்டிருக்கா விட்டாலும் கூட, அகலப்பந்து என அறிவிக்கப்படும் அளவுக்கு, அகலமாகவும் வீசப்பட்டது. நடுவர் அதை, முறையற்ற பந்து என அறிவிக்க, சதம் பெறுவதற்கான லூயிஸின் வாய்ப்பு இல்லாது போனது.

2010ஆம் ஆண்டு, இலங்கை, இந்திய அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேசப் போட்டியில், இந்திய அணி ஓர் ஓட்டத்தைப் பெற வேண்டியிருந்த போது, விரேந்தர் செவாக்குக்கு, சதத்துக்காக ஓர் ஓட்டம் தேவைப்பட்டது. ஆனால், முறையற்ற பந்தொன்றை வீசிய ரந்தீவ், செவாக், சதம் பெறுவதைத் தடுத்தார்.

அதே நடவடிக்கையையே, தற்போது பொலார்க்கும் மேற்கொண்டுள்ளார் என்று கருதப்படுகிறது.

http://www.tamilmirror.lk/பிரதான-விளையாட்டு/ரந்தீவை-ஞாபகப்படுத்திய-பொலார்ட்/44-203248

Categories: merge-rss

உலகக் கிண்ணத்தில் பெல்ஜியம்

Tue, 05/09/2017 - 05:24
உலகக் கிண்ணத்தில் பெல்ஜியம்
 

image_aab312f298.jpg

அடுத்தாண்டு இடம்பெறவுள்ள கால்பந்தாட்ட உலகக் கிண்ணத்தில் பங்குபற்றுவதற்காகத் தகுதிபெற்ற முதலாவது ஐரோப்பிய அணியாக, பெல்ஜியம் அணி மாறியுள்ளது. கிரேக்க அணிக்கெதிராகப் பெற்ற 2-1 என்ற கோல் கணக்கிலான வெற்றியே, அவ்வணிக்கு இந்த வாய்ப்பை வழங்கியது.

முதற்பாதியில் இரு அணிகளும் கோல் பெறாத நிலையில், 2ஆவது பாதியில் பெல்ஜியம் அணி தனது முதலாவது கோலைப் பெற, கிரேக்க அணி பதிலடி வழங்கியது. ஆனால் 74ஆவது நிமிடத்தில், பெல்ஜியத்தில் றொமேலு லூக்காகு, தனது அணிக்காகக் கோலொன்றைப் பெற்று, அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார். அதன் மூலம், உலகக்கிண்ண தகுதியும் உறுதியானது.

அடுத்த உலகக் கிண்ணத்தில் பங்குபற்றுவதற்கு, தொடரை நடத்தும் ரஷ்யாவுடன், பிரேஸில், ஜப்பான், ஈரான், மெக்ஸிக்கோ ஆகிய நாடுகள், ஏற்கெனவே தகுதிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilmirror.lk/பிரதான-விளையாட்டு/உலகக்-கிண்ணத்தில்-பெல்ஜியம்/44-203250

Categories: merge-rss

சச்சின் சாதனைகளை கோலி தாண்டுவாரா? புள்ளிவிவரங்கள் சொல்லும் கணிப்புகள்!

Mon, 04/09/2017 - 18:36
சச்சின் சாதனைகளை கோலி தாண்டுவாரா? புள்ளிவிவரங்கள் சொல்லும் கணிப்புகள்!

 

 
sachin_kohli21

 

இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 5-ஆவது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம், 5 ஆட்டங்களைக் கொண்ட இந்த ஒருநாள் தொடரில் இலங்கையை 5-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்துள்ளது இந்தியா.

இரு அணிகளுக்கு இடையே கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை பகலிரவாக நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இலங்கை 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இந்தியா 46.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்து வென்றது.

இந்திய கேப்டன் விராட் கோலி 116 பந்துகளில் 9 பவுண்டரிகள் விளாசி 110 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்குப் பெரிதும் உதவினார்.

இலங்கைக்கு எதிராக சதமடித்த கோலி, ஒரு நாள் போட்டியில் தனது 30-வது சதத்தைப் பதிவு செய்தார். இதன்மூலம் ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக சதங்களை விளாசியவர்கள் வரிசையில் 2-வது இடத்தை ரிக்கி பாண்டிங்குடன் பகிர்ந்துள்ளார்.

கோலி 28 வயதில் இச்சாதனையைப் புரிந்துள்ளார். இதையடுத்து இனிவரும் காலகட்டங்களில் சச்சினின் அதிக சதங்கள் உள்ளிட்ட பல சாதனைகளை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. புள்ளிவிவரங்களும் அதற்கான சாத்தியங்களை எடுத்துரைக்கின்றன. எதிர்பார்ப்பை ஈடு செய்வாரா கோலி?

ஒருநாள்: சதங்கள்

சச்சின் - 49

கோலி/பாண்டிங் - 30

186 இன்னிங்ஸ்களுக்குப் பிறகு - ஒருநாள் சதங்கள்

கோலி - 30 சதங்கள்
சச்சின் - 16 சதங்கள்
பாண்டிங் - 15 சதங்கள்

குறைந்த இன்னிங்ஸ்களில் 30 ஒருநாள் சதங்கள் எடுத்த வீரர்கள்

186 கோலி
267 டெண்டுல்கர்
349 பாண்டிங்

ஒருநாள் போட்டி: 28 வயது 302 நாள்களின்போது எடுத்த ரன்கள்

சச்சின் - 278 இன்னிங்ஸ்கள் - 11069 ரன்கள், சராசரி - 43.92, சதங்கள் - 31, அரை சதங்கள் - 55
கோலி - 186 இன்னிங்ஸ்கள் - 8537 ரன்கள், சராசரி - 55.75, சதங்கள் - 30, அரை சதங்கள் - 44

* சச்சின் 452 இன்னிங்ஸ்கள் - 49 சதங்கள்
கோலி - 30 சதங்கள்

ஒருவேளை கோலியும் சச்சின் போல 452 இன்னிங்ஸ்கள் ஆட நேர்ந்தால் இதே வேகத்தில் சதங்கள் அடித்தால் 452 இன்னிங்ஸ்களுக்குப் பிறகு 73 சதங்கள் அடித்திருக்க வாய்ப்புண்டு!

கோலி: சதங்கள்

முதல் சதம்: 2009-ல் இலங்கைக்கு எதிராக
10-வது சதம்: 2012-ல் இலங்கைக்கு எதிராக 
20th: 2014-ல் மே.இ. எதிராக 
30th: 2017-ல் இலங்கைக்கு எதிராக

2017: ஒருநாள் ரன்கள்

கோலி - 1017 ரன்கள்
டுபிளெஸ்ஸிஸ் - 814 ரன்கள்
ஜோ ரூட் - 785 ரன்கள்

ஓர் ஆண்டில் அதிக சராசரி கொண்டிருந்த வீரர்கள்

92.45 கோலி, 2017
79.53 டிவில்லியர்ஸ், 2015
79.11 பாண்டிங், 2007
75.57 ஆம்லா, 2010
70.47 தோனி, 2009

வெற்றிகரமான சேஸிங்குகளில் கடந்த ஒரு வருடத்தில் கோலியின் ஸ்கோர்கள்

85*
164*
122
76*
96*
111*
82*
4
3
110*

அதிகமுறை அடுத்தடுத்து சதங்கள் அடித்த வீரர்கள்

டி வில்லியர்ஸ் - 6 தடவை
கோலி - 5 தடவை
அன்வர் - 4 தடவை

உள்ளூர் அணிக்கு எதிராக அதிகமுறை சதமடித்த வெளிநாட்டு வீரர்கள்

டி வில்லியர்ஸ் - 5, இந்தியாவுக்கு எதிராக

சச்சின் - 4, இலங்கைக்கு எதிராக

கோலி - 4, இலங்கைக்கு எதிராக

ஒருநாள் தொடரில் அதிகமுறை 300+ ரன்கள் எடுத்த வீரர்கள்

கோலி, டிராவிட் - 5 தடவை
குயிண்டன் டி காக், ரோஹித் சர்மா - 4 தடவை

http://www.dinamani.com/sports/sports-news/2017/sep/04/kohli-sachin-2767263.html

Categories: merge-rss

கோலி 100... தோனி 100... இலங்கை 1... சாதனைத் தொடரின் புள்ளிவிவரங்கள்! #VikatanInfographics

Mon, 04/09/2017 - 17:43
கோலி 100... தோனி 100... இலங்கை 1... சாதனைத் தொடரின் புள்ளிவிவரங்கள்! #VikatanInfographics
 

கோலி

http://www.vikatan.com/news/sports/101311-india-whitewashed-srilanka-here-are-the-stats.html

Categories: merge-rss

மைலோ பாடசாலைகள் அஞ்சலோட்டப் போட்டிகள் இம்முறை யாழ்ப்பாணத்தில்

Mon, 04/09/2017 - 15:44
மைலோ பாடசாலைகள் அஞ்சலோட்டப் போட்டிகள் இம்முறை யாழ்ப்பாணத்தில்
All-Island-Schools-Relay-Championship-69
TP-BB-Website-Banner-visit-the-hub-728.jpg

நெஸ்லே லங்கா நிறுவனத்தின் மைலோ அனுசரணையுடன் 2ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அகில இலங்கை பாடசாலைகள் அஞ்சலோட்டப் போட்டிகள் எதிர்வரும் 8ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை முதற்தடவையாக யாழ். துரையப்பா மைதானத்தில் நடைபெறவுள்ளது.

கல்வி அமைச்சும், இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனர் சம்மேளனமும் இணைந்து நடாத்துகின்ற இம்முறைப் போட்டித் தொடரில் நாடளாவிய ரீதியிலிருந்து 164 ஆண்கள் பாடசாலைகளும், 138 பெண்கள் பாடசாலைகளும் (302 பாடசாலைகள்) கலந்துகொள்ளவுள்ளன.

பாடசாலைகள் விளையாட்டுத்துறை வரலாற்றில் முக்கிய தொடராக 1984ஆம் ஆண்டு முதல் நடாத்தப்பட்டு வந்த இப்போட்டித் தொடர் தவிர்க்க முடியாத காரணத்தால் 2004ஆம் ஆண்டு கைவிடப்பட்டது. எனினும், கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசமின் முயற்சியால் கடந்த வருடம் கண்டியில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.

இதன்படி, பாடசாலை மாணவர்களுக்கிடையில் சமத்துவம், அணியாக வேலை செய்தல், சகோதரத்துவம், கூட்டுறவு, நல்லிணக்கம் ஆகியவற்றை ஏற்படுத்தும் நோக்கில் இம்முறை யாழ். மண்ணில் இப்போட்டிகளை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

12, 14, 16, 18 மற்றும் 20 ஆகிய வயதுப் பிரிவுகளின் கீழ் ஆண், பெண் என இரு பாலாருக்கும் நடாத்தப்படவுள்ள இம்முறை போட்டித் தொடரில் 38 அஞ்சலோட்டப் போட்டிகள் இடம்பெறவுள்ளன. இதில் சுமார் 5,100 மாணவர்கள் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  அத்துடன் 4x100, 4x200, 4x400 மற்றும் 4x800 வரையான அஞ்சலோட்டப் போட்டிகள் இடம்பெறவுள்ளதுடன், 12 வயதுக்குட்பட்ட வீரர்களுக்கான 4x50 அஞ்சலோட்டப் போட்டிகளும் இடம்பெறவுள்ளன.Milo

இந்நிலையில், முதற்தடவையாக கலப்பு பாடசாலைகளுக்கான போட்டிகளை நடாத்துவதற்கும் போட்டி ஏற்பாட்டாளர்கள் தீர்மானித்துள்ளனர். இதில் வெற்றிபெறும் அணிகளின் புள்ளிகளும் ஒட்டுமொத்த புள்ளிப் பட்டியலில் இணைத்துக்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த தொடரின் ஆரம்ப நிகழ்வு எதிர்வரும் 8ஆம் திகதி நடைபெறவுள்ளது. அதில் பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் வீ. இராதாகிருஷ்ணன் கலந்துகொள்ளவுள்ளார். அத்துடன் எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவுள்ள இறுதி நாள் நிகழ்வின் பிரதம விருந்தினராக வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.thepapare.com

Categories: merge-rss

ஐ.பி.எல். ஒளிபரப்பு உரிமம்: ரூ.16 ஆயிரம் கோடிக்கு ஏலம் எடுத்தது ஸ்டார் இந்தியா

Mon, 04/09/2017 - 13:09
ஐ.பி.எல். ஒளிபரப்பு உரிமம்: ரூ.16 ஆயிரம் கோடிக்கு ஏலம் எடுத்தது ஸ்டார் இந்தியா

அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஐ.பி.எல் தொடர்களை ஒளிபரப்பும் உரிமத்தை ஸ்டார் இந்தியா நிறுவனம் ரூ.16,347.50 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.

 
 ரூ.16 ஆயிரம் கோடிக்கு ஏலம் எடுத்தது ஸ்டார் இந்தியா
 
மும்பை:
 
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 10 சிசன் முடிந்துவிட்டது. இந்த 10-வது சீசன் வரை ஐ.பி.எல். போட்டிக்கான ஒளிபரப்பும் உரிமையை சோனி நிறுவனம் பெற்று இருந்தது.
 
இதையடுத்து அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஐ.பி.எல். தொடரை ஒளிபரப்பும் உரிமத்துக்கான ஏலம் இன்று நடைபெற்றது. 
மும்பையில் பிசிசிஐ நடத்திய இந்த ஏலத்துக்கான போட்டியில் 20-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இருந்தன. 
 
2018 முதல் 2022 வரை ஐ.பி.எல். ஒளிபரப்பு உரிமத்தை ஸ்டார் இந்தியா நிறுவனம் ரூ.16,347.50 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. ஐ.பி.எல். ஏற்கனவே ஐ.பி.எல். டைடில் ஸ்பான்சர் மூலம் கிரிக்கெட் வாரியம் ரூ.2,199 கோடி பெற்று இருந்தது.
 
முன்னதாக இந்த ஏலம் கடந்த 28-ந்தேதி நடைபெற இருந்தது. சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கால் தாமதம் ஆனது. சுப்ரீம் கோர்ட்டு ஏலத்தை நடத்த அனுமதி அளித்ததை தொடர்ந்து செப்டம்பர் 4-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/09/04143850/1106161/Star-India-wins-IPL-media-rights-for-next-5-years.vpf

Categories: merge-rss

அமெரிக்கன் ஓபன் டென்னிஸ்: வீனஸ் வில்லியம்ஸ் காலிறுதிக்கு முன்னேற்றம் - ஷரபோவா அதிர்ச்சி தோல்வி

Mon, 04/09/2017 - 07:16
அமெரிக்கன் ஓபன் டென்னிஸ்: வீனஸ் வில்லியம்ஸ் காலிறுதிக்கு முன்னேற்றம் - ஷரபோவா அதிர்ச்சி தோல்வி

 

அமெரிக்கன் ஓபன் டென்னிஸ் போட்டியின் நான்காவது சுற்றில் வீனஸ் வில்லியம்ஸ் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். ஷரபோவா அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.

 
 
 
 
 வீனஸ் வில்லியம்ஸ் காலிறுதிக்கு முன்னேற்றம் - ஷரபோவா அதிர்ச்சி தோல்வி
 
வாஷிங்டன்:

‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.

இத்தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற நான்காவது சுற்று போட்டியில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸும், ஸ்பெயினின் கர்லா நவரோவும் மோதினர். இப்போட்டியில் வீனஸ் வில்லியம்ஸ் 6-3, 3-6, 6-1 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதிப்பெற்றார்.

இதே பிரிவில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் ரஷியாவின் ஷரபோவா, லடிவியாவின் அனஸ்டசிஜா செவச்டோவாவை எதிர்கொண்டார். இப்போட்டியின் முதல் சுற்றை ஷரபோவா 7-5 என கைப்பற்றினார். அடுத்த இரண்டு சுற்றுகளிலும் லடிவியா வீராங்கனை சிறப்பான ஆட்டத்தை வெளிகாட்டினார். இரண்டாவது சுற்றை 6-4 என ஷரபோவா இழந்தார்.

201709040619422495_1_tennis11._L_styvpf.

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய செவச்டோவா மூன்றாவது சுற்றையும் 6-2 என கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் 5-7, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் செவச்டோவா வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். ஷரபோவா தோல்வியடைந்து இப்போட்டியில் இருந்து வெளியேறினார்.

ஆண்கள் இரட்டையர் பிரிவின் இரண்டாம் சுற்று போட்டியில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் - பூரவ் ராஜா ஜோடி, ரஷியாவின் கரேன் கச்சனோவ் - அண்ட்ரே ருப்லேவ் ஜோடியை எதிர்கொண்டது. இப்போட்டியில், ரஷிய ஜோடி 6-4, 7-6 என்ற நேர் செட்களில் இந்திய ஜோடியை தோற்கடித்து மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/09/04061940/1106077/sharapova-crashes-out-of-american-open-tennis-venus.vpf

Categories: merge-rss

இத்தாலி பார்முலா1 கார்பந்தயம்: இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் முதலிடம்

Mon, 04/09/2017 - 07:15
இத்தாலி பார்முலா1 கார்பந்தயம்: இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் முதலிடம்

 

இத்தாலி பார்முலா1 கார்பந்தயத்தில் இங்கிலாந்தின் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) 1 மணி 15 நிமிடம் 32.312 வினாடிகளில் இலக்கை கடந்து முதலிடத்தை பிடித்தார்.

 
 
 இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் முதலிடம்
 
மோன்ஸா :

இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 20 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 13-வது சுற்றான இத்தாலி கிராண்ட்பிரி அங்குள்ள மோன்ஸா ஓடுதளத்தில் நேற்று நடந்தது. இதில் 306.72 கிலோ மீட்டர் பந்தய தூரத்தை நோக்கி 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் சீறிப்பாய்ந்தனர்.

இதில் முன்னாள் சாம்பியனான இங்கிலாந்தின் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) 1 மணி 15 நிமிடம் 32.312 வினாடிகளில் இலக்கை கடந்து முதலிடம் பிடித்து அதற்குரிய 25 புள்ளிகளை தட்டிச்சென்றார். இந்த சீசனில் அவர் பதிவு செய்த 6-வது வெற்றி இதுவாகும். பின்லாந்தின் வால்டெரி போட்டாஸ் 2-வதாகவும், ஜெர்மனியின் செபாஸ்டியன் வெட்டல் 3-வதாகவும் வந்தனர்.

13 சுற்று முடிவில் சாம்பியன்ஷிப் பட்டத்திற்கான வாய்ப்பில் ஹாமில்டன் 238 புள்ளிகளுடன் முதலிடத்திலும், செபாஸ்டியன் வெட்டல் 235 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் இருக்கிறார்கள். அடுத்த போட்டி சிங்கப்பூரில் வருகிற 17-ந்தேதி நடக்கிறது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/09/04094337/1106094/Italy-Formula-1-car-racing-England-Lewis-Hamilton.vpf

Categories: merge-rss

போராட்டத்தின் பின் சென் மேரிஸ் அணியை வீழ்த்தியது ரட்ணம்

Sun, 03/09/2017 - 17:30
போராட்டத்தின் பின் சென் மேரிஸ் அணியை வீழ்த்தியது ரட்ணம்
15676417_671850336332539_201446071873478
போராட்டத்தின் பின் சென் மேரிஸ் அணியை வீழ்த்தியது ரட்ணம்
TP-BB-Website-Banner-visit-the-hub-728.jpg

களனிய கால்பந்து மைதானத்தில் நடைபெற்ற இவ்வருடத்திற்கான டிவிஷன் I (பிரிவு 1) கால்பந்து சுற்றுப் போட்டியின் முதல் நாள் ஆட்டமொன்றில் இரண்டாம் பாதியில் பெற்றுக்கொண்ட கோலின் மூலம் யாழ்ப்பாணம் சென் மேரிஸ் விளையாட்டுக் கழகத்தை 1-0 என கொழும்பு ரட்ணம் விளையாட்டுக் கழகம் வீழ்த்தியது.

கடந்த முறை பிரிவு இரண்டில் இரண்டாம் இடம் பெற்று இம்முறை பிரிவு ஒன்றுக்கு தரமுயர்த்தப்பட்ட ரட்ணம் அணி வீரர்கள் இந்தப் போட்டியின் ஆரம்பம் முதலே தமது ஆதிக்கத்தை செலுத்தினர்.

எனினும், ஆட்டத்தின் போக்கிற்கு மாறாக சென் மேரிஸ் அணி போட்டியின் முதலாவது வாய்ப்பை உருவாக்கியது. ரட்ணம் களத்தடுப்பில் ஏற்பட்ட சிறிய பிழையை சாதகமாக்கப் பயன்படுத்தி சிவநேசன் மதிவதனன் அடித்த பந்தை ரட்ணம் கோல் காப்பாளர் தடுத்தார்.

அதற்குப்பின் சுதாகரித்து விளையாடிய ரட்ணம் அணியின் முன்கள வீரர் ஒழுவாசென் ஒலவாலே மறுபக்கத்தில் கோலடிக்க, அது கோலுக்கு வெளியில் சென்றது.

தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய ரட்ணம் அணிக்காக ப்ரி கிக் வாய்ப்பு கிடைக்கப்பெற அதனை மதுரங்க சற்றே மேலே உதைந்ததால் கோல் பெறும் சிறந்த வாய்ப்பு மீண்டும் பறிபோனது.

தொடர்ந்து சிறப்பாட்டத்தை வெளிக்காட்டிய மதுரங்க மீண்டும் பல வாய்ப்புக்களை உருவாக்கினார். எனினும் அவற்றின்மூலம் ரட்ணம் அணிக்கான பலன் கிடைக்கவில்லை.

போட்டியின் மிக இலகுவான வாய்ப்பு 30வது நிமிடத்தில் ஒலவாலேயிற்கு கிடைக்க, அந்த வாய்ப்பையும் ஒலவாலே தவறவிட்டார்.

இரு அணிகளும் சமபலத்துடன் மோத முதலாம் பாதி எந்தவித கோல்களும் இன்றி முடிவடைந்தது.

முதல் பாதி: ரட்ணம் விளையாட்டுக் கழகம்  0-0 சென் மேரிஸ் விளையாட்டுக் கழகம்

முதலாம் பாதியைப் போலவே இரண்டாம் பாதியையும் உத்வேகத்துடன் தொடங்கியது ரட்ணம் கழகம்.

இரண்டாம் பாதியின் ஆரம்பத்தில், ரட்ணம் அணியின் இளம் வீரர் மொஹமட் அமானுக்கு கிடைத்த வாய்ப்பை அவர் நழுவ விட்டார். எனினும் அவரே போட்டியின் முதலாவது கோளிற்கு வித்திட்டார்.

ஆட்டத்தின் 59வது நிமிடத்தில் அமான் உள்ளனுப்பிய பந்தை மொஹமட் ஆகில் தலையால் முட்டி கோலாக்கினார்.

அவர் அடித்த கோலிற்குப் பின்பு சுதாகரித்த சென் மேரிஸ் அணி வீரர்கள் புத்துணர்ச்சியுடன் விளையாடினர். எனினும் சென் மேரிஸ் அணியின் உள்ளனுப்பல்களை ரட்ணம் கழக பின்கள வீரர்கள் லாவகமாகத் தடுத்தனர்.

போட்டியின் இறுதி நேரத்தில் சென் மேரிஸ் அணிக்கு ஹெடர் மூலம் கோலைப் பெறுவதற்கான சிறந்த வாய்ப்பு கிடைத்த போதிலும் மரியதாஸ் நிதர்சன் அடித்த பந்து கோல் கம்பத்தில் பட்டு வெளியேறியது.

எனவே போட்டி 1-0 என ரட்ணம் அணியின் வெற்றியுடன் நிறைவடைந்தது.

முழு நேரம்–  ரட்ணம் விளையாட்டுக் கழகம் 1-0 சென் மேரிஸ் விளையாட்டுக் கழகம்

கோல் பெற்றவர்கள்

ரட்ணம் விளையாட்டுக் கழகம்மொஹமட் ஆகில் 59’

http://www.thepapare.com/

Categories: merge-rss

தோனி இன்னும் பாதி கூட முடிந்து விடவில்லை: விமர்சகர்களுக்கு ரவிசாஸ்திரி பதிலடி

Sat, 02/09/2017 - 16:23
தோனி இன்னும் பாதி கூட முடிந்து விடவில்லை: விமர்சகர்களுக்கு ரவிசாஸ்திரி பதிலடி

 

 
dhoni

தோனி, பயிற்சியாளர் ரவிசாஸ்திரி.   -  படம்.| ராய்ட்டர்ஸ்.

2019 உலகக்கோப்பைக்கான தயாரிப்பு, அணிச்சேர்க்கை ஆகியவை பற்றி அணித்தேர்வுக்குழுவினர் பல விஷயங்களை பரிசீலித்து வரும் நிலையில் தோனியின் இடம் குறித்து மீண்டும் மீண்டும் சில தரப்புகள் கேள்வி எழுப்ப, ரவிசாஸ்திரி அந்த முன்முடிபுகளை தகர்த்தார்.

இது குறித்து ரவிசாஸ்திரி திட்டவட்டமாகத் தெரிவித்ததாவது:

அணியில் தோனியின் தாக்கம், செல்வாக்கு மிகப்பெரியது. ஓய்வறையில் அவர் ‘லிவிங் லெஜண்ட்’ என்று பார்க்கப்படுகிறார். கிரிக்கெட்டுக்கு அவர் ஒரு ஆபரணம். அவர் முடிந்து விட்டார் என்று கூறுவது தவறு, அவர் இன்னும் பாதிகூட முடிந்து விடவில்லை என்பதே என் கருத்து.

இப்படி யாராவது நினைத்தால் அது மிகவும் தவறாகும். அவர்கள் தவறாகப் புரிந்து கொண்டதாகவே அர்த்தம்.

வீரர்களை எப்படி தேர்ந்தெடுப்பது? இவர்கள் நன்றாக ஆடிக் கொண்டிருக்கும் போது? ஒருநாள் கிரிக்கெட்டில் நாட்டின் மிகச்சிறந்த விக்கெட் கீப்பர் தோனி. அவரது பேட்டிங் சராசரியையும் குறை கூற முடியாது, இன்னும் என்னதான் வேண்டும்? அவர் நீண்ட ஆண்டுகாலம் விளையாடி விட்டார் என்பதற்காகவே அவருக்கு மாற்று வீரர் தேவை என்று நினைக்கிறீர்கள் இல்லையா?

தோனி சிறப்பாகவே பங்களித்து வருகிறார். சுனில் கவாஸ்கரையும் சச்சின் டெண்டுல்கரையும் அவர்களுக்கு வயது 36 ஆகிவிட்டது என்று ஒதுக்கி விட முடியுமா? எனவே தோனி பற்றி இத்தகைய சிந்தனைகளைத் தூண்டுவது எது?

2019 உலகக்கோப்பைக்கு இன்னும் நீண்ட தொலைவு செல்ல வேண்டும், இப்போதைக்கு நாங்கள் ஒரு சமயத்தில் ஒரே தொடரில்தான் கவனம் செலுத்தி வருகிறோம்.

இன்றைய கிரிக்கெட் அணிகளைப் பாருங்கள், ஒரு அணி கூட அயல்நாடுகளில் சென்று சிறப்பாக ஆடுவதில்லை. ஒரு அணி கூட இல்லை. ஆனால் இப்போது இந்தியா அந்தவகையான அணியாக உள்ளது. நாம் இதனை ஏற்கெனவே சிறுகச் சிறுகச் செய்து வருகிறோம்.

கடந்த 3 ஆண்டுகளை எடுத்துக் கொள்ளுங்கள், இங்கிலாந்தில் 2014-ல் ஒருநாள் தொடரை வென்றோம். ஆஸ்திரேலியாவை டி20-யில் ஒயிட்வாஷ் செய்தோம். ஆஸ்திரேலியாவில் எந்த ஒரு வடிவத்திலும் இதனைச் சாதித்த அணியை நான் இன்னும் பார்க்கவில்லை. கடந்த ஆண்டு ஆசியக் கோப்பையை வென்றோம். எனவே அயல்நாடுகளில் இந்த இளம் இந்திய அணி நிறைய என்பதைச் சாதித்து விட்டது.

இங்கிலாந்து கவுன்ட்டி கிரிக்கெட்டில் ஏன் பவுலர்கள் மட்டும் ஆட வேண்டும்? விராட் கோலி, ஷிகர் தவண், ரோஹித் சர்மா, மற்றும் பிறரும் கூட ஆடலாம், நான் இதற்கு முழு ஆதரவு அளிக்கிறேன்.

இவ்வாறு கூறினார் தோனி.

http://tamil.thehindu.com/sports/article19608837.ece

Categories: merge-rss

பனாமாவை வீழ்த்தி மெக்சிகோ அணி 2018 உலகக்கோப்பை கால்பந்துக்கு தகுதி

Sat, 02/09/2017 - 16:22
பனாமாவை வீழ்த்தி மெக்சிகோ அணி 2018 உலகக்கோப்பை கால்பந்துக்கு தகுதி

 

 
Mexico

வெற்றியைக் கொண்டாடும் மெக்சிகோ வீரர்கள்.   -  படம். | ஏ.எஃப்.பி.

உலகக்கோப்பைக் கால்பந்து தகுதிச் சுற்று போட்டியில் பனாமா அணியை 1-0 என்று வீழ்த்தி மெக்சிகோ அணி ரஷ்யாவில் நடைபெறும் 2018 உலகக்கோப்பைக்குத் தகுதி பெற்றுள்ளது.

இதன் மூலம் பிரேசில், ஜப்பான், இரான், போட்டியை நடத்தும் ரஷ்யா ஆகிய நாடுகளுடன் 2018 உலகக்கோப்பைக் கால்பந்துக்குத் தகுதி பெற்ற 5-வது அணியானது மெக்சிகோ.

மெக்சிகோ சிட்டியில் உள்ள ஆஸ்டெக்கா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் ஹிர்விங் லோசானோ 53-வது நிமிடத்தில் தலையால் முட்டி கோலுக்குள் செலுத்த அதே வெற்றி கோலாகவும் மெக்சிகோ அணிக்கு அமைந்தது.

இந்த வெற்றி மூலம் 7வது முறையாக தொடர்ந்து உலகக்கோப்பை கால்பந்துக்கு மெக்சிகோ தகுதி பெற்றது.

http://tamil.thehindu.com/sports/article19609867.ece

Categories: merge-rss

இந்தியாவுக்கு எதிரான தொடர் முடிந்ததும் எனது எதிர்காலம் குறித்து முடிவு செய்வேன்: மலிங்கா

Sat, 02/09/2017 - 16:20
இந்தியாவுக்கு எதிரான தொடர் முடிந்ததும் எனது எதிர்காலம் குறித்து முடிவு செய்வேன்: மலிங்கா

 

இந்தியாவுக்கு எதிரான தொடர் முடிந்ததும் தனது எதிர்காலம் குறித்து முடிவு செய்வதாக இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா கூறியுள்ளார்.

 
 மலிங்கா
 
கொழும்பு:

கொழும்பில் நேற்று முன்தினம் நடந்த இந்தியாவுக்கு எதிரான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி தோல்வி கண்ட பிறகு அந்த அணியின் பொறுப்பு கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான மலிங்கா அளித்த பேட்டியில் கூறியதாவது:-

காலில் ஏற்பட்ட காயத்தால் 19 மாதங்களுக்கு பிறகு களம் திரும்பினேன். ஜிம்பாப்வே மற்றும் இந்தியாவுக்கு எதிரான தொடரில் நான் நன்றாக விளையாடவில்லை. இந்தியாவுக்கு எதிரான இந்த தொடர் முடிந்ததும் என்னை பற்றி நானே சுய மதிப்பீடு செய்வதோடு, இன்னும் எத்தனை காலம் என் உடல் விளையாடுவதற்கு ஒத்துழைக்கும் என்று சோதிக்க உள்ளேன். நான் எவ்வளவு அனுபவம் பெற்றவனாக இருந்தாலும், அணிக்காக போட்டியை வெற்றி பெற செய்ய முடியவில்லை என்றாலோ?, அணிக்கு தேவையானதை செய்ய முடியவில்லை என்றாலோ அணியில் தொடர்ந்து இருப்பதில் என்ன பலன்?. 19 மாதங்களுக்கு பிறகு ஆட்டத்துக்கு திரும்பி இருக்கும் நான் அடுத்த 3 அல்லது 4 மாதங்களில் பார்முக்கு திரும்ப முடியுமா? என்று பார்க்க போகிறேன். வருங்காலத்தில் எத்தனை போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்பதை பார்ப்பேன். உடல் ஒத்துழைக்காமல் போனாலோ?, அணியின் எதிர்பார்ப்பை என்னால் நிறைவேற்ற முடியாமல் போனாலோ கிரிக்கெட்டில் இருந்து மகிழ்ச்சியாக ஓய்வு பெறுவேன்.

இவ்வாறு மலிங்கா கூறினார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/09/02143510/1105880/After-the-series-against-India-I-will-decide-my-future.vpf

Categories: merge-rss