விளையாட்டுத் திடல்

அதிக ரன்கள் குவித்ததில் அசாருதீனை முந்திய டோனி

Sat, 01/07/2017 - 13:02
அதிக ரன்கள் குவித்ததில் அசாருதீனை முந்திய டோனி

 

ஒரு நாள் போட்டியில் அதிக ரன் எடுத்த இந்திய வீரர்களில் அசாருதீனை முந்திய டோனி 4-வது இடத்தை பெற்றார். அவர் 294 ஒரு நாள் போட்டியில் விளையாடி 9442 ரன் எடுத்துள்ளார்.

 
அதிக ரன்கள் குவித்ததில் அசாருதீனை முந்திய டோனி
 
ஆன்டிகுவா:

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3-வது ஒரு நாள் போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு டோனி முக்கிய பங்கு வகித்தார். அவர் 35 வயதிலும் 78 ரன்கள் குவித்து தனது திறமையை வெளிப்படுத்தினார்.

15-வது ரன்னை எடுத்த போது டோனி ஒரு நாள் போட்டியில் அதிக ரன் எடுத்த இந்திய வீரர்களில் 4-வது இடத்தை பிடித்தார். அவர் அசாருதீனை முந்தினார். தெண்டுல்கர், கங்குலி, டிராவிட் ஆகியோருக்கு அடுத்த படியாக டோனி உள்ளார்.
 
201707011225392787_4ryoraks._L_styvpf.gi


அவர் 294 ஒரு நாள் போட்டியில் விளையாடி 9442 ரன் எடுத்துள்ளார். இதில் 10 சதமும், 63 அரை சதமும் அடங்கும். சராசரி 51.31 ஆகும். அதிகபட்சமாக 183 ரன் குவித்துள்ளார். அசாருதீன் 334 போட்டியில் விளையாடி 9378 ரன் எடுத்து உள்ளார்.

ஒரு நாள் போட்டியில் அதிக ரன் எடுத்த ‘டாப் 5’ இந்திய வீரர்கள் விவரம்:-

1. தெண்டுல்கர் -18,426 ரன்

(463 ஆட்டம்)

2. கங்குலி- 11,363 ரன் (404)

3. டிராவிட்- 10,889 ரன் (344)

4. டோனி- 9442 ரன் (294)

5. அசாருதீன்-9378 ரன் (334)

http://www.maalaimalar.com/News/Sports/2017/07/01122539/1093913/MS-Dhoni-overtakes-Mohammad-Azharuddin.vpf

Categories: merge-rss

சிறுவயது தோழியை கரம்பிடித்த நட்சத்திர கால்பந்து வீரர் மெஸ்ஸி

Sat, 01/07/2017 - 06:50
சிறுவயது தோழியை கரம்பிடித்த நட்சத்திர கால்பந்து வீரர் மெஸ்ஸி

 

பிரபல நட்சத்திர கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி தனது சிறுவயது தோழி அண்டோனல்லா ரோகுசோவை நேற்று திருமணம் செய்து கொண்டார்.

 
 
 
 
சிறுவயது தோழியை கரம்பிடித்த நட்சத்திர கால்பந்து வீரர் மெஸ்ஸி
 
பியுனோஸ் ஐரஸ்:

அர்ஜென்டினா கால்பந்து அணியில் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்சி. உலக புகழ்பெற்ற அவர் தனது ஆரம்ப கால தோழியான அண்டோனல்லா ரோகுசோவை திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்தார். ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் வசித்து வரும் மெஸ்ஸி தம்பதியினருக்கு தியாகோ (4) ஒரு வயதில் மேடியோ என்ற 2 மகன்கள் உள்ளனர்.
 
201707010851211957_messi2._L_styvpf.gif

சிறுவயதில் தனது தோழியுடன் மெஸ்ஸி


இந்த நிலையில் அண்டோனல்லா ரோகுசோவை முறைப்படி திருமணம் செய்ய மெஸ்சி முடிவு செய்தார். அவர்களது திருமணம் மெஸ்சியின் சொந்த ஊரான ரொசாரியோவில் நேற்று நடைபெற்றது. இதில், முக்கிய கால்பந்து வீரர்கள் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.
 
201707010851211957_messi3._L_styvpf.gif

திருமண உடையில் மெஸ்ஸி தம்பதியினர்திருமண உடையில் அரங்கிற்கு வந்த மணமக்கள் இருவரும் உற்சாகமாக முத்தமிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த நூற்றாண்டின் சிறந்த திருமணம் இது என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/07/01085121/1093858/Argentina-hosts-Lionel-Messis-wedding-of-the-century.vpf

Categories: merge-rss

ஆட்டநாயகன் தோனி, அஷ்வின், குல்தீப் யாதவ் சுழலில் சுருண்டது மேற்கிந்தியத் தீவுகள்!

Sat, 01/07/2017 - 06:16
ஆட்டநாயகன் தோனி, அஷ்வின், குல்தீப் யாதவ் சுழலில் சுருண்டது மேற்கிந்தியத் தீவுகள்!
 
 

இன்று, மேற்கிந்தியத் தீவுகளுடன் நடந்த 3-வது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

இந்தியா மேற்கிந்திய தீவுகள் கோலி தோனி

சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் பாகிஸ்தானிடம் கோப்பையை நழுவவிட்ட இந்திய அணி, தற்போது மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது. 5 ஒருநாள் மற்றும் 1 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா விளையாடுகிறது. 2 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது. இதனிடையே, இன்று ஆண்டிகுவாவில் 3-வது ஒருநாள் போட்டி நடைபெற்றது.

 

டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி, பந்துவீச்சைத் தேர்வுசெய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி, 4 விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் குவித்துள்ளது. இந்திய அணியில் அதிகபட்சமாக தோனி 78 ரன்களும், ரஹானே 72 ரன்களும் குவித்தனர். இதைத் தொடர்ந்து 252 ரன்களை இலக்காகக்கொண்டு களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, 38.1 ஓவர்கள் முடிவில் 158 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஜேசன் முகமது 40 ரன்களும், பாவல் 30  ரன்களும் எடுத்தனர். இந்தியா தரப்பில், குல்தீப் யாதவ் மற்றும் அஷ்வின் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஆட்டநாயகனாக, 78 ரன்கள் குவித்த தோனி தேர்வு செய்யப்பட்டார்.

http://www.vikatan.com/news/sports/93952-west-indies-falls-off-over-ashwin-kuldeeps-spin-attack.html

Categories: merge-rss

கெப்ளர் முதல் மோர்கன் வரை... இரு நாடுகளுக்கு விளையாடிய கிரிக்கெட் வீரர்கள்!

Fri, 30/06/2017 - 20:22
கெப்ளர் முதல் மோர்கன் வரை... இரு நாடுகளுக்கு விளையாடிய கிரிக்கெட் வீரர்கள்!

வாய்ப்புக்காக, திறமையை வெளிப்படுத்துவதற்கான இடம் கிடைக்காத காரணத்துக்காக, பணத்துக்காக, சந்தர்ப்பசூழல்களுக்காக... என, இரு வேறு நாடுகளுக்கான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய கிரிக்கெட் வீரர்களின் எண்ணிக்கை அதிகம்.  அப்படி விளையாடிய, விளையாடிக்கொண்டிருக்கும் பத்து கிரிக்கெட் வீரர்களின் பட்டியல் இது.

ஜான் ட்ரைகோஸ் (John Traicos)

விளையாடிய நாடுகள் : தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே.

Jhon Traicos

1970-களில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தென் ஆப்பிரிக்க அணியில் அறிமுகமான ஆஃப் ஸ்பின் பெளலர் ஜான் ட்ரைகோஸ். தென் ஆப்பிரிக்காவில் நிலவிய உள்நாட்டுப் பிரச்னையால் கிரிக்கெட் போட்டி தடைசெய்யப்பட, ஜிம்பாப்வேயின் உள்ளூர் அணிகளில் விளையாடி, தேசிய அணியில் இடம்பிடித்தார். 1982-ம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக மூன்று சாம்பியன் டிராபி போட்டிகளில் ஜிம்பாப்வே அணிக்காக விளையாடினார் ஜான் ட்ரைகோஸ். இதில் 1983-ம் ஆண்டில் நடந்த உலகக்கோப்பைப் போட்டியும் அடக்கம். ஜிம்பாப்வே முதன்முதலில் டெஸ்ட் அந்தஸ்து பெற்று, இந்தியாவுக்கு எதிராக விளையாடிய டெஸ்ட் போட்டியில் ஜான் ட்ரைகோஸ் இடம்பெற்றிருந்தார். தற்போது ஆஸ்திரேலியாவில் வசித்துவரும் ஜான், தென் ஆப்பிரிக்காவுக்காக மூன்று சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும், ஜிம்பாப்வே அணிக்காக 31 போட்டிகளிலும் விளையாடியிருக்கிறார்.

டிர்க் நனெஸ் (Dirk nannes)

விளையாடிய நாடுகள் : ஆஸ்திரேலியா, நெதர்லாந்து.

Dirk Nannes

கிரிக்கெட் போட்டியைத் தொழில்ரீதியாகக் கையாளும் வீரரான டிர்க் நனெஸ், ஒன்பது நாடுகளில் பதினைந்து விதமான கிரிக்கெட் போட்டித் தொடர்களில் பங்கேற்றிருக்கிறார். 2009-ம் ஆண்டு டி-20 உலகக்கோப்பைப் போட்டித் தொடரில் நெதர்லாந்து அணிக்காக விளையாடி சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான இவர், அடுத்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு விளையாடியது ஆஸ்திரேலிய அணிக்காக. இரு அணிகளுக்கும் 18 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே விளையாடியிருந்தாலும், இவரது துல்லியமான பந்து வீச்சுக்கு ரசிகர்கள் அதிகம். ஐபிஎல் போட்டிகளில் சென்னை, பெங்களூரு, டெல்லி அணிகளுக்காக விளையாடியிருக்கும் டிர்க் நனெஸ், தற்போது கிரிக்கெட் வர்ணனையாளர்.

எட் ஜாய்ஸ் (Ed Joyce)

விளையாடிய அணிகள் : இங்கிலாந்து, அயர்லாந்து.

Ed Joyce

2006-ம் ஆண்டில் அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியின் மூலம் இங்கிலாந்து அணியில் அறிமுகமான எட் ஜாய்ஸ், தற்போது முழுநேர அயர்லாந்து கிரிக்கெட் வீரர். 2007-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்காக விளையாடியவர், 2011-ம் ஆண்டில் அயர்லாந்து அணிக்காக ஆடினார். அயர்லாந்தின் டப்ளின் நகரில் பிறந்த இவருக்கு இரண்டு சகோதரர்கள், இரண்டு சகோதரிகள். அனைவருமே அயர்லாந்து கிரிக்கெட் வீரர்கள் என்பது ‘அடடே' ஆச்சர்யம். 

லுக் ரோஞ்சி (Luck Ronchi)

விளையாடிய நாடுகள் : ஆஸ்திரேலியா, நியூசிலாந்து.

Luck Ronchi

4 டெஸ்ட், 85 ஒருநாள், 32 டி-20 போட்டிகளில் விளையாடி சமீபத்தில் ஓய்வுபெற்ற நியூசிலாந்து வீரரான லுக் ரோஞ்சி, சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானது ஆஸ்திரேலிய அணி வீரராக! தாய்நாடு நியூசிலாந்து என்றாலும், சில காரணங்களுக்காக ஆஸ்திரேலியா குடிபெயர்ந்தது ரோஞ்சி குடும்பம். ஆஸ்திரேலிய அணியில் இணைந்து சில போட்டிகளில் விளையாடியவர், 2012-ம் ஆண்டில் நியூசிலாந்து திரும்பி தாய்நாட்டுக்காக விளையாடும் முயற்சியைத் தொடங்கினார். முயற்சி திருவினையாகி 2013-ம் ஆண்டில் நியூசிலாந்து கிரிக்கெட் அணியில் இடம் கிடைத்தது. விக்கெட் கீப்பரான ரோஞ்சி, இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஏழாவது வீரராகக் களமிறங்கி, 170 ரன்கள் விளாசியிருக்கிறார். விக்கெட் கீப்பர்கள் அடித்த தனிநபர் அதிகபட்ச ரன்களில் மூன்றாம் இடம் இது. தவிர, 7-வது வரிசையில் விளையாடிய வீரர் ஒருவர் அடித்த அதிகபட்ச ரன்களில் முதல் இடம் இது.

ஆண்டர்சன் கம்மின்ஸ் (Anderson Cummins)

விளையாடிய நாடுகள் : வெஸ்ட் இண்டீஸ், கனடா.

Anderson Cummins கிரிக்கெட்

வேகப்பந்து வீச்சாளரான ஆண்டர்சன் கம்மின்ஸ் 5 டெஸ்ட், 76 ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருக்கிறார். 1991-ம் ஆண்டில் சர்வதேசக் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அறிமுகமானார். 1996-ம் ஆண்டுக்குப் பிறகு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதைத் தவிர்த்து கனடாவுக்குக் குடிபெயர்ந்தார். 10 வருட இடைவெளிக்குப் பிறகு கனடா – கென்யா – ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் கனடா அணி வீரராக தன் 40-வது வயதில் அறிமுகமானார். தொடர்ந்து 2007-ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரிலும் கனடா அணிக்காக விளையாடிய கம்மின்ஸ், தற்போது கிரிக்கெட் பயிற்சியாளர்.

கெப்ளர் வெசெல்ஸ் (Kepler Wessels)

விளையாடிய நாடுகள் : ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா.

Kepler Wessels

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருவேறு நாடுகளுக்காக விளையாடிய முதல் வீரர் கெப்ளர் வெசெல்ஸ். 149 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியிருக்கும் கெப்ளர், தென் ஆப்பிரிக்கா அணிக்காக 71 போட்டிகள், ஆஸ்திரேலிய அணிக்காக 78 போட்டிகள் என சரிபாதி ஸ்கோர்செய்திருக்கிறார். 1983-ம் ஆண்டு உலகக்கோப்பைப் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடியவர், 1985-ம் ஆண்டில் தன் ஓய்வை அறிவித்தார். தென் ஆப்பிரிக்காவுக்குக் குடிபெயர்ந்து உள்ளூர் போட்டிகளில் விளையாடினார். உள்நாட்டுப் பிரச்னை, அனுபவமில்லாத இளம் வீரர்கள்… எனப் பரிதாபமாக நின்ற தென் ஆப்பிரிக்க அணி, கெப்ளருக்குக் கேப்டன் பொறுப்பு கொடுத்து 1992-ம் ஆண்டு உலகக்கோப்பை போட்டிக்குத் தென் ஆப்பிரிக்க அணியை வழிநடத்த அழைத்தது. முதல் போட்டியே ‘முன்னாள் அணி’யான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அமைய, அணியை வெற்றிபெறச் செய்து அசத்தினார் கெப்ளர். இந்த உலகக்கோப்பைத் தொடரில் தென் ஆப்பிரிக்கா அரை இறுதி வரை வந்தது. பிறகு, தன் ஓய்வு முடிவை உறுதிசெய்துவிட்டு, கிரிக்கெட் பயிற்சியாளராகத் தொடர்ந்துகொண்டிருக்கிறார்.  

இயான் மோர்கன் (Eoin Morgan)

விளையாடிய நாடுகள் : அயர்லாந்து, இங்கிலாந்து.

Eoin Morgan

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தற்போதைய கேப்டன், இயான் மோர்கன். 2006-ம் ஆண்டு ஸ்காட்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில், அயர்லாந்து அணிக்காக அறிமுகமானவர். `நல்ல பேட்ஸ்மேன், குட் ஃபினிஷர்' எனப் பாராட்டப்பட்ட மோர்கன், அயர்லாந்திலிருந்து இங்கிலாந்து அணிக்கு இடம்பெயர்ந்து அசத்திக்கொண்டிருக்கிறார். 

டூகி பிரவுன் (Dougie Brown)

விளையாடிய நாடுகள் : இங்கிலாந்து, ஸ்காட்லாந்து.

Dougie Brown

1997-ம் ஆண்டில் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணிக்காக அறிமுகமானார் பிரவுன். இங்கிலாந்து அணிக்காக சில ஒருநாள் போட்டிகளில் விளையாடியவர், பிறகு நமீபியாவுக்குக் குடிபெயர்ந்து உள்ளூர் போட்டிகளில் விளையாடினார். 2003-ம் ஆண்டில் நடந்த உலகக்கோப்பைத் தொடரில், நமீபியா கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் இவர். பிறகு, ஸ்காட்லாந்தில் உள்ள அணிகளுக்குப் பயிற்சி கொடுத்தார். டெஸ்ட் அந்தஸ்து பெறாத அணிகளுக்கு இடையே நடைபெறும் சாம்பியன்ஸ் போட்டித் தொடரில், ஸ்காட்லாந்து அணி முன்னிலை பெறுவதற்கு பிரவுன் பயிற்சி அளித்ததோடு, ஸ்காட்லாந்து அணிக்காகக் களத்திலும் விளையாடினார். 2007-ம் ஆண்டில் நடந்த உலகக்கோப்பைத் தொடரில் ஸ்காட்லாந்து அணி இடம்பெற்றது. ஆல்ரவுண்டரான டூகி பிரவுனும் ஸ்காட்லாந்து அணியில் இடம்பெற்றார். தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருக்கிறார்.

ஜெரைன்ட் ஜோன்ஸ் (Geraint Jones)

விளையாடிய நாடுகள் : இங்கிலாந்து, பப்புவா நியூகினியா.

Geraint Jones

பிறந்தது பப்புவா நியூகினியா. 31 டெஸ்ட் போட்டிகள், 51 ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருக்கும் ஜோன்ஸ், 2005-ம் ஆண்டில் நடந்த ஆஷஷ் தொடரில் விக்கெட் கீப்பராக சிறப்பான பங்களிப்பை இங்கிலாந்து அணிக்கு வழங்கியவர். இங்கிலாந்து அணியிலிருந்து வெளியேறி, பப்புவா நியூகினியா அணிக்காக விளையாடத் தொடங்கினார். 2013-ம் ஆண்டில் நடந்த டி-20 உலகக்கோப்பை தகுதிச்சுற்றுப் போட்டிகள் மற்றும் 2014-ம் ஆண்டில் நடந்த உலகக்கோப்பை தகுதிச்சுற்றுப் போட்டிகளில், பப்புவா நியூகினியா அணி பாராட்டும்படியான பங்களிப்பைப் கொடுத்ததில், ஜோன்ஸுக்கும் பங்கு உண்டு. தற்போது கிரிக்கெட் பயிற்சியாளராகப் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்.

ரியான் காம்ப்பெல் (Ryan Campbell)

விளையாடிய நாடுகள் : ஆஸ்திரேலியா, ஹாங்காங்.

Ryan Campbell

இரண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டி, மூன்று டி-20 கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே விளையாடியிருந்தாலும், ஆஸ்திரேலியாவின் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் முக்கியமான விக்கெட்கீப்பர் – பேட்ஸ்மேனாக ஜொலித்தவர் ரியான். ஆஸ்திரேலிய அணியின் எவர்கிரீன் விக்கெட் கீப்பரான ஆடம் கில்கிறிஸ்ட் ஓய்வுபெறும் வரை தன் இடத்தைத் தக்கவைத்துக்கொண்ட காரணத்தால், ஆஸ்திரேலியாவுக்காக அதிக அளவு சர்வதேசப் போட்டிகளில் ரியான் இடம்பெற முடியவில்லை. தவிர்க்க முடியாத காரணத்தினால் ஆடம் கில்கிறிஸ்ட் அணியில் இடம்பெறாத இரண்டு போட்டிகளில் மட்டுமே ரியான் களமிறங்க முடிந்தது. ஹாங்காங் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பு ரியானுக்குக் கிடைத்தது. 2016-ம் ஆண்டில் நடந்த உலகக்கோப்பை டி-20 தொடரில் ஹாங்காங் அணி கலந்துகொள்ளும் வாய்ப்பைப் பெற, தன் 44 வயதில் ஹாங்காங் அணிக்காக விளையாடினார். தற்போது நெதர்லாந்து கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருக்கிறார் ரியான் காம்ப்பெல்.

 

இவர்களைத் தவிர, இன்னும் பல கிரிக்கெட் வீரர்கள் இரு வேறு நாடுகளின் சர்வதேச அணியில் இடம்பிடித்து விளையாடியிருக்கிறார்கள்.

http://www.vikatan.com/news/sports/93909-cricketers-who-have-played-for-two-countries.html

Categories: merge-rss

ஒரே வருடத்தில் இரண்டு ஐபிஎல்- பிசிசிஐ புதிய திட்டம்?

Fri, 30/06/2017 - 10:55
ஒரே வருடத்தில் இரண்டு ஐபிஎல்- பிசிசிஐ புதிய திட்டம்?

மினி ஐபிஎல் தொடர் நடத்துவது தொடர்பாக ஆலோசனைகள் நடைபெற்றுவருவதாக, ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

Rajeev Shukla


இந்தியாவில், ஏப்ரல்-மே மாதத்தில் நடக்கும் ஐபிஎல் தொடர், உலகம் முழுவதும் அதிக வரவேற்பைப்  பெற்றது. இதில், முதல் இரண்டு இடத்தைப் பிடிக்கும் அணிகள், செப்டம்பரில் நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பைத் தொடரில் விளையாடுவது வழக்கம். ஆனால், சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு போதிய வரவேற்பு இல்லாத காரணத்தால், இரண்டு ஆண்டுக்கு முன்னர் இந்தத் தொடர் கைவிடப்பட்டது.


இதனால், தற்போது செப்டம்பர் மாதத்தில் 15  நாள்கள் இடைவெளி கிடைத்துள்ளதால், அதில் மினி ஐபிஎல் தொடர் ஒன்றை நடத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்றுவருவதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்தார். மேலும், இது குறித்துப் பேசிய  அவர், சாம்பியன்ஸ் கோப்பை டி20 தொடர் நடத்தப்படுவதில்லை என்பதால், அந்த நேரத்தில் வெளிநாடுகளில் மினி ஐபிஎல் தொடரை நடத்துவது குறித்து ஆலோசித்துவருகிறோம். மினி ஐபிஎல் தொடரை நடத்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பொருத்தமான இடமாக தோன்றுவதாகவும் தெரிவித்தார்.

 


கடந்த ஆண்டே இதே போன்று மினி ஐபிஎல் தொடர் நடத்துவதற்கான ஆலோசனைகளை பிசிசிஐ மேற்கொண்டது. இருப்பினும் பல காரணங்களால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

http://www.vikatan.com/news/sports/93850-discussions-by-bcci-for-mini-ipl-series-on-september.html

Categories: merge-rss

ரவி சாஸ்திரியைப் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கவைத்த 'மும்பை லாபி'!

Fri, 30/06/2017 - 10:43

ந்திய கிரிக்கெட்டில், 'மும்பை லாபி ' வெகு பிரபலம். மும்பையைச் சேர்ந்த நான்கைந்து வீரர்கள் இந்திய அணியில் இருந்த காலமும் உண்டு. அணியில் அவர்கள் வைத்ததுதான் சட்டம். கவாஸ்கர் கேப்டனாக இருந்தால், மும்பையைச் சேர்ந்த வீரர்களுக்கே முக்கியத்துவம் கொடுப்பார். ரவி சாஸ்திரி, வெங்சர்க்கார் போன்றோர் அப்படித்தான் இந்திய அணியில் கோலோச்சினர். அணி நிர்வாகமும் மும்பைவாசிகள் கையில்தான் இருந்தது. இந்த நிலை மாறியுள்ளதால், தற்போது சச்சினால் `மும்பை லாபி' மீண்டும் தலையெடுக்கத் தொடங்கியுள்ளது. 

mumbai__12013.jpg

இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து கும்ப்ளே விலகியுள்ள நிலையில், புதிய பயிற்சியாளர் தேர்வு நடைபெற்றது. இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் திடீரென பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தார். ஒதுங்கியிருந்த ரவி சாஸ்திரியைப் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கவைத்தது, சச்சின் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ரவி சாஸ்திரி, சச்சின் இருவருமே தற்போது லண்டனில் குடும்பத்துடன் ஓய்வெடுத்துவருகின்றனர். கடந்த முறை பயிற்சியாளர் தேர்வின்போது ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால், `பயிற்சியாளர் பதவிக்காக விண்ணப்பித்து, கியூவில் வர மாட்டேன்' என்கிற முடிவில் ரவி சாஸ்திரி இருந்தார். சச்சின் சமாதானப்படுத்திய பிறகே, ரவி சாஸ்திரி பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்திருக்கிறார். 

http://www.vikatan.com/news/tamilnadu/93882-tendulkars-hand-in-ravi-shastri’s-re-entry-for-india-coach-role.html

Categories: merge-rss

வேகமாக ஆயிரம் ஓட்டங்களை கடந்த குஷல்

Fri, 30/06/2017 - 10:34
வேகமாக ஆயிரம் ஓட்டங்களை கடந்த குஷல் 

 

 

இலங்கை அணியின் இளம் நட்சத்திர துடுப்பாட்ட  வீரர் குஷல் மென்டிஸ் சிம்பாப்வே அணிக்கெதிராக 28 ஓட்டங்களைப்பெற்றபோது ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 1000 ஓட்டங்களை கடந்த 2 ஆவது இலங்கை வீரர் என்ற பெருமையைப்பெற்றார்.

kusal-mendis.jpg

காலி சர்வதேச மைதானத்தில் இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையில் இன்று இடம்பெற்றுவரும் ஒருநாள் போட்டியிலேயே குஷல் மென்டிஸ் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.

குஷல் மென்டிஸ் இந்த மைல்கல்லை 28 இன்னிங்ஸ்களில் எட்டியுள்ளார்.

இதேவேளை, இதற்கு முன்னர் ரோய் டயஸ் 27 இன்னிங்களிலும் உபுல் தரங்க 28 இன்னிங்களிலும் ஆயிரம் ஓட்டங்களைக் கடந்திருந்த நிலையில் குஷல் மென்டிஸ் 28 இன்னிங்ஸில் 1000 ஓட்டங்ளைக்கடந்து உபுல் தரங்கவுட் 2 ஆவது இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

 

காலி சர்வதேச மைதானத்தில் கடந்த 17 வருடங்களுக்குப் பின்னர் இடம்பெறும் ஒருநாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 5 விக்கெட்டுகளை மாத்திரமிழந்து 316 ஓட்டங்களைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/21368

Categories: merge-rss

கோஹ்லி ஏன் சொதப்புகிறார்?

Thu, 29/06/2017 - 20:08
கோஹ்லி ஏன் சொதப்புகிறார்?
 

சார்லஸ்

 

சாம்பியன்ஸ் டிராஃபி தோல்வி,  பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து கும்ப்ளே விலகல், கோஹ்லியின் கேப்டன்ஸி மீதான நம்பிக்கையின்மை என மீண்டும் சர்ச்சைகளுக்குள் வந்து விழுந்திருக்கிறது இந்திய கிரிக்கெட் அணி. பயிற்சியாளரான ஒரே ஆண்டில் பதவியில் இருந்து விலகியிருக்கிறார் அனில் கும்ப்ளே. ‘`என்னுடைய ‘ஸ்டைலில்’,  நான் பயிற்சியாளராகத் தொடர்வதில் கேப்டனுக்கு மாற்றுக்கருத்துகள் இருப்பதாக  பிசிசிஐ என்னிடம் சொல்லி யிருக்கிறது. முரண்பாடுகளைக் களைய பிசிசிஐ எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்து விட்டநிலையில் நான் பதவி விலகுகிறேன்’’ என அறிவித்திருக்கிறார் கும்ப்ளே.

இதே கும்ப்ளே கடந்த ஆண்டு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றபோது, ‘‘கோஹ்­லியின் ஆக்­ரோஷ அணு­கு­முறை எனக்குப் பிடித்­தி­ருக்­கி­றது. நானும் ஆக்­ரோ­ஷ­மா­ன­வனே. ஆனால், களத்தில் இதனை நாங்கள் எதிர்­கொள்ளும் விதம் வித்தியா­ச­மாக இருக்­கும். ஆக்­ரோ­ஷ­மாகச் செயல்­ப­டு­வ­தற்கும், எல்லை மீறு­வ­தற்கும் இடையே ஒரு சிறு இடை­வெ­ளிதான் இருக்­கி­றது என்­பதை இருவருமே அறிவோம்’’  என்றார். கும்ப்ளே வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால், இந்த ஓர் ஆண்டு இடை வெளியில் நடந்திருப்பது இரு தரப்பிலுமான எல்லைமீறல்தான்.

p26a.jpg

பயிற்சியாளர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எந்த இலக்கணமும் கிடையாது. அதே சமயம் பயிற்சியாளர் என்பவர்  பி.டி. மாஸ்டர்களைப்போல் இருக்க முடியாது என்பதே `கிரேக் சேப்பல்’ காலகட்டம் சொல்லித் தந்த பாடம். அந்தப் பாடம் இவர்களுக்குப் புரியவில்லை என்பதால் வந்த சோதனைதான் கோஹ்லி - கும்ப்ளே பிரிவு. 

உண்மையில் கோஹ்லி- கும்ப்ளேவுக்கு இடையேயான இந்தப் பிரச்னை இரு தலைமுறைகளுக்கான இடைவெளியும், யார் சொல்வதை யார் கேட்பது என்கிற ஈகோ மோதலும்தான். `நாங்கள் செய்வது சரி... எங்களிடம் கோபப்பட யாருக்கும் உரிமையில்லை. வெற்றியோ, தோல்வியோ நாங்களே எங்களைச் சரிசெய்துகொள்வோம். எங்களுக்கு டாஸ்க் மாஸ்டர்கள் தேவையில்லை’ என்கிற தலைமுறையைச் சேர்ந்தவர் கோஹ்லி. மறுபக்கம், `ஒழுங்கு, ஓழுக்கம், ட்ரெய்னிங், கீழ்ப்படிதல்’ என்கிற தலைமுறையைச் சேர்ந்தவர் கும்ப்ளே.  இரண்டு அணுகுமுறையிலும் தவறில்லை. அதை எக்ஸிக்யூட் செய்வதில்தான் இரண்டு தலைமுறைகளும் மோதிக்கொண்டிருக்கின்றன.

கோஹ்லி எவ்வளவு ஆக்ரோஷமானவரோ, அதே அளவுக்கு உஷ்ணமானவர் கும்ப்ளே. தன்னுடைய பெளலிங்கின்போது யாராவது ஃபீல்டிங்கில் சொதப்பினால், டென்ஷன் ஆவார் கும்ப்ளே. ஆனால், இப்போதைய தலைமுறையோ, `அடுத்த மேட்ச்ல பார்த்துக்கலாம்’ என ஈஸியாகக் கடக்கும் தலைமுறை. இங்குதான் பிரச்னையே. ஒருவரின் அணுகுமுறையை இன்னொருவரால் சகித்துக்கொள்ள முடியவில்லை.

``2007–ம் ஆண்டு இந்திய அணியின் கேப்டன் பதவி எனக்குக் கிடைத்தது. கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் இந்திய அணியில் விளையாடியபிறகே எனக்கு கேப்டன் பதவி கிடைத்தது. அதுவும் கேப்டன் பதவிமீது அப்போது யாருக்கும் விருப்பம் இல்லாததால்தான், என்னால் அதைப் பெற முடிந்தது’’ என்று,  தான் கேப்டனான கதையை முன்பு சொல்லியிருக்கிறார் கும்ப்ளே. கோஹ்லி கேப்டன் ஆனதற்குப் பின்பு இப்படிப்பட்ட பின்னணிக் கதைகள் எதுவும் இல்லை. கோஹ்லியின் பேட்டிங்கின்மீது யாருக்கும் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், ஒரு சிறந்த கேப்டனாகத் தகுதிகளை வளர்த்துக்கொள்வதற்கு முன்பாகவே கேப்டனாகிவிட்டார் கோஹ்லி.

2014-ம் ஆண்டின் இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் பாதியில் கேப்டனாகப் பொறுப்பேற்றார் கோஹ்லி. அப்போது இந்திய அணிக்குப் பயிற்சியாளர் கிடையாது. ரவி சாஸ்திரி அணியின் இயக்குநராகச் செயல்பட்டுக்கொண்டிருந்தார். தோனி தொடரின் பாதியிலேயே கேப்டன்ஷிப் பொறுப்பில் இருந்து விலகியதற்கும், கோஹ்லி பொறுப்பேற்றதற்கும் சாஸ்திரியே காரணம். 2016 ஜூலை வரை கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் பயிற்சியாளரே இல்லாமல், ரவி சாஸ்திரியின் தலைமையில் இயங்கிவந்தது இந்திய அணி. ரவி சாஸ்திரி பயிற்சியாளராவோ, அணியின் இயக்குநராகவோ இல்லாமல் அணிக்குள் ஒருவராக, கோஹ்லியின் நண்பராகவே இருந்தார். அதனால்தான், கடந்த ஆண்டு பயிற்சியாளரை நியமிக்க டெண்டுல்கர், கங்குலி, லக்‌ஷ்மண் தலைமையில் குழு அமைக்கப்பட்டபோது, ``பயிற்சியாளரே தேவையில்லை. சாஸ்திரியே போதும்’’ என்றார் கோஹ்லி. ஆனால், டெண்டுல்கர் தலைமையிலான குழு கும்ப்ளேவைப் பயிற்சியாளராக நியமித்தது. 2019 இங்கிலாந்து உலகக்கோப்பை வரை கும்ப்ளே பயிற்சி யாளராக இருக்க வேண்டும் என்பதே இந்த மூவர் குழுவின் விருப்பம்.

ஆனால் இந்த மூவரும் செய்யத் தவறியது பயிற்சியாளர் என்பவர், சாஸ்திரியைப்போல் ஒரு நண்பராக இருக்க வேண்டும் என நினைக்காமல், `பயிற்சியாளர் என்பவர் கண்டிப்பானவராக இருக்க வேண்டும்’ என நினைத்ததே.

p26b.jpg

கோஹ்லி துணிச்சலானவரா?

கோஹ்லியின் ஆட்டிடியூட் எப்போதுமே விவாதப்பொருள்தான். துணிச்சலானவராக, ஆக்ரோஷமானவராக, அதிரடியானவராக ஃபீல்டில் இருப்பார் கோஹ்லி. ஆனால் இது எல்லாமே ஃபீல்டிங் செய்யும்போதுதான். கேப்டனாக கோஹ்லி துணிச்சலானவரா, அதிரடியானவரா என்றால், இல்லை என்பதே பதில். ஒரு செட்டான ஃபார்மேட்டிலேயே பயணிப்பார் கோஹ்லி. இரண்டு ஸ்பின்னர், இரண்டு அல்லது மூன்று வேகப்பந்து வீச்சாளர், இரண்டு ஆல் ரவுண்டர் எனப் பல ஆண்டுகாலமாகப் பின்பற்றப்படும் பழைய ஃபார்முலாவையே இன்னமும் பின்பற்றுபவர்தான் கோஹ்லி.

அதிரடியாக அணி வீரர்களை மாற்றிப்போட்டுப் பார்க்கும் சோதனை முயற்சிகளை  கோஹ்லி விரும்ப மாட்டார். காரணம், அணியில் கன்னாபின்னாவென மாற்றங்களை ஏற்படுத்தினால், அது விமர்சனங்களைக் கிளப்பும் எனப் பயப்படுவார். இன்னொரு முக்கியமான விஷயம்... கோஹ்லி கேப்டனாக யோசிக்க வேண்டியதைவிட பேட்ஸ்மேனாகப் பல வியூகங்களை யோசிக்க வேண்டியிருக்கிறது. அவர் கேப்டனாக ரிஸ்க் எடுத்து யோசிப்பதைவிட பேட்ஸ்மேனாக அவர் சிந்திக்க அதிக நேரம் வேண்டும். அதனால்தான், அவர் கேப்டன்ஸியில் அதிரடி முடிவுகளை எடுப்பதில்லை. அந்த முடிவுகளை மற்றவர்கள் எடுக்கும்போது, அதை அவரால் தாங்கிகொள்ளவும் முடியவில்லை.

 கடந்த மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்கு டெஸ்ட் தொடர் போட்டியின் கடைசி டெஸ்ட்டில் கோஹ்லியால் ஆட முடியாத நிலை. ரஹானே கேப்டன் ஆனார். இதுதான் நேரம் என ரிஸ்க் எடுக்க விரும்பினார் கும்ப்ளே.

கோஹ்லியின் இடத்தை சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவைக் கொண்டு நிரப்பினார் கும்ப்ளே. அந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அஷ்வின், மிஷ்ரா என சீனியர்கள் தடுமாற, நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலியாவின் பேட்டிங்கை சீர்குலைத்தார் குல்தீப்.
 
குல்தீப்பை அணிக்குள் கொண்டுவந்ததை கோஹ்லி ரசிக்கவில்லை என்பதோடு தனக்குத் தகவல் சொல்லாமல் ப்ளேயிங் லெவனில் எப்படி மாற்றங்களைக் கொண்டுவரலாம் எனக் கோபப்பட்டார்.  இங்கிருந்துதான் இருவருக்கும் இடையிலான உரசல் உச்சம் தொட்டது. சாம்பியன்ஸ் டிராஃபி அணியில் கும்ப்ளே சில வீரர்களைச் சேர்க்க வேண்டும் எனச் சொல்ல, கோஹ்லி அதை மறுக்க... மோதல் வெளி உலகத்துக்கு வந்தது.
கும்ப்ளே சிறந்த நிர்வாகியாக இருக்கலாம். ஆனால், அவர் சிறப்பான பயிற்சியாளர் இல்லை. அதேபோல் கோஹ்லி மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக இருக்கலாம். ஆனால், வியூகங்கள் அமைப்பதிலும், நெருக்கடியான சூழலை ஹேண்டில் செய்வதிலும் அவர் சிறந்தவர் இல்லை.

கோஹ்லிக்கு கேப்டன்ஸியைவிட தன்னுடைய பேட்டிங் முக்கியம் என்பதில் எவ்வளவு கவனம் இருந்ததோ, அதேபோல் அனில் கும்ப்ளேவுக்குப் பயிற்சியாளர் என்பதைவிட பிசிசிஐ-ல் பல சீர்திருத்தங்களைச் செய்யவேண்டும் என்பதில் அதிகக் கவனம் இருந்தது.

கும்ப்ளே- கோஹ்லி இருவருமே இன்னும் மெச்சூர் ஆகியிருந்தால், இந்தச் சூழலே உருவாகாமல் இருந்திருக்கும்!

http://www.vikatan.com/anandavikatan

Categories: merge-rss

சதம் அடித்ததும், டோனி அதிக அளவில் ரியாக்சன் காட்டாதது ஏமாற்றம் அளித்தது: பகர் சமான்

Thu, 29/06/2017 - 16:57
சதம் அடித்ததும், டோனி அதிக அளவில் ரியாக்சன் காட்டாதது ஏமாற்றம் அளித்தது: பகர் சமான்

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் நான் சதம் அடித்ததும் டோனி முகத்தில் அதிக அளவில் ரியாக்சன் இல்லாதது ஏமாற்றம் அளித்தது என பகர் சமான் கூறியுள்ளார்.

 
 பகர் சமான்
 
இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் கோப்பையை வென்றது. கோப்பையுடன் சென்ற பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு சொந்த நாட்டில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது. அனைத்து மீடியாக்களும் வீரர்களை அழைத்து பேட்டி கண்டு வருகிறது.

பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் பகர் சமான். இவர் 106 பந்தில் 114 ரன்கள் குவித்து ஆட்ட நாயகன் விருது பெற்றார். இவர் PakPassion.net-ற்கு பேட்டியளித்தார். அப்போது நான் சதம் அடிக்கும்போது டோனி முகத்தில் அதிக அளவில் எந்த ரியாக்சனும் இல்லை. இதனால் நான் சற்று ஏமாற்றம் அடைந்தேன் என்று கூறியுள்ளார்.

201706292034564954_zaman01-s._L_styvpf.g

மேலும் இதுகுறித்து பகர் சமான் கூறுகையில் ‘‘நான் சதம் அடித்ததும் டோனியின் முகத்தில் அதிக அளவில் எந்த ரியாக்சனும் இல்லை. இதனால் நான் சற்று ஏமாற்றம் அடைந்தேன். நான் நன்றாக பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது, கோலி மற்றும் இந்திய வீரர்கள் என்னைப் பற்றி ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள்.

ஆகவே, நான் சதம் அடித்ததும், எனக்கு பாராட்டு தெரிவிக்கமாட்டார்கள் என்று நினைத்தேன். ஆனால், நான் கோலியை நோக்கும்போது, அவர் கிழே குணிந்து கொண்டிருந்தார். ஆனால், அவர் கைதட்டி பாராட்டினார்’’ என்றார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/06/29203450/1093644/I-was-disappointed-by-MS-Dhoni-as-he-did-not-show.vpf

Categories: merge-rss

மகளிர் உலகக்கோப்பை: 257 ரன்களில் 178 நாட் அவுட்; இலங்கை வீராங்கனை அட்டப்பட்டு ஜெயங்கனி சாதனை

Thu, 29/06/2017 - 15:03
மகளிர் உலகக்கோப்பை: 257 ரன்களில் 178 நாட் அவுட்; இலங்கை வீராங்கனை அட்டப்பட்டு ஜெயங்கனி சாதனை

 

178 ரன்கள் விளாசிய இலங்கை வீராங்கனை அட்டப்பட்டு ஜெயங்கனி. | படம்.| ராய்ட்டர்ஸ்.
178 ரன்கள் விளாசிய இலங்கை வீராங்கனை அட்டப்பட்டு ஜெயங்கனி. | படம்.| ராய்ட்டர்ஸ்.
 
 

பிரிஸ்டலில் நடைபெற்று வரும் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இலங்கை அணி 257 ரன்களைக் குவித்துள்ளது.

இதில் 3-ம் நிலையில் களமிறங்கிய அட்டப்பட்டு சமாரி ஜெயங்கனி என்ற இடது கை விராங்கனை தனியாகப் போராடி, 178 ரன்களை எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்து சாதனை புரிந்துள்ளார், இது மகளிர் ஒருநாள் போட்டிகளில் 3-வது அதிகபட்ச தனிநபர் ரன் எண்ணிக்கையாகும். மேலும் அணி எடுத்த 257 ரன்களில் 178 ரன்கள் பங்களிப்பு என்பது அதிகபட்ச பங்களிப்பு என்ற வகையில் முதலிடம் பெறுகிறது. இதன் மூலம் மொத்த ரன் எண்ணிக்கையில் 69.26% பங்களிப்பு செய்து சாதனை புரிந்துள்ளார்.

டாஸ் வென்ற ஆஸி. அணி கேப்டன் லேனிங் முதலில் இலங்கை அணியை பேட் செய்ய அழைத்தார். நடுவரிசையில் சிறிவதனே 24 ரன்களையும் பின் வரிசையில் கவுசல்யா 13 ரன்களையும் எடுத்ததே இந்த ஸ்கோரில் இரண்டு இரட்டை இலக்க ஸ்கோராகும், மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கில் வெளியேறினர்.

அட்டப்பட்டு ஜெயங்கனி மட்டும் ஒரு முனையில் நின்று 61 பந்துகளில் அரைசதமும், 106 பந்துகளில் சதமும், 131 பந்துகளில் 150 ரன்களையும் இறுதியில் 143 பந்துகளில் 22 பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் 178 ரன்களையும் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ இலங்கை அணி 257 ரன்கள் எடுத்தது.

258 ரன்கள் இலக்கை விரட்டும் ஆஸ்திரேலிய மகளிர் அணி 1 விக்கெட்டை இழந்து 9 ஓவர்களில் 50 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.

http://tamil.thehindu.com/sports/மகளிர்-உலகக்கோப்பை-257-ரன்களில்-178-நாட்-அவுட்-இலங்கை-வீராங்கனை-அட்டப்பட்டு-ஜெயங்கனி-சாதனை/article9741908.ece?homepage=true

Categories: merge-rss

இலங்கை – சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடர் நாளை ஆரம்பம்

Thu, 29/06/2017 - 06:42
இலங்கை – சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடர் நாளை ஆரம்பம்

 

 

இலங்கை மற்றும் சிம்­பாப்வே அணிகள் மோதும் ஒருநாள் தொடர் நாளை ஆரம்­ப­மா­க­வுள்­ளது.

DSC_8033.JPG

இலங்­கைக்கு சுற்றுப்பயணம் மேற்­கொண்­டுள்ள சிம்­பாப்வே அணி ஐந்து போட்­டிகள் கொண்ட ஒருநாள் தொட­ரிலும் ஒரே ஒரு டெஸ்ட் போட்­டி­யிலும் விளை­யா­டு­கின்­றது. 

இவ்­விரு அணி­களும் மோதும் ஒருநாள் தொடரின் முத­லி­ரண்டு போட்­டிகள் காலி மைதா­னத்தில் நடை­பெ­று­கின்­றன. மீத­முள்ள மூன்று போட்­டி­களும் ஹம்­பாந்­தோட்டை மைதா­னத்தில் நடை­பெ­ற­வுள்­ளன. ஒருநாள் தொடரின் முத­லா­வது போட்டி நாளை காலி மைதா­னத்தில் நடை­பெ­ற­வுள்­ளது.

சிம்­பாப்வே அணி­யுடன் மோத­வுள்ள இலங்கை அணி நேற்­று­முன்­தினம் அறி­விக்­கப்­பட்­டது. அதுவும் முத­லி­ரண்டு போட்­டி­க­ளுக்­கான அணியே அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இதில் திஸர பெரேரா, சந்­திமால், நுவன் குல­சே­கர ஆகி­யோ­ருக்கு இடம் கொடுக்­கப்­ப­ட­வில்லை. அத்­தோடு பயிற்­சியின் போது காய­ம­டைந்த சீகுகே பிர­சன்­ன­வுக்கும் ஓய்­வ­ளிக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லையில் ஒழுக்­காற்று விசா­ர­ணைக்கு உள்­ளாக்­கப்­பட்டு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்ள லசித் மலிங்க அணியில் இடம்­பெற்­றுள்ளார். அதன்­படி அஞ்­சலோ மெத்­தியூஸ் தலை­வ­ரா­கவும் உபுல் தரங்க உப தலை­வ­ரா­கவும் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர்.

நாளை ஆரம்­ப­மா­க­வுள்ள ஒருநாள் தொடர் எதிர்­வரும் ஜூலை மாதம் 10ஆம் திக­தி­வரை நடை­பெ­ற­வுள்­ளது.

அதைத் தொடர்ந்து இவ்­விரு அணி ­களும் மோதும் ஒரேயொரு டெஸ்ட் போட்டி கொழும்பு ஆர்.பிரே­ம­தாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் எதிர்வரும் ஜூலை மாதம் 14ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

http://www.virakesari.lk/article/21324

Categories: merge-rss

சங்காவின் அதிரடி தொடர்கிறது

Wed, 28/06/2017 - 16:20
சங்காவின் அதிரடி தொடர்கிறது
 

image_24d4a935c7.jpg

இங்கிலாந்தின் பிராந்திய கிரிக்கெட் போட்டிகளில், சரே அணிக்காக விளையாடிவரும், இலங்கையின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார, இந்தப் பருவகாலத்தில் 1,000 ஓட்டங்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

பலமிக்க யோர்க்‌ஷையர் அணிக்கெதிராக, லீட்ஸில் இடம்பெற்றுவரும் போட்டியிலேயே, இந்தச் சாதனையை அவர் படைத்தார்.

பகல் - இரவுப் போட்டியாக, மென்சிவப்புப் பந்தைப் பயன்படுத்தி இடம்பெற்றுவரும் இப்போட்டியில், அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய குமார் சங்கக்கார, 183 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 180 ஓட்டங்களைக் குவித்தார். தனது சதத்தை 136 பந்துகளில் கடந்த அவர், அதன் பின்னர் மேலும் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடியிருந்தார்.

மழையால் பாதிக்கப்பட்ட 2ஆவது நாளில், சரே அணி பெற்ற 142 ஓட்டங்களில் 98 ஓட்டங்களை, சங்கக்காரவே குவித்திருந்திருந்தார்.

இந்தப் போட்டியில் அவர் பெற்ற சதத்துடன், இந்தப் பருவகாலத்தில், 6 சதங்களை அவர் குவித்துள்ளார். மேலதிகமாக, 2 அரைச்சதங்களையும் பெற்றுள்ளார். இதன்படி, 7 போட்டிகளில், 11 இனிங்ஸ்களில் துடுப்பெடுத்தாடி, 108.6 என்ற சராசரியில் 1,086 ஓட்டங்களை அவர் குவித்துள்ளார்.

இந்தப் பருவகாலமே, முதற்தரப் போட்டிகளில் தனது இறுதிப் பருவகாலம் என அறிவித்துள்ள குமார் சங்கக்கார, மிகச்சிறப்பான ஃபோர்மை வெளிப்படுத்தியுள்ளார். அத்தோடு, இப்பருவகாலத்தில் தொடர்ச்சியாக 5 சதங்களைக் குவித்த அவர், 6ஆவது சதத்தைக் குவிக்கும் வாய்ப்பை, 16 ஓட்டங்களால் தவறவிட்டிருந்தார்.

இதைத் தவிர, ஒரு போட்டிக்கு முன்னதாக அவர், அனைத்து வகையான தொழில்முறையான போட்டிகளில், 100 சதங்களைக் கடந்திருந்தார். தற்போது அவர், 101ஆவது சதத்தையும் பெற்றுள்ளார்.

இப்போட்டியில் சரே அணி, 7 விக்கெட்டுகளை இழந்து 516 ஓட்டங்களைக் குவித்து, பலமான நிலையில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilmirror.lk/பிரதான-விளையாட்டு/சங்காவின்-அதிரடி-தொடர்கிறது/44-199574

Categories: merge-rss

இரண்டாவது கிறாஸ்ஹொப்பேர்ஸ் பிறீமியர் லீக்கின் சம்பியனாகிய நோர்த் டிராகன்ஸ்

Wed, 28/06/2017 - 11:07
இரண்டாவது கிறாஸ்ஹொப்பேர்ஸ் பிறீமியர் லீக்கின் சம்பியனாகிய நோர்த் டிராகன்ஸ்
GPL-2017.jpg
இரண்டாவது கிறாஸ்ஹொப்பேர்ஸ் பிறீமியர் லீக்கின் சம்பியனாகிய நோர்த் டிராகன்ஸ்
 
 
Davis-Cup-2017-728-banner.jpg

யாழ்ப்பாணம் கிறாஸ்ஹொப்பேர்ஸ் விளையாட்டுக் கழகம், தமது கழகத்தின் முன்னாள் வீரர்களான ராஜசிங்கம் றொஹான் மற்றும் சிவசங்கர் ஆகியோரது ஞாபகார்த்தமாக நடாத்திவரும் அணிக்கு 06 பேர் விளையாடும் 05 ஓவர்கள் கொண்ட கிறாஸ்ஹொப்பேர்ஸ் பிறீமியர் லீக் (ஜி.பி.எல்) போட்டித் தொடரின் இரண்டாவது பருவகால சம்பியன்களாக நோர்த் டிராகன்ஸ் அணியினர் முடிசூடியுள்ளனர்.  

இந்த பருவகாலத்திற்கான போட்டிகள் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி மைதானத்தில் மிகவும் கோலாகலமாக இடம்பெற்றிருந்தது. இலங்கையில் தற்போது ஏலம் மூலம் வீரர்கள் தெரிவு செய்யப்பட்டு இடம்பெறும் ஒரேயொரு கிரிக்கெட் போட்டித்தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இம்முறை ஜி.பி.எல் போட்டித் தொடரில் குழு A இல் ரில்கோ றைடர்ஸ், டீப் டைவேர்ஸ் மற்றும் நோர்த் டிரகன்ஸ் ஆகிய அணிகளும், குழு B இல் ரொப் செலஞ்சேர்ஸ், சிவன் வோரியர்ஸ், சயன்ஸ் வேல்ட் கிங்ஸ் ஆகிய அணிகளும் களங்கண்டிருந்தன.

இப் போட்டி நிகழ்வின் ஆரம்ப விழாவில் பிரதம விருந்தினராக லயன் திரு. ஆறுமுகநாதனும், சிறப்பு விருந்தினராக மகாஜனாக் கல்லூரியின் பழைய மாணவியும் கோலூனறிப் பாய்தலில் இலங்கை தேசிய சாதனையை நிலைநாட்டியுள்ள வீராங்கனையுமான அனித்தா ஜெகதீஸ்வரன் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.

குழு நிலைப்போட்டிகள்

குழு – A

ரில்கோ றைடேர்ஸ் எதிர் நோர்த் டிராகன்ஸ்

ரில்கோ றைடேர்ஸ்: 65/3 (05) – மதுசன் 35(14), வினோத் 1/06

நோர்த் டிராகன்ஸ்: 66/2 (3.2)

போட்டி முடிவு – 10 பந்துகள் மீதமாக இருக்கையில் நோர்த் டிராகன்ஸ் 3 விக்கெட்டுகளால் வெற்றி

போட்டியின் ஆட்டநாயகன் – ஸ்ரீகுகன்

நோர்த் டிராகன்ஸ் எதிர் டீப் டைவேர்ஸ்

டீப் டைவேர்ஸ்: 70/2(05) – ஜேம்ஸ் 54(14), பிருந்தாபன் 2/12

நோர்த் டிராகன்ஸ்: 75/1 (04) – வினோத் 55(18), வதுசனன் 1/18

போட்டி முடிவு – 06 பந்துகள் மீதமிருக்கையில் 04 விக்கெட்டுகளால் நோர்த் டிராகன்ஸ் வெற்றி

போட்டியின் ஆட்டநாயகன் – வினோத்

டீப் டைவேர்ஸ் எதிர் ரில்கோ றைடேர்ஸ்

டீப் டைவேர்ஸ்: 73/3(05) – ஜேம்ஸ் 24(10), கல்கோகன் 1/15

ரில்கோ றைடேர்ஸ்: 77/3(04) – மதுசன் 52(18) சரன்ராஜ் 3/09

போட்டி முடிவு – 06 பந்துகள் மீதமிருக்கையில் 02 விக்கெட்டுகளால் ரில்கோ றைடேர்ஸ் அணி வெற்றி

போட்டியின் ஆட்டநாயகன் – மதுசன்

குழு – B

ரொப் செலஞ்சேர்ஸ் எதிர் சயன்ஸ் வேல்ட் கிங்ஸ்

ரொப் செலஞ்சேர்ஸ்: 64/3 (05) – ஜனுதாஸ் 48(18), சுஜந்தன் 1/08

சயன்ஸ் வேல்ட் கிங்ஸ்: 65/2(4.5) – சுஜந்தன் 52(19), விதுன் 2/07

போட்டி முடிவு – ஒரு பந்து மீதமாக இருக்கையில் 3 விக்கெட்டுகளால் சயன்ஸ் வேல்ட் கிங்ஸ் அணி வெற்றி

போட்டியின் ஆட்டநாயகன் – சுஜந்தன்

சிவன் வோரியர்ஸ் எதிர் ரொப் செலஞ்சேர்ஸ்

ரொப் செலஞ்சேர்ஸ்: 60/1(05) – ஐனுதாஸ் 25(14), கஜானந் 19(09), சாகித்தியன் 1/14

சிவன் வோரியர்ஸ்: 61/1 (3.5) – சாகித்தியன் 30(11), சுதர்சன் 27(10), பகீரதன் 1/15

போட்டி முடிவு – 07 பந்துகள் மீதமாக இருக்கையில் 4 விக்கெட்டுகளால் சிவன் வோரியர்ஸ் அணியினர் வெற்றி

போட்டியின் ஆட்டநாயகன் – சாகித்தியன்  

சிவன் வோரியர்ஸ் எதிர் சயன்ஸ் வேல்ட் கிங்ஸ்

சயன்ஸ் வேல்ட் கிங்ஸ்: 72/4(05) – ஜெயரூபன் 25(13), செல்ரன் 19(05), ரஜீவ் 2/08

சிவன் வோரியர்ஸ்: 38/5 (04) – சாகித்தியன் 13(08), நிறோஜன் 3/08

போட்டி முடிவு – 34 ஓட்டங்களால் சயன்ஸ் வேல்ட் கிங்ஸ் அணியினர் வெற்றி

போட்டியின் ஆட்டநாயகன் – நிறோஜன்

குழு A

அணி போட்டி வெற்றி தோல்வி முடிவு நோர்த் டிராகன்ஸ் 2 2 0 அரையிறுதிக்கு தெரிவு ரில்கோ றைடேர்ஸ் 2 1 1 அரையிறுதிக்கு தெரிவு டீப் டைவேர்ஸ் 2 0 2 தொடரிலிருந்து வெளியேற்றம்

குழு B

அணி போட்டி வெற்றி தோல்வி முடிவு சயன்ஸ் வேல்ட் 2 2 0 அரையிறுதிக்கு தெரிவு சிவன் வோரியர்ஸ் 2 1 1 அரையிறுதிக்கு தெரிவு ரொப் செலஞ்சேர்ஸ் 2 0 2 தொடரிலிருந்து வெளியேற்றம்

முதலாவது அரையிறுதி  

நோர்த் டிராகன்ஸ் எதிர் சிவன் வோரியர்ஸ்

குழு A இன் முதலாவது அணியான நோர்த் டிராகன்ஸ் அணி குழு B இன் இரண்டாவது அணியான சிவன் வோரியர்ஸ் அணியை எதிர்த்து முதலாவது அரையிறுதியில் மோதியது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நோர்த் டிராகன்ஸ் அணியினர் முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தனர். முதலில் துடுப்பெடுத்தாடிய சிவன் வோரியர்ஸ் அணியினர் சாகித்தியனினது 12 ஓட்டங்கள் மற்றும் பிரதீப்பினது 13 ஓட்டங்களினது துணையுடன் 03 விக்கெட்டுகளை இழந்து 59 ஓட்டங்களினைப் பெற்றிருந்தனர். பந்து வீச்சில் அருண்ராஜ், பிரதாபன் ஆகியோர் தலா 08 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொடுத்திருந்தனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நோர்த் டிராகன்ஸ் அணியின் அருண்ராஜ் 09 ஓட்டங்களுடன் பிரதீப்பினால் களம்விட்டு அகற்றப்பட, தொடர்ந்தும் நிதானித்த வினோத் (30), ஸ்ரீகுகன்(15) ஆகியோரது பங்களிப்பினால் 05 பந்துகள் மீதமாக இருக்கையில் வெற்றியிலக்கினை அடைந்தனர்.

இதன் காரணமாக நோர்த் டிராகன்ஸ் அணியினர் இறுதிப் போட்டிக்கு தெரிவாகினர்.

போட்டி முடிவு – 05 பந்துகள் மீதமாக இருக்கையில் 04 விக்கெட்டுகளால் நோர்த் டிராகன்ஸ் அணி வெற்றி

போட்டியின் ஆட்டநாயகன் – வினோத்

 

இரண்டாவது அரையிறுதி

சயன்ஸ் வேல்ட் கிங்ஸ் எதிர் ரில்கோ றைடேர்ஸ்

குழு B இல் முதலாவது இடம் பிடித்த சயன்ஸ் வேல்ட் கிங்ஸ் அணியும், குழு A இல் இரண்டாவது இடம் பிடித்த ரில்கோ றைடேர்ஸ் அணியும் இவ் அரையிறுதிப் போட்டியில் மோதியிருந்தன.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சயன்ஸ் வேல்ட் கிங்ஸ் அணியினர் முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தனர். அதனடிப்படையில், முதலில் ஆடக் களம்  புகுந்த ரில்கோ றைடேர்ஸ் அணிக்கு ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான மதுசன், கல்கோகன் இணை சிறப்பான ஆரம்பத்தினை வழங்கியது.

கல்கோகன் 14 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த போதும் மதுசன் ஆட்டமிழக்கது 14 பந்துகளில் 52. ஓட்டங்களினை அதிரடியாகப் பெற்றுக்கொடுத்து தொடரில் தனது இரண்டாவது அரைச் சதத்தினை பதிவுசெய்தார். மதுசனின் அரைச் சதத்தின் துணையுடன் 02 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து 87 ஓட்டங்களினைப் பெற்றுக்கொண்டனர் ரில்கோ றைடேர்ஸ் அணியினர்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய சயன்ஸ் வேல்ட் கிங்ஸ் அணியினரின் ஓட்ட எண்ணிக்கையைக்  கட்டுப்படுத்தி ரில்கோ அணியினர் பந்து வீசிய போதும், உதிரிகளாக 25 ஓட்டங்களும், இறுதி நேர அதிரடி மூலம் சுஜந்தன் 17 ஓட்டங்களினை சேகரித்த போதும் சயன்ஸ் வேல்ட் கிங்ஸ் அணியினரால் ஒரு பந்து மீதமாக இருந்த நிலையில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து  70 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது.

பந்து வீச்சில் மதுசன் 08 ஓட்டங்களிற்கு 02 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார்.

போட்டி முடிவு – 17 ஓட்டங்களால் ரில்கோ றைடேர்ஸ் அணி வெற்றி

போட்டியின் ஆட்டநாயகன் – மதுசன்

இறுதிப்  போட்டி

இரண்டாவது ஜி.பி.எல் இறுதிப் போட்டியில் தொடர் வெற்றிகளுடன் நோர்த் டிராகன்ஸ் அணியினரும், கத்துக்குட்டிகளாக கருதப்பட்ட போதும் சிறப்பான பெறுதியினை வெளிப்படுத்திய ரில்கோ றைடேர்ஸ் அணியினரும் தீர்மானம்மிக்க இந்தப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தனர்.

தொடர்ச்சியாக நான்காவது போட்டியிலும் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற நோர்த் டிராகன்ஸ் அணியின் தலைவர் வினோத் முதலில் களத்தடுப்பினைத் தேர்வு செய்தார்.

முதலாவதாக துடுப்பெடுத்தாடுவதற்காக களம்புகுந்த ரில்கோ றைடேர்ஸ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான மதுசன், கல்கோகன் இணை முதல் இரண்டு பந்துப்பரிமாற்றங்களிலும் வேகமாக ஆடி முறையே 14, 18 ஓட்டங்களினைப் பெற்றனர்.

மூன்றாவது பந்துப்பரிமாற்றத்தினை வீசிய ஸ்ரீகுகன் 03 ஓட்டமற்ற பந்துகள் உள்ளடங்கலாக 03 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொடுத்து தனது பந்துப் பரிமாற்றத்தினை நிறைவு செய்தார். பிருந்தாபன் வீசிய நான்காவது பந்துப் பரிமாற்றத்தில் 21 ஓட்டங்கள் சேகரிக்கப்பட்டது. இறுதிப் பந்துப் பரிமாற்றத்தினை வீசிய வினோத் 04 ஓட்டமற்ற பந்துகள் உள்ளடங்கலாக 08 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொடுத்தார்.

மதுசனின் 39(18) ஓட்டங்களினதும் கல்கோகனின் 23(12) ஓட்டங்களினதும் துணையுடன் 65 என்ற வெற்றி இலக்கினை நிர்ணயித்தது ரில்கோ றைடேர்ஸ்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடுவதற்காக களம் நுழைந்தது வினோத் அருண்ராஜ் இணை. மதுசன் வீசிய முதலாவது பந்திலேயே Lbw முறை மூலம் வினோத்தின் இலக்கு தகர்க்கப்பட்டது. சிறப்பாக துடுப்பெடுத்தாடிய அருண்ராஜ், ஸ்ரீகுகன் இணை முதல் 03 பந்துப்பரிமாற்றங்களிலும் 41 ஓட்டங்களினை சேகரித்தது.

நோர்த் டிராகன்ஸ் வெற்றி பெறுவதற்கு 12 பந்துகளில் 26 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் நான்காவது பந்துப் பரிமாற்றத்தினை வீசுவதற்கு அழைக்கப்பட்ட மோகன்ராஜ் முதல் 04 பந்துகளையும் அருண்ராஜ்ஜின் மட்டையை ஏமாற்றி லாவகமாக வீசினார். ஐந்தாவது பந்தில் ஓட்டம் பெறுவதற்கான வாய்ப்பு இருந்தபோதும் ஸ்ரீகுகன் மறுத்தார். அடுத்த பந்திலும் ஓட்டம் எதுவும் விட்டுக்கொடுக்காது, ஓட்டமற்ற பந்துப் பரிமாற்றத்தினை வீசி போட்டியினை தம்பக்கமாக வசப்படுத்தினார் மோகன்ராஜ்.

இதன் காணரமாக 6 பந்துகளில் 26 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் முதலாவது பந்தினை ஓட்டமற்ற பந்தாக மாற்றினார் ரில்கோ றைடேர்ஸ் அணியின் தலைவர் குகபிரசாத். அடுத்த மூன்று பந்துகளையும் மிட் விக்கெட் திசையில் 06 ஓட்டங்களாக மாற்றினார் ஸ்ரீகுகன். அடுத்த பந்திலும் நான்கு ஓட்டங்கள் கிடைக்கப்பெற, போட்டி ஒரு பந்தில் 04 ஓட்டங்கள் தேவை என்ற விறுவிறுப்பான கட்டத்தினை எட்டியது. இறுதிப் பந்திலும் அதே மிட் விக்கெட் திசையில் 06 ஓட்டம் கிடைக்கப்பெற தனது அரைச் சதத்தினை 14 பந்துகளில் பூர்த்திசெய்த ஸ்ரீகுகன் நோர்த் டிராகன்ஸ் அணிக்கு வெற்றியையும் பெற்றுக்கொடுத்தார்.

போட்டி முடிவு – 04 விக்கெட்டுக்களால் பெற்ற வெற்றியின் மூலம் இரண்டாவது பருவகால கிறாஸ்ஹொப்பேர்ஸ் பிறீமியர் லீக் கிண்ணத்தினை தமதாக்கியது நோர்த் டிராகன்ஸ் அணி.

போட்டியின் ஆட்டநாயகன் – ஸ்ரீகுகன்

விருதுகள்

 • சம்பியன்ஸ் – நோர்த் டிராகன்ஸ் (50,000 ரூபாய்)
 • இரண்டாம் இடம் – ரில்கோ றைடேர்ஸ் (25,000 ரூபாய்)
 • Fair play – நோர்த் டிராகன்ஸ்
 • அதிக 06 ஓட்டங்கள் – மதுசன்(10) – ரில்கோ றைடேர்ஸ் (5,000 ரூபாய்)
 • அதிக ஓட்டங்கள் – மதுசன்(178) – ரில்கோ றைடேர்ஸ் (5,000 ரூபாய்)
 • அதிக விக்கெட்டுகள் – நிறோஜன்(04) – சயன்ஸ் வேல்ட் கிங்ஸ் (5,000 ரூபாய்)
 • சிறந்த களத்தடுப்பாளர் – கல்கோகன் – ரில்கோ றைடேர்ஸ் (5,000 ரூபாய்)
 • தொடர் நாயகன் – மதுசன் – ரில்கோ றைடேர்ஸ் (20,000 ரூபாய்)
 • கடந்த வருடம் ரொப் செலஞ்சேர்ஸ் அணிக்காக கிண்ணத்தைப் பெற்றுக்கொடுத்த வினோத் இவ்வருடமும் நோர்த் டிராகன்ஸ் அணிக்காக கிண்ணத்தினை பெற்றுக்கொடுத்துள்ளார்.  
 • கடந்த வருடம் கிண்ணம் வென்ற அதே அணியில் இடம்பிடித்திருந்த சன்சஜன், பிருந்தாபன் ஆகியோர் இம்முறையும் கிண்ணம் வென்ற அணியில் இடம்பிடித்துள்ளனர்.
 • கடந்தவருடம் ஒரு அரைச் சதம் மாத்திரமே பெறப்பட்டது. இவ்வருடம் 04 அரைச் சதங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன.
 • தொடர் நாயகன் மதுசன் (35, 52*, 52*, 39) 178 ஓட்டங்களையும்,  43 ஓட்டங்களிற்கு 03 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார்.
 • தொடரில் அருண்ராஜ் மற்றும் மோகன்ராஜ் ஆகியோரால் ஓட்டமற்ற பந்துப்பரிமாற்றங்கள் வீசப்பட்டிருந்தன.
 • ஒரு இனிங்ஸில் அதிகூடிய தனிநபர் ஓட்ட எண்ணிக்கை – வினோத் 55*(18)
 • சிறந்த பந்து வீச்சு பெறுதி – 08 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்கள்
 • வேகமான அரைச் சதம் – ஜேம்ஸ் 52(14)
 • அதிக பவுண்டரிகள் – மதுசன் 34 பவுண்டரிகள் (6×10 , 4×24)
 • ஒரு பந்துப்பரிமாற்றத்தில் அதிக ஓட்டங்களை விட்டுக்கொடுத்தவர் – வதுசனன் (44)

இறுதிப் போட்டி நிகழ்விற்கு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் தற்போது போட்டி நடுவராக செயற்படுபவருமான பிரதீப் ஜெயப்பிரசாத் அவர்களும், சிறப்பு விருந்தினராக மகாஜனாக் கல்லூரி அதிபர் மணிசேகரன் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக யாழ். மாவட்ட கிரிக்கெட் சபை தலைவர் மணிவண்ணனும், செயலாளர் சசிகரன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

பிரதம விருந்தினர் பிரதீப் ஜெய பிரசாத் அவர்கள் தனது உரையின்போது கருத்து தெரிவிக்கையில் வீரர்களான நாம் எமது இலக்கை நோக்கி பயணித்தால் யாரும் தடுக்க முடியாது. தற்போது மாகாணசபை கிரிக்கெட் போட்டிகளை நடாத்துகின்றது. அதில் பிரகாசிப்பதனூடாக தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள முடியும். தொடர்ச்சியாக முயற்சிகள் இருப்பின் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியில் வடக்கு வீரர்கள் உள்வாங்கப்படும் காலம் தொலைவிலில்லை. யாழ். கலாச்சாரத்தில் விளையாட்டால் எதிர்காலம் இல்லை எனும் கருதுகோள் உண்டு. ஆனால், இன்று விளையாட்டில் ஈடுபடுவதன் மூலம் அடுத்த தலைமுறைக்குமான எதிர்காலத்தினை அமைத்துக்கொள்ள முடியும். ஜி.பி.எல் குழுமத்திற்கு வாழ்த்துக்கள் தொடர்ந்தும் இவ்வாறான போட்டிகளை  ஒழுங்கு செய்வதற்கு.” என்றார்.

“இந்த 05 ஓவர்கள் கொண்ட போட்டிகள் கிரிக்கெட் திறனை வளர்க்காது என்ற கருத்து இருங்கின்ற போதும், இவ் வகையான போட்டிகள் ஆர்வத்தினைத் தூண்டுகின்றன. ஆர்வம் ஏற்படுமாயின் தொடர்ச்சியான பயிற்சிகளூடாக திறன்  நிச்சயமாக வளர்க்கப்படும்.” என்றார் யாழ். மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் சசிகரன்.

யாழ். மாவட்ட கிரிக்கெட்டினை வர்த்தகமயமாக்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஜி.பி.எல் போட்டித் தொடரினது முயற்சியில் வெற்றிப்பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்றனர் ஜி.பி.எல் குழுமத்தினர். இவ்வருடம் வீரர்களுக்கான ஏலத்தொகையில் 75% மான பணத்தினை வீரர்களிற்கு வழங்கியுள்ளதுடன், மிகுதி 25% பணத்தினை சமூக நற்பணிகளிற்காகவும் பயன்படுத்தவுள்ளனர். ஜி.பி.எல். குழுமத்தின் மிகநேர்த்தியான ஒழுங்கமைப்பில் இடம்பெறும் இவ்வாறான முயற்சிகள் தொடர்வதற்கு Thepapare.comஇன் வாழ்த்துக்கள்.

http://www.thepapare.com

Categories: merge-rss

கிரஹாம் போர்ட் மற்றும் சங்கக்கார எவ்வாறு இலங்கை கிரிக்கெட் சபையினால் இழிவுபடுத்தப்பட்டனர்?

Wed, 28/06/2017 - 09:49
கிரஹாம் போர்ட் மற்றும் சங்கக்கார எவ்வாறு இலங்கை கிரிக்கெட் சபையினால் இழிவுபடுத்தப்பட்டனர்?
 
Graham Ford and Sangakkara
Davis-Cup-2017-728-banner.jpg

ஒரு கிரிக்கெட் வீரராக ஆஷஸ் கிரிக்கெட் தொடர் மற்றும் உலகக் கிண்ணத்தை கைப்பற்றி பின்னர் கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர்களாக மாறிய விரல் விட்டு எண்ணக்கூடிய ஒருசிலரே கிரிக்கெட் உலகில் காணப்படுகின்றனர்.

அந்த வகையில் பயிற்றுவிப்பாளர்களாக உருவெடுத்த இரு கிரிக்கெட் வீரர்களில் டேரன் லீமன் மற்றும் ஜெஃப் மார்ஷ் காணப்படுகின்றனர். அந்த வகையில் இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக கடமையாற்றிய ஜெஃப் மார்ஷை எவ்விதமான பாரபட்சமின்றி 2012ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் சபையானது பணிநீக்கம் செய்திருந்தது. 2011ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவுக்கான சுற்றுப்பயணத்தில் ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் வெற்றியீட்டி இருந்தமையே இதற்கான காரணமாக கூறப்பட்டது. எனினும் இதை ஏற்காத ஜெஃப் மார்ஷ் இலங்கை கிரிக்கெட் சபைக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்ட நிலையில் அதில் வெற்றி பெற்றதனால், இலங்கை கிரிக்கெட் சபைக்கு மிகப்பெரிய இழப்பீடு ஒன்றை வழங்க நேரிட்டது.

அதேபோன்று முன்னாள் பயிற்றுவிப்பாளராக கடமையாற்றிய சந்திக்க ஹத்துருசிங்கவையும் அப்பதவியிலிருந்து தூக்கி எறிந்திருந்தது. அதிலிருந்து இலங்கை கிரிக்கெட் சபையின் நன்மதிப்புகள் குறைத்திருந்தது. இந்நிலையில், 2013ஆம் ஆண்டு ஸ்டீவ் ரிக்ஸ்ன் பயிற்றுவிப்பாளர் பதவிக்காக விண்ணப்பித்திருந்தார். எனினும், முன்னாள் அவுஸ்திரேலிய  விக்கெட் காப்பாளர் மற்றும் துடுப்பாட்ட வீரரான  ஸ்டீவ் ரிக்ஸ்ன் இலங்கை கிரிக்கெட் சபை தொழில்முறை நிபுணத்துவ மட்டத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதாக குறை கூறியிருந்தார்.

இலங்கை கிரிக்கெட் சபை எனக்கு புதிதாக வடிவமைக்கப்பட்ட ஒரு ஒப்பந்தத்தை அனுப்பியது, உண்மையில் அது மிகவும் சங்கடமாக இருந்தது, ஏனினில் மிகவும் மோசமான முறையில் வடிவமைக்கப்பட்டு இருந்தது, என்று ஸ்டீவ் ரிக்ஸ்ன் குறிப்பிட்டிருந்தார்.

அதனையடுத்து 2015ஆம் ஆண்டு சர்வதேச மட்டத்தில் புகழ்பெற்ற எந்தவொரு பயிற்றுவிப்பாளரும் இலங்கை கிரிக்கெட் அணிக்கு பயிற்றுவிப்பாளர்களாக கடமையாற்ற முன்வரவில்லை. இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் சபையானது, முன்னாள் இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளரான கிரஹாம் போர்ட்டை  இலக்கு வைத்தது. 2012ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டுவரை இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக கடமையாற்றியிருந்த கிரஹாம் போர்ட் குறித்த ஒப்பந்தத்தின் முடிவின் பின்னர் இலங்கை கிரிக்கெட் சபையினால் மீண்டுமொருமுறை வழங்கப்பட்ட வாய்ப்பினை நிராகரித்திருந்தார்.

தற்போது குமார் சங்கக்கார விளையாடி வரும் இங்கிலாந்து உள்ளூர் கழகமான சர்ரே அணியில் பயிற்றுவிப்பாளராக இணைந்து கொண்ட கிரஹாம் போர்ட் அவ்வணியை டிவிஷன் 1 இற்கு தரமுயர்த்த தனது அயராத பங்களிப்பை வழங்கியிருந்த அதேநேரம் குறித்த பதவியில் முழு திருப்தியுடன் பணியாற்றியிருந்தார்.

இந்நிலையில் எப்படியாவது இலங்கை பயிற்றுவிப்பாளராக கிரஹாம் போர்ட்டை இணைத்துவிட வேண்டும் என்று எண்ணிய இலங்கை கிரிக்கெட் சபை முன்னாள் அணித் தலைவர் குமார் சங்கக்காரவை நாடியது. ஏனெனில்,  கிரஹாம் போர்ட் மற்றும் குமார் சங்கக்கார ஆகியோரிடையே சிறந்த நட்பு ரீதியிலான உறவொன்று இருந்தது. இடது கை துடுப்பாட்ட வீரரான சங்கக்கார தென்னாபிரிக்க நாட்டை சேர்ந்த  கிரஹாம் போர்ட்டின் பரந்த அறிவு, உண்மை மற்றும் அவரது அயராத உழைப்புக்கு பெரிதும் மதிப்பளித்திருந்தார். அது மட்டுமல்ல, ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் சராசரியாக 36 ஓட்டங்கள் மற்றும் 12 சதங்களை மாத்திரமே பதிவு செய்திருந்த குமார் சங்கக்கார கிரஹாம் போர்ட்டின் வருகைக்குப் பின்னர் ஒருநாள் போட்டிகளின் சராசரி 55 இற்கும் மேல் உயர்ந்ததோடு மேலும் 13 சதங்களை விளாசியிருந்தார். அத்துடன், இலங்கை அணி சார்பாக ஒருநாள் போட்டி வரலாற்றில் கிரிக்கெட் வீரர் ஒருவர் பெற்றுக்கொண்ட சிறந்த சராசரியாக, சங்கக்கராவின் சராசரி (41.98) அமைந்தது.

2013ஆம் ஆண்டு தென்னாபிரிக்க அணிக்கெதிரான போட்டியில் 169 ஓட்டங்களை பதிவு செய்த குமார் சங்கக்கார, ”தனது வெற்றிகரமான துடுப்பாட்டத்துக்கு கிரஹாம் போர்ட்டின் சிறந்த பயிற்சிகளே காரணமாக இருந்ததாக குறிப்பிட்டிருந்தார். மிகவும் வற்புறுத்தி கடுமையான பயிற்சிகள் வழங்கினார். ரிவர்ஸ் ஸ்வீப் (Reverse sweep) மற்றும் படல் ஸ்வீப் (Padal Sweep) முறைகளை மிகவும் நுணுக்கமான முறையில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக பெற்றுக்கொள்வது போன்ற விடயங்களை பயிற்சிகளின் போது அற்புதமாக விளக்கி பல புதிய நுணுக்கங்களை எங்களுடைய துடுப்பாட்ட பாணியில் புகுத்தினார் என்று சங்கக்கார மேலும்  தெரிவித்திருந்தார்.”

அதேநேரம், 2015ஆம் ஆண்டு சர்ரே அணிக்கு குமார் சங்கக்காரவை வெளிநாட்டு வீரராக ஒப்பந்தம் செய்யுமாறு பரிந்துரை செய்திருந்தார். இந்த சிறந்த உறவு முறைகள் காரணமாக இலங்கை கிரிக்கெட் சபை சார்பாக கிரஹாம் போர்ட்டிடம் பேசுமாறு இலங்கை கிரிக்கெட் சபை குமார் சங்கக்காரவை வேண்டியிருந்தது. முதலில் தயக்கம் காட்டிய சங்கக்கார இலங்கை கிரிக்கெட் சபையினால் வழங்கப்பட பல உறுதி மொழிகளுக்கு பின்னர் இது குறித்து கிரஹாம் போர்ட்டிடம் பேசுவதாக ஒத்துக்கொண்டார்.

இலங்கை கிரிக்கெட் சபையின் உறுதி மொழிகளை நம்பிய குமார் சங்கக்கார கிரஹாம் போர்ட்டிடம் தன்னுடைய இறுதி தீர்மானத்தை மறுபரிசீலனை செய்யுமாறு வேண்டினார். எனினும், நிலையில்லாத கொள்கைகளையுடைய இலங்கை கிரிக்கெட் சபையுடன் இணைவதற்கு கிரஹாம் போர்ட் தயக்கம் காட்டியிருந்தார். மேலும் பல்வேறு முறைகளில் கிரஹாம் போர்ட்டை சமாதானப்படுத்திய சங்கக்கார இலங்கை கிரிக்கெட் சபை வழங்கிய உறுதி மொழிகளைத் தெரிவித்தார்.

2019ஆம் ஆண்டு உலகக் கிண்ண போட்டிகள் வரை இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக ஒப்பந்தம் செய்யவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.  

சங்கக்காரவுடனான நீண்ட கலந்துரையாடல் மற்றும் சிறந்த உறவு முறை காரணமாக கொழும்புக்கு வர கிரஹாம் போர்ட் ஒப்புதல் அளித்தார். அதேநேரம், அவரை பெரிதும் எதிர்பார்த்திருந்த சர்ரே கிரிக்கெட் கழகத்தின் பணிப்பாளர் அலெக் ஸ்டூவர்ட் குறித்த தீர்மானம் தமக்கு ஏமாற்றம் அளிப்பதாகவும், கிரஹாம் போர்ட் தலைமை பயிற்றுவிப்பாளராக மட்டும்மல்ல கடந்த இரண்டு வருடங்களில் எங்களுடைய கிரிக்கெட் தரத்தை உயர்த்துவதற்கு பல வழிகளில் பங்களிப்பு செய்திருந்தார் என்று மிகவும் வருத்தத்துடன் குறிப்பிட்டிருந்தார்.  

அதனைத் தொடர்ந்து இலங்கைக்கு வருகை தந்த கிரஹாம் போர்ட் இலங்கை அணியை மீண்டும் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டார்.  அந்த வகையில் கடந்த ஆண்டு இலங்கையில் நடைபெற்ற அவுஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் போட்டித் தொடரில் இலங்கை 3-0 என்ற கணக்கில் வெற்றியீட்டி அவுஸ்திரேலிய அணியை வைட்வாஷ் செய்தது. எனினும், காயம் காரணமாக அணியிலிருந்து விலகிய அஞ்சலோ மெதிவ்ஸ், லசித் மலிங்க மற்றும் தினேஷ் சந்திமாலின் இழப்பினுடாக தென்னாபிரிக்க சுற்றுப்பயணத்தின் போது 3-0 கணக்கில் டெஸ்ட் தொடர் மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகளை கொண்ட தொடரையும் இழந்து பெரும் பின்னடைவை இலங்கை அணி கண்டது. அதுமட்டுமல்ல முதல் தடவையாக பங்களாதேஷ் அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தோல்வியைத் தழுவியது.

எனினும், சற்றும் தளர்வடையாத கிரஹாம் போர்ட் இலங்கை அணியை மீண்டும் வல்லமை மிக்க அணியாக மாற்ற முடியும் என்று நம்பினார். அறிக்கைகளின்படி சம்பியன்ஸ் கிண்ண ஆரம்ப போட்டியில் அஞ்சலோ மெதிவ்ஸ் களமிறங்க கூடிய நிலை காணப்பட்டது. எனினும், கொழும்பிலிருந்து வந்த ஆணைப்படி அஞ்சலோ மெதிவ்ஸ் முதல் போட்டியில் கழட்டிவிடப்பட்டமை ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உண்மையில், ஏற்கனவே உடற்தகுதி பரிசோதனைகளிலிருந்து அஞ்சலோ மெதிவ்ஸ் சிறந்த நிலையிலிருப்பதாக வைத்தியர்களினால் சான்றளிக்கப்பட்டிருந்தது. உடற்தகுதிக்காக பரிசோதனைக்கு அஞ்சலோ மெதிவ்ஸ் ஒத்துழைப்பதாக கூறிய போதிலும் கொழும்பிலிருந்து தடைவிதிக்கப்பட்டது.

சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளில் இலங்கை அணி மோசமான முறையில் விளையாட வேண்டுமென்பதே அதிகாரிகளின் தேவையாக இருந்தது. அதன் மூலம் தலைமை பயிற்றுவிப்பாளரை மாற்றக்கூடிய வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொள்வதே அவர்களது நோக்கமாக இருந்தது.

அத்துடன், மந்த கதியில் ஓவர்களை வீசியதன்  காரணமாக தற்காலிக அணித் தலைவர் உபுல் தரங்க இரண்டு போட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்ட போது இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் திலங்க சுமதிபால தலைமை பயிற்றுவிப்பாளர் கிரஹாம் போர்ட்டை குற்றம் சாட்டினார்.

இந்நிலையில், சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளில் கிரஹாம் போர்ட் எதிர்கொண்ட தடைகளை உணர்ந்து கொண்ட  சங்கக்கார கிரஹாம் போர்ட்டுக்கு ஆதரவு கொடுத்தார்.

கிரஹாம் போர்ட் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. எங்களுக்கு உலகில் தலை சிறந்த பயிற்றுவிப்பாளர் ஒருவர் கிடைத்துள்ளார். திறமையுள்ள இலங்கை கிரிக்கெட் அணிக்கு சரியான பயிற்றுவிப்பாளர் கிடைத்துள்ளார். இலங்கை கிரிக்கெட் அணிக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு முடிந்த திறமைகளை வெளிப்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, பயிற்றுவிப்பாளர் இருப்பது பயிற்சி அளிப்பதற்கு, கிரிக்கெட் வீரர்கள் இருப்பது கிரிக்கெட் விளையாடுவதற்கு என்றும் அவர்களுக்கு தடையின்றி விளையாட வாய்ப்புக் கொடுத்து, அவர்கள் வெளிப்படுத்தும் திறமைகளுக்கு அவர்களே பொறுப்பு என்றால் நிச்சயமாக திறமைகளை இளம் வீரர்கள் வெளிப்படுத்துவார்கள் என்று தெரிவித்தார்.

புதிதாக உருவாக்கப்பட்ட கிரிக்கெட் முகாமையாளர் என்ற பதவிக்கு முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரரான அசங்க குருசிங்க நியமிக்கப்பட்டதோடு தலைமை பயிற்றுவிப்பாளரின் சில அதிகாரங்கள் அசங்க குருசிங்கவுக்கு பிரித்து வழங்கப்பட்டமையானது கிரஹாம் போர்ட்டின் பணிகளுக்கு இடையூறாக அமைத்திருந்தது.

இந்நிலையில், உத்தியோகபூர்வ அதிகாரிகளை சந்தித்த கிரஹாம் போர்ட் இந்நிலைமை குறித்து விளக்கியதோடு, முழுமையான பொறுப்புகளை வழங்குவதில் சிக்கல் இருந்தால் அணியின் திறமைகளை முழுமையாக வெளிக்கொண்டு வருவதில் பாதிப்பு ஏற்படலாம் என தனது கருத்தை தெரிவித்தார்.

இதற்கு இலங்கை கிரிக்கெட் சபை மறுப்பு தெரிவித்து தங்களது கட்டளைகளுக்கு ஏற்ப பயிற்சிகளை மேற்கொள்ளுமாறும் அவ்வாறில்லையெனில் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து விலகலாம் எனத் தெரிவித்தது.

குறித்த கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டதால் கிரஹாம் போர்ட் பரிதாபமாக இலங்கை அணி பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

http://www.thepapare.com

Categories: merge-rss