ஊர்ப்புதினம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 50 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் இருவர் கைது

1 month 1 week ago

Published By: Digital Desk 1

23 Sep, 2025 | 04:12 PM

image

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்திலிருந்து  50 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய குஷ் ரக போதைப்பொருள் பொதியுடன் “கிரீன் சேனல்” வழியாக வெளியேற முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் இன்று (23) காலை அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பில் வசிக்கும் 29 வயதுடைய பெண்ணொருவரும், இந்தியாவின் சென்னையில் வசிக்கும் 48 வயதுடைய பெண்ணொருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் இந்தப் பொதியை தாய்லாந்து - பெங்கொக்கில் வாங்கி, இந்தியாவின் புது டெல்லிக்கு கொண்டுசென்று, அங்கிருந்து இன்று  காலை 6.50 மணிக்கு ஏர் இந்தியா விமானம் AI-277 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

அவர்களிடமிருந்து 5 பொதிகளில் 5 கிலோகிராம் 92 கிராம் குஷ் ரக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள், மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

IMG-20250923-WA0074.jpg


கட்டுநாயக்க விமான நிலையத்தில் 50 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் இருவர் கைது | Virakesari.lk

யாழில் வாள்வெட்டுச் சம்பவங்கள் ; நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கட்டுநாயக்கவில் கைது

1 month 1 week ago

23 Sep, 2025 | 04:22 PM

image

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு வாள்வெட்டுச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரால் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் செவ்வாய்க்கிழமை (23) கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியைச் சேர்ந்த இந்த நபர் நீண்ட காலமாக தலைமறைவாகியிருந்த  நிலையில் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்கு முயன்ற வேளையே கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட நபரிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

யாழில் வாள்வெட்டுச் சம்பவங்கள் ; நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கட்டுநாயக்கவில் கைது | Virakesari.lk

யாழ் நகரின் கழிவுநீர் முகாமைத்துவ திட்டம் ஆசிய அபிவிருத்தி வங்கி நிதி உதவியில் ஆரம்பிக்க நடவடிக்கை

1 month 1 week ago

3 Sep, 2025 | 05:20 PM

image

(எம்.நியூட்டன்)

யாழ்ப்பாண நகரத்தின் கழிவுநீர் முகாமைத்துவம் திட்டத்தை ஆசிய அபிவிருத்தி வங்கி நிதி உதவியில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், ஆசிய அபிவிருத்தி வங்கியின் குடிநீர் விநியோகத் திட்ட அதிகாரிகளுக்கு இடையிலான கலந்துரையாடலில்  தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

வடங்கு மாகாண ஆளுநருக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் குடிநீர் விநியோகத் திட்ட அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (23) நடைபெற்றது. 

இந்த சந்திப்பில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் யாழ். மாவட்டத்தில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் குடிநீர் விநியோகத் திட்டத்தின் நிலைமைகள் தொடர்பில் ஆராயப்பட்டது.

இத்திட்டத்தின் சில தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான ஏற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

எதிர்காலத்தில் யாழ்ப்பாண நகரத்தின் கழிவு நீர் முகாமைத்துவம் தொடர்பான திட்டத்துக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி நிதி உதவி வழங்குவதற்கு திட்டமிடுவதாகவும் இது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

கடந்த காலங்களில் யாழ்ப்பாணம் குடிநீர் விநியோகத் திட்டத்தில் இந்த விடயமும் உள்ளடக்கப்பட்டிருந்தாலும் அது கைவிடப்பட்டிருந்த நிலையில் மீளவும் செயற்படுத்துவது தொடர்பிலும் சுட்டிக்காட்டப்பட்டது. 

மேலும், யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கான இரண்டாம் கட்ட குடிநீர் விநியோகத் திட்டத்துக்கு உதவுவதற்குத் தயாராக உள்ளதாகவும் இது தொடர்பில் அரசாங்கத்துடன் கலந்துரையாடி வருவதாகவும் ஆளுநருக்குத் தெரியப்படுத்தப்பட்டது. 

இந்தக் கலந்துரையாடலில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள், யாழ்ப்பாணம் குடிநீர் விநியோகத் திட்டத்தின் பிரதிநிதிகள், ஆளுநரின் செயலாளர் மற்றும் ஆளுநரின் இணைப்புச் செயலாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.  

யாழ் நகரின் கழிவுநீர் முகாமைத்துவ திட்டம் ஆசிய அபிவிருத்தி வங்கி நிதி உதவியில் ஆரம்பிக்க நடவடிக்கை | Virakesari.lk

பருத்தித்துறையில் தியாக தீபம் திலீபனின் ஊர்தி முன்னால் பட்டாசு கொழுத்திய இளைஞர் கைது!

1 month 1 week ago

23 Sep, 2025 | 06:09 PM

image

பருத்தித்துறை நகரை சென்றடைந்த தியாக தீபம் திலீபனின் ஊர்தியின் முன்னால் பட்டாசு கொழுத்திய இளைஞர் இன்று (23) பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். 

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அணியின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபனின் 38ஆம் ஆண்டு நினைவு தினம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன் அடிப்படையில் "திலீபன் வழியில் வருகிறோம்" என்று ஊர்தி பவனியொன்று முன்னெடுக்கப்படுகிறது.

இந்த பவனி இன்று (23) பிற்பகல் 1.30 மணியளவில் பருத்தித்துறை நகர்ப் பகுதியை வந்தடைந்துள்ளது. 

தியாக தீபம் தீலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி கடந்த ஒரு வாரகாலமாக தமிழர் தாயக பகுதிகளில் அஞ்சலிக்காக பவனி செல்லும் நிலையில், பருத்தித்துறை நகர் மக்களின் அஞ்சலிக்காக இன்றைய தினம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இதன்போது பருத்தித்துறை நகர சபை தவிசாளர் வின்சன் டிபோல் டக்ளஸ் போல் மற்றும் பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள் என பலரும் தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தினர்.  

இதன்போது பருத்தித்துறை நகரப் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஊர்தியின் முன் பகுதியில் பெருந்தொகையான பட்டாசுகளை கொழுத்திய போது பருத்தித்துறை நகர் முழுவதும் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து இச்சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞரை பருத்தித்துறை பொலிஸார்  கைது செய்துள்ளனர். 

1000942576.jpg

1000942580.jpg

1000942659.jpg

1000942704.jpg


பருத்தித்துறையில் தியாக தீபம் திலீபனின் ஊர்தி முன்னால் பட்டாசு கொழுத்திய இளைஞர் கைது! | Virakesari.lk

கொழும்பு சிறுவர் வைத்தியசாலையில் உயிரிழந்த 3 வயது சிறுவனுக்கான நீதி கோரி அமைதி போராட்டம்

1 month 1 week ago

Published By: Vishnu

23 Sep, 2025 | 07:03 PM

image

கொழும்பு சிறுவர் வைத்தியசாலையில் சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 3 வயது சிறுவன் எப்.எம். அய்னா ஹம்தி பஸ்லிம், வைத்தியர்களின் அலட்சியத்தால் இரு சிறுநீரகங்களையும் இழந்து உயிரிழந்த சம்பவத்துக்கு எதிராக அமைதி போராட்டம்  செவ்வாய்க்கிழமை (23) நடைபெற்றது.

கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்திற்கு முன்பாக நடைபெற்ற இந்த போராட்டத்தில், சிறுவனின் உறவினர்கள், சிறுவர் உரிமை அமைப்புகள் மற்றும் பல பொதுமக்கள் இணைந்து கலந்து கொண்டனர்.

WhatsApp_Image_2025-09-23_at_5.34.38_PM.

WhatsApp_Image_2025-09-23_at_5.34.38_PM_

(படப்பிடிப்பு ஜே. சுஜீவகுமார்)

கொழும்பு சிறுவர் வைத்தியசாலையில் உயிரிழந்த 3 வயது சிறுவனுக்கான நீதி கோரி அமைதி போராட்டம் | Virakesari.lk

இலங்கையில் நடந்து வரும் விசாரணைகளில் நீதி கிடைக்கவில்லை

1 month 1 week ago

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

அருண ஜயசேகர பிரதி அமைச்சர் தொடர்பில் எமக்கு தனிப்பட்ட எந்தப் பிரச்சினைகளும் இல்லை. அவர் தற்போது பதில் பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்து வருகிறார். அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானமொன்றைக் கொண்டு வந்ததன் பிற்பாடு, அதனை நிராகரிப்பதற்கு அடிப்படையாக இருந்த செயலாளர்கள் குழாமின் அறிக்கைகள் மற்றும் சட்டமா அதிபரின் அறிக்கை உள்ளிட்ட ஏனைய விடயங்களை இந்த சபைக்கு சமர்ப்பிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அவ்வாறே, பாதிக்கப்பட்டவர்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நீதியான விசாரணையை வேண்டி நின்றாலும், அது அவ்வாறு நடக்காமையினால், ஜெனீவாவில் தற்போது நடந்து வரும் பேச்சுவார்த்தையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பமொன்றின் தந்தை ஒருவர், Zoom தொழில்நுட்பம் மூலம் இணைந்து கொண்டு, இலங்கையில் நடந்து வரும் விசாரணைகளில் நீதி கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற விடயங்கள் நாட்டிற்குப் பொருத்தமில்லாத விடயங்கள் என்பதால், இங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

https://adaderanatamil.lk/news/cmfwektj400m3o29nn52c37hq

பொலிஸாருடன் முரண்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா!

1 month 1 week ago

ddddddddd.jpg?resize=501%2C284&ssl=1

பொலிஸாருடன் முரண்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா!

கொழும்பில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவரை முட்டாள் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா திட்டும் காணொளியொன்று தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பேசுபொருளாகியுள்ளது.

கொழும்பில் மிகவும் பரபரப்பான வீதியான கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக காரை நிறுத்தியமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் காரை போக்குவரத்து பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

காரை குறித்த இடத்தில் ஏன் நிறுத்தினீர்கள் என கேட்டதற்கு “காரை இங்கே நிறுத்தாமல், உங்கள் தலையிலா நிறுத்துவது” என அவமரியாதையாக பொலிஸ் அதிகாரியிடம் நடந்து கொள்வது காணொளியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள மற்றும் பேருந்துகள் நிறுத்தப்படும் குறித்த பகுதியில் வாகனங்களை நிறுத்துவது தடை செய்யப்பட்டுள்ள நிலையிலேயே இராமநாதன் அர்ச்சுனா இவ்வாறு செயற்பட்டுள்ளார்.

நேற்றையதினம்(22) இடம்பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் இந்த சம்பவம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

car-2.jpg?resize=493%2C289&ssl=1

https://athavannews.com/2025/1448248

முன்னாள் குடிவரவு-குடியகல்வுத் திணைக்கள கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு 2 ஆண்டுகள் சிறை!

1 month 1 week ago

New-Project-307.jpg?resize=750%2C375&ssl

முன்னாள் குடிவரவு-குடியகல்வுத் திணைக்கள கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு 2 ஆண்டுகள் சிறை!

முன்னாள் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டியவுக்கு உயர் நீதிமன்றம் இன்று (23) இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.

இலங்கையின் இ-விசா செயல்முறையை இடைநிறுத்துவது தொடர்பான இடைக்கால உத்தரவை மீறியதற்கான நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுக்காக அவருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீதிபதிகள் ஜனக் டி சில்வா மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோரின் ஒப்புதலுடன், நீதிபதி யசந்த கோடகொட இந்த தீர்ப்பை அறிவித்தார்.

தீர்ப்பை வழங்கும்போது, ஹர்ஷ இலுக்பிட்டிய தனது செயல்கள் மூலம் நீதித்துறைக்கு எதிராக கடுமையான அவமதிப்புச் செயலைச் செய்துள்ளதாக நீதிபதி கோடகொட கூறினார்.

நாட்டின் ஒன்லைன் விசா முறையை நிர்வகிக்க VFS குளோபல் நிறுவனத்துடனான அரசாங்கத்தின் ஒப்பந்தத்தைச் சுற்றியுள்ள சர்ச்சையிலிருந்து இந்த வழக்கு உருவாகிறது.

அதிகரித்து வரும் விமர்சனங்கள் மற்றும் சட்ட சவால்களுக்கு மத்தியில், புதிய இ-விசா செயல்முறையை செயல்படுத்துவதை நிறுத்தி உயர் நீதிமன்றம் முன்னதாக ஒரு இடைக்கால உத்தரவை பிறப்பித்தது.

https://athavannews.com/2025/1448196

எக்ஸ்-பிரஸ் பேர்ல் பேரழிவு: அபராதத்தை செலுத்த மறுக்கும் கப்பல் நிறுவனம்!

1 month 1 week ago

New-Project-301.jpg?resize=750%2C375&ssl

எக்ஸ்-பிரஸ் பேர்ல் பேரழிவு: அபராதத்தை செலுத்த மறுக்கும் கப்பல் நிறுவனம்!

சிங்கப்பூரைத் தலைமையிடமாகக் கொண்ட கப்பல் நிறுவனம் ஒன்று, நாட்டின் மிக மோசமான சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்குக் காரணமானதற்காக இலங்கை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட 1 பில்லியன் அமெரிக்க ‍டொலர் இழப்பீட்டை செலுத்த மறுப்பதாக இன்று (23) அறிவித்துள்ளது.

எக்ஸ்-பிரஸ் ஃபீடர்ஸ் தலைமை நிர்வாகி ஷ்முவேல் யோஸ்கோவிட்ஸ் ஒரு பிரத்யேக நேர்காணலில், பணம் செலுத்துவது உலகளாவிய கப்பல் போக்குவரத்தில் பரந்த அளவிலான தாக்கங்களை ஏற்படுத்தும் என்றும் “ஆபத்தான முன்னுதாரணத்தை அமைக்கும்” என்றும் நம்புவதாகக் கூறினார்.

அத்துடன், கசிவுகளை அகற்றவும், கடல் அடிப்பகுதி மற்றும் கடற்கரைகளை சுத்தம் செய்யவும், பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடு வழங்கவும் US$170 மில்லியனை செலவிட்டுள்ளதாக அவர் கூறினார்.

இந்த நிறுவனம் சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட கொள்கலன் கப்பலான MV X-Press Pearl ஐ இயக்கியது.

ஜூன் 2021 இல் கொழும்பு துறைமுகத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்குப் பிறகு – நைட்ரிக் அமிலக் கசிவு இரண்டு வாரங்கள் நீடித்தது.

அதன் சரக்குகளில் அமிலங்கள் மற்றும் ஈய இங்காட்கள் உட்பட ஆபத்தான பொருட்கள் கொண்ட 81 கொள்கலன்களும் நூற்றுக்கணக்கான டன் பிளாஸ்டிக் துகள்களும் அடங்கும்.

கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் வருவதற்கு முன்பு கசிந்த நைட்ரிக் அமிலத்தை இறக்குவதற்கு கத்தார் மற்றும் இந்தியாவில் உள்ள துறைமுகங்கள் அனுமதி மறுத்தன.

கப்பலில் இருந்து டன் கணக்கில் மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் இலங்கையின் மேற்கு கடற்கரையில் 80 கி.மீ நீளமுள்ள கடற்கரையை மூழ்கடித்தன.

பல மாதங்களாக மீன்பிடித்தல் நடவடிக்கை பாதிக்கப்பட்டது.

இலங்கை உயர் நீதிமன்றம் ஜூலை மாதம், அந்நிறுவனம் இலங்கை அதிகாரிகளுக்கு ஒரு வருடத்திற்குள் $1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், முதல் தவணையாக US$250 மில்லியன் செப்டம்பர் 23 ஆம் திகதிக்குள் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

https://athavannews.com/2025/1448162

முறையற்ற சொத்து சேகரிப்பு, அரச நிதி முறைகேடு தொடர்பில் மஹிந்த, நாமல், ஷிரந்தி ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

1 month 1 week ago

22 Sep, 2025 | 04:07 PM

image

(இராஜதுரை ஹஷான்)

முறையற்ற சொத்து சேகரிப்பு மற்றும் அரச நிதி முறைகேடாக பயன்படுத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை முன்வைத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் ஷிரந்தி ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான மக்கள் அமைப்பு இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் முறைப்பாடளித்துள்ளது.

இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான மக்கள் அமைப்பின் தலைவர் ஜாமுனி காமந்த துஷார திங்கட்கிழமை (22) இலஞ்சம் அல்லது ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகி முறைப்பாடளித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு வருமாறு குறிப்பிட்டார்.

அரசியல்வாதிகளின் சொத்து மற்றும் பொறுப்புக்கள் பற்றிய விபரங்களை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. குறித்த வெளிப்படுத்தல்கள் தொடர்பின் உள்ளடங்கள் குறித்து அரசாங்கத்தின் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களுக்கு எதிராகவும், எதிர்க்கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராகவும் ஆணைக்குழுவில் முறைப்பாடளித்துள்ளோம்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபகஷ சமர்ப்பித்துள்ள சொத்து மற்றும் பொறுப்புகள் தொடர்பான விபரங்கள் சந்தேகத்துக்குரியதாக காணப்படுகிறது. தான் சட்டத்தரணியாக பணிபுரிந்து சொத்துக்களை சேகரித்துள்ளதாக நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

நாமல் ராஜபக்ஷ ஆணைக்குழுவுக்கு சமர்ப்பித்த சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபரங்களை காட்டிலும் அவரிடம் அதிகளவான சொத்துக்கள் இருக்கும் என்ற சந்தேகம் காணப்படுகிறது. அவரது உறவினர்கள் அல்லது நண்பர்களின் பெயர்களிலும் அவரது சொத்துக்கள் இருக்கலாம், ஆகவே இவ்விடயம் குறித்து ஆணைக்குழு முறையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்று முறைப்பாடளித்துள்ளோம்.

இரண்டாவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷக்கு எதிராக முறைப்பாடளித்துள்ளோம். இவர் வசித்த கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள அரச உத்தியோகபூர்வ இல்லத்தை புனரமைப்பதற்கு 51 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புனரமைப்பு பணிகள் முறையான விலைமனுகோரலுடன் மேற்கொள்ளப்பட்டதா, அல்லது புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளாமல் 51 கோடி ரூபாய் பதுக்கப்பட்டதாக என்பதில் பாரிய சந்தேகம் காணப்படுகிறது. ஆகவே இந்த முறைப்பாடு குறித்தும் ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.

மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ஷ 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமளவில் இல.260 டொரிங்டன் மாவத்தை கொழும்பு 07 இல் 360 இலட்சம் ரூபாவுக்கு வீடொன்றை கொள்வனவு செய்துள்ளார். இந்த வீட்டை கொள்வனவு செய்வதற்காக அவருக்கு 360 இலட்சம் ரூபாய் எவ்வாறு கிடைக்கப்பெற்றது என்பதில் சந்தேகம் உள்ளது.

ராஜபக்ஷர்கள் அரச நிதியை முறைகேடாக பயன்படுத்தி தங்களை வளப்படுத்தி நாட்டு மக்களை வங்குரோத்து நிலைக்கு தள்ளியள்ளார்கள். இவர்களின் சொத்து குறித்து முறையான விசாரணைகளை மேற்கொண்டு, உரிய சட்ட நடவடிக்கைகளை ஆணைக்குழு மேற்கொள்ள வேண்டும்.

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் குடும்பம் முறையற்ற சொத்து சேகரித்த விவகாரத்தில் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டதை போன்று ராஜபக்ஷ குடும்பத்துக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/225755

முத்து நகர் விவசாயிகள் 6ஆவது நாளாக இன்றும் போராட்டம்

1 month 1 week ago

22 Sep, 2025 | 04:43 PM

image

திருகோணமலை - முத்து நகர் விவசாயிகள் திருகோணமலை மாவட்ட செயலகத்துக்கு முன்பாக 6வது நாளாக இன்றும் (22) தொடரும் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

“விவசாயிகளிடமிருந்து கொள்ளையடித்து கம்பனிகளுக்கு வழங்கப்பட்ட முத்து நகர் விளைநிலங்களை உடனடியாகத் திருப்பிக் கொடு!”, “இந்தியக் கம்பனிகளின் நில மற்றும் வளச் சூறையாடலுக்கு எதிரான போராட்டத்தைத் தொடங்குவோம்!”, “பொய்கள் வேண்டாம்”, “விவசாயிகளை இப்படியா நடாத்துவது” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு முத்து நகர் விவசாயிகள் மற்றும் மக்கள் போராட்ட இயக்கம், அகில இலங்கை விவசாய சம்மேளன பிரதிநிதிகள் இணைந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

முத்து நகர் விவசாயிகளின் விவசாய காணிகளை தனியார் கம்பனிகளுக்கு சூரிய மின் சக்தி உற்பத்திக்காக வழங்கப்பட்டதையடுத்து இச்சத்தியக்கிரகப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

விவசாயத்தையே வாழ்வாதாரமாகக் கொண்ட மக்கள் தற்போது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் தொடர் போராட்டத்தை முன்னெடுக்கின்றனர்.

கடந்த அரசாங்கம் போலவே இந்த அரசாங்கமும் நடக்கின்றது. வெளிநாடுகளுக்கு மக்கள் விவசாய காணிகளை தாரை வார்த்துக் கொடுத்துள்ளனர். முத்து நகர் மக்களின் விவசாய காணிகளை தற்போது அபகரித்துள்ளனர். ஜனாதிபதி செயலகம் வரை போராடிய முத்து நகர் விவசாயிகளுக்கு தீர்வில்லை.

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் போதும் தீர்வு தருவதாக கூறியவர்கள் இதுவரை தீர்வு வழங்கவில்லை. இது போன்று சம்பூரிலும் காணிகளை அபகரித்துள்ளனர். எனவே மக்கள் பிரச்சினைகளை சுமுகமாக தீர்த்து வைக்கும்படி விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

IMG-20250922-WA0047.jpg

IMG-20250922-WA0046.jpg

IMG-20250922-WA0045.jpg

https://www.virakesari.lk/article/225771

சிவசேனை அமைப்பின் போராட்டத்தை குழப்பச் சென்ற நபர்களால் பதற்றம்

1 month 1 week ago

22 Sep, 2025 | 04:33 PM

image

வடக்கு கல்வியில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளரை மாற்ற வேண்டும் என கோரியும்  யாழ். முத்திரைச் சந்தியில் அமைந்துள்ள வடமாகாண கல்வித் திணைக்களத்துக்கு முன்னால்  சிவசேனை அமைப்பினரால்  திங்கட்கிழமை (22) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

இந்த போராட்டத்தில் கிளிநொச்சி சென் தெரேசா பாடசாலைக்கு நியமிக்கப்பட்ட அதிபர் உரிய தகுதி நிலைகளுடன் காணப்படாத நிலையில் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளரால் நியமிக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. 

அதேவேளை கிளிநொச்சியில் சில பாடசாலைகளுக்கு இன்னும் நிரந்தர அதிபர் நியமிக்கப்படாத நிலையில்  சென் தெரேசா பாடசாலைக்கு மட்டும் அதிபர் ஓய்வு பெற்று இரு நாட்களில் உரிய தரத்தை பூர்த்தி செய்யாத அதிபரை நியமித்தமை தொடர்பில் தமது கண்டனங்களை தெரிவித்தனர். 

இவ்வாறான நிலையில் கிளிநொச்சியில் இருந்து "கப்" ரக வாகனத்தில் வருகை தந்த குழு ஒன்று தெரேசா பாடசாலையின் அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகள் என தங்களை அறிமுகப்படுத்தி, சிவசேனை அமைப்பின் போராட்டப் பந்தலுக்கு சென்று குழப்பம் விளைவித்தனர்.

இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதால் அருகில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்ட பொலிஸார் குழப்பம் விளைவித்த நபர்களை விரட்டினர்.

VID-20250922-WA0047.jpg

VID-20250922-WA0049.jpg

IMG-20250922-WA0072__1_.jpg

https://www.virakesari.lk/article/225766

யாழில் பனை விதை நடுகை செயற்திட்டத்துக்கான உபகரணங்கள் வழங்கிவைப்பு

1 month 1 week ago

22 Sep, 2025 | 02:14 PM

image

(எம்.நியூட்டன்)

யாழ்ப்பாணத்தில் பனை அபிவிருத்திச் சபையின் ஏற்பாட்டில் பனை விதை நடுகைத் திட்டத்தின் ஆரம்பம் மற்றும் பயனாளிகளுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு திங்கட்கிழமை (22) நடைபெற்றது.

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில் கைதடியில் உள்ள பனை அபிவிருத்தி சபையில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் ச.பவானந்தராஜா, பனை அபிவிருத்தி சபை தலைவர் ஆர்.ரவீந்திரன், பனை அபிவிருத்தி சபை அதிகாரிகள், பனை அபிவிருத்தி கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

IMG-20250922-WA0155__2_.jpg

IMG-20250922-WA0153__1_.jpg

IMG-20250922-WA0156__1_.jpg

IMG-20250922-WA0157.jpg

https://www.virakesari.lk/article/225744

ஜனாதிபதி உட்பட அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் எதிர்காலத்தில் சிறைக்குச் செல்ல நேரிடும் - உதய கம்மன்பில

1 month 1 week ago

22 Sep, 2025 | 05:30 PM

image

(இராஜதுரை ஹஷான்)

சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபரங்களில் போலியான விடயங்களை உள்ளடக்குதல், உண்மையை மறைத்தல் ஆகிய குற்றங்களுக்காக ஜனாதிபதி உட்பட அரசாங்கத்தின் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் எதிர்காலத்தில் சிறைக்குச் செல்ல நேரிடும் என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள பிவிதுறு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் திங்கட்கிழமை (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

சொத்து மற்றும் பொறுப்பு பற்றிய விபரங்களை வெளிப்படுத்துவதற்காக நாங்கள் கொண்டு வந்த 2023 ஆம் ஆண்டு 09 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்பு சட்டத்தால் தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் பாரிய நெருக்கடிக்குள்ளாகியுள்ளது.

இதற்கு முன்னரான சட்டத்தில் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்கப்படும் சொத்து மற்றும் பொறுப்புகள் தொடர்பான விபரங்களை நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைவாகவே பகிரங்கப்படுத்த முடியும் என்று குறிப்பிடப்பட்டது.

ஆனால் நாங்கள் இயற்றிய ஊழல் எதிர்ப்பு சட்டத்தில் குறித்த விடயங்களை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழு வெளிப்படுத்த முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை தேசிய மக்கள் தலைமையிலான அரசாங்கத்தின் தலைவர்கள் அறியவில்லை.

இந்த சட்டத்தின் ஊடாக தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் பற்றிய விபரங்களை வெளிப்படுத்த நேரிடும் என்று தேசிய மக்கள் சக்தியினர் கடந்த காலங்களில் அறிந்திருக்கவில்லை.

2024 ஏப்ரல் மாதம் முதல் 2025 மார்ச் மாதம் வரையிலான காலத்தை வரையறுத்து சொத்து மற்றும் பொறுப்புகள் பற்றிய விபரங்கள் தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க 2024 ஜீன் மாதம் பிரித்தானியாவுக்கு சென்றிருந்தார். இந்த பயணத்துக்கான செலவு விபரங்கள் ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபரங்களில் குறிப்பிடப்படவில்லை.

அதேபோல் 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் என்ற அடிப்படையில் இந்தியா மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்திருந்தார். இந்த பயணங்களுக்கான செலவு விபரங்கள் ஏதும் வெளிப்படுத்தப்படவில்லை.

ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் 8(2) பிரிவில் தமக்கு பரிசாகவோ அல்லது வேறு வழிமுறைகளிலோ ஏதேனும் சலுகைகள் கிடைக்கப்பெறுமாயின் அதன் விபரங்களையும் சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபர திரட்டில் உள்ளடக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனக்கு பரிசாகவோ அல்லது வேறு வழியில் கிடைக்கப்பெற்ற சலுகைகளையோ வெளிப்படுத்தவில்லை.

சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபரங்களில் போலியான விடயங்களை உள்ளடக்குதல் அல்லது விடயங்களை மறைத்தல் தண்டனைக்குரிய குற்றமாகும்.

ஒருவரின் சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபர திரட்டில் உள்ளடக்கப்படாத சொத்து அவருக்கு உரிமையானதாக இருந்தால் அதனை அரசுடமையாக்க முடியும்.உண்மை தகவல்களை மறைத்தால் ஒரு இலட்சம் ரூபாய் தண்டப்பணம் அறவிடப்படும் அல்லது ஒரு வருடகால சிறைதண்டனை விதிக்கப்படும்.

சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபரங்களில் போலியான விடயங்களை உள்ளடக்கல்,உண்மையை மறைத்தல் ஆகிய குற்றங்களுக்காக ஜனாதிபதி உட்பட அரசாங்கத்தின் அமைச்சர்கள்,பிரதி அமைச்சர்கள் எதிர்காலத்தில் சிறைக்கு செல்ல நேரிடும்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் ஒருவருட கால ஆட்சியில் நாட்டில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. அரசியல் பழிவாங்கல்கள் மாத்திரமே முன்னிலையில் உள்ளன என்றார்.

https://www.virakesari.lk/article/225783

கப்பற்படை உறவுகளை வலுப்படுத்த இலங்கை வந்துள்ளார் இந்திய கடற்படைத் தளபதி

1 month 1 week ago

22 Sep, 2025 | 01:50 PM

image

(எம்.மனோசித்ரா)

இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே. திரிபாதி, நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று திங்கட்கிழமை (22) நாட்டை வந்தடைந்தார். இந்திய கடற்படை தளபதி இவ்விஜயத்தின்போது பிரதமர் ஹரிணி அமரசூரிய, இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கஞ்சன பனாகொட உட்பட பல முக்கிய தரப்பினரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

இந்த சந்திப்புக்களின்போது கடல்சார் பாதுகாப்பு, திறன் மேம்பாடு, பயிற்சி மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிகள் உட்பட பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான பல விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவர் 'மாறும் இயக்கவியலின் கீழ் இந்தியப் பெருங்கடலின் கடல்சார் நோக்குநிலை' என்ற கருப்பொருளில் கொழும்பில் நடைபெறவுள்ள 12ஆவது காலி உரையாடல் 2025 – சர்வதேச கடல்சார் மாநாட்டிலும் கலந்துகொள்ளவுள்ளார்.

வருடாந்த பாதுகாப்பு கலந்துரையாடல், பணியாளர்கள் பேச்சுவார்த்தைகள் மற்றும் இலங்கை - இந்தியா கடற்படைப் பயிற்சி, பயிற்சி மற்றும் நீரியல் பரிமாற்றங்கள் உள்ளிட்ட பிற செயற்பாட்டு நடவடிக்கைகள் மூலம் இந்தியக் கடற்படை இலங்கை கடற்படையுடன் தொடர்ந்து இணைந்து செயற்பட்டு வருவதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்திய கடற்படை தளபதியின் இவ்விஜயமானது பரஸ்பர மரியாதை, கடல்சார் நம்பிக்கை மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான பகிரப்பட்ட பார்வை ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்த, இந்தியா - இலங்கை உறவுகளை மீண்டும் உறுதிப்படுத்துவதாக பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/225741

சொத்துகள் மற்றும் பொறுப்புகள் அறிவிப்புகளை தாக்கல் செய்யாத பொது அதிகாரிகளின் பட்டியல் வெளியீடு

1 month 1 week ago

Published By: Vishnu

22 Sep, 2025 | 05:35 AM

image

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம், மார்ச் 25, 2025 நிலவரப்படி 2024 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் அறிவிப்புகளை தாக்கல் செய்யாத பொது அதிகாரிகளின் பட்டியலை அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

இவர்களில் ஒரு முன்னாள் அமைச்சர், நான்கு முன்னாள் மாகாண ஆளுநர்கள், ஆறு முன்னாள் மாநில அமைச்சர்கள், 29 முன்னாள் தூதர்கள் மற்றும் இரண்டு மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் அடங்குவர்.

தனது சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் அறிவிப்புகளை தாக்கல் செய்யாத முன்னாள் அமைச்சர் முன்னாள் மீன்வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆவார்.

முன்னாள் ஆளுநர்கள் மார்ஷல் ஆஃப் தி ஏர்ஃபோர்ஸ் ரோஷன் குணதிலகா, செந்தில் தொண்டமான், நவீன் திசாநாயக்க, வில்லியம் கமகே ஆகியோர் தொடர்புடைய தேதிக்குள் தங்கள் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் அறிவிப்புகளை சமர்ப்பிக்கவில்லை.

முன்னாள் இராஜாங்க அமைச்சர்களான லோகன் ரத்வத்தே, தாரக பாலசூரிய, சாந்த பண்டார, காதர் மஸ்தான், சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் சுரேன் ராகவன் ஆகியோரும் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்த அறிவிப்புகளை சமர்ப்பிக்காதவர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

https://www.virakesari.lk/article/225702

ஒரு கட்சி ஆட்சி முறைமையை அமுல்படுத்த அரசாங்கம் முயற்சி; அடக்குமுறைக்கு எதிராக அனைவரும் அணிதிரள வேண்டும் எதிர்க்கட்சித் தலைவர் அழைப்பு

1 month 1 week ago

Published By: Vishnu

22 Sep, 2025 | 05:11 AM

image

அமைதியாக இருந்தால், அரசாங்கம் எல்லாவற்றையும் கைப்பற்றிவிடும். அரசாங்கத்தின் அடக்குமுறைத் திட்டத்திற்கு எதிராக நாம் ஒருங்கிணைந்து அணிதிரள வேண்டும்.  அரசாங்கம் எதிர்பார்க்கும் ஒரு கட்சி ஆட்சி என்ற எண்ணக்கருவை மக்களால் தோற்கடிக்க முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அனுராதபுரம் மாவட்டத்தில் இம்முறை  உள்ளூராட்சி மன்றங்களுக்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுடன்  20ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்ற  சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

அரசாங்கம் மிகவும் திட்டமிட்ட வகையில் இந்நாட்டில் ஒரு கட்சி மட்டுமே அரசாங்கத்தை அமைத்து ஆட்சியை நடத்தும் எண்ணக்கருவை முன்னெடுத்து வருகின்றது. மரண உதவிச் சங்கம், விவசாயிகள் சங்கம், மீனவர் சங்கம், இளைஞர் கழகம் முதல் மதஸ்தலங்களின் பரிபாலன சபை வரை அனைத்தையும் அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் எடுக்க முயற்சித்து வருகின்றனர். சகல சமூக அமைப்புகளினதும் அதிகாரத்தை,கட்டுப்பாட்டை வலுக்கட்டாயமாக கைப்பற்ற முயற்சித்து வருகின்றனர். தற்போது சுயாதீன சிவில் பாதுகாப்புக் குழுவிற்கும் கூட அரசியல் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அனுராதபுரம் மாவட்டத்தில் இம்முறை  உள்ளூராட்சி மன்றங்களுக்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

மக்களின் பாதுகாப்பிற்காக சிவில் பாதுகாப்பு குழுக்கள் நிறுவப்பட்டன. சகல கட்சிகளினது உறுப்பினர்களும் ஒன்றாக இணைந்து இதில் வேலை செய்தனர். இன்று சிவில் பாதுகாப்பு குழுவிற்கான நியமனப் பட்டியல்களை ஜேவிபி எம்.பி.க்களே நியமிக்கின்றனர். கிராமத்தில் நல்லதொரு அமைப்பு இருந்தால் இதுபோன்ற நியாயமற்ற நியமனங்களைத் தடுக்க முடியும். ஒவ்வொரு கட்சிக்கும் நியாயமான பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்ட இடத்தில் அரசாங்கத்தின் சூட்சும முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன.

எனவே, நாம் அமைதியாக இருந்தால், அரசாங்கம் எல்லாவற்றையும் கைப்பற்றிவிடும். இந்த அடக்குமுறைத் திட்டத்திற்கு எதிராக நாம் ஒருங்கிணைந்து அணிதிரள வேண்டும். அது நடந்தால், தற்போதைய அரசாங்கம் எதிர்பார்க்கும் ஒரு கட்சி ஆட்சி என்ற எண்ணக்கருவை மக்களால் தோற்கடிக்க முடியும் என்றார்.

https://www.virakesari.lk/article/225700

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பதவியேற்று நாளையுடன் ஒரு ஆண்டு நிறைவு

1 month 1 week ago

Published By: Vishnu

22 Sep, 2025 | 01:53 AM

image

(இராஜதுரை ஹஷான்)

இலங்கையின் 09ஆவது  நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பதவியேற்று நாளையுடன் (23) ஒருவருடம் பூர்த்தியாகிறது.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க 2021.12.20 ஆம் திகதியன்று தேசிய மக்கள் சக்தியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டு, 2024.09.21ஆம் திகதியன்று நடைபெற்ற 08 ஆவது ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் திசை;சாட்டி சின்னத்தில் போட்டியிட்டார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுரகுமார திஸாநாயக்க 5,634,915 வாக்குகளைப் பெற்று 42,31 சதவீத வாக்குகளையும், ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாஸ 4,363,035 வாக்குகளைப் பெற்று 32.76 சதவீத வாக்குகளையும்,புதிய ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிட்ட ரணில் விக்கிரமசிங்க 2,299,767 வாக்குகளைப் பெற்று 17.27 சதவீத வாக்குகளையும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட நாமல் ராஜபக்ஷ 342,781 வாக்குகளைப் பெற்று 2.57 சதவீத வாக்குகளையும் முறையே பெற்றுக்கொண்டனர்.

இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தான் விருப்பு வாக்குகள் எண்ணப்பட்டு அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆட்சிக்கு வந்து ஆறு மாத காலத்துக்குள் வருமானம் மற்றும் அரச செலவுகளுக்கான பற்றாக்குறையை குறைத்துக் கொள்ளவதற்கு முன்னுரிமையளிக்கப்பட்டு இக்காலப்பகுதிக்குள் அரச வருமானம் 3221 பில்லியன் ரூபா வரையில் அதிகரித்துக்கொள்ளப்பட்டது.

இக்காலப்பகுதியில் சுற்றுலாத்துறை விருத்தி மற்றும் சுங்க வருமானம் அதிகரிப்பு விசேடமானதாக கருதப்படுகிறது.தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தல் தனது அரசாங்கத்தின் பிரதான இலக்கு என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

நடப்பாண்டின் 08 மாதகாலத்துக்குள் சுற்றுலாத்துறை கைத்தொழிலில் 2290 மில்லியன் ரூபாய் வருமானம் திரட்டப்பட்டுள்ளதுடன்,அத்துடன் 2025 ஜுலை மாதம் வரையான காலப்பகுதியில் புதிதாக 40 அபிவிருத்தி கருத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் முதலீடாக 4,669 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

ஏற்றுமதி வருமானம் 10,000 மில்லியன் அமெரிக்க டொலராக உயர்வடைந்துள்ளதுடன்,சுங்க வருமானம் 1,271 பில்லியன் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.அரச செயற்திட்டங்களை வலுப்படுத்தும் கொள்கைக்கமைய துறைமுக கண்காணிப்புக்கள் ஊடபக பெற்றுக்கொண்டுள்ள வருமானம் 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 66 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் 2025 ஆம் ஆண்டு முதல் காலாண்டில் மாத்திரம் 18 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டிக்கொண்டுள்ளதுடன்,பல அபிவிருத்தி கருத்திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன.

மொழி சமவுரிமையை மேம்படுத்தல்,போதைப்பொருள் மற்றும் பாதாள குழுக்களின் செயற்பாடுகளை ஒழித்தல்,வடக்கு மற்றும் கிழக்கு மாகாண காணி விடுவிப்பு,வீதி மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்களுக்கு ஜனாதிபதியின் ஒருவருட பதவி காலத்தில் முன்னுரிமையளிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/225694

நாட்டின் மக்கள் தொகையில் 16.6% பேர் வறுமையில் வாழ்கின்றனர் - இந்திக உடவத்த

1 month 1 week ago

22 Sep, 2025 | 11:43 AM

image

நாட்டு மக்கள் தொகையில் 16.6 சதவீதமானவர்கள் வறுமையில் வாழ்கின்றனர். இது 2030ஆம் ஆண்டுக்குள் 5 சதவீதமாகக்  குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது என கண்டி மாவட்ட செயலாளர் இந்திக உடவத்த தெரவித்தார். 

கண்டி செயலகத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றிலே அவர் இதனைத் தெரிவித்தார்.

கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்த அரசு நடைமுறைப்படுத்தும் தேசிய திட்டம் தொடர்பாக விளக்கமளிக்கும் வகையில் இந்த கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இத்திட்டம் குறித்து அரச அதிகாரிகளுக்கு மாவட்ட ரீதியில் தெளிவுபடுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாகவே இந்த கூட்டம் கண்டி மாவட்ட செயலாளர் தலைமையில் கண்டியில் நடத்தப்பட்டது. அதன்போதே அவர் தனது தலைமையுரையில் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

நாட்டின் மக்கள் தொகையில் 16.6% பேர் வறுமையில் வாழ்கின்றனர். மேலும் இந்த நிலைமையை 2030ஆம் ஆண்டுக்குள் 5% ஆகக் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான செயற்றிட்டங்கள் கட்டம் கட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.

கண்டி மாவட்ட மேலதிகச் செயலாளர் லலித் அட்டம்பாவல உட்பட மற்றும் பல அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

vlcsnap-2025-09-17-09h07m17s648.png

https://www.virakesari.lk/article/225732

இலங்கையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை விரட்டி விரட்டி தாக்கிய இளைஞர்கள்

1 month 1 week ago

காலி, உனவட்டுன ஹோட்டலில் நேற்று முன்தினம் இரவு ஜெர்மன் சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆறு ஜெர்மன் சுற்றுலாப் பயணிகளுக்கும், சுற்றுலா ஹோட்டலில் விருந்தில் இருந்த 2 இலங்கையர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் ஜெர்மன் சுற்றுலாப் பயணிகள் குழு இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு முச்சக்கர வண்டியில் ஹோட்டலை விட்டு வெளியேறியது.

சுற்றுலா பயணிகள்

இந்த நிலையில் மோதலில் ஈடுபட்ட இரண்டு இலங்கையர்கள் ஒரு காரில் சுற்றுலாப் பயணிகளைத் துரத்திச் சென்று, அவர்களின் தடுத்து, பின்னர் தாக்கியுள்ளனர்.

இலங்கையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை விரட்டி விரட்டி தாக்கிய இளைஞர்கள் | Attack On Six German Tourists In Sri Lanka

தாக்கப்பட்ட ஜெர்மன் பிரஜைகள் உனவட்டுன சுற்றுலா பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர். சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் நடத்திய இரண்டு சந்தேக நபர்களும் ஒரு மணி நேரத்திற்குள் கைது செய்யப்பட்டனர்.

இலங்கையர்கள் கைது

சந்தேக நபர்களும் அவர்கள் வந்த காரும் பொலிஸாரின் காவலில் எடுக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட இருவரும் 25 மற்றும் 26 வயதுடைய ரூமஸ்ஸல பகுதியை சேர்ந்தவர்களாகும். அவர்கள் சுற்றுலா தொழிலிலும் ஈடுபட்டவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை விரட்டி விரட்டி தாக்கிய இளைஞர்கள் | Attack On Six German Tourists In Sri Lanka

சந்தேக நபர்கள் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். மேலும் தாக்கப்பட்ட சுற்றுலாப் பயணிகள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

https://tamilwin.com/https://tamilwin.com/

Checked
Sun, 11/02/2025 - 14:36
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr